என் மலர்tooltip icon

    சமையல்

    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த பிரெட் சீஸ் பால் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் துண்டுகள் - 4,
    கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு - தலா 100 கிராம்,
    சோள மாவு - ஒரு டீஸ்பூன்,
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், சீஸ்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    பிரெட் சீஸ் பால்

    செய்முறை:

    பிரெட்டை பொடித்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவை போட்டு உப்பு, பிரெட் தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சீஸ் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான பிரெட் சீஸ் பால் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குளிர் காலம் வந்துவிட்டாலே, சூடாக ஏதாவது தொண்டையில் இறங்கினால் தான் திருப்தி. அந்த வகையில் இன்று பாதாம், செலரி சேர்த்து சூப் செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாதாம் - 50 கிராம்,
    வெங்காயம் - ஒன்று,  
    செலரி, பாஸில் இலை - சிறிதளவு,
    காய்கறி வேகவைத்த தண்ணீர் - அரை லிட்டர்,
    பால் - ஒரு கப்,
    பாதாம் - சிறிதளவு (அலங்கரிக்க),
    மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.

    பாதாம் - செலரி சூப்

    செய்முறை:

    பாதாம்பருப்பை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 அல்லது 15 நிமிடம் வரை வைத்திருந்து தோலை உரித்தெடுக்கவும்.  

    அலங்கரிக்க கொடுக்கப்பட்டுள்ள பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    செலரி, பாஸில் இலைகளை நன்றாக கழுவி வைக்கவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில், பாதாம், செலரி, பாஸில், நறுக்கிய வெங்காயம், காய்கறி வேக வைத்த தண்ணீர் எல்லாவற்றையும் சேர்த்து வேகும் வரை கொதிக்க வைக்கவும்.

    வெந்தவுடன் இறக்கி, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    அரைத்த அரைத்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து  உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.   

    கடைசியாக அடுப்பிலிருந்து இறக்கும்போது பால் சேர்க்கவும்.

    இதனை சூப் கிண்ணத்தில் ஊற்றி, மேலே பொடியாக நறுக்கிய பாதாமை சேர்த்துப் பரிமாறவும்.

    சூப்பரான பாதாம் - செலரி சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எளிமையான முறையில் வீட்டிலேயே மிகவும் சுவையாக தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    சிக்கனுடன் சேர்த்து ஊறவைக்க தேவைப்படும் பொருட்கள் :

    தயிர் - ஒரு கப்
    பூண்டு - ஒன்று
    இஞ்சி - ஒரு துண்டு
    கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
    கறிவேப்பிலை - சிறிது
    பச்சைமிளகாய் - 2
    லவங்கம் - 4
    எலுமிச்சை - பாதி
    மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
    கரம் மசாலா - அரை தேக்கரண்டி
    மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
    சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
    கஸ்தூரி மேத்தி - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    பிரியாணிக்கு தேவையான பொருட்கள்:

    அரிசி - அரை கிலோ (ஊறவைக்கவும்)
    சிக்கன் லெக்பீஸ் - 8
    வெங்காயம் - 3
    தக்காளி - 3
    இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
    கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
    புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
    பட்டை, பிரிஞ்சு இலை, இலவங்கம், ஏலக்காய், அன்னாசிப்பூ - தலா 2

    தந்தூரி சிக்கன் பிரியாணி

    செய்முறை

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வதற்கு முதலில் சிக்கனுடன் சேர்த்து ஊறவைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

    சிக்கனை சுத்தம் செய்த பின் அரைத்த கலவையை சிக்கனில் சேர்த்து 3 மணிநேரம் ஊறவைக்கவும்.

    சிக்கன் நன்றாக ஊறியதும் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் சிக்கனை முக்கால் பதம் வேகும் வரை பொரித்து எடுக்கவும்.

    பின்பு மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுக்கப்பட்ட பொருட்களை போட்டு தாளித்த பின்பு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து புதினா, கொத்தமல்லி, தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய் தூள் மற்றும் கரம்மசாலா தூளை போட்டு நன்றாக கிளறிவிடவும்.

    அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் என்ற அளவில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறவைத்துள்ள அரிசியை அவற்றில் கலந்து எலுமிச்சை சாறு ஊற்றி வேக விடவும்.

    அடுத்து அதில் பொரித்த சிக்கனை போட்டு 15 நிமிடம் தம்மில் போடவேண்டும்.

    அரைமணி நேரம் கழித்து பாத்திரத்தை திறக்க சுவையான தந்தூரி சிக்கன் பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்து சக்கையாகிப் போனவர்களை மறுபடியும் சீரான உடலமைப்பைப் பெறச் செய்யும் உன்னதமே மூங்கிலரிசியாகும். இன்று மூங்கில் அரிசி, காய்கறி சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மூங்கில் ரைஸ் (‘காதி கிராஃப்ட்’டில் கிடைக்கும்) - ஒரு கப்,
    கேரட் - ஒன்று,
    பட்டாணி - ஒரு கப்,
    பீன்ஸ் - 5,
    வெங்காயம் - ஒன்று,
    பூண்டு - 2 பல்,
    வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு,
    மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு,

     மூங்கில் அரிசி காய்கறி சூப்

    செய்முறை :

    பூண்டு, வெங்காயம், கொத்தமல்லி, பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

    மூங்கில் அரிசியில் கல் இருந்தால் நீக்கிவிட்டு, கழுவி 15 நிமிடம் ஊற வைத்து சாதம் சமைப்பது போல் சமைக்கவும். (குக்கரில் போட வேண்டாம்). வடிகஞ்சியையும் உபயோகிக்கவும்.

