என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    இட்லி, தோசைக்கு சுவையான பொடி வகைகளை தயார் செய்து சாப்பிடலாம். கொள்ளு இட்லி பொடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கொள்ளு - அரை கப்
    காய்ந்த மிளகாய் - 5
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு

    செய்முறை:

    வாணலியை சூடாக்கி அதில் கொள்ளு, பெருங்காயத்தூளை கொட்டி வறுக்கவும்.

    மிளகாயையும் வாசம் வரும் வரை வறுத்தெடுத்துக்கொள்ளவும்.

    ஆறிய பின்னர் அனைத்தையும் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

    சுவையாக கொள்ளு இட்லி பொடி ரெடி.

    இந்த பொடியை சூடான சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தொலைக்காட்சி பெட்டியின் முன்பு அதிக நேரத்தை செலவிடும் குழந்தைகள் 7 வயதுக்குள் உடல் பருமன், வளர்சிதை மாற்றத்தில் குறைபாடு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
    டீன் ஏஜ் பருவத்தை எட்டுவதற்குள்ளாகவே பெரும்பாலான குழந்தைகள் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். நொறுக்குத்தீனிகள் அதிகம் சாப்பிடுவதுதான் உடல் பருமனுக்கான பொதுவான காரணமாக கருதப்படுகிறது. உணவு பழக்கங்கள் மட்டுமின்றி அன்றாட செயல்பாடுகளாலும் உடல் பருமன் அடைகிறது. ஸ்பெயினை சேர்ந்த சுகாதார நிறுவனம் ஒன்று குழந்தைகளின் வெவ்வேறு வாழ்க்கை முறைகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. அதில் குழந்தைகளின் உடல் இயக்க செயல்பாடுகள், தூங்கும் கால அளவு, டி.வி. பார்க்கும் நேரம், பச்சை காய்கறிகளை அடிப்படையாக கொண்ட உணவு பொருட்களை உட்கொள்வது, பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை உட்கொள்வது ஆகிய ஐந்து விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

    அத்துடன் நான்கு வயதுக்குள் குழந்தைகளின் பழக்கவழக்கங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்தும் பெற்றோரிடம் ஆய்வுக்குழுவினர் கேட்டுஅறிந்திருக்கிறார்கள். மேலும் நான்கு மற்றும் ஏழு வயதுகளில் குழந்தைகளின் ரத்த அழுத்தம், உடல் எடைக்கு ஏற்ற உயரம் உள்ளிட்டவற்றையும் ஆராய்ந்திருக்கிறார்கள். 1480 குழந்தைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆய்வின் முடிவில் உடல் இயக்கம் சார்ந்த செயல்பாடுகள் அதிகம் இல்லாமல் தொலைக்காட்சி பெட்டியின் முன்பு அதிக நேரத்தை செலவிடும் குழந்தைகள் 7 வயதுக்குள் உடல் பருமன், வளர்சிதை மாற்றத்தில் குறைபாடு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து ஆய்வுக்குழுவின் இணை தலைவரான டோரா ரோமகேரா, “குழந்தைகள் தொலைக்காட்சியை பார்க்கும்போது, ஏராளமான விஷயங்களை காண்கிறார்கள். அதில் பார்க்கும் உணவு பொருட்களை உட்கொள்வதற்கு விரும்புகிறார்கள். இனிப்பு பலகாரங் கள், பானங்கள், சுத்திகரிக்கப்பட்ட தானிய பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றில் உப்பு, சர்க்கரை, கொழுப்புகள் அதிக அளவில் இருக்கின்றன. ஆனால் ஊட்டச்சத்துக்கள் குறைவான அளவிலேயே இருக்கின்றன. நான்கு வயதில் இத்தகைய பொருட்களை அதிக அளவில் உட்கொள்வது ஏழு வயதில் உயரத்திற்கு பொருத்தமில்லாத உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடுகிறது” என்கிறார்.

