என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • வெதுவெதுப்பான குளியல், தியானம் போன்றவற்றைச் செய்யலாம்.
    • தூங்குவதற்கு முன் கனமான மற்றும் துரித உணவுகளைத் தவிர்க்கவும்.

    இன்றைக்கு பலருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை தூக்கமின்மை தான். தூக்கம் வராமல் சிலர், பாதி தூக்கத்தில் எழும் சிலர், எவ்வளவு தூங்கினாலும் தூக்கம் போதவில்லை என சிலர். இப்படி பெரும்பாலானவர்களின் ஏக்கமே நல்ல, ஆழ்ந்த தூக்கம் கிடைக்காதா? என்பது தான்.

    நிம்மதியாக தூங்குவதற்கு என்ன தான் செய்வது என்று கவலையாக உள்ளதா? இனி அந்த கவலை வேண்டாம். இந்த 5 பழங்களை சாப்பிட்டாலே போதும். நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

    ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும் 5 பழங்கள்...

    செர்ரி:

    புளிப்பு செர்ரி சாறு குடிப்பது அல்லது புளிப்பு செர்ரிகளை சாப்பிடுவது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மெலடோனின் என்ற தூக்க ஹார்மோனை அதிக அளவில் கொண்டிருப்பதால் ஆழ்ந்த தூக்கத்துக்கு உதவுகிறது.

    கிவி:

    கிவி படுக்கைக்கு முன் சாப்பிட சிறந்த பழம். இது ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்துள்ளது மற்றும் செரோடோனின் என்ற ஹார்மோனைக் கொண்டுள்ளது. இது தூக்கம்-விழிப்பு சுழற்சியை நிர்வகிக்க உதவுகிறது. தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு கிவி பழங்களை சாப்பிடுவது, உடல் ஓய்வெடுக்கவும், எளிதாக தூங்கவும் உதவும்.



    அன்னாசி:

    அன்னாசிப்பழத்தில் உள்ள மெலடோனின் தூக்க-விழிப்பு சுழற்சிகளை ஒழுங்குபடுத்துகிறது. இது தூங்குவதற்கு எடுக்கும் நேரத்தை குறைத்து, ஆழ்ந்த தூக்கத்தை மேம்படுத்துகிறது.

    வாழைப்பழம்:

    வாழைப்பழம் ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவக்கூடிய ஒரு உணவு என்று சொல்லலாம். இதில் பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் ட்ரிப்டோபன் என்ற அமிலம் உள்ளது, இவை தூக்கத்தை தூண்டக்கூடியவை. ட்ரிப்டோபன் மூளைக்கு சென்று மெலடோனின் என்ற ஹார்மோனை சுரக்க வைக்கிறது, இது தூக்கத்தை தூண்டுகிறது.

    ஆப்பிள்:

    ஆப்பிள் பழத்தில் மெலடோனின் என்ற ஒரு ஹார்மோன் மெக்னீசியம் என்ற ஒரு தாதுவும் உள்ளதால் நரம்பு மற்றும் தசைகளை தளரச் செய்து தூக்கத்தை மேம்படுத்துகிறது.

    படுக்கைக்கு முன் ஆப்பிள் பழம் சாப்பிடுவது தூக்கத்தை மேம்படுத்துவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.

    ஆப்பிள் பழம் சாப்பிடுவதன் மூலம் ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம், ஆனால் அது ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியான பலனைத் தராது. சிலருக்கு ஆப்பிள் பழம் தூக்கத்தை தூண்டலாம், மற்றவர்களுக்கு அது உதவாது.

    பழம் சாப்பிட்டும் தூக்கம் வரவில்லையே என்னதான் செய்வது என்று எரிச்சலடையக் கூடாது. பழம் சாப்பிட்ட உடனே தூங்கிவிட வேண்டும் என்ற மனநிலை தவறானது. ஏனென்றால் தூக்கத்தை மேம்படுத்தும் மற்ற வழிகளையும் பின்பற்ற வேண்டும். முதலில் இரவில் தூங்குவதற்கு முன் மனதை அமைதிப்படுத்துங்கள். வெதுவெதுப்பான குளியல், தியானம் போன்றவற்றைச் செய்யலாம்.



    படுக்கையறை சூடாக இல்லாமல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். தூங்க செல்லும் முன் காஃபின் மற்றும் மது முதலானவற்றை அருந்த வேண்டாம். தூங்குவதற்கு முன் கனமான மற்றும் துரித உணவுகளைத் தவிர்க்கவும். லேசான உணவுகளை உண்ண வேண்டும். இவற்றை பின்பற்றினாலே நிம்மதியான தூக்கத்தோடு உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.

    என்ன செய்தாலும் ஆழ்ந்த தூக்கம் வரவில்லை, உடல் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.

    • தம்பதிகள் அதிக வேலைப்பளுவால் பாதிக்கப்பட்டு பொறுப்புகளை சுமக்கும்போது, பரஸ்பர காதல் காலாவதி ஆகிறது.
    • தம்பதியர் தமக்குள் எழும் பிரச்சனைகளை தாமே தீர்த்துக்கொள்ள முயல வேண்டுமே தவிர, வெளியில் உள்ள வேறு யாராலும் அது முடியாது.

