என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    இருட்டறையில் பூட்டப்பட்டு துன்புறுத்தப்படும் குழந்தைகள் குற்றவாளிகளாகி விடுகிறார்கள். பய உணர்வுடன் வளரும் குழந்தைகள் தன்னம்பிக்கையை இழந்து விடுகிறார்கள்.
    பிறந்தவுடன் குழந்தை அழுகிறது. இதனால் அதற்கு உயிருள்ளது என்று அறிந்து கொள்கிறோம். அதன்பிறகு வரும் அழுகையினால் பசி, வலி போன்ற உணர்வுகளை தாய் புரிந்து கொள்கிறார்.  சிலர் குழந்தைகளை கிள்ளி, அடித்து அதன் உடலுறுப்புகளை இம்சித்து அழ விட்டு வேடிக்கை பார்த்து ரசிப்பார்கள். இப்படிப்பட்டவர்களை குழந்தையின் அருகில் விடவ கூடாது.

    இன்னும் சிலர் குழந்தைகளை மேலே தூக்கிப் போட்டு விளையாடுதல் என்று விபரீதமாக கொஞ்சுவார்கள்.  இவைகளை குழந்தைகள் ரசிப்பதாக நினைத்துக் கொண்டு பலமுறை விளையாடும் போது குழந்தைகள் மனதில் இனம் புரியாத பய உணர்வு ஏற்பட்டு திடீரென அழத் துவங்கி விடும்.

    சாப்பிட மறுக்கும் குழந்தைகளை நாய் கடிக்கும், பூனை கடிக்கும், மாடு முட்டும் எனச் சொல்லி பயம் காட்டி சாப்பிட வைக்கும் தாய்மார்கள் இப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும். குழந்தைப்பருவ மன பயங்கள், ஒருவரது ஆளுமையையே முடக்கி விடுகிறது என்பது உளவியல் உண்மையாகும்.

    இருட்டறையில் பூட்டப்பட்டு துன்புறுத்தப்படும் குழந்தைகள் குற்றவாளிகளாகி விடுகிறார்கள். பய உணர்வுடன் வளரும் குழந்தைகள் தன்னம்பிக்கையை இழந்து விடுகிறார்கள்.  பயங்காட்டி உணவு உண்ண வைக்கப்படும் குழந்தைகள் உணவையே வெறுத்து வளர்கின்றன. அடிபட்டு, துன்புறுத்தப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகள் பெற்றோர், உறவினர்களை வெறுத்து வளர்கின்றனர்.

    குற்ற உணர்வுடனேயே வளர்ந்து, பெரியவர்களானதும், மனித உறவுகளை வெறுத்து, பிளவுபட்ட மனங்களுடன் மனநோயாளிகளாகி விடுகின்றனர். குழந்தைகளை இயல்பாக வளரவிட வேண்டும். அதிகமான பயம் காட்டி வளர்த்தால் தன்னம்பிக்கை இழப்பு, வெறுப்பு உணர்வு, பிளவுபட்ட ஆளுமைக் கூறுகள், குறைபட்ட பழகும் பாங்கு என பல்வேறு அவலங்களுக்கு ஆளாகின்றனர்.

    அன்புடன், பாசத்துடன், அரவணைப்புடன், தன்னம்பிக்கை வளரும் விதமாக குழந்தைகளை வளர்த்துங்கள். மன பயத்துடனே வளரும் குழந்தைகள் பள்ளி, கல்லூரி, பணியிடங்களில் இயல்பாக நண்பர்கள் குழுவில் கலந்து கொள்ளாமல் தனித்து அல்லது விலகியே இருப்பார்கள். விளையாட்டு, வீர தீரச்செயல்களில் ஈடுபட தயங்குவார்கள். வாலிபப் பருவத்தில் ஊக்கப்படுத்தினாலும் பய உணர்வு காரணமாக பின்தங்கியே இருப்பார்கள்.

    கல்வியில் முன்னிலை வகித்த மாணவர்கள்கூட பய உணர்வால் தன்னம்பிக்கை இழந்து பின் தங்கி விடுகின்றனர். இவர்களுடைய ஆளுமையும் சிதைந்து விடுகிறது. ஆகவே, பிள்ளைப் பருவத்திலேயே பயமின்றி வாழ குழந்தைகளைப் பழக்க வேண்டும். அச்சம்தவிர் என்ற சொல்லுக்கேற்ப, தைரியமாக வளர குழந்தைகளுக்கு பெற்றோர் ஆதரவளிக்க வேண்டும். "செய்யாதே" என தடை செய்வதே பயத்தின் முதல்படி.

