என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    சருமத்தின் மேல் அடுக்கில் படர்ந்திருக்கும் இறந்த செல்கள் இயற்கையாகவே உதிர்ந்துவிடும். குறிப்பிட்ட நாட்களுக்குள் இறந்த செல்களுக்கு பதிலாக புதிய செல்கள் உற்பத்தியாகிவிடும்.
    சரும அழகை மேம்படுத்த மேக்கப் செய்கிறவர்கள், பொதுவான சில தவறுகளை தொடர்ந்து செய்கிறார்கள். அது காலப்போக்கில் அவர்களது சருமத்தை பாதித்து, முதிய தோற்றத்தை உருவாக்கிவிடும். அத்தகைய தவறுகள் என்னென்ன தெரியுமா?

    சருமத்தின் மேல் அடுக்கில் படர்ந்திருக்கும் இறந்த செல்கள் இயற்கையாகவே உதிர்ந்துவிடும். குறிப்பிட்ட நாட்களுக்குள் இறந்த செல்களுக்கு பதிலாக புதிய செல்கள் உற்பத்தியாகிவிடும். ஆனால் சில சமயங்களில் இறந்த செல்கள் முழுமையாக உதிர்வதில்லை.

    வயதாகும்போதுதான் இந்த பிரச்சினை அதிகரிக்கும். சிலர் இறந்த செல்களை நீக்குவதற்கான ‘எக்ஸோலியேட்டர்’ எனும் பிரத்யேக பொருளை கொண்டு சருமத்தை புதுப்பிப்பார்கள். ஆனால் இந்த நடைமுறையை அடிக்கடி பின்பற்றும்போது சருமத்தில் இயற்கையாகவே உருவாகும் எண்ணெய்த்தன்மை குறைந்து, வெளிப்புற செல் அடுக்குகளும் சேதமடையும். வறண்ட சருமம் கொண்டிருப்பவர்கள் அடிக்கடி ‘எக்ஸோலியேட்டர்’ செய்யக்கூடாது.

    முகம் கழுவுதல்

    இரவில் தூங்க செல்வதற்கு முன்பு முகத்தை நன்றாக கழுவவேண்டும். குறிப்பாக மேக்கப் போட்டிருந்தால் முகம் கழுவுவது அவசியமானது. இல்லாவிட்டால் சரும துளைகள், எண்ணெய் சுரப்பிகள் அடைபட்டு தோல் பிரச்சினைகள் உண்டாகும். இரவில் முகம் கழுவுவதால் இறந்த செல்கள் நீங்கி, சருமம் புத்துணர்ச்சி பெறும்.

    சன்ஸ்கிரீன்:

    பெரும்பாலானோர் செய்யும் மற்றொரு முக்கியமான தவறு சன்ஸ்கிரீன் பயன்படுத்தாததுதான். முதுமையின் அறிகுறிகளை குறைப்பதற்கும், புற ஊதாக்கதிர்வீச்சில் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கும் சன்ஸ்கிரீன் அவசியமானது. இது சருமத்திற்கு பாதுகாப்பு அடுக்காக செயல்படக்கூடியது. முன்கூட்டியே வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கக்கூடியது. சரும புற்றுநோய் ஆபத்தையும் குறைக்கக்கூடியது. வெளியே செல்லும்போது மட்டுமல்ல, வீட்டில் இருக்கும்போதும் சிறிதளவு சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.

    ஒப்பனை பிரஷ்கள்:

    ஒப்பனைக்கு பயன்படுத்தும் பிரஷ்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதில் காண்பிக்கும் ஆர்வத்தை, அதற்காக பயன்படுத்தும் பிரஷ்கள் மீதும் காட்டவேண்டும். அழுக்கடைந்த, சுத்தம் செய்யப்படாத பிரஷ்களை பயன்படுத்துவது சரும அடுக்கை சேதப்படுத்தி விடும். முகப்பருக்கள் தோன்றுவதற்கு வழிவகுக்கும். சருமத்தில் அழுக்கு, இறந்த செல்கள் படிவதற்கும் காரணமாகிவிடும்.

    பருக்கள்:

    முகத்தில் பருக்கள் தோன்றினால் அதனை நகத்தை கொண்டு கிள்ளக்கூடாது. அது சரும துளைகளுக்குள் ஆழமாக ஊடுருவி மேலும் பருக்கள் தோன்ற வழிவகுத்துவிடும். முகப்பருக்கள் தோன் றினால் விரைவாக முகப்பருக்களை குணமாக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவை சரியாகும் வரை பொறுமைகாக்கவும் வேண்டும்.

    அதிக பயன்பாடு:

    சருமத்திற்கான அழகு சாதன பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவது தவறானது. சருமத்தின் தன்மையை பொறுத்து பயன்படுத்தும் அளவை தீர்மானிக்க வேண்டும். சருமத்தில் வெடிப்புகள் ஏற்பட்டிருந்தால் சரும தயாரிப்பு பொருட்களை கவனமாக கையாள வேண்டும். சரும மருத்துவ நிபுணரை கலந்தாலோசித்து சரும பொருட்களை தேர்வு செய்வது நல்லது.

