என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    காளான் 65-ஐ தனியாகவும், டீ மற்றும் காப்பியுடன் சேர்த்தோ சுவைக்கலாம். இனி சுவையான காளான் 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    காளான் - 200 கிராம்
    அரிசி மாவு - 100 கிராம்
    சோள மாவு - 25 கிராம்
    தனியா பொடி - 2 தேக்கரண்டி
    கரம் மசாலா பொடி - 2 தேக்கரண்டி
    மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
    இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    மஞ்சள் பொடி - தேவையான அளவு
    சீரகம் தூள் - கால் தேக்கரண்டி
    மிளகு தூள் - அரை தேக்கரண்டி
    தயிர் - 100 கிராம்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

    காளான் 65

    செய்முறை :

    முதலில் காளானை நன்கு கழுவி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வாயகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு, சோள மாவு, தனியா பொடி, கரம்மசாலா பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, மிளகு துள், சீரக தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைப் போட்டு கலந்து கொள்ளவும்.

    பொடி வகைகளுடன் இஞ்சி பூண்டு விழுது, தயிர் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அதனுடன் நறுக்கிய காளானைச் சேர்த்து ஒரு சேர பிசைந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும். காளான் கலவை கெட்டியாக இருக்கும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரட்டி வைத்த காளானை போட்டு வறுத்து எடுக்கவும். இவ்வாறு எல்லாக் காளானையும் பொரித்து எடுக்கவும்.

    சுவையான காளான் 65 தயார்.

    குறிப்பு: காளான் கலவை தயார் செய்யும் போது தண்ணீர் சேர்க்கக் கூடாது. காளானில் இருக்கும் தண்ணீரே கலவை தயார் செய்யப் போதுமானது. காளான் கலவையை அரை மணி நேரத்திற்கு மேல் ஊற வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் காளான் கலவை நீர்த்துப் போகும். விருப்பமுள்ளவர்கள் சோயா சாஸ், சில்லி சாஸ் ஆகியவற்றை மாவுக்கலவையில் சேர்த்து காளான் கலவை தயார் செய்யலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கிருஷ்ண ஜெயந்தியான இன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான ரவா லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரவை - 1 டம்ளர்
    சர்க்கரை - 2 1/4 டம்ளர்
    நெய் - அரை டம்ளர்
    முந்திரிப்பருப்பு - 10
    ஏலக்காய் - 4 (பொடித்தது)

    ரவா லட்டு

    செய்முறை :

    ரவையை வெறும் கடாயில் போட்டு சிவக்க வறுக்கவும்.

    நெய்யில் முந்திரிப்பருப்பைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

    வறுத்த ரவையை ஆற விட்டு, பின் மிக்சியில் போட்டு திரித்துக் கொள்ளவும்.

    அடுத்து அதில் ரவையுடன் சர்க்கரையையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.

    திரித்த ரவையுடன் பொடித்த ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பைச் சேர்க்கவும்.

    இந்த மாவை சிறிது சிறிதாக சூடான நெய் விட்டுப் பிசைந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

    உருண்டைப் பிடிக்க வரவில்லையென்றால் சிறிது சூடான பாலைத் தெளித்தும் உருண்டைகள் செய்யலாம்.

    குறிப்பு :

    * பாலைச் சிறிது சிறிதாகத் தெளித்தே மாவை உருண்டை பிடிக்க வேண்டும். அதிகம் பால் விட்டால் கொழகொழத்து உருண்டை பிடிக்க வராது.

    * ரவையை நன்கு சிவக்க வறுக்க வேண்டும். இல்லையென்றால் பச்சை வாடை அடித்து சுவையைக் கெடுத்து விடும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் பள்ளியில் மதியம் சாப்பிட அருமையான உணவு சாம்பார் சாதம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 3/4 கப்  
    துவரம் பருப்பு - 1/2 கப்  
    தண்ணீர் - 4 கப்  
    விருப்பமான காய்கறிகள் - 1 கப்  
    (கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம், முருங்கை)
    புளி கரைசல் - 1/4 கப்  
    சாம்பார் பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    பூண்டு - 10
    நெய் - 1 தேவையான அளவு
    பச்சைமிளகாய் - 5
    எண்ணெய் - தேவையான அளவு

    தாளிக்க :

    நெய் - 2 டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    சீரகம் -  அரை டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 3
    பெருங்காய தூள் - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு

    சாம்பார் சாதம்

    செய்முறை :

    வெங்காயம், காய்கறிகளை சிறிது துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    முதலில் அரிசி, பருப்பு இரண்டையும் தண்ணீர் விட்டு நன்கு அலசி நான்கு கப் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் ஊற வைக்கவும். பிறகு அந்த தண்ணீரை வடித்துவிட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு, நெய், ப.மிளகாய், பூண்டு சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரை வேக விடவும்.

