என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    வெயில் காலத்தில் ஆண்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய அழகு குறிப்புகளை பற்றி இங்கே விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    வெயில் காலத்தில் பெரும்பாலான ஆண்களுக்கு முகம் மிகவும் வறண்டு காணப்படும். இதனை குணப்படுத்த அரை வெள்ளரிக்காயை எடுத்து கொண்டு நன்கு அரைத்து, அதனுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து முகத்தில் பூசவும். இதனை வாரத்திற்கு 2 முறை இரவில் செய்து காலையில் முகம் கழுவினால் வறண்ட சருமம் புத்துணர்வுடனும் ஈரப்பதத்துடனும் இருக்கும்.

    இன்று பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கும் முக பிரச்சினைகளில் முதன்மையானது இந்த முகப்பருக்கள்தான். இவற்றை போக்க 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் யோகர்ட், பொடி செய்த ஆரஞ்ச் தோல், ரோஸ் நீர் போன்றவற்றை நன்றாக கலக்கவும். பின் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் அலசினால் முக பருக்கள் நீங்கும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்தால் நல்ல பலனை பெறலாம்.

    வெயில் காலம் வந்தாலே வெளியில் செல்லும் போது அதிக அனலினால் ஏற்படும் வியர்வையை தான் முதலில் சொல்லணும். வெளியில் போய் விட்டு வந்ததும் ஏற்படும் தாகத்துக்கு உடனே பிரிட்ஜை திறக்காதீர்கள், திறந்து ஜில் தண்ணீரை குடிக்காதீங்க. ஆறிய வெண்ணீர் அல்லது சாதா தண்ணீரேயே குடிங்க.

    அடுத்து வியர்வையுடன் உள்ள சட்டையை எடுத்து அப்படியே பீரோவில் மாட்டாதீர்கள். அது அப்படியே உப்பு உறைந்து இருக்கும். காய்ந்ததும் அதை மறுபடி மறுநாள் ஆபிஸூக்கு போட்டு செல்லாதீர்கள்.

    பயங்கர கப் அடிக்கும் ஆனால் அது உங்களுக்கு தெரியாது, அதையே சென்ட் அடித்து போடுவதால், எதிரில் நிற்பவர்களுக்கு அல்லது, நீங்கள் சரி உச்சி வெயிலில் இருந்து உள்ளே நுழைந்தால் கண்டிப்பாக ஸ்மெல் வரும். ஒரு ஆறு செட் வைத்து கொண்டு சிரமம் பார்க்காமல் துவைத்து பயன் படுத்துவது நல்லது.

    அடுத்து சாக்ஸ்... சாக்ஸ் மட்டும் நல்ல தரமானதாக பார்த்து காட்டனில் வாங்கிக்கொள்ளுங்கள். முக்கியமா சாக்ஸ் போடும் முன் உள்ளங்காலில் பவுடர் போட்டு கொள்ளுங்கள். தொப்பி, சன் கிளாஸோ அணிந்து கொள்ளலாம்.

    அடுத்து நைட் ஷிஃப்ட்க்கு போகிறவர்கள், மதியம் குளிக்க எழுந்திருக்கும் போது தண்ணீர் டீ போடும் வெண்ணீர் ஆகிடும், அவசரமா டாயிலெட்டுக்கு போய் விட்டு பிறகு அவஸ்தையாகிடும். ஒரு பக்கெட்டில் வெயில் காலம் வரை கொஞ்சம் தண்ணீர் பிடித்து வைத்து கொள்ளுங்கள்.

    வெளியில் போகும் போது ஏதாவது சன்ஸ் கிரீம் கண்டிப்பாக போட்டு கொள்ளுங்கள். நீங்கள் கிரீம் பயன்படுத்துபவராக இருந்தால் முகத்தில் தடவும் போது கண்ணா பின்னான்னு தடவாதீங்க.. முகத்தில் கீழிருந்து மேலாக வட்ட வடிவில் தடவுங்கள். இல்லை என்றால் சதை தொய்ந்து சீக்கிரமே கிழவர் தோற்றம் வந்துடும்.

    வெயிலில் நடந்து வருபவர்களுக்கு முதலில் வருவது கண் எரிச்சல். எண்ணெய் தேய்த்து குளிப்பதால் வறண்ட சருமம் மிருதுவாகிறது. கண்ணுக்கு சூடு தணிகிறது. தலையில் உள்ள பொடுகு, முடி உதிர்தல் எல்லாவற்றுக்கும் நல்லது.
    கோடை வெயில் காலத்தில் உடல் வறண்டு விடாமல் இருக்க நீர்ச்சத்து நிறைந்த இந்த ஜூஸை குடிக்கலாம். இன்று இந்த ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கிர்ணிப் பழம் - 200 கிராம்,
    மாதுளை முத்துக்கள் - அரை கப் ,
    இளநீர் - ஒரு கப்,
    இளநீர் வழுக்கை - 2 மேஜை கரண்டி ,
    தேன் - 2 தேக்கரண்டி,
    உப்பு - ஒரு சிட்டிகை,
    தண்ணீர் - 200 மி.லி. ,
    குல்கந்த் - சிறிதளவு ,
    எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

    செய்முறை:

    கிர்ணிப் பழத்தை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கவும்.

    அத்துடன் இளநீர் வழுக்கை, இளநீர் கலந்து விழுதாக அரைக்கவும்.

    அதில் எலுமிச்சை சாறு, தேன், உப்பு, குல்கந்த், தேவைக்கு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

    ஐஸ் கட்டிகள் சேர்த்து பருகலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இளம்பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் நிறைய சந்தேகங்கள் ஏற்படுகின்றன. சந்தேகங்களில் பெரும்பாலானவை அவர்களது தாம்பத்தியம் மற்றும் அழகு தொடர்புடையதாக இருக்கின்றன.
    இளம்பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் நிறைய சந்தேகங்கள் ஏற்படுகின்றன. சந்தேகங்களில் பெரும்பாலானவை அவர்களது தாம்பத்தியம் மற்றும் அழகு தொடர்புடையதாக இருக்கின்றன. அழகை பொறுத்தவரையில் சருமம், கூந்தல் பிரச்சினைகளே அதிகம். கர்ப்ப காலத்தில் தாம்பத்தியம் வைத்துக்கொள்ளலாமா? என்ற கேள்வியும் எழுகிறது.

    பொதுவாகவே கர்ப்பகாலத்தில் பெண்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களில் வித்தியாசம் ஏற்படும். அதனால் முகத்தில் அதிகமாக முடி வளர்தல், முகப்பரு தோன்றுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். கர்ப்பிணிகள் கருவளையத்தாலும் பாதிக்கப்படுகிறார்கள். தூங்கும்நேரம் குறைவதே இதற்கான காரணம். நன்றாகத் தூங்கி ஓய்வெடுத்தால் கருவளையம் மறையும். குளிர்ந்த ஏதாவது ஒரு மோய்சரைசிங் கிரீமை பயன்படுத்தி கருவளையம் இருக்கும் பகுதிகளில் மென்மையாக வருடி மசாஜ் செய்து ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் இதற்கு தீர்வு கிடைக்கும்.

    கர்ப்பகாலத்தில் ஏற்படும் சரும பிரச்சினை என்னவென்றால், கருப்பு மற்றும் தவிட்டு நிறத்தில் படை போன்று தோன்றும். கர்ப்பகாலத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரக்கும். அதனால் சருமத்திற்கு நிறம் கொடுக்கும் மெலானின், மெலோனோசைட்டுகள் என்ற திசுக்களின் செயல்பாடு வேகமடையும். அதுவே சருமத்தில் படை தோன்றுவதற்கு காரணம். சூரிய ஒளி படக்கூடிய முகம், கழுத்து போன்ற பகுதிகளில் இந்த படை பொதுவாக தோன்றும். இதனால் தொந்தரவு இல்லை. பிரசவத்திற்கு பிறகு ஹார்மோன் சுரப்பு சீரானதும் சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள் சரியாகிவிடும்.

