என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    ஒரு தந்தை தனது ஆண் குழந்தைகளை கவனித்துக்கொள்வதை காட்டிலும், பெண் குழந்தையை அதிக அக்கறை எடுத்து கவனித்து கொள்வதற்கான காரணத்தை பார்க்கலாம்.
    தந்தை என்றால் பெண் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதே போல தான் ஒரு தந்தை தனது ஆண் குழந்தைகளை கவனித்துக்கொள்வதை காட்டிலும், பெண் குழந்தையை அதிக அக்கறை எடுத்து கவனித்துக்கொள்ள வேண்டும். அது ஏன் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்...!

    தனது தந்தையின் மீது தான் பெண் குழந்தை அதிக ஆர்வம் காட்டுவதாகவும், மனம்விட்டு பேச வேண்டும், தனது உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும், சோகங்களை பகிர வேண்டும் என்ற எண்ணம் தாயை விட தந்தையிடம் இடம் தான் அதிகமாக இருக்கின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே ஆண்கள் தனது குழந்தையின் மனநிலையை புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.

    ஒரு தந்தையால் ஆண் குழந்தைகளின் உள் உணர்வுளை புரிந்து கொள்வதை விட பெண் குழந்தைகளின் உள் உணர்வுகளை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. எனவே தனது குழந்தைக்கு வேண்டியதை செய்ய இவர்களால் முடியும்

    என்ன தான் பெண் குழந்தைகள் தன் தாயுடன் நாள் முழுவதையும் கழித்தாலும் கூட, தன் தந்தையை கண்டவுடன் தந்தையிடம் ஒட்டிக்கொள்ளும். பெண் குழந்தைகளுக்கு தன் தந்தையுடன் நேரத்தை செலவழிப்பது மற்றும் விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்குமாம்.

    பெண் குழந்தைகளால் மற்றவர்களை காட்டிலும், தனது முகபாவனைகள் மற்றும் பேச்சு ஆகியவற்றை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.

    தாயை காட்டிலும் தந்தையால் தனது பெண் குழந்தைக்கு அதிக வெளியுலக அறிவை கொடுக்க முடியும். தந்தையுடன் செலவிடும் நேரங்களில் பெண் குழந்தைகள் அதிகமாக கற்றுக்கொள்ள முடிகிறது.

    பெரும்பான்மையான குழந்தைகள் தங்களது தந்தையின் செல்லப்பிள்ளைகளாக இருப்பார்கள். தாயுடனான தந்தையின் அன்பு ஒரு குழந்தையின் மனநலம் மற்றும் உடல்நலத்தை பேணிக்காக்கிறது.

    குழந்தைகள் மற்றும் டீன் ஏஜ் வயதினர் கல்வி கற்கும் விஷயத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்தும் அரிதாகவே விவாதிக்கப்படுகிறது. இவர்களும் மற்ற மனிதர்களை போலவே பல கஷ்டங்களையும், சவால்களையும் எதிர்கொள்கிறார்கள்.
    கொரோனா வைரஸ் பரவல் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய 2020-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 11,396 குழந்தைகள் இறந்திருக்கிறார்கள். அவர்கள் கொரோனா நோய் பாதிப்புக்குள்ளாகி மரணத்தை தழுவவில்லை. தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. ஒரு நாளில் சராசரியாக 31 பேர் இறப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

    2019-ம் ஆண்டில் 9,613 குழந்தைகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். அதனுடன் ஒப்பிடும்போது 18 சதவீதம் அதிகரித்துள்ளது. 2018-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 9,413 ஆக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் மரணம் அடையும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பதன் பின்னணியில் பல காரணங்கள் இருக்கின்றன. குடும்ப பிரச்சினை காரணமாக 4,006 இறப்புகள் நடந்துள்ளன. காதல் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக 1,337 பேர் தற்கொலை முடிவை நாடி இருக்கிறார்கள். நோய் பாதிப்புக்குள்ளாகி 1,327 பேர் உயிரை மாய்த்திருக்கிறார்கள். வேலையின்மை, நிதி சிக்கல், போதைப் பொருள் துஷ்பிரயோகம் மற்றும் கருவுறுதல் போன்ற பிற காரணங்களும் அங்கம் வகிக்கின்றன.

    இவை அனைத்துக்கும் ஒட்டுமொத்த காரணியாக மன நல பிரச்சினை விளங்குகிறது. இந்தியாவில் மனநலம் பற்றி அரிதாகவே பேசப்படுகிறது. குழந்தைகள் மற்றும் டீன் ஏஜ் வயதினர் கல்வி கற்கும் விஷயத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்தும் அரிதாகவே விவாதிக்கப்படுகிறது. இவர்களும் மற்ற மனிதர்களை போலவே பல கஷ்டங்களையும், சவால்களையும் எதிர்கொள்கிறார்கள். அவை அவர்களின் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனை பெற்றோர்களும், ஆசிரியர்களும் புரிந்து கொண்டு அவர் களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். மனநலப் பிரச்சினைகளை சமாளிக்க உதவ வேண்டும்.

    கொரோனா தொற்றுக்கு முன்பாகவே உளவியல் ரீதியான மன உளைச்சலை பல குழந்தைகள் எதிர்கொண்டிருக்கிறார்கள். அது அவர்களின் மன ஆரோக்கியத்தை வெகுவாக பாதித்துவிட்டது என்பது மன நல நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதில் நிலைமை மேலும் மோசமடைந்துவிட்டது. குழந்தைகள் தனிமைப்படுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர். அதுவும் அவர்களின் மன ஆரோக்கியத்தை வெகுவாக பாதிப்படைய செய்துவிட்டது என்றும் கூறுகிறார்கள்.

    ஆன்லைன் வகுப்புகள் காரணமாக குழந்தைகள் தங்களை புதிய கல்வி முறைக்கு மாற்றியமைக்க வேண்டியிருந்தது. கணினி அல்லது ஸ்மார்ட்போன் முன்பு நீண்ட நேரம் செலவிட வேண்டியிருந்தது. இதுவும் மன அழுத்தத்திற்கு வழிவகுத்து விட்டது. ‘‘சில சமயங்களில் ஆன்லைன் வகுப்புகள் இடைவெளி இல்லாமல் நீண்ட நேரம் நடக்கின்றன. கணினி, லேப்டாப், டேப்லட் போன்ற கேஜெட்களை அதிகமாக பயன்படுத்துவதன் காரணமாக பல குழந்தைகள் மனநல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். இதுவும் உளவியல் ரீதியான துயரத்திற்கு வழிவகுத்துவிடும்’’ என்கிறார், டாக்டர் பஜாஜ்.

    பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மனநலம் பற்றி கற்றுக்கொடுக்க வேண்டும். தங்கள் குழந்தைகளின் நடத்தைகளை கவனிக்க வேண்டும். அவர்களுடன் பேச வேண்டும். நட்பாக பழக வேண்டும். அதன் மூலம் எந்த பிரச்சினையையும் ஆரம்ப கட்டத்திலேயே சமாளிக்க முடியும்.