    குறைவான நேரம் தூங்குவதும் உடல் பருமன் பிரச்சினைக்கு மற்றொரு முக்கிய காரணம் என்பதும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
    பெண்களுக்கு அழகிய தோற்றப்பொலிவை ஏற்படுத்திக்கொடுப்பதில் லிப்ஸ்டிக் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை வேறு பலவகைகளிலும் பெண்கள் உபயோகிக்கலாம்.
    பெண்களுக்கு அழகிய தோற்றப்பொலிவை ஏற்படுத்திக்கொடுப்பதில் லிப்ஸ்டிக் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்ற லிப்ஸ்டிக்குகளை விட சிவப்பு நிற லிப்ஸ்டிக் எல்லோருக்கும் பொருத்தமானது. இது இளம் வயதினர், முதியோர்கள், தொழில் முனைவோர், இல்லத்தரசி என அனைத்து வயதினருக்கும் ஏற்றதாக அமைந்திருக்கும். சாதாரணமாக பயணம் மேற்கொண்டாலோ அல்லது தொழில் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலோ சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை தயங்காமல் உபயோகப்படுத்தலாம். அது தனித்துவமான முகப்பொலிவை பெற்றுத்தரும். சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை வேறு பலவகைகளிலும் பெண்கள் உபயோகிக்கலாம்.

    நிறைய பெண்களுக்கு கண்களின் இமை பகுதியிலும், கண்களின் அடிப்பகுதியிலும் கருமை படிந்திருக்கும். கரும் புள்ளிகள், முகப்பருக்களும் ஆங்காங்கே தென்படும். அவசரமாக வெளியே கிளம்பி செல்லும் பட்சத்தில் லிப்ஸ்டிக்கை, கண்களையொட்டி இருக்கும் கருமையை மறைப்பதற்கு உபயோகிக்கலாம். லிப்ஸ்டிக்கை லேசாக பூசிவிட்டு வழக்கமான ஒப்பனையை மேற்கொள்ளலாம். அப்போது கரும் புள்ளிகள், பருக்கள் மறைக்கப்பட்டிருப்பதை காணலாம்.

    லிப்ஸ்டிக்கை லிப் பாமாகவும் மாற்றி உபயோகிக்கலாம். தொடர்ந்து சிவப்பு லிப்ஸ்டிக்கை உபயோகித்து சலிப்படைந்தால் அதனை கொண்டு லிப் பாம் தயார் செய்யலாம். ஒரு கிண்ணத்தில் சிறிதளவு கோகோ வெண்ணெய் ஊற்றிவிட்டு அதனுடன் சிறிதளவு லிப்ஸ்டிக் சேர்த்து பிசையவும். அதனை மைக்ரோ ஓவனில் ஒரு நிமிடம் வைத்துவிட்டு வெளியே எடுக்கவும். அது ஆறியதும் வேறொரு கிண்ணத்தில் மாற்றிவிடவும். இதுதான் லிப் பாம். இதனை உதட்டில் பூசலாம்.

    சிவப்பு நிற லிப்ஸ்டிக்குடன் மற்ற நிற லிப்ஸ்டிக்கையோ அல்லது பழைய லிப்ஸ்டிக்கையோ கலந்தும் உபயோகிக்கலாம். முதலில் ‘லிப் லைனர்’ பென்சிலை கொண்டு உதட்டின் மேல் பகுதியில் கோடு வரைந்து கொள்ளவும். அதன் பிறகு, தயார் செய்யப்பட்டிருக்கும் லிப்ஸ்டிக்கில் லிப் பிரஷை முக்கி உதட்டில் தடவலாம். அவ்வாறு செய்தால் உதடு பளபளப்பாக மின்னும்.

    லிப்ஸ்டிக் மினுமினுப்பையும் தரக்கூடியது. இது அனைத்து சரும வகைகளுக்கும் ஏற்றது. கன்னங்களுக்கு இயற்கையான பிரகாசமான நிறத்தையும் கொடுக்கும். கன்னத்தில் இருக்கும் தழும்புகளை மறைக்கவும் உதவும். முதலில் கன்னங்களில் வெளிர் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை லேசாக தடவி விரல்களால் மசாஜ் செய்யவும். பின்னர் ஒப்பனை தூரிகையை கொண்டு தேய்க்கவும். அதனுடன் சிறிதளவு ‘பிக்ஸிங் பவுடரும்’ சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