    ஆனால் "ஜாக்கிரதையாக இதைச் செய்" என்று சொன்னால் குழந்தைகள் மனதில் பாதுகாப்பு உணர்வு ஏற்படும். ஆகவே குழந்தைகளை பய உணர்வு காட்டி வளர்க்காதீர்கள். குழந்தைகளுக்கு நல்ல நடத்தைப் பண்புகளை பக்குவமாக கற்றுத் தந்து, நல்ல சந்ததியை உருவாக்குங்கள்.

    ஆண்கள் ஒரு தகவலை தங்களது துணையிடம் விவாதித்து அது பற்றிய விவரங்களை பரிமாறி கொள்வது வழக்கம். ஆனால் இந்த விசயத்தில் பெண்கள் அப்படியே வேறுபட்டு காணப்படுகின்றனர்.
    பெண்கள் தனது அந்தரங்க உறவு குறித்த தகவல்களை தங்கள் கணவரை விட அதிகமாக தன் தோழிகளிடமே பகிர்ந்து கொள்கிறார்கள் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.  

    பொதுவாக ஆண்கள் ஒரு தகவலை தங்களது துணையிடம் விவாதித்து அது பற்றிய விவரங்களை பரிமாறி கொள்வது வழக்கம். ஆனால் இந்த விசயத்தில் பெண்கள் அப்படியே வேறுபட்டு காணப்படுகின்றனர்.

    இது பற்றிய ஒரு முடிவில், பெண்கள் தனது கணவரை விட அவர்களது தோழியிடம் தான் அதிகமாக தனது அந்தரங்க தகவல் குறித்து பேசுகின்றனர். இதில் அவர்களது தோழிகளுடன் இரவில் வெளியே செல்லும் போது அதிகமான அந்தரங்கம் பற்றிய தகவல்களை ஆர்வமுடன் பேசுகின்றனர்.

    35 சதவீதம் பெண்கள் இந்த மாதிரி பரிமாறி கொள்வதாக ஒரு ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளது. ஆனால், 15 சதவீத பெண்கள் தங்கள் கணவருடன் இரவு நேரத்தில் வெளியே செல்லும் போது அந்தரங்கம் தொடர்பான விசியங்களை பகிர்ந்து கொள்கின்றனர். அந்த வகையில் பார்த்தால், பெண்கள் அதிகமாக ஆண்களை பற்றியே பேசுகின்றனர். அதில் 64 சதவீதம் பேர் தங்களது கணவர்களை பற்றியே பேசுவதாக தெரிவித்துள்ளனர்.

    மேலும், அதில் சிலபேர் மற்றவர்களின் அந்தரங்க விஷயங்களை பற்றி ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்வதாகவும் கூறியுள்ளனர். 
    உடல் ஆற்றலை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இந்த பாதாம் பூண்டு பாலை குடிக்கலாம். இன்று இந்த பால் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 500 மி.லி. ,
    மிளகுதூள் - 1 தேக்கரண்டி,
    சுக்கு தூள் - 1 தேக்கரண்டி,
    மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி,
    தேன் - 1 மேஜை கரண்டி,
    பூண்டு - 1,
    பாதாம் -  12  

    பாதாம் பூண்டு பால்

    செய்முறை:

    அடுப்பில் பாலை வைத்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் மஞ்சள்தூள், மிளகுதூள், சுக்கு தூள், சுத்தம் செய்த பூண்டு ஆகியவற்றை சேர்க்கவும்.