    மன அழுத்தமில்லாத வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

    கல்வி மற்றும் புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட உலகம் உள்ளது என்பதையும் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். பூங்கா, சுற்றுலாவுக்கு அழைத்து செல்வது, குழு விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்ற சில வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடலாம். தேர்வு நேரத்தில் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை கற்றுக்கொடுக்கலாம்.
    குழந்தை பருவத்தில் ஏற்படும் எல்லா நீரிழிவு குறைபாடும் டைப் 1 (type 1) அல்ல. சில உடல் பருமனால் பெரியவர்களுக்கு ஏற்படும் டைப் 2 (type 2) எனப்படும் முதிர் வயது நீரிழிவின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.
    பொதுவாக மோனோஜெனிக் நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே மிகவும் குறைவு. காரணம் மோனோ ஜெனிக் நீரிழிவு நோய் உள்ளதா என்பதை ஆய்வு செய்து பார்ப்பதில்லை. எனவே குறிப்பாக குழந்தை பருவத்தில் சக்கரை நோய் ஏற்பட்டாலே அதனை டைப் 1 (type 1) என வகைப்படுத்தி, இது கணையத்தின் இன்சுலின் ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் குறைபாடாக இருப்பதனால், இன்சுலின் ஊசி மூலம் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இன்சுலின் ஊசி உணவு உண்ணுவதை பொறுத்து எடுத்து கொள்ள வேண்டியது இருப்பதால், ஒரு நாளைக்கு பல முறை ஊசி எடுக்க வேண்டியது வரலாம். இதனை அக்குழந்தைகள் ஏற்றுக்கொண்டாலும், பெற்றோருக்கு ஏற்றுக்கொள்ள இது சற்றே கடினமாகத்தான் இருக்கிறது.

    ஆனால் குழந்தை பருவத்தில் ஏற்படும் எல்லா நீரிழிவு குறைபாடும் டைப் 1 (type 1) அல்ல. சில உடல் பருமனால் பெரியவர்களுக்கு ஏற்படும் டைப் 2 (type 2) எனப்படும் முதிர் வயது நீரிழிவின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

    வேறு சில மோனோஜெனிக் வகை நீரிழிவு நோயாக கூட இருக்கக்கூடும். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், இவ்வகை சக்கரை நோய்க்கு இன்சுலின் ஊசி தேவை இல்லை. சாதாரண நீரிழிவு மாத்திரைகளே போதுமானது. இந்த வகை நீரிழிவு நோயை மரபணு பரிசோதனை செய்து நாம் அறிந்துகொள்ளலாம் .இதனை கண்டுபிடித்து விட்டால் அக்குழந்தையை நாள்தோறும் எடுத்து கொள்ள வேண்டிய ஊசிகளிருந்து காப்பாற்றி விடலாம் .

    Type 1 குழந்தைகளில் நூறு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு மரபணு மாற்றத்தினால் ஏற்படும், மாத்திரைக்கு கட்டுப்படும் நீரிழிவின் ஒரு வகையாக இருக்கக்கூடும் என்பதால், டைப் 1 நீரிழிவினால் அவதியுறும் குழந்தைகள் இம்மரபணு சோதனையை செய்துகொள்ள வேண்டுமா என ஒரு முறை ஆலோசனை செய்து கொள்ளலாம்.

    மோனோ ஜெனிக் நீரிழிவு நோய் மிக குறைவான நபர்களுக்கே வரக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது அதனால் அதை பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் குழந்தைகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் போது அவர்களின் நோய் டைப் 1 நீரிழிவு நோய் ஆகவே வகை படுத்திக்கொண்டு இன்சுலின் மருந்து ஊசியாக அளிக்கப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. இந்த நிலை வரக்கூடிய காலகட்டங்களில் மேற்படி மோனோ ஜெனிக் நீரிழிவை கண்டுபிடிக்கும் செயலை செய்வதன் மூலமாக தவிர்க்க முடியும்.

    இது டைப்-1 பாதிக்கப்படாமல் மோனோ ஜெனிக் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பெரிதும் நன்மை பயக்கும் என்பதில் ஐயமில்லை. இன்றைய சூழலில் பல்வேறு வகையான வைரஸ்களும் அதிக அளவில் பொதுமக்களை காய்ச்சல் இருமல் சளி உடல் வலி போன்ற பல்வேறு வகையான உடல் உபாதைகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்த சூழலில் ஏற்கனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்களை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்வது அவசியம். உண்ணும் உணவு முதல் சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணிதல் சிறிய அளவிற்கு அறிகுறிகள் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகி தகுந்த ஆலோசனை பெறுவது முக்கியம்.

    ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களும் தேவையான உடற்பயிற்சிகளும் எந்த நோயும் அணுகாமல் நம்மை காப்பாற்றும்.

    ஒருவர் உண்ணும் உணவு வயிற்றில் ஜீரணம் ஆவதற்கு கணையத்தில் சுரக்கும் இன்சுலின் முக்கிய பங்கு வகிக்கிறது.

    உணவை உண்ணும்போது நன்றாக ருசித்து ரசித்து நன்கு மென்று சாப்பிடும் பொழுது வாயில் போதுமான உமிழ்நீர் சுரக்கப்பட்டு நம் உணவு வயிற்றில் ஜீரணமாவதற்கு ஏற்றவகையில் செல்லும் இவ்வாறு உணவு பழக்கத்தை மேற்கொண்டால் நீரிழிவு நோயாளிகளுக்கும் மற்றவர்களுக்கும் பெரும் பயன் அளிக்கும் எனலாம்.
    ஒரு விசயத்தில் பிரச்சினை இருக்கிறதா இல்லையா? பிரச்சினை இருந்தால் அதனை எப்படி கையாள்வது என்பது குறித்து பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
    பொதுவாக நேர்மறையான விசயங்களைவிட எதிர்மறையான விசயங்களே மக்கள் மனதில் அதிக ஈர்ப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். அதாவது 1:16 என்ற விகிதத்தில் உள்ளது. 16 நல்ல விசயங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை ஒரு கெட்ட விசயம் செய்து விடும். அதனால்தான் குழந்தைகள் எதிர்மறையான செயல்களால் எளிதில் ஈர்க்கப்படுகின்றனர். எனவே எப்பொழுதும் நல்லவற்றையே பேச வேண்டும். நல்லவற்றையே செய்ய வேண்டும். சூழலை நல்லவிதமாக அமைத்துக்கொள்ள வேண்டும்.

    மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தோழமையுடன் நடந்து கொள்ள வேண்டும். கண்டிப்புடன் இருந்தால் அது பெற்றோர்-குழந்தைகளிடையே இடைவெளியை ஏற்படுத்தி விடும். அதில் தான் ஆபத்து உண்டாகிறது. பயத்தின் காரணமாக குழந்தைகள் தங்கள் பிரச்சினையை சொல்ல மாட்டார்கள். இதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக தங்களுக்கு ஆறுதலாக இருக்கும் நபர்களைத்தேடி செல்வார்கள். இப்படியாகத்தான் கயவர்கள் காட்டும் போலியான அன்பில் மாட்டிக்கொள்கிறார்கள்.

    எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் அன்பாக தோழமையாக நடந்து கொண்டால் அவர்கள் தங்களுக்கு ஏற்படும் எந்த பிரச்சினைகள் என்றாலும் தயங்காமல் தெரிவிப்பார்கள். பின் விளைவுகள் ஏற்படும் முன்னரே தடுத்து நிறுத்தி விடலாம்.

    மேலும் பெற்றோர்கள் என் குழந்தை அப்படியெல்லாம் தவறு செய்யமாட்டான். அந்த துணிவெல்லாம் அவனுக்கு கிடையாது என்றும், என் குழந்தை எந்த பிரச்சினையென்றாலும் சமாளித்து விடுவான் என்றும் நம்பியிருக்கக் கூடாது. அதுவும் ஆபத்தை விளைவிக்கும்.

    குழந்தைகளிடம் கஷ்டப்பட்டு படிங்க, கஷ்டப்பட்டு வேலை செய்யுங்க. அப்போதுதான் நல்லா இருக்கலாம் என்று சொல்லி வந்தால், தேவையான விஷயங்களை செய்ய கஷ்டம்தான் படணும், மகிழ்ச்சிக்கான தேடல் என்பது நல்ல விசயங்களில் இருக்காது போல என நினைத்து கேளிக்கை விசயங்களில் நாட்டம் கொள்கின்றனர். எனவே அவர்கள் எதனையும் இஷ்டப்பட்டு செய்யும் வகையில் நடந்து கொண்டால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் மனம் கெட்ட விசயங்களில் அலை பாயாது.

    நாம் எந்த விசயத்தை அடிக்கடி நினைக்கிறோமோ, விரும்புகிறோமோ அது ஆழ்மனதில் பதிந்து விடும். அதனால் குழந்தைகளிடம் எப்போதும் நல்லவற்றையே பேச வேண்டும். அவர்களை சுற்றிலும் நல்ல சூழலை ஏற்படுத்த வேண்டும். இல்லை என்றால் எவ்வளவுதான் உணர்வு மனதளவில் நாம் நல்லவற்றை எண்ணினாலும் ஆழ்மனதில் கெட்ட விசயங்கள் பதிந்திருந்தால் அதுவே வெளிப்பட்டு செயலாகும்.

    இரண்டு வகையான பார்வை இருக்கிறது. பிரச்சினைகள் இல்லாத சூழலை ஏற்படுத்துவது ஒரு விசயம். பிரச்சினைகள் இருந்தாலும் அதில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது? ஒரு விசயத்தில் பிரச்சினை இருக்கிறதா இல்லையா? பிரச்சினை இருந்தால் அதனை எப்படி கையாள்வது என்பது குறித்து பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கும் அறிவுத்த வேண்டும்.
    குழந்தைகளின் வழக்கமான செயல்பாட்டில் வித்தியாசம் ஏற்படும்போது, பெற்றோர் அதைக் கவனித்து அதற்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து, அவர்களை நல்வழிப்படுத்தினால், பிற்காலத்தில் ஏற்படும் ஆபத்தில் இருந்து முன்னரே காப்பாற்றலாம்.
    சமீபகாலமாக, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றில் இருந்து அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு பெற்றோரின் ஆதரவும், பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வும் முக்கியமானது. பெண் குழந்தைகளுக்கு இது தொடர்பாக எவற்றையெல்லாம் தெரிவிக்க வேண்டும் என்பதைப் பற்றிய தொகுப்பு இதோ…

    உடல் பாகங்கள் குறித்த தெளிவு:

    பெண் குழந்தைகளுக்கு விவரம் தெரியும் பருவத்தில் உடலின் முக்கிய பாகங்கள், பிறப்புறுப்புகள், அதன் பெயர் என அனைத்தையும் தெளிவாகக் கற்றுக் கொடுக்க வேண்டும். இவற்றில் எத்தகைய உணர்வு ஏற்படும் என்பதையும் அம்மா சொல்லித் தருவது நல்லது. இதன் மூலம், பிறர் மூலமாக பாலியல் தொல்லை ஏற்பட்டால், பெண் குழந்தைகள் தெளிவாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க முடியும்.

    தொடுதலின் வித்தியாசம்:

    எதேச்சையாக தொடுவதற்கும், தவறான நோக்கத்தோடு தொடுவதற்கும் உள்ள வித்தியாசம் எத்தகையது என்பதை, குழந்தைகளுக்கு அவசியம் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஆண் நண்பர்கள் தொடும்போது, அவை எல்லை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை குழந்தையின் 3 வயதில் இருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போது தான், அவர்களால் ஆபத்து ஏற்படும் போது உடனடியாக சுதாரித்துத் தப்பிக்க இயலும்.

    பழக்கத்தில் கவனம்:

    நண்பர்களை கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும். பேச்சு, பழக்கம் என அனைத்திலும் குறிப்பிட்ட எல்லையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை, பெண் குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும். உடன் பழகும் நபர்களின் பார்வையில் ஏற்படும் வித்தியாசத்தைப் பிரித்து பார்க்கும் பழக்கத்தைக் கற்றுத்தருவது அவசியம்.

    ரகசியங்களைப் பகிர்தல்:

    பெண் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் சிறு பிரச்சினையாக இருந்தாலும், பெற்றோரிடம் சரியான நேரத்தில் பகிர கற்றுத் தர வேண்டும். குழந்தைகளின் வழக்கமான செயல்பாட்டில் வித்தியாசம் ஏற்படும்போது, பெற்றோர் அதைக் கவனித்து அதற்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து, அவர்களை நல்வழிப்படுத்தினால், பிற்காலத்தில் ஏற்படும் ஆபத்தில் இருந்து முன்னரே காப்பாற்றலாம்.

    புகைப்படத்துக்கு தடை:

    நண்பர்களுடன் இணைந்து புகைப்படம் எடுக்கும்போது, குழுவாக இருக்கையில் மட்டுமே எடுக்கும்படி அறிவுறுத்த வேண்டும். வெளியிடங்களில் தனி நபராகவோ, ஒரு ஆண் நண்பருடன் மட்டுமோ இணைந்து புகைப்படம் எடுப்பது, உடல் உறுப்புகளை புகைப்படம் எடுப்பது போன்றவற்றை அனுமதிக்கக்கூடாது.

