என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    தினமும் சாம்பார், காரக்குழம்பு என்று சமைக்காமல் ஒரு நாள் மாறாக நெய் சாதம் செய்து பாருங்கள். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. சரி வாங்க நெய் சாதம் செய்வது எப்படி குறித்து பார்க்கலாம்..
    தேவையான பொருள்கள்:

    பாசுமதி அரிசி - 2 கப்
    முந்திரி - 10
    சீரகம் - 1 ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பட்டை -2
    கிராம்பு - 2
    நெய் - 1 கப்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாத்திரத்தில் 2 கப் அரிசி சேர்த்து சாதமாக வடித்து ஒரு பௌலில் சாதத்தை கொட்டி ஆற விட வேண்டும். அப்படி செய்தால் சாதம் உதிரி உதிரியாக கிடைக்கும்.

    அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் ஒரு கப் நெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.

    பிறகு அதில் வாசனைக்காக பட்டை, கிராம்பு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து வறுத்து கொள்ளவும்.

    பொன்னிறமாக வறுத்த பிறகு வடித்த சாதம் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து பத்து நிமிடம் கிளற வேண்டும்.

    கடைசியில் கொத்தமல்லி தழையை தூவினால் சுவையான நெய் சோறு தயார்...

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு முட்டை என்றால் மிகவும் பிடிக்கும். இன்று முட்டையை வைத்து சூப்பரான மிளகு பிரட்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான  பொருள்கள் :

    முட்டை - 2     
    மிளகு - 1 தேக்கரண்டி
    உப்பு - 1/4 தேக்கரண்டி
    எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி       
                   
    செய்முறை :

    முட்டைகளை முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி  அடுப்பில் வேக வைத்துக் கொள்ளவும்.

    முட்டை  ஆறியவுடன் ஓட்டை நீக்கி விட்டு துருவியில் வைத்து  துருவிக் கொள்ளவும்.           
               
    அடுப்பில்  கடாயை  வைத்து  எண்ணெய்  ஊற்றி  சூடானதும்  மிளகுத் தூள், உப்பு  போட்டு ஒரு  நிமிடம் கிளறவும்.

    பிறகு முட்டை துருவலை சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

    சுவையான முட்டை மிளகு பிரட்டல் ரெடி.

    இது குழந்தைகளுக்கு சாதத்துக்கு சைட் டிஷாக கொடுக்கலாம். அல்லது சான்ட்விச்சில் நடுவே வைத்துக் கொடுக்கலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பாகற்காயில் ஊறுகாய் செய்தால் மிகவும் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பிஞ்சு பாகற்காய் - கால் கிலோ
    தக்காளி, எலுமிச்சம்பழம் - தலா ஒன்று
    பச்சை மிளகாய் - 2
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
    நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
    கடுகு, பெருங்காயத் தூள் - தலா ஒரு டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை

    பாகற்காயை கழுவி, ஈரம் போகத் துடைத்து, உள்ளே இருக்கும் கொட்டைகளை நீக்கிவிட்டு, நறுக்கிக் கொள்ளவும்.

    தக்காளி, பச்சை மிளகாயையும் நறுக்கிக் கொள்ளவும்.

    எல்லா காய்களையும் ஒன்று சேர்த்து… உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.

    வாணலியில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, காய்கறி கலவையைக் சேர்த்துக் கிளறி, ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும்.

    இதில் எலுமிச்சம்பழம் பிழிந்து கலக்கினால்… பாகற்காய் ஊறுகாய் தயார்!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பச்சை மிளகாயில் ஊறுகாய், குழம்பு சாப்பிட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பச்சை மிளகாயில் வித்தியாசமான காரமும், இனிப்பு சேர்ந்த அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ப.மிளகாய் - 1 கப்
    சர்க்கரை - கால் கப்
    முந்திரி, பாதாம், திராட்சை - தேவையான அளவு
    சோள மாவு - 1 டீஸ்பூன்
    நெய் - 3 டீஸ்பூன்

    செய்முறை

    முந்திரி, பாதாம், திராட்சையை நெய்யில் வறுத்து வைத்து கொள்ளவும்.

    ப.மிளகாயின் விதைகளை நீக்கி விடவும்.

    ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து அதில் ப.மிளகாயை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் வேறு தண்ணீரில் மீண்டும் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். இவ்வாறு 3 முறை செய்யவும்.

