என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    வேர்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும், அதிகமான புரதசத்தும் இருக்கின்றது. இன்று வேர்க்கடலையை வைத்து லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வறுத்த வேர்க்கடலை - 1 கப்
    ஏலக்காய் தூள் - சிறிதளவு
    வெல்லம்/கரும்பு சர்க்கரை - 3/4 கப்

    வேர்க்கடலை லட்டு

    செய்முறை :

    முதலில் வறுத்த வேர்க்கடலையை ஒரு வாணலியில் போட்டு லேசாக வறுக்கவும். இவ்வாறு செய்வதனால் வேர்க்கடலையின் மேல் உள்ள தோலை நீக்குவது எளிதாக இருக்கும். வறுத்த கடலையை கைகளால் கசக்கினால் ஊதினால் மேல் தோல் எளிதாக வந்துவிடும்.

    தோல் நீக்கிய கடலையை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்(நைசாக வேண்டுமானாலும் அரைத்துக் கொள்ளலாம்).

    அரைத்த வேர்கடலையுடன் வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து இரண்டும் சேர்ந்து திரண்டு வரும் வரை மிக்ஸியை மெதுவான வேகத்தில் வைத்து அரைக்கவும்.

    அரைத்த கலவையை ஒரு தட்டில் போட்டு சிறு சிறு உருண்டைகளாய் பிடித்தால் சத்தான சுவையான வேர்க்கடலை லட்டு தயார்!

    வேர்க்கடலை எண்ணெய் விடும் அதனால் உருண்டைகளாய் உருட்ட வேறு பொருட்கள் தேவை இல்லை.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாளை சன்டே ஸ்பெஷல் மட்டன் பிரியாணியை குக்கரில் எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மட்டன் - 1 கிலோ
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    அரைக்க

    சிறிய வெங்காயம் - 10
    பூண்டு - 15 பற்கள்
    பச்சை மிளகாய் - 4
    சிவப்பு மிளகாய் - 4
    தேங்காய் - 2 தேக்கரண்டி (துருவியது )
    மல்லி தூள் - 1 தேக்கரண்டி
    புதினா, கொத்தமல்லி - 1 கைப்பிடி
    இஞ்சி - சிறிய துண்டு

    சமையலுக்காக

    நெய் - 2 தேக்கரண்டி
    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    வெங்காயம் - 4
    தக்காளி - 3
    பாஸ்மதி அரிசி - 3 கப் (30 நிமிடங்கள் ஊறவைத்தது )
    நீர்த்த தேங்காய் பால் - 3 கப்
    புதினா, கொத்தமல்லி - 1 கைப்பிடி
    பட்டை - 1
    ஏலக்காய் - 3
    கிராம்பு - 4
    பிரியாணி இலை - 2
    உப்பு - தேவையான அளவு

    பிரஷர் குக்கரில் மட்டன் பிரியாணி

    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டனை பெரிய துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவிக்கொள்ளவும்.

    கழுவிய மட்டனில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகிவற்றை சேர்த்து ஒரு 30 நிமிடம் ஊற வைக்கவும்.

    மிக்சியில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், துருவிய தேங்காய், புதினா, கொத்தமல்லி இலை, மல்லித்தூள், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மை போல் அரைத்து கொள்ள வேண்டும்.

    குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு சிவக்கும் வரை வதக்கவும்.

    வெங்காயம் சிவந்த பிறகு தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் அரைத்த மசாலா சேர்த்து பச்சை மனம் போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் ஊற வைத்த மட்டன் துண்டுகளை வதக்கியவற்றுடன் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு கிளறி விடவும்.

    இந்த நிலையில் உப்பு, தண்ணீர், கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கிய பின்பு ஏழு விசில் வரும் வரை வேக வைக்கவும்.

    வேக வைத்த மட்டனில் முப்பது நிமிடம் ஊற வைத்த பாசுமதி அரிசியை கலந்து பின்பு குக்கரை மூடிவிட்டு ஏழு நிமிடங்களுக்கு வேக விடவும்.

    அடுப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் கழித்து குக்கரை திறக்கவும்.