    வெந்நீர் குளியல்:

    வெந்நீரில் குளிப்பதை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் சருமத்தில் படர்ந்திருக்கும் ஈரப்பதத்தையும், இயற்கை எண்ணெய் சுரப்பிகளையும் சேதப்படுத்திவிடும். சுடுநீரை விட தண்ணீர்தான் குளியலுக்கு உகந்தது.

    கிரீம்கள்:

    இரவில் தூங்கும்போது, இரவு நேர கிரீம்களை உபயோகிப்பது முகத்தை புத்துணர்ச்சியாகவும், பிரகாசமாகவும் வைத்திருக்க உதவும். ‘நைட் கிரீம்கள்’ சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும். கண்களின் அடிப்பகுதியிலும் கிரீம் தடவிவிட்டு தூங்க செல்லலாம். அவை கண்களை சுற்றியுள்ள மென்மையான சருமத்திற்குள் ஆழமாக ஊடுருவி முதுமைக்கான அறிகுறிகளை குறைக்கும்.
    சாதாரண கட்டிகளில் கொழுப்பு கட்டி, நார் கட்டி, நீர் கட்டி, திசு கட்டி என பல விதம் உண்டு. கட்டி எந்த வகை என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
    உடலில் வளரும் கட்டிகளில் புற்றுநோய் கட்டிகள், சாதாரண கட்டிகள் என 2 வகைகள் உண்டு. சாதாரணக் கட்டிகள் பொதுவாக எப்போதும் வலிப்பதில்லை. புற்றுநோய் கட்டிகள் ஆரம்பத்தில் வலி இல்லாமல் இருக்கும். பின்னர், திடீரென்று வலிக்க ஆரம்பிக்கும். அப்போது கட்டியின் நிறம் மாறுவது, அளவு கூடுவது, உடல் எடை குறைவது போன்ற துணை அறிகுறிகளையும் ஏற்படுத்துவது உண்டு. சாதாரண கட்டிகளில் கொழுப்பு கட்டி, நார் கட்டி, நீர் கட்டி, திசு கட்டி என பல விதம் உண்டு. கட்டி எந்த வகை என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

    கொழுப்பு கட்டி பொதுவாக தோலுக்கும், தசைக்கும் இடையில் வளரும். மிக மிக மெதுவாகவே வளரும். மென்மையாகவும் உருண்டையாகவும் இருக்கும். கையால் தொட்டால் நகர கூடியதாகவும் இருக்கும். அதிகமாக அழுத்தினாலும் வலி இருக்காது. உடலில் எங்கு வேண்டுமானாலும் கொழுப்புக் கட்டிகள் தோன்றலாம். எனினும் கழுத்து, முதுகு, வயிறு, தொடைகள், கைகள், தோள்கள் ஆகிய இடங்களில் இவை ஏற்படுவதற்கு சாத்தியம் அதிகம். ஒருவருக்கு ஒரு கட்டி மட்டும் வளரலாம். சில சமயத்தில் பல கட்டிகளும் வளரலாம்.

    கொழுப்பு கட்டி வளர்வதற்கான சரியான, தெளிவான காரணம் இன்றுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. என்றாலும் பரம்பரை தன்மை, அதிக கொழுப்பு உணவுகளை சாப்பிடுவது, உடல் பருமன், நீரிழிவு, மது அருந்துதல் போன்றவை இக்கட்டிகள் உருவாவதை தூண்டுகின்றன என்பது மட்டும் அறியப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் நடுத்தர வயதினரையும், ஆண்களையும் அதிக அளவில் பாதிக்கிறது. கொழுப்புக் கட்டிகள் சாதாரண கட்டிகளே. இவை புற்றுநோய் கட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. கட்டி வந்ததும் அதை குடும்ப மருத்துவரிடம் ஒரு முறை காண்பித்து, அது கொழுப்பு கட்டிதான் என்பதை உறுதி செய்துகொண்டு, அதை அப்படியே விட்டுவிடலாம். அகற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கு வேறு சிகிச்சைகளும் தேவையில்லை.

    கட்டி உள்ள பகுதியில் வலி ஏற்படுகிறது, கட்டியின் வளர்ச்சி அதிகரிக்கிறது, துர்நாற்றம் வீசுகிறது, தோற்றத்தை கெடுக்கிறது என்றால் மட்டும் அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடலாம். இந்த கட்டியை ஒருமுறை அகற்றிவிட்டால், அந்த இடத்தில் மறுபடியும் அது வளராது. சிலருக்கு மறுபடியும் இந்த வகை கட்டி வேறு இடத்தில் வளரலாம். அது அவரவர் உடல் வாகை பொறுத்தது.