    ‘ஐ ஷேடோ’வாகவும் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம். சிறிதளவு சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை கைவிரலிலோ, ஒப்பனை தூரிகையிலோ தடவி கண்களை சுற்றி தேய்த்துவிடலாம். அதனுடன் ‘ஹைலைட்டரை’யும் பயன்படுத்துவது கூடுதல் பொலிவை தரும்.
    கொரோனா ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கும் மக்களிடம் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது பற்றி இணையதளம் வழியாக கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. அதில் திகிலும், சுவாரசியமும் கலந்த பல்வேறு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
    கொரோனா ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கும் மக்களிடம் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது பற்றி இணையதளம் வழியாக கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. அதில் திகிலும், சுவாரசியமும் கலந்த பல்வேறு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    ‘வீடுகளில் இருக்கும் நேரத்தில் தினமும் எவ்வளவு நேரத்தை செல்போனில் செலவிட்டீர்கள்?’ என்ற கேள்விக்கு, 54 சதவீதம் பேர் ஒரு மணி நேரம் முதல் மூன்று மணிநேரத்தை செல்போனில் செலவிட்டதாக கூறியிருக்கிறார்கள். 33 சதவீதம் பேர் மூன்று முதல் 6 மணி நேரத்தை செல்போனிடம் இழந்திருக்கிறார்கள். 13 சதவீதம் பேர் மட்டுமே ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக செலவிட்டுள்ளனர்.

    ‘கொரோனா முடக்கத்தால் வீடுகளில் இருந்தபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?’ என்ற கேள்விக்கு, ‘கஷ்டப்பட்டுதான் பொழுதுபோனது’ என்று 45 சதவீதம் பேரும், ‘போரடித்தது’ என்று, 39 சதவீதம் பேரும், ‘மகிழ்ச்சியாக இருந்தது’ என்று 13 சதவீதத்தினரும், ‘கொடுமையான அனுபவமாக இருந்தது’ என்று 3 சதவீதத்தினரும் கூறியிருக்கிறார்கள்.

    ‘ஊரடங்கு காலத்தில் நீங்கள் எதை நினைத்து அதிகம் பயம்கொண்டீர்கள்?’ என்ற கேள்விக்கு ‘பணப் பிரச்சினையை நினைத்துதான் அதிகம் பயம்கொண்டோம்’ என்பது 45 சதவீதத்தினர் பதில். 24 சதவீதம் பேர் ‘ஆரோக்கியத்தை நினைத்துதான் அதிகம் கவலைப்பட்டோம்’ என்று கூறியிருக்கிறார்கள். பொதுப்போக்குவரத்து இல்லாமல் இருப்பது 23 சதவீதத்தினருக்கு அதிக கவலையை அளித்திருக்கிறது. ‘அவ்வப்போது கொரோனாவால் பலர் உயிரிழந்துகொண்டிருப்பது தங் களை பாதித்தது’ என்று 8 சதவீதத்தினர் கூறி இருக்கிறார்கள்.

    ‘இந்த காலகட்டத்தில் உங்களின் உடனடி எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது?’ என்ற கேள்விக்கு 55 சதவீதத்தினர் ‘உடனடியாக தடுப்பூசி கண்டுபிடிக்கவேண்டும்’ என் றும், 34 சதவீதத்தினர் ‘கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும்’ கருத்து பகிர்ந்துள்ளனர். 11 சதவீதத்தினர் ‘கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ளவேண்டும்.. அதை தவிர்த்து வேறு வழியில்லை..’ என்றும் கூறியிருக்கிறார்கள்.

    ‘கொரோனா காலத்தில் அதிகமாக எதை இழந்ததாக நினைக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு கிடைத்த பதில்கள் வித்தியாசமானது. பயணங்கள் செய்ய முடியாததும், ஓட்டல் உணவுகளை சாப்பிட முடியாததும் பெரிய இழப்பு என்பது 52 சதவீதத்தினர் கருத்து. விரும்பியவர்களை சந்திக்க முடியாமல் போனதுதான் அதிக வருத்தம் தருவதாக 32 சதவீதத்தினர் பதில் அளித்துள்ளனர். 8 சதவீதத்தினர் ‘சினிமா பார்க்க முடியவில்லையே’ என்று வருந்தியதாகவும், 8 சதவீதத்தினர் ஷாப்பிங் மகிழ்ச்சியை இழந்துவிட்டதாகவும் கருத்து பகிர்ந்திருக்கிறார்கள். தனியார் அமைப்பு ஒன்று இந்த கருத்துக்கணிப்பு தகவலை வெளியிட்டிருக்கிறது.

    கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட நல்ல விஷயங்கள் என்னென்ன? என்ற கேள்விக்கு கிடைத்திருக்கும் பதில் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.

    - 23 சதவீதத்தினர் சமையலை நன்றாக கற்றுக்கொண்டதாக கூறியிருக்கிறார்கள்.

    - 19 சதவீதத்தினர் பிடித்த பழைய சினிமாக்களை பார்த் திருக்கிறார்கள்.

