என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    அம்மா அப்பாவுக்கு இடைஞ்சல் தராமலும் வெயில் உங்களை பாதிக்காமலும் இருக்கும் இடத்திலேயே உங்களுக்கு விருப்பமான வழியில் பொழுதுபோக்க மகிழ்ச்சி கொள்ள சில வழிகளை நாங்க சொல்லட்டுமா?
    கொரோனா ஊரடங்கால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை வெளியில் வர முடியாத நிலை உள்ளது. அடிக்கிற வெயிலுக்கு வெளியில் விளையாடப் போனால் அம்மா திட்டுறாங்களா? வீட்டிற்குள் விளையாடினாலும் சேட்டை பண்றதா கண்டிக்கிறாங்களா? அம்மாஅப்பாவுக்கு இடைஞ்சல் தராமலும் வெயில் உங்களை பாதிக்காமலும் இருக்கும் இடத்திலேயே உங்களுக்கு விருப்பமான வழியில் பொழுதுபோக்க மகிழ்ச்சி கொள்ள சில வழிகளை நாங்க சொல்லட்டுமா?

    குட்டீஸ் உங்களுக்கு என்னென்ன பழங்கள் பிடிக்கும். ஆப்பிள் மாதுளை கொய்யான்னு அடுக்கிக்கிட்டே போறீங்களா? உங்களுக்குப் பிடிச்ச எல்லா பழத்தையும் சேர்த்து செய்த சாலட் எங்காவது கிடைத்தால் நிறைய ரசித்து சாப்பிடுவீர்கள்தானே? வழக்கமாக வெளியில் செல்லும்போது அம்மா அப்பாதான் உங்களுக்கு சாலட்டும் தின்பண்டங்களும் வாங்கித் தந்திருப்பார்கள் இந்த கோடையில் உங்களுக்குப் பிடித்தமான சாலட்டை நீங்களே செய்யுங்கள். அதை அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கொடுத்து ருசியுங்கள்.

    சாலட் செய்வது கடினமான வேலையல்ல. அம்மா காய்கறி வெட்டும்போது நீங்கள் கவனித்திருப்பீர்கள் அல்லது உதவி செய்திருப்பீர்கள் இல்லையா? அதேபோல கத்தி கத்திரிகளை கண்டால் எதையாவது வெட்ட வேண்டும் என்று உங்களுக்கு இயல்பாகவே தோன்றுமில்லையா? இந்த இரண்டு ஆர்வமும் இருந்தால் எளிமையாக சாலட் செய்துவிடலாம். அம்மாவிடம் சாலட் செய்யப்போகிறேன் என்று சொல்லி விட்டு சில பழங்களையும் கத்தியையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை சிறுசிறு துண்டுகளாக வெட்டுங்கள் அவற்றை பெரிய பாத்திஇரத்தில் மொத்தமாக சேர்த்து கிளறுங்கள். ருசியான சாலட் தயார். பெற்றோருக்கும் ருசிக்கக் கொடுத்து பாராட்டை பெறுங்கள்.

    சாலட்டில் தேவையான சில பச்சைக் காய்கறிகளையும் சேர்த்துக் கொண்டால் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. கோடை நேர உடல் உஷ்ணத்தையும் தணிக்கும். எங்கே சாலட் செய்ய கிளம்பிவிட்டீர்களா? அதை செய்யும்போது கத்தியை மட்டும் கவனமாக கையாள வேண்டும் என்பதை ஞாபகத்தில் வச்சுக்கோங்க.

    ஐஸ்கிரீம் உங்களுக்குப் பிடிக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் உங்களுக்கு ஐஸ்கிரீம் செய்யத் தெரியுமா? வீட்டிற்குவீடு குளிர்சாதன பெட்டி வந்துவிட்ட பிறகு ஐஸ்கிரீம் செய்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஐஸ் கிரீம் செய்வது கோடைக்கு நல்ல பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் அதை சுவைத்து மகிழ்ந்தும் ஆனந்தப்படலாம்.

    ஐஸ்கிரீம் மூலப்பொருட்களை பிசைந்து கொள்ளுங்கள் தேவையான அளவுக்கு இனிப்பும் சேர்த்துக் கொள்ளுங்கள். சாக்லெட் வனிலா அல்லது உங்களுக்குப் பிடித்த சுவை எதுவோ அந்தப் பொருட்களையும் சேர்த்து கலக்குங்கள். கெட்டியாகவும் அல்லாமல் திரவமாகவும் அல்லாமல் குளுகுளு தன்மை பதத்திற்கு கலக்கிய பின்பு பிரிஜ்ஜின் பிரீஸரில் சிறிது நேரம் வைத்திருங்கள். இப்போது நீங்களே தயாரித்த ஜில்ஜில் ஐஸ்கிரீம் சாப்பிடத் தயார். பெற்றோர் மற்றும் தோழன் தோழிகளுடன் ரசித்து சாப்பிடுங்கள்.

    உங்களுக்கு ஒரிகாமி பற்றி பள்ளியில் சொல்லித் தந்திருக்கிறார்களா? காகிதத்தை மடித்து குறிப்பிட்ட இடங்களில் கத்தரிக்கோல் மூலம் நறுக்குவதால் புதிய வடிவங்களையும் உருவங்களையும் உருவாக்குவது ஒரிகாமி கலையாகும். இது உங்கள் கற்பனை திறனை வளர்க்கும். பூக்கள் பழங்கள் எழுத்துகள் பறவைகள் விலங்குகள் உருவங்களை ஒரிகாமி காகிதத்தில் செய்து அசத்துங்கள். அழகிய வடிவங்களை நண்பர்களிடமும் தோழிகளிடமும் காட்டி மகிழுங்கள்.அட்டையில் ஒட்டி அலமாரியில் வைத்து அலங்காரப் பொருளாகவும் பயன்படுத்தலாம். நினைவுப் பெட்டகத்தில் சேமித்து வைத்து மலரும் நினைவுகளாக பின்னாளில் அசைபோடலாம்.

    கோடையை பயனுள்ள வகையில் கழிக்க மிக முக்கியமான கலையாக ஓவியத்திறமையை பயன்படுத்தலாம். வண்ணம் தீட்டுவது புதிய ஓவியங்களை வரைந்து பழகுவது ஓவியங்களை சிற்பமாக உருவாக்க முயற்சிப்பது என உங்கள் நேஇரத்தை கலை வண்ணத்திற்காக செலவு செய்யலாம். அது உங்கள் புத்திக்கூர்மையை வளர்க்கும். பொறுமையை உயர்த்தும். அழகியல் ஆர்வத்தை மெருகேற்றும். வடிவமைப்புத் திறமையை வளர்க்கும். சிறந்த ஓவியங்களை வரவேற்பறையில் வைத்து அழகுபடுத்திக் கொள்ளலாம்.

    புதிய புதிய வார்த்தைகளை கற்றுக் கொள்ளும் வார்த்தை விளையாட்டு உங்களுக்குப் பிடிக்கும் இல்லையா? இப்போது இதற்கென தனியே புத்தகங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அவற்றை வாங்கி குறுக்கு எழுத்துப் போட்டிகள் வார்த்தைகள் கண்டுபிடித்தலில் ஈடுபடுங்கள். உங்கள் புத்திக்கூர்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

    அதேபோல புத்தகவாசிப்பும் பயனுள்ள பொழுதுபோக்காகும். உங்களுக்கு விருப்பமான கதைகள் கார்ட்டூன் நாயகர்கள் பற்றிய புத்தகங்கள் வரலாற்று குறிப்புகள் சமையல் கலை கதைகள் தலைவர்கள் வரலாறு உள்ளிட்ட உங்களுக்கு விருப்பமான தலைப்பிலான சில புத்தகங்களை இந்த கோடை விடுமுறையில் படித்து முடிப்பது என சபதம் எடுங்கள். அது உங்கள் அறிவை வளர்க்கும்.

    உங்கள் விருப்பமான சைக்கிள் அப்பாவுடன் ஆசையாக பயணிக்கும் கார் பைக் ஆகியவற்றை சுத்தமாக்குங்கள். ஈஇரத்துணியால் துடைத்து அழுக்கு மற்றும் கறைகளை நீக்குங்கள் எண்ணெய் மற்றும் கிரீஸ் இட வேண்டிய இடங்களில் அவற்றை இட்டு வண்டியை பராமரியுங்கள்.