    தைரியமாக எதிர்கொள்ளுதல்:

    பிரச்சினையைக் கண்டு பயப்படாமல், அதை எவ்வாறு சமாளித்துத் தப்பிக்க வேண்டும் என்பதைக் கற்றுத் தருவது அவசியம். பாதுகாப்பு இல்லாத இடமாக இருந்தால், அங்கு தனியாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். செல்லும் இடத்தில் ஆபத்து இருப்பதை உணர்ந்தால், அங்கிருந்து விலகி, பாதுகாப்பான இடத்திற்குச் சென்று, குடும்ப உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிப்பதற்குக் கற்றுத் தருவது முக்கியமானது.
    புத்தகம் வாசிப்பு என்பது இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு ஆர்வம் இல்லாத ஒரு பொழுது போக்கவே மாறிவிட்டது. குழந்தைகளின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று அறிந்து கொள்ளலாம்.
    குழந்தைகள் தொடர்ந்து புத்தகம் படிப்பதன் மூலம் அவர்களின் எண்ண ஒட்டம் சீராக இருக்கும் என்பதைத் தாண்டி புத்திக் கூர்மை, நினைவாற்றல் மேம்படுதல் போன்ற பண்புகளும் தானே வளரும் என்கிறார்கள் அறிஞர்கள்.

    ”குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பெரும்பாலும் மூன்று வயதிலே தொடங்கி விடுகிறது. அந்தப் பருவத்தில்  வாசிப்பை  அவர்களுக்குப் பழக்கப்படுத்துவது அவசியம். பெற்றோர்களின் சில செயல்பாட்டின் மூலம் வாசிப்பு பழக்கத்தை குழந்தைகளிடம் நிச்சயம் கொண்டு வர முடியும்.

    * குழந்தைகளுக்குப் புத்தக வாசிப்பைக் கொண்டுவர நினைக்கும் பெற்றோர்கள் முதலில் தாங்கள் தினமும் வாசிக்கும் புத்தகத்தை கொண்டு இருக்க வேண்டும். இது குழந்தைக்கு இயல்பாகவே வாசிப்பு மீது ஆர்வத்தை ஏற்படுத்தும்.

    * இரண்டு வயதுக்குப் பிறகு, குழந்தைகளுக்குப் பொம்மைகள் அல்லது மொபைலை காட்டி உணவுட்டுவதைத் தவிர்த்து, படங்கள் நிறைந்த புத்தகங்களை வைத்துக் கொண்டு, அதில் உள்ள படங்களை அவர்களுக்குப் புரியும் விதத்தில் கதைகளாக எடுத்துச் சொல்லி உணவூட்டலாம்.

    * ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு அனிமேஷன் புத்தகங்கள், வண்ணத் துணியினால் ஆன புத்தகங்கள் என வித்தியாசமான புத்தகங்களை வாங்கிக் கொடுத்தாலே அவர்களின் வாசிப்பு ஆர்வம் தானாக அதிகரிக்கும் விடும். முதலில் குழந்தைகளுக்கு வாசிப்பை அறிமுகப்படுத்தும் போது அவர்கள் கையாள எளிதான வகையில் நீளவடிவிலான எடை குறைந்த புத்தகங்களைக் குழந்தைகளிடம் கொடுத்துப் பழக்கப்படுத்துங்கள்.

    * புத்தகத்தை முதன்முதலாகக் குழந்தைகள் வாசிக்கும்போது, ஒவ்வொரு வார்த்தையையும் சத்தமாக வாசிக்கச் சொல்லுங்கள்.அவர்கள் வாசிக்கத் திணறினாலோ அல்லது தவறாக சொற்களை உச்சரித்தலோ ,நீ வாசித்தது  தவறு, வாசிக்கக்கூடத் தெரியாதா… என்பது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்து, இந்த வார்த்தையை இப்படிச் சொல்ல வேண்டும். ஒரு முறை முயன்று பார் என்று அன்புடன் சொல்லி வாசிக்கச் சொல்லுங்கள்.

    * பொதுவாக பரிசுப் பொருட்கள் குழந்தைகளை ஈர்க்கக் கூடிய ஒரு விஷயம். எனவே குழந்தைகளுக்கு நீங்கள் ஏதேனும் பரிசளிக்க விரும்பினால் அவர்களுக்கு ஆர்வம் நிறைந்த, துறை சார்ந்த புத்தகங்களை வாங்கிக் கொடுக்கலாம் அல்லது அவர்கள் யாருக்கேனும் ஏதேனும் பரிசளிக்க விரும்பினாலும் புத்தகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி புத்தகத்தையே பரிந்துரை செய்யுங்கள்.

    * குழந்தையின் கையில் ஒரு புத்தகத்தை அளித்து, முதலில் அவர்களை வாசிக்கச் சொல்லி பின் அதில் வரும் ஒரு சிறிய கதாப்பாத்திரம் பற்றி அவர்களுடன் உரையாடுவது, அல்லது அவர்களை நடித்துக் காட்டச் சொல்வது போன்றவற்றை செய்யச் சொல்லலாம். அதன் பிறகு அவர்கள் சிறப்பாக செயல்பட்டதற்காகச் சிறு பரிசுகள் வழங்கலாம்.

    * இன்றைய குழந்தைகள் ட்ஜிட்டல் மீது அதிக ஆர்வம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். எனவே, உங்கள் குழந்தை ஓரளவு வாசிப்புத் திறனை அடைந்த பிறகு, படிப்பதற்கான ஆப்கள் மூலமாகத் தினமும் கால் மணி நேரம் ஏதேனும் ஒரு தகவலை வாசிக்கச் சொல்லுங்கள். அது உங்களுக்கு ஒரு புதிய தகவல் என்பது போன்ற ரியாக்‌ஷனை அவர்களிடம் காட்டுங்கள்.

    * புத்தகக் கண்காட்சி நடைபெறும் இடங்களுக்குக் குழந்தைகளை அழைத்துச் சென்று அவர்கள் விரும்பும் புத்தகத்தை அவர்களையே தேர்வு செய்யச் சொல்வதுடன், மற்ற துறை சார்ந்த புத்தகங்களைப் பற்றியும் விரிவாக விளக்குங்கள். இது அவர்களுக்குப் புத்தகம் மீதான  ஆர்வம் அதிகரிக்கக் காரணமாக இருக்கும்.

    * விடுமுறை நாள்களில்  உங்கள் குழந்தையை நூலகங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுடன் குறைந்தது ஒரு மணி நேரம் அங்கே செலவிடுங்கள், அதன் பின் வீட்டுக்கு அழைத்து வந்து அவர்கள் படித்ததை வீட்டில் உள்ள அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளச் செய்யுங்கள்.

    * குழந்தைகளுக்கு பெட் டைம் ஸ்டோரிஸ் சொல்லும் போது புத்தகத்தில் உள்ள படங்களை குழந்தைகள் பார்க்கும் விதத்தில் வைத்துச் சொல்லுங்கள். இடை இடையே அவர்களின் கருத்துக்களையும் கேட்டுப் பாராட்டுங்கள்.இனி உங்கள் குழந்தையும் வாசிப்பை தங்கள் பழக்கமாக மாற்றிக்கொள்வார்கள்.
    உங்கள் பிறந்த குழந்தைக்கு பல வகை நோய்த்தொற்றும் கிருமிகளால் ஏற்படலாம். சில அலர்ஜிக்கு சரியான சிகிச்சையில் மட்டுமே தீர்க்கப்படலாம்.
    உங்கள் பிறந்த குழந்தைக்கு பல வகை நோய்த்தொற்றும் கிருமிகளால் ஏற்படலாம். இந்த தடிப்புகள் அல்லது தோல் மீது சிவப்பு திட்டுகள் குழந்தைக்கு ஒரு சில நாட்களுக்குள் ஆரம்பிக்கலாம். பொதுவாக, சுற்றுச்சூழல் நிலைமைகளில் உள்ள வேறுபாடுகளே இதன்  காரணமாகும். இதில் பெரும்பாலானவை பாதிப்பில்லாதவை.

