என் மலர்tooltip icon

    சமையல்

    காலையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பிரெஞ்ச் டோஸ்ட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பிரெட் - 10
    முட்டை - 2
    பால் - 1/2 கப்
    சீனி - 4 மேசைக்கரண்டி + தேவைக்கேற்ப
    வெண்ணெய் அல்லது நெய் -  தேவைக்கேற்ப

    பிரெஞ்ச் டோஸ்ட்

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் பால், சீனியும் சேர்த்து நன்கு நுரை வரும் வரை அடித்து வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் இட்டு, பிரெட் துண்டுகளை ஒவ்வொன்றாக முட்டையில் தோய்த்து, தோசைக்கல்லில் போட்டு வெந்தும் திருப்பி போட்டு இருபக்கமும் மொறு மொறு என்று சுட்டெடுக்கவும்.

    சுவையான பிரெஞ்ச் டோஸ்ட் தயார்.
    மரவள்ளிக்கிழங்கில் கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரம் மற்றும் வைட்டமின் C சத்து மிகுந்துள்ளது. இன்று மரவள்ளிக்கிழங்கில் பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மரவள்ளிக்கிழங்கு துருவல் - 2 கப்
    தோசை மாவு - 1 கப்
    தேங்காய் துருவல் - கால் கப்
    காய்ந்த மிளகாய் - 4
    பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    மரவள்ளிக்கிழங்கு பணியாராம்

    செய்முறை :

    தேங்காய் துருவலுடன் காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம் சேர்த்து தண்ணீர் விடாமல் நைசாக அரைக்கவும்.

    இதனுடன் மரவள்ளிக்கிழங்கு துருவல், உப்பு சேர்த்து மேலும் இரண்டு சுற்று சுற்றி இறக்கவும்.

    அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தோசை மாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    குழிப்பணியார கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி மாவை குழிகளில் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சத்தான மரவள்ளிக்கிழங்கு பணியாரம் ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு. இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கத்தரிக்காய் - 1/4 கிலோ
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 2
    தேங்காய் - 2 துண்டுகள்
    பூண்டு - 10 பல்
    கடுகு - 1/4 ஸ்பூன்
    வெந்தயம் - 1/2 ஸ்பூன்
    மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
    தனியா பொடி - 1
    மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
    புளி தண்ணீர் - 1 கப்
    நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
    கறிவேப்பிலை - 1 கீற்று
    கொத்தமல்லி - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

     எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

    செய்முறை

    கத்தரிக்காய்களை மேலாக காம்பை மட்டும் நறுக்கி விட்டு, மேலே படர்ந்துள்ள காம்பை விட்டு ஒரு கத்தரிக்காயை (பூ போல) நான்கு பாகங்காக வரும்படி நறுக்கி கொள்ளவும்.

    பூண்டை ஒன்றும் பாதியாக தட்டிக்கொள்ளவும்.

    தக்காளி, கொத்தமல்லி, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக வதக்கி ஆற விடவும்.

    மிக்சியில் வதக்கிய வெங்காயம், தக்காளியை தேங்காயுடன் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் போட்டு தாளித்த பின் நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் தட்டி வைத்த பூண்டை போட்டு வதக்கவும்.

    அடுத்து கத்தரிக்காயை போட்டு வதக்கவும்.

    கத்தரிக்காய் சற்று வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறி விடவும்.

    இதனுடன் மிளகாய், தனியா, மஞ்சள் பொடிகளை சேர்த்து கிளறவும்.

    அடுத்து புளி கரைசல் சேர்த்து, மேலும் சிறிது தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்.

    நன்கு கொதித்து கத்தரிக்காய் வெந்து குழம்பு திக்கான பதத்துடன் எண்ணெய் மேலாக தெளிந்து வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த கஞ்சியை இரண்டு வேளை குடித்து வந்தால் தீராத இடுப்பு வலி, உடம்பில் உண்டாகும் வாயுக்கள் அனைத்தையும் குணப்படுத்தும். இந்த கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பிரண்டை - 1 கைப்பிடி
    முருங்கை இலை - ஒரு கைப்பிடி
    தூது வளை - 1 கைப்பிடி
    அரிசி - அரை கப்
    உப்பு - தேவையான அளவு.

    பிரண்டை முருங்கை இலை கஞ்சி

    செய்முறை

    அரிசியை மிக்சியில் போட்டு நெய் போல் உடைத்து கொள்ளவும்.