    பிறகு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெட்டி வைத்த காய்கறியை போட்டு அத்துடன் சாம்பார் பவுடர், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

    குக்கராக இருந்தால் காய்கறிகள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசிலுக்கு வேக விடவும்.

    காய்கறி வெந்ததும் புளி கரைசல் விட்டு நன்கு கொதித்ததும் நன்கு வெந்த பருப்பு சாதத்தை கலந்து விடவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து சாதத்தோடு சேர்த்து கிளறி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

    சிம்பிளாக செய்யக்கூடிய சாம்பார் சாதம் ரெடி”.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அச்சுமுறுக்கு அல்லது ரோஸ் குக்கீஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா -  1/2 கப்,
    அரிசி மாவு - 1/4 கப்,
    உப்பு - 1 சிட்டிகை,
    ஏலப்பொடி - சிறிது,
    பொடித்த சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்,
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,
    தண்ணீர் - 1/4 கப்.

    அச்சுமுறுக்கு

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் மைதாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, உப்பு, ஏலப்பொடி, பொடித்த சர்க்கரை, தண்ணீர் சேர்த்து சேர்த்து பஜ்ஜி மாவுபோல் கரைத்துக்கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அச்சுமுறுக்கு அச்சியை சூடான எண்ணெயில் போட்டெடுத்து மாவில் முக்கி மறுபடியும். எண்ணெயில் போடவும்.

    முறுக்கு சிறிது நேரம் கழித்து அச்சிலிருந்து அதுவாகவே பிரிந்து எண்ணெயில் மிதக்கும். சிவந்ததும் எடுத்து விடவும்.

    குறிப்பு: ஒவ்வொரு முறையும் அச்சை எண்ணெயில் தோய்த்தெடுத்த பிறகே மாவில் முக்க வேண்டும்.

    சூப்பரான அச்சுமுறுக்கு ரெடி.

    இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்ப குடைமிளகாய் புதினா புலாவ் அருமையாக இருக்கும். இன்று புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - ஒரு கப்,
    குடைமிளகாய் - 2,
    வெங்காயம், தக்காளி - தலா ஒன்று,
    புதினா, கொத்தமல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி அளவு,  
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
    பட்டை - சிறு துண்டு,
    பெருஞ்சீரகம் - கால் டீஸ்பூன்,
    எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.

    குடைமிளகாய் புதினா புலாவ்

    செய்முறை:

    வெங்காயம், தக்காளியை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.

    குடைமிளகாயை சதுரமாக வெட்டிக் கொள்ளவும்.

    பாசுமதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வடித்து கொள்ளவும்.

    அடி கனமான வாணலியில் எண்ணெய், நெய் விட்டு, சூடானதும் பட்டை, பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி - பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.

    தக்காளி குழைய வதங்கியதும இதனுடன் நறுக்கிய குடைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும்.

    வடித்த சாதத்தில் இந்தக் கலவையை சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

    சூப்பரான குடைமிளகாய் புதினா புலாவ் ரெடி.

    தை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு வடை என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கல்கண்டு சேர்த்து வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உளுந்து - 1 கப்
    சீனி கல்கண்டு - அரை கப் (தூளாக்கவும்)
    பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு

    கல்கண்டு வடை

    செய்முறை:

    பச்சரிசி, உளுந்து இரண்டையும் தண்ணீரில் அரைமணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். ஓரளவு கெட்டி பதத்துக்கு வரும்போது கல்கண்டை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

    வடை தயார் செய்வதற்கு ஏற்ப மாவு கலவை கெட்டியாக இருக்க வேண்டும். அதிக வழுவழுப்பாக இருந்தால் சிறிதளவு அரிசி மாவு சேர்த்துக்கொள்ளவும். பிறகு மாவை வடைகளாக தட்டி வைத்துக்கொள்ளவும்.

    வாணலியை சிறு தீயில் வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும் அதில் போட்டு வடைகளாக பொரித்தெடுக்கவும்.

    சூப்பரான கல்கண்டு வடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு ஆலு லாலி பாப் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உருளை கிழங்கு - 3
    உப்பு - தேவைக்கு
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
    சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    பூண்டு பொடி - 1 தேக்கரண்டி
    ரெட் கலர் - பின்ச்
    பட்டை தூள் - 1/4 தேக்கரண்டி
    சீரக தூள் - 1 தேக்கரண்டி
    சோள மாவு- 1 தேக்கரண்டி (தண்ணீரில் கரைத்து கொள்ளுங்கள்)
    பிரட் தூள்
    பிரட் ஸ்டிக் ( ஒன்றை பாதியாக உடைத்து உபயோகிக்கலாம்)

    ஆலு லாலி பாப்

    செய்முறை :

    உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து ஆறியதும் தோல் நீக்கி நன்கு மசித்து கொள்ளுங்கள்.