    கட்டி திடீரென வேகமாக வளர்கிறது, அதன் வடிவம் மாறுகிறது, வலிக்கிறது, கட்டியின் மேல் பகுதி சருமத்தின் நிறம் மாறுகிறது, கட்டி உடலுக்குள் ஊடுருவிச் செல்கிறது என்பது போன்ற அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அது புற்றுநோய் கட்டியா, இல்லையா என்பதை பரிசோதனை செய்து அதற்கேற்ப சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
    ரசம் சாதத்துடனும், சூடான சாதத்துடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் இந்த பருப்பு துவையல். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, தேங்காய் துருவல் - தலா 4 டேபிள்ஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப),
    பூண்டு - 2 பல்,
    புளி - கோலி அளவு,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    வெறும் வாணலியை சூடாக்கி... அதில் கடலைப்பருப்பு, துவரம்பருப்பை போட்டு சிவக்க வறுக்கவும்.

    அடுத்து வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி, பூண்டு ஆகியவற்றை வறுத்து ஆற வைக்கவும்.

    வைத்தும் ஆறியவுடன் மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.

    ரசம் சாதத்துக்கு இந்த பருப்பு துவையல் சரியான ஜோடி.
    இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் தவிர்க்க முடியாதது என்பதால் செல்போன், கணினிகளை மாணவ-மாணவிகள் அதிகம் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
    கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து மாணவர்களின்கல்விபாதிக்காத வகையில் அவர்களுக்குஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்கள் வீடு தான் வகுப்பு என்றாகிவிட்டது.. அதனால் மாணவர்கள் பாடங்களை முறையாக பின்பற்றுகிறார்களா? என்பதை பெற்றோர்கள் தான் கவனிக்க வேண்டும். மேலும் ஆன்லைன்  கல்வி பயிலும் மாணவர்களுக்கு, பாதுகாப்பான மற்றும் நேர்மறையான சூழலை உருவாக்குவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    இது தவிர மாணவர்களை அவர்களது வயது வாரியாக கண்காணித்து, அவர்களின் தேவைகளை அறிந்து வழிநடத்த வேண்டியது பெற்றோர்களின் கடமை என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் தவிர்க்க முடியாதது என்பதால் செல்போன், கணினிகளை மாணவ-மாணவிகள் அதிகம் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கல்வியும் அவசியம், அதேநேரத்தில் கண்களின் பாதுகாப்பும் அவசியம் என்பதை உணர்ந்து மாணவ-மாணவிகள் தங்களின் ஆன்லைன் வகுப்பு முடிந்ததும் செல்போன், கணினியிடம் இருந்து சிறிது நேரம் விலகி இருக்கவேண்டும்.
    கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் சூழலில் தான் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களின் அறிமுகம் மற்றும் நட்பு அவசியம் என்பதை பலரும் உணர்ந்துள்ளனர்.
    நவீன கால அடுக்குமாடி குடியிருப்பு கலாசாரத்தில் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுடன் நட்பு பாராட்டும் மனநிலை பலருக்கும் இருப்பதில்லை. உறவினர்கள், நண்பர்கள் யாரையும் நேரடியாக சந்திக்க இயலாத சூழல் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்டது. வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் சூழலில் தான் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களின் அறிமுகம் மற்றும் நட்பு அவசியம் என்பதை பலரும் உணர்ந்துள்ளனர். இருப்பினும் மற்றவர்களுடன் வெளிப்படையாக பழகுவதில் சிலருக்கு ஒருவித தயக்கம் இருக்கக்கூடும். அதை அகற்றி நட்பை வளர்ப்பதற்கான சில வழிகளை இங்கே காணலாம்.

    அறிமுகம் செய்து கொள்ளுங்கள்

    யாருடன் பழகுவதாக இருந்தாலும் பரஸ்பர அறிமுகம் தேவை, அதனால் மற்றவர்கள் தாமாக முன்வந்து பேச வேண்டும் என்று நினைக்காமல் நீங்களாகவே அறிமுகம் செய்து கொள்ளுங்கள். தனிப்பட்ட நபராக அறிமுகமாவதை விட குடும்பமாக அறிமுகம் செய்து கொள்வதும்தான் சிறப்பான வழி உங்களை பற்றிய தகவல்களையும் பரிமாறிகொள்ளலாம். அவர்களை சந்திக்கும் சமயங்களில் புன்னகையுடன் வணக்கம் தெரிவிப்பதோடு நலம் விசாரிப்பதும் அவசியம்.

    உதவிகளை அளியுங்கள்

    ஊரடங்கு காலத்தில் காய்கறிகன் மற்றும் மளிகை பொருட்களை குறிப்பிட்ட சமயத்தில் மட்டுமே சென்று வாங்க வேண்டிய சூழல் ஏற்ப்பட்டுள்ளது. அவ்வாறு பொருட்களை வாங்க வெளியில் செல்லும் சமயங்களில் அருகில் வசிப்பவர்களின் தேவை பற்றி அறிந்து பொருட்களை வாங்கி கொடுக்கலாம். மற்ற உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால் தக்க விதத்தில் அவற்றை செய்வதன் மூலமாகவும் நல்ல நட்புணர்வு உருவாகும்.

