என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    கம்பு, கேழ்வரகை சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இவை இரண்டையும் சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - ஒரு கப்
    கம்பு மாவு - அரை கப்
    அரிசி நொய் - அரை கப்
    நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப்
    கடைந்த தயிர் - அரை கப்
    உப்பு - தேவைக்கேற்ப.

    கம்பு, கேழ்வரகு

    செய்முறை:

    கேழ்வரகு மாவில் 3 கப் தண்ணீர் விட்டு முதல் நாளே கரைத்து புளிக்கவிடவும்.

    மறுநாள் கம்பு மாவை ஒரு கப் நீர் விட்டு உடனடியாக கரைத்துக்கொள்ளவும்.

    அரை கப் அரிசி நொய்யில் ஒரு கப் நீர் விட்டு வேகவிடவும்.

    வெந்ததும் புளிக்க வைத்த கேழ்வரகு மாவு, கரைத்த கம்பு மாவு உப்பு சேர்த்து கட்டித் தட்டாதவாறு கைவிடாமல் கிளறவும்.

    வெந்ததும் இறக்கி கடைந்த தயிர் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்துப் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முட்டை ஊட்டச்சத்து மிக்க உணவு என்பது அனைத்து அம்மாக்களுக்கும் தெரிந்ததே. ஆனால் அதை எப்போது , எப்படி தர வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
    முட்டை ஊட்டச்சத்து மிக்க உணவு என்பது அனைத்து அம்மாக்களுக்கும் தெரிந்ததே. ஆனால் அதை எப்போது , எப்படி தர வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். தவறான நேரத்தில் தவறான முறையில் கொடுத்தால் அது உங்கள் குழந்தைக்கு அலர்ஜி , வயிறு வலியை உண்டாக்கலாம்.

    குழந்தைகளுக்கான உணவு வழிகாட்டுதல்கள் படி உங்கள் குழந்தை திடமான உணவை சாப்பிடும் பக்குவத்தை எட்டவில்லை எனில் முட்டையைக் கொடுக்க வேண்டாம். அதாவது 4 முதல் 6 மாதம் வரை குழந்தைகள் திட உணவுகளை சாப்பிடாது. போல் அலர்ஜியை உண்டாக்கும் உணவுகளை கொடுப்பதில் காலம் தாழ்த்தக் கூடாது என்றும் அறிவுறுத்துகிறது.

    பழைய ஆய்வுகளின் படி முட்டையை 2 வயதுக்கு மேல் கொடுக்கலாம் என்கிறது. ஆனால் சமீபத்திய ஆய்வுகள் திட உணவுகளை உங்கள் குழந்தைகள் சாப்பிட தயாரானால் கொடுக்கலாம் என்கிறது. உங்கள் குழந்தை நடக்கிறது, தானாக உட்காருகிறது, நாற்காலிகளில் தானாக ஏறி அமர்கிறது என்றால் அந்தக் குழந்தைகளுக்கு முட்டைக் கொடுக்கலாம்.

    முட்டை ஆரோக்கியம்தானே என ஒருநாளைக்கு இரண்டு மூன்று எனக் கொடுக்கக் கூடாது. ஒரு நாளைக்கு ஒரு முட்டை மட்டுமே தர வேண்டும். முட்டையை வேக வைத்து நன்கு மசித்துக்கொடுங்கள். முட்டை செரிமாணிக்க கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும்.

    அதேபோல் நீங்கள் புதிய உணவுகளை குழந்தைக்கு அறிமுகப்படுத்துகிறீர்கள் எனில் ஒரு உணவை முதல் முறைக் கொடுத்தபின் இரண்டாவது புதிய உணவை அறிமுகப்படுத்த 2-3 நாட்கள் இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நாட்களில் உங்கள் குழந்தைக்கு ஏதேனும் அலர்ஜி, உபாதைகள் உண்டாகிறதா என்பதைக் கண்கானிக்க வேண்டும்.

    அதாவது அரிப்பு, தடிப்புகள், தோல் சிவத்தல், கண்களின் தண்ணீர் வடிதல், கண்கள் சிவத்தல், வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, மூச்சு வாங்குதல் இப்படி அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை தொடர்புகொள்ளுங்கள்.
    முகத்தை மசாஜ் செய்வதன் மூலம்தான் முகத்தின் இரத்த ஓட்டம் அதிகரித்து ஃபிரெஷாக தோன்றுகிறது. அப்படி வெந்தையத்தை கிரீம் செய்து வைத்து அவ்வப்போது மசாஜ் செய்வதால் முகம் எப்போதும் பளிச்சென இருக்கும்.
    முகத்தை மசாஜ் செய்வதன் மூலம்தான் முகத்தின் இரத்த ஓட்டம் அதிகரித்து ஃபிரெஷாக தோன்றுகிறது. அதனால்தான் இந்த ஃபேஷியல் விஷயங்கள் பிரபலமாக இருக்கின்றன. அப்படி வெந்தையத்தை கிரீம் செய்து வைத்து அவ்வபோது மசாஜ் செய்வதால் முகம் எப்போதும் பளிச்சென இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    வெந்தையம் - 2 டீஸ்பூன்
    வைட்டமின் ஈ எண்ணெய் - 1
    தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
    வாசனை திரவியம் - 2 சொட்டு