    உங்கள் குழந்தை உடம்பில் திரவம் நிறைந்த கொப்புளங்கள் அல்லது சிறிய சிவப்பு-ஊதா புள்ளிகள் உடலில் (petechiae) அல்லது வேறு எந்த அறிகுறிகளும் வெடிப்புடன் இணைந்து இருந்தால், நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும். இந்த அறிகுறிகளில் காய்ச்சல், அதிகப்படியான அழுகை, உணவு உண்ண மறுப்பது, இருமல் அல்லது சிரமம் ஆகியவை அடங்கும்.

    இடையூறுகளை தடுக்க பொது வழிமுறைகள் சில பின்வருமாறு:
     
    * சோப்பு மற்றும் வலுவான பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்க்கவும், இது உங்கள் குழந்தையின் சருமத்தை தொந்தரவு செய்யலாம்

    * இறுக்கமான ஆடைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், இது உங்கள் குழந்தையின் தோலை காயப்படுத்தலாம் அல்லது எரிச்சலூட்டலாம்.

    * உங்கள் குழந்தையின் துணிகளையும் அடிக்கடி மாற்றவும்.

    * அரிப்புகளை ஏற்படுத்துவதில் கீறல் காயங்களைத் தடுக்க உங்கள் குழந்தையின் நகங்களை வெட்டவும்

    * ஒவ்வாமை தோலழற்சியின்  காரணியைக் கண்டுபிடித்து அதன் பயன்பாட்டை தவிர்க்கவும்

    அலர்ஜிக்கு சிகிச்சை முறைகள் என்ன?

    பெரும்பாலான வடுக்கள் பாதிப்பில்லாதவை, குறுகிய காலம் இருக்கும், எந்த சிகிச்சையும் தேவையில்லை. இருப்பினும், சில அலர்ஜி சரியான சிகிச்சையில் மட்டுமே தீர்க்கப்படலாம். பாக்டீரியா மற்றும் பூஞ்சை நோய்த்தாக்கங்களுக்கு முறையான ஆண்டிசெப்டிக் கிரீம் பயன்பாடுகள் தேவைப்படுகின்றன, அதே நேரத்தில் ஒவ்வாமை உமிழ்வுகள் வாய்வழி அண்டிஹிஸ்டமைன்களின் பயன்பாடு தேவைப்படலாம். ஒரு குளிர்ந்த குளியல் நமைச்சலை தடுக்க உதவுகிறது.

    சிகிச்சையின் போது உங்கள் பிள்ளை வேறு எந்த அறிகுறிகளையோ அல்லது உடல்நலம் மேலும் குன்றினாலோ, உடனே உங்கள் மருத்துவரை அணுகவும்.
    குழந்தைகளிடம் நிறைவேற்ற முடியாத வாக்குகளை கொடுக்கக்கூடாது. வாக்குறுதியை தவற விடும் பெற்றோரிடம் குழந்தைகளின் நம்பிக்கை குறையும்.
    பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதே பெற்றோரின் ஆசையாக இருக்கும். குழந்தைகளின் முன்னால் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும், அவர்களின் மனதில் தாக்கங்களை ஏற்படுத்துகினறன. குழந்தை வளர்ப்பில் பெற்றோர் மேற்கொள்ள வேண்டியவை தவிர்க்க வேண்டியவை பற்றி பார்க்கலாம்

    கோபம் சண்டை வேண்டாம்

    குழநதைகள் முன்னிலையில் பெற்றோர் சண்டைபோட்டுக்கொண்டால் குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையை உணர்வார்கள். அதன் காரணமாக அவர்களுக்கு மனஅழுத்தம், பயம், பதற்றம் போன்றவை உருவாகும்.

    அவர்களுக்காக பேசுவது

    குழந்தைகளிடன் மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பெற்றோரே பதில் கூறும் போது குழந்தைகள் சகஜமாக பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்காது. இந்த செயல் அவர்களின் தன்னம்பிக்கையை குறைக்கும். கூச்ச சுபாவத்தை அதிகரிக்கும்.

    கேட்பதற்கு முன்பே வாங்கித்தருவது

    எதையும் குழந்தைகள் கேட்பதற்கு முன்பே வாங்கித்தருவது பெரும்பாலான பெற்றோர்கள் செய்யும் தவறாகும். இதன் மூலம் அவர்களின் கேட்டு வாங்கும் திறனை குறைத்து விடுகிறீர்கள். அது மட்டுமல்லாமல் தங்களுக்கு எது தேவை என்பதை உணரும் முன்பே பெறுவதால் எல்லாமே எப்போதும் கிடைக்கும் என்ற மனநிலையும் உருவாகிறது.

    எல்லாமே கிடைப்பது

    குழந்தைகள் ஒரு பொருளை கேட்டவுடன் அந்த பொருள் அவர்களுக்கு தேவையா? இல்லையா? என்பதை பற்றி எந்த ஆலோசனையும் செய்யாமல் உடனே வாங்கித்தருவது தவறானதாகும். அதன் தேவை என்ன? எவ்வளவு நாள் பயன்படுத்துவார்கள்? போன்ற விஷயங்களை குழந்தையுடன் விவாதிக்க வேண்டும். இது அவர்களின் நிதி மேலாண்மையையும் பேச்சு திறனையும் வளர்க்க உதவும்.

    நேரம் ஒதுக்குதல்

    இன்றைய சூழலில் பல வீடுகளில் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்கின்றனர். இதனால் அவர்களுக்கு குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரம் குறைவாக இருக்கிறது. வேலை நாட்களில் நேரம் ஒதுக்க முடியாவிட்டாலும், விடுமுறை நாட்களிலாவது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்.

    அந்தரங்க பகிர்வுகள் கூடாது

    குழந்தைகள் முன் கெட்டவார்த்தைகள் மட்டுமல்ல, அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று எண்ணி ஜாடையாக கூட அந்தரங்கங்களை பேசக்கூடாது பிறர் பற்றிய அவதூறுகளையும் பேசக்கூடாது.

    பொய் சொல்லக்கூடாது

    குழந்தைகள் முன் பொய் பேசுவதை தவிர்க்க வேண்டும். .ஏதாவது ஒரு சூழலில் குழந்தைகள் முன்னிலையில் பொய் சொல்லி சமாளிக்கும் போதும் நண்பர்கள் மத்தியில் பொய் சொல்லும் போதும் அவர்கள் கவனிக்கிறார்கள். இதன் மூலம் பொய் சொல்வது இயல்பானது என்கிற மனநிலைக்கு வந்து விடுவார்கள்

    வாக்குத்தவறக்கூடாது

    குழந்தைகள் நம் வார்த்தைகளை நம்புகிறார்கள். எனவே அவர்களிடம் நாம் கொடுக்கும் வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும். நிறைவேற்ற முடியாத வாக்குகளை கொடுக்கக்கூடாது. வாக்குறுதியை தவற விடும் பெற்றோரிடம் குழந்தைகளின் நம்பிக்கை குறையும்.

