என் மலர்
ஆரோக்கியம்
கணவன் மனைவி தனக்கு இணையானவள் என்ற மனோபாவமும் பழைய பழக்க வழக்கங்களைச் சுட்டிக்காட்டி மனைவியை தாழ்த்த முற்படாமல் இருந்தால் வாழ்க்கை சீராகச் செல்லும்.
நீண்ட காலமாகவே பெண்கள் அடிமைகளாகவே நடத்தப்பட்டு வந்தனர். குழந்தையாய்ப் பிறந்து வளர்ந்து தனி மனிதனாகி சமுதாயத்தில் இணையும்போது கற்பித்தலை தாய் தந்தை ஆசிரியர் பாரம்பரிய குணங்கள் மூலம் பெறுகிறார்கள். ஆண் பெண் எனப் பாகுபடுத்தி ஆண்களைச் சுதந்திரமாகவும் பெண்களை அவர்களுக்குக் கீழே மட்டுப்படுத்தியும் வளர்க்கிறார்கள். உளவியல் ரீதியாக அவர்களிடம் பெண்கள் தாழ்வு என்ற மனப்பான்மையே இருந்து வருகிறது. முன்பெல்லாம் கணவன் இறந்தவுடன் மனைவியை ‘உடன்கட்டை’ ஏற்றும் பழக்கம் இருந்தது. அதை ‘சாரதா தடைச்சட்டம்’ கொண்டுவந்து தடுத்து நிறுத்தினார்கள்.
பெண் சுதந்திஇரத்தைப் பற்றிப் பேசியும் எழுதியும் வந்தனர் தாகூர் விவேகானந்தர் பாரதி முதலானோர். பாரதி சகோதரி நிவேதிதையின் வேண்டுகோளை ஏற்றுப் பெண் கல்வியையும் சுதந்திஇரத்தையும் வலியுறுத்திப் பாடி நாட்டு மக்களிடையே விழிப்புணர்வைத் தூண்டினார். பெண்கள் ஓட்டுப்போடும் உரிமை பெற்றனர். நாடு சுதந்திரம் அடைந்ததும் கல்வி கற்பது கட்டாயமாக்கப்பட்டு ஆண்களுக்குச் சமமாக பெண்களும் கல்வி கற்றனர். பெண்களுக்கென தனிப் பள்ளி தனிக் கல்லூரிகள் நிறுவப்பட்டன. விளைவு? எல்லா இடத்திலும் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக பெருகத் தொடங்கினர். சம வாய்ப்பு என்பதால் போட்டியைப் போன்றே கற்பது வேலைக்குச் செல்வது என பெண்களும் முன்னேறினர். நடப்பு கல்வியாண்டில் கூட பிளஸ்-2 தேர்வில் பெண்களின் தேர்ச்சி சதவீதம் ஆண்களை விட அதிகமே.
அரசும் அவ்வப்போது பெண்கள் முன்னேற்றத்திற்கென சட்டங்களைக் கொண்டு வந்தன. அதனால் எங்கெல்லாம் பெண்கள் வஞ்சிக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் சட்டத்தின் துணைகொண்டு சம உரிமை பெறும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சட்டம் என்பது வேறு; நடைமுறை வாழ்க்கை என்பது வேறல்லவா? சட்டம் மக்களை ஒழுங்குபடுத்தும் ஒரு கருவியே! அதை ஏற்றுப் பின்பற்ற வேண்டிய மக்களின் மனநிலை மாறினால் தான் சட்டம் உயிர் பெறும். திருமணம் என்று வரும்போது இருவரின் படிப்பு வேலை சம்பளம் தவிர இருவரது குடும்ப செல்வாக்கும் சேர்வதால் கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன.
வரதட்சணையை ஒழிக்க வரதட்சணை தடைச் சட்டம் பெண்கள் சொத்துரிமைச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டு பெண்களுக்கு பாதுகாப்பாக அமைந்த காலம் மாற கல்வியறிவு பெற்ற பெண்களின் சிந்தனைகளும் மாறுகின்றன. படிப்பறிவு வந்தவுடன் சுயமாக வாழவேண்டும்; தனக்குப் பிடித்த கணவனையும் வாழ்க்கையையும் தானே தீர்மானிக்க வேண்டும் என நினைக்கிறாள். பழையன கழிதல் போல அடிமை என்ற நினைவும் அவர்களிடமிருந்து கழண்டு கொள்கிறது. நினைப்பு மாறினால்......? வழி வழியாய் வந்த கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை மாறி தனிக்குடும்ப வாழ்க்கை முறையை விரும்ப ஆரம்பித்தனர்.
அதனால் பெற்றோர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாயிற்று. அதைக் களைய ‘முதியோர் பாதுகாப்புச் சட்டம்’ வரலாயிற்றது. தனிக் குடும்ப வாழ்வில் பிணக்குகள் வரும்போது தீர்வு செய்ய முதியோரின்றி வாழ்வில் விரிசல் விழ ஆரம்பிக்கிறது. முன்னைப்போல பெண்கள் சிரமமான வாழ்க்கையை சகித்து காலம் முழுதும் வாழத் தயாராக இல்லை. அவள் விருப்பப்படி வாழத் தீர்மானிக்கிறாள். அதையுணர்ந்து சமரசம் செய்துகொண்டு விட்டுக் கொடுத்துப் போகும் ஆண்கள் உள்ள குடும்ப வாழ்க்கைச் சீராகச் செல்கிறது; பழமையைக் கூறி கட்டாயப்படுத்தும் குடும்பத்தில் பெண்கள் மண முறிவுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
வெளியுலகப் பார்வைக்கு பெண்களின் விவாகஇரத்து கேள்விக் குறியாய்த் தோன்றுகிறது. பழமையை ஏற்றுக் கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்துவதும் புதியதை ஏற்காது மறுப்பதும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியென்றே சட்டம் கருதுகிறது. சுதந்திரம் கிடைத்தும் வெளி வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பிற்கு ஆண் துணை தேவைப்படுகிறது. வீட்டிலே முடங்கினால் கற்ற கல்வியும் பயனற்று தன்னம்பிக்கையும் குறைய ஆரம்பிக்கும். ‘ட்ரஸ்ட் லா’ என்ற தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளின் தரவரிசை பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
கலாசார ரீதியாக பெண்களை ஒடுக்குவது பெண் கடத்தல் கற்பழிப்பு கட்டாய கருக்கலைப்பு சிசுக்கொலை என சமூக அவலங்களும் தொடர்கின்றன. அடக்கு முறையில் வரதட்சணை பெண் பார்த்து நிராகரித்தல் புகுந்த வீட்டில் அவர்கள் நடைமுறைக்கு ஏற்ப தன் பழக்க வழக்கங்களை விரும்பியோ விரும்பாமலோ ஏற்கச்சொல்லி கட்டாயப்படுத்துவதும் இந்த அடக்குமுறைக்கு உட்பட்டதாகவே கருதுகிறது.