    ‘ஸ்ட்ரச் மார்க்’ எனப்படும் அடிவயிற்று கோடுகள்தான் கர்ப்பகாலத்தில் பெண்களை அதிகம் வாட்டும். கர்ப்ப காலத்தில் சருமம் விரிவடைவதன் மூலம் இந்த கோடுகள் உருவாகின்றன. இது வயிற்றில் மட்டுமின்றி மார்பகங்கள், தொடைப்பகுதி, கைகளிலும் தோன்றும். இதற்காக இப்போதே கிரீம் மற்றும் எண்ணெய் வகைகளை பயன்படுத்தினாலும் பெரிய அளவில் பலன் எதுவும் ஏற்படாது. அவரவர் சருமத் தன்மைக்கு ஏற்ப இந்த கோடுகள் உருவாகும். சிலருக்கு கோடுகள் உருவாகாமலும் இருக்கும். கர்ப்ப காலத்தில் பெண்கள் அழகுக்காக இயற்கையான மூலிகைப் பொருட்களை மட்டும் ஓரளவு பயன்படுத்தலாம். ரசாயனம் கலந்த அழகுப்பொருட்களை பயன்படுத்தக்கூடாது.

    கர்ப்பகாலத்தில் தாம்பத்தியம் வைத்துக்கொள்வது பெண்களை பயம்கொள்ளவைக்கும் விஷயமாக இருக்கிறது. சமூகத்தில் பரவி இருக்கும் தவறான எண்ணங்களே அதற்கு காரணம். கர்ப்பிணியின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க பிரச்சினை எதுவும் இல்லை என்றால், ஆரோக்கியமான கர்ப்பிணியாக இருக்கிறார் என்றால், தாம்பத்தியம் வைத்துக்கொள்ளலாம் இதில் முடிவெடுப்பது கணவன்-மனைவி இருவரது மனநிலை, உடல்நிலை, சூழ்நிலைகளை பொறுத்தது. கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத அளவுக்கு தாம்பத்தியத்தை வைத்துக்கொள்ளவேண்டும்.

    கர்ப்ப காலத்தில் பெண்களிடம் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றங்களைப் பொறுத்து சில பெண்களுக்கு உறவில் ஆர்வம் இருக்காது. அதனால் உடலுறவு தற்போது தேவையில்லை என்று தற்காலிக ஓய்வு கொடுத்துவிடுவார்கள். சில பெண்கள் உடல் நிலையை கருத்தில் கொண்டு பயத்தோடு கணவரை அணுகவிட மாட்டார்கள். கர்ப்பிணிகளில் குறிப்பிடத்தக்க சதவீதத்தினர் கணவரது தொடுதல், வருடுதல், அணைத்தல் போன்றவைகளில் மகிழ்ச்சியடைகிறார்கள். அதனால் கர்ப்பகால தாம்பத்தியம் என்பது பெண்ணுக்கு பெண் மாறுபாடு கொண்டது.

    சூழலுக்குதக்கபடி அந்தந்த தம்பதிகளே இதில் இறுதி முடிவு எடுக்கவேண்டும். பொதுவாக பார்த்தால் கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாதங்களும், இறுதி மூன்று மாதங்களும் உறவு மீதான ஈர்ப்பு குறைவாக இருக்கும். அப்போது தவிர்க்கலாம். நிறைய பெண்கள் உறவின்போது வயிற்றுக்கு அழுத்தம் ஏற்பட்டு, சிசுவுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்றும் பயப்படுகிறார்கள். அதனால்தான் கர்ப்பகாலத்தில் தாம்பத்தியத்தை தவிர்க்கிறார்கள். மனதும், உடலும், ஆரோக்கிய சூழலும் இடம்கொடுத்தால் கர்ப்பகால தாம்பத்தியத்தை மேற்கொள்ளலாம்.
    குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்யும் போது அதிக அழுத்தம் தர வேண்டிய அவசியம் இல்லை, மிகவும் பொறுமையாக சில நேரங்களில் ஒரே பகுதியில் ஆயில் மசாஜ் செய்ய வேண்டும்.
    உங்களுக்கு விருப்பமான எந்த எண்ணெய் வேண்டும் என்றாலும் தேர்வு செய்து, மிதமான சூட்டில் எடுத்துக் கொள்ளவும்.

    உங்கள் உள்ளங்கையில் சில துளி எண்ணெய் விட்டு உங்கள் இரு கைகளையும் தேயுங்கள், இதனால் குழந்தையின் உடலுக்கு வெப்பம் மிதமாக பரவும்.

    இப்போது குழந்தையின் உடலில் பொறுமையாக ஆயில் மசாஜ் செய்ய தொடங்கவும்.

    குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்யும் போது அதிக அழுத்தம் தர வேண்டிய அவசியம் இல்லை, மிகவும் பொறுமையாக சில நேரங்களில் ஒரே பகுதியில் ஆயில் மசாஜ் செய்ய வேண்டும்.

    எண்ணெய் தடவிய சில நேரங்கள் கழித்து குழந்தையின் உடல் சில எண்ணெய்கள் இழுத்து கொள்ளும், சில எண்ணெய்கள் அப்படியே இருக்கும். எனவே நீங்கள் தேர்ந்தெடுக்கும் எண்ணெய்யை சரியாக தேர்ந்தெடுக்கவும்.

    உங்கள் குழந்தைக்கு எங்காவது தோல் தடிப்பு அல்லது புண் இருந்தால் அங்கு ஆயில் மசாஜ் செய்ய வேண்டாம். குறிப்பாக நீங்கள் தேர்வு செய்த எண்ணெய்யால் உங்கள் குழந்தைக்கு அலர்ஜி வராமல் இருக்க வேண்டும்.

    குழந்தை தூங்கும் போது குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்ய கூடாது. குழந்தையுடன் பேசி. சிரித்து. விளையாடிக் கொண்டு ஆயில் மசாஜ் செய்ய வேண்டும்.
    எழுதாத சிலேட்டாக இருக்கும் நம் மனதில் யார் யாரோ வந்து அவர்களுக்குத் தேவையானதை எழுதிச்செல்ல நாம் அனுமதிக்கலாகாது. நமக்கான எழுத்தை நாமே எழுதுவோம்.
    பண்பாடு பற்றி அதிகமாகப் பேசிய சமூகம் நம் தமிழ்ச்சமூகம். அதனாலோ என்னவோ பண் பாடு குறித்த புரிதல் நம்மிடம் சற்றுக் குழம்பிய நிலையிலேயே இருக்கிறது. பண்பாடு என்றால் இதுதான் இப்படித்தான் என்று ஒரு சட்டம் போட்டு இறுக்கமான வரையறை தந்து விடவும் முடியாது. எதையும் பண்படுத்துவது பண்பாடு. நிலத்தைப் பண்படுத்துவதை விவசாயம் என்கிறோம்.

    தமிழ்ப்பண்பாடு, இந்தியப் பண்பாடு,  மேற்கத்தியப் பண்பாடு, வாசிப்புப் பண்பாடு, உணவுப்பண்பாடு, எனப்பல பண்பாடுகள் பற்றியும் நாம் பேசுகிறோம். சரி, அது இருக் கட்டும்.

    எதையும் பண்படுத்துவது நல்லதா கெட்டதா என்று கேட்டால் இயல்பாக நாம் நல்லது என்றுதான் விடை அளிப்போம். நிலத்தைப் பண்படுத்துவது நல்லதா கெட்டதா என்று கேட்டால் நல்லது என்று உடனே விடை யளிப்போம். ஆனால் உங்களுக்குச் சொந்தமான நிலத்தை யாரென்று தெரியாத யாரோ சிலர் பண்படுத்தினால்  நல்லதா? என்று கேட்டால் அதெப்படி? என்று எதிர்க் கேள்வி கேட்போம்.