    தம்பதியர் பலரிடம், திருமண தொடக்கத்தில் இருக்கும் நெருக்கமும், ஈர்ப்பும் நாளடைவில் குறைந்துவிடுகின்றன. 'ரொமான்ஸ்' என்பதே இல்லாமல் போய்விடுகிறது. இந்நிலைக்கு காரணம் என்ன? பின்வரும் விஷயங்கள்தான்...

    பேச்சுவார்த்தை இல்லாமை

    தம்பதியர் இடையே போதிய பேச்சுவார்த்தை, தொடர்பு இல்லாமை, நெருக்கத்தை குறைக்கிறது. தம்பதிகள் இருவரும் தங்களுக்குள் வெளிப்படையாகப் பேச வேண்டும். அப்போதுதான் திருமண உறவு பலப்படும். தகவல்தொடர்பு முறிவு, தவறான புரிதலுக்கும், ஏமாற்றத்துக்கும் வித்திடும்.

    மன அழுத்தம், அவசரம்

    வருடங்கள் செல்லச் செல்ல, திருமண உறவில் ரொமான்ஸ் குறைந்து விடும். இதற்கு முக்கிய காரணம், துணையில் ஒருவர் அல்லது இருவரின் வேலைப்பளு அல்லது மனஅழுத்தமாக இருக்கலாம். மன அழுத்தமும், வேலைப்பளுவும் மண உறவை பாதிக்கும் காரணிகளாக மாறிவருகின்றன. தம்பதிகள் அதிக வேலைப்பளுவால் பாதிக்கப்பட்டு பொறுப்புகளை சுமக்கும்போது, பரஸ்பர காதல் காலாவதி ஆகிறது.

    அலுப்பூட்டும் 'வழக்கம்'

    திருமணம் முடிந்து காலம் செல்லச் செல்ல, திருமணத்தில் புதிதாக எதுவும் நடக்காது. அனைத்து நாட்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான செயல்களை செய்வது அவர்களுக்கு சலிப்பையும், ஆர்வமின்மையையும் ஏற்படுத்தும். திருமணத்திலிருந்து காதல் மறைந்து போவதற்கு இதுவும் முக்கிய காரணமாகும்.

    கவனிக்கப்படாதது

    திருமண உறவில் ஒருவர் துணையிடமிருந்து புறக்கணிப்பை எதிர்கொள்வதும், அவரது முயற்சிகள் கவனிக்கப்படாமல் போவதும் அவருக்கு விரக்தியையும் சோர்வையும் ஏற்படுத்தும். ரொமான்ஸ் காணாமல் போவதற்கு இதுவும் பிரதானம். வாழ்க்கைத்துணை மேற்கொள்ளும் முயற்சிகளை அங்கீகரிப்பதும், மனந்திறந்து பாராட்டுவதும் மிகவும் முக்கியம்.

    எதிர்மறை நடத்தை

    எதிர்மறை நடத்தை ஒரு திருமண உறவை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும். தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் எதிர்மறையான அணுகுமுறைகளைக் கொண்டிருக்கும்போது அவர்களுக்குள் இருக்கும் காதல் காணாமல் போகும். ஒருவருக்கொருவர் நேர்மறையான அணுகுமுறையும் ஆதரவும் இருந்தால் மட்டுமே ஒரு திருமண வாழ்க்கையில் அன்பும், காதலும் நிறைந்திருக்கும்.

    உடல்ரீதியான நெருக்கமின்மை

    திருமணத்தில் தாம்பத்திய உறவு மட்டுமல்ல, சின்னச் சின்ன தொடுதலும், உடல் நெருக்கமும் முக்கியம். காதலை உயிர்ப்புடன் வைத்திருக்க இதுபோன்ற அன்பின் வெளிப்பாடுகள் அவசியம். துணைவர்கள் ஒருவரையொருவர் தொடுவதையும், கட்டிப்பிடிப்பதையும், முத்தமிடுவதையும் நிறுத்தினால், அந்த உறவில் இருந்து அன்னியோன்னியம் ஆவியாகிப்போகும்.

    விரக்தி, வெறுப்பு

    திருமண உறவிலேயே மிகவும் மோசமான நிலை, தம்பதிகள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் விரக்தியாகவும், வெறுப்பாகவும் உணருவது. கடந்த கால அனுபவங்களில் உண்டான வெறுப்புகளையும் கோபத்தையும் மனதில் சுமப்பது, ஒரு திருமண உறவை நஞ்சாக்கி விடும்.

    தம்பதியர் தமக்குள் எழும் பிரச்சனைகளை தாமே தீர்த்துக்கொள்ள முயல வேண்டுமே தவிர, வெளியில் உள்ள வேறு யாராலும் அது முடியாது. காரணம், ஒவ்வொரு தம்பதியரின் தேவைகள், விருப்பங்கள், பிரச்சனைகள் வேறுபட்டவை. மனப்பூர்வமான செயல்பாட்டின் மூலம், தம்பதிகள் தங்கள் வாழ்வை அன்புப் பூஞ்சோலை ஆக்கிக்கொள்ள முடியும்.

