என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    சிறுதானியங்களில் கம்பு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று கம்பு சேமியா வைத்து சுவையான அதே நேரத்தில் சத்தான புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கம்பு சேமியா - 200 கிராம்
    பெரிய வெங்காயம்  - 1
    தக்காளி  - 1
    இஞ்சி பூண்டு விழுது  - 1 டீஸ்பூன்
    கிராம்பு  -  5
    கறிவேப்பிலை  - சிறிதளவு
    பட்டை  - 1 இன்ச் அளவு
    எண்ணெய்  - 3 டீஸ்பூன்
    ஏலக்காய்  - 2
    மிளகு  - 1 டீஸ்பூன்
    உப்பு  - தேவையான அளவு
    கேரட்  - 100 கிராம்
    ஃப்ரஷ் பட்டாணி  - 50 கிராம்
    கொத்தமல்லி  - சிறிதளவு

    கம்பு

    செய்முறை :

    தக்காளி, கொத்தமல்லி, வெங்காயம், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சேமியாவை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.

    கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, கறிவேப்பிலை மிளகு சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு இதனைத் தனியே எடுத்து வைக்கவும்.

    கடாயில் மீதமுள்ள எண்ணெயைச் சேர்த்து சுமார் 5 கப் தண்ணீர் அதனுடன் போதுமான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் சேமியாவைச் சேர்த்து வேக

    வெந்த சேமியா ஒன்றோடு ஒன்றாக ஒட்டக்கூடாது உடையவும் கூடாது. சேமியா வெந்தவுடன் உதிர்த்து வைக்கவும்.

    வதக்கிய கலவையுடன் சேமியாவைச் சேர்த்து நன்கு பிரட்டி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

    சத்தான கம்பு சேமியா கேரட் புலாவ் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அழகு தரும் என்று செய்யும் சில பராமரிப்புகள், சில கவனக்குறைவுகள் போன்றவையும் முகத்தின் அழகை குறைத்து காண்பிக்கவே செய்யும். அப்படி உங்களையும் அறியாமல் நீங்கள் செய்யும் சில தவறுகள் என்னவென்பதை பார்க்கலாம்.
    முகத்தை ஆரோக்கியமாக வைத்துகொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் செலுத்தும் பலரும் என்னவெல்லாம் முகத்தில் அழகை குலைக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. அழகு தரும் என்று செய்யும் சில பராமரிப்புகள், சில கவனக்குறைவுகள் போன்றவையும் முகத்தின் அழகை குறைத்து காண்பிக்கவே செய்யும். அப்படி உங்களையும் அறியாமல் நீங்கள் செய்யும் சில தவறுகள் என்னவென்பதை பார்க்கலாம். இதை கவனமாக தவிர்த்தாலே உங்கள் முகம் அழகாய் ஆரோக்கியமாய் இருக்கும்.

    மேக் அப் செய்ய பயன்படுத்தும் பொருள்கள் சாதாரணமாக இருந்தாலும் அதை அவ்வபோது சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் மேக் அப் முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள் அதை சுத்தம் செய்து பயன்படுத்துவதை மறந்துவிடுகிறார்கள்.

    முகத்துக்கு, கண்களுக்கு, உதடுக்கு என்று பலவிதமான பிரஷ்களை பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு முறை பயன்பாட்டுக்கு பிறகும் அதில் கண்ணுக்குத்தெரியாத அழுக்குகளும், தூசுக்களும் இருக்கவே செய்யும். மீண்டும் மீண்டும் அதை பயன்படுத்தும் போது முகத்தின் அழகு தாண்டி அதிலிருக்கும் பொருள்கள் சருமத்துளைகளில் ஊடுருவி பருக்களையும், சரும நிறத்தையும் மாற்றிவிடும். அவ்வபோது பிரஷ்களை சுத்தம் செய்து பயன்படுத்துங்கள். குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் பிரஷ்ஷை பயன்படுத்தாமல் மாற்றுவது பாதுகாப்பானது.

    பார்ட்டி, திருமண விசேஷ நாளுக்கென்று பிரத்யேகமான க்ரீம்கள் அதிக விலை கொடுத்துவாங்குபவர்கள் உண்டு. அதை பயன்படுத்தியதும் மீண்டும் பத்திரப்படுத்தி உபயோகப்படுத்தாமல் வைத்திருப்பார்கள். அதே போன்று முகத்துக்கு பயன்படுத்தும் ஒப்பனை க்ரீம்களை எப்போதாவது பயன்படுத்துவதும் உண்டு. இன்னும் சிலர் அது காலாவதியான தேதி கூட பார்க்காமல் நீண்ட நாள் வைத்திருப்பார்கள்.

    ஏற்கனவே கெமிக்கல் கலந்த இந்த பொருள்கள் நீண்ட நாள்களுக்கு பிறகு பயன்படுத்தும் போது அதிகப்படியான பிரச்சனையை சருமத்தில் உண்டாக்கும். இனி க்ரீம்களை பயன்படுத்தும் போது நீண்ட நாள் வைத்து பயன்படுத்தவேண்டாம். இதையும் மனதில் கொள்ளுங்கள்.