    யார் நிலத்தை யார் பண்படுத்தி னால் நல்லது? அவர்கள் எதற்காகப் பண்படுத்துகிறார்கள்? அதில் என்ன விளையப்போகிறது? அது அறு வடை ஆகி யார் வீட்டுக்குப் போகப் போகிறது? என்கிற கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்தால்தான் நிலத்தைப் பண் படுத்துவது- - நல்லதா கெட்டதா என்று கூற முடியும்.
    அதே போலத்தான் கல்ச்சர் எனப்படும் பண் பாடும். மனித மனங்களைப் பண்படுத்துவதே பண்பாடு. மனித மனங்களைப் பண்படுத்துவது நல்லதா கெட்டதா? உடனே நல்லது என்று சொல்ல வாய் வரை வார்த்தை வருகிறது.ஆனால் மீண்டும் அதே கேள்விகளை எழுப்பிப்பார்க்க வேண்டுமல்லவா? யார் மனதை யார் பண்படுத்துகிறார்கள்? எதற்காகப் பண்படுத்துகிறார்கள்? மனங்களில் என்ன விதைக்கப்போகிறார்கள்? அது யாருக்கு நன்மை தரும் ? போன்ற கேள்விகளை எழுப்பி அதற்கு விடை தெரிந்தல்தான் மனதைப் பண்படுத்துவது நல்லதா கெட்டதா என்று கூற முடியும்.

    நம் மனங்களைப் பண்படுத்துவது யார் என்கிற கேள்வியை இப்போது எடுத்துக்கொள்வோம். நம் சமூகத் தில் இயங்கும் பல பண்பாட்டு நிறுவனங்கள் தாம் நம் மனங்களைப் பண்படுத்துகின்றன. அவை எவை? 1.குடும்பம் 2.கல்விச்சாலைகள் 3.சாதி 4.மதம் 5.கலை, இலக்கியம் 6.மீடியா எனப்படும் ஊடகம் இப்படிப் பல பண்பாட்டு நிறு வனங்கள் தாம் நம் மனங்களை பண்படுத்துகின்றன. இவை ஒவ் வொன்றையும் பற்றி நாம் விரிவாக அறிந்துகொள்ள வேண்டும். இடம் கருதி இங்கு சுருக்கமான அறிமுகமாகப் பார்க்கலாம்.

    குடும்பம் என்பது மிக முக்கியமான சமூக வயமாக்கும் பண்பாட்டுத் தொழிற்சாலை ஆகும். நாம் யார்? நாம் என்ன சாதி? என்ன மதம்? எது நல்லது? எது கெட்டது? என்பன போன்ற பல முக்கியமான புரிதல் களையும் உணர்தல் களையும் நமக்குக் கற்றுக் கொடுக்கும் இடம் குடும்பம்தான்.

    ஆணுக்கு என்ன வேலை? பெண்ணுக்கு என்ன வேலை என்பதையும் தீர்மானிக்கும் இட மாகவும் அது திகழ்கிறது. நமக்கு ஆடை அணிவிக்கப் பழக்கும் குடும்பம் தான் ஆணும் பெண்ணும் சமமில்லை என்கிற கருத்தையும் நம் தலையில் ஏற்றி விடுகிறது. ஆணுக்கான வேலை பெண்ணுக்கான வேலை என்கிற பிரிவினையைக் குடும்பம்தான் கற்றுத்தருகிறது. ஆனால் குடும்பம் தானாக யோசித்து எதையும் கற்றுத் தருவதில்லை.

    எந்த நாட்டில் எந்த சமூகத் தில் எந்தக் காலத்தில் ஒரு குடும்பம் இயங்குகிறதோ அந்தக்காலமும் இடமும்தான் குடும்பத்தின் சிந்தனையையும் தீர் மானிக்கிறது.“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே..சான்றோனாக் குதல் தந்தைக்குக் கடனே” என்று சங்க காலத்தில் சொல்லப்பட்ட கட மையில் இன்றளவும் மாற்றமில்லாமல் இருப்பது சரியா? எண்ணற்ற குடும் பங்களில் பிள்ளை களின் கல்வி பற்றி அக்கறைப் படுவது மட்டுமின்றி அன்றாடம் பிள் ளைகளோடு கூட உட்கார்ந்து வீட்டுப் பாடம் சொல்லிக் கொடுப்பது வரை சான்றோனாக்கும் கடமையைத்  தாய் மார்கள் தாம் செய்கிறார்கள். ஆனாலும் தந்தை யோடு கற்போம் என்கிற பழைய கருத்தைத்தான் நாம்  சுமந்து கொண்டலைகிறோம்.

    ஆணாதிக்க சமூகத்தில் குடும்பங்களும் ஆணாதிக்கச் சிந்தனைகளையே குழந்தைகள் மனதில் விதைக்கும். பெண் குழந்தைகளை அடுப்படிக்கு அழைக்கும் குடும்பம் ஆண் குழந்தைகளுக்குச் சமைக்கக் கற்றுத் தருவதில்லை. வாசல் பெருக்கிக் கோலம் போட ஆண் குழந்தைகளைப் பழக்குவதில்லை. இப்படித்தான் குடும்பம் என்னும் பண்பாட்டு நிறுவனம் நம்மைப் பண்படுத்துகிறது.

    கல்விச்சாலைகள் நம்மை ஒரு ஆசிரியர் சொல்வதைக் கைகட்டி வாய் பொத்தி  அமைதியாக கேட்கும் பண்பாட்டில் வளர்க் கின்றன. கல்வி என்பது ஆசிரியர் மற்றும் கல்வித்திட்டம் கொடுப் பதை மாணவர்கள் கைநீட்டி வாங்கிக்கொள்வதாகவே நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். “எனக்குக் கல்விப்பிச்சை இட்ட ஆசிரியர்/பள்ளிக்கூடம்” என்கிற சொல்லாடல் இதனால் தான் வந்தது. கல்வி ஒருபோதும் ஒருவர் கொடுக்க இன்னொருவர் வாங் கும் பிச்சை அல்ல.

    கற்பவரும் கற்பிப்பவரும் சேர்ந்து இந்த சமூகத்தையும் உலகத்தையும் பிரபஞ்சத்தையும் புரிந்து கொள்ளும் ஓர் நிகழ்வுப் போக்கே கல்வி. ஆனால் நம் கல்விச்சாலைகள் புத்தகத்தில் உள்ளதை அப்படியே மனப்பாடம் செய்து தேர்வுத்தாளில் வாந்தி எடுக்கும் மாணவர்களையே உருவாக்குகின்றன. எதிர்க்கேள்வி கேட்காமல் சொன்னதைக் கேட் டுச்சொல்லும் மனிதர்களை உரு வாக்கும் தொழிற்சாலைகளாகக் கல்விச்சாலைகள் இயங்குகின்றன.

    சொன்னபேச்சுக் கேட்கும் மனிதர்கள்தாம் ஆள்பவர்களுக்கும் ‘படியளப்பவர்’களுக்கும் பிடிக்கும் என்பது ஊரறிந்த உண்மை.அவர் களுக்குத் தேவையான மனித மனங்களைப் பண்படுத்தும் இடமே பள்ளி.

    சாதி என்பது உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத இந்தியா வில் மட்டுமே இருக் கின்ற ஓர் ஏற்பாடு. பிறப்பின்  அடிப்படையிலேயே  ஒருவ ருடைய  சமூக நிலையை  அவர வர் ஏற்றுக்கொள்ளச்செய்யும் பண் படுத்தலை சாதியம் செய்கிறது. மலம் அள்ளும் தொழில் யாருக்காவது பிடிக்குமா? சாதியின் பெயரால் அத்தொழில் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களின் தலையில் கட்டப்பட்டு விட்டதல்லவா? எந்த அறி வும் திறமையும் இல்லாதவனும் கூட தான் பிறந்த சாதியின் காரணமாக உயர்ந்தவனாகக் கருதிக்கொள்ளும் பண்பாட்டை சாதியம் செயல்படுத்துகிறது.சாதி அடிப்படையில் தொழில் என்பதில் சில உடைப்புகள் ஏற்பட்டுள்ளன. சாதியை மறுத்ததால்தான் அது நிகழ்ந்தது. ஆனாலும் கீழ் மட் டத்திலும் உயர்மட்டத்திலும் தொழில் மாற்றம் இன்னும் ஏற்பட்டு விடவில்லை.மலம், சாக்கடை அள்ளுவதும் புரோகிதம் செய்வதும் இன்றைக்கும் சாதி அடிப்படையில்தான் தொடர்கிறது.