    பிறகு இந்த ப.மிளகாயை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அரைத்த ப.மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும்.

    ப.மிளகாய் பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர் சர்க்கரை சேர்த்து வதக்கவும்

    அடுத்து அதில் சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி கிளறவும்.

    அல்வா பதம் வந்ததும் அதில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்து கிளறி இறக்கவும்.

    சூப்பரான பச்சை மிளகாய் அல்வா ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெங்காயத்தில் உள்ள சல்பர் சத்தானது ரத்தத்தை சுத்தம் செய்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது. இன்று வெங்காயத்தை வைத்து குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெ.வெங்காயம் - 4
    தக்காளி - 3
    பச்சை மிளகாய் - 2
    கடலை பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    கடலை மாவு - 1 டீஸ்பூன்
    கடுகு - சிறிதளவு
    சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள், மஞ்சள் தூள் - சிறிதளவு
    மல்லித்தூள் - கால் டீஸ்பூன்    
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதில் கடலைப்பருப்பு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் ப. மிளகாய், சோம்பு தூள் சேர்த்து வதக்கவும்.

    பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் விட்டு மூடி கொதிக்கவிடவும்.

    நன்கு வெந்ததும் கடலை மாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து ஊற்றவும்.

    மீண்டும் கொதிக்க தொடங்கியதும் கொத்தமல்லி தூவி கீழே இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான வெங்காய குருமா ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழம்பில் பல்வேறு வெரைட்டி உள்ளது. அந்த வகையில் இன்று முட்டை கட்லெட் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த குழம்பை செய்வது சுலபம். சுவையோ அலாதி.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 5
    பொட்டுகடலைமாவு - அரை கப்
    தேங்காய் - 1 (துருவவும்)
    பெ.வெங்காயம் - 3
    கேரட் - 1 (துருவவும்)
    தக்காளி - 3 (நறுக்கவும்)
    மிளகாய் - 5 (நறுக்கவும்)
    நறுக்கிய இஞ்சி - சிறிதளவு
    சோம்பு - 1 டீஸ்பூன்
    தனியா - 2 டீஸ்பூன்
    கசகசா - 1 டீஸ்பூன்
    பூண்டு - 6 பல்
    சீரகம் - 2 டீஸ்பூன்
    கொத்தமல்லி தழை,
    கறிவேப்பிலை - தேவைக்கு

    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து சிறுதீயில் இஞ்சி, பூண்டு, கசகசா, தனியா, சோம்பு போன்றவற்றை நன்றாக வறுத்து அரைத்துக்கொள்ளவும்.

    அதுபோல் தக்காளி, மிளகாய், தேங்காய் துருவல் ஆகியவற்றையும் வதக்கி அரைத்துக்கொள்ளவும்.

    முட்டைகளை அடித்து நன்றாக கலக்கி அதனுடன் பொட்டு கடலை மாவு, கேரட், உப்பு, மிளகாய் விழுது ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

    சிறு சிறு கிண்ணங்களில் தெய் தடவி அதில் முட்டை கலவையை ஊற்றி இட்லி தட்டில் கட்லெட் பதத்துக்கு வேக வைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சிறிது இஞ்சி, பூண்டு விழுது, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

    பின்னர் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும்.

    அதனுடன் அரைத்த மசாலா கலவையை கொட்டி உப்பு, மஞ்சள் தூள்தூவி இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    நன்கு கொதித்து மசாலா வாசம் நீங்கியதும் இறக்கி அதனை அகன்ற பாத்திரத்தில் கொட்டி அதனுள் முட்டை கட்லெட்டுகளை போட்டு கால் மணி நேரம் ஊற வைக்கவும்.

    கடைசியாக அதில் கொத்தமல்லி தழையை தூவி பரிமாறலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ப்ரோக்கோலி சத்துமிக்க உணவு வகைகளுள் ஒன்று. இதில் சூப், கிரேவி போன்றவற்றை சமைக்கலாம். சரி வாங்க சுவையான சீஸ் ப்ரோக்கோலி செய்வது குறித்து பார்க்கலாம்..
    தேவையான பொருள்கள் :

    நறுக்கிய ப்ரோக்கோலி - 1 கப்
    ஆலிவ் எண்ணெய் - 1 ஸ்பூன்
    இஞ்சி- சிறிதளவு
    பூண்டு - 1 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
    சீஸ் - 2 துண்டுகள்.