    வெந்தையத்தை இரவு முழுவதும் தண்ணீர் ஊற்றி ஊற வையுங்கள். மறுநாள் காலை மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு மீண்டும் மிக்ஸியில் அரைத்தால் ஜெல் பதத்தில் வரும். பின் அதில் தேங்காய் என்ணெய், வைட்டமின் ஈ என்ணெய் மற்றும் தேவைப்பட்டால் நறுமணத்திற்கு வாசனை எண்ணெய் ஊற்றி நன்குக் கலக்குங்கள். இந்த கிரீமை காற்றுபுகாத டப்பாவில் அடைத்து ஃபிரிஜ்ஜில் வைத்துக்கொள்ளுங்கள்.

    தினமும் காலை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்யுங்கள். பின்பு வெந்நீரில் நனைத்த துணியால் துடைத்துவிட முகம் ஜொலிக்கும்.
    கொரோனா வைரஸ் தாக்கிவிட்டால், அது மனித உடலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக நுரையீரலில் பெரிய தழும்புகள் ஏற்படுவது கண்டறியப்பட்டு உள்ளது.
    கொரோனா வைரஸ் தாக்கிவிட்டால், அது மனித உடலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக நுரையீரலில் பெரிய தழும்புகள் ஏற்படுவது கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உரிய சிகிச்சை பெற்றாலும், பெறாவிட்டாலும் நுரையீரலில் இந்த தழும்புகள் ஏற்படுகிறதாம்.

    இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பது பற்றி ராமநாதபுரத்தை சேர்ந்த நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜாவிட் அப்துல்லா கூறியதாவது:-

    கொரோனா தொற்றிய அனைவருக்கும் நுரையீரலில் இந்த தழும்புகள் ஏற்பட்டு விடுகிறது. நோய் அறிகுறி தென்பட்டு ஒரு சில நாட்கள் கழித்து பரிசோதனை செய்து, அதன்பின்னர் சிகிச்சை பெற்று குணமடைந்த கொரோனா நோயாளிகள் மற்றும் அறிகுறிகள் இருந்தும் கண்டுகொள்ளாமல் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக தானாக சரியான கொரோனா நோயாளிகள் ஆகியோருக்கு இந்த தழும்புகள் பெரிதாக உள்ளன.

    கொரோனாவால் தழும்பு ஏற்பட்டுள்ள நுரையீரல். பாதிப்பு இல்லாத முழுமையாக கருப்பு நிறத்திலான நுரையீரல்.

    எனவே அறிகுறி தென்பட தொடங்கியதும் பரிசோதனை செய்து, கொரோனா வைரசிற்கு சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களுக்கு இந்த தழும்புகள், அதிக பாதிப்பை ஏற்படுத்தாதது பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது. பொதுவாக கொரோனா வைரஸ் மனித உடலுக்குள் புகுந்ததும் நுரையீரல் திசுக்கள் பகுதியில் அரிப்பை ஏற்படுத்தி விடுகின்றன. இதனாலேயே இந்த தழும்புகள் ஏற்படுகின்றன. இதனை கண்டுகொள்ளாமல் இருந்தால் கொரோனாவில் இருந்து குணமாகி வந்தாலும் ஒரு சில மாதங்களில் அவர்களுக்கு மீண்டும் மூச்சுதிணறல், சுவாச கோளாறு போன்றவை ஏற்பட்டு விடுகிறது. இதனை அப்போதும் சரியாக கவனிக்காவிட்டால் ஆக்சிஜன் அளவு குறைந்து இதயம் பாதிப்படைந்து உயிரிழப்பும் ஏற்படலாம். தற்போது கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த பலர் இந்த தழும்புகளால் மீண்டும் சுவாச கோளாறு ஏற்பட்டு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.