    படிப்பு செலவு குறித்து சிந்திக்கும்போது, நீங்கள் தேர்ந்தெடுக்க இருக்கும் பல்கலைக்கழகத்தின் உலக தரவரிசை பட்டியலையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
    தென் கொரியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான சேஜாங் பல்கலைக்கழகத்தில், பயோடெக்னாலஜி துறையின் பேராசிரியராக பணியாற்றும் ஆரோக்கிய ராஜ், வெளிநாட்டு கல்வி குறித்தும், அதில் மாணவர்களுக்கு எழும் சந்தேகங்கள் குறித்தும் விளக்கமாக பகிர்ந்து கொள்கிறார்.

    எந்தெந்த படிப்புகளுக்கு வெளிநாடு சிறந்த தேர்வாக இருக்கும்?

    என்ஜினீயரிங், நேச்சுரல் சயின்ஸ், உயர்தர ஆராய்ச்சிக்கூடங்கள் தேவைப்படும் ஆராய்ச்சி நிலை படிப்புகள்... இவை அனைத்திற்கும் வெளிநாட்டு கல்வி சிறந்ததாக இருக்கும்.

    எந்த நாட்டில் என்ன படிக்கலாம் ?

    அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள், கொரியாவில் அறிவியல் மற்றும் பொறியியல் சம்பந்தமான படிப்புகள் மிக பிரபலம். ஆஸ்திரேலியாவில் மெக்கானிக்கல், சிவில், மைனிங், எனர்ஜி, ஐ.டி, கம்ப்யூட்டர் சயின்ஸ், மேலாண்மை படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. கனடாவில் ஐ.டி, கம்ப்யூட்டர் சயின்ஸ், சுற்றுலா, ஓட்டல் மேனேஜ்ெமன்ட், நர்சிங், ஹெல்த்கேர், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், எனர்ஜி என்ஜினீயரிங் படிக்கலாம்.

    பிரான்சில் டெலிவிஷன் மீடியா ஆர்ட்ஸ், லாஜிஸ்டிக், எலெக்ட்ரானிக்ஸ் படிக்கலாம். ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ், எனர்ஜி, மேனேஜ்மென்ட், நர்சிங் படிப்புகளுக்கு அயர்லாந்து உகந்த நாடு. டெலி கம்யூனிகேஷன், புட் அண்ட் டெய்ரி, மேலாண்மைப் படிப்புகளுக்கு நியூசிலாந்து சிறந்த நாடு. சிங்கப்பூர், போலந்து, சுவீடன், நெதர்லாந்து, பின்லாந்து, நார்வே போன்ற நாடுகளிலும் தரமான கல்வி கிடைக்கும்.

    வெளிநாட்டில் படிக்க, பிரத்யேக தேர்வுகள் இருக்கிறதா?

    ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட நாடுகளுக்குச் செல்ல, ஆங்கிலத் திறனை வெளிப்படுத்தும் டி.ஒ.இ.எப்.எல் TOEFL, ஐ.இ.எல்.டி.எஸ். IELTS ஆகிய தேர்வுகளில் ஒன்றை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். ஆங்கிலம் பேசும் நாடுகளில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இந்தத் தேர்வுகளை அங்கீகரிக்கின்றன.

    இதுதவிர, இளநிலை படிப்பு மாணவர் சேர்க்கைக்காக எஸ்.ஏ.டி SAT என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகள் இந்தத் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களை சேர்க்கின்றன. முதுநிலை படிக்கச் செல்லும் மாணவர்கள் ஜி.ஆர்.இ தேர்வை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். நியூசிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 110 நாடுகளில் மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் ேசர ஜி.எம்.ஏ.டி GMAT தேர்வை எழுத வேண்டும். இந்தத் தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.

    எவ்வளவு செலவாகும்?

    அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளின் வாழ்க்கை தரம் மிக செலவு நிறைந்தது. அதனால் அங்கு படிக்க அதிக செலவாகலாம். ஆஸ்திரேலியா, கனடா நாடுகளில் செலவு அதிகமாகவும் இருக்காது. குறைவாகவும் இருக்காது. ஆனால் சிங்கப்பூர், சீனா, ஜப்பான், கொரியா, ஹாங்காங் போன்ற நாடுகளில், படிக்க குறைந்த தொகையே செலவாகும்.

    படிப்பு செலவு குறித்து சிந்திக்கும்போது, நீங்கள் தேர்ந்தெடுக்க இருக்கும் பல்கலைக்கழகத்தின் உலக தரவரிசை பட்டியலையும் கவனத்தில் கொள்ளுங்கள். அமெரிக்காவில் அதிக செலவு செய்து படிப்பதில் தவறில்லை. ஆனால் நீங்கள் சேர்ந்து படிக்கும் அமெரிக்க பல்கலைக்கழகம் உலக தர வரிசைப்பட்டியலில் டாப்-50 இடங்களை பிடிக்கவில்லை என்றால், பெரிய தொகையை செல வழித்து படிப்பதில் எந்த பலனும் இல்லை. அதனால் செலவு குறைந்த நாட்டில் இருக்கும் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுத்து படிப்பது சிறந்தது.

    நாடுகளுக்கு ஏற்ப விசா மாறுபடுமா? விசா பெறுவதில் சிக்கல் இருக்குமா?

    ஆம்...! நீங்கள் நேரடியாக பல்கலைக்கழகங்களை தொடர்பு கொண்டு விண்ணப்பிப்பதற்கும், ஏஜெண்ட் மூலமாக விண்ணப்பிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. குறிப்பிட்ட பல்கலைக்கழ பேராசிரியர்களின் வழிகாட்டுதலில் கல்லூரியில் சேரும்போது, எல்லாவிதமான வசதிகளும், தேவைகளும் பூர்த்தி செய்து கொடுக்கப்படும். அதாவது, கட்டண உதவி தொகை, வசிப்பிடம், உணவிற்கான செலவு போன்றவற்றோடு விசா விவகாரத்திலும் எச்சரிக்கையாக இருக்க முடியும். ஆனால் தனியார் அமைப்புகளை நம்பி படிக்க செல்லும்போது, எல்லா விஷயத்திலும் ஒன்றுக்கு, 10 முறை நாம் கவனமாக இருக்க வேண்டும். ஒன்றுக்கு, 10 முறை சோதித்து பார்க்க வேண்டும்.

    வெளிநாட்டு படிப்பு, வேலைவாய்ப்பில் இன/ நிறவெறி பாகுபாடுகளை சந்திக்க நேரிடுமா? இத்தகை பிரச்சினைகள் குறைந்த நாடு எது?