    முகத்தின் அழகு குறைவதிலும், கூந்தலில் பொடுகும் உருவாக்குவதில் பெரும்பங்கு தலையணைக்கு உண்டு. தலையணையில் படியும் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பு போன்றவை முகத்தில் படியக்கூடும். இரவு நேரத்தில் ஆழ்ந்து தூங்கும் போது முகத்தை தலையணையில் புதைத்து தூங்குபவர்கள் முகத்தின் ஆரோக்கியத்தை இழக்கிறார்கள். தலையணை சுத்தமாக இருந்தாலே முகத்தின் ஆரோக்கியம் பாதி காப்பாற்றலாம்.

    மேக் அப் பயன்படுத்துவதில் செலுத்தும் கவனத்தை மேக் அப் ரீமூவ் செய்வதிலும் கடைபிடிக்க வேண்டும். பலரும் செய்யும் தவறு இது. வெளியில் செல்லும் போது அதிக சிரத்தையுடன் முகத்துக்கு மேக் அப் போடுவார்கள். அதே போன்று வீட்டுக்கு திரும்பியதும் முகத்தை சுத்தமாக்க வேண்டும்.

    குறிப்பாக கண்கள், உதடு பகுதியை சுற்றி கூடுதலகா சுத்தம் செய்ய வேண்டும். அதே போன்று முகத்தில் இருக்கும் க்ரீம்களும் நீங்கும் வகையில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு சுத்தமான நீரில் முகத்தை கழுவி இயற்கை மாய்சுரைஸர் போடலாம். தினமும் இதை செய்துவந்தாலே முகத்தின் நிறம் மங்காமல், கரும்புள்ளிகள் வராமல் ஆரோக்கியமாக இருக்கும். 
    காய்ச்சல் வந்துவிடுமோ என்ற அச்சம் காரணமாக குழந்தைகளை தங்கள் தீவிர கண்காணிப்பில் பெற்றோர் வைத்துள்ளனர். வீடுதோறும் ‘டிஜிட்டல் தெர்மாமீட்டர்‘ வைத்தும் பரிசோதனை மேற்கொண்டும் வருகிறார்கள்.
    கண்ணுக்கு தெரியாத கிருமியான கொரோனா வைரஸ் ஒவ்வொருவரின் கண்களிலும் விரலை விட்டு ஆட்டி பார்த்து வருகிறது. கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் என்னதான் நடவடிக்கைகளை முன்னிறுத்தினாலும், மக்களின் முழுமையான ஒத்துழைப்பு இல்லாததால் அவை விழலுக்கு இறைத்த நீராகவே இருக்கிறது.

    குறிப்பாக சென்னையில் கொரோனாவின் கோர தாண்டவம் தலைவிரித்து ஆடுகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. கால்பட்ட இடமெல்லாம் கண்ணிவெடி என்பது போல, திரும்பும் திசையெங்கும் கொரோனாவின் பீதியால் மக்கள் உறைந்து போயிருக்கிறார்கள்.

    காய்ச்சல் என்றாலே கொரோனா என்பது போல கொரோனாவின் பீதி அனைத்து இடங்களிலும் மேலோங்கி இருக்கிறது, ஆஸ்பத்திரிகள் உள்பட கடந்த 2 மாத காலமாகவே பெரும்பாலான தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல், இருமல், தும்மல், சளி பிரச்சினை உள்ளவர் களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அது குழந்தைகளாக இருந்தாலும் கூட... பெரும்பாலான ஆஸ்பத்திரிகளில் என்ன நோயாக இருந்தாலும் சரி, முதலில் காய்ச்சல், இருமல் பரிசோதனை முடிந்தபிறகே உள்ளே நுழைய அனுமதிக்கிறார்கள்.

    பல ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் என்றாலே வரவேண்டாம், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு செல்லுங்கள் என்று ஒரேயடியாக கூறிவிடுகிறார்கள். மருந்துகடைகளில் சாதாரண காய்ச்சலுக்கு கூடமருந்து வாங்க முடியவில்லை.

    இதனால் குழந்தைகளின் உடல்நலனில் முன்பைவிட பெற்றோர் அதிக கவனம் செலுத்துவதை பார்க்க முடிகிறது. காய்ச்சி வடிகட்டிய நீரையேபருக தருகிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவுகளை உண்பதற்கு தருகிறார்கள். கொரோனா பீதியால் அனைத்து வீடுகளிலின் வாசலில் கிருமிநாசினி டப்பாக்கள் இருப்பது போல, ஒவ்வொரு வீடுகளிலும் டிஜிட்டல் தெர்மாமீட்டர் வாங்கி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வதால் பெற்றோரின் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் குழந்தைகள் வந்துள்ளனர்.

    விடுமுறை இருந்தும் விளையாட முடியாத நிலையில் குழந்தைகளும், 24 மணிநேரமும் குழந்தைகளை கண்காணிக்க வேண்டிய பொறுப்பில் பெற்றோர்களும் இருக்க வேண்டிய நிலையை கொரோனா உருவாக்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகி உள்ளது.
    கொரோனா காலகட்டத்தில் நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பராமரிப்பதற்கு தினமும் உடல் இயக்க செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது முக்கியமானது. ஊடரங்கு காலத்தில் உடற்பயிற்சி மற்றும் உடல் இயக்க செயல்பாடுகள் குறைந்துபோய் இருப்பதால் எதிர்மறை விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக கவலை, பதற்றம், மனச்சோர்வு போன்ற பாதிப்புகள் உருவாகும். இந்த காலகட்டத்தில் நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    * வெறும் வயிற்றிலோ அல்லது நன்கு சாப்பிட்ட பிறகோ உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டாம்.