    • நடைபயிற்சி என்பது நம்மை நகர்த்தும் எளிமையான பயிற்சியாகும்.
    • பெரும்பாலான பெண்கள், எடை தூக்கும் பயிற்சிகளை தவிர்க்கிறார்கள்.

    உடற்பயிற்சி என்பது எல்லோருக்குமே முக்கியம். அப்போதுதான் ஆரோக்கியம், உடல் கட்டுக்கோப்பை காக்க முடியும், சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். அதிலும், குடும்பத்தின் முதுகெலும்பாய் உள்ள பெண்கள், அன்றாடம் அவசியம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    ஆனால், வீட்டு வேலை, வெளி வேலை என்று எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் அவர்கள், உடற்பயிற்சி செய்ய தங்களுக்கு நேரமில்லை என்கிறார்கள்.

    அப்படி நேரமில்லாத பெண்கள், குறைந்தபட்சம் 2 பயிற்சிகளாவது செய்வது நல்லது.

    ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினமும் 30 நிமிடங்களேனும் ஏதேனும் உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

    வாராந்திர பழக்கமாக 2 பயிற்சிகளை பெண்கள் மேற்கொள்வது, அவர்களுடைய ஆரோக்கியத்துக்கு உதவும். அந்த பயிற்சிகள் பற்றி...

    நடைபயிற்சி

    நடைபயிற்சி என்பது நம்மை நகர்த்தும் எளிமையான பயிற்சியாகும். உட்கார்ந்த வாழ்க்கைமுறையை கொண்டவராக இருந்தால் அதை மாற்றுவதற்கும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் நடைபயிற்சி சிறந்த தேர்வாகும். பரபரப்பான நாட்களிலும், நடப்பதற்கு நேரத்தை ஒதுக்குவது மனதை அமைதியாகவும் இலகுவாகவும் உணரச் செய்யும். ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 3 மணி நேரம் நடைபயிற்சி செய்வது நல்லது. இந்த 3 மணி நேரத்தை 45 நிமிடங்களாக பிரிக்கலாம். வாரத்தின் 7 நாட்களில் 4 நாட்கள் வேகமான நடைபயிற்சி செய்ய வேண்டும். இது உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன் தசைகளை யும் வலிமையாக்கும்.



    எடை தூக்குதல்

    பெரும்பாலான பெண்கள், எடை தூக்கும் பயிற்சிகளை தவிர்க்கிறார்கள். இது ஆண்களுக்கானது என பல பெண்களின் எண்ணமாக உள்ளது. ஆனால் எடை தூக்கும் பயிற்சி, பெண்களின் உடலை வலிமையாக்குவதில் முக்கியப்

    பங்காற்றுகிறது. வாரத்தில் 2 முறையாவது எடைகளை தூக்கி பழகவேண்டும். முதலில் குறைந்த எடைகளைத் தூக்கி பயிற்சிகள் செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக எடையை அதிகரிக்கலாம். வாரத்தில் 2 முதல் 3 நாட்கள் எடை பயிற்சிகளை செய்யலாம்.

    பெண்கள் உடற்பயிற்சிக்கு என்று ஒரு மணி நேரம், 2 மணி நேரம் என ஒதுக்க தேவையில்லை. அவர்கள் தம்முடைய அன்றாட வாழ்க்கையில் காலையில் 10 நிமிடங்கள், மதியம் 10 நிமிடங்கள், இரவில் 10 நிமிடங்கள் என பிரித்து, மொத்தத்தில் 30 நிமிடங்கள் நடப்பது போதும்.

    வாரத்தில் 2 நாட்களாவது எடைகளுடன் கூடிய பயிற்சியை செய்ய 30 நிமிடங்கள் அல்லது குறைந்த பட்சம் 15 நிமிடங்களை ஒதுக்கலாம். 3-3-3 விதியை பின்பற்றலாம். மூன்று வெவ்வேறு பயிற்சிகளை மூன்று செட்டுகள் செய்வதே 3-3-3 விதியாகும்.

    இது பெண்களின் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும். தொடக்கத்தில் சற்று கடினமாக இருந்தாலும் இந்த பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் மிகவும் எளிதாகிவிடும்.

    முடிந்தால் வீட்டிலோ அல்லது பெண்களுக்கு என்று உள்ள உடற்பயிற்சிக் கூடங்களிலோ எடைப்பயிற்சிகளை பெண்கள் மேற்கொள்ளலாம்.

    • 'காதல் என்பது முட்டாளின் ஞானம் மற்றும் ஞானிகளின் முட்டாள்தனம்' என்று ஆங்கில பொன்மொழி உள்ளது.
    • புத்திசாலிகள் பெரும்பாலும் தாங்களும், தங்களை சார்ந்தவர்களும், இப்படிதான் செயல்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டை நிர்ணயித்துக் கொள்கிறார்கள்.