    அதே போல சாதி, மத, இன பேத மற்றுப் பிறக்கும் மனிதனை, மனுஷியை பெற்றவர்களின் மதத்தில் அவர் கள் சம்மதம் இல்லாம லேயே சேர்த்து விடுகிறோம். அம்மதத்தின் பழக்க வழக்கமும் பண்பாடும் அக்குழந்தைகளைப் பண்படுத்துவதில் மிகப்பெரிய பங்காற்றுகின்றன. நம்பிக்கையும் அறிவும் எதிரெதிர் நிலைகளில் போரிட்டவாறே சக பயணிகளாக மனிதகுல வரலாறு நெடுகிலும் வந்து கொண்டிருப்பவை. தனக்கு மதம் தேவையா இல்லையா? தேவை எனில் எந்த மதம் என் மதம் என்று தேர்வு செய்யும் உரிமை ஒவ்வொரு குழந்தைக்கும் தரப்பட வேண்டும். குறைந்தபட்ச வயது/வளர்ச்சிக்குப் பிறகு அவர்கள் தேர்வு செய்ய வேண் டிய ஒன்றாக அது மாற வேண்டும்.

    கலை இலக்கியங்கள் என்கிறவையும் பண்பாட்டு நிறு வனங்கள்தாம். மனித மனங்களை “இருப்பதை ஏற்றுக் கொள்ள”வைப்பதில் அவை முக்கியப் பங்காற்றுகின்றன.  எழுதப்பட்ட இலக்கியங்கள் மட்டுமல்ல எழுதப்படாத இலக்கியங்களான விடுகதை, பழமொழி, சொல்லடை போன்றவையும் இப்பணியையே செய்கின்றன.
    “ராஜா வீட்டு நாய் சிம்மாசனம் ஏறுதுன்னு வண்ணான் வீட்டு நாய் வெள்ளாவியிலே ஏறலாமா”

    என்று ஒரு சொல்லடை உண்டு. உனக்கு என்ன விதிக்கப்பட்டி ருக்கிறதோ அதை ஏற்றுக்கொள். அதை மீற நினைக்காதே என்கிற பண்படுத்தல் இதில் இருக்கிறது.
    மீடியா பற்றி ஏற்கனவே பேசி னோம். ஆகவே நம்மை யார் யாரோ பண்படுத்துகிறார்கள் என்பதுதான் உண்மை. இன்றிருக்கும் நம் மன தைப் பண்படுத்தியவர்கள் இந்தப் பண்பாட்டு நிறுவனங்களே. நல்லதை எல்லாம் ஏற்றுக்கொள்ளலாம். அல்லவற்றிலிருந்து  விடுபடுவது எப்படி? ஊர் சரியில்லை என்றால் ஊரோடு ஏன் ஒத்துப்போக வேண்டும்? கட்ட மைக்கப்பட்ட -பண்படுத்தப்பட்ட- நம் மனதிற்கு விடுதலை எப்படிக் கிடைக்கும்?

    கேள்வி கேட்கும் கலாச்சாரத்தை வளர்த்துக் கொள்வது முதல்படி.. பகுத்தறிவின் பரப்பில் நிற்க முடியாத பண்படுத்துதல்களை துணிவுடன் நிராகரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். வாசிப்புப் பண்பாட்டை வளர்த்துக்கொள்வதன் மூலம்தான்  கேள்வி கேட்கும் பண்பாட்டுக்குள் நாம் நுழைய முடியும்.

    எழுதாத சிலேட்டாக இருக்கும் நம் மனதில் யார் யாரோ வந்து அவர்களுக்குத் தேவையானதை எழுதிச்செல்ல நாம் அனுமதிக்கலாகாது. நமக்கான எழுத்தை நாமே எழுதுவோம்.

    தொடர்புக்கு: tamizh53@gmail.com

    காய்கறிகளைப் போன்று பழங்களிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது. காய்கறிகளையும், பழங்களையும் இந்த கோடையில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உட்கொள்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது.
    இப்போது கோடைக்காலத்தின் உச்சக்கட்டம் என்பதால் அனைவரும் கடும் வெயிலால் பாதிக்கப்பட்டு வருகிறோம். கோடையின் பாதிப்பால் இலவசமாக சில நோய்களும் வந்து விடுகின்றன. கோடைக்கேற்ற உணவு வகைகளை சாப்பிட்டால் அந்த நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

    கோடைக்காலத்தில் நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படும். காய்கறிகளில் நீர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. காய்கறிகளை முடிந்தவரை பச்சையாகவோ அல்லது லேசாக வேக வைத்தோ உட்கொண்டால்தான் அதிக அளவிலான நீர்ச்சத்தை நாம் பெற முடியும். காய்கறிகளைப் போன்று பழங்களிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது. காய்கறிகளையும், பழங்களையும் இந்த கோடையில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உட்கொள்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது.

    வெள்ளரி:

    ஆங்கிலத்தில் "வெள்ளரியைப் போல குளிர்ந்தது" என்றொரு சொற்றொடர் உண்டு. அதுவே வெள்ளரி எவ்வளவு குளிர்ச்சியானது, நீர்ச்சத்துமிக்கது என்பதைக் காட்டிவிடுகிறது. வியர்வை போன்றவற்றின் மூலம் உடம்பிலிருந்து அதிகமாகத் தண்ணீர் வெளியேறும்போது உடம்பில் தாது உப்புகளின் சமநிலையைக் காக்க வெள்ளரி உதவுகிறது. வெள்ளரியின் தோலில் அதிகமாக "ஸ்டீரால்" உள்ளது. இந்த "ஸ்டீரால்" கொழுப்பைக் கட்டுப்படுத்தக் கூடியது. எனவே வெள்ளரியைக் கழுவிவிட்டு தோலைச் சீவாமலே சாப்பிடலாம். காரணம் தோலில்தான் அதிக மாக "ஸ்டீரால்" உள்ளது. வெள்ளரி குறைவான கலோரியை அளிக்கக்கூடியது என்பதால் எவரும் இதை விரும்பிச் சாப்பிடலாம்.

    லெட்டூஸ்:

    இதில் 90 சதவீதம் தண்ணீர்தான். எனவே காய்கறிக் கலவையாக லெட்டூஸை சேர்த்துக் கொள்ளலாம்.

    தக்காளி:

    அதிக தண்ணீர்ச் சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றான தக்காளி, புற்றுநோய் உள்ளிட்ட பல உடல்நலக் குறைபாடுகளுக்குத் தடை போடக்கூடியது. தக்காளிக்கு அதன் தனிச்சிறப்பான சிவப்பு நிறத்தைத் தரும் "லைக்கோபீன்" என்ற வேதிப்பொருள், வெயில் காலத்தில் நமது சருமம் வெயிலால் பாதிக்கப்படாமல் காக்கிறது. தக்காளியில் "வைட்டமின் ஏ" சத்தும் அதிகமாக உள்ளது.