    * சாப்பிடும்போது டி.வி. பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.

    * வழக்கமாக சாப்பிடும் மருந்துகளை ஒருபோதும் தவறவிட்டுவிடக்கூடாது.

    * கடினமான காலகட்டத்தில் மனம் அமைதியாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு தியானம் முக்கியமான அஸ்திரமாக அமையும்.

    * மனக்குழப்பம் ஏற்பட்டாலோ, தொடர்ச்சியாக மன அழுத்தத்திற்கு ஆளானாலோ கண்டிப்பாக தியானம் மேற்கொள்ள வேண்டும். தியானம் தவிர ஆழ்நிலை மூச்சு சுவாச பயிற்சி, ஆன்மா-உடல்-மனம் சார்ந்த பயிற்சிமுறையை கையாள்வது எதிர்மறை எண்ணங்களை அகற்ற வழிவகுக்கும். டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று பயிற்சிகளை மேற்கொள்வது சிறந்தது.

    * நீரிழிவு நோயாளிகள் சீரான உணவு திட்டத்தை பின்பற்ற வேண்டியது அவசியம். தினமும் சாப்பிடும் உணவுகளில் உள்ள கலோரிகளை கணக்கிட வேண்டும். அதே கலோரி அளவையே தினமும் உட்கொள்ள வேண்டும். அது தேவைக்கேற்ப எடையை குறைக்கவோ, அதிகரிக்கவோ உதவும். உடல் எடையை சீராக பராமரிக்கவும் வழிவகை செய்யும்.

    * கூடுமானவரை அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். முழுதானியங்கள், பருப்பு வகைகள், அனைத்து வகையான பச்சை காய்கறிகள், பழங்களை சாப்பிடலாம். கிளைசெமிக் குறியீடு குறைவாக இருக்கும் உணவுகளை உட்கொள்ளுங்கள். அது ரத்தத்தில் சர்க்கரை அளவை இயல்பாக வைத்திருக்க உதவும்.

    * சமையலுக்கு கடுகு எண்ணெய், சோள எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், நிலக்கடலை எண்ணெய், இஞ்சி எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். சாலட்டுகளுக்கு ஆலிவ் எண்ணெய் சிறந்தது.

    * போதுமான அளவு தண்ணீர் பருகுவதற்கு மறக்காதீர்கள். சரியான நேரத்தில் தூங்குங்கள். அது தூங்கும் கால அளவை பராமரிக்க உதவும்.

    * ஊடரங்கு காலத்தில் மூன்று வேளையும் சாப்பிடும் உணவின் அளவு சீராக இருக்க வேண்டும். ஒரு வேளை அதிகமாக உட்கொண்டுவிட்டு மறுவேளை குறைவாக சாப்பிடக்கூடாது. அது ரத்தத்தில் சர்க்கரை, குளுக்கோஸ் அளவில் ஏற்ற, இறக்கங்களுக்கு வழிவகுக்கும். மேலும் மைக்ரோவாஸ்குலர் சிக்கலையும் தோற்று விக்கும். சரியான நேரத்தில் சரியான அளவு உணவை சாப்பிடுவதை உறுதி செய்யுங்கள்.

    * ரத்தத்தில் சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கச் செய்யும் வெள்ளை ரொட்டி, சிப்ஸ்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், உப்பு மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். வறுத்த, கொழுப்பு நிறைந்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும். மைதா, ரவா, உருளைக்கிழங்கு உள்ளிட்ட பிற கிழங்கு வகைகள், இறைச்சிகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட, மாவுச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதிலும் கட்டுப்பாடுகள் அவசியம். இனிப்பு சுவை அதிகம் கொண்ட கஸ்டர்டு ஆப்பிள், வாழைப்பழங்கள், திராட்சை, மாம்பழம் போன்றவற்றை சாப்பிடுவதையும் தவிர்த்துவிடலாம்.

    பசும்பால் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பொருத்தமானது அல்ல. உடல்நலத்துக்கு கேடு. ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைக்கு பசும்பால் கொடுப்பதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    பல தாய்மார்களுக்கு வரும் கேள்வி இது. பசும்பால் கொடுப்பதில் தவறு என்ன இருக்கிறது. அதைத் தானே எங்கள் பாட்டி காலத்தில் இருந்து கொடுத்து வருகிறார்கள். பசும்பால் சிறிய குழந்தைக்கு பொருத்தமானது அல்ல. உடல்நலத்துக்கு கேடு. அவற்றைப் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

    ஒரு வயது முடியாத குழந்தைகளால் பசும் பாலை செரிக்க முடியாது. புரோட்டீனும் தாதுக்களும் அதிக அளவில் இருப்பதால் குழந்தைகளுக்கு பசும்பாலை செரிக்கும் தன்மை இருக்காது. இதனால் சிறுநீரக பாதிப்புகள் வரலாம். சில குழந்தைகளுக்கு வாந்தி வயிற்றுபோக்கு பிரச்சனையும் வரக்கூடும். பசும்பாலில் உள்ள அதிக அளவு புரோட்டீன் மற்றும் தாதுக்கள் குழந்தைகளின் சிறுநீரகத்துக்கு ஓவர் லோட் வேலையாக மாறும்.

