என் மலர்tooltip icon

    சமையல்

    சம்பார் சாதம், தயிர் சாதம், சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும் கத்தரிக்காய் பெப்பர் பிரை. இன்று இந்த வறுவலை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கத்தரிக்காய் - அரை கிலோ,
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
    மிளகு தூள் - 1 ஸ்பூன்,
    உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - தேவைக்கு,
    கடுகு - தாளிக்க.

    கத்தரிக்காய் பெப்பர் பிரை

    செய்முறை :

    கத்தரிக்காயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு தாளித்த பின் கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.

    கத்தரிக்காய் பாதியளவு வெந்தவுடன் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் உப்பு சேர்த்து நன்கு வேகும்வரை வதக்கவும்.

    கத்தரிக்காய் நன்றாக வெந்ததும் கறிவேப்பிலை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான கத்தரிக்காய் பெப்பர் பிரை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டயட்டில் உள்ளவர்கள், வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு ஓட்ஸ் தயிர் பாத் மிகவும் நல்லது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    ஓட்ஸ் - 1 கப்
    தயிர் - 1 கப்
    கேரட் - 1 பெரியது
    கடுகு - கால் டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி - 1 சிறுதுண்டு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    ஓட்ஸ் தயிர் பாத்

    செய்முறை :

    ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்.

    இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து, நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

    பிறகு துருவிய கேரட்டை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் தயிர், சிறிது உப்பை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, பிறகு அதில் ஓட்ஸ் சேர்த்து கலக்க வேண்டும்.

    ஆரோக்கியமான ஓட்ஸ் தயிர் பாத் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த மீல் மேக்கர் வடையை ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம். சாதத்திற்கு தொட்டுக்கொள்ளவும் செய்யலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மீல் மேக்கர் - 100 கிராம்
    பொட்டுக்கடாலை - அரை கப்
    பெரிய வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 3
    கரம் மசாலா - 2 டீஸ்பூன்
    கறிமசாலா - 1 டீஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    சோள மாவு - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - தேவையான அளவு
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    மீல் மேக்கர் வடை

    செய்முறை :

    கொத்தமல்லி, புதினா, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீல் மேக்கரை வெந்நீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்து நன்றாக ஆறியதும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் பொட்டுக்கடலை மாவு, சோள மாவு, மஞ்சள் தூள், சோம்பு சீரகத்துள், கறிமசாலா, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, ப.மிளகாய், வெங்காயம் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.

    அடுத்து அதில் பொடியாக நறுக்கிய மீல் மேக்கரை சேர்த்து வடை பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடை போல் தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான மீல் மேக்கர் வடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.


    பால் சேர்த்து செய்யும் வெஜிடபிள் சூப் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பால் - 2 கப்,
    கேரட் - 1,
    பீன்ஸ் - 5,
    பச்சைப் பட்டாணி - 1 டேபிள்ஸ்பூன்,
    மிக பொடியாக நறுக்கிய கோஸ், காலிஃப்ளவர், நூல்கோல் - 1/4 கப்,
    வெங்காயம் - 1,
    இஞ்சிபூண்டு விழுது - சிறிது,
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு,
    எண்ணெய் - சிறிது,
    வெண்ணெய் - 4 டீஸ்பூன்.

    பால் வெஜிடபிள் சூப்

    செய்முறை

    காய்கறிகள், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் காய்கறிகள், உப்பு, தேவையான தண்ணீர் விட்டு வேக வைத்து கொள்ளவும்.

    கடாயில் வெண்ணெயை போட்டு உருகியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    பின்பு வெந்த காய்கறி கலவையை சேர்த்து, பால் ஊற்றி நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்.

    கடைசியாக கொத்தமல்லி, மிளகுத்தூள் தூவி சூடாக பரிமாறவும்.