    அவர்களுக்கு கொரோனா வைரஸ் உடலில் இல்லாமல் இருந்தாலும் அதனால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பு காரணமாக இந்த சுவாசபிரச்சினைகள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. சாதாரணமாக கருப்பு நிறத்தில் காணப்படும் நுரையீரல், இந்த தழும்பு ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பகுதி கருப்பு நிறம் மாறி வெளிர் வெண்மை நிறமாக மாறிவிடும். சி.டி. ஸ்கேன் பரிசோதனையின் மூலம் இதனை கண்டறிய முடியும். எனவே, அனைவரும் உரிய நேரத்தில் அறிகுறி தென்படும் போதே கொரோனா பரிசோதனை செய்து, வைரசின் தீவிரத்தை ஆரம்ப கட்டத்திலேயே குறைத்து, நுரையீரலில் தழும்புகள் அதிகம் ஏற்படாமல் தற்காத்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வீட்டிலேயே முடங்கி கிடக்கும் குழந்தைகள்.. வீட்டு சுவர் முழுக்க பென்சிலால் எழுதி கிறுக்கி தள்ளிவிட்டார்களா... கவலையை விடுங்க.. கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த முறைகளை பின்பற்றி தீர்வு காணலாம்.
    வீட்டிலேயே முடங்கி கிடக்கும் குழந்தைகள்.. வீட்டு சுவர் முழுக்க பென்சிலால் எழுதி கிறுக்கி தள்ளிவிட்டார்களா... கவலையை விடுங்க.. கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த முறைகளை பின்பற்றி தீர்வு காணலாம்.

    பேக்கிங் சோடா வீட்டை சுத்தம் செய்ய உதவும் நண்பன் எனலாம். அந்தவகையில் சுவர் கறைகளை அகற்ற பேக்கிங் சோடாவைத் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்தில் கரைக்கவும். பல் துலக்கும் பிரெஷ் பயன்படுத்தி பேக்கிங் சோடா பேஸ்ட் தொட்டு கறை உள்ள பகுதிகளைத் தேய்த்தால் கறைகள் முற்றிலுமாக அகலும்.

    ஒரு மூடி வினிகரை ஒரு பவுல் வெதுவெதுப்பான நீரில் கலந்து அந்த தண்ணீரை பஞ்சு தொட்டு கறை படிந்துள்ள பகுதிகளில் துடைத்தால் கறைகள் நீங்கும். தெளிவாக கறைகள் நீங்கவில்லை எனில் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் வினிகரை நேரடியாகத் தொட்டு தேய்த்தால் நீங்கும். காற்று புகும் வசதி இருப்பின் ஜன்னல்களை திறந்து வைத்தால் வெயில் பட்டு கறை நீங்கும்.

    போரக்ஸ் பவுடர் ஆற்றல் அதிகம் என்பதால் கவனமாகக் கையாளவும். போரக்ஸ் பவுடரை தண்ணீர்ல் கெட்டியான பேஸ்டாக கலந்துகொள்ளவும். பின் கறை படிந்துள்ள இடத்தில் தேய்த்து கழுவவும்.

    சுற்றி உள்ள க்ரயான்ஸ், பென்சில் கறைகளுக்கு டூத்பேஸ்ட் பெஸ்ட் தீர்வு. பேஸ்டை தண்ணீரில் கெட்டியாகக் கரைத்து பிரெஷ் கொண்டு கறை படிந்த இடத்தில் தேய்க்க கறைகள் நீங்கும்.

    பேக்கிங் சோடாவைக் காட்டிலும் வாஷிங் சோடா கூடுதல் ஆற்றல் நிறைந்தது. இதையும் கெட்டிப் பதத்தில் தண்ணீரில் கரைத்து அழுக்கு படிந்துள்ள இடங்களில் தேயுங்கள். பின் 10 நிமிடங்கள் ஊற வைத்து பிரெஷ் கொண்டு தேய்த்தால் கறை முற்றிலும் போய்விடும்.
    துணையிடம் மறைத்து செய்த விஷயத்தால் மாட்டிக்கொண்டீர்கள் எனில் பிரச்னையின்றி சமாளிக்க ஒப்புக்கொண்டு சரண்டர் ஆவதுதான் ஒரே வழி.
    துணையிடம் மறைத்து செய்த விஷயத்தால் மாட்டிக்கொண்டீர்கள் எனில் பிரச்னையின்றி சமாளிக்க ஒப்புக்கொண்டு சரண்டர் ஆவதுதான் ஒரே வழி. இல்லையெனில் பிரச்னை நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போகும். அதற்கு என்ன செய்து துணையை சமாதானப்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

    நான் செய்தது தவறுதான் என தவறை ஏற்றுக்கொண்டு அதை வெளிப்படையாகக் கூறுங்கள். தவறு மொத்தத்தையும் உங்களுக்கானதாக ஏற்றுக்கொள்ளுங்கள். தவறி கூட உங்கள் மனைவியை காரணம் காட்டி பழி போட்டு காரணத்தை அவர் மீது திசை திருப்பிவிடாதீர்கள். பிரச்னை வேறு விதமாக வெடித்துவிடும்.

