search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கொரோனாவும் பெண்களின் மனநலமும்
    X
    கொரோனாவும் பெண்களின் மனநலமும்

    கொரோனாவும் பெண்களின் மனநலமும்

    பெண்கள் தங்களைத் தாங்களே வருத்திக் கொண்டு 24 மணி நேரமும் எல்லோரையும் திருப்திபடுத்த வேண்டும் என்று சுழன்று கொண்டிராமல் ஓய்வு ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அவர்களுக்கு என்று நேரம் ஒதுக்கி கொள்வது நல்லது.
    எப்ப டாக்டர் வெளியே விடுவாங்க?

    எப்ப டாக்டர் இவர் வேலைக்கு போவார்?

    எனக்கு வேலை கிடைக்குமா?

    இதுபோன்ற கேள்விகள் நிறைந்த 60 நாட்கள்! உலகில் இதுவரை காணாத அசாதாரண சூழ்நிலை!

    இரவில் மட்டுமே வீட்டை பார்த்தவர்கள் பகல் முழுவதும் வீட்டில் இருக்க வேண்டிய நிலை!

    பார்த்துப் பேசிய முகங்கள் எப்போது இணையதளம் வழியாக. நெட்வொர்க் எரர் ( Error ) கனெக்சன் சரியில்லை, பவர்கட் போன்ற இக்கட்டான தருணங்களில் வார்த்தைகளால் மாறிய கணம் முக கவசம் வாழ்க்கையை மாற்றிய தருணம் என்பதுடன் சமூக இடைவெளி என்கிற தாரக மந்திரத்துடன் என்ன ஆயிற்று உலகிற்கு என்று பார்த்து சிரித்த நமக்கு நம் வாசலில் அழையா விருந்தாளியாய் பலபேரின் கண்களிலே ஒரு பயம்! பதற்றம்! வந்து விடுமோ கொரோனா என்று பயம் ஒரு சிலருக்கு. என்னால் என் குடும்பத்தினருக்கு தொற்று வந்துவிடுமோ? இதுதான் ஒவ்வொரு சுகாதாரப் பணியாளரும் தங்களுக்குத் தாங்களே கேட்டுக்கொள்ளும் கேள்வி.

    பல கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருக்கிறோம். ஏன் உலகில் அவற்றின் வேகம் அதிகமாக உள்ளது? ஏன் இந்தியாவின் வடமாநிலத்தில் அதிக தொற்றுப் பரவுகிறது? எவ்வளவு நாட்கள் உயிர் வாழ்கிறது? ஆண்களை அதிகம் தாக்குவதுஏன்? தடுப்பூசி கண்டுபிடிக்க எவ்வளவு நாள் ஆகும்?

    எந்தவிதமான நல பாதிப்பும் இல்லாத மனிதன் கூட மனநலப் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக ஆய்வு கூறுகிறது

    மனிதன் ஒரு சமூக மிருகம், சோஷியல் அனிமல். அமைதியான சுபாவம் கொண்டவர்கள் கூட நண்பர்களுடன் சேர்ந்து இருக்கவேண்டும் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால் வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டிய நிலை. தனிமைப்படுத்தப்படுதல், உணவு போன்றவை கிடைத்தால் இந்த சூழலில் எழும் கவலை பதற்றம் ஆகியவை குறைய வாய்ப்புள்ளது. பொதுமுடக்கப் ( lockdown ) பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் பெண்களுக்கு வந்த மிகப்பெரிய சுமை வேலை பளு. வேலைக்குப்போன பெண்கள் காலையில் எழுந்து சமைத்து வேலைக்கு போய்க்கொண்டிருந்தவர்கள் போகும்போதும் குழந்தைகளின் நடுவே சமாளிக்க முடியாமல் உட்கார சொல்லிக்கொண்டு வேலை செய்வது கடினம்.