    - 18 சதவீதத்தினர் முறையான உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

    - 15 சதவீதத்தினர் வீட்டுத் தோட்டங்களை உருவாக்கி பொழுதை பயனுள்ளதாக கழித்திருக்கிறார்கள்.

    - 14 சதவீதத்தினர் நிறைய புத்தகங்களை வாசித்து முடித்ததாக சொல்கிறார்கள்.

    - 11 சதவீதத்தினர் பழைய நண்பர்களின் தொடர்பு எண்களை தேடிப்பிடித்து நட்பை புதுப்பித்து பேசி மகிழ்ந்ததாக கூறியிருக்கிறார்கள்.
    சேலைகளில் தினமும் புதுப்புது டிசைன்கள், ரகங்கள் அறிமுகமாகிக் கொண்டேதான் இருக்கின்றன. சமீப காலங்களில் அறிமுகமாகியிருக்கும் சேலைகளைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? வாங்க பார்க்கலாம்.
    சேலைகளில் தினமும் புதுப்புது டிசைன்கள், ரகங்கள் அறிமுகமாகிக் கொண்டேதான் இருக்கின்றன. சமீப காலங்களில் அறிமுகமாகியிருக்கும் சேலைகளைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? வாங்க பார்க்கலாம்.

    செமி காதிபட்டு:- உடல் முழுவதும் மென்மையான நிறங்களில் அழகான பிரிண்டுகள் இருந்தால் முந்தானையானது கான்ட்ராஸ்ட் அடர் நிறத்தில் அட்டகாசமாக இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இந்தச் சேலையுடனேயே கான்ட்ராஸ்ட் நிறத்தில் ப்ளவுஸும் இணைக்கப்பட்டிருப்பது அழகிற்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளது. கலம்காரி டிசைன்களில் பிரிண்ட்டுகள், பிளெயின் உடலுக்கு பிரிண்டட் பல்லு அல்லது பிளெயின் உடலுக்கு கோடுகளில் பல்லு, ஷேடோ பிரிண்டுகள் என்று பார்ப்பதற்கே மிகவும் ரிச்சான தோற்றத்தைத் தருவதாக உள்ள இந்தச் சேலைகள் ரூபாய் 300 முதல் 400 ரூபாய்க்கே கிடைக்கின்றன என்று சொன்னால் நம்பவே முடியாது.

    ஜம்தானி சேலைகள்:- அணிந்தால் ஸ்டைலிஷாகவும், கவுரவமான தோற்றத்தைத் தருவதாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் விலை குறைவாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? அப்பொழுது நிச்சயமாக உங்கள் தேர்வு ஜம்தானி சேலைகளாகத்தான் இருக்க முடியும். இரண்டு விரல் அகலம் முதல் கை அகலம் வரை ஜரிகை பார்டர்கள் வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கும் இவ்வகைச் சேலைகள் சிறு விழாக்கள் மற்றும் கோவில்களுக்கு அணிந்து செல்ல ஏற்றவையாக இருக்கும். நூற்று ஐம்பது ரூபாய் முதல் ஐநூறு ரூபாய்க்குள் இவ்வளவு அழகான சேலைகள் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்றே சொல்லலாம்.

    இக்கத் சில்க் காட்டன்:- தனிப்பட்ட முறையில் அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும் கோரா காட்டன் இக்கத் சேலைகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். ஆரஞ்சு நிறத்தில் இக்கத் பிரிண்ட் இருந்தால் நீலநிறத்தில் பிரிண்டட் பல்லுவுடன் பிளெயின் நீல நிறத்தில் பிளவுஸ், வெள்ளைநிற உடல் பகுதியில் இக்கத் பிரிண்ட் இருந்தால் மஜந்தா, சிகப்பு, நீல நிறத்தில் பிரிண்டட் பல்லு என்று அருமையான வண்ணச் சேர்க்கையைத் தேர்வு செய்து வடிவமைத்திருக்கும் இவ்வகைச் சேலைகளின் விலை மூன்றாயிரம் முதல் நான்காயிரம் மட்டுமே ஆகும்.