    கண்ணாடி மாற்றுவது ஸ்போக்ஸ் மற்றும் நட்டுகள் மாற்றும் வேலைகளையும் செய்து பாருங்கள். அல்லது மெக்கானிக் செட் எடுத்துச் சென்று சீர்படுத்துங்கள். ஜாலியாக காலையிலும் மாலையிலும் ரவுண்டு செல்லுங்கள். உடலை வலுப்படுத்துங்கள்.

    சிறந்த பொழுதுபோக்குகளில் ஒன்று தோட்ட பராமரிப்பு. இது மனதை பக்குவப்படுத்தும். செடிகளை நடுவது விதைகளை பராமரிப்பது நீர் தெளிப்பது களை எடுப்பது என அடுக்கடுக்கான வேலைகள் உங்கள் ஆர்வத்தை தூண்டும். செடிகள் வளர்ந்து பூ பூப்பதும் காய் காய்ப்பதும் நிழல் தருவதும் உங்களுக்கு மனதளவில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வளர்க்கும்.

    மனதுக்கு உற்சாகம் தரக்கூடியவை இசை. உங்களுக்கு விருப்பமான இசைக்கருவி ஏதாவது ஒன்றை இந்த கோடையில் இசைக்கப் பழகலாம். உடலுக்கு ஊக்கம் தரக்கூடியது நடனம். விரும்பிய நடனம் ஒன்றை கற்றுக் கொள்ளலாம். இதனால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறும். கல்வித்திறனும் மேம்படும்.

    வீட்டில் இருக்கும் பொருட்கள் தூக்கி எறியும் நிலையிலுள்ள கழிவுப் பொருட்களைக் கொண்டு உங்கள் சிந்தனையில் புதிய பொருட்களை உருவாக்குங்கள். உங்கள் கல்வி மேஜைக்கான பென் ஸ்டாண்டு உள்ளிட்ட அலங்கார பொருட்களை உருவாக்குங்கள். காகிதங்களில் முகமூடி செய்து வண்ணம் தீட்டி பயன்படுத்தலாம். பூக்கள் வாழ்த்து அட்டைகள் தயாரிக்கலாம். ஐஸ்கிரீம் குச்சிகள் கார்டுபோர்டு அட்டைகள் வண்ணக்காகிதம் பென்சில் ஸ்கெட்ச் மூலம் உங்கள் விருப்பம்போல கலைப்பொருட்களை உருவாக்கி வீட்டையே அலங்கரித்துவிடலாம்.

    கைத்தையல் மூலம் உங்கள் உடைகளில் எம்ப்ராய்டரிங் செய்யலாம். அழகிய பட்டங்கள் செய்து நண்பர்களுடன் சேர்ந்து பறக்கவிட்டு மகிழலாம். வேடிக்கையான சில விளையாட்டுகளை நீங்களாக உருவாக்கி நண்பர்களுடன் விளையாடலாம். இப்படி வெயிலில் திரியாமல் உங்கள் எண்ணம்போல பனுள்ள வழிகளில் பொழுதை கழித்தால் அம்மா திட்டமாட்டாங்க. அப்பா நீங்க கேட்டதெல்லாம் வாங்கித்தருவார்.

    பெற்றோருக்கு சில வார்த்தைகள்: உண்மையில் செயல்படாத குழந்தைகள் சேட்டை செய்யத் தொடங்கிவிடுவார்கள். அவர்களை பயனுள்ள வகையில் செயல்பட தூண்டுவது பெற்றோரின் கடமை. அப்படி தூண்டிவிட்டால் அவர்களின் திறமையும் வளரும். கோடையின் கொடுமையும் குழந்தைகளை பாதிக்காது.
    கொரோனா ஊரடங்கால் பியூட்டி பார்லர் இல்லை என்று கவலைப்படும் பெண்கள் வீட்டிலேயே எளிய முறையில் ஃபேஷியல் செய்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.
    கொரோனா ஊரடங்கால் பியூட்டி பார்லர்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் தங்கள் அழகை பராமரிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள், பெண்கள் முகத்தை பராமரிக்க பார்லர்தான் செல்ல வேண்டும் என்றில்லை, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே பார்லருக்கு நிகரான அழகுப் பராமரிப்பு, பொலிவையும் மீட்டெடுக்க முடியும்.

    முதலில் பிசுக்கை போக்க காய்ச்சாத பாலை பஞ்சில் நனைத்து முகம், கழுத்தை துடையுங்கள்.

    ஈரம் காய்ந்ததும் எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன், சர்க்கரை 1 டீஸ்பூன் மற்றும் தேன் 1/2 டீஸ்பூன் எடுத்துக்கொண்டு நன்குக் கலக்குங்கள். அதை முகத்தில் அப்ளை செய்து ஸ்கிரப் செய்யுங்கள். இதனால் இறந்த செல்கள், அழுக்குகள் வெளியேறும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள்.

    கற்றாழை ஜெல் - 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் 1 டீஸ்பூன் என எடுத்துக்கொண்டு நன்குக் கலக்குங்கள். தற்போது கொஞ்சம் எடுத்து முகத்தில் தேய்த்து வட்டப்பாதையில் மசாஜ் செய்யுங்கள். 15 நிமிடங்களுக்கு இப்படி செய்யுங்கள். இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். பின் நீரில் கழுவி விடுங்கள்.

    கடலை மாவு 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், பால் - 2 டீஸ்பூன், தேன் 1 டீஸ்பூன், ரோஸ் வாட்டர் 1 டீஸ்பூன் என அனைத்தையும் சேர்த்து நன்குக் கலக்குங்கள். முகத்தில் இந்த பேஸ்டை அப்ளை செய்து 20 நிமிடங்கள் காய வையுங்கள். இறுதியாகா கழுவும் முன் கொஞ்சம் தண்ணீர் விட்டு 5 நிமிடம் மசாஜ் செய்துவிட்டுக் கழுவுங்கள்.

    தற்போது உங்கள் முகம் முன்பை விட பளபளப்பாக ஜொலிப்பதை உணரலாம்.
    கொரோனா பாதிப்பு தொழில்நுட்ப அலுவலகங்களில் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் வெறும் தற்காலிக மாற்றங்கள் அல்ல. இவை நிரந்தர மாற்றங்களாக நிலைக்கவும் வாய்ப்பு உண்டு என்பது கவனிக்கத்தக்கது.
    சர்வதேச அளவில் கொரோனா கொண்டு வந்திருக்கும் மாற்றங்கள் கணக்கில் அடங்காதவை. வாழ்க்கை முறை, மருத்துவம், கல்வி, சுகாதாரம், பயணம் என அனைத்து தளங்களிலும் கொரோனாவின் பாதிப்பு பெருமளவில் இருக்கிறது. தொழில்நுட்ப அலுவலகங்களில் இந்த கிருமி கொண்டு வந்திருக்கும் மாற்றங்கள் கணிசமானவை. தொழில்நுட்பத்தின் உச்சத்தில் உலகம் இருந்த போது கண்ணுக்குத் தெரியாத கிருமி வந்து தனது நெம்பு கோலால் உலகைப் புரட்டியிருக்கிறது. உலகத்தை தனது சுருக்குப் பையில் போட்டதாக தொழில்நுட்பம் கர்வம் கொண்ட கணத்தில் கொரோனா வந்து, தொழில்நுட்பத்தின் சிகரங்களைச் சுருட்டி அறைகளில் அடைத்திருக்கிறது.

    இந்த சர்வதேசப் பாதிப்பு தொழில்நுட்ப அலுவலகங்களில் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் வெறும் தற்காலிக மாற்றங்கள் அல்ல. இவை நிரந்தர மாற்றங்களாக நிலைக்கவும் வாய்ப்பு உண்டு என்பது கவனிக்கத்தக்கது. அவற்றில் முக்கியமான சிலவற்றைப் பார்க்கலாம்.