    பிரண்டை, தூதுவளை, முருங்கை இலையை நன்றாக சுத்தம் செய்து அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து கால் லிட்டராகும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

    பின்பு கொதிக்க வைத்த நீரை வடிகட்டி வைத்து கொள்ளவும்.

    குக்கரில் வடிகட்டிய நீருடன் அரிசி நெய், உப்பு போட்டு 6 விசில் போட்டு நன்கு வேக வைத்து இறக்கி சூடாக பருகவும்.

    சத்தான பிரண்டை, முருங்கை இலை கஞ்சி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வேர்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும், அதிகமான புரதசத்தும் இருக்கின்றது. இன்று வேர்க்கடலையை வைத்து லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வறுத்த வேர்க்கடலை - 1 கப்
    ஏலக்காய் தூள் - சிறிதளவு
    வெல்லம்/கரும்பு சர்க்கரை - 3/4 கப்

    வேர்க்கடலை லட்டு

    செய்முறை :

    முதலில் வறுத்த வேர்க்கடலையை ஒரு வாணலியில் போட்டு லேசாக வறுக்கவும். இவ்வாறு செய்வதனால் வேர்க்கடலையின் மேல் உள்ள தோலை நீக்குவது எளிதாக இருக்கும். வறுத்த கடலையை கைகளால் கசக்கினால் ஊதினால் மேல் தோல் எளிதாக வந்துவிடும்.

    தோல் நீக்கிய கடலையை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்(நைசாக வேண்டுமானாலும் அரைத்துக் கொள்ளலாம்).

    அரைத்த வேர்கடலையுடன் வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து இரண்டும் சேர்ந்து திரண்டு வரும் வரை மிக்ஸியை மெதுவான வேகத்தில் வைத்து அரைக்கவும்.

    அரைத்த கலவையை ஒரு தட்டில் போட்டு சிறு சிறு உருண்டைகளாய் பிடித்தால் சத்தான சுவையான வேர்க்கடலை லட்டு தயார்!

    வேர்க்கடலை எண்ணெய் விடும் அதனால் உருண்டைகளாய் உருட்ட வேறு பொருட்கள் தேவை இல்லை.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாளை சன்டே ஸ்பெஷல் மட்டன் பிரியாணியை குக்கரில் எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மட்டன் - 1 கிலோ
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    அரைக்க

    சிறிய வெங்காயம் - 10
    பூண்டு - 15 பற்கள்
    பச்சை மிளகாய் - 4
    சிவப்பு மிளகாய் - 4
    தேங்காய் - 2 தேக்கரண்டி (துருவியது )
    மல்லி தூள் - 1 தேக்கரண்டி
    புதினா, கொத்தமல்லி - 1 கைப்பிடி
    இஞ்சி - சிறிய துண்டு

    சமையலுக்காக

    நெய் - 2 தேக்கரண்டி
    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    வெங்காயம் - 4
    தக்காளி - 3
    பாஸ்மதி அரிசி - 3 கப் (30 நிமிடங்கள் ஊறவைத்தது )
    நீர்த்த தேங்காய் பால் - 3 கப்
    புதினா, கொத்தமல்லி - 1 கைப்பிடி
    பட்டை - 1
    ஏலக்காய் - 3
    கிராம்பு - 4
    பிரியாணி இலை - 2
    உப்பு - தேவையான அளவு

    பிரஷர் குக்கரில் மட்டன் பிரியாணி

    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டனை பெரிய துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவிக்கொள்ளவும்.

    கழுவிய மட்டனில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகிவற்றை சேர்த்து ஒரு 30 நிமிடம் ஊற வைக்கவும்.

    மிக்சியில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், துருவிய தேங்காய், புதினா, கொத்தமல்லி இலை, மல்லித்தூள், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மை போல் அரைத்து கொள்ள வேண்டும்.

    குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு சிவக்கும் வரை வதக்கவும்.

    வெங்காயம் சிவந்த பிறகு தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் அரைத்த மசாலா சேர்த்து பச்சை மனம் போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் ஊற வைத்த மட்டன் துண்டுகளை வதக்கியவற்றுடன் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு கிளறி விடவும்.

    இந்த நிலையில் உப்பு, தண்ணீர், கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கிய பின்பு ஏழு விசில் வரும் வரை வேக வைக்கவும்.