2010-ம் ஆண்டு வெளியிடப்பட்ட உலக வங்கியின் அறிக்கையின்படி பெண்களைச் சமமாக மதிக்காத தரவரிசையில் மொத்தமுள்ள 138 நாடுகளில் இந்தியா 122-வது இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. எதிலும் அவசரம். அதனால் பெற்ற தாய் தந்தையரைப் பராமரிப்பது தம் கடமை என்பதையும் பெற்ற பிள்ளைகளை நன்முறையில் வளர்த்து ஆளாக்குவது தத்தம் கடமை என்பதையும் மறந்து மன உணர்வற்ற ஒரு எந்திர வாழ்க்கை வாழத் தங்களைத் தயார் செய்து கொண்டு பணம் சேர்ப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளார்கள்.
விருப்பமில்லா வாழ்வை இரத்து செய்து கொள்ளவும் தயங்குவதில்லை. விட்டுக் கொடுப்பதும் சகித்துப் போவதும் குறையும் போது பிரச்சினை எழுகிறது. கணவன் மனைவி தனக்கு இணையானவள் என்ற மனோபாவமும் பழைய பழக்க வழக்கங்களைச் சுட்டிக்காட்டி மனைவியை தாழ்த்த முற்படாமல் இருந்தால் வாழ்க்கை சீராகச் செல்லும். மண முறிவுக்குக் காரணம் பெண்களின் சுதந்திஇரத்தைக் காரணமாக கூற இயலாது. அவர்கள் பெற்ற கல்வியால் சுயமாக சிந்திக்கிறார்கள். அடக்கு முறையை நிராகரிக்கிறார்கள்; அதற்கு சட்டமும் துணை நிற்கிறது. காலமாற்றத்தை ஏற்று வாழத் தெரிந்து கொண்டால் மட்டுமே தம்பதியினர் நிம்மதியான வாழ்வினைத் தொடர முடியும். இல்லையேல் அவரவர் வழியென சட்டப்படி பிரிய நேரிடும்.
கே.சுப்பிரமணியன் வக்கீல் சென்னை உயர்நீதிமன்றம்.

குழந்தையின் கவனத்தை திசை திருப்புவதன் மூலம் இந்த பழக்கத்தை தடுக்க முடியும். தொடர்ந்து குழந்தையை கண்காணிப்பதன் மூலம் இந்த பழக்கத்தை ஒரு மாதத்தில் தடுத்துநிறுத்திவிடமுடியும்.
குழந்தைகள் வாயில் விரலை வைப்பது இயல்பானது. சில குழந்தைகள் அசதியாக இருக்கும் போது, பய உணர்ச்சி இருக்கும் போதும் வாயில் விரல் வைப்பதை வழக்கமாக கொள்கிறது. பிறந்த குழந்தை தாய்ப்பால் குடித்த பிறகு வாயில் விரல்களை வைத்து சூப்புவார்கள். சில குழந்தைகள் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று விரல்களை கூட வாயில் வைத்து கொள்ளும். பிறந்து ஆறுமாதங்கள் வரை சரி அதன் பிறகும் இதை தொடர்ந்தால் பல் முளைக்கும் போது அது முன்னோக்கி முளைத்துவிடும் என்று சொல்வார்கள். இந்த பழக்கத்தை எப்படி தவிர்ப்பது.
சிலர் குழந்தை விரல் சூப்புவதை நிறுத்த குழந்தையின் வாயில் எப்போதும் தேன் நிரப்பிய நிப்பிளை வாயில் வைத்துவிடுவார்கள். இவை குழந்தைக்கு கெடுதலையே உண்டாக்கும். அதனால் இயன்ற வரை குழந்தையின் கவனத்தை திசை திருப்புவதன் மூலம் இதை தடுக்க முடியும். தொடர்ந்து குழந்தையை கண்காணிப்பதன் மூலம் இந்த பழக்கத்தை ஒரு மாதத்தில் தடுத்துநிறுத்திவிடமுடியும்.
சில குழந்தைகள் சற்று விபரம் தெரிந்த பிறகு வாயில் இருக்கும் விரல்களை எடுத்துவிட்டால் அழத்தொடங்கும். இதனால் அம்மாக்கள் அப்படியே விட்டுவிடுவார்கள். நீங்கள் எளிதாக ஒன்றை செய்யலாம். குழந்தை எந்த விரலை வாயில் வைக்கிறதோ அந்த விரலை வேப்பிலை சாறால் நனைக்க வேண்டும்.
வேப்பிலையை அரைத்து அப்படியே குழந்தையின் விரலில் தடவினால் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு உண்டாகும். மாறாக வேப்பிலையை எடுத்து சுத்தம் செய்து சிறிது நீர் சேர்த்து அரைத்து அந்த சாறை குழந்தையின் விரலில் பூச வேண்டும். கவனம் வேப்பிலையும், பயன்படுத்தும் நீரும் சுத்தமாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தை விரலை வாயில் வைக்கும் போது அவை உள்ளுக்குள் போக வாய்ப்புண்டு.இதை குழந்தை வாயில் விரல்வைக்கும் போதெல்லாம் தடவினால் போதும். 3 மணி நேரமாவது கசப்பு இருக்கும்.
எலுமிச்சையின் சாறை எடுத்து வைத்துகொள்ளலாம். இதை குழந்தையின் விரலில் தடவினால் குழந்தை எலுமிச்சையின் புளிப்பு சுவையை விரும்பாமல் விரல் வைப்பதை தவிர்க்கும். எலுமிச்சை சிட்ரஸ் நிறைந்தது என்பதால் குழந்தையின் பட்டுப்போன்ற மென்மையான சருமத்தை பதம் பார்க்கும் என்பதால் சம அளவு நீர் சேர்த்து விரலை தேய்த்துவிடுங்கள். அவை உள்ளே சென்றாலும் குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி தான். ஆனால் இரவு நேரங்களில் எலுமிச்சை சாறு பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
குழந்தைகளின் விரல்களை சுற்றி சுத்தமான துணியை கொண்டு இறுக்கமில்லாமல் மென்மையாக கட்ட வேண்டும். 5 முதல் சுற்று வரை சுற்றி கட்டுவதன் மூலம் குழந்தை விரலை வாயில் வைத்ததும் எடுத்துவிடும்.