    பசும்பாலில் சரியான அளவு இரும்புச்சத்து விட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துகள் சரியான அளவில் இருக்காது. இதனால் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும். மேலும் விட்டமின் சி இ காப்பர் சத்து குறைபாடு ஏற்படலாம். பசும்பாலில் உள்ள புரோட்டீன் குழந்தையின் செரிமான மண்டலத்தைப் பாதிக்கும். சில குழந்தைகளுக்கு மலத்தில் இரத்தம் வெளியேறும் அபாயம்கூட நேரலாம்.

    வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கொழுப்பு உடலில் சேராமல் போகலாம். பசும்பாலில் உள்ள விலங்கின புரோட்டீன் சிறிய குழந்தைகளின் உடல்நிலைக்கு ஏற்றது அல்ல. 6-12 மாத குழந்தைகளுக்கு அதிக அளவில் இரும்புச்சத்து தேவை. பசும்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இச்சத்து உடலில் சேராமல் தடை ஏற்படும்.

    குழந்தைக்கு நீங்கள் அன்றாடம் தரும் காய்கறி மற்றும் பழ ப்யூரி அசைவ உணவுகள் மூலம் கிடைக்கும் சத்துகள் கீரைகள் மூலம் கிடைக்கும் சத்துகள் போன்றவை உடலில் சேராமல் பசும்பால் தடுத்துவிடும். குழந்தைக்கு இரும்புச்சத்து குறைபாடு ஊட்டச்சத்து குறைபாடு இரத்தசோகை ஆகியவை வரலாம்.

    ஒரு வயதுக்கு மேல் பசும்பால் கொடுக்கலாம். கால்சியம் புரதம் விட்டமின் டி ஆகியவை இருப்பதால் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவும். ஒரு நாளைக்கு 1- 1 ½ கப் அளவுக்கு பசும்பால் கொடுக்கலாம். யோகர்ட் தயிர் மோர் போன்றவையும் கொடுக்கலாம். பசும்பால் பிடிக்காத குழந்தைகளுக்கு மோர் யோகர்ட் தயிர் சீஸ் கொடுத்துப் பாருங்கள். ஒரு குழந்தைக்கு 3-4 கப் அளவுக்கு பசும்பால் தரக்கூடாது. பசும்பால் கொடுக்க தொடங்கிய பின் குழந்தையின் மலம் கழிக்கும் பழக்கத்தில் சிறிய மாற்றங்கள் வரலாம்.

    குழந்தையின் மலம் சற்று திக்காக இருக்கலாம். மலம் கழிக்க கொஞ்சம் சிரமப்படலாம். பாலாக ஒரு டம்ளர் அளவுக்குக் கொடுத்து விட்டு யோகர்ட் தயிர் மில்க் ஷேக் சீஸாக கொடுப்பது நல்லது.
    நமக்கு திருப்தியை தருவது நல்ல எண்ணங்கள்தான். இதனால் எதிர்மறையான எண்ணங்களை குறைத்து நல்ல எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும். எது நடந்தாலும் ‘எல்லாம் நன்மைக்கே’ என கருத வேண்டும்.
    நாம் வாழ்க்கையில், இரண்டு வகையான மனிதர்களை சந்தித்திருப்போம். ஒரு பிரிவினர், தங்களுக்கு கிடைத்த சாதாரண வெற்றியைக்கூட கொண்டாடி தீர்த்துவிடுவார்கள். மற்றொரு பிரிவினரோ, கடுமையான முயற்சியால் கிடைத்த வெற்றியைக்கூட கொண்டாட மாட்டார்கள். மாறாக, இதைவிட கூடுதலாக கிடைத்திருக்கலாமே என்று வருத்தப்பட்டுக்கொண்டிருப்பார்கள். இதைத்தான், ‘மகிழ்ச்சி, துக்கம் இரண்டும் கிடைக்கும் வெற்றி தருணங்களில் இல்லை; அது, நம் மனநிலையில் இருக்கிறது’ என்கிறார்கள் அறிஞர்கள். சுருக்கமாக, நமக்கு திருப்தியை தருவது நல்ல எண்ணங்கள்தான். இதனால் எதிர்மறையான எண்ணங்களை குறைத்து நல்ல எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும். எது நடந்தாலும் ‘எல்லாம் நன்மைக்கே’ என கருத வேண்டும். உலகின் மிகச் சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே.. எங்கு பார்த்தாலும் மனித மனங்களில் ஏதேதோ எண்ணங்கள்.. பார்க்கும் மனித முகங்கள் எல்லாம் சிந்தனை வயப்பட்டதாகவே தோன்றுகிறது. இறுக்கமான மனிதர்களாகவும், எந்திர கதியான மனிதர்களாகவுமே தென்படுகின்றனர். எண்ண ஓட்டங்கள் தவறாக இருக்கும் போது அங்கே வாழ்வியல் நெறிகளில் மாற்றம் ஏற்படுகிறது.