    200 மி.லி. அளவுக்கு பால் வற்றியதும் இறக்கி தேன் கலந்து பருகவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மனைவிமார் இளமையாய் இருக்க வேண்டும் என்பதற்காக தாய்ப்பாலூட்டுவதை நிறுத்த கணவன்மார் உடன்படுவது தவறு. தாய்ப்பாலூட்டுவதை நிறுத்தி இளமையைப் பேண விரும்பும் பெண்கள் பிள்ளை பெற்றுக் கொள்ளாமல் இருந்திருக்கலாம்.
    தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களின் அழகு பாதிக்குமா? என்று கேட்டால் அதற்கு தாய், சேய் நலன் பற்றிய அறிவு போதாமையே இதற்குக் காரணம். பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் தான் முழுமையான உணவு. குறைந்தது ஆறு மாதம் ஆயினும் பதினெட்டு மாதம் வரை தாய் தன் குழந்தைக்குப் பாலூட்டலாம்.

    புட்டிப் பாலை விடத் தாய்ப்பாலே சிறந்தது என எத்தனையோ விளம்பரங்கள் இட்டும் தாய்மாருக்கு எதுவும் விளங்குதில்லையே! தன் குழந்தைக்குத் தாய் பாலூட்டுவதால் அழகு கெட்டுப் போகும் என்ற பேச்சை ஏற்க முடியாது.

    இடையிலே வந்த அழகு இடையிலேயே போய்விடும். ஆயினும், அழகைப் பேணுகின்ற காலம் வரை அழகு இருக்கும். தாய் பாலூட்டுவதால் அழகைப் பேண இயலாது என்பது முட்டாள் கதை.

    மனைவிமார் இளமையாய் இருக்க வேண்டும் என்பதற்காக தாய்ப்பாலூட்டுவதை நிறுத்த கணவன்மார் உடன்படுவது தவறு. தாய்ப்பாலூட்டுவதை நிறுத்தி இளமையைப் பேண விரும்பும் பெண்கள் பிள்ளை பெற்றுக் கொள்ளாமல் இருந்திருக்கலாம்.  ஆய்வுகளின் படி புட்டிப்பாலூட்டி வளர்த்த குழந்தையை விடத் தாய்ப் பாலூட்டி வளர்த்த குழந்தை நல்ல உடல் நலத்தோடு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. குழந்தை உடல் நலத்தோடு வளரத் தாய்ப் பாலூட்டுவதையே எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    இன்றைய இளைய பெண்களே! அழகைப் பேணலாமென எண்ணிக் குழந்தை பெற்றுத் தாய்ப்பாலூட்டாத பெண்களுக்கு மார்பக நோய்கள் வர வாய்ப்புண்டு. இது பற்றிய தகவலறியக் குடும்பநல மருத்துவரை நாடவும்.
    பெண்களுக்கென்றும், ஆண்களுக்கென்றும் தனித் தனி வடிவங்களில் பல்வேறு டிசைன்களில் இப்போது காலணிகள் கிடைக்கின்றன. ஆடைக்கு ஏற்ற வகைகளில் எல்லாம் காலணிகளை அணிந்து அழகுபார்க்க முடிகிறது.
    நமது உடலை தூக்கி சுமப்பது கால்கள். அந்த கால்களை பாதுகாப்பவை, காலணிகள். சுகாதாரமற்ற இடங்களில் நடக்கும்போது, கால்களை நோய்க்கிருமிகள் தொடுகின்றன. சரியாக பாதங்களை பராமரிக்காவிட்டால், அந்த நோய்க்கிருமிகளின் தாக்கு தலுக்கு உள்ளாகுகிறோம். அதனால்தான் வெளியே சென்றுவிட்டு திரும்பியதும், கால்களை நன்றாக கழுவி சுத்தம் செய்துவிட்டு வீட்டிற்குள் செல்லும் பழக்கம் ஏற்பட்டது. ஆனால் இப்போது அந்த பழக்கம் இல்லை. ஒருசில இடங்களில் அதை பின்பற்றினாலும், ஏதோ சடங்குபோல் கால்களில் தண்ணீர் ஊற்றி நனைத்துக்கொண்டு வீட்டிற்குள் ஓடிவிடுகிறார்கள்.

    ஆதி மனிதனும் காலணி அணிந்திருக்கிறான். அவனுக்கு அப்போது எந்த மூலப்பொருள் கிடைத்ததோ, அதை வைத்து அவன் தனக்கு காலணிகளை உருவாக்கிக்கொண்டான். காலம் மாற மாற காலணிகளும் மாறி நவீனத்திற்கு வந்திருக்கின்றன.