    விழாக்கால நிகழ்ச்சிகள்

    நமது கலாசாரத்தில் அடிக்கடி திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அருகில் வசிப்பவர்களிடம் நட்பு கொள்ள ஏற்ற வழியாக திருவிழாக்கள் அமைகின்றன. அனைவருக்கும் பொதுவான பண்டிகைகள் அல்லது முக்கியமான விழாக்களை அந்த பகுதியில் குடியிருப்போருடன் ஒன்றிணைந்து கொண்டாடலாம். அதில் போட்டி கலந்துரையாடல், நாடகம் என்று தனித்திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தி பரிசுகளையும் அளிக்கலாம். அதன் மூலம் பரஸ்பர அன்பும், நட்பும் உருவாகுவதுடன் மற்றவர்களை புரிந்து கொள்ளும் வாய்ப்பும் ஏற்படும்.

    ஆதரவாக செயல்படுங்கள்

    அருகில் வசிப்பர்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்படும் போது அவர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். அவர்களது மனஇறுக்கம் மற்றும் தடுமாற்றம் அகலும் வகையில் கனிவாக பேசலாம். உங்களால் முடிந்த உதவிகளை செய்வதன் மூலமாகவும், நட்பை வலுப்படுத்திக்கொள்ளலாம்.

    தொடக்கத்திலேயே தொல்லையை தவிருங்கள்

    பக்கத்து வீட்டினருடன் இனிமையாக பேசிப்பழகும் சூழலிலும் பிராணிகள் வளர்ப்பு, செடி வளர்ப்பு உள்ளிட்ட விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏறப்படக்கூடும். அவற்றை ஆரம்பத்திலேயே கவனித்து அவர்களுடன் வெளிப்படையாக பேசி இரு தரப்புக்கு ஏற்ற வழிமுறைகளை கடைப்பிடிக்க ஆவண செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நல்ல நட்பை இழந்து விடக்கூடிய நிலை உருவாகி விடலாம்.

    சொல்வதை கவனியுங்கள்

    நட்பை நல்ல நிலையில் தொடர மனம் விட்டு பேசுவது முக்கியம். அதனால் மற்றவர்கள் பேசும் போது கவனமாக கேளுங்கள். அது சலிப்பை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அதில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் கவனித்து கேட்கும் வழக்கத்தை கடைப்பிடிக்கலாம்.

    பரிசளியுங்கள்

    பண்டிகை மற்றும் விஷேச நாட்களிலும் நண்பர்கள் வீட்டில் நடைபெறும் விழாவிலும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் மனம் கவரும் பரிசுகளையும் வழங்குங்கள். அன்புடன் பரிசுகளை அளிப்பதும் பெறுவதும் உறவுகளை வலுப்படுத்த உதவும். அதன் மூலம் உங்கள் மீது மற்றவர்கள் கொண்டுள்ள மதிப்பும் அன்பும் அதிகரிக்கும்.

    அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) இரட்டை முக கவசம் அணிவது கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்புவதற்கான சிறந்த வழி என்று அறிவித்துள்ளது.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்திருப்பதையடுத்து முகக்கவசம் அணியும் விஷயத்தில் பலரும் அலட்சியம் காட்ட தொடங்கி இருக்கிறார்கள். சில நகரங்களில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் வரை முகக்கவசம் தான் பாதுகாப்பு கவசமாக உபயோகத்தில் இருந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில் அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) இரட்டை முகக்கவசம் அணிவது கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்புவதற்கான சிறந்த வழி என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக நடந்த ஆய்வில் இரண்டு விதமான வழிமுறைகளை கையாண்டிருக்கிறார்கள்.

    முதலில் ஆறு அடி இடைவெளியில் நுகரப்படும் வைரஸ்களை சோதனைக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். ஒரு முகக்கவசம் அணிந்திருந்தால், பரவும் வைரஸ் துகள்களில் 40 சதவீதம் தடுக்கப்பட்டிருக்கிறது. அதுவே இரண்டு முகக்கவசம் அணிந்திருந்தபோது 80 சதவீத துகள்கள் தடுக்கப்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சர்ஜிக்கல் முகக்கவசத்தை முதலில் அணிந்துவிட்டு அதன் மீது துணியிலான முகக்கவசம் அணிவது சிறப்பானது என்றும் பரிந்துரைக்கிறார்கள். சாதாரண முகக்கவசங்களைவிட அதிக அடுக்குகள் கொண்ட முகக்கவசங்கள் அணிவது கிருமிகள் ஊடுருவலை தடுக்க உதவும். நொய்த்தொற்றுவில் இருந்தும் பாதுகாக்கும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

    இரட்டை முகக்கவசம் அணிவதற்கு சிரமமாக இருந்தாலும் அதன் மூலம் நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், அத்தியாவசிய பணியாளர்கள் என தினமும் பலருடன் தொடர்பில் இருப்பவர்கள் முகக்கவசம் அணியும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தாங்கள் அணியும் முகக்கவசத்தின் தரம், வைரஸ்கள், கிருமிகளை கட்டுப்படுத்தும் தன்மை பற்றி உறுதியாக தெரியவில்லை என்றால் இரட்டை முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது. ஒரு முறை பயன்படுத்திவிட்டு குப்பையில் வீசப்படும் முகக்கவசங்களையே ஒன்றன் மீது மற்றொன்றாக சேர்த்து அணியக்கூடாது. சர்ஜிக்கல் முகக்கவசம் மீது துணியால் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் அணியலாம். அது வைரஸ்கள் உள் நுழையும் இடைவெளியை குறைக்கும். பாதுகாப்பான உணர்வையும் கொடுக்கும்.