    மாட்டிக்கொண்டீர்கள் எனில் ஆமாம் செய்தேன் என சண்டையிடாமல் அவர் எவ்வளவு கோபப்பட்டாலும் பொறுமையாக இருங்கள். பின்பு ஏன் அவ்வாறு பொய் கூறினீர்கள் என்பதை விளக்குங்கள். மனம் விட்டு பேசுங்கள். உங்கள் தரப்பு நியாயத்தை கூறி சமாதானம் செய்யுங்கள்.

    சமாளிக்கவும், சமாதானப்படுத்தவும் அந்த இடத்தில் மீண்டும் பொய்களை அடுக்காதீர்கள். அதுவும் ஒருநாள் தெரிந்துவிட்டால் உங்கள் மீதான நம்பிக்கை போய்விடும். எனவே மாட்டிக்கொண்டோம் என்றாகிவிட்ட நிலையில் உண்மையை கூறி மன்னிப்பு கேட்பதே நல்லது.

    உண்மையிலேயே அந்த தவறு செய்ய உங்கள் மனைவிதான் காரணமெனில் அதை அப்போதே உடைக்காமல் சமாதானம் ஆன பிறகு பொருமையாக எடுத்துக்கூறுங்கள். அவர் சண்டையிட்டாலும் பதிலுக்குக் கோபப்படாதீர்கள்.

    இனியும் இப்படி பொய் கூற மாட்டேன் என நம்பிக்கை வாக்குறுதி அளியுங்கள். ஏனெனில் பொய் என்பது நம்பிக்கைக்கு எதிரானது. நம் நம்பிக்கைக்குறியவர் பொய் கூறிவிட்டார் எனில் அதைவிட மிகப்பெரிய வலி எதுவுமில்லை. எனவே அதை உணர்ந்து அவரிடம் இனி பொய் கூற மாட்டேன் என உறுதி அளியுங்கள். உங்கள் மீதான நம்பிக்கைக்கு களங்கமில்லாமல் நடந்துகொள்ளுங்கள்.
    வெந்தயக்கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் குறைகிறது. வயிற்றிரைச்சல், வயிற்றுக்கடுப்பு, வயிறு உப்பீசமாக காணப்படுதல் போன்ற வயிற்று கோளாறுகளை வெந்தயக்கீரை குறையச்செய்கிறது.
    தேவையான பொருட்கள்:

    வெந்தயக்கீரை - 1 கப்
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - 2
    சோள மாவு - 1 டீஸ்பூன்
    பூண்டு - 2 பல்
    வெண்ணெய் - சிறிதளவு
    காய்ச்சிய பால் - 1/2 டம்ளர்
    மிளகுப்பொடி, உப்பு - தேவையான அளவு

    வெந்தயக்கீரை
    செய்முறை:

    வெந்தயக்கீரை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.

    கடாயில் சிறிது வெண்ணெயை விட்டு வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நன்றாக வதக்கவேண்டும்.

    பின்பு தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவேண்டும்.

    நன்கு கொதிக்கும் போது வெந்தயக்கீரை, பூண்டு ஆகியவற்றை சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கவேண்டும்.

    காய்ச்சிய பாலில் சோள மாவை கரைத்து இதனுடன் சேர்க்கவேண்டும்.

    எல்லாம் ஒன்றாக கலந்து நன்றாக கொதித்தவுடன் அடுப்பை அணைத்து இறக்கி விடவேண்டும்.

    உப்பு, மிளகுப்பொடி தேவையான சேர்க்கவேண்டும்.

    இப்பொழுது சுவையான சத்தான வெந்தயக்கீரை சூப் தயார்.

    சிறிதளவு சோளத்தை அரைத்து அந்த சூப்பில் சேர்த்தால் மணமும் சுவையும் அதிகரிக்கும்.

    மருத்துவப் பயன்கள்:

    வெந்தயக்கீரையில் வைட்டமின் எ, பி உயிர்ச்சத்துக்கள் காணப்படுகிறது. உடலிலுள்ள எலும்புப்பகுதிகளை உறுதியாக வைத்திருக்க பயன்படுகிறது.