    பல்கலைக்கழக வளாகங்களில் பெரும்பாலும் இன-மத-நிற வெறி பார்ப்பதில்லை. ஆனால் வெளியிடங்களிலும் அத்தகைய பாதுகாப்பான சூழல் இருக்கும் என உத்திரவாதம் கொடுக்க முடியாது.

    வேலை பார்த்துக்கொண்டே படிக்க ஏதுவான நாடு எது? ஏன்?

    பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் வேலைபார்த்து கொண்டே படிக்கலாம். ஆனால் அதற்கு அந்தந்த நாட்டு மொழிகளில் புலமை பெற்றிருக்க வேண்டும். பெரும்பாலான நாடுகளில் படிப்பு முடிந்ததும் அங்கேயே தங்கி வேலை தேட 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை பி.எஸ்.டபிள்யூ PSW விசா கிடைக்கிறது.

    பேராசிரியர் ஆரோக்கிய ராஜ்
    குழந்தையின் நடத்தை நமக்கு மகிழ்ச்சியை தராத போதும் அந்நடத்தைகளை வெளிக்காண்பிக்கக்கூடாது என குழந்தைகளை கண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
    குழந்தைகளின் நடத்தைகளில் தவறான, கெட்ட நடத்தை எவை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஓர் குழந்தை தனக்கு பிடித்தமான ஒன்றை கேட்டு பிடிவாதம் பிடித்துக் கொண்டே இருப்பது, படிக்காமல் எப்போதும் விளையாடிக்கொண்டே இருப்பது, ஐஸ்கிரீமும் சாக்லேட்டும் அதிகமாக உண்பது ஆகியவையெல்லாம் கெட்ட நடத்தைகள் அல்ல. இவையெல்லாம் குழந்தைகளுக்கு பிடித்தவை. அதனால் அவைகளை குழந்தைகள் அதிகமாக செல்கின்றன. இவற்றைக் குறைக்க குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டுமே தவிர கண்டிப்பு தேவையில்லை.

    பிறர் பொருளை திருடி வைத்துக் கொள்வது, பிற குழந்தைகளை அடிப்பது, கெட்ட வார்த்தைகள் பேசுவது போன்றவைகள் கெட்ட நடத்தைகளின் வகையில் அடங்கும். இக்கெட்ட நடத்தைகளை குழந்தை எங்கேயிருந்து பழகிக் கொண்டது? பெற்றோர்கள், குழந்தை வளரும் சூழ்நிலையில் உள்ள மற்றவர்களிடமிருந்தே குழந்தை இந்நடத்தைகளை கற்றுக் கொள்கிறது. இவைகளை கண்டித்து திருத்த வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு உண்டு.

    நடத்தைகளை குறைக்க உளவியல் இரண்டு விஷயங்கள் உண்டு. முதலாவது நடத்தைக்குறைப்பிகள் (Negative Reinforcement) இரண்டாவது தண்டனை, முகத்தை சுழிப்பது, பிடிக்கவில்லை என்பதைக் காட்டும் முகபாவனை, திட்டுதல், விலகிச் செல்லுதல், எந்த எதிர்வினையும் புரியாமல் இருத்தல், உன் நடத்தை எனக்கு பிடிக்க வில்லை என நேரிடையாகக் கூறுதல் ஆகியவை நடத்தை குறைப்பிகள் ஆகும். அடித்தல், கிள்ளுதல், தள்ளி விடுதல், சூடு வைத்தல் போன்றவை தண்டனை வகையில் அடங்கும்.

    நடத்தை குறைப்பிகளை பயன்படுத்தும் போது குழந்தைகளுக்கு உடல்ரீதியான தீங்கு ஏதும் ஏற்படாது. ஆனால் தண்டனையைப் பயன்படுத்தும் போது குழந்தைகளுக்கு வலி போன்ற உடல் தீங்குகள் ஏற்படும். மேலும் இதுவரை நடத்தப்பட்டுள்ள உளவியல் ஆய்வுகள் அனைத்துமெ தண்டனையைப் பயன்படுத்துவதால் எந்த பயனும் இல்லை, அதனால் கெட்ட நடத்தைகள் குறைவதே இல்லை என்றே கூறுகின்றன.

    குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் இவ்வாய்வு முடிவுகள் பொருந்தும். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற ரீதியில் தண்டனையளிக்கும் நாடுகளில் கூட குற்ற எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக்கொண்டேதான் போகிறதே தவிர குறைவதில்லை. குழந்தைகள் படிக்கவில்லை என்ற காரணத்திற்காக அடித்தல், சூடுபோடுதல் போன்ற தண்டனைகளை அளிப்பது நம் கலாச்சாரத்தில் சாதாரணாமாக நடப்பது. படிப்பது போன்ற திறமைகளை கற்றுக் கொள்ளும் விஷயத்தில் தண்டனை எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். அடிவாங்கிய குழந்தைக்கு பாடத்தின் மீது வெறுப்பு ஏற்படுமே தவிர, அதனை விரைவில் சரியாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படாது.

    தண்டனை கொடுக்கக்கூடாது என்ற நிலையில் எதிர்மறை நடத்தைகளை குறைக்க நடத்தைக் குறைப்புகளே சிறந்த வழி. அத்தகைய நடத்தை குறைப்புகளில் பாராட்டாமல் விடுதல், வாய் திறந்து நேரிடையாக நீ செய்வது தவறு என கூறுவது ஆகிய இரண்டும்தான் உளவியல் நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. இவ்விரண்டுமே மிகச் சிறந்த முறையில் கெட்ட நடத்தைகளை குறைக்கின்றன என்பது உளவியல் ஆய்வு முடிவு எதிர்மறை நடத்தைகளை மேற்கொள்ள நடத்தைக் குறைப்பிகளைக் கொண்டு குறைக்க முயற்சி செய்யும் அதே சமயத்தில் கெட்ட நடத்தைகளின் விளைவுகளை சரியான அறிவுரையாக, விபரமாக குழந்தைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். பெரியவர்கள் சொல்வதை மிகச் சரியாக புரிந்து கொள்ளும் திறன் குழந்தைகளுக்கு உண்டு.

    அதே சமயத்தில் குழந்தையின் நல்ல நடத்தைகளை பரிசு, பாராட்டு, அன்பு, அரவனைப்பு, ஆகிய வலிமையூட்டிகளை பயன்படுத்தி ஊக்குவிக்க வேண்டும். தொடர்ந்து அவ்வாறு ஊக்குவித்துக்கொண்டே வந்தால், நல்ல நடத்தைகள் அதிகமாகி கெட்ட நடத்தைகளுக்கு நேரமில்லாது அவை தானாகவே குறைந்து விடும்.
    பிள்ளைகள் ஏதாவது பிரச்சினையில் சிக்கி மன வேதனையில் இருந்தால், அதில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளை பெற்றோர் மேற்கொள்ளவேண்டும்.
    இந்தியாவில் 4 இளைஞர்களில் ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. குறிப்பாக 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களிடம் தற்கொலை எண்ணம் அதிகரித்து வருகிறது. அவர்களை மனஅழுத்தத்தில் இருந்து மீட்கும் மிகப்பெரிய பொறுப்பு அவர்களது குடும்பத்தினருக்கும், சமூகத்திற்கும் இருக்கிறது.