    அரசர்கள் காலத்தில் காலணிகள் தயாரிப்பில் பல வினோதங்கள் நிகழ்ந்துள்ளன. விதவிதமாக காலணி அணியும் ஆர்வ முடைய ராஜஸ்தான் மன்னர்கள் காலணி தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு கிராமத்தையே ஒதுக்கிக் கொடுத்திருக்கின்றனர்.

    பெண்களுக்கென்றும், ஆண்களுக்கென்றும் தனித் தனி வடிவங்களில் பல்வேறு டிசைன்களில் இப்போது காலணிகள் கிடைக்கின்றன. ஆடைக்கு ஏற்ற வகைகளில் எல்லாம் காலணிகளை அணிந்து அழகுபார்க்க முடிகிறது. காலணிகளை பற்றிய ஆய்வு ஒன்று, ‘பிரான்சு, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் அதிநவீன காலணிகள் பயன்படுத்தப்படுகின்றன’ என்று குறிப்பிடுகிறது.

    மிருகங்களின் தோலில் செய்யப்படும் காலணிகள் நீடித்து உழைக்கக்கூடியது. ஆனால் ஒரு சிலருக்கு அவைகளால் ஒவ்வாமை ஏற்படும்.

    முரண்பாடான காலணியால் ஏற்படும் உபாதைகள் மூளை வரை சென்று ஒருவரின் மனநிலையை மாற்றும். உடலுக்கும் அசவுகரியங்களை ஏற்படுத்தும். அதை அவரது முகத்தை வைத்தே கண்டுபிடித்து விடலாம். அதனால் கால்களுக்கு பொருத்தமான காலணிகளை தேர்வு செய்ய வேண்டியது மிக அவசியம்.

    ஒருவரது காலணி இன்னொருவருக்கு பொருந்தும் என்று சொல்ல முடியாது. காலின் அமைப்பு என்பது உடலின் எடையை பொறுத்தது. எவ்வளவு அழகான காலணியாக இருந்தாலும் காலில் போட்டு கொஞ்சம் தூரம் நடந்து பார்த்துதான் தேர்ந்தெடுக்கவேண்டும்.

    இங்கிலாந்து பிரபுக்கள் தங்கள் ஆடைகள் மண்ணில் புரளாமல் பாதுகாக்கவும், தங்களை உயர்குடி மக்கள் என்று காட்டிக்கொள்ளவும் விதவிதமாக பெரிய காலணிகளை அணிந்திருக்கிறார்கள்.

    இந்தியாவில், ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில்தான் பள்ளிகளில் காலணி அணியும் வழக்கம் கட்டாயமாக்கப்பட்டது. இது குழந்தைகளின் கால்களை பாதுகாக்கவும், தொற்று நோய்கள் பரவாமலிருக்கவும், உடலின் தட்பவெப்பத்தை சீராக வைக்கவும் பயன்பட்டது. குழந்தைகள் வளரும் பருவத்தில் கால்கள் அழகான வடிவத்தைப் பெறவும் அன்றைய காலணிகள் உதவின.

    குள்ளமாக இருப்பவர்கள் சற்று தடிமனான காலணிகளை அணியலாம். அகலமான கால்களுக்கு டிசைன் போட்ட காலணிகள் சிறந்தது. கால்களை பெரிதாகக் காட்ட பெரிய காலணிகளை வாங்கக்கூடாது. அது நடக்க சவுகரியமாக இருக்காது. அடர்ந்த நிறம் கொண்ட காலணிகளை அவர்கள் பயன்படுத்தவேண்டும்.
    திடீரென உங்களுக்கு எரிச்சல், குழப்பம், கோபம் ஏற்படுகிறது என்றால் அதற்கு சில காரணங்கள் இருக்கிறது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    திடீரென உங்களுக்கு எரிச்சல், குழப்பம், கோபம் ஏற்படுகிறது என்றால் அதற்கு சில காரணங்கள் இருக்கிறது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    * 7-9 மணி நேரம் தூக்கம் அவசியம் என மருத்துவ உலகம் அறிவுறுத்துகின்றது. தேவையான அளவு தூக்கம் கிடைக்காத பொழுது மேல் கூறிய பாதிப்புகள் எளிதில் ஏற்படும்.

    * மறதி அதிகம் ஏற்படும்பொழுது அதிக எரிச்சல் ஏற்படும்.