    எல்லா நேரமும் இரண்டு முகக்கவசம் அணிய வேண்டியதில்லை. பொது போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்கள், மோசமான காற்றோட்டம் உள்ள இடங்கள், கொரோனா வைரஸ் பரவல் உள்ள பகுதிகள், அதற்கான சிகிச்சை அளிக்கப்படும் இடங்கள் போன்ற பகுதிகளுக்கு செல்லும்போது இரட்டை முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது. ஒரு முககவசம் அணிந்தாலும், வைரஸ்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். ஆனால் மூக்கை முழுமையாக மூடாமல் இருப்பது, தளர்வான முகக்கவசங்களை அணிவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
    கொரோனா தடுப்பூசி பற்றிய சந்தேகங்களுக்கு சேலம் சண்முகா மருத்துவமனை டாக்டர் பிரியதர்ஷினி விளக்கம் அளித்துள்ளார். அதன் விவரத்தை பார்ப்போம்.
    கேள்வி: இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் எவை?

    பதில்: கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்பூட்னிக்-வி.

    கேள்வி: அங்கீகரிக்கப்பட்ட அனைத்து இந்திய தடுப்பூசிகளுக்கும் பரிந்துரைக்கப்பட்ட மருந்தளிக்கப்படும் இடைவெளி என்ன?

    பதில்: கோவிஷீல்டுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்தளிக்கப்பட வேண்டிய கால இடைவெளி 12 முதல் 16 வாரங்கள் ஆகும். கோவாக்சினுக்கு 4 வாரங்கள் ஆகும். இதேபோல் ஸ்பூட்னிக்-வி-க்கு 3 வாரங்கள் ஆகும். மேலும் இதில் 2 டோஸ்கள் போட வேண்டிய தடுப்பூசிகளும் ஒரே வகையாக தான் இருக்க வேண்டும். மாற்றி தடுப்பூசி செலுத்தக்கூடாது.

    கேள்வி: தடுப்பூசி போட்ட பின்னும் என் மூலம் நோய் மற்றவருக்கு பரவ வாய்ப்பு உள்ளதா?

    பதில்: தடுப்பூசி போடப்பட்ட பிறகும் நாம் இன்னும் வைரசின் செயலில் உள்ள நோய் கடத்தியாக இருக்க முடியும். இதன் பொருள் நம் உடலை தாக்கும் வைரசில் இருந்து பாதுகாக்கப்பட்டிருந்தாலும் நோய் எதிர்ப்பு இல்லாத பிற நபர்களுக்கு வைரசை தீவிரமாக பரப்புகிறோம். எனவே நோய் எதிர்ப்பு இல்லாத நபர்களின் கூட்டத்தில் இருக்கும் போது முக கவசம் அணிவது கட்டாயம் ஆகும்.

    கேள்வி: பெரிய எண்ணிக்கையிலான குழந்தைகளை பாதிக்கும் 3-வது அலை பற்றிய கணிப்புகள்?

    பதில்: முதல் அலையில் 4.5 சதவீத குழந்தைகளும், 2-வது அலையில் 5 முதல் 6 சதவீத குழந்தைகளும் பாதிக்கப்பட்டனர். இப்போது அதிகமாக 18 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டால், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அடுத்த அலையில் பாதிக்கப்படக்கூடிய குழுவாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இது சுமார் 25 சதவீதம் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் குழந்தைகளுக்கு நோயின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்று அர்த்தம் இல்லை. முந்தைய அலைகளின் புள்ளி விவரங்களில் இருந்து குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படாத நிலையில், வைரஸ் ஏற்பிகள் அவர்களுக்கு குறைவாக வளர்ச்சி அடைந்துள்ளதால், எதிர்கால அலைகளும் கடுமையான நோயை ஏற்படுத்தாது என்று நம்புகிறோம். இருப்பினும் இது விரைவாக மாறக்கூடிய வைரஸ் மற்றும் மிகவும் கணிக்க முடியாதது என்பதால் நாம் எச்சரிக்கையாகவும், தயாராகவும் இருக்க வேண்டும். நிலைமையை கையாள உள் கட்டமைப்புகளுடன் தயாராக இருப்பது நமக்கு நல்லது.

    கேள்வி: இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம் என்ன?

    பதில்: இந்தியாவில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனைகளை முடித்த தறபோதைய தடுப்பூசி எதுவும் இல்லை. எனவே 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட டாக்டர்களுக்கு அனுமதி இல்லை. கோவாக்சின் மற்றும் ஸ்பூட்னிக்-வி ஆகியவை தற்போது குழந்தைகளுக்கான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முடிவுகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

    வேறுபடும்

    கேள்வி: முதல் தடுப்பூசியும், 2-வது தடுப்பூசியும் ஒன்றா அல்லது வேறுபட்டவையா?