    இருமல், கபம், சளி ஆகிய நோய்களை வெந்தயக்கீரை குறையச்செய்கிறது

    வெந்தயக்கீரை மந்தமாக காணப்படுவர்களை சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

    அஜீரணத்தை வெந்தயக்கீரை குறையச் செய்கிறது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சருமம் பொலிவிழந்து எண்ணெய் பிசுக்குடன் இருக்கிறதா. இதை தவிர்க்க வீட்டிலேயே இருக்கும் கிச்சன் பொருட்களை பயன்படுத்தி ஸ்கிரப் செய்வது நல்லது.
    மழைக்காலம் என்றாலே சருமம் பொலிவிழந்து எண்ணெய் பிசுக்குடன் தோன்றும். இதனால் முகம் பளிச்சென இருக்காது. இதை தவிர்க்க வீட்டிலேயே ஸ்கிரப் செய்வது நல்லது. கிச்சன் பொருட்களை பயன்படுத்தி எப்படி ஸ்கிரப் செய்வது என்று பார்க்கலாம்.

    காஃபி பொடி , தேங்காய் எண்ணெய் இரண்டையும் ஒரு ஸ்பூன் வீதம் எடுத்துக்கொண்டு நன்கு கலந்து முகத்தில் அப்ளை செய்து தேய்க்கவும். இதனால் எண்ணெய் பிசுக்கு நீங்கும். சருமத்திற்கும் பொலிவு கிடைக்கும்.

    தேனுடன் சர்க்கரை கலந்து முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்யுங்கள். முகம் ஃபிரெஷாகத் தோன்றும்

    சர்க்கரையுடன் எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து தேய்த்தாலும் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கு நீங்கும்

    தக்காளியை பாதியாக நறுக்கி அதை சர்க்கரையில் தொட்டு அப்படியே முகத்தில் வைத்து தேய்த்து மசாஜ் செய்யுங்கள். இதனால் முகம் எண்ணெய் இன்றி பளபளப்பாக காட்சியளிக்கும்.

    இவை தவிர தினமும் 4 அல்லது 5 முறை முகத்தை நன்றாக கழுவ வேண்டும். 
    மாதவிடாய் சீராக இல்லை, தள்ளிப்போதல், அதிக உதிரப்போக்கு எனில் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் கவனமுடன் இருப்பது அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
    மாதவிடாய் சீராக இல்லை, தள்ளிப்போதல், அதிக உதிரப்போக்கு எனில் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் கவனமுடன் இருப்பது அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பெண்களின் மாதவிடாய் சீரற்ற போக்கு அவர்களுக்கான உடல் நல பாதிப்புகளை தெரியப்படுத்தும் அறிகுறியாகும். எனவேதான் மாதவிடாய் சீராக இல்லை, தள்ளிப்போதல், அதிக உதிரப்போக்கு எனில் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் கவனமுடன் இருப்பது அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    அப்படி மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருகிறது எனில் அது சாதாரண விஷயமாகக் கருதிவிட முடியாது. அதற்கும் சில காரணங்கள், உடல் மாற்றங்கள் உள்ளன. அவை என்னென்ன பார்க்கலாம்.

    நீங்கள் திடீரென உடல் எடை அதிகரித்தாலோ அல்லது உடல் எடையைக் குறைத்தாலோ இந்த பிரச்னை உண்டாகும். ஏனெனில் இந்த திடீர் உடல் மாற்றம் ஹார்மோன்களை நிலைகுலையச் செய்யும். அதனால் இந்த பாதிப்பு உண்டாகும்.

    Polycystic ovary syndrome என்று சொல்லக் கூடிய இந்தப் பிரச்னை பெண்கள் அதிகமாக சந்திக்கக் கூடியதாக உள்ளது. ஹார்மோன் சமநிலையின்மைக் காரணமாக கருப்பையில் சிறிய நீர்க்கட்டி உருவாகும். அதன் காரணமாகவும் இரண்டு முறை மாதவிடாய் வருதல், அதிக உதிரப்போக்கு ஏற்படும்.

    கருத்தடை மாத்திரைகள் சாப்பிட்டாலும் உடல் திடீரென மாதவிடாய் உதிரப்போக்கை உண்டாக்கும்.