    * ஏதாவது வலி&மூட்டுவலி, முதுகு வலி என தொடர்ந்து இருக்கும்போது சிறு விஷயங்களும் ஒருவரை கோபப்படுத்தும்.

    * மன உளைச்சல் உடையவர்கள் எப்போதும் குழப்பத்துடனே இருப்பர்.

    * அதிக காபி, டீ, படபடப்பு & எரிச்சலை உண்டாக்கும்.

    * நோய் பாதிப்பு, மாத விலக்கிற்கு ஓரிரு நாள் முன்னர் போன்றவைகள் ஒருவருக்கு எரிச்சலை உண்டாக்கும்.

    * மாதவிலக்கு நிற்கும் காலத்தில் பெண்கள் ஒருவித படபடப்பு, எரிச்சல், கோபத்துடன் இருக்கும் வாய்ப்புகள் உண்டு.

    * ‘டயட்டிங்’ என்ற பெயரில் முறையற்ற வகையில் பட்டினி கிடப்பது எரிச்சல், குழப்பத்தை ஏற்படுத்தும்.

    * தைராய்டு சுரப்பி குறைபாடு, தைராய்டு ஹார்மோன் அதிகம் சுரந்தாலும் படபடப்பு, வியர்த்தல், எரிச்சல் ஆகியவை இருக்கும்.

    குறைபாட்டினை மருத்துவர் மூலம் சரி செய்து கொள்வது அவசியம்.

    துளசி, கொத்தமல்லி, கருவேப்பிலை, இஞ்சி, வெங்காயம், பூண்டு, புதினா இவற்றினை சமையலறை பக்கம் வைத்து தேவைக்கு ஏற்ப சிறிது சிறிதாக பயன்படுத்திக் கொள்வது நலம் பயக்கும்.
    பெரியவர்கள் குண்டாக இருந்தால், அந்த எடையை குறைக்க என்ன செய்யலாம் எனச் சிந்திக்கிறோமோ அதே சிந்தனைகள் குழந்தையின் உடல் எடையை குறைப்பதிலும் இருக்க வேண்டும்.
    குழந்தைகள் குண்டாக இருந்தால் அதை அழகு என்றும் ‘ஆரோக்கியமான குழந்தை’ என்றும் சொல்லும் பெற்றோர்கள் பலர். குழந்தைகள் எப்படி இருந்தாலும் அழகுதான். ஆனால், குண்டாக இருக்கும் குழந்தை ஆரோக்கியமான குழந்தை என்று கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. பெரியவர்கள் குண்டாக இருந்தால், அந்த எடையை குறைக்க என்ன செய்யலாம் எனச் சிந்திக்கிறோமோ அதே சிந்தனைகள் குழந்தைகள் உடல்நலத்திலும்இருக்க வேண்டும்.

    உடல் உழைப்பின்மை, மரபியல், தவறான உணவுப் பழக்கம், அதிகமான துரித உணவுகளை உண்பது, ஹார்மோன் பிரச்சனை, அதிக நேரம் டிவி பார்க்கும் குழந்தைகள், வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடும் குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகமாக இருக்கும்.

    அதிக கொழுப்பு, அதிக ரத்த அழுத்தம், சிறு வயதிலே இதய பிரச்சனைகள், சர்க்கரை நோய், ஆஸ்துமா, வயிறு பிரச்சனைகள், எலும்பு பிரச்சனைகள், சரும பிரச்சனைகளான பூஞ்சை தொற்று, சூட்டால் வரும் அரிப்பு ஆகிய பிரச்சனைகளை குழந்தைகள் சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

    மருத்துவரிடம் அழைத்து சென்று உயரம், எடை, வயது ஆகியவற்றை சொல்லி பி.எம்.ஐ (BMI) செக் செய்து கொள்ளலாம்.  எடை குறைவு – பி.எம்.ஐ <18.5 ஆரோக்கியமான எடை – பி.எம்.ஐ 18.5 – 24.9 க்குள் இருக்க வேண்டும்.  அதிக எடை – பி.எம்.ஐ 25 – 29.9 உடல்பருமன் – பி.எம்.ஐ 30 அல்லது அதை விட அதிகமாக இருந்தால் உங்கள் குழந்தையின் உடல் எடை அதிகமாக இருக்கிறது என்று அர்த்தமாகும்.