    மனித நடத்தை மாறுபாடுகளை மாற்றி அமைக்கும் வல்லமை எண்ணங்களுக்கே உண்டு என்பதை மறுப்பதிற்கில்லை. நமது எண்ணங்களே நம்மை உருவாக்குகின்றன. இந்த எண்ணங்கள் நமக்கானதாக மட்டுமே இல்லாமல் பிறரைச் சார்ந்தும் அமைகிறது. பிறரின் எண்ணங்களுக்காகவே பயந்து வாழும் மனிதர்கள் ஒரு வகை. அடுத்தவர் முன் தன் மேதாவி தனத்தை காட்டும் மனிதர்கள் மற்றொரு வகை. ஆக இவை எல்லாவற்றிலும் அடங்கியிருப்பது எண்ணங்களே. எண்ணங்களுக்கு வலிமை உண்டு. அதனால் தான் எண்ணம் போல வாழ்வு என்றும், எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பதும் இந்த பிரபஞ்ச வாழ்வில் வலிமை வாய்ந்த வார்த்தைகளாகவே கூறப்பட்டு வருகிறது. ஆனால் இந்த எண்ணங்களை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதிலேயே வாழ்வின் சூட்சுமம் அடங்கி உள்ளது. பூ கொடுக்க வரும் பெண்மணியிடம் ‘பூ வேண்டாம்’ என்று சொல்வதை விரும்ப மாட்டார். நாளை வாங்கி கொள்கிறேன் என்று சொல்ல வேண்டும். இதுவே நேர்மறை எண்ணம். என்னால் முடியாது என்று எண்ணும் எண்ணம் எதிர்மறையான எண்ணமாக உருமாற்றமடைகிறது. பெரும்பாலான மனிதர்களிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதும் இத்தகைய எதிர் மறை எண்ணங்களே. துஷ்டனை கண்டால் தூர விலகு என்பதும் இதனால் தான். உனக்குள்ளே எல்லா ஆற்றல்களும் அடங்கியுள்ளது. நீ உன்னை வலிமை வாய்ந்தவன் என்று எண்ணினால் வலிமை படைத்தவனாகவே ஆகிறாய். இது வீரத் துறவியின் வார்த்தைகள். மனிதனின் எண்ணம் நம்பிக்கையாக வேர் விடும் போது அசாதாரண சக்தி பெறுகிறது.

    நேர்மறை எண்ணங்கள் : ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்வதற்கு முன் அன்றைய நாளில் நடந்த நல்லவற்றை பட்டியலிடுங்கள். நான் எல்லா வகையிலும் முன்பை விட சிறந்து வருவதை உணர்கிறேன் என்று மனதிற்குள் கூறிக் கொள்ளும் போது அந்த எண்ணங்கள் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துவதை உணர முடியும். அதே போன்றே இன்று புதிதாய் பிறந்தோம் என்னும் எண்ணத்தை மனதில் ஏற்றிக் கொண்டு இந்த நாள் என் வெற்றிக்கான நாளாகும் என்ற நல்ல சிந்தனையை மனதில் உருவேற்றிக் கொள்ள வேண்டும். எனவே தான் நமக்கான நல்ல எண்ணங்களை நாமே தான் உருவாக்கிட வேண்டும். நம்மை ஊக்கப்படுத்தி முன்னேற்றுபவை நம்மிடம் உள்ள எண்ணங்களே. ஆக்கப் பூர்வமான எண்ணங்களை அதிகப்படுத்துதலே வெற்றிக்கான வழியாகும். எதை நம் ஆழ் மனம் எண்ணுகிறதோ அதையே நம் செயல்களும் பிரதிபலிக்கின்றன. சபாஷ் நல்லா பண்ற, அசத்தல், பிரமாதம், ஆகா அருமை... இது போன்ற வார்த்தைகள். எல்லாம் மற்றவர்களிடமிருந்து வர வேண்டும் என்று எதிர்பார்க்காமல் நம்மிடமிருந்து நமக்காக வர வேண்டும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்தலும், எதையும் இலகுவாக கடந்து விடும்பக்குவமும் வந்து விட்டாலே வாழ்க்கையை அழகாக வாழ்ந்திடலாம். நல்ல எண்ணங்களால் வாழ்வை வசந்தமாக்கலாம்.

    உதய கிருஷ்ணா, 9-ம் வகுப்பு,

    அரசு உயர்நிலைப்பள்ளி, காந்திமாநகர்.
    மிளகு ரசத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள், குறிப்பாகக் கருப்பு மிளகு, பூண்டு மற்றும் மஞ்சள் ஆகியவை நமது நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துகின்றன.
    தேவையான பொருட்கள் :

    புளி கரைச்சல் - 2 மேசைக்கரண்டி
    தக்காளி- 1
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கருப்பு மிளகு - 2 தேக்கரண்டி
    பூண்டு - 6 பல்
    காய்ந்த சிவப்பு மிளகாய் - 3
    சீரகம் - 1 தேக்கரண்டி
    பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - சுவைக்க
    மஞ்சள் - அரை தேக்கரண்டி
    கடுகு- 1 தேக்கரண்டி
    எண்ணெய்- 1 தேக்கரண்டி

    மிளகு ரசம்

    செய்முறை :

    கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்..

     2 சிவப்பு மிளகாய், கருப்பு மிளகு, சீரகம், பூண்டு மற்றும் 4-5 கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய தக்காளி மற்றும் மீதமுள்ள கறிவேப்பிலை, மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் தக்காளி குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த மசாலாவைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

    புளிக் கரைச்சலுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும், தீயைக் குறைக்கவும்.

    கடாயை மூடி வைத்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    அடுத்து அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லி சேர்த்து, பரிமாறவும்.

    தேவைப்பட்டால், சிறிது மிளகு தூள் சேர்க்கலாம்.