    சூப்பரான சத்தான பால் வெஜிடபிள் சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பட்டாணி, முட்டை சேர்த்து செய்யும் இந்த கீமா சப்பாத்தி, பூரி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    முட்டை - 4
    ப்ரெஷ் பட்டாணி - 1/2 கப்
    தக்காளி - 1
    மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
    மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - சிறிது

    தாளிக்க :

    எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    பிரிஞ்சி இலை - 1
    பட்டை - 1 இன்ச்
    கிராம்பு - 2
    அன்னாசிப்பூ - 1
    பெரிய வெங்காயம் - 1

    பட்டாணி முட்டை கீமா

    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டையை வேக வைத்து கொள்ளவும். வெந்ததும் தோலுரித்து கேரட் துருவும் துருவியில் துருவிக்கொள்ளவும்.

    தக்காளியை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ போடவும். பட்டை பொன்னிறமானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் ப்ரெஷ் பட்டாணி சேர்த்து கிளறவும்.

    பட்டாணி வெந்ததும் அரைத்து வைத்துள்ள தக்காளி கலவையை சேர்த்து பச்சை வாடை போகும் வரை கிளறவும்.

    பச்சை வாடை போனதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித்தூள் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    மசாலா வாடை போனதும் அதனுடன் துருவி வைத்திருக்கும் முட்டை துருவல் சேர்க்கவும்.

    இறுதியில் கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.

    சாதம், பூரி, சப்பாத்திக்கு சுவையான பட்டாணி முட்டை கீமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாண்ட்விச் விருப்பத்திற்கேற்ப விருப்பமான காய்கறிகள், பழங்களை வைத்து செய்யலாம். இன்று தக்காளி, பன்னீரை வைத்து சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை பிரெட் - 6 துண்டுகள்
    வெண்ணெய் - 1 டீஸ்பூன்
    தக்காளி - 1
    குடைமிளகாய் - 1
    வெங்காயம் - 1
    பன்னீர் - 1/2 கப்
    மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    தக்காளி பன்னீர் சாண்ட்விச்

    செய்முறை :


    தக்காளி, வெங்காயம், பன்னீர், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பிரெட்டின் இரண்டு பக்கங்களிலும் வெண்ணெய் தடவி, டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலிலை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    அடுத்து குடைமிளகாய், பன்னீர் மற்றும் தக்காளி சேர்த்து, லேசாக 2 நிமிடம் வதக்க வேண்டும்.

    பிறகு அதில் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, இறக்கி விட வேண்டும்.

    பின்பு அந்த தக்காளி, பன்னீர் கலவையை, டோஸ்ட் செய்த ஒரு பிரட்டின் நடுவே வைத்து, மற்றொரு பிரட் துண்டை வைத்து மூடி பரிமாற வேண்டும்.

    இப்போது சூப்பரான தக்காளி பன்னீர் சாண்ட்விச் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாளை (ஞாயிற்று கிழமை) சன்டே ஸ்பெஷலாக வாய்க்கு ருசியாக நாட்டு கோழியில் தயாரிக்கப்படும் நாட்டு கோழி குருமா செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்

    நாட்டுக்கோழி - ஒரு கிலோ
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    தக்காளி - 2
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா பவுடர் - ஒரு ஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
    தனியா தூள் - ஒரு ஸ்பூன்
    தேங்காய் - அரை மூடி
    கசகசா - ஒரு ஸ்பூன்
    முந்திரி - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    நாட்டு கோழி குருமா

    செய்முறை :

    நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    தேங்காய், கசகசா, முந்திரியை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

    சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்.