    மசித்த உருளைக்கிழங்குடன் கலர், உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா, பூண்டு பொடி, பட்டை தூள், சீரக தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

    பிசைந்த கிழங்கை சிக்கனை போல் பிரட் ஸ்டிக்கில் வடிவமைத்து கொள்ளுங்கள்.

    வடிவமைத்த உருளைக்கிழங்கை சோள கலவையில் முக்கி பிரட் தூளில் பிரட்டி எடுக்கவும்.

    கடாயில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரட்டிய கிழங்கை மிதமான நெருப்பில் பொரித்து எடுக்கவும்.

    சுவையான உருளைக்கிழங்கு லாலி பாப்பை சாஸ் உடன் சூடாக பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மட்டன் நுரையீரல் கிரேவி. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    ஆட்டு நுரையீரல் - 250 கிராம்
    தக்காளி - 2
    வெங்காயம் - 1
    தயிர் - 2 டீஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 2
    உப்பு - தேவைக்கு
    எண்ணெய் - தேவைக்கு
    திக்கான தேங்காய் முதல் பால் - 1 கப்

    மட்டன் நுரையீரல் கிரேவி

    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நுரையீரலை நன்றாக அலசி சுத்தம் செய்து அதனுடன் 1/2 ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் தேவைக்கு கொஞ்சம் உப்பு சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி தேவைக்கு சிறிது உப்பு மீதியிருக்கும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.

    பின்பு அதனுடன் ஊற வைத்த நுரையீரல் சேர்த்து நன்றாக பிரட்டிவிட்டு தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.

    பாதி வெந்த பின்பு அதில் தேங்காய் பால் ஊற்றி வேக வைக்கவும்.

    நுரையீரல் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் பொழுது அடுப்பினை அணைத்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    சுவையான மட்டன் நுரையீரல் கிரேவி தயார்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் கோவக்காய் புளிக்குழம்பு. இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோவக்காய்கால் - கால் கிலோ
    வெங்காயம் - 2
    தக்காளி - 1
    புளி - எலுமிச்சையளவு

    வறுத்து அரைக்க:

    காய்ந்த மிளகாய் - 2
    தனியா - 1 டேபிள் ஸ்பூன்
    அரிசி - ஒரு டீஸ்பூன்
    கடலைப்பருப்பு - அரை டேபிள் ஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    மிளகு - அரை டீஸ்பூன்
    தேங்காய் துருவல் - 1 கப்
    பொட்டுக்கடலை - அரை டேபிள் ஸ்பூன்

    தாளிக்க:

    எண்ணெய் - தேவைக்கேற்ப
    காய்ந்த மிளகாய் - 2
    பச்சை மிளகாய் - 2
    பூண்டு பல் - 2
    கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி

    கோவக்காய் புளிக்குழம்பு

    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி, கோவக்காயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வறுத்து அரைக்க வேண்டிய பொருட்கள் எல்லாவற்றையும் வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய், பூண்டு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் அதில் கோவக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    கோவக்காய் வதங்கியதும் அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி காயை வேகவைக்கவும்.

    கோவக்காய் பாதி அளவு வெந்தததும் வறுத்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதிக்கவிட்ட பிறகு கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை வடிகட்டி ஊற்றவும். தேவைக்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

    நன்றாக கொதித்து குழம்பு பதத்திற்கு கெட்டியாகும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இனிப்புகளுக்கு பெயர் போன வட இந்தியாவில் பேதா எனும் வெள்ளைபூசணியில் செய்யும் இனிப்பு செய்வதற்கு சுலபம். அதேசமயம் வித்தியாசமான சுவையில் இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    வெள்ளை பூசணி - 800 கிராம்
    தண்ணீர் - 2 லிட்டர்
    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை - 600 கிராம்

    வெள்ளைப் பூசணி முரப்பா

    செய்முறை :

    வெள்ளை பூசணிக்காயை தோல் சீவி, விதை நீக்கி, பெரிய சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.

    ஒரு முள் கரண்டியால் நறுக்கிய துண்டுகள் முழுவதும் குத்தி எடுக்கவும். சர்க்கரைப்பாகை உறிஞ்சி கொள்ள ஏதுவாக இருக்கும்.