    இந்த ரசத்தை அதிக நேரம் கொதிக்க விடக் கூடாது.

    சுவையான மிளகு ரசத்தை சூப் ஆகவோ, சதத்துடனோ சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாழைப்பழமும் எண்ணற்ற சத்துகளால் நிறைந்திருக்கிறது. வாழைப்பழ மாஸ்க் கூந்தலின் வளர்ச்சியை மட்டும் அல்லாமல் பளபளப்பாக்கவும் மிருதுவாகவும் வைக்க உதவுகிறது.
    முகத்துக்கு பயன்படுத்துவது போன்று கூந்தலுக்கும் ஹேர் மாஸ்க் உண்டு. கூந்தல் பிரச்சனைக்கேற்ப அதற்கு தீர்வு தரும் பொருள்களை பயன்படுத்தினால் நிச்சயம் பலன் கிடைக்கும். குறிப்பாக இயற்கை பொருள்களை பயன்படுத்தினால் பலன் கூடுதலாக கிடைக்கும். அந்த வகையில் கூந்தல் கட்டுகடங்காமல் வறண்டு இருந்தால் நீங்கள் வாழைப்பழ பேக்கை தேர்வு செய்யலாம். இவை கூந்தலுக்கு உடனடியாக போஷாக்கும் ஊட்டச்சத்தும் கொடுக்கும். ஒரு முறை பயன்படுத்தினாலே பலன் உடனடியாக தெரியும்.

    கூந்தல் பேக் தயாரிக்க தேவையானவை

    நன்றாக பழுத்த வாழைப்பழம் - 1
    தயிர் - 1 மேசைக்கரண்டி
    தேங்காய்ப்பால் - 1 மேசைக்கரண்டி
    சுத்தமான ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
    கற்றாழை சாறு - தேவைக்கு

    செய்முறை:

    முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கி நன்றாக மசிக்கவும். கைகளால் மசித்தாலும் போதும் பிறகு இதில் கெட்டித்தயிர், தேங்காய்ப்பால் ( முதல் முறை பிழிந்து எடுக்கப்பட்ட பால்) ஆலிவ் எண்ணெய், கற்றாழை சாறு அனைத்தையும் சேர்த்து அகலமான பாத்திரத்தில் போட்டு மத்து கொண்டு நன்றாக கடையவும். அல்லது மிக்ஸியில் சேர்த்து அடிக்கவும் செய்யலாம். இவை அனைத்தும் சேர்ந்து க்ரீம் பதத்துக்கு வரும். இவை அதிகளவு நீர்த்து போகாமல் இருக்கும்படி பார்த்துகொள்வது அவசியம்.

    இந்த பேக்கை கூந்தலுக்கு பயன்படுத்தும் போது கூந்தல் அழுக்கில்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். அழுக்கு இருந்தால் பேக் சரியாக கூந்தலில் பிடிக்காது. இப்போது பேக் போடலாம். பிறகு முடியை பாகங்களாக பிரித்து ஸ்கால்ப் பகுதியிலும் தலைபகுதியிலும் ஹேர் பிரஷ் கொண்டு நிதானமாக தடவ வேண்டும். முடியின் வேர்ப்பகுதி வரை அனைத்து இடங்களிலும் நன்றாக தடவவேண்டும். இவை குளுமையை உண்டாக்காது என்பதால் 40 நிமிடங்கள் வரை தலையில் ஊறவிடலாம்.

    பிறகு தலையில் நீர் தெளித்து அந்த க்ரீம் போக கசக்கி அதன் பிறகு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் ( அதிக கெமிக்கல் இல்லாத) பயன்படுத்தி கூந்தலை அலசி எடுங்கள். ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் இப்படி செய்துவந்தால் கூந்தல் மென்மையாகும். கட்டுக்குள் வரும் பளபளப்பும் கூடும்.

    முடி உயிரூட்டம் பெறுவதால் கூந்தல் உதிர்வு நிற்கும். அடர்த்தி அதிகரிக்கும். முடி வலுவாகவும் இருக்கும். கூடுதலாக இதில் தயிர் சேர்ப்பதால் கூந்தலில் பொடுகு பிரச்சனைகள் இருந்தாலும் நீங்கிவிடும். தேங்காய்ப்பால் கூந்தலுக்கு தனி பொலிவையும் மினுமினுப்பையும் தரக்கூடியது. இதை எதுவுமே இல்லாமல் தனியாகவே பயன்படுத்தலாம். இயற்கை தந்த கண்டிஷனராகவே இவை பயன்படும். வறண்ட கூந்தலுக்கும், கூந்தல் நுனி பிளவுபடுதலுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இருந்தால் அந்த ஊட்டச்சத்தை தேங்காய்ப்பால் தந்துவிடும். இதையும் சேர்த்திருப்பதால் கூந்தலின் வறட்சியை மீட்டுவிடலாம். 
    கர்ப்பகாலத்தில் வயிற்றில் இருக்கும் சிசு வளர வளர பெண்கள் சற்று சிரமங்களை உணருவார்கள். பெண்கள் கர்ப்ப காலத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டால் எந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்பகாலத்தில் வயிற்றில் இருக்கும் சிசு வளர வளர பெண்கள் சற்று சிரமங்களை உணருவார்கள். உட்காரும் போதும், நிற்கும் போதும், படுக்கும் போதும் இதை எளிதாக உணர்வார்கள். இவை தொடரும் போது சோர்வும் அதிகரிக்கும். ஆனால் நடைபயிற்சியின் மூலம் தசைகள் இலகுவாகும் தன்மை பெறுவாதால் உடலில் இந்த மாற்றத்தை எளிதாக கையாள்வார்கள்.

