என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து அருமையான ரெசிபிகளை செய்யலாம். இன்று மாம்பழ அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாம்பழக் கூழ் - 2
    ரவை - கால் கப்
    நெய் - தேவையான அளவு
    சர்க்கரை - கால் கப்
    முந்திரி பருப்பு - தேவையான அளவு
    ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
    தண்ணீர் - 1 கப்



    செய்முறை :

    முந்திரியை நெய்யில் வறுத்து வைத்து கொள்ளவும்.

    மாம்பழத்தை தோல் நீக்கி அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் சிறிது நெய் ஊற்றி அது உருகியதும் ரவையை கொட்டி பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.

    பின்னர் வாணலியில் சர்க்கரையை கொட்டி, அதனுடன் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சிக்கொள்ளவும்.

    அடுத்து அதில் ரவையை கொட்டி கிளறவும்.

    ரவை நன்றாக வெந்ததும் மாம்பழக்கூழ், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.

    அதனுடன் நெய் சேர்த்து வேக வைக்கவும்.

    நெய் நன்றாக பிரிந்து வந்ததும் இறக்கி, முந்திரி பருப்பு சேர்த்து ருசிக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கன் உணவுகளில் பல வகைகள் உள்ளன. அதிலும் கபாப்பில் அதிகளவு அளவு வெரைட்டி உள்ளது. சிக்கன் கபாப் ரெசிபியில், தாங்ரி சிக்கன் கபாப் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 4 (லெக் பீஸ்)
    தயிர் - 1/2 கப்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா தூள் - 1 1/2 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
    மிளகு தூள் - 1 1/2 டீஸ்பூன்
    சாட் மசாலா - 1 1/2 டீஸ்பூன்  
    கேசரி பவுடர் - 1 சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:

    சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து இடைஇடையே கீறி வைக்கவும்

    ஒரு பௌலில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    சுத்தம் செய்து கீறி வைத்த சிக்கன் லெக் பீஸில் இந்த பேஸ்ட்டை தடவி, ஒரு மணிநேரம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

    பிறகு ஒரு மணிநேரம் கழித்து உப்பு மற்றும் மிளகுத் தூளை சேர்த்து, பிரட்டி வைக்க வேண்டும்.

    ஊறிய சிக்கன் துண்டுகளை கிரில் மிஸினில் வைத்து, நன்கு வேக வைத்து எடுக்க வேண்டும்.

    இறுதியில் அதன் மேல் சாட் மசாலா மற்றும் எலுமிச்சை சாற்றை விட்டு, மீண்டும் 3 நிமிடம் கிரில் மிஸினில் வைத்து எடுக்க வேண்டும்.

    இப்போது சூப்பரான தாங்ரி சிக்கன் கபாப் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மாம்பழ கிரீம் புட்டிங் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த புட்டிங்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கிரீம் - 1/2 கப்,
    கிரீம் சீஸ் -2 கப்,
    சர்க்கரை - 2 கப்,
    ஜெலட்டின் - 1 டீஸ்பூன்,
    தண்ணீர் -1/4 டம்ளர் (ஜெலட்டின் கரைக்க)
    மாம்பழ எசென்ஸ் - சிறு துளி,
    கொட்டையில்லாத திராட்சைப்பழம் - 1/4 கிலோ
    மாம்பழம் - 1 கப்.



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் கிரீம் சீஸ், சர்க்கரை, எசென்ஸ் சேர்த்து சுமார் 2 நிமிடம் அடித்து நுரைத்து வெண்ணெய் போல் வரும்போது எசென்ஸ் கலந்து அடிக்கவும்.

    இப்போது ஃப்ரெஷ் கிரீம் அல்லது பாலேடு சேர்த்துக் கலக்கவும்.

    ஜெலட்டினை சிறிதளவு வெந்நீரில் கரைத்து துளித் துளியாக அடித்த கிரீம் சீஸ் கலவையில் சேர்த்து கைவிடாமல் கலக்கிக்கொண்டே இருக்கவும்.

    கடைசியாக மாம்பழத் துண்டுகளைக் கலந்து ஒரு பீங்கான் அல்லது கண்ணாடிப் பாத்திரத்தில் கொட்டி ஃபிரிட்ஜில் 5 மணிநேரம் செட் செய்து சில்லென்று பரிமாறவும்.