    மேலும் வீட்டு வேலை செய்யும் பெண்கள் வராததாலும் பன்மடங்கு வேலை. எல்லா பெண்களும் வீட்டில் நிம்மதியாக இருக்க முடிவதில்லை. வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் பலர் இந்த 60 நாட்களில் 1098 ஹெல்ப் லைன்க்கு ( Help line ) வந்த அழைப்புகள் பல அடுத்ததாக முதியவர்கள் சிறு, சிறு வேலைக்காக வெளியே சென்று வந்தவர்கள் தெருவில் உள்ள தம் நண்பர்களைப் பார்த்து சிறிது நேரம் பேசியவர்கள் மேலும் ஞாபக மறதி வியாதியால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்கள் என இவர்களெல்லாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஆதலால் தூக்கமின்மை, கோபம், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன.

    அடுத்ததாக சிறுவர்கள், வளர் இளம் பருவத்தினர், நண்பர்களே உறவாக இருந்தவர்கள் இப்போது வீட்டில் குடும்பத்தினருடன் 24 மணி நேரமும் இருக்க வேண்டிய சூழ்நிலை! பைக்கை தூர இருந்து வேடிக்கை பார்க்கும்நிலை!

    இதற்கான தீர்வுகள். தனிமையிலே இனிமைகாண முடியுமா? முடியும் என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளலாம். ஏதேனும் ஒரு வேலை இருக்கும் அதை செய்துக்கொண்டு இருக்க பழகிக்கொள்ள வேண்டும். இன்றும் எதிர்மறையான சிந்தனைகளை மாற்றி அமைக்க பழகிக்கொள்ளவேண்டும். பாட்டு கேட்பது, புத்தகங்கள் வாசிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, குறித்த நேரத்தில் குறித்த வேலையைச் செய்ய பழக வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும். நம்மால் முடிந்தவரை பிறருக்கு உதவி செய்யலாம்.

    பக்கத்து வீட்டில் தனியாக முதியவர் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு உணவு அளிக்கலாம். அவருக்கு வேண்டிய சின்னச் சின்ன வேலைகளைச் செய்து கொடுக்கலாம். 24 மணி நேரமும் செய்திகள் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அரசு வெளியிடும் செய்திகளையும் தொற்று பற்றிக்கூறிய கூறும் செய்திகளையும் வாசித்தால் போதுமானது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் பற்றிய பேசுவதற்குப் பதிலாக அதிலிருந்து மீண்ட பலரைப் பற்றிய செய்திகளை வாசிப்பது நல்லது. கைப்பேசியோடு எப்போதும் இருக்கும் சிறுவர்களை கைபேசியில் இருந்து விடுவிக்கவேண்டும். பெண்கள் தங்களைத் தாங்களே வருத்திக் கொண்டு 24 மணி நேரமும் எல்லோரையும் திருப்திபடுத்த வேண்டும் என்று சுழன்று கொண்டிராமல் ஓய்வு ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அவர்களுக்கு என்று நேரம் ஒதுக்கி கொள்வது நல்லது.

    * நம்முடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல்.

    * பதற்றம் உண்டானால் பதற்றம் உண்டு பண்ணும் எதிர்மறையான சிந்தனைகளை மாற்ற முயற்சிக்கலாம்.

    * தேவை இல்லாமல் நம் மனதைப் போட்டு குழப்பிக் கொள்கிறோமோ.

    * இதற்கு முன் இதுபோன்ற பிரச்சினைகள் என் வாழ்வில் வந்த போது நான் எவ்வாறு சமாளித்தேன் என்று சிந்திப்பது நல்லது.

    * தனிமை உணர்வு இருந்தால் நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடலாம். பல வருடம் பேசாதவர்கள் உடன் அவர்களை அழைத்து அவர்களை ஆச்சரியப்பட வைக்கலாம்.

    * ஆனால் இந்த குழப்பம் கவலை பதற்றம் தொடர்ந்து நீடித்தால் 104 அல்லது 044-26425585 என்ற எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

    * புலம்பெயர் தொழிலாளர்கள் படும் இன்னல்களுக்கு நடுவே நம்முடைய இன்னல்கள் குறைவு. இதுவும் கடந்துபோகும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

    டாக்டர். பூர்ணசந்திரிகா,

    இயக்குநர் (பொறுப்பு),

    அரசு மனநலக் காப்பகம், கீழ்ப்பாக்கம்.
    Next Story
    ×