search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பாதாம் - செலரி சூப்
    X
    பாதாம் - செலரி சூப்

    பாதாம் - செலரி சூப்

    குளிர் காலம் வந்துவிட்டாலே, சூடாக ஏதாவது தொண்டையில் இறங்கினால் தான் திருப்தி. அந்த வகையில் இன்று பாதாம், செலரி சேர்த்து சூப் செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாதாம் - 50 கிராம்,
    வெங்காயம் - ஒன்று,  
    செலரி, பாஸில் இலை - சிறிதளவு,
    காய்கறி வேகவைத்த தண்ணீர் - அரை லிட்டர்,
    பால் - ஒரு கப்,
    பாதாம் - சிறிதளவு (அலங்கரிக்க),
    மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.

    பாதாம் - செலரி சூப்

    செய்முறை:

    பாதாம்பருப்பை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 அல்லது 15 நிமிடம் வரை வைத்திருந்து தோலை உரித்தெடுக்கவும்.  

    அலங்கரிக்க கொடுக்கப்பட்டுள்ள பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    செலரி, பாஸில் இலைகளை நன்றாக கழுவி வைக்கவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில், பாதாம், செலரி, பாஸில், நறுக்கிய வெங்காயம், காய்கறி வேக வைத்த தண்ணீர் எல்லாவற்றையும் சேர்த்து வேகும் வரை கொதிக்க வைக்கவும்.

    வெந்தவுடன் இறக்கி, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    அரைத்த அரைத்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து  உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.   

    கடைசியாக அடுப்பிலிருந்து இறக்கும்போது பால் சேர்க்கவும்.

    இதனை சூப் கிண்ணத்தில் ஊற்றி, மேலே பொடியாக நறுக்கிய பாதாமை சேர்த்துப் பரிமாறவும்.

    சூப்பரான பாதாம் - செலரி சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×