search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பீட்ருட் வடை
    X
    பீட்ருட் வடை

    சத்தான ஸ்நாக்ஸ் பீட்ருட் வடை

    பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு, மிகவும் ஆரோக்கியமான மற்றும் சுவையான இந்த வடையை செய்து கொடுக்கலாம். இன்று வடை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துவரம் பருப்பு - 1/4 கப்
    கடலை பருப்பு - 1/2 கப்
    காய்ந்த சிவப்பு மிளகாய் - 5
    சோம்பு - 1/2 தேக்கரண்டி
    கல் உப்பு - தேவையான அளவு
    இஞ்சி - சிறிய துண்டு
    பெரிய வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 2
    பீட்ருட் - 1
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

    பீட்ருட் வடை

    செய்முறை :

    வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பீட்ரூட்டை துருவிக்கொள்ளவும்.

    துவரம் பருப்பு மற்றும் கடலை பருப்பை சுத்தமாக கழுவி இரண்டு மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

    பருப்பு வகைகள் நன்றாக ஊறியதும் மிக்சியில் போட்டு, அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர்

    ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    பிறகு அரைத்த மாவை ஒரு பௌலில் சேர்த்து, அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, நைசாக துருவிய பீட்ருட்

    ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடேறியதும், பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து சிறிய சிறிய

    வடையாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சுவையான, ஆரோக்கியமான பீட்ருட் வடை தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×