    குழந்தையின் உடல் எடை குறைய கொள்ளு சுண்டல், கொள்ளு சூப் அல்லது துவையல் கொடம்புளி தண்ணீர், ஃபிளாக்ஸ் விதைகளை மோரில் கலந்து கொடுக்கலாம். குழந்தையின் உடல் எடை குறைய வெள்ளரிக்காய் சாலட், கிரீன் டீ 2 கப் குடிப்பது, திராட்சை ஜூஸ் ஒரு டம்ளர், போதுமான தண்ணீர் காலை எழுந்ததும் குடிப்பது, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் கலந்த தண்ணீரை அருந்தும் பழக்கம்.

    குழந்தையின் உடல் எடை குறைய புதினா டீ, இஞ்சி டீ குடிப்பது, பால் சேர்க்காத பழச்சாறுகள் மயோனைஸ் சேர்க்காத சாலட் ஆகியவை குழந்தையின் உடல் பருமனை குறைக்க மிகவும் பயன்படுகிறது.

    தினமும் காய்கறிகள், பழங்களும் தினமும் சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்து வர குழந்தையின் உடல் எடையை மிக எளிதாகவே குறைத்துவிட முடியும்.
    எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும். அதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    * முகச்சுருக்கத்தை போக்க தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பில் தடவி. பாசிப்பருப்பு மாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

    * ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

    * முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கி அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

    * வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்குரு வராமல், வெளியில் கருத்துப் போகாமல் இருக்கும்.

    * இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.

    * தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.

    * உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

    * முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

    * முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

    * பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

    * மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

    * ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

    * எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதே போல் எண்ணெய் வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசிக் கொள்ளலாம். இதன் மூலம் முகம் புத்தொளிபெறும்.
    பப்பாளி பழத்தில் இரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் தன்மை அதிகம் உள்ளது. இன்று பப்பாளி பழத்தை வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பப்பாளி பழம் - 1
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
    மிளகுதூள் - அரை டீஸ்பூன்
    கருப்பு உப்பு - அரை டீஸ்பூன்
    எலுமிச்சம்பழச் சாறு - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையானது.

    பப்பாளி

    செய்முறை:

    பப்பாளி பழத்தை தோல் விதை நீக்கி துண்டுகளாக்குங்கள்.

    அதனுடன் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலந்து பரிமாறுங்கள்.

    எந்த நேரத்துக்கும் ஏற்ற எளிய சாலட் இது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சமூக வலை தளங்களை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் ஆபாசமான புகைப்படங்களை வெளியிடுகின்றனர். இதனால் சில பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வெளியில் சொல்ல முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் நிகழ்கிறது.
    வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தில் கணினி பயன்பாடுகள் மிக இன்றிமையாத பங்கு வகிக்கின்றது. கணினி பயன்பாடுகள் இல்லாத துறைகளே இல்லை எனலாம். இன்று கிராமங்களில் கூட இணைய பயன்பாடு என்பது மிக சாதாரணமாக உள்ளது. எனவே இணைய கலாசாரம் உச்ச கட்ட வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்று இணையம் நன்மை-தீமைகள் என இரண்டு பக்கங்களை கொண்டுள்ளது. பல்வேறு வலைதளங்கள் உலகத்தகவல் அனைத்தையும் நம் கண்முன்னே நம் இல்லத்திலேயே அள்ளித்தருகிறது. இதில் பொழுது போக்கிற்காக அமைக்கப்பட்ட பல சமூக வலைதளங்களும் அடங்கும். மின்னஞ்சல் முகவரி வைத்திருப்பதையே பெரியதாக கருதிய சூழலில் தற்போது சமூக வலைதளங்களில் கணக்கு இல்லாதவர்கள் அற்பமாக பார்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பேஸ்புக், டுவிட்டர், யூடியூப், ஆகியவற்றில் கணக்கு இல்லாதவர்களை எள்ளி நகையாடுகின்றனர். வாழ்க்கையின் அங்கமாகவே சமூகவலைதளம் மாறிவிட்டது எனலாம்.

