search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தையை நன்றாக சாப்பிட வைக்க அருமையான வழி
    X
    குழந்தையை நன்றாக சாப்பிட வைக்க அருமையான வழி

    குழந்தையை நன்றாக சாப்பிட வைக்க அருமையான வழி

    குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய அவர்களுக்கு ஏற்ற உணவுகளை தயாரித்து அளிக்கவேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.
    குழந்தைகளுக்கு உணவு சாப்பிட வைப்பது என்பது ஒரு சிறந்த  கலை. ஆனால் அதையே மிகவும் கஷ்டமான காரியமாக நினைத்து குழந்தைகளை உண்ணவைக்க பாகீரத பிரயத்தனம் செய்கின்றனர் சில பெற்றோர்கள். ஏனெனில் கொடுக்கும் உணவை, வயிறு நிறையும் வரையில் சமத்தாக சாப்பிடும் குழந்தைகள் மிகக்குறைவு.சரியாகச் சாப்பிடாத குழந்தைகளை எப்படி சாப்பிட வைப்பது எனக் கவலையுடன் இருப்பவரா…?

    சில குழந்தைகள் உணவை விழுங்காமல் அப்படியே வெளியே தள்ளிவிடுவார்கள். குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய அவர்களுக்கு ஏற்ற உணவுகளை தயாரித்து அளிக்கவேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.

    குழந்தை நல்லா சாப்பிட வைக்க அருமையான வழி..!

    * பொதுவாக எல்லா வகையான உணவுகளையும் குழந்தைகளுக்கு தினிப்பதை இன்றுடன் விட்டு விடுங்கள்.

    * குழந்தைக்கு சரியான இடைவேளையில் கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும். ஏன் என்றால் குழந்தைக்கு உண்ணும் உணவு திகட்டாமல் இருக்க வேண்டும்.

    * மீறி குழந்தைகளுக்கு அதிக உணவை கொடுத்தால் சாப்பிடும் போதே குழந்தைகள் வாந்தி எடுத்து விடுவார்கள் எனவே குழந்தை சாப்பிடும்  அளவிற்கு மட்டும் உணவு கொடுப்பது மிக சிறந்த முறையாகும்.

    * குழந்தைக்கு பிடித்த உணவுகளை அதிகமாக செய்து கொடுக்க வேண்டும்.

    * குழந்தை இரண்டு வயது வந்த பிறகு உணவு ஊட்டுவதை தவிர்த்துக் கொள்ளவும். மற்றக் குழந்தைகளுடன் சேர்ந்து உணவருந்துவதை பழக்க வேண்டும். அப்போது தான் உங்கள் குழந்தை அதிக உணவை சாப்பிட பழகுவார்கள்.

    * குழந்தைகளுக்கு அதிகம் நார்ச்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், பயிறு வகைகள், பருப்பு வகைகள் அதிகம் கொடுக்க வேண்டும். ஏன் என்றால் இது குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவுகிறது.

    * குழந்தைகளுக்கு நீர்ச்சத்து அதிகம் தேவை எனவே தினமும் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    * தண்ணீர் குடிக்க அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மோர்,
    மில்க் ஷேக்
    , பழச்சாறு மற்றும் இளநீர் ஆகியவற்றை வாங்கி கொடுக்கலாம்.

    * காய்கறிகளை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு சாண்ட்விச்சுகளாகவும், வெஜ் நூடுல்ஸாகவும், ஃப்ரைட் ரைஸாகவும் செய்து கொடுக்கலாம்.

    * காபி, டீ, குளிர்பானங்கள் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுக்ககூடாது.

    * தோசை, இட்லி, சப்பாத்தி மற்றும் பூரி போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு அதிகமாக செய்து கொடுக்கலாம்.

    நம்முடைய உணவுப் பழக்கமே குழந்தைகளை தொற்றிக்கொள்ளும். ஊட்டச்சத்து எதுவும் இல்லாத உணவுகளை பெற்றோர்களே ருசிக்காக வாங்கி உண்ணும் போது அந்த பழக்கம் குழந்தைகளை தொற்றிக்கொள்கிறது. எனவே வீடுகளில் நாம் சத்தான உணவுகளை தயாரித்து உண்பதனால் அதனை குழந்தைகளுக்கு வழங்க முடியும். அவர்களுக்கும் சரிவிகித சத்துணவு கிடைக்கும்.
    Next Story
    ×