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

    இந்த எலுமிச்சை நீரில் நறுக்கிய பூசணி துண்டங்களை 20 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர் நீரை வடிகட்டி துண்டங்களை எடுத்து தனியே வைக்கவும்.

    வேறொரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் ஊற்றி அதில் பூசணி துண்டங்களை எலுமிச்சையின் புளிப்பு போகும் வரை அலசி எடுக்கவும்.

    அடுப்பில் பாத்திரத்தை வைத்து பூசணி துண்டுகள் வேகும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, கண்ணாடி போல் பூசணித்துண்டுகள் வேகும் வரை வேகவிடவும்.

    ஒரு பாத்திரத்தில் 600 கிராம் சர்க்கரைக்கு 400 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    கொதிக்கும் சர்க்கரை நீரில் பூசணி துண்டுகளை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேகவிடவும்.

    இந்த சர்க்கரை நீரிலே எட்டு மணிநேரம் விடவும்.

    எட்டுமணி நேரம் கழித்து வெள்ளை பூசணி துண்டுகளை ஒர் இரவு முழுவதும் உலரவிடவும்.

    தயாரான இனிப்பை குளிர்சாதன பெட்டியில் வைத்து கூட உண்ணலாம்.

    சுவையான வெள்ளைப் பூசணி முரப்பா

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நெய்யப்பம் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சிறந்த சிற்றுண்டியாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - 1 கப்
    கோதுமை மாவு - 3/4 கப்
    வெல்லம் துருவியது - 1/2 கப்
    தேங்காய் - 1/2 கப்
    ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - 1/4 தேக்கரண்டி
    நெய் - 1/4 கப்
    சமையல் சோடா - சிறிதளவு

    நெய்யப்பம்

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும். அதனுடன் துருவிய வெல்லம் சேர்த்து வெல்லம் கரையும் வரை வைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் கோதுமை மாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    இதனுடன் துருவிய தேங்காய், உப்பு, மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலக்கவும்.

    பின்னர் வெல்லப்பாகை வடிகட்டி சேர்த்து நன்றாக கலந்து இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்,  மாவு கெட்டியாக இருந்தால் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

    ஒரு பணியாரக் கல்லில் நெய் ஊற்றி மிதமான சூட்டில் காய வைக்கவும்.

    பின்னர் ஒவ்வொரு குழியிலும் முக்கால் பாகத்திற்கு மாவை ஊற்றி ஒருபுறம் வெந்தவுடன் திருப்பி போட்டு மறுபுறம் வேக விட்டு எடுத்து பரிமாறவும்.

    சுவையான நெய்யப்பம் தயார்.

    இன்றைய செய்முறையில் வாழைப்பழம் சேர்க்கவில்லை, விருப்பப்பட்டால் நீங்கள் கனிந்த ஒரு வாழைப் பழத்தை மசித்து இதே செய்முறையில் சேர்த்துக்கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பிரைடு ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் பன்னீர் சேர்த்து பிரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - ஒரு கப்
    பாஸ்மதி அரிசி - ஒரு கப்
    பச்சை மிளகாய் - 2
    பூண்டு -  2 பல்
    கேரட் - 1
    பீன்ஸ் - 7
    வெங்காயத்தாள் வெள்ளைப் பகுதி - கால் கப்
    வெங்காயத்தாள் பச்சைப் பகுதி - அரை கப்
    உப்பு, மிளகு - தேவையான அளவு
    எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

    பன்னீர் பிரைடு ரைஸ்

    செய்முறை :

    ப.மிளகாய், பூண்டு, கேரட், பீன்1, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெந்நீரில் பன்னீரைப் போட்டு 5 நிமிடம் கழித்து தண்ணீரை வடித்து மிக பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

    பாஸ்மதி அரிசியைக் கழுவி உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின்னர் வெங்காயத்தாளின் வெள்ளைப்பகுதி, கேரட், பீன்ஸ் மற்றும் துளி உப்பு சேர்த்துக் கிளறி வேக வையுங்கள்.

    இத்துடன் நறுக்கிய பன்னீரைச் சேர்த்து காய்கறிகளோடு பன்னீர் சேரும் வரை வதக்குங்கள்.

    இதில் வேக வைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து மெதுவாகக் கிளறுங்கள். இல்லையென்றால் அரிசி உடைந்துவிடும்.

    இறுதியாக உப்பு, மிளகுத்தூள், வெங்காயத்தாள் பச்சைப் பகுதியைச் சேர்த்து தூவி கிளறி அடுப்பை அணைத்து காரமான கிரேவியோடு பரிமாறுங்கள்.

    சூப்பரான பன்னீர் பிரைடு ரைஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×