    நன்மைகள்

    சமூக வலைதளங்கள் பொழுது போக்கிற்காக மட்டுமின்றி பல நன்மைகளையும் நல்கி கொண்டிருக்கிறது. கருத்துகளை பரிமாறி கொள்ளவும், மக்களை ஒன்றிணைக்கவும் தகவல் பரிமாற்றத்திற்கும் சமூக வலைதளங்கள் உதவுகின்றன. தன் குடும்பத்தை பிரிந்து சென்று மறந்து விடாது அயல்நாடுகளில்வாழும் பலரும் சமூக வலைதளங்களின் உதவியுடன் தங்களது கருத்துகளையும், புகைப்படங்களையும் வீடியோ பதிவுகளையும் பகிர்ந்து கொள்கின்றனர். வணிக நிறுவனங்கள் சமூக வலைதளங்கள் மூலம் பொருட்களை விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களின் கருத்துகளை நேரடியாக அறிந்து கொள்ள முயல்கிறது. இதனால் வணிக நிறுவனங்களின் வளர்ச்சிக்கு சமூக வலை தளங்களின் பங்கு முக்கியமாக இருக்கிறது.

    தீமைகள்

    சமூக வலை தளங்களை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் தவறான செயலிலும் ஈடுபடுகின்றனர். ஆபாசமான புகைப்படங்களையும் வெளியிடுகின்றனர். இதனால் இளம் வயதினரின் மனதில் சலனம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அது மட்டுமின்றி சில பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வெளியில் சொல்ல முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் நிகழ்கிறது.

    அதிக பயன்பாட்டின் விளைவு

    24 மணி நேரமும் சமூக வலை தளங்களையே பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு வெளியில் அவர்களைச்சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போகிறது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கடமைகள் இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் சமூக வலைதளங்களில் மூழ்கி இருப்பது துன்பத்தையே ஏற்படுத்தும். சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்கள் அதில் உள்ள நன்மை தீமைகளை அறிந்து அளவோடும், பாதுகாப்போடும் பயன்படுத்தினால் இது போன்ற குற்றங்களை குறைக்க இயலும். அதிலும் குறிப்பாக பெண்கள் புத்திசாலித்தனமாகவும், சற்று விழிப்போடும் பயன்படுத்துவது நன்மை பயக்கும்.
    வாடகைத்தாய்க்கான வயதை போலவே, பயனாளிகளாகும் பெற்றோர்களின் வயதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
    உலகில் 26 நாடுகளில் வாடகைத்தாய் முறை தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தாலும் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. அதிநவீன மருத்துவ சிகிச்சைகளும், திறன் வாய்ந்த மருத்துவர்களும் இங்கு அதிகம். வாடகை தாய்க்கான முறையான சட்டங்கள் இந்தியாவில் இல்லை என்று கூறப்பட்டாலும், இந்தியன் மெடிக்கல் ரிசர்ச் கவுன்சில் அளித்த வழிகாட்டும் நெறிமுறைகள் உள்ளன.

    கர்ப்பத்தை 10 மாதம் சுமந்து குழந்தை பெற்றெடுக்கும் வாடகைத்தாய்க்கு கிடைக்க வேண்டிய பணம் சரியாக போய்ச்சேராமல் கேள்விக்குறியாகி விடக்கூடாது. பிரசவத்துக்கு பின்னும் வாடகைத்தாயின் பாதுகாப்பும் பராமரிப்பும் அதற்கான மருத்துவச் செலவுகளையும் ஏற்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற விதி முக்கியமானது.

    என்னதான் பணத்தை பெற்றுக்கொண்டு பிரசவித்தாலும் தொப்புள் கொடி உறவு சாதாரணமானதல்ல. பிரசவத்துக்குபின் மனதளவில் வாடகைத் தாய்மார்களை ஆற்றுப்படுத்த வேண்டியது அவசியம். வாடகைத்தாயை இந்திய சமூகம் குழந்தை பேறின்மைக்கான தீர்வாக பார்க்காமல் பிரச்சினையின் ஒரு பகுதியாகவே பார்க்கிறது. இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பேறு அடைபவர்களுக்கான சட்டம் இன்னும் முழுமையான வரையறைக்குள் வரவில்லை.

