search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    துவரைக்காய் குருமா
    X
    துவரைக்காய் குருமா

    இட்லி, தோசைக்கு அருமையான துவரைக்காய் குருமா

    துவரையை காயாக இருக்கும்போது உரித்து அதன் பச்சையான விதைகளை எடுத்தும் சமையலுக்குப் பயன்படுத்தலாம். சரி துவரைக்காயில் ஒரு சுவையான ரெசிபியைப் பார்ப்போமா?
    தேவையான பொருட்கள்

    துவரைக்காய் - கால் கிலோ
    பெரிய வெங்காயம்  - 1
    தக்காளி  - 2
    பூண்டு  - 4 பற்கள்
    தேங்காய் - 4 பெரிய துண்டுகள்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    கறிவேப்பிலை ­ ஒரு கொத்து
    உப்பு ­ தேவையான அளவு

    செய்முறை

    துவரைக்காயிலிருந்து கொட்டைகளை உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தேங்காயுடன் பூண்டு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, சோம்பு போட்டு தாளித்த பின்னர்  வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியைப் போட்டு கூழாகும்வரை வதக்கவும்.

    இதில் உதிர்த்த துவரைக்கொட்டைகளைப் போட்டு வதக்கி, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் போட்டு கொட்டைகள் வேகும் அளவுக்கு தண்ணீர் விட்டு வேகவிடுங்கள்.

    கொட்டைகள் வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கறிவேப்பிலைப் போட்டு குழம்பை அடுப்பிலிருந்து இறக்குங்கள்.

    இந்த குருமாவை இட்லி, தோசை மற்றும் சோற்றுடன் கலந்து சாப்பிடலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×