    பதில்: கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் போன்ற தடுப்பூசிகளுக்கு 2 தடுப்பூசிகளும் ஒன்று தான். ஆனால் ஸ்பூட்னிக்-வி போன்ற தடுப்பூசிகளுக்கு முதல் மற்றும் 2-வது தடுப்பூசிகள் சற்று வேறுபடும்.

    கேள்வி: உணவருந்திய பின் தடுப்பூசி போட வேண்டுமா? அல்லது வெறும் வயிற்றிலும் போட்டுக்கொள்ளலாமா?

    பதில்: தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கும் உணவு சாப்பிடுவதற்கும் நேரடியான தொடர்பு இல்லை. இருந்தாலும் சிறிது உணவு அருந்திய பின்னர் தடுப்பூசி போட்டுக்கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதை தவிர்க்கும். எனவே உணவுக்கு பின் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    உடல் பருமனால் பெருமளவு பெண்கள் அவதிப்படுகிறார்கள். அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், வீட்டு வைத்தியத்தினால் அதற்கு தீர்வு காணலாம். எப்படி தெரியுமா?
    உடல் பருமனால் பெருமளவு பெண்கள் அவதிப்படுகிறார்கள். உடலில் அதிக அளவு கொழுப்பு சேருவதே உடல் பருமனுக்கான காரணமாகும். அளவுக்கு அதிகமாக சாப்பிடுதல், உடல் உழைப்பு இல்லாமல் இருத்தல், இனிப்புகள் - ஐஸ் கிரீம் - குளிர்பானங்களை அதிக அளவில் உட்கொள்ளுதல், மதுப்பழக்கம் போன்றவை படிப்படியாக உடல் எடை அதிகரிக்க காரணமாக அமைகின்றன. தைராய்டு ஹார்மோன் சுரப்பு குறைவதும், அட்ரீனல் ஹார்மோன் சுரப்பது அதிகரிப்பதும் கூட உடலை பருமனாக்கும்.

    உடல் பருமனை கட்டுக்குள் கொண்டுவராவிட்டால் அது உடலை நோய்களின் கூடாரமாக்கிவிடும். குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், மனஅழுத்தம், மூட்டு நோய்கள், சர்க்கரை நோய் போன்றவை உருவாக காரணமாகிவிடும். பின்பு உடல் எடையை குறைப்பதும், அதனால் உருவான நோய்களை கட்டுக்குள் கொண்டு வருவதும் கடினமான காரியமாகிவிடும். அதனால் ஒவ்வொருவரும் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், வீட்டு வைத்தியத்தினால் அதற்கு தீர்வு காணலாம். எப்படி தெரியுமா?

    இஞ்சியில் ஜின்ஜெரால், ஜின்ஜிபெரின் போன்ற சக்தி தரும் பொருட்கள் இருக்கின்றன. அவை செரிமானத்திறனை அதிகரிப்பதோடு, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினை கரைக்கும் திறனையும் பெற்றிருக்கிறது. இஞ்சியை தோல் சீவி அரைத்து பிழிந்து, மூன்று தேக்கரண்டி அளவுக்கு சாறு எடுத்துக்கொள்ளுங்கள். அதே அளவில் தேனையும் எடுத்து, இரண்டையும் ஒரு கப் இளம்சூடான நீரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகினால் உடல் எடை குறைய வாய்ப்பிருக்கிறது.

    வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, கீழாநெல்லி, நெல்லிக்காய் போன்றவைகளை சம அளவில் எடுத்து இடித்து, 2 தேக்கரண்டி அளவு எடுக்கவும். அதனை இளம் சூடு நீரில் கலந்து பருகினால் உடலில் கொழுப்பு குறைவதோடு எடையும் கட்டுக்குள் வரும்.

    பெருஞ்சீரகத்தை பொடித்து அரை தேக்கரண்டி அளவில் நீரில் கலந்து காலையும், மாலையும் பருகிவந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

    ஒரு கப் நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை சம அளவில் கலந்து பருகுவதும் நல்லது. இவற்றில் வைட்டமின் சி சத்து நிறைந்திருக்கிறது. இது ரத்தத்தை சுத்திகரிப்பதோடு, கொழுப்பையும் குறைக்கிறது. உடல் எடையும் குறைய வாய்ப்பிருக்கிறது.

    உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் தக்காளி, முட்டைகோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, பிராகோலி, ஆப்பிள், ஓட்ஸ், பாதாம், வால்நட், மோர் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

    வெள்ளை ரொட்டி, பட்டைதீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், இனிப்பு வகைகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது அவசியம். உடல் பருமன் கொண்டவர்கள் தினமும் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் பருகுவது நல்லது. நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், யோகா, தியானம் போன்றவைகளை மேற்கொள்ளவேண்டும். இவைகளை பின்பற்றினால் உடல் எடை குறைய வாய்ப்பிருக்கிறது.
    கொழுப்பு கல்லீரல் நோயை சரிசெய்ய சில வாழ்க்கை முறை மாற்றங்களையே மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே நீங்கள் செய்யும் வாழ்க்கை முறை மாற்றங்கள் கல்லீரல் கொழுப்பு நோயை விரட்ட உதவி செய்யும்.
    தற்போது நிறைய பேருக்கு எந்த பிரச்சனைக்காக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்தாலும் கல்லீரல் கொழுப்பு நோய் கண்டறியப்படுகிறது.