    இவை தவிர பாலியல் தொற்று, பூப்படைதல், கருப்பையில் பிரச்னை போன்ற காரணங்களாலும் வரலாம். இதை சரி செய்ய பெண்கள் தங்களுடைய வாழ்க்கை முறையை சீராக்கினாலே போதுமானது. அதற்கு பெண்கள் கார்போஹைட்ரேட் உணவு மற்றும் ஜங் ஃபுட்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பழங்கள், காய்கறிகள் கீரை வகைகள் என சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

    அதேபோல் ஆயுர்வேத பானங்கள் அருந்தலாம். கற்றாழை ஜூஸ், இஞ்சி ஜூஸ் என குடிக்கலாம். அதேபோல் வெல்லம் மற்றும் நல்லெண்ணெய், எள் சாப்பிடுவதும் கருப்பை ஆரோக்கியத்திற்கு நல்லது. மன அழுத்தமும் மாதவிடாய் சுழற்சியில் மாற்றத்தை உண்டாக்கும். எனவே அதை தவிர்க்க யோகா, தியானம் , இனிமையான பாடல்கள் கேட்பது என மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    பெண்கள் அதிக அளவில் மது அருந்துதல், புகைப்பிடித்தல் பழக்கத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். இந்த பழக்கம் கருப்பையை நேரடியாக பாதிக்கும்.
    தொடர்ச்சியாக மது அருந்துகிறவர்களுக்கு உடலுறவு நாட்டம் குறைந்துபோகும். தொடக்கத்தில் அது பாலியல் வேட்கையை அதிகப்படுத்துவதுபோல் தோன்றினாலும், நாளடைவில் ஆண்களுக்கு உறுப்பு எழுச்சி குறைந்துபோகும்.
    ‘உடலுக்கு குளிர்ச்சி.. உள்ளத்துக்கு கிளர்ச்சி.. இந்த இரண்டும் சேர்ந்து ஒரே பாட்டிலில் கிடைக்கிறது’ என்று ‘பீர்’ பிரியர்கள் உற்சாகமாக சொல்கிறார்கள். கோடையில் குடித்தும் மகிழ்கிறார்கள். ஆனால் மருத்துவர்களோ, ‘அடிக்கடி பீர் பருகுவது புற்று நோயை உருவாக்கக்கூடும்’ என்ற அதிர்ச்சி தகவலை தருகிறார்கள்.

    கேரளாவை சேர்ந்த பிரபல டாக்டர் ஒருவர் தனது நண்பருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை சொல்கிறார்:

    “அந்த நண்பர் என்னை சந்திக்க வந்திருந்தார். அவர் தினமும் பீர் பருகுவதாக சொன்னார். நான் அவரிடம், அதற்கு நீங்கள் அடிமையாகிவிட்டால் புற்றுநோய் வரக்கூடும் என்றேன். அதை அவர் கருத்தில்கொள்ளவில்லை. ‘பீர் ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதே ஆரோக்கியத்தோடு உங்களை மீண்டும் வந்து சந்திப்பேன்’ என்று கூறிவிட்டு அவர் வெளிநாடு சென்றார்.

    சில வருடங்கள் கழித்து அவர் மீண்டும் வந்தார். ஆரோக்கியத்தை பற்றி விசாரித்தபோது, நன்றாக இருப்பதாக சொன்னார். வழக்கம்போல் ஓட்டலுக்கு சாப்பிடச் செல்லலாம் என்றேன். அதற்கு அவர், ‘முன்புபோல் என்னால் எல்லா உணவுகளையும் சாப்பிடமுடிவதில்லை. கஞ்சியை மட்டுமே குடிக்க முடிகிறது’ என்றார்.

    அவருக்கு நான் ‘என்டோஸ்கோபி’ பரிசோதனை செய்ய பரிந்துரைத்தேன். பரிசோதனைகளுக்கு பின்பு அவருக்கு குட்டிநாக்கு பகுதியில் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவம் பார்த்தும் பலன் இல்லை. ஒருசில வருடங்களில் இறந்துவிட்டார். இறப்பதற்கு சிறிது நாட்களுக்கு முன்பு அவர் ‘டாக்டர் நான் தவறு செய்துவிட்டேன். நீங்கள் சொன்னதை நான் விளையாட்டாக எடுத்துக்கொண்டதால் என் விதி விளையாடிவிட்டது’ என்று கண்ணீர் விட்டார்.

    பீருக்கு நிறம் கிடைப்பதற்காக ஒருவித ரசாயனப் பொருள் சேர்க்கப் படுகிறது. அது ஆபத்தானது. தொடர்ந்து பீர் பருகும்போது அது பெருமளவு உடலில் சேர்ந்து, புற்றுநோயை உருவாக்குகிறது. இதை பெரும்பாலான பீர் பிரியர்கள் உணருவதில்லை. அதுபோல் பீரில் ஆல்கஹால் அளவும் அதிகமாக இருக்கிறது. 6 சதவீத ஆல்கஹால் என்று கூறப்பட்டாலும் அதைவிட அதிக போதைத்தன்மை அதில் உள்ளது.