சுத்தமான துணியாக பயன்படுத்த வேண்டும். அதே போன்று நாள் முழுக்க துணியை விரல்களில் சுற்றியும் வைக்க கூடாது. அப்ப்டி செய்தால் குழந்தையின் விரலில் ரத்தகட்டுகள் உண்டாகும், சருமம் தடித்துவிடும். அவ்வபோது துணியை எடுத்து விட வேண்டும். இரவு நேரங்களில் சுற்றி விடவேண்டும். தற்போது குழந்தையின் கைகளில் மாட்டி விட கிளவுஸ் கிடைக்கிறது. அதையும் பயன்படுத்தலாம். எனினும் சுத்தமான துணியை பயன்படுத்துவது நல்லது.
வசம்பை குழைத்து அதை விரல்களில் தடவுவதுண்டு ஆனால் வசம்பு அதிகமாக உள்ளே சென்றால் குழந்தைக்கு பேச்சுத்திறன் சற்று குறைபடும். அதனால் வசம்பை அதிகம் பயன்படுத்த வேண்டாம். வாரம் ஒருமுறை பயன்படுத்தினால் போதுமானது.கிராம்பு எண்ணெய் தரமான எண்ணெய் வாங்கி அதை விரல் முழுக்க தடவலாம். இந்த எண்ணெய் குழந்தையின் வயிற்றுக்குள் போனாலும் அவை குழந்தையின் செரிமான சக்தியை அதிகரிக்க செய்யும்.
முன்பு வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட விளக்கெண்ணெய் தயாரித்தார்கள். தரமான எண்ணெயாக இருந்தாலும் விளக்கெண்ணெய் வயிற்றுப்போக்கை தரக்கூடியது. ஆனால் இதை ஒருமுறைஇலேசாக தடவினாலே அந்த வாடை மீண்டும் குழந்தையை குளிப்பாட்டும் வரை இருக்கும் என்பதால் பலன் நன்றாகவே கிடைக்கும்.
அதே நேரம் குழந்தையின் விரல்களையும், நகங்களையும் சுத்தமாக வைத்திருப்பதையும் மறக்க வேண்டாம். பெரும்பாலும் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு வருவதற்கு காரணம் விரல்கள் வழியாக உள்ளே செல்லும் கிருமிகள் தான். குழந்தை வாயில் விரல் வைப்பதை தவிர்க்க இந்த வழிகளில் ஒவ்வொன்றையும் மாறி மாறி கடைபிடிக்கலாம். நிச்சயம் பலன் கிடைக்கும்.

தக்காளி சிறுநீரக கற்களை உண்டாக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே இருந்து வருகிறது. அது உண்மை தானா இல்லை அது வெறும் கட்டுக்கதையா என்பதை பற்றி இங்கே காண்போம்.
மக்களிடையே சில உணவுப் பொருட்களால் கூட சிறுநீரக கற்கள் உண்டாக வாய்ப்புள்ளது என்று நம்புகின்றனர். அந்த வகையில் பார்க்கும் போது தக்காளி சிறுநீரக கற்களை உண்டாக்கும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. அது உண்மை தானா இல்லை அது வெறும் கட்டுக்கதையா என்பதை பற்றி இங்கே காண்போம்.
தக்காளி ஒவ்வொரு இந்திய உணவு வகைகளிலும் இன்றியமையாத ஒன்று. நாம் சாப்பிடும் கறிக் குழம்பில் இருந்து கெட்ச்அப் வரை இதன் பயன்பாடு இன்றியமையாதது. தக்காளியின் தனித்துவமான சுவை மேலும் உணவிற்கு சுவை சேர்க்கிறது.
அதுமட்டுமல்லாமல் தக்காளியில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன. விட்டமின் ஏ, பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம் ஆகிய ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. தக்காளி கண் பார்வைக்கு நல்லது. நீரிழிவு சிக்கல்களை களைய உதவுகிறது. சூரிய பாதிப்பிலிருந்து காக்கிறது. புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது.
சிறுநீரக கற்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் கால்சியம் கற்கள். நமது சிறுநீரகங்களில் அதிகளவு கால்சியம் ஆக்ஸலேட் படிவதால் தான் இந்த மாதிரியான கற்கள் உருவாகிறது. இந்த கால்சியம் ஆக்ஸலேட் பல்வேறு வகையான காய்கறிகளிலும் பழங்களிலும் காணப்படுகிறது. மேலும் நம் கல்லீரலும் தினமும் குறிப்பிட்ட அளவு கால்சியத்தை உற்பத்தி செய்கிறது. நமது எலும்புகள் மற்றும் தசைகள் இரத்தத்தில் இருந்து அதிகளவு கால்சியத்தை உறிஞ்சி விடுகின்றன.
இதுவே இந்த கால்சியம் அளவு இரத்தத்தில் அதிகமாக இருக்கும் போது சிறுநீரின் வழியாக வெளியேற்ற வேண்டிய சூழல் உண்டாகிறது. ஆனால் சிறுநீரகத்தால் அவ்வளவு கால்சியத்தை வெளியேற்ற முடியாது. எனவே இந்த கால்சியம் படிப்படியாக படிந்து படிகக் கற்களின் வடிவத்தை அடைகிறது. எனவே தான் தக்காளியில் ஆக்ஸலேட் இருப்பதால் அதை சிறுநீரக கற்களுடன் இணைக்கின்றனர்.
ஆனால் உண்மையில் தக்காளியில் காணப்படும் ஆக்ஸலேட் அளவு மிகவும் குறைவு. இந்த ஆக்ஸலேட் அளவு சிறுநீரக கற்களை உருவாக்காது. 100 கிராம் தக்காளியில் 5 கிராம் அளவு ஆக்ஸலேட் மட்டுமே இருக்கிறது. எனவே தக்காளியை சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் உருவாகும் என்பதை நீங்கள் நம்ப வேண்டாம். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் உங்க சிறுநீரை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். நீங்கள் விரும்பும் அளவிற்கு தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்ள முடியும். இதுவே நீங்கள் சிறுநீரக தொடர்பான பிரச்சினைகளை கொண்டு இருந்தால் கீரை, பீன்ஸ், பீட்ரூட் போன்ற அதிக அளவு ஆக்ஸலேட் உணவுகளை தவிருங்கள். காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன்பு சரியாக சமைத்து சாப்பிடுங்கள்.

