என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    காளானில் தொக்கு, கிரேவி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று காளான் வைத்து சுவையான முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    அரிசி மாவு - 1 கப்
    உளுந்தம் பருப்பு - 150 கிராம்
    பொடியாக நறுக்கிய மஷ்ரூம் - 1 கப்
    வெண்ணெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - சிறிதளவு
    மிளகு தூள் -  1/2 டீஸ்பூன்
    எண்ணெய் -  பொரிப்பதற்கு தேவையான அளவு

    மஷ்ரூம்

    செய்முறை:

    உளுந்தம்பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர் தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, அரைத்த உளுந்த மாவு, வெண்ணெய், மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய மஷ்ரூம், தேவைக்கேற்ப உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து நீர் விட்டு முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    கடாவை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு எண்ணெயில் முறுக்காக பொரித்து எடுத்தால் சுவையான சூடான மஷ்ரூம் முறுக்கு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    இந்துமதி
    குழந்தைகளுக்கு பேரீச்சம் பழம் மிகவும் உகந்தது. இன்று பேரீச்சம் பழத்தை வைத்து சத்தான சுவையான பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் - 20
    பால் - 2½ கப்
    முந்திரி மற்றும் பாதாம் - 10
    நெய் - 1 தேக்கரண்டி

    பேரீச்சம்பழ பாயாசம்

    செய்முறை :

    பேரீச்சம் பழத்தை கழுவி ½ கப் பாலில் ஊற வைக்கவும்.

    அரை மணி நேரத்திற்கு பிறகு பழத்தை ஊற வைத்த, பாலை விட்டு மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

    இதே நேரத்தில் 2 கப் பாலை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி பாதியாக சுண்டும் அளவிற்கு காய்ச்சிக் கொள்ளவும்.

    அரைத்த பேரிச்சை கலவையை காய்ச்சி பாலில் ஊற்றி லேசாக சிறிது நேரம் கொதிக்க விடவும்.

    இதே நேரத்தில் 1 தேக்கரண்டி நெய் விட்டு முந்திரி, பாதாம் அல்லது தேங்காய் சீவல்களை சிவக்க வறுத்து பாலில் சேர்க்கவும்.

    தேவைப்படுபவர்கள் ஏலக்காய் அல்லது குங்குமப்பூவையும் கூட சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.

    இந்த பாயசத்திற்கு சர்க்கரையோ வெல்லமோ சேர்க்க வேண்டிய அவசியமில்லை.

    சூப்பரான பேரீச்சம்பழ பாயாசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ராஜஸ்தான், குஜராத்தில் மோஹன்தால் ஸ்வீட் மிகவும் பிரபலம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கடலை மாவு - 2 கப்,
    சர்க்கரை - 1 கப்,
    நெய் - 1 கப்,
    பால் - 1/4 கப்,
    முந்திரி, பாதாம், பிஸ்தா - சிறிதளவு (அலங்கரிக்க).

    மோஹன்தால்

    செய்முறை


    கடலை மாவில் 1/4 கப் நெய் சேர்த்து சிறிது சிறிதாக பால் சேர்த்து அழுத்திப் பிசையவும்.

    அதனைச் சல்லடையில் கட்டி இல்லாத அளவிற்கு நன்கு பொடியாக சலிக்கவும். அல்லது மிக்ஸியில் ஒரு ஓட்டு ஓட்டினால் நன்கு பொடியாகி விடும். இனி வாணலியில் மாவைக் கொட்டி சிறிது நெய் சேர்த்து சிறு தீயில் வைத்து கூழ் பதத்திற்கு கிளறி இறக்கி விடவும்.

    சர்க்கரையில் 3/4 கப் தண்ணீர் சேர்த்து குங்குமப்பூ போட்டு 2 கம்பி பதம் வந்ததும் ஏலக்காய் சேர்த்து அதனை கடலை மாவு கரைசலில் போட்டு மேலும் நெய் சேர்த்து நன்கு ஒட்டாமல் திரண்டு வந்ததும் நெய் தடவிய சிறிது சதுரமான ட்ரேயில் கொஞ்சம் உயரமாகக் கொட்டவும்.

    நன்கு ஆறியதும் வில்லைகளாகப் போடவும்.

    டிரேயில் கொட்டும்போதே சீவிய பருப்புகளை (முந்திரி, பாதாம், பிஸ்தா) அலங்கரிக்கவும்.

    சூப்பரான மோஹன்தால் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அவலில் பர்ஃபி செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கெட்டி வெள்ளை அவல் - 1 கப்
    நெய் - 4 ஸ்பூன்
    நாட்டுச் சர்க்கரை - ½ கப்
    உப்பு - 1 சிட்டிகை
    தேங்காய் (துருவியது) - ½ கப்
    ஏலக்காய் தூள் - சிறிதளவு
    முந்திரி அல்லது பாதாம் - சிறிதளவு

    அவல்

    செய்முறை:

    கெட்டி அவலை தண்ணீரில் நான்கு முறை அலசி வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    தண்ணீர் நன்கு வடிந்தபின் வாணலியில் நான்கு ஸ்பூன் நெய் விட்டு அவலைப் போட்டு நிறம் மாறாமல் வறுக்க வேண்டும். ஓரளவு வறுத்த பிறகு அத்துடன் நாட்டுச் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் தேங்காயத் துருவல், ஏலக்காய் பொடியையும் சேர்த்து வதக்க வேண்டும்.