    காதல் என்பது ஆழமான மற்றும் சிக்கலான உணர்ச்சிகளின் சங்கமம். காதலில் எப்போதும் லாஜிக் பார்க்கக்கூடாது. மேஜிக் மட்டும்தான் பார்க்க வேண்டும் என்று கூறுவார்கள். அதனால்தான் என்னவோ திறமைசாலிகளும், புத்திசாலிகளும் எப்போதும் காதலில் போராடுகிறார்கள்.

    'காதல் என்பது முட்டாளின் ஞானம் மற்றும் ஞானிகளின் முட்டாள்தனம்' என்று ஆங்கில பொன்மொழி உள்ளது.

    பொதுவாக புத்திசாலித்தனம் சிறப்பான குணமாக கருதப்பட்டாலும், அது சில நேரங்களில் காதல் விஷயங்களில் எதிர்பாராத சவால்களை ஏற்படுத்தக்கூடும். விமர்சன சிந்தனை, பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காண்பவர்கள் அதே பகுப்பாய்வு மனநிலையுடன் காதலையும் அணுகலாம்.

    இது அவர்களின் உறவுகளில் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தலாம். சரி..! புத்திசாலித்தனமாக செயல்படுபவர்கள், காதலில் எப்படியெல்லாம் சொதப்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்வோம்.

    ஆழமான சிந்தனை

    புத்திசாலி நபர்கள் சூழ்நிலைகளை ஆழமாக பகுப்பாய்வு செய்கிறார்கள். பெரும்பாலும் துணையின் மனநிலை, காதல் கை கூடுவதற்கான வாய்ப்புகள், காதல் உண்டாக்க இருக்கும் சிக்கல்கள், இருதரப்பு குடும்ப புரிதல் இப்படி நீளமாக சிந்தித்த பின்னரே, காதல் உறவில் அடியெடுத்து வைக்கிறார்கள். அப்படி காதலிக்க ஆரம்பித்தாலும், தன்னுடைய துணையுடன் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வதில்லை. அவர்களுக்கு தேவையானதை மட்டும், அதுவும் அவர்களை பாதிக்காத விஷயங்களை மட்டுமே பகிர்ந்து கொள்கிறார்கள். இவை, காதலன்-காதலிக்குள் வெளிப்படை தன்மை குறித்த சர்ச்சைகளை, பிரச்சினைகளை உருவாக்க வாய்ப்பிருக்கிறது.

    பர்பெக்ட்

    புத்திசாலிகள் பெரும்பாலும் தாங்களும், தங்களை சார்ந்தவர்களும், இப்படிதான் செயல்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டை நிர்ணயித்துக் கொள்கிறார்கள். கலந்துரையாடல், புரிதல், காதல் இப்படி எல்லாவற்றிலும் ஒரு முதிர்ச்சியை (மெச்சூரிட்டி) எதிர்பார்க்கிறார்கள். இந்த பெர்பெக்ஷனை எல்லா சமயங்களிலும் எதிர்பார்ப்பது கடினம். ஆனாலும் ஒரு சிலர் எதிர்பார்ப்பதால், பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

    பயம்

    புத்திசாலித்தனமான நபர்கள் காதலில் முழுமையாக ஈடுபடுவதற்கு முன்பு அதன் நீண்டகால தாக்கங்களை பற்றி சிந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்கள் நிதி நிலை, காதல் உறவின் வெற்றி-தோல்வி வாய்ப்புகள் இப்படி எல்லாவற்றையும் அதிகமாக கணக்கிடுவதால், காதல் உறவில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பு தயங்குகிறார்கள்.

    உற்ற துணை

    தங்களுடைய புரிதல், புத்திசாலித்தனத்திற்கு ஏற்ப துணைத்தேடுவதுதான், இவர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சவால். எல்லா மனிதர்களும், எல்லா விஷயங்களிலும் சிறப்பானவர்களாக இருப்பர் என்று சொல்லிவிட முடியாது. சிலருக்கு சில விஷயங்களில் ஆழ்ந்த புரிதல் இருக்கலாம். ஆனால் எல்லா விஷயங்களிலும் அதை எதிர்பார்க்கக்கூடாது. ஆனால் இந்த விஷயத்தில்தான், பலருக்கும் சிக்கல் உண்டாகிறது. தங்களைபோலவே, ஆழ்ந்த சிந்தனை, ஆழ்ந்த புரிதல் கொண்ட துணையை தேடி பலரும் ஏமாந்துவிடுகிறார்கள்.

    • குறட்டை, மாறுபட்ட பணிநேரம் போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன
    • நிம்மதியான தூக்கத்தைப் பெற விரும்பி இந்த SLEEP DIVORCE பழக்கத்தை கைக்கொண்டுள்ளனர்.

    இந்தியர்களிடையே அண்மையில் Sleep Divorce என்ற பழக்கம் உருவெடுத்துள்ளது.