    சூடான சுவையான பிரஷர் குக்கர் மட்டன் பிரியாணி தயார்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பக்கோடா சேர்த்து கார குழம்பு செய்து இருப்பீங்க. இன்று பக்கோடா மோர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பக்கோடாவிற்கு


    கடலைமாவு - 6 டேபிள் ஸ்பூன்,
    பெரிய வெங்காயம் - 1,
    மிளகாய் தூள், உப்பு - கால் டீஸ்பூன்,
    எண்ணெய் - தேவையான அளவு,

    மோர் குழம்பிற்கு

    கெட்டியான மோர் - 3 கப்
    கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்,
    தனியா - 2 டீஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 3,
    வற்றல் மிளகாய் - 1,
    தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்,

    தாளிக்க

    கடுகு, பெருங்காயம், மஞ்சள் பொடி, உப்பு - தேவையான அளவு

    பக்கோடா மோர்குழம்பு

    செய்முறை:

    பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடலைப்பருப்பு, தனியாவை ஊற வைத்து அதனுடன் பச்சைமிளகாய், தேங்காய்த் துருவல், மிளகாய் வற்றல் சேர்த்து மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.

    மோரை நன்றாக கடைந்து அதனுடன் அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கரைத்து வைக்கவும்.

    கடலைமாவில் நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகாய் தூள் சேர்த்துக் கலந்து நீர் விட்டு தளரப் பிசைந்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெயைக் காய வைத்து கலந்த மாவை பக்கோடாக்களாக உருட்டிப் போட்டு பொன்நிறமாகப் பொரித்தெடுக்கவும்.

    மோர்க் கலவையை குழம்பு வைக்கும் பாத்திரத்தில் கொட்டி அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பொரித்தெடுக்கும் போதே பக்கோடாக்களைக் குழம்பில் சேர்த்து விடவும்.

    பால் போல் நுரைத்து வரும்போது கிளறி தீயை குறைத்து 2 நிமிடம் வைத்திருந்து, கடுகு, பெருங்காயம், மஞ்சள் தூள் தாளித்து மூடி வைக்கவும்.

    பக்கோடா மிருதுவாகி, குழம்பு தயாரானவுடன் இறக்கி சூடாக பறிமாறவும்.

    சூப்பரான பக்கோடா மோர்குழம்பு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் இந்த நெல்லிக்காய் தொக்கும். இன்று ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நெல்லிக்காய் - 20
    எண்ணெய் - 4 டீஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    வெந்தையம் - 1/4 டீஸ்பூன்
    பெருங்காயத் தூள்- 1/2 டீஸ்பூன்
    மிளகாய்த் தூள் - 5 டீஸ்பூன்
    உப்பு - 3 டீஸ்பூன்
    வெல்லம் - 1 டீஸ்பூன்

    நெல்லிக்காய் தொக்கு

    செய்முறை :

    நெல்லிக்காய்களை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் வேக வைத்து வெந்ததும் நீரை வடிகட்டி விட்டு சூடு ஆறியதும் கொட்டைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.

    வேக வைத்த நெல்லிக்காய்களை மிக்சியில் போட்டு மைய அரைத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் வெந்தையம் சேர்க்கவும்.

    அடுத்து அதில் மிளகாய்த் தூள் சேர்த்துக் கிளறவும்.

    பின் அரைத்து வைத்துள்ள நெல்லிக்காய் பேஸ்டை கொட்டி நன்கு கிளறவும்.

    இப்போது உப்பு, வெல்லம் சேர்த்து தொக்கு நன்கு கருஞ்சிவப்பு நிறத்தில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.

    சூப்பரான நெல்லிக்காய் தொக்கு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் வெண்டைக்காய் பெப்பர் பிரை. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெண்டைக்காய் - 1/4 கிலோ,
    மிளகு - 2 டீஸ்பூன்,
    பெரிய வெங்காயம் - 1,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
    பூண்டு - 3 பல்,
    கடுகு - தாளிக்க.

    வெண்டைக்காய் பெப்பர் பிரை

    செய்முறை :

    வெண்டைக்காயை நன்றாக கழுவி துடைத்த பின்னர் நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் வெண்டைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.