    தர்ப்பூசணி:

    வெயில் காலத்தில் அதிகமாக விற்பனையாவது தர்ப்பூசணி. இதைத் தர்ப்பூசணி என்பதை விட "தண்ணீர்ப்பூசணி" என்றே கூறலாம். வெயில் வாட்டும் நேரத்தில் சாதாரண தண்ணீருக்குப் பதிலாக, புதிதாகத் துண்டு போடப்பட்ட, சாறு நிறைந்த தர்ப்பூசணியை சாப்பிடலாம். தண்ணீர்ச் சத்து நிறைந்த, கலோரி குறைந்த தர்ப்பூசணி, வெயில் காலத்தைச் சமாளிக்க ஏற்ற ஒன்று. தர்ப்பூசணி சக்தி வாய்ந்த "ஆன்டி ஆக்சிடன்ட்களை" கொண்டுள்ளது. உடம்பில் நச்சுக்களின் தீமையை எதிர்க்கக் கூடியவை இவை. தர்ப்பூசணி நார்ச்சத்தும் செறிந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

    ஸ்ட்ராபெர்ரி:

    வெளிநாட்டுப் பழவகையான ஸ்ட்ராபெர்ரியை நாம் அதிகமாகச் சாப்பிடுவதில்லை என்றபோதும், இதுவும் அதிகமாக தண்ணீர்ச் சத்து கொண்டது. தவிர "வைட்டமின் சி" சத்தும் மிக்கது. அதிகமான சூரிய ஒளியால் ஏற்படும் தோல் பாதிப்புகளை இது சரிப்படுத்தக்கூடியது. இவை தவிர ஸ்ட்ராபெர்ரியில் உள்ள மற்ற ஒரு வேதிப்பொருள் "பிளேவனாய்டு" என்பதாகும். இது புற்றுநோய்க்குத் தடை போடக்கூடியது
    கோடையில் சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு பெறும்.
    வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் வெயில் காலத்தை எண்ணி அதிகம் கவலை கொள்ள வேண்டாம். ஏனென்றால் கோடை காலத்தில் அதிகம் வியர்க்கும். இதனால் வறண்ட சருமத்தைக் கொண்டவர்களுக்கு நன்மையே தவிர, தீமை இல்லை. ஆனால் வியர்க்கும்போது உடலில் அசுத்தமான துகள்கள் ஒட்டினால் தோல் அலர்ஜி ஏற்படும். அதனால் அடிக்கடி உடம்பை கழுவவும்.

    கோடை காலத்தில் எல்லோருக்குமே உடலில் வியர்வை நாற்றம் ஏற்படவே செய்யும். அதற்கு நிறைய தண்ணீர் குடிக்கவும். கீரைகள், ஆரஞ்சுப் பழம், அன்னாசிப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். இவற்றிலுள்ள நார்ச்சத்து திரவ உற்பத்தியைக் குறைக்கும். பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்பை உடலில் தேய்த்துக் குளிக்கவேண்டும்.

    கோடையில் சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு பெறும்.

    தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய் விடும்.

    தோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற விட்டு, அதில் தேவையான அளவு எடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவிவிடுங்கள். இப்படி தினமும் செய்து வாருங்கள். உங்கள் வறண்ட சருமம் மாறி, முகம் பிரகாசிக்கவும் ஆரம்பித்து விடும்.
    குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய அவர்களுக்கு ஏற்ற உணவுகளை தயாரித்து அளிக்கவேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.
    குழந்தைகளுக்கு உணவு சாப்பிட வைப்பது என்பது ஒரு சிறந்த  கலை. ஆனால் அதையே மிகவும் கஷ்டமான காரியமாக நினைத்து குழந்தைகளை உண்ணவைக்க பாகீரத பிரயத்தனம் செய்கின்றனர் சில பெற்றோர்கள். ஏனெனில் கொடுக்கும் உணவை, வயிறு நிறையும் வரையில் சமத்தாக சாப்பிடும் குழந்தைகள் மிகக்குறைவு.சரியாகச் சாப்பிடாத குழந்தைகளை எப்படி சாப்பிட வைப்பது எனக் கவலையுடன் இருப்பவரா…?

    சில குழந்தைகள் உணவை விழுங்காமல் அப்படியே வெளியே தள்ளிவிடுவார்கள். குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய அவர்களுக்கு ஏற்ற உணவுகளை தயாரித்து அளிக்கவேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.

    குழந்தை நல்லா சாப்பிட வைக்க அருமையான வழி..!

    * பொதுவாக எல்லா வகையான உணவுகளையும் குழந்தைகளுக்கு தினிப்பதை இன்றுடன் விட்டு விடுங்கள்.

    * குழந்தைக்கு சரியான இடைவேளையில் கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும். ஏன் என்றால் குழந்தைக்கு உண்ணும் உணவு திகட்டாமல் இருக்க வேண்டும்.

    * மீறி குழந்தைகளுக்கு அதிக உணவை கொடுத்தால் சாப்பிடும் போதே குழந்தைகள் வாந்தி எடுத்து விடுவார்கள் எனவே குழந்தை சாப்பிடும்  அளவிற்கு மட்டும் உணவு கொடுப்பது மிக சிறந்த முறையாகும்.

    * குழந்தைக்கு பிடித்த உணவுகளை அதிகமாக செய்து கொடுக்க வேண்டும்.

    * குழந்தை இரண்டு வயது வந்த பிறகு உணவு ஊட்டுவதை தவிர்த்துக் கொள்ளவும். மற்றக் குழந்தைகளுடன் சேர்ந்து உணவருந்துவதை பழக்க வேண்டும். அப்போது தான் உங்கள் குழந்தை அதிக உணவை சாப்பிட பழகுவார்கள்.

    * குழந்தைகளுக்கு அதிகம் நார்ச்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், பயிறு வகைகள், பருப்பு வகைகள் அதிகம் கொடுக்க வேண்டும். ஏன் என்றால் இது குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவுகிறது.

    * குழந்தைகளுக்கு நீர்ச்சத்து அதிகம் தேவை எனவே தினமும் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    * தண்ணீர் குடிக்க அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மோர், மில்க் ஷேக், பழச்சாறு மற்றும் இளநீர் ஆகியவற்றை வாங்கி கொடுக்கலாம்.

    * காய்கறிகளை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு சாண்ட்விச்சுகளாகவும், வெஜ் நூடுல்ஸாகவும், ஃப்ரைட் ரைஸாகவும் செய்து கொடுக்கலாம்.

    * காபி, டீ, குளிர்பானங்கள் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுக்ககூடாது.

    * தோசை, இட்லி, சப்பாத்தி மற்றும் பூரி போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு அதிகமாக செய்து கொடுக்கலாம்.

    நம்முடைய உணவுப் பழக்கமே குழந்தைகளை தொற்றிக்கொள்ளும். ஊட்டச்சத்து எதுவும் இல்லாத உணவுகளை பெற்றோர்களே ருசிக்காக வாங்கி உண்ணும் போது அந்த பழக்கம் குழந்தைகளை தொற்றிக்கொள்கிறது. எனவே வீடுகளில் நாம் சத்தான உணவுகளை தயாரித்து உண்பதனால் அதனை குழந்தைகளுக்கு வழங்க முடியும். அவர்களுக்கும் சரிவிகித சத்துணவு கிடைக்கும்.
    பெண்கள் வெயிலை கொண்டாடவேண்டிய கட்டத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் சூரிய கதிர்களில் இருந்து கிடைக்கும் வைட்டமின்-டி பெண்களின் எலும்பு வளர்ச்சி, பற்களின் பலத்திற்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.
    பெண்கள் வெயிலை கொண்டாடவேண்டிய கட்டத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் சூரிய கதிர்களில் இருந்து கிடைக்கும் வைட்டமின்-டி பெண்களின் எலும்பு வளர்ச்சி, பற்களின் பலத்திற்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. ரத்த அழுத்தத்தை சீராக்கவும், நாள்பட்ட நோய்களை கட்டுக்குள் கொண்டு வரவும், புற்றுநோயை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் வைட்டமின்-டி சத்து தேவைப்படுகிறது. வைட்டமின்-டி சத்து மனிதர்களுக்கு மிக அவசியம் என்பதால் இயற்கையே மனமுவந்து அதனை சூரிய கதிர்கள் மூலம் வழங்கிக் கொண்டிருக்கிறது.