    திருமணத்திற்கு பின்பும் கணவன், மனைவி தனித்தனியே தூங்கும் இந்த தூக்க விவாகரத்து பழக்கத்தை 70% பேர் விரும்புவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

    இப்பழக்கம் உருவாக குறட்டை, மாறுபட்ட பணிநேரம் போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன. வேலை செய்து களைத்த தம்பதிகள் நிம்மதியான தூக்கத்தைப் பெற விரும்பி இந்த Sleep Divorce பழக்கத்தை அதிகம் கைக்கொண்டுள்ளனர். 

    • ஆய்வின் முதன்மை ஆசிரியர் ஆடம் போடே கூறுகிறார்.
    • அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    பெண்களை விட ஆண்களே சற்று அதிகமாக காதலில் விழுகின்றனர், ஆனால் பெண்கள் ஆண்களை விட தங்கள் துணையைப் பற்றி அதிகமாக கவலைப்படுகிறார்கள் என்று ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் (ANU) பாலின வேறுபாடுகளை ஆராயும் ஆய்வு தெரிவிக்கிறது.

    ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட இந்த Peer review மதிப்பாய்வில், ஆண்கள், பெண்களை விட சராசரியாக ஒரு மாதம் முன்னதாகவே காதலில் விழுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

     இந்த ஆய்வின் ஆசிரியரும், ANU முனைவர் பட்ட மாணவருமான ஆடம் போடே கூறுகையில், "ஆண்கள் தங்கள் காதலியின் மனதை கவர தங்கள் அர்ப்பணிப்பைக் அதிகம் காட்ட வேண்டியிருப்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம்" என்று தெரிவிக்கிறார்.

    ஆனால் பெண்கள் ஆண்களை விட தங்கள் அன்புக்குரியவர்களைப் பற்றி சிந்திப்பதில் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

    • பட்டு புடவைகள் வாஷிங்மெஷினில் சேதமடையாமல் இருப்பதை உறுதி செய்ய எப்போதும் கையில்தான் துவைக்க வேண்டும்.
    • நேரடி சூரிய ஒளியில் இருந்து விலகி நன்கு காற்றோட்டமான பகுதியில் பட்டு புடவையை தொங்கவிடுங்கள்.

    பெண்கள் பலருக்கும் தங்கள் பட்டு புடவையை பராமரிப்பது கடினமாக உள்ளது. குறிப்பாக திருமணத்திற்கு வாங்கும் பட்டு புடவைகள் கனமாகவும், பராமரிக்க கடினமாகவும் இருக்கும். இதனை கையில் துவைப்பது அவ்வளவு எளிதல்ல. பட்டு புடவைகளை வீட்டிலேயே துவைத்து பராமரிக்க சில எளிய டிப்ஸ்களை பற்றி பார்க்கலாம்.

    1. குளிர்ந்த நீரை பயன்படுத்துங்கள்

    பட்டு புடவைகளை துவைக்கும் போது, சூடான தண்ணீருக்கு பதிலாக குளிர்ந்த நீரை பயன்படுத்துவது முக்கியம்.

    சூடான நீர் பட்டு இழைகளை சுருக்கி அதன் பளபளப்பை இழக்கச் செய்யலாம். குளிர்ந்த நீர் மென்மை தன்மை கொண்டிருக்கும் என்பதால் அதன் அசல் பிரகாசத்தை பாதுகாக்க உதவும்.

    2. மென்மையான சோப்பு பயன்படுத்துங்கள்

    பட்டு புடவைகளை துவைக்கும்போது, மென்மையான துணிகளுக்கு வடிவமைக்கப்பட்ட சோப்பை பயன்படுத்துவது சிறந்தது. கடுமையான சோப்பு, பட்டு இழைகளை சேதப்படுத்தி புடவையில் உள்ள நிறங்களை மங்கச்செய்யலாம். குறிப்பாக நீங்கள் பயன்படுத்தும் துணி துவைக்கும் சோப்பு, பட்டுப்புடவையை சலவை செய்ய பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். சோப்பு மீதுள்ள லேபிளை படிக்கவும்.

    3. மெதுவாக கையில் துவைக்க வேண்டும்

    பட்டு புடவைகள் வாஷிங்மெஷினில் சேதமடையாமல் இருப்பதை உறுதி செய்ய எப்போதும் கையில்தான் துவைக்க வேண்டும். ஒரு பக்கெட்டில் குளிர்ந்த நீரை நிரப்பி, பட்டுப்புடவையை துவைப்பதற்கான பிரத்யேக வாஷிங் திரவத்தை சேர்க்கவும். அந்த மென்மையான தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். அப்போது பட்டு புடவையை முறுக்கவோ அல்லது திருப்பவோ கூடாது. சிறிது நேரத்துக்கு பிறகு சோப்பு நுரையை அகற்ற, பட்டு புடவையை குளிர்ந்த நீரில் நன்கு அலச வேண்டும்.