அழகான காதல் யோசனைகள் உங்களையும் உங்க துணையையும் மகிழ்ச்சி உள்ளவராக மாற்றும். சரி ஊரடங்கு காலத்தில் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே அழகாக டேட்டிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இந்த கொரோனா லாக்டவுன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடத்தை சொல்லிக் கொடுத்து சென்று உள்ளது என்றே கூறலாம். அதிலும் காதல் ஜோடிகளுக்கு இடையே இந்த தனிமை ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது. நிறைய தம்பதிகள் தங்கள் காதல் இரவை வெளியில் சுத்தாமல் அன்றாட நாளில் எந்த வித்தியாசமும் இல்லாமல் இருப்பதே நிறைய பேருக்கு தொந்தரவாக இருக்கிறது. சரி ஊரடங்கு காலத்தில் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே அழகாக டேட்டிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
டேட்டிங் இரவு என்றாலே மெழுகுவர்த்தி இரவு என்பது கண்டிப்பாக இடம் பெறும். தினசரி வீட்டு வேலைகளை ஆபிஸ் வேலைகளை முடித்து விட்டு சோர்வாக படுக்கும் போது எப்படி தம்பதிகளுக்கிடையே நெருக்கம் அதிகமாகும். இதுவே உங்க துணையுடன் ஒரு அழகான இரவை கழித்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். இதற்காக வெளியே சென்று நிறைய மெனக்கெடல்களை எடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சில மெழுகுவர்த்தி விளக்குகள் , குவளை மீது சில அழகான பூங்கொத்துகள், பிண்ணனியில் மென்மையான இசை போன்றவற்றை ஒலிபரப்ப வேண்டும். உங்க டேட்டிங் இரவை அழகாக்க இதை விட பெரிய விஷயம் கிடையாது. இந்த அழகான இரவு உங்க இருவரின் சுற்றுப்புறத்தையும், மனநிலையும் மாற்ற உதவும் .
நீங்கள் சோர்வாக இருக்கும் சமயங்களில் இருவரும் இணைந்து உங்களுக்கு பிடித்த காதல் திரைப்படங்களை பட்டியலிட்டு பார்த்து வரலாம். உங்க இரவு உணவை முடித்த பிறகு கூட இதை நீங்கள் செய்யலாம். இதை நீங்கள் இன்னும் சுவராஸ்யமாக்க விரும்பினால் காதல் காட்சிகளை தேர்ந்தெடுத்து இயற்றலாம். காதல் கதாநாயகன், நாயகியாக நீங்கள் மாறலாம்.
பல நாட்களாக வீட்டிற்குள்ளேயே இருப்பது உங்க சூழலை மோசமாக்கலாம். எனவே உங்க வீட்டு சூழலையே மாற்றுவது உங்களுக்கு புதுவித காதல் அனுபவத்தை வழங்க வாய்ப்பு உள்ளது. ஒரு கனமான கண்ணாடி குடுவையில் மலர்கள் இட்டு வாசனை மெழுகுவர்த்தி ஏற்றி, உங்களுக்கு பிடித்த காதல் மெலோடியை ஒலிக்க வைத்து சின்ன சின்ன மாற்றங்களை ஏற்படுத்தி உங்க காதலில் ஒரு அழகான மாற்றத்தை கொண்டு வரலாம்.

பாலில் வைட்டமின் பி, ஹைட்ராக்ஸி அமிலங்கள், கால்சியம் நிறைந்த நன்மைகளைக் கொண்டிருக்கிறது. காய்ச்சாத பாலை சருமத்திற்கு பயன்படுத்தினால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
பாலில் வைட்டமின்பி, ஹைட்ராக்ஸி அமிலங்கள், கால்சியம், சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த நன்மைகளைக் கொண்டிருக்கிறது. இதை சருமத்தில் பயன்படுத்தும் போது அவை நாள் முழுக்க சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும். முகப்பரு இருக்கும் போது கூட வெறும் பாலை கொண்டே பதமாக தோல் பாதிப்படையாமல் காப்பாற்றும். எல்லா சருமத்திற்கும் ஏற்ற பாலை நீங்கள் எப்படி எதற்கு பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
பால் சருமத்தை இயற்கையாகவே சுத்தம் செய்யும் சிறந்த க்ளென்சிங் என்று சொல்லலாம். முகத்தில் இருக்கும் இறந்த செல்களை சரும பாதிப்பில்லாமல் வெளியேற்றுகிறது. சரும சுத்தம் என்னும் போது அவை முகத்தில் கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவற்றையும் வரவிடாமல் தடுக்கவும் உதவுகிறது என்பதால் இவை எப்போதும் முகத்துக்கு நன்மை செய்யகூடியது.
மெல்லிய துணி அல்லது பஞ்சை காய்ச்சாத பாலில் நனைத்து சருமம் முழுவதும் படரும் படி தேய்க்க வேண்டும். தினமும் செய்து வந்தால் மேக் அப் தேவையில்லை.
பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் சக்திவாய்ந்தது. சருமத்துக்கு பொலிவை அளிக்க கூடியது அதனாலேயே இதை இயற்கை மாய்சுரைசர் என்று அழைக்கிறோம். சருமத்தில் ஈரப்பசை இல்லாவிட்டால் அவை வறட்சிக்குள்ளாகும். அதனால் எப்போதும் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உரிய பராமரிப்பு செய்ய வேண்டியிருக்கும்.
காய்ச்சாத பால் 1 தேக்கரண்டி எடுத்து பஞ்சு உருண்டைகளை அதில் 2 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு உங்கள் சருமம் முழுவதும் முகம், கண்கள் சுற்றி, வாய்ப்பகுதியைச் சுற்றி, கழுத்து போன்ற இடங்களில் தடவி கொள்ளுங்கள். இவை காய்ந்ததும் நன்றாக உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினமும் மூன்று முறையாவது இதை செய்து வந்தால் கோடையிலும் முகம் ஓஹோ அழகுதான்.
இளவயதில் முதுமை தோற்றம் பிரச்சனை இருபாலருக்கும் உண்டு. இதற்கு காரணம் அதிக ரசாயனம் கலந்த மேக் அப் சாதனங்கள், அதிக ஆனால் சரியான பராமரிப்பின்மையாலும் முகத்தில் சுருக்கங்கள் வருவது அதிகரிக்க கூடும். சருமத்தில் இருக்கும் கொலாஜன் என்னும் உற்பத்தியை சீராக வைத்திருந்தால் சருமம் சுருக்கமில்லாமல் இருக்கும்.
பாலில் இருக்கும் லாக்டிக் அமிலமானது கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதால் சருமத்தில் சுருக்கங்கள் வருவது தடுக்கப்படுகிறது. சருமம் நெகிழாமல் இறுக்கமாக வைக்க உதவுகிறது. எப்படி பயன்படுத்துவது என்று கேட்கிறீர்களா? முகத்துக்கு பயன்படுத்தும் பேஸ் பேக் அனைத்திலும் பாலை கலந்து பயன்படுத்துவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். காய்ச்சாத பாலாக இருக்க வேண்டும்.