    ஆனாலும் 80 சதவீதத்திற்கு மேற்பட்ட இந்தியர்கள் வைட்டமின்-டி பற்றாக்குறையுடன்தான் வாழ் கிறார்கள். சூரிய ஒளி படாத வீடுகளில் வசிப்பது, உடலை முழுவதுமாக உடைகளால் மூடிக்கொள்வது, முரண்பாடான உணவு பழக்கம், வாழ்வியல் முறை சிக்கல்கள் போன்றவைகள் இந்த பற்றாக்குறை நீடிக்க காரணமாக இருக்கின்றன. இந்த பற்றாக்குறை தென்னிந்திய பெண்களிடம் அதிகமாக இருக்கிறது. கிராமப்புற பெண்களில் 90 சதவீதம் பேரும் நகரப்பகுதிகளில் உள்ள பெண்களில் 85 சதவீதம் பேரும் வைட்டமின்-டி பற்றாக்குறையுடன் இருக் கிறார்கள். இதை ஈடுகட்ட மாத்திரைகளை டாக்டர்கள் வழங்கினாலும், மருந்தாக அதை பெறுவதைவிட, இயற்கையாக பெறுவதே சிறந்த வழிமுறையாக இருக்கிறது.

    தினமும் 15 முதல் 30 நிமிடங்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை உள்ள வெயில் உடலில் பட்டால் போதும். சூரியனில் இருக்கும் அல்ட்ரா வயலட்-பி கதிர்கள் உடலில் பட்டு வைட்டமின்-டி தயாரிப்பு பணிகளுக்கு உதவிபுரிகிறது. வெயில் மட்டுமின்றி பால் மற்றும் பால் வகை பொருட்கள், முட்டை, மீன், பிஷ்லிவர் ஆயில் போன்றவைகளிலும் வைட்டமின்-டி சத்து இருக்கிறது.

    குழந்தைகளிடம் வைட்டமின்-டி பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க, அவர்களை தினமும் ஒருமணி நேரமாவது வெளியே சென்று விளையாட அனு மதிக்கவேண்டும். வயதானவர்கள் தினமும் 15 முதல் 30 நிமிடங்கள் வெயில் உடலில் படும்படி நிற்கவேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் முதியோர்கள் தங்கள் வீட்டு பால்கனியை திறந்து வைத்து காலையிலும் மாலையிலும் சிறிது நேரம் வெயில் படும்படி உட்கார்ந்திருக்கவேண்டும்.

    கர்ப்பிணிகள் பால், முட்டையை அன்றாட உணவில் சேர்க்கவேண்டும். உடல் குண்டாக இருந்தால் வைட்டமின்-டி பற்றாக்குறை ஏற்படும். அதனால் எப்போதும் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் சிறிது நேரமாவது உடற் பயிற்சி மேற்கொள்ளவேண்டும். உடலை முழுவதுமாக மறைக்கும் விதத்தில் உடை அணிவதை தவிர்க்க வேண்டும். வயதானவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் உடலில் வைட்டமின்-டி பற்றாக்குறை இருக்கிறதா என்பதை பரிசோதித்து, அதற்கு தீர்வு காண்பது நல்லது.
    வெயில் காலத்தில் கேழ்வரகு சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று கேழ்வரகு பருப்பு சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ராகி (கேழ்வரகு) - 100 கிராம்
    துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50 கிராம்
    சோம்பு - ஒரு டீஸ்பூன்
    பூண்டு - 4 பல்
    காய்ந்த மிளகாய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க:

    பெரிய வெங்காயம் - ஒன்று
    கடுகு - ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெய் - சிறிதளவு
    முருங்கை இலை - சிறிதளவு.

    கேழ்வரகு

    செய்முறை:

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேழ்வரகு,  துவரம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.

    அதனுடன் சோம்பு, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றித் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து மாவுடன் சேர்த்துக் கலக்கவும்.

    தோசைக்கல்லைக் காயவைத்து மாவை அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிடவும்.

    சூப்பான சத்தான கேழ்வரகு - பருப்பு அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எப்பாடுபட்டேனும் கல்வியை அளிப்பதே பெற்றோர் பெண்குழந்தைக்கு கொடுக்கும் பெரிய சீதனம் என்பதில் ஐயமில்லை. அது மட்டுமே பெண் குழந்தைகளுக்கு அரணாக அமைய முடியும் என்பதையும் உணர வேண்டும்.
    அறிவியல், தொழில்நுட்பம் என அனைத்திலும் முன்னேற்றம் அடைந் துள்ள இந்த 21ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் பல மூட நம் பிக்கைகளையும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறோம். நம்பிக்கைகள் என்பது நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடியதாகவோ அல்லது குறைந்தபட்சம் அன்றாட வாழ்வியலில் நிம்மதியைத் தரக்கூடியதாகவோ இருக்க வேண்டும். அப்படி இல்லாத ஒன்றை மூட நம்பிக்கை என்றே தள்ள வேண்டியுள்ளது.

    சோதிடம் என்பது நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலை, மக்களின் மீதும் நிகழ்வுகளின் மீதும்நேரடியான பாதிப்பை ஏற்படுத்துவதாக நம்பப்படும் ஒரு பழமையான நடைமுறை.ஒருவரின் பிறப்பின் போது உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலைக்கு ஏற்ற வாறு ஒருவரின் வாழ்க்கைப் பயணம் தீர் மானிக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது. இதனை விளக்கும் வரைபடத்தை சாதகம் என்கிறார்கள்.

    பெரும்பாலான குடும்பங்களில் குழந்தைகளின் திருமண வாழ்க்கையையும், பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது போன்ற முக்கியமான எதிர்கால முடிவுகளையும் எடுப்பதில் பெரும் பங்கு வகிப்பது சோதிடம்,  சாதகம் போன்ற வைகளே.

    அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது போல பல நேரங்களில் இவைகள் தலையெழுத்தையே மாற்றக் கூடியதாகஅமைந்துவிடுவதைத் தவிர்க்க முடிவதில்லை. குறிப்பாக ஒருவரின் பிறந்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும் சோதிடம், தாயின் வயிற்றி லிருந்து குழந்தையின் தலை வெளியில் வரும் அந்த நொடிப்பொழுதை வைத்தே கணக்கிடப்படுகிறது. ஆனால் இந்த நேரத்தை அத்தணைத்துல்லியமாக மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்களா என்ப தும் கேள்விக்குறிதான்.

    அன்புச்செல்வி சுயவிருப்பு வெறுப்பு என்பதெல்லாம் அறிந்திராத, பெரியோர் சொல் வேதவாக்கு என்று வாழ்ந்திருக்கும் பாரம்பரியமான குடும்பத்தின் வழிவந்த ஒரு சராசரி இந்தியப்பெண். பள்ளியிறுதித் தேர்வில் பள்ளியிலேயே இரண்டாவது மாணவியாக தேர்ச்சி பெற்ற,படிப்பில் நல்ல சூட்டிப்பான பெண் அவள். மேற்படிப்பு படித்து மருத்துவராக வேண்டும் என்று பல கற்பனைகள் கொண்டிருந்தவள். தன் விருப்பம் எப்படியும் நிறைவேறும் என்ற கனவுடன் வாழ்ந்தவள். ஆனால் வாழ்வில் நடந்ததோ வேறு.

    அவளுடைய சாதகக் கட்டங்கள் சிலபல தோசங்களைக் காட்டி அச்சமூட்ட, அதற்குத் தோதான வரன் அமைவது சிரமம் என்பதனால் எல்லாம் கூடி வந்து, உறவு வகையில் நல்ல வரன் வரவும், திருமண ஏற்பாடு செய்த மூத்தோரின் சொல்கேட்டு வேறு வழியின்றி, கனவு களைப் புதைத்துவிட்டு மங்கல நாணை மனமுவந்து ஏற்றுக் கொண்டவள். அதற்குப் பிறகுஇரண்டாவது குழந்தை பிறக்கும் வரை, வாழ்க்கை தெளிந்த நீரோடையாகத்தான் போய்க்கொண்டிருந்தது.பரம்பரையாக நெசவுத் தொழில் செய்யும் நல்ல வசதி யான குடும்பம்.நவீன இயந்திரங்களுடன், கடின உழைப்பும் சேர தொழில் சிறப்பாகவே நடந்தது.