    மசாலாவின் பச்சை வாசனை போனவுடன் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள நாட்டுக்கோழியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வேக விட்டு எடுத்தால் சுவையான நாட்டு கோழி குருமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேல் கீரையில் அதிகளவு நார்ச்சத்து, ஜீரணக்கோளாறு மலச்சிக்கல் பிரச்சினை இருப்பவர்கள் அடிக்கடி இந்த கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    தேவையான பொருட்கள் :

    கேல் கீரை - 200 கிராம்
    பெரிய வெங்காயம் - 1
    பூண்டு - 4 துண்டு
    செலரி தண்டுகள் - 2
    கேரட் -  1
    சிக்கன் ஸ்டாக் (அது வேண்டாம் என்றால் வெஜிடபிள் ஸ்டாக்) - 8 கப்
    ஒரெகானோ - 1 தேக்கரண்டி
    தேவைக்கேற்ப - உப்பு, மிளகு
    சிவப்பு மிளகாய் ஃபிளேக்ஸ் - தேவையான அளவு
    எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

    கேல் கீரை

    செய்முறை :

    கேல் கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    வெங்காயம், செலரி, பூண்டு, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும வெங்காயம், பூண்டு, செலரியைப் போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் கேரட் சேர்த்து மூன்று நிமிடங்கள் வதக்கவும்.

    அடுத்து அதில் சிக்கன் ஸ்டாக் (அது வேண்டாம் என்றால் வெஜிடபிள் ஸ்டாக்), ஒரெகானோ கலந்து கொதிக்க விடவும்.

    கடைசியாக கேல் கீரையை சேர்த்து, மூடி ஐந்து நிமிடங்கள் வைத்திருந்து இறக்கி பரிமாறவும்.

    சத்தான கேல் சூப் ரெடி

    இந்த சூப்பை சாதம், பிரெட்டுடன் பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அல்வாவில் பல வெரைட்டிகள் உள்ளது. அதில் ஒன்று தான் பீட்ரூட் அல்வா. இந்த இந்த அல்வாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பீட்ரூட் - 4
    பால் - 2 கப்
    சர்க்கரை - 1/2 கப்
    ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
    நெய் - 3 டேபிள் ஸ்பூன்
    முந்திரி - சிறிது
    உலர் திராட்சை - சிறிது
    பாதாம் - சிறிது
    கண்டென்ஸ்டு மில்க் - தேவையான அளவு (விருப்பமிருந்தால்)

    பீட்ரூட் அல்வா

    செய்முறை :

    முதலில் பீட்ரூட்டை கழுவி, தோலுரித்து, துருவிக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, பாதாம் சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் வறுத்து, பின் அதனை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு அதில் துருவி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் வதக்கி, பின் அதில் பால் சேர்த்து குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

    பிறகு அதில் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து தொடர்ந்து கிளறி விட்டு, பின் தேவையான அளவு கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து கலவை கெட்டியாகும் வரை நன்கு பிரட்டி இறக்கவும்.

    பின்னர் அதில் முந்திரி, பாதாம் மற்றும் உலர் திராட்சை தூவி பரிமாறினால், பீட்ரூட் அல்வா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வீட்டிலேயே எளிய முறையில் காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள்:

    இட்லி (புழுங்கல்) அரிசி - 2 கப்
    உளுத்தம் பருப்பு - 1 கப்
    மிளகு - 2 டீஸ்பூன்
    சீரகம் - 2 டீஸ்பூன்
    சுக்கு பொடி - ஒரு சிட்டிகை
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    தேங்காய் (பொடி பல்லு பல்லாக நறுக்கியது) - 1/2 கப்
    முந்திரி பருப்பு (சிறு சிறு துண்டுகளாக ஒடித்தது) - 1 டேபிள்ஸ்பூன்
    நெய் - 1 டேபிள்ஸ்பூன்
    நல்லெண்ணை - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
    உப்பு - தேவைக்கேற்றவாறு

    காஞ்சிபுரம் இட்லி

    செய்முறை :

    அரிசியையும், உளுத்தம் பருப்பையும் நன்றாக கழுவி தனித்தனியாக 4 மணிநேரம் ஊற வைத்து இட்லிக்கு அரைப்பது போல் மிருதுவாக அரைத்து, உப்பு போட்டு கலந்து, இரவு முழுவதும் புளிக்க விடவும்.

    மறுநாள், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு அதில் முந்திரி பருப்பு, சுக்குப் பொடி (சுக்குப்பொடி இல்லையென்றால், சிறு இஞ்சித் துண்டைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும்) இரண்டையும் போட்டு, முந்திரி சிவக்கும் வரை வறுத்து மாவில் கொட்டவும்.