    இந்தக் கலவை நன்றாக ஒன்றுடன் ஒன்று கலந்து வாணலியில் ஒட்டாமல் நெய் பிரிந்து சுருண்டு வரும்பொழுது அடுப்பை அணைத்து விட வேண்டும்.

    ஒரு ட்ரேயில் நெய் தடவி அதன் மேல் இந்த அவல் கலவையைக் கொட்டி சமன்படுத்தி ஆறவைக்க வேண்டும்.

    முந்திரி அல்லது பாதாமை இடைவெளி விட்டு அந்த பர்ஃபி கலவையின் மேல் செருகி வைக்க வேண்டும்.

    கலவை வெது வெதுப்பாக இருக்கும் பொழுது டைமண்ட் அல்லது சதுர வடிவில் அறுத்து எடுத்தால் சுவையான நாட்டுச் சர்க்கரை அவல் பர்ஃபி தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அவல் வைத்து உப்புமா, பாயாசம், புட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிகப்பு அவல் - 1 கப்
    உப்பு - தேவைக்கேற்ப
    பெரிய வெங்காயம் - 1
    இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    சோம்பு - சிறிதளவு
    மிளகாய்த்தூள் - சிறிதளவு
    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
    பச்சை மிளகாய் - 1

    சிகப்பு அவல் பக்கோடா

    செய்முறை:

    வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிகப்பு அவலை சுடுநீர் ஊற்றி அலசி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அது ஆறியபின் அவலை ஓரளவு பிசைந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, சோம்பு, உப்பு, கொத்தமல்லி இவற்றைக் கலந்து கொள்ளவும்.

    இதில் சிறிது எண்ணெயைக் காயவைத்து அதன் மேல் ஊற்றி அத்துடன் மிளகாய்த்தூள் சிறிதளவு சேர்த்து தேவைப்பட்டால் இரண்டு மூன்று ஸ்பூன் தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் காய்ந்த பிறகு இந்த மாவை உதிரி உதிரியாகப் போட்டு சிவக்கப் பொரித்தெடுக்க வேண்டும்.

    பின்பு அதே எண்ணெயில் கறிவேப்பிலையைப் பொரித்து எடுத்து அவல் பக்கோடாவின் மேல் கலந்து கொள்ள வேண்டும்.

    இப்பொழுது மொறு மொறுப்பான கரகரப்பான, சுவையான சிகப்பு அவல் பக்கோடா ரெடி.

    காற்று புகாத டப்பாவில் இந்த பக்கோடாவைப் போட்டு வைத்தால் பத்து நாட்கள் வரை உபயோகிக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் சூடாக சாப்பிட மூன்று வகையான பருப்புகளை வைத்து எப்படி வடை செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான  பொருட்கள்

    உளுத்தம்பருப்பு - ஒரு கப்
    கடலைப்பருப்பு - ஒரு கப்
    துவரம்பருப்பு -  ஒரு கப்
    மிளகு, சீரகம் - சிறிதளவு
    வெங்காயம் - 1
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
    இஞ்சி - சிறிய துண்டு
    பெருஞ்சீரகம் - அரை டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 10
    நெய் - 2 தேக்கரண்டி
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    முப்பருப்பு வடை

    செய்முறை :

    பருப்பு வகைகளை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிய விட்டு அதனுடன், பெருஞ்சீரகம், மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரவென அரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைத்த மாவில் வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, நெய் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, வடைகளாக தட்டிப் போட்டு, நன்கு வேகவிட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான முப்பருப்பு வடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வேப்பம் பூவில் துவையல், சட்னி, சாதம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வேப்பம் பூவில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலைப் பருப்பு - 1 கப்
    வெங்காயம் - 1
    காய்ந்த மிளகாய் - இரண்டு
    பூண்டு பற்கள் - 10
    இஞ்சி -சிறிய துண்டு
    சோம்பு - ஒரு ஸ்பூன்
    புளி - சிறிதளவு
    வெல்லம் - ஒரு துண்டு
    வேப்பம்பூ - கால் கப்
    எண்ணெய் - பொரிப்பதற்கு
    உப்பு - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு

    வேப்பம் பூ வடை

    செய்முறை:

    கடலைப்பருப்பை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பின்னர் அதனை தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் போட்டு அதனுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை, வேப்பம்பூ, வெல்லம், புளி, உப்பு சேர்த்து வடை பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான வேப்பம்பூ வடை தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    இந்துமதி
    ரவையில் சூப்பரான பாயாசம் (ஃபிர்னீயை) செய்யலாம். இன்று இந்த பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ரவை - 200 கிராம்
    சர்க்கரை - 300 கிராம்
    பால் - 500 மிலி
    நெய் - 2 டீஸ்பூன்
    ஏலக்காய் - 4
    முந்திரி பருப்பு - 15
    பாதாம் - 10
    பிஸ்தா - 10
    வால்நட்ஸ் - 10
    உலர் திராட்சை - 10
    மில்க்மெய்ட்  - 50 மிலி

    ரவை பாயாசம்

    செய்முறை

    கடாயில்  நெய்யை ஊற்றி சூடான பின் முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட், உலர் திராட்சைகளை சேர்த்து லேசாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    அதே கடாயில் மீதமுள்ள நெய் ஊற்றி ரவை சேர்த்து நன்கு வறுக்கவும்.