    உடலில் சிசு அசையும் போது ஆங்காங்கே உறுப்புகளில் வலியை உணர்வார்கள். கர்ப்பத்தின் இரண்டாவது காலகட்டத்தில் கருப்பை விரிவடைந்து குழந்தையின் எடை கூடியிருப்பதால் அதன் அழுத்தம் வலியாக முதுகிலும் பரவும். மேலும் அதிக எடை தாங்கும் கால்களிலும் வலியை உணர முடியும். இது அனைவருக்கும் உண்டாகும் என்பதால் இது குறித்து பயப்பட தேவையில்லை. ஆனால் இந்த வலிகளின் தீவிரம் அதிகரிக்காமல் இருக்க நடைபயிற்சி உதவுகிறது.

    கர்ப்பிணிகள் சத்தான உணவை எடுத்துகொள்ள வேண்டும் என்றாலும் சிசுவின் வளர்ச்சியால் செரிமானப் பிரச்னைகள் அவ்வபோது உண்டாகும். இதனால் அதிக உணவு அல்லது வேளை தவறாமல் சாப்பிடுவது இயலாமல் போகலாம். ஆனால் நடைபயிற்சியை செய்யும் போது உடல் உறுப்புகள் இயங்கி செரிமானமும் எளிதாகும். இதனால் நெஞ்செரிச்சல் பிரச்னைகளிலிருந்தும் தப்பிக்கலாம்.

    குழந்தையின் அசைவு மற்றும் பிரசவக்காலம் நெருங்க நெருங்க மனதில் ஒரு வித அச்சம் உண்டாவது இயற்கை. இந்த அச்சம் கர்ப்பிணிகளின் மனதில் பேறுகாலம் வரை நிரந்தரமாகும். அதனால் ஆழந்த தூக்கமும் கேள்விக்குறியாக இருக்கும். இதையும் சரிசெய்கிறது அன்றாட நடைபயிற்சி.

    பேறுகாலத்தில் அதிகப்படியான உணவை எடுத்துக்கொள்வது உடலில் அதிக எடையை உண்டாக்கிவிடும். பேறுகாலத்தில் செய்யும் உடற்பயிற்சியால உடலில் கெட்ட கொழுப்புகள் வெளியேற்றப்படுகிறது இதனால் பிரசவத்துக்கு பிறகும் கச்சிதமான உடலை வைத்துகொள்ள முடிகிறது.

    மனரீதியாக மட்டுமல்ல உடலும் இந்த பயிற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும். நடைபயிற்சி செய்வதற்கு முன்பு வயிறு நிறைய இல்லாமல் கால் வயிறு உணவாவது எடுத்துக்கொள்ளுங்கள். இது சோர்வை அதிகரிக்காது. நடப்பதற்கு இலகுவான ஆடைகள், காலணிகளை அணிந்து பழகுங்கள். காற்றோட்டமான போக்குவரத்து நெரிசல் இல்லாத இடங்களை தேர்வு செய்வது மனதுக்கு இதமாக இருக்கும். அல்லது உங்கள் வீட்டு மொட்டைமாடியிலும் நடக்கலாம்.

    மனதில் எவ்விதமான குழப்பங்களுக்கோ யோசனைகளுக்கோ இடம் கொடுக்காமல் அமைதியாக வைத்துகொள்வதன் மூலம் நடைபயிற்சியின் பலனை முழுமையாக பெறலாம் என்கிறார்கள் மருத்துவர்களும். பயிற்சியில் ஈடுபாடு கொண்டிருக்கும் பெண்கள் யோகா வல்லுநர்களின் உதவியோடு யோகா பயிற்சியும் செய்யலாம்.

    ஆரோக்கியம் என்பது உண்ணும் உணவில் மட்டுமல்ல உடற்பயிற்சியிலும் உண்டு. அதை உணர்ந்து கடினமாக உடலை வருத்தி செய்யாவிட்டாலும் இலகுவான நடைபயிற்சியை மேற்கொள்வது பிரசவகாலத்தில் பதட்டமின்றி வைத்திருக்கும்.
    கொரோனா பரவலை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த வேண்டும் என்பதால் உணவில் அதிகமாக இஞ்சி, பூண்டு, மிளகு, மஞ்சள் தூள் ஆகியவற்றை அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும்.
    உணவில் தினமும் இஞ்சி, மஞ்சள் தூள், மிளகு, நெல்லிக்கனி, எலுமிச்சை போன்றவற்றை தவறாமல் சேர்த்துகொள்வது நிச்சயம் வைரஸ் தொற்று உங்களை அண்டாமல் பாதுகாக்கும். அதை எதிர்த்து போராடக்கூடிய எதிர்ப்புசக்தியை உங்கள் உடலுக்கு கொண்டு வர இந்த வகை உணவுகள் உதவும்.