    1. வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறை பெரும்பாலான நிறுவனங்களில் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. அலுவலகத்துக்கு வராவிட்டால் வேலை செய்ய முடியாது என நம்பிக் கொண்டிருந்த மிக முக்கியமான பணிகள் கூட வீடுகளிலிருந்து இன்றைக்கு நடந்து கொண்டிருக்கின்றன. பணியாளர்களின் பயண நேரமும், பயண சோர்வும் தவிர்க்கப்படுவதால் பணிகள் வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பல நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதை நிரந்தரம் ஆக்கலாமா என யோசிக்கத் துவங்கியிருக்கின்றன.

    2. நேருக்கு நேர் பார்த்து தான் முடிவெடுக்க வேண்டும் எனும் செயல்களெல்லாம்டிஜிட்டல் வெளியில் சாத்தியமாகிறது. சமீபத்தில் ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்தை பெரிய விலை கொடுத்து வாங்கியது, இந்த கொடுக்கல் வாங்கல் கையகப்படுத்துதல் அனைத்துமேடிஜிட்டல் வெளியிலேயே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனங்களின் முக்கியமான சந்திப்புகள் எல்லாம் இன்றைக்குடிஜிட்டல் வழியாகவே நடக்கின்றன. ஏராளமான வீடியோ உரையாடல் செயலிகள் இப்போது முழு மூச்சில் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

    3. இணைய பயன்பாடும், இணைய வேகமும் மிக முக்கியமாகி இருக்கிறது. அனைத்து விதமான தகவல் பரிமாற்றங்களும் இணைய வெளியில் நடைபெறுவதால் இதில் பற்றாக்குறையும் உருவாகியிருக்கிறது. எனவே வீடியோ படங்களை ஒளிபரப்பும்டிஜிட்டல் சேனல்கள் தங்களது தரத்தை மீடியம் அளவில் வைத்திருக்க வேண்டும் எனும் கோரிக்கையையும் நிறுவனங்கள் முன் மொழிகின்றன. இதன் மூலம் தொழில் சார்ந்த இணையப் பயன்பாடுகள் தடைபடாது என்பது அவர்களது நம்பிக்கை. இந்த ஏரியாவில் புதுமையாக யோசிக்கும் புது நிறுவனங்கள் களமிறங்கத் துவங்கியுள்ளன.

    4. பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு உருவாகியிருக்கிறது. தாய்மையினாலும், குழந்தைப் பராமரிப்புக்காகவும், வீட்டு வேலை காரணமாகவும் அலுவலக வேலையை விட்ட பெண்கள் மீண்டும் வேலையில் நுழையவும், வீடுகளிலிருந்தே வேலை செய்யவும் வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. திறமையான, பயணம் செய்ய முடியாத, உடலளவில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் மக்களும் கூட வீடுகளிலிருந்தே பணி செய்யும் வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன.

    5. தலைமை பண்புகளும் வெகுவாக மாற்றமடைந்துள்ளன. ஊழியர்களோடு இணைந்து செயல்பட “எமோஷனல் பேலன்ஸ்” எனப்படும் ‘உணர்வுகளை சமநிலைப்படுத்தும் திறமையுடைய’ தலைவர்கள் தேவையாகியிருக்கின்றனர். வேலைக்காக மெட்ரோ சிட்டிகளில் மக்கள் தேனீக்களை போலக் குவியும் நிலை எதிர்காலத்தில் மாறும். கிராமங்களிலிருந்தும் வேலை செய்யும் சூழல் உருவாவதால், வாழ்க்கைத் தரம் மேம்படும். நெரிசல் நகரங்கள் மூச்சு விடும். மாசுகளின் அளவு நிச்சயம் குறையும். இப்படி பல்வேறு நன்மைகள் படிப்படியாக உருவாகும். அதேபோல உலகின் பல பாகங்களுக்கும் பயணம் செய்துதான் தொழிலை வளர்க்க வேண்டும் எனும் நடைமுறையையும் இந்த கொரோனா காலம் உடைத்துக் காட்டியிருக்கிறது. எனவே ஏராளமான அலுவல் பயணங்கள் தவிர்க்கப்படும் என்பதும் நிதர்சனம்.

    6. பல்வேறு புதிய தொழில்கள் இந்த மாற்றத்தின் மூலமாக உருவாகும். உதாரணமாக மொபைல் ஆப்ஸ்களின் வருகை இன்னும் அதிகரிக்கும், பழைய பிரவுசிங் செண்டர்களைப் போல ‘பயன்கொடுத்து பயன்படுத்து’ எனும் தற்காலிக பணி நிலையங்கள் உருவாகும். ஆன்லைன் மூலமாக மட்டுமே இயங்கும்டிஜிட்டல் நிறுவனங்கள் வளரும். அலுவலகத்துக்கு இடமே தேவையில்லை எனும் புதிய முறை இன்னும் அதிக வேகமாய்ப் பரவும்.

    7. வீடுகளிலிருந்தே தொடர்ந்து வேலை செய்வது உளவியல் ரீதியாக ஊழியர்களைப் பாதிக்கும் எனுக் கவலையை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நாதெல்லா தெரிவித்திருந்தார். ‘லாக் டவுன்’ மக்களை வீட்டை விட்டு வெளியே வரவிடாமல் செய்திருப்பதால் மன ரீதியான பாதிப்புகள் நிகழலாம், ஆனால் இந்த லாக்டவுன் முடிந்த பின் வீடுகளிலிருந்து வேலை செய்வது உளவியல் ரீதியான பாதிப்புகளை உருவாக்காது என்பதே உண்மையாகும்

    8. நிறுவனங்களை விட்டு பணியாளர்கள் விலகும் எண்ணிக்கை பெருமளவில் குறையும் என்கிறது ஆய்வு ஒன்று. பயண நேரம், கட்டாய வேலை நேரக் கட்டுப்பாடுகள், தனிப்பட்ட காரணங்கள், அலுவலகத்தின் மோசமான சூழல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக வேலையை விட நினைத்திருப்பவர்கள் தங்களுடைய முடிவை மாற்றிக் கொள்கின்றனர். காரணம் இந்த புதிய வகையில் வேலையும், வாழ்க்கையும் இணைந்து பயணிக்கும்.

    9. கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம் பெரும்பாலான தகவல் சேமிப்புகளை தனக்குள் அரவணைத்துக் கொள்ளும். ஆட்டோமேஷன், ரோபோட்டிக்ஸ் போன்றவை இன்னும் அதிக வேகத்தில் பயணிக்கும் என்பதையே பெரும்பாலான நிறுவனத்தின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். நேரடி கண்காணிப்பு தேவைப்படும் ‘லெகசி’ சிஸ்டம் எனப்படும் பழைய கால முறைகள் மாறி புதிய டெக்னாலஜிகள் நிரம்பும். கூடவே, மென்பொருள் பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு போன்றவற்றின் தேவையும் அதிகரிக்கும்.

    சேவியர்
    ரம்ஜான் தினமான இன்று வாயையும், வயிற்றையும் கட்டுப்படுத்த முடியாமல் ஹெவியாக சாப்பிட்டுவிட்டு செரிமானமாகாமல் தவித்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சாப்பிட்டால் இந்த பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.
    ரம்ஜானுக்கு முன் விரதம் இருந்த நீங்கள் அறுசுவை உணவுகளைப் பார்த்ததும் நாவை அடக்கமுடியாமல் வெளுத்து கட்டக்கூடும். அப்படி ரம்ஜான் கொண்டாட்டத்தில் கட்டுக்கடங்காத உணவுகள் உடலில் கொழுப்புகளாக சேர்ந்து எடை கூடிவிட்டதைப் போல் உணர்ந்தால் இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க...

    சாப்பிடும்போது அதிகம் சாப்பிடாமல் இருக்க சிம்பிள் ட்டிக்ஸ் தண்ணீர் குடிப்பதுதான். உணவுக்கு முன் 2 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். இதனால் வயிறு கொஞ்சம் நிறைந்துவிடும். அதிக உணவும் சாப்பிட மாட்டீர்கள். கட்டுப்பாடு அவசியம் : வயிறு நிறைந்துவிட்டதை போல் உணர்ந்தால் அப்போதே சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

    ரம்ஜான் என்றாலே உணவுகளும் ஹெவியாகத்தான் இருக்கும். பார்த்ததும் வாயையும், வயிற்றையும் கட்டுப்படுத்த முடியாமல் ஹெவியாக சாப்பிட்டுவிட்டு செரிமானமாகாமல் தவித்தால் கவலையே வேண்டாம். இந்த வீட்டுக்குறிப்புகளை செய்தால் செரிமானமடைந்து நெஞ்சு எரிச்சல் குணமாகும்.

