search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அவல் பர்ஃபி
    X
    அவல் பர்ஃபி

    நாட்டுச் சர்க்கரை அவல் பர்ஃபி

    அவலில் பர்ஃபி செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கெட்டி வெள்ளை அவல் - 1 கப்
    நெய் - 4 ஸ்பூன்
    நாட்டுச் சர்க்கரை - ½ கப்
    உப்பு - 1 சிட்டிகை
    தேங்காய் (துருவியது) - ½ கப்
    ஏலக்காய் தூள் - சிறிதளவு
    முந்திரி அல்லது பாதாம் - சிறிதளவு

    அவல்

    செய்முறை:

    கெட்டி அவலை தண்ணீரில் நான்கு முறை அலசி வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    தண்ணீர் நன்கு வடிந்தபின் வாணலியில் நான்கு ஸ்பூன் நெய் விட்டு அவலைப் போட்டு நிறம் மாறாமல் வறுக்க வேண்டும். ஓரளவு வறுத்த பிறகு அத்துடன் நாட்டுச் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் தேங்காயத் துருவல், ஏலக்காய் பொடியையும் சேர்த்து வதக்க வேண்டும்.

    இந்தக் கலவை நன்றாக ஒன்றுடன் ஒன்று கலந்து வாணலியில் ஒட்டாமல் நெய் பிரிந்து சுருண்டு வரும்பொழுது அடுப்பை அணைத்து விட வேண்டும்.

    ஒரு ட்ரேயில் நெய் தடவி அதன் மேல் இந்த அவல் கலவையைக் கொட்டி சமன்படுத்தி ஆறவைக்க வேண்டும்.

    முந்திரி அல்லது பாதாமை இடைவெளி விட்டு அந்த பர்ஃபி கலவையின் மேல் செருகி வைக்க வேண்டும்.

    கலவை வெது வெதுப்பாக இருக்கும் பொழுது டைமண்ட் அல்லது சதுர வடிவில் அறுத்து எடுத்தால் சுவையான நாட்டுச் சர்க்கரை அவல் பர்ஃபி தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×