    வாடகைத்தாய்க்கான வயதை போலவே, பயனாளிகளாகும் பெற்றோர்களின் வயதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
    உயர் இரத்த அழுத்த நோய் இதற்கு முன்பு, 40 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்தது. ஆனால், இன்று இளம் வயதினரும் கூட இந்நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
    உலக சுகாதார நிறுவனம், ‘கார்டியோவாஸ்குலர் என்ற இதய நோய் இறப்பு விகிதம் அதிகரிக்க முக்கிய காரணம் உயர் இரத்த அழுத்தம்’ என்பதை சுட்டிக்காட்டி உள்ளது. உலக அளவில் செயல்பட்டு வரும் 85 தேசிய உயர் இரத்த அழுத்த சங்கங்களின், தலைமை அமைப்பான ‘தி வேர்ல்டு ஹைபர்டென்ஷன் லீக்’ (டபிள்யூ.எச்.எல்), ‘உலகம் முழுவதிலும் உயர் இரத்த அழுத்த பாதிப்பு கொண்ட மக்களில் 50, சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் அவர்களது ஆரோக்கிய நிலை குறித்து அறியாமல் இருக்கிறார்கள்’ என்ற தகவலை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலக உயர் இரத்த அழுத்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதோடு, ஆரோக்கியமான உடல் நலத்தையும், மகிழ்ச்சியான வாழ்க்கை முறையையும் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உயர் இரத்த அழுத்தம் வரக்கூடும். இந்நோய் இதற்கு முன்பு, 40 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்தது. ஆனால், இன்று இளம் வயதினரும் கூட இந்நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.

    இரத்த அழுத்தம் என்பது ‘உயர் இரத்த அழுத்தம்’, ‘குறைந்த இரத்த அழுத்தம்’ என இரண்டு வகையாக உள்ளது. பொதுவாக, 30 வயதுள்ள ஒரு நபருக்கு 120, 80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான இரத்த அழுத்தம் ஆகும். இதில் 120 என்பது சிஸ்டாலிக் அழுத்தம். அதாவது, இதயம் சுருங்கி இரத்தத்தை உடலுக்குத் தள்ளும்போது ஏற்படுவது. இது ‘சுருங்கு அழுத்தம்’ ஆகும். 80 என்பது டயஸ்டாலிக் அழுத்தம். அதாவது, இதயம் தன்னிடம் இருந்து இரத்தத்தை வெளியேற்றி, விரிந்த நிலையில் உடலில் இருந்து திரும்ப வரும் இரத்தத்தை பெறுவது. இது ‘விரிவு அழுத்தம்’ ஆகும். அதன் அடிப்படையில், கீழ்க்கண்ட மூன்று பிரிவுகளாக உயர் இரத்த அழுத்தம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

    முதல் நிலை சிஸ்டாலிக் 140 - 159, டயஸ்டாலிக் 90 - 99. இரண்டாம் நிலை சிஸ்டாலிக் 160 - 179, டயஸ்டாலிக் 100 - 109. நெருக்கடி நிறைந்த மூன்றாம் நிலை சிஸ்டாலிக் 180 -க்கு மேல், டயஸ்டாலிக் 110-க்கு மேல்.

    35 முதல் 45 வயதினை ஒருவர் கடந்து செல்லும்போது, அவரது உடலில் உள்ள சிறிய சுத்த இரத்த குழாய்கள் விரியும் தன்மையை இழக்கின்றன. தவறான உணவுப்பழக்கம் காரணமாக இரத்தக் குழாய்களின் உட்புறம் படியும் தீங்கு செய்யும் கொழுப்பால், தடிப்பு ஏற்பட்டு அதன் உள் அளவு சுருங்கி விடுகிறது. அதனால், இரத்த ஓட்டத்தின் சீரான வேகம் குறைந்து, அழுத்தம் அதிகமாகும் நிலைதான் உயர் இரத்த அழுத்தம். இதை நோய் என்று சொல்ல இயலாது. ஆனால், உடலை பாதிக்கும் வெவ்வேறு நோய்களுக்கான அடிப்படை காரணமாக இது அமைந்து விடுகிறது. இது அறிகுறிகளை காட்டாமல் தாக்குவதால் ‘சைலண்ட் கில்லர்’ என்றும் சொல்லப்படுகிறது.
    ×