    சமையலுக்குப் பயன்படுத்தப்படும் ஏலக்காய், பட்டை, கிராம்பு போன்றவை பல வகையான உடல் உபாதைகளுக்கு உதவும். நெஞ்சு எரிச்சலுக்கு ஏலக்காய், பட்டை , கிராம்பை என ஏதாவது ஒன்றை அப்படியே வாயில் மென்று விழுங்கலாம். இல்லையெனில் இவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து வெது வெதுப்பாக அருந்தலாம்.

    செரிமானமின்மை , நெஞ்சு எரிச்சலை தவிர்க்க ஒரு ஸ்பூன் சோம்பை மென்று விழுங்கினால் குறையும்.

    இஞ்சி பாரம்பரிய மருத்துவம். இதை தண்ணீரில் கொதிக்க வைத்து வெது வெதுப்பாக அருந்தலாம் அல்லது அப்படியே மென்று விழுங்கலாம்.

    உணவு உண்ட பின் உடனே படுப்பதை தவிர்க்கவும். படுப்பது செரிமானம் தடைபட்டு நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும். குறைந்தது 1 மணிநேரத்திற்கு படுக்காமல் இருப்பது நல்லது.

    கார்பனேட், கியாஸ் கலந்த குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும். இது pH அளவை சீர்குலைக்கும்.
    பூண்டை பயன்படுத்தி கூந்தல் மற்றும் சரும பராமரிப்பிற்கு என்னென்ன செய்யலாம் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    முகத்தில் ஆங்காக்கே தென்படும் பருக்கள் மறைய பூண்டை நன்கு மசித்துக்கொள்ளுங்கள். பின் அதில் தேன் மற்றும் கொஞ்சம் தயிர் சேர்த்து பருக்கள் உள்ள இடங்களில் அப்ளை செய்யுங்கள். முகத்தில் ஆங்காக்கே தென்படும் பருக்கள் மறைய பூண்டை நன்கு மசித்துக்கொள்ளுங்கள். பின் அதில் தேன் மற்றும் கொஞ்சம் தயிர் சேர்த்து பருக்கள் உள்ள இடங்களில் அப்ளை செய்யுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இப்படி செய்து வர முகப்பருக்களின் அளவு குறைந்து அப்படியே மறைவதைக் காணலாம்.

    பூண்டை இடித்துக்கொள்ளுங்கள். பின் ஆலிவ் எண்ணெய்யை கடாயில் ஊற்றி காய்ச்சி அதில் இடித்த பூண்டுகளையும் சேர்த்து கொதிக்க வையுங்கள். அந்த எண்ணெய்யை வடிகட்டி தலையின் வேர்களில் தடவி மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து தலையை அலசுங்கள்.இப்படி தலைக்குக் குளிக்கும்போதெல்லாம் செய்து வாருங்கள் பலன் கிடைக்கும்.

    பூண்டில் உள்ள சில குறிப்பிட்ட தன்மைகள் காரணமாக, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய மூலப்பொருளாக பூண்டு திகழ்கிறது. அவை,

    * பூண்டில், ஜின்க், சல்பர் மற்றும் கால்சியம் போன்ற சில முக்கிய மூலப்பொருட்கள் இருப்பதால், முடி உதிர்வதை எதிர்த்து போராட உதவுகிறது.

    * பூண்டு , நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், தலை முடி உதிர்விற்கு காரணமான கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் அழிக்க உதவுகிறது

    * பூண்டில் உள்ள செலெனியம் என்னும் கூறு, இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.

    * முடியின் வேர்க்கால்களை சுத்தம் செய்து, அடைப்பைப் போக்குகிறது, இதனால் முடியின் வலிமை அதிகரிக்கிறது.

    * தலையில் உள்ள பொடுகைப் போக்கவும் பூண்டு சிறந்த தீர்வைத் தருகிறது.

    கூந்தல் ஆரோக்கியத்திற்கு, தேங்காய் எண்ணெய் பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது. பூண்டுடன் இணைந்து தேங்காய் எண்ணெய், முடி உதிர்வை எதிர்த்து போராடுகிறது. இரண்டு பல் பூண்டை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    தேங்காய் எண்ணெய்யை மிதமாக சூடாக்கி, அதில் பூண்டைச் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் தலையில் நன்றாக மசாஜ் செய்து தடவவும். அரை மணி நேரம் இந்த எண்ணெய் உங்கள் தலையில் ஊறியவுடன், வழக்கமான ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலசவும்.

    பூண்டுடன் தேன் சேர்த்து முடி உதிர்வுக்கான சிகிச்சையில் பயன்படுத்தலாம். 8 பல் பூண்டை எடுத்து மசித்து, இரண்டு ஸ்பூன் அளவிற்கு சாறு எடுத்துக் கொள்ளவும். இந்த சாற்றில் ஒரு ஸ்பூன் அளவு தேன் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உங்கள் தலையில் உச்சி முதல் நுனி வரை தடவவும்.

    பிறகு 20 நிமிடங்கள் ஊற விடவும். 20 நிமிடம் கழித்து, வழக்கமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். ஒரு வாரத்தில் இரண்டு முறை இந்த தீர்வைப் பின்பற்றுவதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
    கொரோனா தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளை அதிகளவில் சாப்பிடுவது நல்லது. அந்த வகையில் இன்று ப்ரூட் மிக்ஸ் தயிர் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சாதம் - 1 கப் வடித்த,
    புளிக்காத தயிர் - 50 மி.லி. ,
    ஆறவைத்த பால் - 100 மி.லி. ,
    உப்பு, கறிவேப்பிலை - தேவைக்கு,
    உலர்ந்த கறுப்பு திராட்சை - 1 மேஜை கரண்டி ,
    எண்ணெய் - 2 தேக்கரண்டி,
    கடுகு அரை - தேக்கரண்டி ,
    மாதுளை முத்துக்கள் - 100 கிராம் ,
    நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் - 3 மேஜை கரண்டி ,
    வெள்ளரி துண்டுகள் - 3 மேஜை கரண்டி
    திராட்சை பழம் - 2 மேஜை கரண்டி நறுக்கிய ,
    சீரகம் - 1 தேக்கரண்டி ,
    இஞ்சி துண்டுகள் - 3 தேக்கரண்டி ,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை .

    ப்ரூட் மிக்ஸ் தயிர் சாதம்

    செய்முறை:

    நன்றாக வெந்த சாதத்துடன் உப்பு மற்றும் பாலை ஊற்றி பிசையவும். சாதம் சூடாறிய பின்பு தயிரை சேர்த்து பிசைய வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், இஞ்சி போன்றவற்றை சேர்த்து வதக்கவும்.

    அதனுடன் அனைத்து பழவகைகளையும் சேர்த்து கிளறி, புளிக்கும் முன்பே சாப்பிடவும்.

    அருமையான ப்ரூட் மிக்ஸ் தயிர் சாதம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாதவிலக்கு நாட்களில் உண்டாகிற வலி, பெரும்பாலான பெண்களுக்கு மரண வேதனையானது. வலியுடன் கூடிய மாதவிலக்கு ஏற்பட என்ன காரணம், அதற்கான சிகிச்சைகள், ஆலோசனைகள் என எல்லாவற்றையும் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.
    மாதவிலக்கின் போது உண்டாகிற அவதிகளை நினைத்தால் பெண் பிறவியே வேண்டாம் என நினைக்கத் தோன்றும் பல பெண்களுக்கு. மாதவிலக்கு நாட்களில் உண்டாகிற வலி, பெரும்பாலான பெண்களுக்கு மரண வேதனையானது. வலியுடன் கூடிய மாதவிலக்கு ஏற்பட என்ன காரணம், அதற்கான சிகிச்சைகள், ஆலோசனைகள் என எல்லாவற்றையும் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

    மாதவிலக்கு ஏற்படும்போது வருகிற வயிற்று வலியை டிஸ்மெனரியா (Dysmenorrhea) என்கிறோம். மாதவிலக்கு நாட்களுக்கு முன்போ, மாதவிலக்கின் இரண்டாவது நாளோ, மாதவிலக்கின் 5 நாட்களுக்குமோ இந்த வலி ஏற்படும். டிஸ்மெனரியாவில் பிரைமரி டிஸ்மெனரியா, செகண்டரி டிஸ் மெனரியா என இரு வகை உண்டு.