வெயிலினால், பருக்கள் அதிகமாகி புண் ஆகும் போது, சிவப்பு தடிப்புகள், வீக்கம் போன்றவை உண்டாகும் போதெல்லாம் முகத்தில் தாங்க முடியாத எரிச்சல் வரக்கூடும். அப்போதெல்லாம் பாலை அள்ளி முகத்தை கழுவியோ அல்லது பஞ்சில் பாலை நன்றாக முக்கி அதை முகத்தில் ஒற்றி ஒற்றியோ எடுத்தால் முகத்தில் எரிச்சல் குறையும். எரிச்சலும். வலியும், குறையும். தீவிரமான புண்களின் தாக்கம் குறையும்.
கோடையில் வெயிலிலிருந்து வரும் போது எரியும் சருமத்தை குளிர்ச்சியாக்க பாலைக்கொண்டு முகத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். எரிச்சல் உடனடியாக தணியும்.. சிவப்பு தடிப்பும் மாறும்.
வீட்டிலேயே பெடிக்யூர், மெனிக்யூர் செய்யும் போது நீங்கள் கூடுதல் அழகை பெற பாலை பயன்படுத்தலாம். காய்ச்சாத பால் ஒரு தேக்கரண்டியுடன் இரண்டு தேக்கரண்டி நீர் சேர்த்து நன்றாக கலக்கி அதில் கைவிரல்களை பத்து நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். அதே போன்று பாலை இலேசாக சூடுபடுத்தி அதனுடன் மூன்று மடங்கு வெதுவெதுப்பான நீர் சேர்த்து அகலமான பாத்திரத்தில் ஊற்றி அதில் கால்களை நனைக்கவும். பிறகு மிதமான பிரஷ் கொண்டு உள்ளங்கால், கால்களின் மேற்புறம் கழுவி உலர வைத்து மாய்சுரைசர் பயன்படுத்தவும். கைவிரல் நகங்கள் வலிமையாகவும் இருக்கும். கால்களில் இருக்கும் வெடிப்புகள் மறையும். மாவு படிந்தாற் போன்று இருக்கும் கால்கள் அழகிய வனப்பை பெறும்.

வைட்டமின் 'சி’ நிறைந்த ஹெல்தியானது இந்த நெல்லிக்காய் பொரியல். இதை சாதத்துக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பெரிய நெல்லிக்காய் - 10
இட்லி மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, சீரகம் - தேவையான அளவு
தாளிக்க
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

செய்முறை:
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நெல்லிக்காயின் விதைகளை நீக்கி ஆவியில் வேக விடவும்.

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நெல்லிக்காயின் விதைகளை நீக்கி ஆவியில் வேக விடவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து... வெந்த நெல்லிக்காய் துண்டுகள், உப்பு இட்லி மிளகாய்ப் பொடி சேர்த்துக் கிளறி கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சில பெண்களுக்கு பேறுகாலம் முழுவதும் கூட அஜீரணக்கோளாறு ஆட்டிபடைக்கிறது. இதை பக்குவமாக கையாண்டால் இந்த பிரச்சனையிலிருந்து எளிதாக விடுபட முடியும்.
கர்ப்பக்காலத்தில் கர்ப்பிணி பெண்கள் சத்தான உணவை சாப்பிட வேண்டும். ஆனால் உணவு உடலுக்குள் சென்று செரிமானம் ஆவதற்கு முன்பே ஒவ்வாமையால் வாந்தியாக வெளியேறிவிடுகிறது. சில பெண்களுக்கு பேறுகாலம் முழுவதும் கூட அஜீரணக்கோளாறு ஆட்டிபடைக்கிறது. இதை பக்குவமாக கையாண்டால் இந்த பிரச்சனையிலிருந்து எளிதாக விடுபட முடியும். அன்றாட வாழ்க்கை முறை, உணவு முறை, உடலை பழக்கும் முறை என்று ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தினாலே எளிதாக அதை தவிர்க்க முடியும். அப்படி செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கர்ப்பிணிகள் எப்போதும் திரவ ஆகாரத்தை அதிகம் எடுத்துகொள்ள வேண்டும். திரவ ஆகாரம் என்பதால் தண்ணீர் மட்டும் தான் அருந்த வேண்டும் என்பதில்லை. நீர் மோர், எலுமிச்சை சாறு, நெல்லிச்சாறு, இளநீர் என்று மாறி மாறி எடுத்துகொள்வதன் மூலம் அஜீரணத்தை தவிர்க்க முடியும்.
அதே நேரம் திரவ ஆகாரம் என்று அதிக அளவு காஃபி, டீ, கார்பனேட் பானங்கள், செயற்கை பானங்கள் போன்றவை எல்லாம் உடலுக்கு கேடு தருபவை என்பதோடு அஜீரணக்கோளாறுகளை அதிகமாக்கவே செய்திடும் என்பதையும் நினைவில்கொள்ளவேண்டும்.
வீட்டில் இருக்கும் பெரியவர்கள், கர்ப்பக்காலத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்து சாப்பிட வேண்டுமே என்று அதிக உணவை ஒரே நேரத்தில் திணிப்பது உண்டு. ஆனால் அப்படி சாப்பிடுவதால் உணவு செரிமானம் ஆவதில் தாமதம் உண்டாகவே செய்யும். அதற்கு பதிலாக உணவை பிரித்து பல முறை சாப்பிட வேண்டும். மூன்று வேளைக்கு மாற்றாக ஆறு அல்லது ஏழுமுறை உரிய இடைவெளியில் உணவு, பழத்துண்டுகள், காய்கறி சாலட், சுண்டல்வகைகள், சிற்றுண்டி என்று பிரித்து சிறிது சிறிதாக சாப்பிடுவதன் மூலம் அஜீரணம் உண்டாகாமால் தவிர்க்க முடியும்.
கர்ப்பகாலத்தில் பிடித்த உணவுகள் பிடிக்காமல் போகலாம். பிடிக்காத உணவுகளை தேடி சாப்பிட தூண்டும். ஆனால் சத்தான உணவுகள் கூட சமயங்களில் ஒவ்வாமையை உண்டு செய்யும்.
அப்படியான உணவு பொருள்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சிலருக்கு எலுமிச்சை, ஆரஞ்சு பழங்கள், சில கீரை வகைகள், சில உணவுகள் கூட ஒவ்வாமையை உண்டாக்காலாம். செரிமானக்கோளாறை ஏற்படுத்தலாம். அதனால் செரிமானக்கோளாறு அதிகமாகும் போது நீங்கள் எடுத்துகொண்ட உணவு பொருள்களை யோசியுங்கள். மீண்டும் இது தொடர்ந்தால் அந்த பொருளை பேறுகாலம் முழுவதும் தவிர்ப்பது தான் சிறந்தது.