    ஆயினும் காலச்சக்கரம் எப்போதும் ஒரே மாதிரி சுழலுவதில்லையே. நூல் விலை ஏற்றம் பணியாட்கள் பிரச்சனை என வியாபாரத்தில் புயல் அடிக்க ஆரம்பிக்க, காரணங்கள் அலசப்பட்டதில், சோதிடம், சாதகம் என்று பார்க்க ஆரம்பித்தார்கள். அப்போதுதான் அன்புச்செல்வி இரண்டாவது குழந்தை உண்டாகியிருந்தாள். வீட்டு நிலை அவள் உடல்நிலையையும் பாதித்தது. மிகப் பொறுமையான குணமும், அமைதியான சுபாவமும் கொண்டவளான அவள் அனைத்தையும் பொறுத்துக் கொண்டுதான் இருந்தாள். ஆனால் அந்தப் பொறுமையின் எல்லையைச் சோதிப்பதாகவே சம்பவங்கள் நடந்தன.

    குடும்ப அமைதிக்கு என்ற பெயரில் அனைத்து விதமான பரி காரங்களும் செய்யத் தயாராகி விட்டனர்.அன்புச்செல்வியின் விதியும் விளையாட ஆரம்பித்தது. குடும்ப சோதிடர் குலதெய்வ வழிபாடு, அன்னதானம் என அனைத்துப் பரிகாரங்களையும் சொன்னவர், இறுதியாக ஒரு குண்டையும் தூக்கிப் போட்டுவிட்டார். ஆம், அன்புச்செல்வியின் வயிற்றில் கரு உருவான நேரம் சரியில்லையாம்! வியாபாரம் நொடித்துப் போனதற்கு அதுவும் ஒரு காரணம் என்றிருக்கிறார். அவ்வளவுதான் குடும்பமே சேர்ந்து அன்புச்செல்வியின் வயிற்றில் வளரும் கருவை அழித்து விடுவது என்று முட்டாள்தனமாக ஒரு முடிவெடுத்துள்ளார்கள். அவள் அழுது ஆர்ப்பாட்டம் செய்தும் கணவனின் கட்டாயத்தால், வேறு வழியின்றி மருத்துவமனை சென்றிருக்கிறார்கள்.அங்கு மருத்துவர், குழந்தை நன்கு வளர்ந்துவிட்டதால் கருவை அழிக்க முடியாது என்று சொல்லிதிருப்பி அனுப்பிவிட்டனர்.

    நாட்கள் பிரச்சனைகளுடன் சேர்ந்தே நகர்ந்து கொண்டிருந்தன. அதனைக் களையும் முயற்சியை சரியாகக் கடை பிடிக்காமல், தேவையற்ற மற்ற விசயங்களில் கவனம் செலுத்தியதுடன் அன்புச்செல்வியின் வயிற்றில் வளரும் குழந்தையின் மீதே அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்ததால் அவள் மனஉளைச்சலுக்குஆளாகியிருந்தாள். விளைவு அவள் உடல் நலமும் பாதிக்கப்பட்டது. பிரசவ நேரம் நெருங்க நெருங்க, குடும்பத்தில், குழந்தை பிறந்தவுடன் அதை என்ன செய்வது என்று யோசிக்கும் அளவிற்கு போனது, தாயினால் தாங்க முடியாத வேதனையாகிப் போனது. பிரசவ வேதனையை பல்லைக் கடித்துக்கொண்டு தாங்கிக் கொண்ட அந்த தாய்க்கு, பெற்ற குழந்தையை அனாதை ஆசிரமத்தில் விட்டுவிடலாம் என்று இறுதியாக எடுத்த முடிவில் உடன்பட முடியாத வேதனையில் கதிகலங்கிப் போனாள். எவ்வளவோ வாதாடிப் பார்த்தும் குடும்பத்தில் அனைவரும் ஒன்றுபோல குழந்தையை இழப்பதிலேயே குறியாய் இருக்க, செய்வதறியாது மன வேதனையில் புழுவாய்த் துடித்தவள், பிறந்தவீடே அடைக்கலம் என்று அடிக்கடி அங்கு சென்று தங்கவும் ஆரம்பித்திருக்கிறாள்.

    அங்கேயும் அவளுக்குப் பிரச்சினை உறவினர் வழியாக வந்துள்ளது. பெண் கணவன் வீட்டில் ஒழுங்காகப் பிழைக்காமல் தாய் வீட்டில் வந்து அடிக்கடி தங்க ஆரம்பித்தால் சில பெற்றவர்கள் வழக்கமாகச் செய்யும் தவறு, அப்பெண்ணின் மனநிலையைப் பற்றிகூட அறிந்து கொள்ள முயலாமல், எப்படியும் அவளை சமாதானப்படுத்தி கணவன் வீட்டில் கொண்டு விட்டுவிடுவது. அதற்கு, திருமணம் ஆகாத அடுத்த பெண்ணைக் காரணம் காட்டி அவள் வாழ்க்கை கெட்டுவிடும் என்று  கட்டாயப்படுத்தி கணவன் வீட்டிற்கேஅனுப்பிவிட்டார்கள்.

    பிரச்சினை அதிகமாக, புகுந்த வீட்டிலோ குழந்தையை எங்காவது தொலைத்துவிட்டு வந்தால்தான் ஆச்சு என்று கட்டாயப்படுத்தவும், பிறந்த வீட்டிலோ, கணவனும் மாமனார், மாமியாரும் என்ன சொல்கிறார்களோ அதன்படி கேட்டுத்தான் நடக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்லி அனுப்பிவிட்டதாலும் இருதலைக்கொள்ளி எறும்பாக போக்கிடம் தெரியாமல், ஒரு வயதே ஆன, அந்த அழகான பெண் குழந்தையை இழக்கவும் முடியாமல் அந்தத்தாய் பட்டவேதனை சொல்லில் அடங்காது. பொருளாதாரச் சுதந்திரமும் இல்லாமல், தனியாக வெளியே சென்று குழந்தைகளைக் காப்பாற்றும் துணிச்சலும் இல்லாமல், பெற்ற குழந்தையை பிரித்து வைக்கக் கட்டாயப்படுத்தும் கொடுமையைச் செய்யும் புகுந்த வீட்டாரைத் தட்டிக் கேட்கும் தைரியமும் இல்லாமல், ஒரு பெண் எடுக்கக் கூடிய அடுத்த முடிவு என்னவாக இருக்க முடியும்?

    ஆம், அதேதான், தன் இறப்பு மட்டுமே இதற்கான ஒரே தீர்வு என்று முடிவெடுத்தவள், தன் குழந்தைகளும் இவர்களிடம் சிக்கித் தவிக்கக் கூடாது என்ற கோழைத்தனமான முடிவையும் சேர்த்தே எடுத்துவிட்டாள். மூன்று வயதான மூத்த மகனையும், ஒரு வயதான இளைய மகளையும் தம் படுக்கையறையினுள் கூட்டிச்சென்று, எண்ணவும் அச்சம் ஏற்படுத்தும் செயலைச் செய்துவிட்டாள். மண்ணெண்ணையை ஊற்றிக் கொளுத்தி விட்டாள். மூன்று உயிர்களும் கருகி சாம்பலாகிவிட்டன.
    மூடநம்பிக்கையே இதற்குக் காரணம் என்றாலும்,பெண் குழந்தைகளை கட்டுப்பாடுகளுடன் வளர்ப்பது அவர்களுடைய பாதுகாப்பிற்காக மட்டுமே என்று வாதிடும் பெற்றோராக இருந்தாலும், அவர்களுக்கு தற்காப்பு என்ற தாரக மந்திரத்தையும், வாழ்க்கையில் எத்தகைய பிரச்சினைகள் வந்தாலும், கோழைத்தனமான முடிவு எடுக்காமல், எதிர்த்து நின்று சமாளிக்கும் ஆற்றலையும் ஊட்டி வளர்த்திருக்க வேண்டாமா?