    இது பருவமடைந்த புதிதில் இளம் பெண்களுக்கு ஏற்படலாம். பெரும்பாலான பெண்களுக்கு மாதவிலக்கின் போது முதல் 2 நாட்களில் லேசான வலி ஏற்படுகிறது. 10 சதவிகிதப் பெண்களுக்கு அந்த வலி கடுமையாக இருக்கிறது.

    இவர்களுக்கு இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்படுவதால் மருத்துவம் தேவைப்படுகிறது. வலி ஏற்படும் போது வேறு பெண் நோயியல் பிரச்னை எதுவும் இல்லையென் றால், அதை முதல் நிலை வலியுள்ள மாதவிலக்கு (பிரைமரி டிஸ்மெனரியா) என்கிறோம். இது பிராஸ்டாகிளாண்டின் (Prostaglandin) எனப்படுகிற பொருள் உடலினுள் அதிகரிப்பதால் ஏற்படுகிறது.

    இந்தப் பொருள் மிகுதியாகும் போது, கர்ப்பப்பையின் தசைகள் சுருங்கி, அதன் உட்சுவர் சேதாரமாகிறது. பொதுவாக இந்த முதல் நிலை வலியுற்ற மாதவிலக்கு தீங்கற்றது. இது 20 வயதுக்குப் பிறகு அல்லது குழந்தைப்பேற்றுக்குப் பிறகு மறைந்து விடுகிறது.

    பெண் நோயியல் பிரச்னைகளுடன் இணைந்து மாதவிலக்குடன் கூடிய வலி ஏற்படுவதை இரண்டாம் நிலை வலியுள்ள மாதவிலக்கு (செகண்டரி டிஸ்மெனரியா) என்கிறோம். இது கர்ப்பப்பையின் சுவர்களில் ஃபைப்ராய்டு எனப்படும் நார்த்திசுக் கட்டிகள் ஏற்படுவதாலோ, பால்வினைத் தொற்றுகளினாலோ, கர்ப்பப்பையின் உட்படலம் வேறு இடங்களில் பரவிப் பெருத்ததாலோ, இடுப்புக்குழி நோய்களாலோ, கருப்பைக் கட்டிகள் அல்லது நீர்க்கட்டிகளாலோ ஏற்படுகிறது.

    சிலருக்கு இதுபோன்ற வயிற்றுவலியுடன் வாந்தி, மயக்கம் போன்றவையும் காணப்படும். இதனால் அவர்களுக்கு அன்றாட வாழ்க்கையே பாதிக்கப்படலாம்.சிலருக்கு எவ்வித பிரச்னைகளும் இல்லாமலேயே மாதவிடாயின் போது வயிற்றுவலி (Primary Dysmenorrhea)ஏற்படலாம். இதற்கு மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து அதற்கான மருந்துகளை உட்கொள்ளலாம்.

    இளம்பெண்களுக்கு ஏற்படும் பிரைமரி டிஸ்மெனரியாவில் கர்ப்பப்பை உள் சுவரில் இருந்து வெளியேறும் ஹார்மோன் விடுவிக்கப்பட்டு வெளியே வரும்போது வலி உண்டாகும். இதை சரி செய்வதற்கு பிராஸ்டா கிளாண்டின் சின்தஸிஸ் இன்ஹிபிட்டார் மருந்துகள் கொடுக்க வேண்டியிருக்கும்.

    பிறவியிலேயே கர்ப்பப்பை வளர்ச்சி குறைவு, இரட்டை கர்ப்பப்பை, கர்ப்பப்பை வாய் உருவாகாமல் இருப்பது மாதிரியான வளர்ச்சிக் குறைபாடு இருக்கும் பெண்கள், பருவமடையும் போது கர்ப்பப்பையில் இருந்து வெளியே வரும் உதிரம் சரியாக வர முடியாமல் கர்ப்பப்பை உள்ளேயே தேங்கும் நிலை ஏற்படலாம். இதனால் ஒவ்வொரு மாதவிலக்கின் போதும் அதிகமான வலி ஏற்படலாம்.

    சில இளம்பெண்களுக்கு மாதவிலக்கு வலி வந்தும், உதிரம் வெளியே தெரியாமல் வெள்ளைப்படுதல் போன்ற நிகழ்வும் இருக்கலாம். அது அவர்களுக்கு கர்ப்பப்பை வளர்ச்சி குறைபாடு உள்ளதற்கான அறிகுறியாக இருக்கலாம். இதுபோன்ற பிரச்னைகளுக்கு லேப்ராஸ்கோப்பி மூலமும் ஹைமனக்டமி (Hymenectomy) என்ற அடிவழி சிகிச்சை மூலமும் தீர்வளிக்கலாம்.

    டிஸ்மெனரியாவால் சிலருக்கு குழந்தையின்மை பிரச்னை கூட ஏற்படலாம். குழந்தை இருப்பவருக்குக்கூட திடீரென வயிற்றுவலி ஏற்படலாம். அது செகண்டரி டிஸ்மெனரியா வகையாகவும் இருக்கலாம்.இதனை கண்டறிய முக்கிய விஷயம் நோயாளியின் உடல்நலப் பின்னணியை ஆராய்தல், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எம்.ஆர்.ஐ. அல்லது சிடி ஸ்கேன், மருத்துவப் பரிசோதனை போன்றவை தேவைப்படும்.தற்காலிகத் தீர்வுக்கு...

    இபுபுரூஃபென் அல்லது டைகுளோஃபெனாக் சோடியம் அல்லது டைசைகுளோமைன் மாத்திரைகளை மருத்துவரிடம் கேட்டு உபயோகிக்கலாம். படுத்த நிலையில் வயிற்றுப் பகுதிக்கு சூடான ஒத்தடம் கொடுக்கலாம். அடிக்கடி நாப்கின்களை மாற்றியாக வேண்டும்.

     வலிக்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை சரி செய்தாலே, இந்தப் பிரச்னை சரியாகும். இளம் சூடான தண்ணீரில் குளிப்பதும், மிதமான உடற்பயிற்சிகளும் கூட வலியைக் குறைக்கும். இவற்றையும் மீறி, மாதவிலக்கின் போதான வலி மிகக் கடுமையாகவும், வாந்தி, குமட்டல், காய்ச்சல் போன்றவை 3 நாட்களுக்கும் மேல் தொடர்ந்தால் அலட்சியப்படுத்தாமல், மருத்துவரைக் கலந்தாலோசிப்பதே பாதுகாப்பானது.
    ஓடியாடி கூடி விளையாடும் பாரம்பரிய குழு விளையாட்டுகள் அறிவுத்திறன், கூட்டு முயற்சி, தன்னம்பிக்கை, சகிப்புத் தன்மையை சிறுவர்கள் மத்தியில் உருவாக்கும்.
    ஓடியாடி கூடி விளையாடும் பாரம்பரிய குழு விளையாட்டுகள் அறிவுத்திறன், கூட்டு முயற்சி, தன்னம்பிக்கை, சகிப்புத் தன்மையை சிறுவர்கள் மத்தியில் உருவாக்கும். அத்தகைய விளையாட்டுகளில் கில்லி, பம்பரம், தாயம், பல்லாங்குழி, சிலம்பம், பச்சைக்குதிரை, நொண்டி, நாடு பிடித்தல் உள்ளிட்ட விளையாட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகின்றன. தற்போதுள்ள தலைமுறையினர் இந்த பெயர்களை கேட்டிருக்கக் கூட வாய்ப்பு இல்லை. பழங்காலத்தில் சிறுவர்களுக்கு மரங்கொத்தி, காயா? பழமா?, உப்பு விளையாட்டு என 65 விளையாட்டுகள் இருந்தன. இதே போல சிறுமிகளுக்கு ஒண்ணாங்கிளி இரண்டாம்கிளி, பருப்புசட்டி, கண்கட்டி, அக்கா கிளி செத்துபோச்சு, மோருவிளையாட்டு, கரகர வண்டி, கும்மி, சோற்றுபானை என பல விளையாட்டுகள் இருந்தன. சிறுவர்-சிறுமிகள் இருவரும் சேர்ந்து விளையாடும் வகையில் தொட்டு விளையாட்டு, குரங்கு விளையாட்டு, கண்ணாமூச்சி, நொண்டி, குலைகுலையாய் முந்திரிக்காய் போன்ற விளையாட்டுகளும் உண்டு.