    * பிள்ளைகள் ஏதாவது பிரச்சினையில் சிக்கி மன வேதனையில் இருந்தால், அதில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளை பெற்றோர் மேற்கொள்ளவேண்டும். அவர்கள் தவறே செய்திருந்தாலும் அந்த சமயத்தில் அது பற்றி விவாதிப்பதை தவிர்க்க வேண்டும். பிரச்சினையின் மூல காரணம் என்ன என்பதை கண்டறிந்து அதனை சமாளிப்பதற்கான வழிமுறைகளை எடுத்துக்கூற வேண்டும். அவர்களுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுத்து பிரச்சினைக்கு தீர்வு காண முயல வேண்டும். பெற்றோரின் ஆதரவும், ஆறுதலும் அவர்களுக்கு மன வலிமையை கொடுக்கும். பிரச்சினையில் இருந்து மீண்டு வந்த பிறகு அவர்கள் செய்த தவறுகளை பொறுமையாக சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்த வேண்டும். இது பெற்றோரின் கடமையாகும்.

    * வளரிளம் பருவத்திலேயே எதிர்காலம் பற்றிய திட்டமிடலுக்கு அவர்களை ஊக்குவிக்க வேண்டும். குறுகிய கால இலக்குகளை நிர்ணயித்து அதை அடைவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்தவைக்க வேண்டும். அது கவன சிதறலுக்கு இடம் கொடுக்காது. தேவையற்ற மன அழுத்தத்திற்கும் ஆளாகமாட்டார்கள். இலக்குகளை அடைவதற்கான முயற்சியில் தோல்வியை எதிர்கொண்டால், பெற்றோர் பக்கபலமாக இருந்து தன்னம்பிக்கையூட்ட வேண்டும். அது மன அழுத்தத்தை போக்க உதவும்.

    * மனரீதியாக மட்டுமின்றி உடல்ரீதியாகவும் பிள்ளைகளை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கவேண்டும். ஓய்வு நேரங்களை பிள்ளைகள் பயனுள்ள வழியில் செலவிடுவதற்கு பெற்றோர் வழிகாட்டியாக விளங்க வேண்டும். புத்தக வாசிப்பு, நடைப்பயிற்சி, வீட்டு வேலை, குடும்ப பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுதல் போன்றவற்றை அன்றாட பழக்கவழக்கங்களாக பின்பற்றவையுங்கள். அது அவர்களிடம் நேர்மறையான சிந்தனையை உருவாக்கும்.

    * பெற்றோர் தங்கள் கருத்துகளை பிள்ளைகளிடம் திணிப்பதற்கு முயற்சிக்கக்கூடாது. அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும். எதிர்காலம் பற்றிய முடிவுகளை எடுக்கும்போது மன குழப்பத்தில் இருந்தால் அதனை கவனித்து, தீர்வு காண முயல வேண்டும். சரியான வாழ்க்கை பாதையை தேர்ந்தெடுக்க உதவ வேண்டும்.

    * பெற்றோர் பிள்ளைகளுடன் நட்புறவோடு பழக வேண்டும். தக்க சமயத்தில் தங்களின் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். அவை அவர்களை விழிப்புடன் செயல்பட வைக்கும். அவர்களிடையே நிலவும் மன குழப்பங்களுக்கும் தீர்வு காண உதவும்.

    * பெற்றோர் தாங்கள் கடந்து வந்த டீன் ஏஜ் பருவ வாழ்க்கையை பிள்ளைகளிடம் ஒப்பிட்டு பேசக்கூடாது. அந்த காலகட்டத்தில் தாங்கள் சந்தித்த கஷ்டங்களை கூறலாம். ஆலோசனை வழங்கலாமே தவிர அதனை பின்பற்றுமாறு நிர்பந்திக்கக்கூடாது. நிறை, குறைகளை சீர் தூக்கி பார்த்து செயல்படும் மன பக்குவம் கொண்டவர்களாக பிள்ளைகளை வளர்த்தாலே போதுமானது.

    * பிள்ளைகள் கோபமாக இருக்கும்போது பெற்றோர் கடுமையான வார்த்தைகளை பேசக்கூடாது. அவர்களை நண்பர்களை போல் வழி நடத்த வேண்டும். மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு பேசுவதையும் தவிர்க்க வேண்டும்.

    * பெரும்பாலானவர்களுக்கு மன பாதிப்பு வளரிளம் பருவத்தில் ஏற்பட தொடங்குகிறது. 25 வயதிற்கு முன்பே 75 சதவீதம் பேருக்கு மன நோய்கள் தோன்றுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதனை கருத்தில் கொண்டு இளம் பருவத்தை பிள்ளைகள் மகிழ்ச்சியோடு கழிக்க, பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும்.
    குழந்தைகள் எப்போதாவது வாய் வழியாக சுவாசித்தால் பிரச்சினை இல்லை. ஆனால் அடிக்கடி அவ்வாறு செய்தால் அலட்சியமாக இருக்கக்கூடாது. மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
    குழந்தைகள் சில சமயங்களில் வாயை திறந்த நிலையில் வைத்தபடி தூங்கிக்கொண்டிருப்பார்கள். அப்போது சுவாசம் மூக்கு வழியாக உள்ளிழுக்கப்பட்டு வெளியாகுவதற்கு பதிலாக வாய் வழியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும். அப்படி தூங்குவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. சுவாச பாதையில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டிருந்தால் மூக்கு வழியாக சுவாசிப்பதற்கு சிரமப்படுவார்கள். அதனால் வாய் வழியாக மூச்சுவிடலாம். சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கும்போது சுவாசப் பாதை அடைப்பட்டு விடுகிறது.

    அப்போது சுவாசிக்க வாயை உபயோகிப்பார்கள். குழந்தைகளின் சுவாசப்பாதையில் நாசிப் பகுதியை பிரிக்கும் குருத்து எலும்புகள் வலுவில்லாமல் இருந்தாலும் வாய் வழி சுவாசம் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மூக்கின் வழியாக சுவாசிப்பதுதான் நல்லது. ஏனெனில் மூக்கின் வழியாக உள்ளிழுக்கப்படும் காற்றில் படிந்திருக்கும் தூசுகளை நாசிப் பகுதி நீக்கி சுத்தம் செய்தே உள்ளே அனுப்பும்.

    ஆனால் வாய் வழியாக சுவாசிக்கும்போது தூசுக்கள், அழுக்குகள், வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுக்கிருமிகள் நேரடியாக உள்ளிழுக்கப்பட்டுவிடும். அதனால் சுவாச பாதையில் தொற்றுகள் உருவாகக்கூடும். குழந்தைகள் எப்போதாவது வாய் வழியாக சுவாசித்தால் பிரச்சினை இல்லை. ஆனால் அடிக்கடி அவ்வாறு செய்தால் அலட்சியமாக இருக்கக்கூடாது. மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
    ×