    4. காற்றில் உலர வேண்டும்

    பட்டு புடவையை வீட்டில் துவைத்த பிறகு, ஹீட்டர் அல்லது ஸ்டீமர் பயன்படுத்துவதற்கு பதிலாக அதை காற்றில் உலர்த்துவது முக்கியமானது. நேரடி சூரிய ஒளியில் இருந்து விலகி நன்கு காற்றோட்டமான பகுதியில் பட்டு புடவையை தொங்கவிடுங்கள். இல்லாவிட்டால் வெயிலோ, வெப்பமோ மென்மையான பட்டு இழைகளை சேதப்படுத்தும். புடவை உலர்ந்தவுடன், அதில் இருக்கும் சுருக்கங்களை அகற்ற குறைந்த வெப்ப அமைப்பில் அதை அயர்ன் செய்யலாம்.

    • 'சமூக உளவியல் மற்றும் ஆளுமை அறிவியல்' என்ற அறிவியல் இதழில் முடிவுகள் வெளியாகி உள்ளன.
    • முன்னாள் காதலரை மறக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை ஆராய்ந்தது.

    முன்னாள் காதலரை மறக்க எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது.

    'சமூக உளவியல் மற்றும் ஆளுமை அறிவியல்' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வு, முன்னாள் துணையை மறக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை ஆராய்ந்தது.

    சராசரியாக, முன்னாள் காதலருடனான உணர்ச்சி ரீதியான பற்றுதல் பாதியளவு மறைய சுமார் 4.18 ஆண்டுகள் ஆகலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    பெரும்பாலான காதலர்களுக்கு, சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு பிணைப்பு முற்றிலும் மறைந்துவிடும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    • கறைபட்ட இடத்தை அழுத்தி தேய்க்கக் கூடாது.
    • டால்கம் பவுடர் தூவி சுத்தம் செய்ய வேண்டும்.

    பெண்களின் மனதுக்கு நெருக்கமான பட்டுப்புடவையில் கறை ஏற்படும்போது, அவர்கள் கலங்கிவிடுவார்கள். ஆனால், அதிகம் அலட்டிக்கொள்ளாமல், பட்டுப் புடவை கறைகளை நீக்க முடியும். அதுகுறித்து...


    பூஜை போன்றவற்றின்போது பட்டுப் புடவையில் எண்ணெய் பட்டு விடலாம். அப்படி எண்ணெய்க் கறை பட்டால், நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக ஈரம் இல்லாத சுத்தமான காட்டன் துணியை கொண்டு அந்த இடத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். துணி கிடைக்காவிட்டால், 'டிஷ்யூ' பேப்பர் கொண்டும் குறிப்பிட்ட இடத்தில் ஒற்றி எடுக்கலாம்.


    மிகவும் கவனமாக இதை செய்ய வேண்டும். கறைபட்ட இடத்தை அழுத்தி தேய்க்கக் கூடாது. அழுத்தி தேய்த்தால் மற்ற இடங்களுக்கும் கறை பரவும் வாய்ப்புள்ளது. அதனால் முடிந்தவரை எண்ணெய் பட்ட இடத்தை மட்டும் மென்மையாக ஒற்றி எடுக்க வேண்டும்.

    இந்த மாதிரி துணி அல்லது டிஷ்யூ பேப்பரால் ஒற்றி எடுத்த பின்னர், அந்த இடத்தில் டால்கம் பவுடர் தூவி சுத்தம் செய்ய வேண்டும். பவுடர் தூவியதும், கறைபட்ட இடத்தை குழாயில் ஓடும் நீரில் அலசினால் போதும். படிந்துள்ள எண்ணெய், அழுக்குகள் எல்லாமே நீங்கிவிடும். மறந்தும் கூட வெந்நீரில் கறையை நீக்க முயற்சி செய்ய வேண்டாம். வெந்நீர் பட்டால் கறை நீங்கவே நீங்காது.


    சோப்பு கரைசலை வைத்தும் பட்டுப்புடவையில் உள்ள கறைகளை நீக்க முடியும். இதற்கு கடின சோப்பை பயன்படுத்தாமல் மென்மை தன்மை கொண்ட லிக்விட் சோப்பை உபயோகிக்கலாம்.

    லிக்விட் சோப்பை குளிர்ந்த தண்ணீரில் கரைத்து, அதை ஒரு சுத்தமான காட்டன் துணியில் நனைத்துக்கொள்ள வேண்டும். இதை, விடாப்பிடி யான கறையின் மீது மெதுவாக வைத்து தேய்க்க வேண்டும். வேகமாகவோ அல்லது அழுத்தி துடைத்தாலோ பட்டுப்புடவையில் உள்ள நூலிழைகள் அறுந்துவிடும் வாய்ப்புள்ளது.

    எனவே, மெதுவாக தேய்க்க வேண்டும். அடுத்தகட்டமாக, இந்த நுரைகளை நீக்குவதற்கு கறை உள்ள இடத்தை குளிர்ந்த நீரால் அலச வேண்டும். அப்போது கறை நீங்கி, பட்டுப் புடவை பழைய நிலைக்கு வந்துவிடும்.

    • ஆண், பெண் பாலினங்களுக்கு இடையே செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பில் வேறுபாடுகள் கண்டறியப்பட்டன.
    • ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

    செல்போன்கள் தற்போது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் செல்போன்களில் திரையை தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்.