    ஆண்கள் மட்டும் விளையாடும் வகையில் ஜல்லிக்கட்டு, சிலம்பம், பாரிவேட்டை, சடுகுடு, புலிவேடம், பானை உடைத்தல் போன்ற விளையாட்டுகளும், குழந்தைகளுக்கு என்று தென்னைமர விளையாட்டு, பருப்புகடைந்து, சீப்பு விக்கிறது என விளையாட்டுகள் இருந்தன. இந்த விளையாட்டுகள் அனைத்தும் உடல், மனம், சிந்தனை, மொழி, கலாசாரம், பண்பாடு, கணிதம், நிர்வாகம், வாழ்க்கை முறை, விடாமுயற்சி என்று ஏதேனும் ஒரு வகையில் நம் மனதிற்கும், உடலிற்கும் நன்மைகளை வழங்கக் கூடிய விளையாட்டாகவே இருந்து வந்தது.

    ஆனால் நாளடைவில் நாம் பண்டைய விளையாட்டுகளை முற்றிலும் மறந்து விட்டோம். அவற்றில் ஒன்று தான் நொண்டி விளையாட்டு. ஒற்றைக்காலில் தவ்வி நடப்பது நொண்டி. ஓடுபவர்களை நொண்டி அடித்துத் தொடுவது நொண்டி விளையாட்டு. இது குழந்தைகளுக்கு நல்ல உடற்பயிற்சி ஆகும். நொண்டி விளையாட்டு குழந்தைகளின் உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளித்து, அவர்களின் சோம்பேறித்தனத்தை குறைக்கிறது. இது கால்களுக்கு இடையே ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது.

    பம்பர விளையாட்டிற்கு இத்தனை பேர் தான் விளையாட வேண்டும் என்று வரைமுறையில்லை. இதில் எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம். முதலில் ஒரு வட்டம் போட்டு கொள்ள வேண்டும். அந்த வட்டத்தை சுற்றி நின்று பம்பரத்தையும் சாட்டையையும் சுற்றுவதற்காகத் தயாராக வைத்து கொள்ள வேண்டும். பிறகு 1, 2, 3 என சொல்லியவுடன் அனைவரும் பம்பரத்தைச் சாட்டையால் சுற்றிக்கொண்டு வட்டத்திற்குள் பம்பரத்தை சுழலவிட வேண்டும். பின்பு சாட்டையைப் பயன்படுத்தி பம்பரக்கட்டையை மேல் எடுக்க வேண்டும்.

    அவ்வாறு எடுக்க முடியாதவர்களின் பம்பரங்களை வட்டத்தின் உள்ளே வைக்க வேண்டும். வெளியே உள்ளவர்கள் வட்டத்திலிருக்கும் பம்பரத்தை, தங்கள் பம்பரத்தைப் பயன்படுத்தி வெளியே எடுக்க வேண்டும். அவ்வாறு பம்பரத்தை வட்டத்தினுள் விடும்போது அது சுழலவில்லை எனில் அந்த பம்பரமும் வட்டத்தினுள் வைக்கப்படும். ஆடுபுலி ஆட்டம் என்பது திண்ணை வியூக விளையாட்டு ஆகும். இது குறிப்பிட்ட கட்டங்கள் கொண்ட வரைவில் விளையாடப் படுகிறது. ஊர்புறங்களில் தரையில் இந்த கட்டங்களை சுண்ணாம்புக்கட்டி பயன்படுத்தி வரைந்து கொள்வார்கள். புளியங்கொட்டைகள், கற்களை அதில் வைத்து நகர்த்தி விளையாடப்படுகிறது. ஆடுபுலி ஆட்டத்தை வெட்டும் புலி ஆட்டம் என்றும் கூறுவர். இது ஒரு மதிநுட்ப உத்தி விளையாட்டு. மேலும் கள்ளன் வாரான் கண்டுபுடி, பூப்பறிக்க வருகிறோம் உள்பட பல விளையாட்டுகள் உள்ளன.

    சுப்புலட்சுமி, 5-ம் வகுப்பு,

    ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,

    மண்குண்டாம்பட்டி, தாயில்பட்டி.

    பெண்கள் தங்களைத் தாங்களே வருத்திக் கொண்டு 24 மணி நேரமும் எல்லோரையும் திருப்திபடுத்த வேண்டும் என்று சுழன்று கொண்டிராமல் ஓய்வு ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அவர்களுக்கு என்று நேரம் ஒதுக்கி கொள்வது நல்லது.
    எப்ப டாக்டர் வெளியே விடுவாங்க?

    எப்ப டாக்டர் இவர் வேலைக்கு போவார்?

    எனக்கு வேலை கிடைக்குமா?

    இதுபோன்ற கேள்விகள் நிறைந்த 60 நாட்கள்! உலகில் இதுவரை காணாத அசாதாரண சூழ்நிலை!

    இரவில் மட்டுமே வீட்டை பார்த்தவர்கள் பகல் முழுவதும் வீட்டில் இருக்க வேண்டிய நிலை!

    பார்த்துப் பேசிய முகங்கள் எப்போது இணையதளம் வழியாக. நெட்வொர்க் எரர் ( Error ) கனெக்சன் சரியில்லை, பவர்கட் போன்ற இக்கட்டான தருணங்களில் வார்த்தைகளால் மாறிய கணம் முக கவசம் வாழ்க்கையை மாற்றிய தருணம் என்பதுடன் சமூக இடைவெளி என்கிற தாரக மந்திரத்துடன் என்ன ஆயிற்று உலகிற்கு என்று பார்த்து சிரித்த நமக்கு நம் வாசலில் அழையா விருந்தாளியாய் பலபேரின் கண்களிலே ஒரு பயம்! பதற்றம்! வந்து விடுமோ கொரோனா என்று பயம் ஒரு சிலருக்கு. என்னால் என் குடும்பத்தினருக்கு தொற்று வந்துவிடுமோ? இதுதான் ஒவ்வொரு சுகாதாரப் பணியாளரும் தங்களுக்குத் தாங்களே கேட்டுக்கொள்ளும் கேள்வி.

    பல கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருக்கிறோம். ஏன் உலகில் அவற்றின் வேகம் அதிகமாக உள்ளது? ஏன் இந்தியாவின் வடமாநிலத்தில் அதிக தொற்றுப் பரவுகிறது? எவ்வளவு நாட்கள் உயிர் வாழ்கிறது? ஆண்களை அதிகம் தாக்குவதுஏன்? தடுப்பூசி கண்டுபிடிக்க எவ்வளவு நாள் ஆகும்?

    எந்தவிதமான நல பாதிப்பும் இல்லாத மனிதன் கூட மனநலப் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக ஆய்வு கூறுகிறது

    மனிதன் ஒரு சமூக மிருகம், சோஷியல் அனிமல். அமைதியான சுபாவம் கொண்டவர்கள் கூட நண்பர்களுடன் சேர்ந்து இருக்கவேண்டும் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால் வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டிய நிலை. தனிமைப்படுத்தப்படுதல், உணவு போன்றவை கிடைத்தால் இந்த சூழலில் எழும் கவலை பதற்றம் ஆகியவை குறைய வாய்ப்புள்ளது. பொதுமுடக்கப் ( lockdown ) பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் பெண்களுக்கு வந்த மிகப்பெரிய சுமை வேலை பளு. வேலைக்குப்போன பெண்கள் காலையில் எழுந்து சமைத்து வேலைக்கு போய்க்கொண்டிருந்தவர்கள் போகும்போதும் குழந்தைகளின் நடுவே சமாளிக்க முடியாமல் உட்கார சொல்லிக்கொண்டு வேலை செய்வது கடினம்.