    செய்முறை :

    இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சீஸை துருவிக்கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து அதில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    சிறிதுநேரம் கழித்து ப்ரோக்கோலி, மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.

    கடைசியில் துருவிய சீஸ் சேர்த்து ஐந்து நிமிடம் மூடி வைக்கவும்.

    சூடான சீஸ் ப்ரோக்கோலி தயார்..

    இதனை ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக எடுத்துக்கொள்ளலாம். சுவையும் அதிகம்,சத்தும் அதிகம்...

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அரிசி வடகம், ஜவ்வரிசி வடகத்தை கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் சாதத்தில் வடகம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    வேக வைத்த சாதம் - 1 கப்
    மிளகாய் வத்தல் - 2
    சீரகம் - 1 தேக்கரண்டி
    பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    வேக வைத்த சாதத்துடன் மிளகாய் வத்தல், பெருங்காயத் தூள், சீரகம், உப்பு சேர்த்து மிக்ஸி அல்லது கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும். சாதத்தில் உப்பு இருப்பதால் தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும்.

    தட்டில் லேசாக எண்ணெய் தடவி அதில் அரைத்து வைத்துள்ள சாதத்தை ஒரு மேஜைக்கரண்டி அளவு எடுத்து வட்ட வட்டமாக வைக்கவும். அல்லது முறுக்கு செய்யும் அச்சில் இந்த மாவை போட்டு பிளாஸ்டிக் பேப்பரிலும் பிழியலாம்.

    பிறகு எல்லா தட்டுகளையும் மொட்டை மாடியில் அல்லது வெயில் வரும் இடத்தில் ஒரு நாள் முழுவதும் வைக்கவும். அடுத்த நாள் வடகத்தை ஒரு சிறிய கரண்டியால்  எடுத்து மாற்றி போட்டு மீண்டும் வெயிலில் காய வைக்கவும்.

    இப்போது வடகங்கள் நன்கு காய்ந்து விடும்.

    காய்ந்த வடகங்களை ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும். தேவையான போது எடுத்து வறுத்துக் கொள்ளலாம்.

    குறிப்பு -

    மீந்து போன சாதத்திலும் இதே முறையில் வடகம் செய்யலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இஞ்சி பச்சை மிளகாய் தொக்கு சப்பாத்தி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். இஞ்சி ஜீரண சக்திக்கு மிகவும் நல்லது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்.:

    இளம் இஞ்சி - 25 கிராம்,
    பிஞ்சு பச்சை மிளகாய் - 10,
    புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, அச்சு வெல்லம் - ஒன்று,
    எண்ணெய் 4 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை.:

    பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கி புளி, பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து, சிறிதளவு நீர்விட்டு மிக்ஸியில் அரைக்கவும்.

    மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு, அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து நன்றாக கிளறவும். தொக்கு நன்றாக வதங்கி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கிளறி இறக்கவும்.

    சூப்பரான இஞ்சி பச்சை மிளகாய் தொக்கு ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    துவரையை காயாக இருக்கும்போது உரித்து அதன் பச்சையான விதைகளை எடுத்தும் சமையலுக்குப் பயன்படுத்தலாம். சரி துவரைக்காயில் ஒரு சுவையான ரெசிபியைப் பார்ப்போமா?
    தேவையான பொருட்கள்

    துவரைக்காய் - கால் கிலோ
    பெரிய வெங்காயம்  - 1
    தக்காளி  - 2
    பூண்டு  - 4 பற்கள்
    தேங்காய் - 4 பெரிய துண்டுகள்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    கறிவேப்பிலை ­ ஒரு கொத்து
    உப்பு ­ தேவையான அளவு

    செய்முறை

    துவரைக்காயிலிருந்து கொட்டைகளை உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தேங்காயுடன் பூண்டு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, சோம்பு போட்டு தாளித்த பின்னர்  வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியைப் போட்டு கூழாகும்வரை வதக்கவும்.

    இதில் உதிர்த்த துவரைக்கொட்டைகளைப் போட்டு வதக்கி, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் போட்டு கொட்டைகள் வேகும் அளவுக்கு தண்ணீர் விட்டு வேகவிடுங்கள்.