    ரீல்ஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்கள் என எப்போது பார்த்தாலும் அதிக அளவில் இளைஞர்கள் இதில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

    இதில் யாருக்கு அதிக அளவில் ஆபத்து மற்றும் மன அளவில் பதட்டத்தை அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது என்பது குறித்து சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

    இதில் 25 வயது உடைய 104 ஆண்கள் 293 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த சிலரை இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். அவர்கள் அனைவரும் 100 சதவீதம் தொடர்ந்து ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வந்தனர் .

    இந்த ஆய்வின் முடிவில் ஆண், பெண் பாலினங்களுக்கு இடையே செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பில் வேறுபாடுகள் கண்டறியப்பட்டன.

    அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் இளம்பெண்கள் மனம் நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.

    ஸ்மார்ட்போன் அதிக அளவில் பயன்படுத்தும் பெண்கள் அதிக துன்பங்களை எதிர்கொள்ள கூடும். ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு நாளும் போன் பயன்படுத்துவதால் சமூகப் பதட்டத்தை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிக அளவில் ஏற்படுவது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    மேலும் மன உளைச்சல், தீங்கு விளைவிக்கும் நடத்தை, தற்கொலை எண்ணம் அதிகரிப்பதற்கு இந்த ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணங்களாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    சிக்கலான ஸ்மார்ட்போன் பயன்பாடு இளைய தலைமுறையினர் இடையே உள்ள பிரச்சனையை தீர்ப்பதற்கும் அதன் காரணம் மற்றும் விளவுகளை கண்டறிய தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும் உணவு முறையை மேற்கொள்வது அவசியம்.
    • விட்டமின் பி-12 ஊட்டச்சத்து சரியான அளவு உணவில் இருக்க வேண்டும்.

    ஒரு பெண்ணின் வாழ்க்கையை முழுமை செய்யும் விஷயம் தாய்மைப்பேறு அடைவதாகும். குழந்தையை கருவில் தாங்கி அதை சீராக போற்றி வளர்த்து, பெற்றெடுத்து, சீரும் சிறப்புமாக வளர்க்கும் பொறுப்பு தாய்க்கே உரியது.

    குழந்தைப்பேறுக்குப் பின்னர் உடலில் உள்ள காயங்களை ஆற்றும் வகையில் மஞ்சள் செயல்படுகிறது. மஞ்சளில் விட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம் உள்ளிட்ட தாதுப்பொருட்கள் அடங்கியிருப்பதால் உடலின் உட்புற மற்றும் வெளிப்புற காயங்களை அது விரைவாக குணப்படுத்துவதோடு, உடல் வீக்கத்தையும் கட்டுக்குள் கொண்டு வருகிறது. அதனால் ஒரு டம்ளர் பசும்பாலுடன் சிறிதளவு நல்ல மஞ்சள் தூள் கலந்து பருகலாம்.

    குழந்தை பேற்றுக்குப்பின் பின்னர் தாயின் உடலில் பல்வேறு சத்துக்களின் இழப்பு ஏற்பட்டு, உடல் பலவீனமும் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் அவர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டிய பெரும் பொறுப்பையும் நிறைவேற்ற வேண்டும். அதனால், அவர்களுக்கு அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும் உணவு முறையை மேற்கொள்வது அவசியம்.

    குழந்தை பெற்றெடுத்த பின்னர் தாயின் உடல் நிலையில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படுகின்றன. உடல் மற்றும் மனநிலையில் அந்த தாய் பல சிக்கல்களை சந்திக்கிறாள். அந்த சிக்கல்களை தாங்கும் அளவுக்கு அவள் தன்னை உடல் ரீதியாக தகுதியுள்ளவளாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று தாய்-சேய் நல மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    அந்த வகையில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்பது அந்த தாய்க்கு மட்டுமல்லாமல், குழந்தைக்கும் உடல் நலனை ஏற்படுத்தும். அத்துடன் பிரசவத்தால் ஏற்பட்ட உடல் வலி, காயங்கள் ஆகியவை விரைவில் குணமடையும் விதத்திலும் அந்த உணவு சத்துள்ளதாக இருக்க வேண்டும். தேவையான அளவிற்கு தாய்ப்பால் சுரக்க உதவுவதாகவும் அந்த உணவு அமைவதும் அவசியம்.

    ஒரு நாளைக்கு 3 முதல் 4 அவுன்ஸ் புரதச்சத்து அடங்கிய உணவுகளை அந்த தாய் எடுத்துக் கொள்வது நல்லது. அத்துடன் 4 அல்லது 5 முறை பால் மற்றும் பால் பொருட்களை உண்ணலாம். அதன் மூலம் உடலுக்கு தேவைப்படும் புரதம், கால்சியம் ஆகியவை ஈடுகட்டப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மீன், முட்டை, பன்றி இறைச்சி, பருப்புகள், பல்வேறு விதைகள் ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    விட்டமின் பி-12 ஊட்டச்சத்து சரியான அளவு உணவில் இருக்க வேண்டும். அதன் மூலம் உடல் சோர்வு, எடை குறைதல், வாந்தி வருதல் ஆகிய சிக்கல்கள் விலகும். பாலூட்டும் தாய்மார்கள் தங்களுடைய உடல் சோர்வை அகற்றும் விதமாக இரும்புச்சத்து, விட்டமின்-சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால் தக்காளி, சிட்ரஸ் பழங்கள், உருளைக்கிழங்கு, பிரக்கோலி ஆகியவற்றை உண்ணலாம். அத்துடன் கீரை வகைகள், எள் சேர்த்த தின்பண்டங்களையும் உட்கொள்ளலாம்.