    நட்சத்திர மண்டலங்களின் நகர்வுகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் சோதிட கணிப்புகள் நமது சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது. பெரும்பாலான சோதிட வரைபடங்கள் நமது சூரிய மண்டலத்தில்   ஏழு கிரகங்கள் உள்ளன என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஆரம்ப காலங்களில் யுரேனசு, நெப்டியூன்,புளூட்டோ ஆகிய கிரகங்கள்  கண்களால் காண முடியாதவைகளாக இருந்ததன் விளைவாக, சோதிடர்கள், பூமியைச் சுற்றி வருவதாக தாங்கள் நம்பிய ஏழு கிரகங்கள் மீது தங்கள் அமைப்பை அடிப்படையாகக் கொண்டனர். ஆனால் அதன் நடத்தையின் மீது அவைகள் தாக்கத்தை ஏற்படுத்துவதால், துல்லியமாக ஒரு சாதகத்தைக் கணிக்க மற்ற மூன்று கிரகங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாகிறது. அந்த வகையில் இந்த மூன்று கிரகங்கள் கருத்தில் கொள்ளப்படாததால், சோதிடக் கோட்பாட்டில் பிழை உள்ளதாகவும், அனைத்து கிரகங்களையும் கருத்தில் கொள்ளாமல் துல்லியமான சாதகம் கணிக்கவும்  இயலாது என்றும் அறிவியலாளர்கள் கருதுவதையும் புறந்தள்ள இயலாது.

    எது எப்படியோ, ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் தங்கத்தையும், வெள்ளியையும் சேமித்து வைக்க ஆரம்பிக்கும் பெற்றோர்கள் அவளுடைய சுயவலிமையையும், தன்னம்பிக்கையையும் மேம்படுத்திக் கொள்ளும் கலையைக் கற்பிக்கத் தவறுகிறார்கள். திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு பகுதி மட்டுமே. அதற்கு அவள் தன்னை முழுவதுமாக தயார்படுத்திக் கொள்ள அவகாசம் அளிக்கப்பட வேண்டும். சுயவிழிப்புணர்வை ஏற்படுத்தி வாழ்க்கையில் நேர்படும் பிரச்சினைகளைப் பகுத்தறிந்து பார்க்கவும், தேவைப்பட்டால் எதிர்த்து நின்று சமாளிக்கும் சக்தி கொடுப்பதும் அக்கல்வியறிவு மட்டுமாகத்தானே இருக்க முடியும். எப்பாடுபட்டேனும் அப்படிப்பட்ட கல்வியை அளிப்பதே பெற்றோர் பெண்குழந்தைக்கு கொடுக்கும் பெரிய சீதனம் என்பதில் ஐயமில்லை. அது மட்டுமே பெண் குழந்தைகளுக்கு அரணாக அமைய முடியும் என்பதையும் உணர வேண்டும்.
    இன்றைய காலகட்டத்தில் கணவன்-மனைவி இருவரும் பணிபுரிய வேண்டிய கட்டாயம் உள்ளது. பகலில் யாரும் இல்லாதபோது வீட்டுக்குள் அன்னியர்கள் துழைந்தால் எச்சரிக்கை செய்யும் அலாரம் அமைப்பு (Burglar Alarm or Intruder Alarm) உள்ளது.
    நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் அமைந்துள்ள தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி ஆகியவற்றில் பாதுகாப்பு அடிப்படையில் ‘குளோஸ் சர்க்கியூட் டெலிவிஷன்’ (CCTV) என்ற Video Surveillance கேமரா அமைக்கப்படுவது அவசியமாகி வருகிறது. பல தனியார் நிறுவனங்கள் இவ்வகை கேமராக்களை பொருத்தி தருகின்றன. பாதுகாப்பு உள்ளிட்ட பன்முகப் பயன்பாடு கொண்ட அவற்றை இணைய வழி மூலமாகவும், கைகளில் வைத்துள்ள மொபைல் போன் மூலமாகவும் செயல்படுத்தலாம். இருந்த இடத்தில் உள்ளவாறே வீடுகள் மற்றும் அபார்ட்மெண்ட் குடியிருப்புகளை எளிதாக கண்காணிப்பு செய்ய இயலும். எல்லா நேரங்களிலும் காட்சிகளை பதிவு செய்யும் வீடியோவில் உள்ள காட்சிகளை தேவைப்படும் சமயத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

    எச்சரிக்கை அலாரம்

    இன்றைய காலகட்டத்தில் கணவன்-மனைவி இருவரும் பணிபுரிய வேண்டிய கட்டாயம் உள்ளது. பகலில் யாரும் இல்லாதபோது வீட்டுக்குள் அன்னியர்கள் துழைந்தால் எச்சரிக்கை செய்யும் அலாரம் அமைப்பு (Burglar Alarm or Intruder Alarm) உள்ளது. வீட்டில் இல்லாத நேரத்தில் அல்லது இரவில் உறங்கும்போது யாரேனும் வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்தால் தானியங்கி அலாரம் ஒலிக்கும். மேலும், அதனுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி அல்லது மொபைல் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கும். அதற்கான மறுமொழி கிடைக்காத நிலையில், அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது தீயணைப்பு நிலையம் ஆகியவற்றிற்கு தகவல் அனுப்பும் வகையிலும் ‘செட்டிங்’ செய்து கொள்ளலாம். இந்த உபகரணம் சென்சார் மற்றும் கண்ட்ரோல் பேனல் ஆகிய இரண்டு அடிப்படையில் இயங்குகிறது.

    வீடியோ கண்காணிப்பு

    வீட்டுக்குள் இருந்தவாறே வெளிவாசல் கதவுக்கு அருகில் நிற்பவர்கள் யாரென்று அறிந்து கொண்டு, அவருடன் பேச வீடியோ கன்காணிப்பு (Video Door System) உபகரணம் பயன்படுகிறது. இதை பொருத்துவதன் மூலம் கதவை திறக்காமலே வீட்டிற்கு யார் வந்திருக்கிறார்கள் என்பதை சிறிய திறையில் வீட்டுக்கு உள்ளிருந்தே காணலாம். அவர்களது வருகையைக் கண்டு தேவைப்பட்டால் மட்டும் அவர்களோடு பேசலாம். அதன் பின்னர், அவசியத்திற்கேற்ப கதவை திறக்கலாம். இல்லாவிட்டால் அவர்கள் உள்ளே வருவதை தவிர்க்கலாம். வயதானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் பாதுகாப்புக்கு ஏற்ற சாதனமாகவும் உள்ளது. கதவுக்கு அருகில் யாரெல்லாம் வந்தார்கள், காலிங் பெல்லை யாரெல்லாம் உபயோகப்படுத்தினார்கள் என்பதைக்கூட இதன் மூலம் அறிந்து கொள்ள இயலும்.

    தானியங்கி உபகரணங்கள்

    ‘ஹோம் ஆட்டோமேஷன்’ அமைப்பை வீடுகளில் அமைத்துத் தரும் தனியார் நிறுவனங்கள் பெருநகரங்களில் செயல்பட்டு வருகின்றன. இன்டர்நெட் இணைப்பு மூலம் ரிமோட்டில் இயங்கும் பிளக் பாயின்டுகளில், எந்த மின் சாதனத்தையும் இணைத்து, ‘ஆன்’ அல்லது ‘ஆப்’ செய்வது, செல்போனில் இடும் கட்டளைக்கேற்ப கதவுகள் தாமாகத் திறப்பது போன்றவற்றை செய்வது எளிது. வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஒளிரும் விளக்குகள், தொட்டியில் நீர் நிரம்பியவுடன் தாமாகவே அணையும் தானியங்கி நீரேற்று சாதனம், இணையத்துடன் இணைக்கப்பட்ட குளிர் சாதனப்பெட்டி ஆகிய வசதிகளை தற்போது எளிதாக செய்து கொள்ளலாம். இவை அனைத்தையும் ஒன்றிணைத்து செயல்பட வைக்கும் சென்ட்ரல், ஹப், அதற்கான மென்பொருள், போன் ஆகியவை மூலம் குடியிருப்புகள் பாதுகாப்பு ஒரு கைக்குள் அடங்கி விட்டதாக குறிப்பிடலாம்.
    ×