    இந்த கல்லீரல் கொழுப்பு நோய் எதனால் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பு என்ன?, இதற்கு எந்த மாதிரியான சிகிச்சைகள் உள்ளது என்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இது குறித்து காவேரி மருத்துவமனையில் தலைமை நுரையீரல் மருத்துவராகவும், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணராகவும் உள்ள மருத்துவர் இளன்குமரன் கூறியதாவது

    கல்லீரல் கொழுப்பு நோய் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் நமது டயட் மற்றும் வாழ்க்கை முறையாகும். டயட் என்று எடுத்துக்கொண்டால் எண்ணெயில் பொரித்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், கார்போஹைட்ரேட் உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பழங்கள், காய்கறிகளை எடுத்து கொள்ள வேண்டும். கிரீன் டீ, பிளாக் காபி கல்லீரல் கொழுப்பை கட்டுப்படுத்த உதவும். இதனுடன் சேர்த்து உடற்பயிற்சியை கண்டிப்பாக செய்ய வேண்டும். ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்வது அதிக நன்மைகளை அளிக்கும். நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் பயிற்சி, ஜாக்கிங் போன்ற உடற்பயிற்சிகளை செய்யலாம்.

    இந்த உடற்பயிற்சிகள் கல்லீரல் கொழுப்பை மட்டுமல்ல உடலில் உள்ள கொழுப்பையும் கரைக்க உதவும்.

    இந்த நோயால் ஏற்படும் அபாயம் எதுவென்றால் ஆரம்பத்தில் இந்த நோய் எந்த அறிகுறியையும் காட்டாது. அதிகளவு கல்லீரலை பாதித்த பின்னரே இந்த நோய் தெரியவரும்.

    கல்லீரல் கொழுப்பு நோய் தெரிய வந்தவுடனேயே டயட் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களை செய்து கொள்வதன் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம்.

    முற்றிய நிலையில் (Advanced stage) கல்லீரல் நோயின் பாதிப்பை அறிந்தால் கல்லீரல் செயல் இழந்து விட்டது என்று அர்த்தம். அதை சரி செய்ய முடியாது.

    குணப்படுத்த கூடிய நிலையில் இருந்தால் டயட் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களை செய்து கொள்வதன் மூலம் கல்லீரல் கொழுப்பு நோயை குணப்படுத்தலாம்.

    இரத்த பரிசோதனை மூலம் இந்த நோயை ஆரம்பத்திலேயே அறிந்து அதற்கேற்ப மருந்துகளை எடுத்து கொள்வதன் மூலம் இந்த நோயை குணப்படுத்தலாம் என்றார்.
    சிறிது இஞ்சியை வாழைத்தண்டு சாற்றுடன் சேர்த்து குடித்துவர, வயிற்றில் உள்ள கொழுப்பு குறையும். இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமையும்.
    தேவையான பொருட்கள்:

    நார் நீக்கி, பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - அரை கப்
    சின்ன வெங்காயம் -  50 கிராம்
    கடுகு - அரை டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    தயிர் - ஒரு கப்
    பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
    சீரகம் - அரை டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாழைத்தண்டுடன் தண்ணீர் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், இஞ்சி தாளித்து, தயிருடன் கலக்கவும்.

    அதனுடன் வேகவைத்த வாழைத்தண்டு, உப்பு, வெங்காயம், கொத்தமல்லித்தழை விழுது சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

    சூப்பரான வாழைத்தண்டுப் பச்சடி ரெடி.
    மனதில் இருப்பதை வெளிப்படையாக காட்டுபவை கண்கள். பெண்மையின் அழகை மென்மையாக வெளிப்படுத்தும் கண் மை வகைகளை இந்த தொகுப்பில் காண்போம்.
    மற்றவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நமது பண்பாட்டில் எதிரில் உள்ளவர்களின் கண்களை பார்த்து பேசி பழகு என்று பெரியவர்கள் கூறுவார்கள். காரணம் கண்கள் இதயத்தின் வாசல் என்று சொல்லப்படுகின்றன. மனதில் இருப்பதை வெளிப்படையாக காட்டுபவை கண்கள். மவுனமாக அவை தெரிவிக்கும் அழகு மொழிக்கு அலங்காரமாக அமைவது கண்களுக்கு இடும் மை ஆகும். பெண்மையின் அழகை மென்மையாக வெளிப்படுத்தும் கண் மை வகைகளை இந்த தொகுப்பில் காண்போம்.

    கிளாசிகோ

    சமீப காலத்தில் பெண்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது இந்த கண் மை. வெஸ்டர்ன் மற்றும் செமி வெஷ்டர்ன் உடைகளுக்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.