    சூப்பரான மாம்பழ கிரீம் புட்டிங் ரெடி.

    மாம்பழ சீசன் முடிந்தவுடன், அதற்குப் பதில் பைனாப்பிள், கொட்டையில்லா திராட்சையைக் கலந்து செட் செய்து கொடுக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த காளான் கோப்தா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பட்டன் காளான் - 200 கிராம்
    கேரட் - 1
    முட்டைகோஸ் - 1
    பச்சைப்பட்டாணி - கால் கப்
    மைதா - 1 டீஸ்பூன்
    சோள மாவு - 3 டீஸ்பூன்
    மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
    மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவைகேற்ப



    செய்முறை :


    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    முட்டை கோஸ், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை பட்டாணியை வேக வைத்து அரைத்து கொள்ளவும்.

    காளானை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வேகவைத்துக்கொள்ளுங்கள்.

    மற்றொரு பாத்திரத்தில், துருவிய கேரட், பொடியாக வெட்டப்பட்ட முட்டைகோஸ், அரைத்து வைத்த பச்சைப்பட்டாணி, மைதா, சோள மாவு, மிளகாய் தூள், மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக மாவு போல் பிசைந்து வைத்துக்கொள்ளுங்கள்.

    ஏற்கனவே வேகவைக்கப்பட்ட காளான்களை, இந்த கலவையால் முழுவதுமாக மூடும்படி நன்றாக உருட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்த காளான் உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    பொரித்த காளான்களை ஒரு தட்டில் வைத்து அதனை நேர்வாக்கில் இரண்டாக வெட்டி வைத்து அதன் மேல் கொத்தமல்லிதழைகளை தூவினால், சூடான, சுவையான, மொறுமொறுப்பான காளான் கோப்தா தயார்.

    இதனை சாம்பார் அல்லது தயிரில் ஊறவைத்தும் சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு முட்டை சேர்த்து சைனீஸ் ஸ்டைலில் அருமையான தக்காளி முட்டை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 1 கப்
    தக்காளி - 1
    தக்காளி கெட்சப் - 2 டேபிள் ஸ்பூன்
    வெங்காயத்தாள் - சிறிதளவு
    முட்டை - 3 (வேக வைத்து துண்டுகளாக்கப்பட்டது)
    பூண்டு - 10 பல்
    மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
    சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
    வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    பாசுமதி அரிசியை முக்கால் பாகம் உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தாள், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டையை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    பின்னர் வெங்காயத்தாள், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    அடுத்து வேக வைத்த சாதம், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

    பிறகு சிறிது நேரம் கழித்து, அதில் தக்காளி கெட்சப், உப்பு, சோயா சோஸ், வினிகர் மற்றும் மிளகு தூள் போட்டு, கிளறி விட வேண்டும்.

    பின் முட்டைத் துண்டுகளை சேர்த்து பிரட்ட வேண்டும்.

    பின் அந்த சாதத்தை நன்கு 5 நிமிடம் கிளறி, கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்க வேண்டும்.

    இப்போது சுவையான தக்காளி முட்டை சாதம் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வெரைட்டி சாதம் செய்து கொடுக்க விரும்பினால் பன்னீர் புலாவ் செய்து கொடுக்கலாம். இன்று இந்த புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 250 கிராம்,
    உதிரியாக வடித்த சாதம் - 2 கப்,
    வெங்காயம் -  ஒன்று
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
    பட்டை - சிறிய துண்டு,
    கிராம்பு, ஏலக்காய் தலா - 2,
    பிரியாணி இலை - ஒன்று,
    பச்சை மிளகாய் - 4,
    நெய் - ஒரு டீஸ்பூன்,
    புதினா, கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் பச்சை மிளகாய், சிறிதளவு புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.

     பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் பன்னீரை போடவும்.

    கலவை சேர்ந்து திக்காக வரும்போது சாதத்தை சேர்த்து, மிதமான தீயில் வைத்து கிளறவும்.