    மிக்சியில் வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    வெண்டைக்காயில் அரைத்த கலவையை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து, உப்பு போட்டு வேக விடவும்.

    மசாலாவுடன் சேர்த்து வெண்டைக்காய் நன்கு சுருள வந்தபின் இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான வெண்டைக்காய் பெப்பர் பிரை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ். இன்று இந்த சிப்ஸ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 4,
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
    மிளகாய் தூள் - தேவையான அளவு
    அரிசி மாவு - 3 டீஸ்பூன்
    பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு.

    தேவையான பொருட்கள்

    செய்முறை

    நீளமான உருளைக்கிழங்கை கழுவி தோல் சீவி விரல்களைப் போல மெல்லிய தடிமனான துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அல்லது கட்டர் கொண்டு நறுக்கவும்.

    நறுக்கிய உருளைக்கிழங்கில் உப்பு, மிளகாய் தூள், அரிசி மாவு, மிளகு தூள் கலந்து நன்றாக கலந்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலந்து வைத்த உருளைக்கிழங்கை சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து  தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    விநாயகர் சதுர்த்திக்கு பல வகையான கொழுக்கட்டைகள் செய்தாலும் தேங்காய் பூரண கொழுக்கட்டை என்றால் பலரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி மாவு - 1 கப்
    தேங்காய் -1 மூடி
    வெல்லம் - 150 கிராம்
    ஏலக்காய் - 5
    உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

    தேங்காய் பூரண கொழுக்கட்டை

    செய்முறை :

    மாவை பச்சரிசியை களைந்து நீர் வடித்து பின் ஒரு மணி நேரம் மூடி வைத்திருந்து பின் மிக்ஸியில் நைஸாக மாவாக அரைக்கவும்.

    மாவு எத்தனை கப் உள்ளதோ அந்த அளவு தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, நிதானமான தீயில் மாவை சிறிது சிறிதாக தூவி கட்டிகளின்றி கிளறி இறக்கி ஆறிய பின் கையினால் அழுத்தி பிசைய வேண்டும். எல்லா வகை பூர்ணம் கொழுக்கட்டைகளுக்கும் மாவு தயாரிக்கும் விதம் இதுதான்.

    கொதி நீரில் கரைத்து வடிகட்டிய வெல்ல நீருடன் தேங்காய் பூ சேர்த்து கிளறி ஏலக்காய் பொடி சேர்த்து தண்ணீர் வற்றி வரும் போது இறக்கவும்.

    மாவை வாழையிலையில் தட்டி நடுவில் பூர்ணம் வைத்து கிண்ணம் போல் குவித்து மூட வேண்டும்.

    இட்லித்தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைக்க எடுக்க வேண்டும்.

    சூப்பரான தேங்காய் பூரண கொழுக்கட்டை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலைநேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் காரா சேவை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு - 200 கிராம்,
    பச்சரிசி மாவு - 50 கிராம்,
    மிளகுத்தூள் - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு,
    ஓமம் - சிறிதளவு,
    எண்ணெய் - கால் கிலோ,
    சமையல் சோடா - ஒரு சிட்டிகை.

    காரா சேவ்

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பச்சரிசி மாவை போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு, ஓமம், 2 டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய், ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நீர்விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    எண்ணெயைச் சூடாக்கி, மாவை காராசேவ் கரண்டியில் போட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான காரா சேவ் ரெடி.