    அதே வாணலியில் நல்லெண்ணையை விட்டு, ஒரு டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றை முழுதாகவும், மற்றொரு டீஸ்பூன் மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகவும் பொடித்தும் சேர்க்கவும்.

    இத்துடன் பெருங்காயத்தூளையும் சேர்த்து ஓரிரு வினாடிகள் வறுத்து இதையும் மாவில் கொட்டவும்.

    தேங்காய் துண்டுகளையும் மாவில் சேர்த்து நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.

    இட்லி குக்கர் அல்லது இட்லி பானையை அடுப்பிலேற்றி, தேவையான தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.  

    ஒரே அளவுள்ள டம்ளர்களை எடுத்து எண்ணெய் தடவி அதில் 3/4 அளவிற்கு மாவை ஊற்றவும்.

    இதை இட்லி குக்கர்/பானை உள்ளே வைத்து மூடி 15 முதல் 20 நிமிடங்கள் வரை வேக விட்டு எடுக்கவும்.

    இப்போது சுவையான காஞ்சிபுரம் இட்லி ரெடி.

    குக்கர் பாத்திரம் அல்லது வாயகன்ற பேசின் போன்ற பாத்திரத்தில் மாவை ஊற்றி வேக வைத்து, துண்டுகளாகவும் வெட்டி பரிமாறலாம். அல்லது சாதரண இட்லி போல், இட்லி தட்டில் ஊற்றியும் வேக வைக்கலாம்..

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு, மிகவும் ஆரோக்கியமான மற்றும் சுவையான இந்த வடையை செய்து கொடுக்கலாம். இன்று வடை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துவரம் பருப்பு - 1/4 கப்
    கடலை பருப்பு - 1/2 கப்
    காய்ந்த சிவப்பு மிளகாய் - 5
    சோம்பு - 1/2 தேக்கரண்டி
    கல் உப்பு - தேவையான அளவு
    இஞ்சி - சிறிய துண்டு
    பெரிய வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 2
    பீட்ருட் - 1
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

    பீட்ருட் வடை

    செய்முறை :

    வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பீட்ரூட்டை துருவிக்கொள்ளவும்.

    துவரம் பருப்பு மற்றும் கடலை பருப்பை சுத்தமாக கழுவி இரண்டு மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

    பருப்பு வகைகள் நன்றாக ஊறியதும் மிக்சியில் போட்டு, அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர்

    ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    பிறகு அரைத்த மாவை ஒரு பௌலில் சேர்த்து, அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, நைசாக துருவிய பீட்ருட்

    ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடேறியதும், பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து சிறிய சிறிய

    வடையாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சுவையான, ஆரோக்கியமான பீட்ருட் வடை தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மழை காலத்தில் சூப் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இன்று தக்காளி, பிரெட் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் துண்டுகள் - 4,
    தக்காளி - 6,
    மிளகுத்தூள், நெய் - தலா அரை டீஸ்பூன்,
    வெண்ணெய், சோள மாவு - தலா ஒரு டீஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    கோஸ் - சிறிய துண்டு
    உப்பு - தேவையான அளவு.

    தக்காளி பிரெட் சூப்

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கோஸை துருவிக்கொள்ளவும்.

    தக்காளியைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு தோல் உரித்து, மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றி துருவிய கோஸ், தக்காளி சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து லேசாக சூடாக்கவும்.

    பிரெட்டை பொடித்து சேர்க்கவும்.

    இதனுடன் சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி கொத்தமல்லி, வெண்ணெய் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

    சூப்பரான தக்காளி பிரெட் சூப் ரெடி.

    சூடாக குடித்தால் ‘சூப்’பராக இருக்கும். காய் வேக வைத்த தண்ணீரை வீணாக்காமல், அதைச் சேர்த்தும் சூப் தயாரிக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×