    கடாயில் வெண்ணெய் போட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு, கேரட், பீன்ஸ், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

    இதனுடன் வேக வைத்த பட்டாணியும் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் உப்பு, மிளகுதூள், வடித்த கஞ்சியை சேர்த்து மேலும் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு, காய்கறி பாதி வெந்தவுடன் மூங்கில் அரிசியை சேர்த்து, கொதி வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி, இறக்கி பரிமாறவும்.

    சத்தான மூங்கில் அரிசி காய்கறி சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு கீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மஷ்ரூம் சேர்த்து கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மஷ்ரூம் - 1 கப்,
    சர்க்கரை - 1 கப்
    நெய்  - 3 டேபிள் ஸ்பூன்
    மில்க் மெய்டு - 2 டேபிள் ஸ்பூன்
    முந்திரி - 4
    திராட்சை - 4
    பால்  - 1 லிட்டர்
    பாதாம் - 4
    பிஸ்தா - 10
    குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
    கேசரி பவுடர் - 1 சிட்டிகை

    மஷ்ரூம் கீர்

    செய்முறை:

    மஷ்ரூமை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து கொள்ளவும்.

    அதே கடாயில் மஷ்ரூமை போட்டு வறுத்து பாலை ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து பால் அரை லிட்டர் சுண்டும் வரை கொதிக்க விடவும்.

    அடுத்து பாலில் சர்க்கரை, மில்க்மெய்டு, குங்குமப்பூ, கேசரி பவுடரை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

    கீர் திக்கான பதம் வந்தவுடன் வேறு பாத்திரத்தில் மாற்றவும்.

    அதன் மேல் பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை சேர்த்து சூடாகவோ, குளிர்ச்சியாகவோ பருகலாம்.

    அருமையான மஷ்ரூம் கீர் ரெடி.

    - இந்துமதி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வயிற்று உபாதைகளுக்கு இஞ்சி மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று இஞ்சியை வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    இஞ்சி - 1 பெரிய துண்டு
    பூண்டு - 4 பல்
    பச்சை மிளகாய் - 1
    சின்ன வெங்காயம் - 5
    காய்ந்த மிளகாய் - 2
    மிளகு - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    தக்காளி - 1
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    சீரகம், கறிவேப்பிலை - தாளிப்பதற்கு

    இஞ்சி சூப்

    செய்முறை


    இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

    காய்ந்த மிளகாயை சுட்டு வைக்கவும்.

    சின்ன உரலில் இஞ்சி, ப.மிளகாய், பூண்டு, சுட்ட மிளகாய், மிளகு, சீரகம், சின்னவெங்காயம், தக்காளி, சேர்தது அரைத்து கொள்ளவும்.

    வாணலியில எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம் சேர்த்து தாளித்த பின்னர் அரைத்த கலவை சேர்த்து வதங்கவும்.

    இந்த கலவை சற்று வதங்கியதும் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

    கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

    சுவையான இஞ்சி சூப் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் மீந்து போன இட்லியை வைத்து மாலையில் வித்தியாசமான சுவை கொண்ட மசாலா இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மினி இட்லி - 6 (ஆறவைத்து)
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
    மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி தழை - தேவையான அளவு

    மசாலா மினி இட்லி

    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியவுடன், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மற்றும் கரம் மசாலா தூள், ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

    அடுத்து அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து அதனுடன் நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.

    இதில் 2 அல்லது 3 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    பின்னர் ஆற வைத்த மினி இட்லிகளை அப்படியே கூட சேர்த்துக் கொள்ளலாம்.

    இட்லி உடைந்துவிடாமல் மென்மையாக கிளறவும் 3 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைத்து விடவும்.

    சுவையான மசாலா மினி இட்லி தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முட்டை சாண்ட்விச் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான காலை நேர உணவு வகை. இதன் செய்முறையை இன்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டைகள் - 2
    கோதுமை பிரெட் துண்டுகள் - 2
    மிளகு தூள் -  ½  தேக்கரண்டி
    உப்பு -  தேவையான அளவு
    பால் -  சிறிதளவு
    வெண்ணெய் - 2 தேக்கரண்டி
    கொத்தமல்லி - சிறிதளவு

    முட்டை சாண்ட்விச்

    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி அதனுடன் பால், உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது வெண்ணெயை போட்டு சூடானதும் கலக்கி வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி மென்மையாக கிளறவும்.