    வேக வைத்த மட்டனில் முப்பது நிமிடம் ஊற வைத்த பாசுமதி அரிசியை கலந்து பின்பு குக்கரை மூடிவிட்டு ஏழு நிமிடங்களுக்கு வேக விடவும்.

    அடுப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் கழித்து குக்கரை திறக்கவும்.

    சூடான சுவையான பிரஷர் குக்கர் மட்டன் பிரியாணி தயார்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முருங்கைக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று முருங்கைக்கீரையில் கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முருங்கை கீரை - 1 கப்
    பச்சரிசி - அரை கப்
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    அரைக்க

    தேங்காய் - கால் கப்
    சோம்பு - அரை டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    சின்ன வெங்காயம் - 6

    முருங்கைக்கீரை கஞ்சி

    செய்முறை :

    பச்சரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    முருங்கை கீரையை சுத்தம் கொள்ளவும்.

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து அதில் பச்சரிசி, முருங்கைக்கீரை, உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து 5 விசில் போட்டு வேக வைக்கவும்.

    குக்கர் விசில் போனவுடன் குக்கா மூடியை திறந்து அரைத்த தேங்காய் கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.

    அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.

    அனைத்தும் சேர்ந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.

    அருமையான முருங்கை கீரை கஞ்சி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பக்கோடா சேர்த்து கார குழம்பு செய்து இருப்பீங்க. இன்று பக்கோடா மோர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பக்கோடாவிற்கு


    கடலைமாவு - 6 டேபிள் ஸ்பூன்,
    பெரிய வெங்காயம் - 1,
    மிளகாய் தூள், உப்பு - கால் டீஸ்பூன்,
    எண்ணெய் - தேவையான அளவு,

    மோர் குழம்பிற்கு

    கெட்டியான மோர் - 3 கப்
    கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்,
    தனியா - 2 டீஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 3,
    வற்றல் மிளகாய் - 1,
    தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்,

    தாளிக்க

    கடுகு, பெருங்காயம், மஞ்சள் பொடி, உப்பு - தேவையான அளவு

    பக்கோடா மோர்குழம்பு

    செய்முறை:

    பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடலைப்பருப்பு, தனியாவை ஊற வைத்து அதனுடன் பச்சைமிளகாய், தேங்காய்த் துருவல், மிளகாய் வற்றல் சேர்த்து மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.

    மோரை நன்றாக கடைந்து அதனுடன் அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கரைத்து வைக்கவும்.

    கடலைமாவில் நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகாய் தூள் சேர்த்துக் கலந்து நீர் விட்டு தளரப் பிசைந்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெயைக் காய வைத்து கலந்த மாவை பக்கோடாக்களாக உருட்டிப் போட்டு பொன்நிறமாகப் பொரித்தெடுக்கவும்.

    மோர்க் கலவையை குழம்பு வைக்கும் பாத்திரத்தில் கொட்டி அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பொரித்தெடுக்கும் போதே பக்கோடாக்களைக் குழம்பில் சேர்த்து விடவும்.

    பால் போல் நுரைத்து வரும்போது கிளறி தீயை குறைத்து 2 நிமிடம் வைத்திருந்து, கடுகு, பெருங்காயம், மஞ்சள் தூள் தாளித்து மூடி வைக்கவும்.

    பக்கோடா மிருதுவாகி, குழம்பு தயாரானவுடன் இறக்கி சூடாக பறிமாறவும்.

    சூப்பரான பக்கோடா மோர்குழம்பு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பருத்திப் பாலை வெறும் வயிற்றில் குடித்தால் அல்சர் மற்றும் உணவுப் பாதையில் உள்ள புண்களை ஆற்றும். டயட்டில் இருப்பவர்களுக்கு நல்லதொரு உணவு.
    தேவையான பொருட்கள்

    பச்சரிசி - 100 கிராம்
    கருப்பு பருத்தி விதை - 50 கிராம்
    தேங்காய் மூடி - 1
    தேங்காய் துருவல் - விருப்பத்திற்கு ஏற்ப
    ஏலக்காய் - 3
    முந்திரி - சிறிதளவு
    சுக்கு - சிறிதளவு
    கருப்பட்டி - 1 வட்டு (பெரியது)

    பருத்தி பால்

    செய்முறை :

    6 மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்த பருத்திவிதையை, மிக்ஸியில் அரைத்து பால் எடுக்கவும்.

    பச்சரிசியையும் மிக்ஸியில் ரவை பதத்திற்கு பொடித்துக்கொள்ளவும்.