    மேலும் வீட்டு வேலை செய்யும் பெண்கள் வராததாலும் பன்மடங்கு வேலை. எல்லா பெண்களும் வீட்டில் நிம்மதியாக இருக்க முடிவதில்லை. வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் பலர் இந்த 60 நாட்களில் 1098 ஹெல்ப் லைன்க்கு ( Help line ) வந்த அழைப்புகள் பல அடுத்ததாக முதியவர்கள் சிறு, சிறு வேலைக்காக வெளியே சென்று வந்தவர்கள் தெருவில் உள்ள தம் நண்பர்களைப் பார்த்து சிறிது நேரம் பேசியவர்கள் மேலும் ஞாபக மறதி வியாதியால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்கள் என இவர்களெல்லாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஆதலால் தூக்கமின்மை, கோபம், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன.

    அடுத்ததாக சிறுவர்கள், வளர் இளம் பருவத்தினர், நண்பர்களே உறவாக இருந்தவர்கள் இப்போது வீட்டில் குடும்பத்தினருடன் 24 மணி நேரமும் இருக்க வேண்டிய சூழ்நிலை! பைக்கை தூர இருந்து வேடிக்கை பார்க்கும்நிலை!

    இதற்கான தீர்வுகள். தனிமையிலே இனிமைகாண முடியுமா? முடியும் என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளலாம். ஏதேனும் ஒரு வேலை இருக்கும் அதை செய்துக்கொண்டு இருக்க பழகிக்கொள்ள வேண்டும். இன்றும் எதிர்மறையான சிந்தனைகளை மாற்றி அமைக்க பழகிக்கொள்ளவேண்டும். பாட்டு கேட்பது, புத்தகங்கள் வாசிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, குறித்த நேரத்தில் குறித்த வேலையைச் செய்ய பழக வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும். நம்மால் முடிந்தவரை பிறருக்கு உதவி செய்யலாம்.

    பக்கத்து வீட்டில் தனியாக முதியவர் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு உணவு அளிக்கலாம். அவருக்கு வேண்டிய சின்னச் சின்ன வேலைகளைச் செய்து கொடுக்கலாம். 24 மணி நேரமும் செய்திகள் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அரசு வெளியிடும் செய்திகளையும் தொற்று பற்றிக்கூறிய கூறும் செய்திகளையும் வாசித்தால் போதுமானது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் பற்றிய பேசுவதற்குப் பதிலாக அதிலிருந்து மீண்ட பலரைப் பற்றிய செய்திகளை வாசிப்பது நல்லது. கைப்பேசியோடு எப்போதும் இருக்கும் சிறுவர்களை கைபேசியில் இருந்து விடுவிக்கவேண்டும். பெண்கள் தங்களைத் தாங்களே வருத்திக் கொண்டு 24 மணி நேரமும் எல்லோரையும் திருப்திபடுத்த வேண்டும் என்று சுழன்று கொண்டிராமல் ஓய்வு ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அவர்களுக்கு என்று நேரம் ஒதுக்கி கொள்வது நல்லது.

    * நம்முடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல்.

    * பதற்றம் உண்டானால் பதற்றம் உண்டு பண்ணும் எதிர்மறையான சிந்தனைகளை மாற்ற முயற்சிக்கலாம்.

    * தேவை இல்லாமல் நம் மனதைப் போட்டு குழப்பிக் கொள்கிறோமோ.

    * இதற்கு முன் இதுபோன்ற பிரச்சினைகள் என் வாழ்வில் வந்த போது நான் எவ்வாறு சமாளித்தேன் என்று சிந்திப்பது நல்லது.

    * தனிமை உணர்வு இருந்தால் நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடலாம். பல வருடம் பேசாதவர்கள் உடன் அவர்களை அழைத்து அவர்களை ஆச்சரியப்பட வைக்கலாம்.

    * ஆனால் இந்த குழப்பம் கவலை பதற்றம் தொடர்ந்து நீடித்தால் 104 அல்லது 044-26425585 என்ற எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

    * புலம்பெயர் தொழிலாளர்கள் படும் இன்னல்களுக்கு நடுவே நம்முடைய இன்னல்கள் குறைவு. இதுவும் கடந்துபோகும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

    டாக்டர். பூர்ணசந்திரிகா,

    இயக்குநர் (பொறுப்பு),

    அரசு மனநலக் காப்பகம், கீழ்ப்பாக்கம்.
    வைரசில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள கிருமி இல்லாத மற்றும் ரசாயனம் கலக்காமல் பழங்கள், காய்கறிகளை பயன்படுத்துவது எப்படி என்பதை பார்ப்போம்...
    கொரோனா வைரசின் தாக்கம்  தற்போது உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

    வைரசில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள கிருமி நாசினி கொண்டு கை கழுவ வேண்டும். 20 நொடிகள் சோப் போட்டு கைகளை நன்கு கழுவ வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் என பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நேரத்தில் நாம் கடைகளில் இருந்து வாங்கி வரும் பழங்கள் மற்றும் காய்கறிகளை பயன்படுத்துவது எப்படி என்பதை இங்கு காண்போம்.

    அனைத்து வயதினரும் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவதை டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த இரண்டு வகையான உணவுகள் பச்சையாகவோ, மரங்களிலிருந்தோ, புதர்களிலிருந்தோ அல்லது மண்ணின் கீழிருந்தோ கிடைப்பதால் அவற்றை உட்கொள்வது எவ்வளவு பாதுகாப்பானது என்ற சந்தேகம் எழும். 

    மேலும், தயாரிப்பு முதல் சேமிப்பு நேரம் வரை பாக்டீரியாக்கள் உங்கள் காய்கறிகளில், பழங்களில் வாழ வாய்ப்புகள் உள்ளன.

    அதிகளவு ரசாயனம், பூச்சிக்கொல்லிகள் உண்மையில் நச்சுத்தன்மை உடையவை. நோய் எதிர்ப்பு சக்தியை சீர்குலைப்பதன் மூலம் நமது ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

    இந்த ஆபத்துகளில் இருந்து காத்துக் கொள்ள நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதை பார்ப்போம்.

    காய்கறி அல்லது பழத்தை வெட்டிய பின் ஒருபோதும் கழுவ வேண்டாம். அப்படி கழுவும்போது அவை வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை இழக்கின்றன. மேலும் அசுத்தங்கள் ஏதேனும் இருந்தால் அவை மேற்பரப்பில் இருந்து உள்ளே பரவுகின்றன.

    பழங்கள் மற்றும் காய்கறிகளை கழுவுவதால் அவற்றின் மேற்பரப்பில் உள்ள பாக்டீரியாக்களை அகற்ற முடியும். ஆனால் பூச்சிக்கொல்லிகள் மற்றும் அதன் மீது தெளிக்கப்படும் பிற ரசாயனங்களை அகற்ற முடியாது.

    பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கழுவுவதற்கான சிறந்த வழி:

    காய்கறிகளை கழுவும் முறை

    காய்கறிகள் மற்றும் பழங்களை உபயோகிப்பதற்கு முன்பு தண்ணீரில் கழுவினால் மட்டும் போதாது. ஏன் என்றால் அவைகளில் படிந்திருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் உடலுக்கு கெடுதி விளைவிப்பவை. 

    அதிலும் விளைச்சலின் இறுதி கட்டத்தில் பயிர்களின் மீது தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் காய்கறி மற்றும் பழங்களின் மீது அப்படியே ஒட்டிக்கொண்டிருக்கும். 

    அது மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கும், உள்ளுறுப்புகளுக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனால் காய்கறிகள் மற்றும் பழவகைகளை சாப்பிடுவதற்கு முன்பு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

    அப்படி கழுவுவது மட்டுமே போதுமானதல்ல. மீண்டும் 90 சதவீத நீருடன் 10 சதவீதம் வினிகர் சேர்த்து அதில் காய்கறிகளை சிறிது நேரம் ஊறவைத்து விட்டு மென்மையாக கழுவ வேண்டும். அப்படி கழுவும்போது காய்கறிகளின் தோல் பகுதிக்கு சேதம் ஏற்பட்டு விடக்கூடாது.