    முட்டை கலவை கெட்டியாகி உதிரியாக வந்ததும் கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைத்து விடவும்.

    ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு சூடானதும் இரண்டு கோதுமை பிரெட் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.

    தட்டில் பிரெட்டை வைத்து அதன் மீது முட்டை கலவையை சேர்த்து இன்னொரு பிரட்டை வைத்து மூடி வைத்து பரிமாறவும்.

    சுவையான முட்டை சாண்ட்விச் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சோயா, பட்டாணி சேர்த்து செய்யும் புலாவ் அருமையாக இருக்கும். இன்று இந்த புலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :       

    பாசுமதி அரிசி - ஒரு கப்  
    சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 20,   
    பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2,   
    ஜாதிபத்திரி - சிறிய துண்டு,   
    பிரியாணி இலை - ஒன்று,   
    வெங்காயம், தக்காளி - தலா ஒன்று,   
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,   
    பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்,   
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,   
    மிளகாய்த்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்) - தலா ஒரு டீஸ்பூன்,   
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,   
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    சோயா பட்டாணி புலாவ்

    செய்முறை:     

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும்.

    பாசுமதி அரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    குக்கரில் எண்ணெய்விட்டுச் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்திரி, பிரியாணி இலை சேர்த்து தாளித்த  பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கவும்.

    இதனுடன் பச்சைப் பட்டாணி, சோயா உருண்டைகள், கொத்தமல்லி, அரிசி, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து மூடி மூன்று விசில்விட்டு இறக்கவும்.

    சூப்பரான சோயா பட்டாணி புலாவ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடலில் உள்ள கெட்ட கொழுப்பை விரட்ட உதவுகிறது சோயா பீன்ஸ். இன்று இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி, இட்லி அரிசி - தலா 1 கப்,   
    கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த சோயா பயறு - தலா அரை கப்,   
    பாசிப்பருப்பு  - 3 டேபிள்ஸ்பூன்,   
    காய்ந்த மிளகாய் - 7,   
    பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன்,   
    தேங்காய்த் துருவல் - கால் கப்,  
    கறிவேப்பிலை - சிறிதளவு,   
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    சோயா பீன்ஸ் அடை

    செய்முறை:

    அரிசி, பருப்பு, சோயா பயறு வகைகளுடன் நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

    பிறகு களைந்து தண்ணீரை வடிகட்டி அதனுடன் காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுத்து கொள்ளவும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும்.

    தோசைக்கல்லைக் காயவைத்து மாவை அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

    சத்தான சுவையான சோயா பீன்ஸ் அடை

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உருளைக்கிழங்கு, பருப்பு சேர்த்து செய்யும் உருண்டைக் குழம்பு சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    உருளைக்கிழங்கு - 3,
    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு - 50 கிராம்,
    துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
    தக்காளி - 1,
    காய்ந்த மிளகாய் - 3,
    பூண்டு - 5 பல்,
    சின்னவெங்காயம் - 30 கிராம்,
    புளி  - அரை எலுமிச்சை அளவு,  
    பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்,
    மஞ்சள்தூள் - சிறிதளவு,
    சோம்பு - ஒரு டீஸ்பூன்,
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு.

    உருளைக்கிழங்கு பருப்பு உருண்டைக் குழம்பு

    செய்முறை :

    பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்

    கடலைப்பருப்பு, துவரம்பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து பிறகு பூண்டு, காய்ந்த மிளகாய், சோம்பு, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து கொரகொரவென தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவில் மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயத்தைச் சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்த உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

    அனைத்தும் நன்றாக வதங்கியதும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    இத்துடன் மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

    சிறிது தண்ணீர்விட்டுக் கொதிக்கவிட்டு, உப்பு, கெட்டியாகக் கரைத்த புளித்தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    கொதி வரும்போது பொரித்த உருண்டையையும் குழம்பில் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு பருப்பு உருண்டைக் குழம்பு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கெட்ட கொழுப்பு மற்றும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் செலரி சூப் குடித்து வரலாம். இன்று இந்த சூப் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    செலரி கீரை - 2
    சுக்குத்தூள் - அரை டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - ஒன்று,
    பூண்டு - 2 பல்,
    தக்காளி - ஒன்று
    சிவப்பு ராஜ்மா - 2 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    செலரி சூப்

    செய்முறை :

    செலரியின் அடிப்பகுதியை நீக்கிவிட்டு அலசி, தண்டு, இலையை மட்டும் பொடியாக நறுக்கவும்.

    தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ராஜ்மாவை ஆறு மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்து கொள்ளவும்.

    வேக வைத்த ராஜ்மாவை மிக்சியில் போட்டு அதனுடன், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, முக்கால் கப் செலரி கீரை, உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு அரைத்து எடுத்து வடிகட்டி கொள்ளவும்.

    இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிவிடவும்.

    மீதமுள்ள செலரி இலைகளைத் தூவி, சுக்குத்தூள் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

    சூப்பரான சத்தான செலரி சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×