    குறைந்த விலை பட்டுச் சேலைகள்:- பட்டுச் சேலைகளை அணிவதற்கு விருப்பமாக இருக்கும் பலருக்கு இவ்வகைச் சேலைகள் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ஆயிரம் ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய்க்குள் மிகவும் அழகான டிசைன்கள், கண்கவர் வண்ணங்களில் அணிவதற்கு இலகுவாக வந்திருக்கும் இந்தச் சேலைகளை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது. அதிக விலை கொடுத்து வாங்கும் பட்டுச் சேலைகளின் அழகும், பொலிவும் குறைந்த விலை பட்டுச் சேலைகளில் கிடைத்தால் அவற்றை வாங்காமல் இருப்போமா என்ன?

    சில்வர் ஜரி மற்றும் இரட்டை பார்டர் சேலைகள்:- சில்வர் ஜரியானது உடலில் கோடுகளாக வர பூக்கள் உடல் முழுவதும் பிரிண்ட் செய்யப்பட்டு, சில்வர் ஜரி பார்டர்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தச் சேலைகளின் வண்ணச் சேர்க்கையை என்னவென்று வர்ணிப்பது? பிளவுஸ்கள் சேலைகளுடன் இணைக்கப்பட்டிருப்பதால் அவற்றை தனியாக தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. சேலையின் மேல்பக்கம் சிங்கிள் பார்டருடனும், சேலையின் கீழ்ப்புறம் டபுள் பார்டருடனும் இக்கத் மற்றும் வொர்லி பிரிண்ட்டுடன் வரும் சேலைகளின் வண்ணக்குவியலை என்னவென்று வர்ணிப்பது? பல்லுவும், பார்டரும் ஒரே மாதிரி டிசைன்கள் மற்றும் வண்ணங்களில் வருவது மனதைக் கொள்ளை கொள்ளும் விதமாக உள்ளது. அறுநூறு ரூபாய் முதல் ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்குள் சேலைகளின் விலையானது அமைந்திருப்பது மற்றுமொரு அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம்.

    பகல்புரி புடவைகள்:- உடல் முழுவதும் வொர்லி பிரிண்ட்டுகள், பிரிண்ட் செய்யப்பட்ட வண்ணத்திலேயே முந்தியானது வெறும் கோடுகளாக இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பது அட்டகாசமாக இருக்கின்றது. பகல்புரி சேலைகள் மிகவும் மென்மையாக இருப்பதால் அவற்றை துவைத்து உடுத்தினாலே போதுமானது. இஸ்திரி போடவோ, கஞ்சி போட்டு உடுத்த வேண்டிய அவசியமோ இல்லை. தினப்படி அணிய ஏதுவாகவும் அதே சமயம் விலையும் ஐந்நூறு முதல் அறுநூறு ரூபாயாக இருந்தால் நம்முடைய முதல் தேர்வு இந்தச் சேலைகளாகத்தான் இருக்கும்.

    ஷேட்டின் பார்டர்களுடன் வரும் டிஜிட்டல் பிரிண்ட் சேலைகள்:- லினன் பேஸில் அமைந்திருக்கும் இந்தப் புடவைகளில் பூக்கள் கொத்துக் கொத்தாக பிரிண்ட்டு செய்யப்பட்டிருப்பதை தொட்டுப் பார்க்கும் பொழுது மென்மையான பூக்களைத் தொடுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. இந்தச் சேலைகளில் ஷேட்டின் பார்டர் அமைந்திருப்பது மற்றுமொரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இதன் விலையோ ஐந்றூறு முதல் அறுநூறு ரூபாய் இருப்பது கூடுதல் சிறப்பம்சம் என்றே சொல்லலாம். இவ்வகைச் சேலைகள் அணிவதற்கும், பராமரிப்பதற்கும் எளிதாக இருப்பது மற்றொரு கூடுதல் சிறப்பம்சம் என்றே சொல்லலாம்.