    மீதியுள்ள புதினா, கொத்தமல்லி மற்றும் நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

    சுவையான பன்னீர் புலாவ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இது குஜராத் ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் மாலை நேரத்தில் சாப்பிட அருமையாக இருக்கும் மேத்தி முத்தியா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    வெந்தயக்கீரை - 2 கட்டு,
    பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன்,
    இஞ்சி விழுது - 2 டீஸ்பூன்,
    பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
    சர்க்கரை - 1½ டீஸ்பூன்,
    தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
    கோதுமை மாவு - 1 கப்,
    கடலை மாவு - 1/2 கப்,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    எள் - 1 டீஸ்பூன்,
    உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரையை போட்டு அதனுடன் பச்சைமிளகாய் விழுது, இஞ்சி விழுது, பூண்டு விழுது, பெருங்காயத்தூள், மஞ்சள்ள தூள், சர்க்கரை, தயிர், கோதுமை மாவு, கடலை மாவு, சீரகம், எள், உப்பு சேர்த்து தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்தவைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான மேத்தி முத்தியா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், புலாவ், சப்பாத்தி, நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த செட்டிநாடு ஃபிஷ் மசாலா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீன் - அரை கிலோ,
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
    புளிக்கரைசல் - 3 டேபிள்ஸ்பூன்,
    நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்,
    அரைத்த தேங்காய் விழுது - 1/2 மூடி,
    பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்,
    மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
    தனியாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்,
    வெங்காயம் - 2,
    தக்காளி - 2,
    சின்ன வெங்காயம் - 10,
    பூண்டு பல் - 5,
    வெந்தயம் - 1/4 டீஸ்பூன்,
    கடுகு - 1/4 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை,
    கொத்தமல்லித்தழை - சிறிது.

     

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, சின்ன வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீன் துண்டுகளை நன்கு கழுவி மஞ்சள் தூள், உப்பு, சிறிது புளிக்கரைசல் சேர்த்து ஊற வைக்கவும்.

    கடாயில் எண்ணெயை ஊற்றி வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

    தக்காளி, வெங்காயம் ஆறியதும் மிக்சியில் போட்டு, தேங்காய் விழுது சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

    மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பூண்டு, வெந்தயம், சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிய பின்னர் அரைத்த தக்காளி விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

    மசாலா பச்சை வாசனை போனவுடன் மசாலா பொடிகளை சேர்த்து வதக்கி, புளிக் கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    ஒரு கொதி வந்ததும் மீனை போட்டு 10 நிமிடம் சிம்மில் கொதிக்க விட்டு கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான செட்டிநாடு ஃபிஷ் மசாலா ரெடி. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் மீந்த மினி இட்லியை வைத்து மாலையில் அருமையான தயிர் மினி இட்லி செய்து சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மினி இட்லி - 20,
    புளிப்பில்லாத கெட்டித்தயிர் - 1 கப்,
    உப்பு - தேவைக்கு,
    சாட் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
    மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
    சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்,
    காராபூந்தி - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - தேவைக்கு,
    அலங்கரிக்க மாதுளை முத்துக்கள் - சிறிது.



    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சீரத்தை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் பொடித்து கொள்ளவும்.

    அதிகம் புளிக்காத மாவினால் மினி இட்லி செய்து கொள்ளவும்.

    தயிரை நன்கு அடித்துக் கொண்டு, தேவையான உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

    ஒரு ஆழமான தட்டில் இட்லிகளை வைத்து, அதன் மீது தயிரை ஊற்றி பரப்பவும்.

    அதன் மீது ஒவ்வொன்றாக சீரகத்தூள், மிளகுத்தூள், கடைசியாக சாட் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழையை தூவி, காராபூந்து, மாதுளை முத்துக்களால் அலங்கரித்து பரிமாறவும்.

    குறிப்பு: விரும்பினால் பொடித்த திராட்சை, பைனாப்பிள் கொண்டு அலங்கரிக்கலாம். காராபூந்தியை சாப்பிடும் போது தான் சேர்க்க வேண்டும். முதலிலேயே சேர்த்தால் ஊறி விடும் நன்றாக இருக்காது.