    ஒரு கப் தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து சிறிது சமையல் சோடாவும் சேர்த்து அதனை பழங்கள் மீது தெளிக்க வேண்டும். பின்னர் துணியால் சுத்தம் செய்துவிட்டு சாப்பிடலாம்.

    ஒருபோதும் சோப்புகளை பயன்படுத்தி பழங்களையோ, காய்கறிகளையோ கழுவக்கூடாது.

    தக்காளி, உருளைக்கிழங்கு போன்றவற்றை சுடுநீரில் சிறிது நேரம் போட்டுவைத்துவிட்டு பிறகு தோலை உரித்து பயன்படுத்துவது நல்லது. 

    கீரைகளைக் குளிர்ந்த நீர் கொண்ட பாத்திரத்தில் போட்டு நன்றாக அலசுங்கள். கீரைகளை முன்னும் பின்னுமாக அலசி, கழுவுங்கள். பிறகு, குழாய் அடியில் கீரைகளை அலசுங்கள். இன்னொரு முறை வேண்டுமானாலும் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

    பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சரியாகக் கழுவிய பின் அவற்றை உட்கொள்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    இப்படி செய்வதன் மூலம் எந்த வைரசும் நம்மை தொற்றாது, நமது ஆரோக்கியமும் பேணி பாதுகாக்கப்படும் என்பது உண்மைதானே!
    கீழே கூறியவை படிப்பதற்கு அதிகமாகத் தோன்றினாலும் இவைகளை நடைமுறைப்படுத்தும் பொழுது இருதயம் மட்டுமல்ல உடலின் மற்ற உறுப்புகள் ஆரோக்கியம் பெறும்.
    உண்ணும் தட்டு சிறிய அளவில் இருத்தல் நல்லது. தட்டில் அதிகமான காய்கறிகள் இருப்பதே நல்லது. நீர் சத்து, நார் சத்து உணவுகளையே உண்ண வேண்டும்.
    சர்க்கரை, அதிகம் பாலிஷ் செய்த தூய வெள்ளை சாதம் இவற்றினை அடியோடு நீக்கி விடுவோம். இத்தனை நிமிடங்கள், இத்தனை அடிகள் என்பது அவரவர் வயது, உடல் நிலை இவற்றுக்கு ஏற்ப மாறுபடும். எனவே அவரவர் மருத்துவ ஆலோசனை பெற்ற பின்பே எதனையும் பின் பற்ற வேண்டும்.
    மேல் கூறப்பட்டுள்ளவை பொதுவான வழிகாட்டிகளே

    * பொதுவில் மதியத்திற்குப்பிறகு கடினமான, கலோரி அதிகமுள்ள உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது.
    * ஒவ்வொரு உணவுக்குப் பிறகும் நீங்கள் பற்பசை கொண்டு பல் துலக்கும் பொழுது உணவு உண்டு முடித்துவிட்ட நிறைவு மனோரீதியாக ஏற்படும்.
    * சிறிதளவு கொட்டைகள், விதைகளை அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
    * எடையை குறைக்க வேண்டும். இது இருதயத்திற்கு நல்லது. ஆனால் ஒல்லியாக இருப்பவர்கள் எல்லோருமே மிகவும் ஆரோக்கியமானவர்கள் என்ற சுயமுடிவினை யாரும் நினைக்க வேண்டாம்.
    * கொழுப்பினை விட சர்க்கரை இருதயத்தினை அதிகம் பாதிக்கக்கூடியது.
    * புகை பிடிப்பதால் ஏற்படும் தீங்குகளை அனைவருமே அறிவர்.
    * சதா மனஉளைச்சலோடு இருப்பவர்களுக்கு இருதயம் அதிகமாகவே பாதிக்கப்படும்.
    * வாயில், ஈறில் வீக்கம் இருந்தால் மருத்துவர் இருதய பரிசோதனை செய்வார்.
    * உயர் ரத்த அழுத்தம் இருதயத்தின் எதிரி.
    * ஒரு வேலை செய்து முடிக்க முன்பை விட இப்பொழுது கூடுதல் நேரம் எடுக்கின்றது என்றால் அவருக்கு மருத்துவ பரிசோதனை உடனடித் தேவை.

    மேற்கூறியவை படிப்பதற்கு அதிகமாகத் தோன்றினாலும் இவைகளை நடைமுறைப்படுத்தும் பொழுது இருதயம் மட்டுமல்ல உடலின் மற்ற உறுப்புகள் ஆரோக்கியம் பெறும். 
    கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளிலேயே சமூக இடைவெளிதான் மிக மிக அவசியம். எந்த விழாவாக இருந்தாலும் சமூக இடைவெளியை கடைபிடிப்போம் என்பதே நாம் ஒவ்வொருவரும் எடுக்கும் உறுதிமொழியாக இருக்கட்டும்!
    சமூக இடைவெளி, முககவசம், கையுறை இதனுடன்தான் வாழ வேண்டும் என்று நம்மை கட்டாயப்படுத்தி விட்டது கொரோனா.

    கடந்த ஆண்டு சீனாவில் உருவானதாக கூறப்படும் கொரோனா என்ற கொடிய வைரஸ், இன்று உலகம் முழுவதும் ஆட்கொண்டு விட்டது. இந்தியாவில் அதன் பாதிப்பு என்னவோ அதிகம்தான் என்றாலும், மக்கள் தொகையை கணக்கிடுகையில் உயிர்ப்பலி குறைவுதான். ஊரடங்கால் இந்த நோய் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும், இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. என்னதான் இயல்பு நிலைக்கு வந்தாலும், நோய் நம்மை விட்டு முற்றிலும் விலகவில்லை. அதனை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதனால்தான் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முககவசம் கட்டாயம் அணிய வேண்டும், கையுறை அணிய வேண்டும். வேலைக்கு சென்றாலும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க சென்றாலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மற்ற மாவட்டங்களை காட்டிலும் குமரி மாவட்டத்தில் இந்த நோயின் பாதிப்பு குறைவுதான். அதாவது வெளியூர்களில் இருந்து வந்தவர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கும்தான் கொரோனா உள்ளது. அவர்களும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு குணமாகி வீடு திரும்பி வருகின்றனர். எனவே நோய் பற்றி அச்சம் இனி வேண்டாம்.

    அதேநேரத்தில் நோய் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் நாம் ஒத்துழைக்க வேண்டும். அதாவது அரசு அறிவித்துள்ள விழிப்புணர்வை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

    ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு தொழில்களை இயங்க அரசு அனுமதி அளித்து வருகிறது. இன்னும் சில நாட்களில் அதாவது வருகிற 31-ந் தேதியுடன் ஊரடங்கு முற்றிலும் விலக்கிக் கொள்ளப்பட வாய்ப்பு உள்ளது. அப்போது நாம் முன்பு மாதிரியே கூட்டம், கூட்டமாக எங்கும் செல்லாமல் ஊரடங்கு காலத்தில் வாழ்ந்தது போன்றே வாழ பழகிக்கொள்ள வேண்டும்.

    கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதாவது இனிவரும் நாட்களில் நாம் எங்கு சென்றாலும் முககவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும். கையுறை வேண்டும். வேலைக்கு சென்றாலும் சரி, அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடை வீதிக்கு சென்றாலும் சரி சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதேநேரத்தில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த பிறகு சானிடைசர் கொண்டு கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் கொரோனா எனும் அரக்கன் நம்மை நெருங்க விடாமல் செய்ய முடியும்.

    கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளிலேயே சமூக இடைவெளிதான் மிக மிக அவசியம். இனிவரும் நாட்களில் நாம் எங்கும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். எந்த விழாவாக இருந்தாலும் சமூக இடைவெளியை கடைபிடிப்போம் என்பதே நாம் ஒவ்வொருவரும் எடுக்கும் உறுதிமொழியாக இருக்கட்டும்!
    ×