    கருப்பட்டியை நன்றாக பொடித்து அதில் தண்ணீர் விட்டு கரையும் வரை காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

    தேங்காயை மிக்சியில் போட்டு பால் எடுத்து கொள்ளவும்.

    பாத்திரம் ஒன்றில் 6 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதில் பொடித்து வைத்துள்ள அரிசியை போட்டு சிறிதுநேரம் வேகவிட வேண்டும். அரிசி வெந்தவுடன், குறைந்த வெப்பத்தில் அடுப்பை வைத்து, பருத்திப்பாலை ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும்.

    பருத்திப்பால் பச்சை வாசனை போனவுடன் கருப்பட்டி பாகை சேர்த்து அதனுடன் சுக்கு, ஏலக்காய், தேங்காய் துருவல் சேர்த்து கிளற வேண்டும்.

    தேங்காய் பாலை இறுதியாக சேர்த்துக் கொள்ளலாம்.

    அதன் பிறகு கொதிக்க விட்டு எடுத்தால் சுவையான பருத்தி பால் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் இந்த நெல்லிக்காய் தொக்கும். இன்று ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நெல்லிக்காய் - 20
    எண்ணெய் - 4 டீஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    வெந்தையம் - 1/4 டீஸ்பூன்
    பெருங்காயத் தூள்- 1/2 டீஸ்பூன்
    மிளகாய்த் தூள் - 5 டீஸ்பூன்
    உப்பு - 3 டீஸ்பூன்
    வெல்லம் - 1 டீஸ்பூன்

    நெல்லிக்காய் தொக்கு

    செய்முறை :

    நெல்லிக்காய்களை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் வேக வைத்து வெந்ததும் நீரை வடிகட்டி விட்டு சூடு ஆறியதும் கொட்டைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.

    வேக வைத்த நெல்லிக்காய்களை மிக்சியில் போட்டு மைய அரைத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் வெந்தையம் சேர்க்கவும்.

    அடுத்து அதில் மிளகாய்த் தூள் சேர்த்துக் கிளறவும்.

    பின் அரைத்து வைத்துள்ள நெல்லிக்காய் பேஸ்டை கொட்டி நன்கு கிளறவும்.

    இப்போது உப்பு, வெல்லம் சேர்த்து தொக்கு நன்கு கருஞ்சிவப்பு நிறத்தில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.

    சூப்பரான நெல்லிக்காய் தொக்கு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினசரி நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் இளமை தோற்றத்துடன் இருக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கும், உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கும் இந்த ஜூஸ் சிறந்தது.
    தேவையான பொருட்கள்

    நெல்லிக்காய் - 7
    தண்ணீர் - 2 கப்
    இஞ்சி - சிறிய துண்டு
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
    தேன் - தேவைக்கு

    ஆம்லா ஜூஸ்

    செய்முறை :


    இஞ்சியை கழுவி தோல் நீக்கி வைக்கவும்.

    நெல்லிக்காயை நன்கு கழுவி கொட்டையை நீக்கி விட்டு பொடியாக வெட்டிக்கொள்ளவும்.

    மிக்ஸியில் நெல்லிக்காயை போட்டு அதனுடன் இஞ்சி, 2 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். உங்கள் தேவைக்கேற்ப தண்ணீரை அதிகம் சேர்த்து நன்கு மைய அரைத்து கொள்ளலாம்.

    அரைத்த ஜூஸை வடிகட்டி கொள்ளவும்.

    பின், அதில் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்து வரலாம்.

    தினசரி நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் இளமை தோற்றத்துடன் இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் வெண்டைக்காய் பெப்பர் பிரை. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெண்டைக்காய் - 1/4 கிலோ,
    மிளகு - 2 டீஸ்பூன்,
    பெரிய வெங்காயம் - 1,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
    பூண்டு - 3 பல்,
    கடுகு - தாளிக்க.

    வெண்டைக்காய் பெப்பர் பிரை

    செய்முறை :

    வெண்டைக்காயை நன்றாக கழுவி துடைத்த பின்னர் நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் வெண்டைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.

    மிக்சியில் வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    வெண்டைக்காயில் அரைத்த கலவையை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து, உப்பு போட்டு வேக விடவும்.

    மசாலாவுடன் சேர்த்து வெண்டைக்காய் நன்கு சுருள வந்தபின் இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான வெண்டைக்காய் பெப்பர் பிரை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×