பழங்கள் செரிமானத்தை எளிதாக்குபவை. அதிகரிக்ககூடியவை. அதனால் நார்ச்சத்து நிறைந்த ஆப்பிள் தினம் ஒன்று எடுத்துகொள்ளலாம். ஆப்பிள் போன்று மாதுளை, நெல்லிக்காய் என்று மாற்றி மாற்றி எடுத்துகொள்ளலாம். இவை செரிமானத்தை எளிதாக்குவதோடு மலச்சிக்கல் பிரச்சனையும் வரமால் தடுக்கலாம்.கர்ப்பக்காலம் முழுமையும் தினம் ஒரு பழம் சாப்பிடுவதன் மூலம் அஜீரணக்கோளாறையும் தடுக்க முடியும்.
அஜீரணத்தோடு நெஞ்செரிச்சல் என்பதும் வரக்கூடியது. குறிப்பாக இரவு நேரங்களில் அதிகப்படியான நெஞ்செரிச்சல் அவஸ்தை உண்டாகும். அதனால் மதிய வேளையில் படுக்கும் போதும் இரவு நேரங்களில் படுக்கும் போதும் ஒருமணி நேரம் முன்னதாக சாப்பிட வேண்டும். மேலும் இரவு நேரத்தில் சாப்பிட்டு முடித்ததும் மிதமான நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் உணவு செரிமானமாகும். ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் வெதுவெதுப்பான நீரை குடிப்பதன் மூலமும் உணவு செரிமானம் எளிதாகும்.
பொதுவாக சாப்பிட்டபிறகு மிதமான நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது. சாப்பிடும் போது கீழே உட்கார்ந்து சம்மணமிட்டு சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகும் செரிமானம் ஆகும் வரை கீழே குனிவதையும், கால்களை நீட்டி உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். அப்படி செய்தாலே உணவு சிறுகுடலுக்கு சீராக செல்லும். இரவு நேரங்களில் தலைக்கு சற்று உயரமான தலையணை வைத்து படுப்பதன் மூலம் நெஞ்செரிச்சல், அஜீரனக்கோளாறு தவிர்க்கலாம்.

விடுமுறை காரணமாக சுட்டி குழந்தைகள் முதல் பள்ளி செல்லும் மாணவர்கள் வரை அனைவரும் டி.வி. நிகழ்ச்சிகளுக்கு அடிமையாகி விட்டனர். இதனால் தங்களுக்கு வழங்கப்படும் வீட்டு பாடங்களை செய்ய மாணவமாணவிகள் ஆர்வம் காட்டுவதில்லை.
கொரோனா பீதியால் உலக நாடுகள் உறைந்து கிடக்கின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. பஸ், ரெயில் போக்குவரத்து முடக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு கருதி மழலையர் பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளன. தொடர் விடுமுறை காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்ற வகையில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வழியாக வகுப்புகளை கையாண்டு வருகின்றன.
வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாகவும், தனி செயலிகள் (ஆப்) மூலமாக வீடியோ கால் செய்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகிறார்கள். மாணவர்களுக்கு தினமும் வீட்டு பாடங்களும் வழங்கப்படுகின்றன. இந்த வீட்டு பாடங்களை மாணவர்கள் சரியாக செய்கிறார்களா? என்று கண்காணிக்கும் பொறுப்பை பெற்றோரிடமே ஆசிரியர்கள் வழங்கி இருக்கிறார்கள்.
ஊரடங்கு சூழலில் எத்தனையோ சவால்களுக்கு மத்தியில் குழந்தைகளை வீட்டு பாடம் செய்ய வைக்கவேண்டிய பெரும் சவாலுக்கு பெற்றோர் ஆளாகி விடுகிறார்கள். ஆனால் இதில் பெற்றோர் தேர்ச்சி அடைவதில்லை. ஏனென்றால் தொடர் விடுமுறை காரணமாக சுட்டி குழந்தைகள் முதல் பள்ளி செல்லும் மாணவர்கள் வரை அனைவரும் டி.வி. நிகழ்ச்சிகளுக்கு அடிமையாகி விட்டனர். அடுக்கடுக்கான நகைச்சுவை தொடர்கள், பொழுதுபோக்கு சினிமாக்கள், கார்ட்டூன் நிகழ்ச்சிகள் என டி.வி. சேனல்களில் வகைவகையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதால் டி.வி.க்களிலேயே எந்நேரமும் மூழ்கி கிடக்கிறார்கள்.
இதனால் தங்களுக்கு வழங்கப்படும் வீட்டு பாடங்களை செய்ய மாணவமாணவிகள் ஆர்வம் காட்டுவதில்லை. டி.வி.க்கள் முன்பு சரணாகதி அடைந்திருக்கும் குழந்தைகளை வீட்டுப்பாடம் செய்ய பெற்றோர் அழைத்தால் போதும், உடனே அவர்களின் முகம் மாற தொடங்கிவிடுகிறது. தொடர்ந்து அவர்களை அழைத்து கொண்டிருந்தாலோ அல்லது ஒரு கட்டத்தில் டி.வி.யை ‘ஆப்‘ செய்தாலோ ரிமோட்டை உடைத்தும் குழந்தைகள் ஆத்திரத்தை வெளிப்படுத்துகிறார்கள். பெற்றோர் கெஞ்சி கேட்டாலும், மிரட்டி பார்த்தாலும் வீட்டுப்பாடம் செய்ய குழந்தைகள் அடம் பிடித்து வருகிறார்கள். இதனால் என்னாதான் செய்வது? என்ற குழப்பத்தில் பெற்றோர் உள்ளனர்.
எப்படியும் வீட்டு பாடம் செய்த பக்கங்களை ஆசிரியர்களுக்கு கவனத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்பதால் பெற்றோர் வேறு வழியின்றி குழந்தைகளை இழுத்து பிடித்துக்கொண்டு வீட்டு பாடங்களை செய்ய வைக்கிறார்கள். ‘வீட்டு பாடம் செய்தால் தான் டி.வி. போடுவேன், சாக்லெட் வாங்கி தருவேன்‘, என்றெல்லாம் பேசி குழந்தைகளை சரிகட்ட முயற்சிக்கிறார்கள். குழந்தைகள் அரைகுறையாக விட்டுச்சென்ற வீட்டு பாடங்களை கூட முழுமையாக்கி அந்த பக்கங்களை படம் பிடித்து ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வழியாக அனுப்புகிறார்கள், பெற்றோர்.