    • மார்ச் 8-ந் தேதி ஒரு மாபெரும் பேரணியை பெண்கள் நடத்தினார்.
    • பெண்களின் முன்னேற்றத்தை கொண்டாடுவதற்கான நாளாக அறிவிப்பு

    சர்வதேச பெண்கள் தினம் இந்த வாரம் (மார்ச் 8-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த தினம் தோன்றியது, கொண்டாட்டத்தில் அல்ல, போராட்டத்தில்.

    பெண்கள் தினத்துக்கும், அமெரிக்கத் தொழிற்சங்க இயக்கத்துக்கும், ரஷியப் புரட்சி இயக்கத்துக்கும் பங்கு உண்டு என்றால் ஆச்சரியமாக இருக்கும்.

    1975-ம் ஆண்டுதான் இந்த நாளை சர்வதேச பெண்கள் தினமாக ஐ.நா. சபை அங்கீகரித்தது. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இந்த நாள் பெண்களுக்கு முக்கிய நாளாக உலகின் பல பகுதிகளில் இருந்து வருகிறது.


    இந்த நாளின் வரலாறு தெரியுமா?

    மார்ச் 8-ந் தேதி ஒரு மாபெரும் பேரணியை பெண்கள் நடத்தினார். வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தியும், வாக்களிக்கும் உரிமை கோரியும் சுமார் 15 ஆயிரம் உழைக்கும் பெண்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

    இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்க சோசலிஸ்ட் கட்சி.

    இந்த நாளை சர்வதேச தினமாக அனுசரிக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்தவர். பெண்ணுரிமைப் போராளி கிளாரா ஜெட்கின்.

    டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் 1910-ம் ஆண்டு நடந்த உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் இந்த யோசனையை முன்வைத்தார் கிளாரா, அந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்து கொண்டனர்.

    அதையடுத்து 1911-ம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதை அடிப்படையாக கொண்டே 2011-ம் ஆண்டு நூறாவது சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.

    ஆனால் 1975-ம் ஆண்டில்தான் ஐ.நா. சபை, மார்ச் 8-ந் தேதியை சர்வதேச பெண்கள் தினமாக முறைப்படி அறிவித்து கொண்டாடத் தொடங்கியது.

    அத்துடன் ஒவ்வோர் ஆண்டின் பெண்கள் தினத்துக் கும் ஒரு முழக்கத்தையும் முன்வைத்துவருகிறது. இதன்படி ஐ.நா.சபை அறிவிப்புக்குப் பின் வந்த முதல் பெண்கள் தினத்தின் முழக்கம், 'சமத்துவத்தை யோசி, அறிவுபூர்வமாக கட்டியெழுப்பு, மாற்றத்துக்காக புதுமை யாக சிந்தி.

    சமூகம், அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை கொண்டாடுவதற்கான நாளாக இந்த நாள் உருவெடுத்துள்ளது.

    ஆனால், பாலின பாகுபாட்டை எதிர்த்து உழைக்கும் பெண்கள் நடத்திய போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள்தான் இந்த நாளின் பின்னணியில் இருக்கின்றன .

    முதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது 1917-ஆண்டு, ரஷியாவில் போர் வேண் டாம். 'அமைதியும் ரொட்டியும்' தான் தேவை என்று வலியுறுத்தி மார்ச் 8-ந் தேதி பெண்கள் போராட்டத்தை தொடங்கினர். நான்குநாள்கள் நடந்த இந்த போராட்டம், சர்வ தேசமகளிர் தினம் என்ற கருத்துக்கு உறுதியான ஒரு வடிவத்தைக் கொடுத்தது.

    நான்கு நாள்கள் நீடித்த இந்த போராட்டம் கடைசியில் ரஷிய மன்னரான ஜார், அரியணை துறப்பதற்கு காரணமாக அமைந்தது. மன்னராட்சி முடிவுக்கு வந்த நிலை யில், அதற்குப் பதிலாக நியமிக்கப்பட்ட தற்காலிக அரசாங்கம், பெண்களுக்கு வாக்குரிமையும் அளித்தது.

    இந்த மாற்றம்தான், 1917-ம் ஆண்டு அக்டோபரில் நடந்த புகழ்பெற்ற ரஷியப் புரட்சிக்கு காரணமாக அமைந்தது. அப்படி புரட்சியின் பின்புலமாக இருந்த மகளிர் தினம், பெண்களின் பெருமை போற்றும் நாளாக உருவெடுத்துள்ளது.

    ×