    இதன் கலர் சிவக்காது மஞ்சளாகத்தான் இருக்கும். மிளகாய்த்தூள் சேர்த்தால் காராசேவ் சிவக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலைநேரத்தில் சூடான காபி, டீயுடன் சாப்பிட காளான் பன்னீர் வடை அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    காளான் - அரை கப்
    பன்னீர் - அரை கப்
    கொத்தமல்லி, கறிவேப்பில்லை - சிறிதளவு
    சோம்பு - ஒரு டீஸ்பூன்
    மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
    கடலை மாவு - 5 டீஸ்பூன்
    அரிசி மாவு - 3 டீஸ்பூன்
    உப்பு - தேவைகேற்ப

    காளான் பன்னீர் வடை

    செய்முறை

    காளானை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்

    கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய காளான், துருவிய பன்னீர், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சோம்பு, மிளகாய் தூள், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து வடை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான காளான் பன்னீர் வடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சேலம் தட்டு வடை செட் செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தட்டை - 12
    கேரட் துருவல், பீட்ரூட் துருவல் கலவை - அரை கப்
    வெங்காயம் - ஒன்று
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்
    காரச் சட்னி - 6 டீஸ்பூன்
    புதினா சட்னி - 6 டீஸ்பூன்
    மாங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன் (விரும்பினால்)
    சாட் மசாலாத்தூள் - 3 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    சேலம் தட்டு வடை செட்

    செய்முறை

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாத்திரத்தில் கேரட் துருவலுடன் பீட்ரூட் துருவல், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

    ஆறு தட்டைகளின் மீது காரச் சட்னி தடவி தட்டில் இடைவெளிவிட்டு வைக்கவும்.

    அதன் மேலே சிறிது சிறிதாக கேரட் - பீட்ரூட் கலவையை வைக்கவும்.

    பிறகு அதன் மீது வெங்காயம், கொத்தமல்லித்தழை, மாங்காய்த் துருவல், சாட் மசாலாத்தூள் தூவவும்.

    மீதமுள்ள ஆறு தட்டைகளின் மீது புதினா சட்னி தடவி, காய்கறி கலவையின் மீது வைத்துப் பரிமாறவும்.

    சேலம் தட்டு வடை செட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் வாழைக்காய் கறி. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிய வாழைக்காய் - 1
    பெரிய வெங்காயம் - 1
    மீடியம் சைஸ் தக்காளி - 2
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
    மல்லித்தூள் (தனியா தூள்) - ஒன்றரை டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    கடுகு - ஒரு டீஸ்பூன்
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    கறிவேப்பிலை - ஒரு ஈர்க்கு
    பெருங்காயம் - கால் டீஸ்பூன்
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    வாழைக்காய் கறி

    செய்முறை:

    வாழைக்காயை இரண்டாக நறுக்கி ஆவியில் 5 நிமிடங்கள் வேக வைத்து ஆற வைக்கவும். பிறகு தோலுரித்து வட்டமாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

    வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

    அடுப்பில் வாணலியை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்குங்கள்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போகும்வரை வதக்கி, தக்காளி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்குங்கள்.

    இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து, வாழைக்காயைச் சேர்த்து மெதுவாகக் கிளறுங்கள்.

    இனி அடுப்பை மிதமாக்கி மூடி போட்டு 5 நிமிடம் வேக விட்டு அடுப்பை அணைத்து இறக்கிப் பரிமாறுங்கள்.

    சூப்பரான வாழைக்காய் கறி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் இனிப்பு பூரி என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று தித்திப்பு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 2 கப்
    சர்க்கரை - 1 ½ கப்
    தேங்காய் துருவல் - 1 கப்
    ஏலக்காய் தூள் - சிறிதளவு
    கிராம்பு - சிறிதளவு
    அரிசி மாவு - 4 டேபிள் ஸ்பூன்
    தண்ணீர் - 2 கப்
    நெய் - அரை கப்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    தித்திப்பு பூரி

    செய்முறை:

    வாணலியில் நெய்யை ஊற்றி உருக்கிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை போட்டு அதனுடன் உருக்கிய நெய்யை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.

    பின்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான பதத்துக்கு வரும்வரை மாவை பிசைந்து ஊற வைக்கவும்.

    வாணலியில் சர்க்கரையை கொட்டி போதுமான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு பாகு காய்ச்சிக்கொள்ளவும்.

    அதில் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.

    மாவு கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி பூரி போன்று தயார் செய்து கொள்ளவும். அதனை கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    அந்த பூரிகளை சர்க்கரை பாகில் முக்கி பரிமாறலாம்.

    இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சர்க்கரை பாகு கெட்டியாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×