    “இஞ்சி, பூண்டு, மஞ்சள், மிளகு போன்றவை நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தவை. தற்போதைய இடர்ப்பாடான சூழலில் நோய் எதிர்ப்பு சக்தி அவசியம் தேவை என்பதாலேயே இந்த பொருட்களை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். தவிர கசாயமாகவும் காய்ச்சி காலை, மாலை என இரு வேளைகளில் குடிக்க வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பவர்களை வைரஸ் அவ்வளவு எளிதில் தாக்காது. அதற்கேற்ப அன்றாட உணவில் வைட்டமின் சி உணவுகளை அதிகம் எடுத்து கொள்வது மிகவும் முக்கியம்.

    நெல்லிக்கனி எதிர்ப்புசக்தியை அதிகரிக்க கூடியது. தினமும் காலை நெல்லிக்காயை கொட்டை நீக்கி மிக்ஸியில் அடித்து சாறு பிழிந்து குடிக்கலாம். தினமும் ஒரு வேளை எலு மிச்சை சாறு, சமபாதி அளவு நெல்லிச்சாறு கலந்து பழச்சாறாக குடிக்கலாம். இனிப்புக்கு தேன் சேர்த்துகொள்ளலாம்.

    பழங்கள் அனைத்துமே சத்துமிக்கவை என்பதால் பழங்கள் இல்லாமல் உணவை எடுக்க வேண்டாம். குறிப்பாக கொய்யா பழம் தினமும் சாப்பிடுவது எதிர்ப்புசக்தியை அதிகரிக் கும். இவை தவிர கீரைகள் காய்கறிகளையும் பயன்படுத்துங்கள்.உணவில் காரத்துக்கு மிளகாயை சேர்க்காமல் மிளகை சேருங்கள்.

    கிருமி நாசினியான மஞ்சளை அன்றாடம் சமையலில் சேர்ப்பதுண்டு என்றாலும் கூட சற்று அதிகப்படியாக சேர்க்கலாம். குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் தினமும் பாலில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் மற்றும் மிளகுபொடியை சேர்த்து கொடுப்பதும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
    பெண்கள் பிரா அணியும் இடங்களில் எலாஸ்டிக்கால் கருப்புக் கோடுகள் வந்திருக்கும். உள்ளாடைகள் அணியும் இடத்தில் கருப்புக்கோடு வருவது இயல்புதான்.
    பெண்கள் பிரா அணியும் இடங்களில் எலாஸ்டிக்கால் கருப்புக் கோடுகள் வந்திருக்கும். உள்ளாடைகள் அணியும் இடத்தில் கருப்புக்கோடு வருவது இயல்புதான். இருப்பினும் அது காண அத்தனை அழகாக இருக்காது. குறிப்பாக பெண்கள் பிரா அணியும் இடங்களில் எலாஸ்டிக்கால் கருப்புக் கோடுகள் வந்திருக்கும். இதை பெண்கள் விரும்ப மாட்டார்கள். இந்தக் கோடுகளை நீக்க சில வீட்டுக்குறிப்புகளை பின்பற்றலாம்.

    * 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சில துளிகள் தேன் கலந்து கருப்பு கோடுகள் உள்ள இடங்களில் தடவ வேண்டும். அதை சருமம் உறிஞ்சும் வரை காய விடுங்கள். அதன் பின் நீரினால் கழுவிவிடுங்கள்.

    * ஆரஞ்சு தோலை வெயிலில் காய வைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள். அதில் பல அழகுக் குறிப்புகளுக்கு உதவும். அந்த ஆரஞ்சுப் பொடியில் தேன் ஊற்றி அதை பேஸ்ட் போல் குழைத்துக்கொள்ளுங்கள். அதை கருப்புக் கோடு உள்ள இடத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.

    * 1 ஸ்பூன் கடலை மாவுடன் 10 மிலி எலுமிச்சை சாறு ஊற்றி பேஸ்ட் போல் குழைத்து தடவ சரியாகும். தேவையற்ற முடிகள் வளர்வதை தடுக்கவும் இந்த பேக்கை அப்ளை செய்யலாம்.

    * முட்டையில் உள்ள வெள்ளையை மட்டும் எடுத்து அதில் சர்க்கரை சேர்த்து குழைத்து கோடுகள் உள்ள இடத்தில் தடவுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

    * வெள்ளரி மற்றும் கற்றாழை இரண்டையும் பேஸ்ட் போல் குழைத்து தடவுங்கள்.

    * பேக்கிங் சோடாவையும் தண்ணீரில் குழைத்து கோடுகள் உள்ள இடத்தில் தடவுங்கள்.

    * கருப்புக் கோடுகள் உள்ள இடங்களில் ஆலிவ் எண்ணெய் தடவி மசால் செய்து இரவு தூங்கிவிடுங்கள். காலை எழுந்து கழுவிக்கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை செய்து வாருங்கள். பலன் கிடைக்கலாம்.
    எப்போதும் ஒரே மாதிரி தோசை செய்து சாப்பிட்டவர்கள் இன்று மசாலா பொருட்கள் சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை - 1 கப்
    அரிசி மாவு - அரை கப்
    வெங்காயம் - 1
    சீரகம் - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தே. அளவு
    பச்சை மிளகாய் - 1

    கோதுமை மசாலா தோசை

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவை போட்டு நன்றாக கலந்து அதில் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கலக்கிக்கொள்ளவும்.

    அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து வதங்கியதும் மாவில் சேர்த்து கலக்கவும்.

    அடுத்து மாவில் கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசையாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான கோதுமை மசாலா தோசை தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×