    சிம்பிள்

    கண்கள் சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருந்தாலும் அணிந்துள்ள ஆடைகள் எவ்வகையாக இருந்தாலும் இந்த கண் மை அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

    ,இண்டிகோ

    சற்று தடிமனாக தோற்றமளிக்கும் இந்த கண் மை, அனைத்து விதமான இந்திய கலாச்சார உடைகளுக்கும் கச்சிதமாக பொருந்தும்.

    டிராமா

    கண்களின் மேல் மற்றும் கீழ் இமைகளிலும் இடப்படும் மை. பெண்களுக்கு போல்டு லுக் அளிக்கும். இவ்வகை கண் மை வெஸ்டர்ன் உடைகளுக்கு மிகப்பொருத்தமாக இருக்கும்.

    கிரேகோ

    பெரிய கண்களை சிறிதாக காட்ட உதவும் மெல்லிய கண் மை இது. லேசாக மேக்கப் போட்டாலும் இந்த கண் மை வகை அட்டகாசமான லுக்கை அளிக்கக்கூடியது.

    எகிப்சியோ

    கரு விழியை கூர்மையாகவும், கண்களை பெரியதாகவும் எடுத்துக்காட்டும் வகை இது. எகிப்து நாட்டு கிளியோபாட்ரா காலத்திலிருந்தே இந்த வகை கண்மை மிகவும் பிரபலம்.

    லக்சோ

    ஆசிய நாட்டு பெண்மணிகள் மட்டுமே பயன்படுத்தும் இந்த வகை கண் மை சிறிய கண்களையும் பெரிதாக காட்ட உதவுகிறது.

    பெளினோ

    சிறிய கண்களை கொண்டர்களுக்கு இந்த கண் மை பொருத்தமாக இருக்கும். மற்றவர்களின் கண்களை ஈர்க்கும் தன்மை இதற்கு உண்டு.
    உங்களை மகிழ்விக்கும் விஷயங்களை செய்ய நேரத்தை செலவிட்டால் நீங்கள் நேர்மறையாக சிந்திக்க அதிக வாய்ப்புள்ளது. ஒவ்வொரு நாளும் உங்களுக்காக சிறிது நேரத்தை செலவிட முயற்சிக்கவும்.
    நம்பிக்கை என்பது வெற்றிகரமான உத்திரவாதம் அல்ல. ஆனால் உங்கள் வெற்றிக்கான சாத்தியத்தை மேம்படுத்தும் ஒரு சிந்தனை முறை. விஷயங்களை செயல்படுத்துவதற்கான வழிகளை தேடும் உறுதியான தேடல்.

    உங்கள் எண்ணங்கள் உணர்வுகள் மற்றும் நடத்தைகள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தவை என்பதை புரிந்து கொள்வது மிக முக்கியமான ஒன்று. இந்த இணைப்பை புரிந்து கொள்வது உங்கள் குறிகோள்களை அடைவதை தடுக்கும் பயத்தை நிறுத்த உதவும். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவது உங்களின் தன்னம்பிக்கையை குறைக்கும். அதனை தவிர்த்து உங்கள் இலக்குகள் மற்றும் சாதனைகளில் கவனம் செலுத்த முயற்சிக்கவும்.

    சக்தியை அதிகரிக்கவும், இலக்குகளை நிர்ணயிப்பதற்கும் நம்பிக்கையை வளர்ப்பதற்கும், உடற்பயிற்சி ஒரு சிறந்த வழியாகும். உடற்பயிற்சி செய்வதால் உடல் நல்ல உணர்வுகளை தூண்டும் எண்டோர்பின்கள் எனும் ஹார்மோன்களை வெளியிடுகிறது.

    செய்யும் வேலையில் தவறுகள் நேர்ந்தால் துவண்டு விடாதீர்கள். கற்றுக்கொள்வதற்கும், வளர்வதற்கும் நீங்கள் தவறுகளை செய்ய வேண்டியிருக்கிறது. தவறுகள் ஏற்பட்டால் அவற்றை தகுந்த முறையில் திருத்திக் கொள்ளுங்கள்.

    உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத எல்லாவற்றையும் நினைத்து கவலை கொள்ளாதீர்கள். அதற்கு பதிலாக உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்களை அடையாளம் காண்பது மற்றும் அவற்றை மேம்படுத்த நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதை பார்ப்பதில் உங்கள் ஆற்றலை மையப்படுத்த முயற்சிக்கவும்.

    உங்களை மகிழ்விக்கும் விஷயங்களை செய்ய நேரத்தை செலவிட்டால் நீங்கள்  நேர்மறையாக சிந்திக்க அதிக வாய்ப்புள்ளது. ஒவ்வொரு நாளும் உங்களுக்காக சிறிது நேரத்தை செலவிட முயற்சிக்கவும்.

    சிறிய வெற்றிகளை கொண்டாடுவது. நம்பிக்கையை வளர்ப்பதற்கும் உங்களை பற்றி நன்றாக உணரத்தொடங்குவதற்கும் ஒரு சிறந்த வழியாகும்.

    உங்களை பற்றி நன்றாக புரிந்து கொண்ட நபர்களுடன் பழகுங்கள். எதிர்மறை சிந்தனையை தூண்டும் நபர்களை தவிர்க்க முயலுங்கள்.
    ×