    கொட்டைகள் வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கறிவேப்பிலைப் போட்டு குழம்பை அடுப்பிலிருந்து இறக்குங்கள்.

    இந்த குருமாவை இட்லி, தோசை மற்றும் சோற்றுடன் கலந்து சாப்பிடலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மீல்மேக்கர் கிரேவி. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீல் மேக்கர் - 100 கிராம்  
    சி.வெங்காயம் - 100 கிராம்  
    தக்காளி - 3  
    இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு  
    பச்சை மிளகாய் - 2  
    கடுகு - சிறிதளவு  
    பட்டை, கிராம்பு - சிறிதளவு  
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்  
    மஞ்சள் தூள் - சிறிதளவு  
    தேங்காய் துருவல் - கால் கப்
    கப்  உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    கொத்தமல்லி, புதினா தழை - சிறிதளவு

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் மீல் மேக்கரை கொட்டி அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். நன்கு வெந்ததும் கால் மணி நேரம் ஆறவைக்க வேண்டும்.

    தக்காளி, வெங்காயத்தை நறுக்கி தனித்தனியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

    தேங்காய் துருவலையும் விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, வெங்காய விழுதை சேர்த்து கிளறவும்.

    வெங்காய கலவை பொன்னிறமாக மாறியதும் தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.

    பின்னர் மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறிவிடவும்.

    மீல் மேக்கரில் இருக்கும் தண்ணீரை பிழிந்தெடுத்து விட்டு அதனையும் கொட்டி கிளறவிடவும்.

    அதனுடன் போதுமான அளவு தண்ணீர், தேங்காய் விழுதை சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

    எண்ணெய் பிரிந்து கிரேவி பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி, புதினா தழையை தூவி இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான மீல்மேக்கர் கிரேவி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு கேக் என்றாலே விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கேக்கினை நாம் பேக்கரி கடைகளில் வாங்கி கொடுப்போம். இன்று எளிமையாகவும் வேகமாகவும் எப்படி கேக் பாப்ஸ்கள் செய்யலாம் என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பிளைன் சாக்லேட் கேக் - 200 கிராம்
    சாக்லேட் பிஸ்கெட் - ஒரு பாக்கெட்
    சுத்தமான தேன் - 2 அல்லது 3 ஸ்பூன்
    டார்க் சாக்லேட் - 200 கிராம்
    Nutella - 4 டேபிள் ஸ்பூன்
    சாக்லேட் சிப்ஸ் - தேவையான அளவு
    கலர் ஸ்ப்ரிங்க்லர்ஸ் -தேவையான அளவு
    லாலிபாப் ஸ்டிக்ஸ் - தேவையான அளவு

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் 200 கிராம் பிளைன் சாக்லேட் கேக்கினை உதிர்த்து எடுத்து கொள்ளுங்கள்.

    பின் ஒரு பாக்கெட் சாக்லேட் பிஸ்கெட்டினை பவுடர் செய்து இதனுடன் சேர்க்க வேண்டும்.

    பிறகு 4 டேபிள் ஸ்பூன் Nutella மற்றும் 2 அல்லது 3 ஸ்பூன் தேன் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

    இப்பொழுது பிசைந்த மாவை சிறு சிறு பந்துகளாக உருட்டி லாலி பாப் ஸ்டிக்கை எடுத்து அந்த பந்தில் சொருகி வைக்க வேண்டும்.

    பிறகு 200 கிராம் டார்க் சாக்லேட்டை அடுப்பில் மீதமனான சூட்டில் உருக்கி தயாராக வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உருட்டி வைத்துள்ள பந்துகளை உருக்கி வைத்துள்ள சாக்லேட்டில் முக்கி எடுக்க வேண்டும்.

    இந்த லாலிபாப் ஸ்டிக்கை பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து குளிரூட்டுங்கள்.

    இப்பொழுது குளிரூட்டிய சாக்லேட் ஸ்டிக்கை எடுத்து மறுபடியும் மெல்ட்டடு சாக்லேட்டில் முக்கி அதன் மேல் கலர்புல்லான ஸ்பிரிங்கிள்ஸ்ஸை தூவுங்கள். இப்பொழுது கேக் பாப்ஸ் தயார்.

    தங்கள் குழந்தைகளுக்கு இப்பொழுது இந்த கேக் பாப்ஷை அன்போடு பரிமாறுங்கள்…

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×