    ரவையை நன்கு வறுத்தவுடன், பால் சேர்க்கவும்.

    ரவையை பாலில் நன்கு வேக விடவும். மிகவும் கெட்டியாக இருந்தால், கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்.

    இப்போது சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்.

    ரவை கட்டிகளாக ஆகாமல் தொடர்ந்து ஃபிர்னீயை கிளறி விட வேண்டும்.

    ரவை, சர்க்கரை எல்லாம் நன்றாக கலந்து கெட்டியான பின், வறுத்து வைத்துள்ள பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு, வால்நட் மற்றும் உலர் திராட்சையை சேர்த்து நன்கு கிளறவும்.

    மேலும் மில்க்மெய்ட் சேர்த்து 5 நிமிடம் நன்றாக கலக்கவும்.

    சூடாக அல்லது குளிர வைத்து ஃபிர்னீயை பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு விருப்பமான சுவையான இறால் முட்டை சாதத்தை எப்படி எளிய முறையில் செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 300 கிராம்
    முட்டை - 3
    வடித்த சாதம் - ஒரு கப்
    பச்சை மிளகாய் - 3
    பெரிய வெங்காயம் - 2
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    இஞ்சிபூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

    இறால் முட்டை சாதம்

    செய்முறை:

    இறாலை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும்.

    உதிரியாக வேக வைத்த சாதத்தை ஆற வைத்து எடுத்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த இறாலை போட்டு அதனுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, பிசிறி வைத்த இறால் கலவையும் சேர்த்து வதக்கவும்.

    பிறகு கரம் மசாலாத்தூள், மீதமுள்ள மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, 10 நிமிடம் தீயைக் குறைத்து இறாலை வேக விடவும்.

    இறால் வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி, முட்டைக்குத் தேவையான உப்பு மட்டும் சேர்த்து முட்டையை இறாலுடன் சேர்த்து நன்கு கலக்கிவிட்டு வேகவிடவும்.

    கடைசியாக அதனுடன் ஆற வைத்த சாதம், கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறலாம்.

    சுவையான இறால் முட்டை சாதம் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முட்டை ஆம்லெட் செய்யும் போது அதனுடன் புதினா சேர்த்து செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    முட்டை -  4
    மஞ்சள் தூள் -  1 சிட்டிகை
    புதினா - தேவையான அளவு
    கரம் மசாலா -  2  டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    புதினா ஆம்லெட்

    செய்முறை:

    புதினாவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டையை  ஊற்றி அதில், உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா ஆகியவற்றைப் போட்டு நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் அடித்த முட்டையை ஊற்றி, அதன் மேல் புதினா இலைகளைத் தூவி, ஆம்லெட்டை சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுத்தால் சுவையான புதினா ஆம்லெட் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சம்பார் சாதம், தயிர் சாதம், சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும் கத்தரிக்காய் பெப்பர் பிரை. இன்று இந்த வறுவலை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கத்தரிக்காய் - அரை கிலோ,
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
    மிளகு தூள் - 1 ஸ்பூன்,
    உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - தேவைக்கு,
    கடுகு - தாளிக்க.

    கத்தரிக்காய் பெப்பர் பிரை

    செய்முறை :

    கத்தரிக்காயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு தாளித்த பின் கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.

    கத்தரிக்காய் பாதியளவு வெந்தவுடன் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் உப்பு சேர்த்து நன்கு வேகும்வரை வதக்கவும்.

    கத்தரிக்காய் நன்றாக வெந்ததும் கறிவேப்பிலை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான கத்தரிக்காய் பெப்பர் பிரை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த மீல் மேக்கர் வடையை ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம். சாதத்திற்கு தொட்டுக்கொள்ளவும் செய்யலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மீல் மேக்கர் - 100 கிராம்
    பொட்டுக்கடாலை - அரை கப்
    பெரிய வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 3
    கரம் மசாலா - 2 டீஸ்பூன்
    கறிமசாலா - 1 டீஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    சோள மாவு - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - தேவையான அளவு
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    மீல் மேக்கர் வடை

    செய்முறை :

    கொத்தமல்லி, புதினா, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீல் மேக்கரை வெந்நீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்து நன்றாக ஆறியதும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் பொட்டுக்கடலை மாவு, சோள மாவு, மஞ்சள் தூள், சோம்பு சீரகத்துள், கறிமசாலா, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, ப.மிளகாய், வெங்காயம் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.

    அடுத்து அதில் பொடியாக நறுக்கிய மீல் மேக்கரை சேர்த்து வடை பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடை போல் தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான மீல் மேக்கர் வடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.


    ×