    மது வாய் வழியாக இரைப்பையை அடையும். அதில் 20 சதவீதம் ரத்தத்தில் கலந்துவிடும். மீதி 80 சதவீதம் சிறுகுடலில் போய் சேரும். சிறுகுடலுக்கு ரத்தம், ஈரல் வழியாகச் செல்லும். உடலுக்கு தேவையில்லாததை வெளியேற்றுவது ஈரலின் வேலை. ஆனால் அங்கே வரும் மதுவின் அளவு மிக அதிகமாகும்போது, ஈரலால் தன் பணியை செய்ய முடியாது. தடுமாறி, காலப்போக்கில் ஈரல் பாதிக்கப்படும்.

    ஒரு சில கிராமங்களில் பிரசவமான பெண்களுக்கும், உடல் பலகீனமாக இருப்பவர்களுக்கும் மதுவை மருந்தாக கருதி கொடுக்கிறார்கள். அதில் சில திரவங்களை கலந்தும் தருகிறார்கள். அதன் மூலம் உடல் வலுவடையும் என்று நம்புவது தவறு.

    ஆல்கஹால் மூளையையும் பாதிப்பதால், காலப்போக்கில் அவர்களுக்கு நினைவாற்றலும் குறைந்துகொண்டேபோகும்.

    தொடர்ச்சியாக மது அருந்துகிறவர்களுக்கு உடலுறவு நாட்டம் குறைந்துபோகும். தொடக்கத்தில் அது பாலியல் வேட்கையை அதிகப்படுத்துவதுபோல் தோன்றினாலும், நாளடைவில் ஆண்களுக்கு உறுப்பு எழுச்சி குறைந்துபோகும்.

    ஆண், பெண் இருபாலரிடமும் ஆண் ஹார்மோனும், பெண் ஹார்மோனும் கலந்து காணப்படும். இந்த ஹார்மோன் கணக்கை சீர்படுத்துவதில் ஈரல் பெரும் பங்கு வகிக்கிறது. ஈரல்தான் ஆண்களிடம், பெண் ஹார்மோனை கட்டுக்குள் வைக்கும். அடிக்கடி மது அருந்துகிறவர்களுக்கு ஈரல் பாதிக்கப்படுவதால், அவர்கள் உடலில் பெண் ஹார்மோன் அதிகரிக்கும். அதனால் அவர்களிடம் பெண்தன்மை மேம்பட்டு, பாலுறவு ஆர்வம் குறைந்துவிடும். 
    அப்பாக்களிடம் மகன்கள் எதிபார்க்கும் சின்ன சின்ன விஷயங்களை தந்தை பூர்த்தி செய்தாலே அவர்களுக்கு மகிழ்ச்சி. அப்படி பொதுவாக என்னென்ன எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர் என்பதைக் காணலாம்.
    அப்பாக்களிடம் மகன்கள் எதிபார்க்கும் சின்ன சின்ன விஷயங்களை தந்தை பூர்த்தி செய்தாலே அவர்களுக்கு மகிழ்ச்சி. அப்படி பொதுவாக என்னென்ன எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர் என்பதைக் காணலாம்.

    அப்பா குடும்பம், குழந்தை, உறவினர்கள் என்று இருப்பார்கள். ஆனால் அவரை நினைத்து வருந்தும் ஒருவர் அம்மாதான். ஆனால் அவருக்கோ அம்மாவைக் கவனித்துக்கொள்ளவும், அன்பு செலுத்தவும் நேரம் இருக்காது. இதை அம்மாவும் அப்பாவிடம் காட்டவில்லை என்றாலும் அம்மாவை நேசிக்கும் மகன்களுக்குத் தெரியும்.எனவேதான் ஒவ்வொரு மகன்களும் அப்பா அம்மா மீதும் அன்பு செலுத்த வேண்டும். அம்மாவின் ஆசைகளுக்குச் செவி கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

    தோல்விகள் பல சந்தித்தவர்கள்தான் சிறந்த ஆசிரியர்களாக இருக்க முடியும். அப்பாவை ரோல் மாடலாக நினைக்கும் மகன்கள் தன்னுடைய தோல்வியை எப்படி பக்குவமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை உங்களிடமிருந்து நன்கு கற்றுக்கொண்டிருப்பார்கள். எனவே அவர்களின் வெற்றியை மட்டும் எதிர்பார்க்காதீர்கள். தோல்விகள் எதார்த்தம் அதை எதிர்கொள்ள மகனுக்கு உறுதுணையாக இருங்கள் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.