    தயிர் மினி இட்லி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சேமியாவில் உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ரைஸ் ஸ்டிக்ஸ், வெஜிடபிள் வைத்து உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    Rice sticks - ஒரு bundle ல் பாதி
    சின்ன வெங்காயம் - 10
    விருப்பமான காய்கள் - பீன்ஸ் - 10, கேரட் - 1 சிறியது
    பச்சை மிளகாய் - 1
    இஞ்சி - சிறு துண்டு
    உப்பு - தேவைக்கு
    எலுமிச்சை சாறு - சிறிது
    கொத்துமல்லி இலை - சிறிதளவு

    தாளிக்க :

    எண்ணெய்
    கடுகு
    உளுந்து
    கடலைப் பருப்பு
    முந்திரி
    பெருங்காயம்
    கறிவேப்பிலை



    செய்முறை:

    ரைஸ் ஸ்டிக்ஸை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து ஒரு 20 நிமிடம் ஊற வைக்கவும். அப்போதுதான் ஊறி சாஃப்டாக இருக்கும். பிறகு நீரை வடித்துவிட்டு ஒரு இட்லிப் பாத்திரத்தில் இட்லி அவிப்பதுபோல் அவித்து கொள்ளவும். சீக்கிரமே வெந்துவிடும். வெந்ததும் எடுத்து உதிர்த்துவிடவும். அல்லது ஊறிய ரைஸ் ஸ்டிக்ஸ் அப்படியே கூட‌ சேர்க்கலாம்.

    கேரட், பீன்ஸ், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் சிறிது உப்பு சேர்த்து, (ஏற்கனவே ரைஸ் ஸ்டிக்கில் உப்பு சேர்த்துள்ளோம்) காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும்.

    காய்கள் வெந்ததும் உதிர்த்து வைத்துள்ள ரைஸ் ஸ்டிக்ஸை போட்டு forks ஐப் பயன்படுத்திக் கிளறிவிடவும். எல்லாம் கலந்து ரைஸ் ஸ்டிக்ஸ் நன்றாக சூடேறியதும் எலுமிச்சை சாறு விட்டு, கொத்துமல்லி தூவி இறக்கவும்.

    தேங்காய் சட்னி, வெஜ்-நான்வெஜ் குருமா தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.

    ரைஸ் ஸ்டிக்ஸ் உப்புமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி பாகற்காயை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று பாகற்காய் ஸ்டஃப்டு மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாகற்காய் - 5
    நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்
    மிளகாய்தூள் - அரை ஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
    மாங்காய் பவுடர் - அரை ஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    பெருங்காய தூள் - கால் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    சோம்பு - அரை ஸ்பூன்
    நறுக்கிய மாங்காய் - சிறிதளவு
    கடலை எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    பாகற்காயின் மேல் தோலை லேசாக சீவிக்கொள்ளவும். பின்னர் இரண்டாக வெட்டி நடுப்பகுதியில் உப்பு கலந்து அரை மணி நேரம் வெயிலில் உலர வைக்கவும்.

    பின்னர் அவைகளை நன்றாக கழுவிக்கொள்ளவும்.

    வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மாங்காய் பவுடர், சீரகம், பெருங்காயத்தூள், சோம்பு, மாங்காய்துண்டுகள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பாகற்காய்களின் உள்ளே வைக்கவும்.

    அவை கீழே விழாத அளவுக்கு நூலினால் கட்டிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பாகற்காயை கலவையுடன் போட்டு பொன்னிறமாகும் வரை கிளறி எடுத்து சுவைக்கலாம்.

    சூப்பரான பாகற்காய் மசாலா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சேமியா உப்புமா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேமியா - 2 கப்,
    பெரிய வெங்காயம் - 2,
    கறிவேப்பிலை - சிறிது,
    கொத்தமல்லித்தழை - சிறிது,
    உப்பு - தேவைக்கு.

    தாளிக்க :

    கடுகு - 1 டீஸ்பூன்,
    உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,
    இஞ்சி - 1 துண்டு,
    பச்சை மிளகாய் - 4,
    எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    சேமியாவை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்துகொள்ளவும்.

    வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சிட்டிகை உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் 3 கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.

    அதில் வறுத்த சேமியாவை சேர்த்து 2 நிமிடம் பெரிய தீயில் வேக விட்டு, பிறகு 5 நிமிடம் குறைந்த தீயில் மூடி போட்டு நன்கு வேகவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    சூடான சேமியா உப்புமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×