search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நெய்யப்பம்
    X
    நெய்யப்பம்

    குழந்தைகளுக்கு விருப்பமான நெய்யப்பம்

    நெய்யப்பம் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சிறந்த சிற்றுண்டியாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - 1 கப்
    கோதுமை மாவு - 3/4 கப்
    வெல்லம் துருவியது - 1/2 கப்
    தேங்காய் - 1/2 கப்
    ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - 1/4 தேக்கரண்டி
    நெய் - 1/4 கப்
    சமையல் சோடா - சிறிதளவு

    நெய்யப்பம்

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும். அதனுடன் துருவிய வெல்லம் சேர்த்து வெல்லம் கரையும் வரை வைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் கோதுமை மாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    இதனுடன் துருவிய தேங்காய், உப்பு, மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலக்கவும்.

    பின்னர் வெல்லப்பாகை வடிகட்டி சேர்த்து நன்றாக கலந்து இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்,  மாவு கெட்டியாக இருந்தால் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

    ஒரு பணியாரக் கல்லில் நெய் ஊற்றி மிதமான சூட்டில் காய வைக்கவும்.

    பின்னர் ஒவ்வொரு குழியிலும் முக்கால் பாகத்திற்கு மாவை ஊற்றி ஒருபுறம் வெந்தவுடன் திருப்பி போட்டு மறுபுறம் வேக விட்டு எடுத்து பரிமாறவும்.

    சுவையான நெய்யப்பம் தயார்.

    இன்றைய செய்முறையில் வாழைப்பழம் சேர்க்கவில்லை, விருப்பப்பட்டால் நீங்கள் கனிந்த ஒரு வாழைப் பழத்தை மசித்து இதே செய்முறையில் சேர்த்துக்கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×