    உங்கள் மகனின் கல்வி , சமூக வாழ்க்கை , புதிய தொழில் தொடங்குகிறார் , புது முயற்சிகள் என எதுவாக இருந்தாலும் உடன் இருந்து சிறந்த ஆலோசகராக இருங்கள். ஆலோசகராக இல்லாவிட்டாலும் உடன் இருப்பதே அவர்களுக்குப் பக்க பலம்தான். இது மகன்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு. ஏனெனில் அவர்களின் முதல் நண்பன் நீங்கள்தான்.

    அவர் ஏதேனும் குறிப்பிட்ட விஷயத்தில் தீவிரமாக இருக்கிறார் எனில் அதற்குத் தடுப்பணையாக இருக்காதீர்கள். உதாரணமாக விளையாட்டு, பாட்டு, சினிமா, நடனம் இப்படி மற்ற விஷயங்களில் அதிக தீவிரமாக இருந்தால் ஊக்குவித்து அவரை உற்சாகப்படுத்தும் முதல் நபராக இருங்கள். அதைவிடச் சிறந்த உந்துதல் சக்தி அவர்களுக்கு வேறெதுவும் இல்லை.

    உங்கள் மகன் படிப்பில் , விளையாட்டில் , தொழிலில் சிறந்து விளங்குகிறார் எனில் அவரை பாராட்ட வேண்டும் என்பது அவர்களின் ஆழ் மன எதிர்பார்ப்பு. உன்னால் முடியும் எனத் தெரியும். நீ சிறந்த உழைப்பாளி உனக்கு இந்த வெற்றி பொருத்தமானதே என இப்படி வாய் நிறைய மனதாரப் பாராட்டுங்கள். அதுதான் அவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.

    நேரம் கிடைக்கும்போது நண்பனைப் போல் அவருடன் பேசி மகிழுங்கள். டெக்னாலஜி குறித்த அப்டேட்டுகளை மகனிடம் தெரிந்துகொள்ளுங்கள். இருவரும் சேர்த்து வெளியே செல்லுங்கள். படத்திற்குச் சென்று வாருங்கள். இப்படி எல்லாவற்றையும் பேசுங்கள். இது உங்கள் உறவு முறையை மேலும் சிறப்பாக்கும். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பாக இருக்கும்.
    குடும்பத்துடன் நேரம் ஒதுக்கவே முடியவில்லை என புலம்பியவர்களுக்கு இது நல்ல சந்தர்ப்பம். லாக்டவுனில் குடும்பத்துடன் நெருக்கத்தை அதிகரித்து மகிழ்ச்சியாக இருக்க இந்த விஷயங்களை செய்யுங்கள்.
    குடும்பத்துடன் நேரம் ஒதுக்கவே முடியவில்லை என புலம்பியவர்களுக்கு இது நல்ல சந்தர்ப்பம். லாக்டவுனில் குடும்பத்துடன் நெருக்கத்தை அதிகரித்து மகிழ்ச்சியாக இருக்க இந்த விஷயங்களை செய்யுங்கள்.

    குடும்பத்துடன் சேர்ந்து சமையல் செய்யுங்கள். இதற்கு ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டு சமைப்பதால் கஷ்டமும் தெரியாது. மகிழ்ந்து சமைக்கலாம். தினமும் மனைவி சமைக்கும் போது என்ன கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

    மூலைக்கு மூலை செல்போன் வைத்துக்கொண்டு அமர்வதை விட இண்டோர் கேம்ஸ் விளையாடலாம். பாரம்பரிய விளையாட்டுகளான தாயம், பல்லாங்குழி என பல விளையாட்டுகள் இருக்கின்றன. பாரம்பரிய விளையாட்டுக்களை பற்றி தெரியாத இந்த கால குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாம்.

    வீட்டிலேயே இருப்பதால் உடலுக்கு அசைவு கொடுக்கும் விதமாக கேளிக்கையாக நடனம் ஆடுவது, காமெடி என குடும்பத்தோடு இணைந்து செய்யலாம். ஜிம்முக்கு போக முடியாதவர்கள் வீட்டிலேயே குடும்பத்துடன் உடற்பயிற்சி, யோகா என்றும் செய்யலாம்.

    பராமரிப்பு : வீட்டை சுத்தம் செய்து பராமரிப்பது, வீட்டு வேலைகளை பகிர்ந்துகொள்வது, தோட்டம் இருந்தால் செடிகளை பராமரித்துக்கொள்வது போன்ற விஷயங்களை செய்யலாம். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வீட்டிலேயே பயிரிடலாம்.

    இந்த தருணங்களிலெல்லாம், இதன் நினைவுகளை புகைப்படங்களாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இவற்றை எப்போது திறந்து பார்த்தாலும் லாக்டவுன் முடிந்தாலும் இப்படியே எப்போதும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். 
    ×