எந்நேரமும் அனைத்து வீடுகளிலும் அணையாத விளக்காக டி.வி.க்கள் ஓடிக்கொண்டே இருப்பதையே பார்க்க முடிகிறது. இதனால் டி.வி. நிகழ்ச்சிகளை கண்கள் பார்த்து கொண்டிருந்தாலும், ‘எப்படி இவர்களை வழிக்கு கொண்டு வருவது?‘, என்ற சிந்தனையே பெற்றோர் மனதில் ஓடுகிறது.

இதயநோய் பாதிப்புக்குள்ளானவர்கள் வீட்டிலேயே மியூசிக் தெரபியாக இசையை கையாண்டால் இதய பாதிப்பில் இருந்து விடுபடலாம். ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் வராமல் இருக்க சிறந்த வழிமுறையாக இசை விளங்குகிறது.
தினமும் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது இசையை கேட்பது இதயத்திற்கு நல்லது என்பது, ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக முதல் தடவை மாரடைப்பு பாதிப்பை எதிர்கொண்டவர்கள், தொடர்ந்து இசையை ரசித்து கேட்கும் பட்சத்தில் அவர்களுக்கு மீண்டும் மாரடைப்பு வரும் ஆபத்து குறைவாக உள்ளது என்பதும் அந்த ஆய்வு மூலமாக தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி நெஞ்சு வலி, பதற்றம் ஏற்படாதவாறு, மனதை இலகுவாக வைத்திருக்கும் மகத்துவம் இசைக்கு உண்டு என்பதையும் அந்த ஆய்வை செய்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இசையை கேட்பதுகூட ஒருவித சிகிச்சை முறைதான் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். எந்தவொரு நோயையும் அணுகக்கூடிய எளிய மருந்தாக இசை இருப்பதாகவும், அதனால் நோயாளிகள் ‘மியூசிக் தெரசி’ சிகிச்சை மேற்கொள்வது பயனளிக்கும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
செர்பியாவில் மாரடைப்பு ஏற்பட்ட 350 பேரை இந்த ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். அவர்களை தினமும் மியூசிக் தெரபி சிகிச்சை அளித்து பரிசோதனை செய்துள்ளனர். அவர்களின் உடல்நிலை, மனநிலைக்கு ஏற்ற இசையைத் தேர்ந்தெடுத்து தினமும் 30 நிமிடங்கள் கேட்க வைத்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் அவர்களை கண்காணித்து இந்த ஆய்வு முடிவை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். சோதனை முடிவில் நெஞ்சுவலி, மாரடைப்பு, பதற்றம் போன்ற எந்த பாதிப்பும் அவர்களுக்கு ஏற்படவில்லை.
இதுதொடர்பாக ஆராய்ச்சி குழுவின் தலைவரான பிரெட்ராக் மிட்ரோவிக் கூறுகையில், “நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் மருத்துவ சிகிச்சையின்போதும், வீடு திரும்பிய பிறகும் மனதுக்கு பிடித்தமான இசையை கேட்கலாம். இதன் மூலம் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வலுவடைவார்கள். அவர்களிடத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதனால் நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் வீட்டிலேயே மியூசிக் தெரபியாக இசையை கையாண்டால் இதய பாதிப்பில் இருந்து விடுபடலாம். ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் வராமல் இருக்க சிறந்த வழிமுறையாக இசை விளங்குகிறது. முதலில் சாதாரணமாகத்தான் இசையை கேட்கிறார்கள். பின்னர் இசைக்குள்ளேயே மூழ்கி, ஆழ்ந்து ரசிக்க தொடங்குகிறார்கள்’’ என்கிறார்.

கொரோனா தனிமையில் முன்னாள் காதலரை நினைத்து உருகும் பெண்களுக்கு எதனால் முன்னாள் காதலர் குறித்த நினைவுகள் வருகிறது என்று இங்கே கூறப்பட்டுள்ளது
தனிமை என்பது எவ்வளவு கடினம் என்பதை இந்த கொரோனா சொல்லி தந்து வாழ்க்கையின் பல கடினமான உண்மைகளை எதிர்கொள்ளச் செய்துள்ளது. இதனால் நிறைய மக்கள் நிறைய விஷயங்களை நினைத்து யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஏன் சிலர் அவர்கள் வாழ்வில் கடந்து போன விஷயங்கள் குறித்து கனவும் கண்டு வருகிறார்கள். அந்த வகையில் பார்க்கும் போது சிலர் தங்கள் கடந்த கால காதலரை நினைத்து கனவு காண்பதாக ஆய்வக ரிப்போர்ட் கூறுகிறது. அது எப்படி என்பதை இங்கே காண்போம்.
நீங்கள் தனிமைப்படுத்தலின் போது உங்கள் முன்னாள் காதலனைப் பற்றி கனவு காண்கிறீர்களா, காலையில் அதைப் பற்றி யோசித்துப் பார்த்தால் உங்களுக்கு மனதிற்கு கஷ்டமாக தோன்றலாம். கடந்த காலம் உங்களுக்கு வசந்தம் நிறைந்ததாக இருக்கலாம். உங்கள் தனிமையை போக்க உங்க காதலன் உங்க அருகில் இருந்து இருக்கலாம். ஆனால் இப்பொழுது இந்த கொரோனா தனிமை அதை உங்களுக்கு நியாபகப்படுத்தி இருக்கலாம். ஆனால் இதெல்லாம் உங்களுக்கு மட்டும் நடக்கிறது என்று யோசிக்காதீர்கள். இந்த உலகில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் முன்னாள் காதலரை நினைத்து கனவு காண்பதாக ஆய்வக ரிப்போர்ட் கூறுகிறது.
உங்கள் முன்னாள் காதலன் /காதலி குறித்து கனவு வருவது அவர்கள் உங்கள் வாழ்க்கையில் திரும்ப வர விரும்புகிறார்கள் என்று அர்த்தமல்ல. ஆனால் இது உங்க உறவில் உள்ள ஒரு உறுதிப்பாடு சிக்கலை உண்டாக்குகிறது.
ஒருவரின் மரணம் குறித்து கனவு காண்பது நம்மை மிகவும் வருத்தமடையக் கூடிய விஷயமாக இருக்கும். அதிலும் அது உங்க முன்னாள் காதலன் பற்றிய கனவு என்றால் கண்டிப்பாக வேதனைப்படுவீர்கள். ஆனால் இந்த கனவு ஒரு சூழ்நிலையின் முடிவைக் கொடுக்கிறது. உங்க கடந்த காலத்தை விட்டு விடுங்கள் என்பதை கூறுகிறது. இது உண்மையில் நல்லது அல்லவா.
