என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    பால் வெஜிடபிள் சூப்
    X
    பால் வெஜிடபிள் சூப்

    சத்து நிறைந்த பால் வெஜிடபிள் சூப்

    பால் சேர்த்து செய்யும் வெஜிடபிள் சூப் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பால் - 2 கப்,
    கேரட் - 1,
    பீன்ஸ் - 5,
    பச்சைப் பட்டாணி - 1 டேபிள்ஸ்பூன்,
    மிக பொடியாக நறுக்கிய கோஸ், காலிஃப்ளவர், நூல்கோல் - 1/4 கப்,
    வெங்காயம் - 1,
    இஞ்சிபூண்டு விழுது - சிறிது,
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு,
    எண்ணெய் - சிறிது,
    வெண்ணெய் - 4 டீஸ்பூன்.

    பால் வெஜிடபிள் சூப்

    செய்முறை

    காய்கறிகள், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் காய்கறிகள், உப்பு, தேவையான தண்ணீர் விட்டு வேக வைத்து கொள்ளவும்.

    கடாயில் வெண்ணெயை போட்டு உருகியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    பின்பு வெந்த காய்கறி கலவையை சேர்த்து, பால் ஊற்றி நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்.

    கடைசியாக கொத்தமல்லி, மிளகுத்தூள் தூவி சூடாக பரிமாறவும்.

    சூப்பரான சத்தான பால் வெஜிடபிள் சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×