பொங்கலூரில் இயற்கை மருத்துவம் விழிப்புணர்வு பேரணி

தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றதுடாக்டர். சுந்தரவேல், இயற்கை மருத்துவர்கள் தனலட்சுமி, அருள்ஜோதி, அகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 பொங்கலூரில் இயற்கை மருத்துவ தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற போது எடுத்த படம்.
 பொங்கலூரில் இயற்கை மருத்துவ தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற போது எடுத்த படம்.
Published on

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில்தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொங்கலூர் பொ.வெ.க மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார் தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தனம், பொங்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்ரமணியம், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபாலன்,தமிழாசிரியர் சிவக்குமார், பொங்கலூர் ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார், பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுந்தரவேல், இயற்கை மருத்துவர்கள் தனலட்சுமி, அருள்ஜோதி, அகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com