உங்க கடந்த கால வாழ்க்கையில் உங்க உறவில் ஏகப்பட்ட மோதல்களை நீங்கள் சந்தித்து இருக்கலாம். இப்படி உங்க முன்னாள் காதலனுடன் வாக்கு வாதம் மற்றும் மோதல்கள் போன்ற கனவு அசாதாரணமானது கிடையாது. ஒரு உறவு சமீபத்தில் முடிவடைந்து காயங்கள் புதியதாக இருக்கும்போது மட்டுமே இது நிகழ்கிறது. இந்த கனவு உங்களுக்கும் உங்க காதலனுக்கும் இடையேயுள்ள பல கவனிக்கப்படாத சிக்கல்களை ஏற்படுத்துகிறது. எனவே பல வருடங்களுக்கு பிறகும் இது ஏற்பட்டால் உங்க ஆழ்மனதில் என்ன வைத்திருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
உங்கள் முன்னாள் காதலனை திருமணம் செய்து கொள்வது போன்ற கனவு உங்கள் தற்போதைய வாழ்க்கையில் இன்னும் அர்த்தமுள்ள மற்றும் ஆழ்ந்த அர்ப்பணிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதை குறிக்கிறது. இதற்கு நீங்கள் இன்னும் காதலிக்கிறீர்கள் அல்லது உங்கள் முன்னாள் கூட்டாளரை திருமணம் செய்ய விரும்புகிறீர்கள் என்று அர்த்தமல்ல. ஆனால் உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய திசையை நோக்கி முன்னேற நீங்கள் தயாராக உள்ளீர்கள் என்பதை இது காட்டுகிறது.
உங்க முன்னாள் காதலுடன் சேருவது போன்ற கனவு, உங்க முன்னாள் காதலுடன் திரும்பி வருவது போன்ற கனவுகள் தற்போதைய உறவில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா அல்லது கடந்த கால உறவில் ஏதேனும் காணாமல் போனதா என்பதை காட்டுகிறது. ஒருவேளை நீங்கள் உங்க நிகழ்காலத்தை கடந்த காலத்துடன் ஒப்பிடுகிறீர்கள் என்று அர்த்தம் மட்டுமே. உங்கள் வாழ்க்கையில் அவரை அல்லது அவளைத் திரும்பப் பெற வேண்டும் என்பது அர்த்தமல்ல என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தை பிறக்கும்வரை இனி காத்திருக்க தேவையில்லை. வயிற்றுக்குள் இருக்கும்போதே குழந்தையை தொட்டுப் பார்த்து மகிழும் வகையில் தொழில்நுட்பமும் வளர்ந்திருக்கிறது.
கர்ப்பிணிகள், வயிற்றுக்குள் இருக்கும் தங்கள் குழந்தையை அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங் மூலம் பார்க்கிற பரவசத்துக்கு இணையில்லை. கருவில் இருக்கும் குழந்தையின் அசைவுகளை சி.டி.யாக பதிவு செய்து ரசிக்கிறவர்களும் உண்டு. ஆனால் பார்வையற்ற பெண்கள் இந்த மகிழ்ச்சியை எப்படி அனுபவிப்பார்கள்? அவர்களுக்காகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான், அச்சிடப்பட்ட ‘3டி அல்ட்ரா சவுண்ட்’. தொழில்நுட்பம்.
இந்த தொழில்நுட்பம் மூலம் கருவில் இருக்கும் குழந்தையின் உடல் அமைப்பை அப்படியே அச்சு அசலாக பிரதி எடுக்கலாம். பார்வையற்ற ஒரு பெண், கருவில் இருக்கும் தன் குழந்தையின் முகம், பிஞ்சு கைகள் மற்றும் கால்களை தொட்டுப் பார்க்கும் அற்புத தருணத்தை பதிவுசெய்து ஒரு வீடியோ பதிவு வெளியாகி இருக்கிறது. வெளியான சில நாட்களிலேயே பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்களால் அது பார்க்கப்பட்டு இருக்கிறது.
தொழில்நுட்பமும் தாய்மை உணர்வும் சங்கமிக்கும் இந்த 3டி அல்ட்ராசவுண்ட் தொழில் நுட்பத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்கள். குழந்தை பிறக்கும்வரை இனி காத்திருக்க தேவையில்லை. வயிற்றுக்குள் இருக்கும்போதே குழந்தையை தொட்டுப் பார்த்து மகிழும் வகையில் தொழில்நுட்பமும் வளர்ந்திருக்கிறது.

கொரோனா வைரசை எதிர்க்கும் திறன் கபசுர குடிநீருக்கு உண்டு என சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுவின் தலைமை இயக்குனர் டாக்டர் கே.கனகவல்லி தெரிவித்தார்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் 18 ஆயிரத்து 545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்றைய நிலவரப்படி 8 ஆயிரத்து 500 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தமிழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறவர்களுக்கு ஆங்கில மருந்துகளுடன், சித்த மருந்துகளான நிலவேம்பு குடிநீர், கபசுரக் குடிநீர் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஒருங்கிணைந்த சிகிச்சை மூலம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக குணமடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தேசிய தொற்றுநோய் நிலைய துணை இயக்குனர் டாக்டர் பிரப்தீப் கவுர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘கபசுர குடிநீர் போன்ற சிறப்பு குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நம்மை காக்கும் என்பது கட்டுக்கதை. எந்த உணவும் நம்மை கொரோனா வைரசில் இருந்து காப்பாற்றும் என்பதற்கான ஆதாரம் இல்லை’ என பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் தலைமை இயக்குநர் டாக்டர் கே.கனகவல்லி கூறியதாவது:-
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவுரைப்படி கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆங்கில மருந்துகளுடன் சேர்த்து நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் கொடுத்து வருகிறோம். காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்றவைகளுக்கு கபசுரக் குடிநீர் சிறந்த மருந்தாகும்.
அதனால் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கபசுர குடிநீர் 15 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு மூலிகைக்கும் நோய் தடுப்பாற்றல் இருக்கிறது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கபசுர குடிநீரில் கொரோனா வைரசை எதிர்க்கும் திறன் இருப்பது முதல்கட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. கபசுர குடிநீரால் கொரோனா வைரசை முழுமையாக குணப்படுத்த முடியும் என்று அறிவியல் பூர்வமாக விரைவில் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் கபசுர குடிநீர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குழுவின் முக்கிய உறுப்பினரான டாக்டர் பிரப்தீப் கவுர் கபசுரக் குடிநீர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.