    இரட்டை பிளவுஸ்களுடன் வரும் மென் பருத்திச் சேலைகள்:- பெரும்பாலும் பிளையின் வெள்ளை நிறத்தில் அழகான சில்வர் ஜரிபார்டர் அத்துடன் அரை இன்ச்சில் கான்ட்ராஸ்ட்டான வண்ண பார்டருடன் இரண்டு விதமான பிளவுஸ்களுடன் வந்திருக்கும் இவ்வகைச் சேலைகளை என்னவென்று சொல்வது? ஒரு பிளவுஸ் சின்தடிக்கிலும், மற்றொரு பிளவுஸ் காட்டனிலும் இருப்பது கூடுதல் சிறப்பாகும். அதிலும் ஒரு பிளவுஸ் கான்ட்ராஸ்ட் வண்ணத்தில் பிரிண்ட்டுகள் செய்யப்பட்டும், மற்றொரு பிளவுஸ் மென்மையான வண்ணத்தில் கட்டங்களாக வடிவமைக்கப்பட்டிருப்பதும் கூடுதல் சிறப்பம்சமாக உள்ளது.
    கொரோனா நெருக்கடியால் வீடுகளில் முடங்கிக்கிடக்கும் ஏராளமான சிறுவர்-சிறுமியர்கள் ‘மொபைல் போன் கேம்ஸ்’ விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள்.
    கொரோனா நெருக்கடியால் வீடுகளில் முடங்கிக்கிடக்கும் ஏராளமான சிறுவர்-சிறுமியர்கள் ‘மொபைல் போன் கேம்ஸ்’ விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள். அதனை நினைத்து பெரும்பாலான பெற்றோர்கள் இப்போது சந்தோஷப் படுகிறார்கள். ‘அடிதடி இல்லாமல் அமைதியாக இருந்து பிள்ளைகள் விளையாடுகிறார்கள்’ என்று நினைத்து நிம்மதி பெருமூச்சு விடும் பெற்றோர்களால், பள்ளிக்கூடம் திறந்து அவர்கள் பள்ளிக்கு செல்லும்போதுதான் அந்த விளையாட்டின் விபரீதத்தை உணர்ந்து கொள்ள முடியும். மொபைல் போன் கேம்ஸ், கிட்டத்தட்ட குழந்தைகளின் எதிர்காலத்தை முற்றிலும் தகர்க்கும் விளையாட்டாகும்.

    இது போலத்தான் ஒருமுறை, இரண்டு மாத விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறந்தது. பள்ளி சென்ற சிறுவனால் நோட்டில் எழுத முடியவில்லை. கை வலித்தது. கண்கள் இருண்டது. சோர்ந்து போய் வீடு திரும்பினான். அவனை டாக்டரிடம் பெற்றோர் அழைத்து சென்றனர். ‘இவனால் பேனா பிடிக்க முடியவில்லை. கைவிரல்கள் வலிக்கின்றன என் கிறான். என்ன நோய் என்று கண்டுபிடியுங்கள்’ என்று டாக்டரிடம் கேட்டுக்கொண்டார்கள்.

    டாக்டர் பரிசோதித்துவிட்டு, என்ன நோய் என்று சொன்னதும் பெற்றோர் அதிர்ந்து போய்விட்டார்கள். அந்த நோயின் பெயர் ‘வீடியோ கேமேர்ஸ் தம்ப்’! நிரந்தரமாக வீடியோ கேம்ஸ் விளையாடுவதால் பெருவிரல் வீங்கி, நீர்கட்டுடன் காணப்படுவதுதான் இந்த நோயின் அறிகுறி. மகன் கேட்டபோதெல்லாம் அவன் இஷ்டத்திற்கு மொபைல்போனில் போட்டுக்கொடுத்த விளையாட்டுகள் இவ்வளவு பெரிய பிரச்சினையை உண்டு பண்ணும் என்று பெற்றோர் நினைத்துப்பார்த் திருக்கவில்லை.

    விரல் வீக்கம் முதல்- திருட்டு மனோபாவம் வரை பல விபரீதங்கள் இந்த கேம்ஸ்களால் சிறுவர், சிறுமியர்களிடம் ஏற்படுகின்றன. பஸ்சுக்கு காத்திருக்கும்போது, படிக்க விருப்பம் இல்லாதபோது, ராத்திரி உறக்கம் வராதபோது... இப்படிப்பட்ட பல நேரங்களில் பொழுதுபோக்குக்காக ஆரம்பித்த மொபைல்போன் கேம்ஸ்கள் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தையே சிதறடிக்கிறது.

    திருடனை பிடிப்பது-மறைத்து வைத்திருக்கும் வெடிகுண்டுகளை கண்டறிவது-மந்திரவாதிகளை ஒரு கை பார்ப்பது...போன்ற அனைத்து விளையாட்டுகளிலுமே, விளையாடும் குழந்தைகளே ‘ஹீரோ’ ஆகிக்கொள்கிறார்கள். நண்பர்களோடு சேர்ந்து விளையாடும்போது ஒருவரை ஒருவர் வீழ்த்தப்பார்க்கிறார்கள்.

    மேலோட்டமாக பார்க்கும்போது இந்த விளையாட்டுகள் புள்ளிகள் அதிகம் எடுக்கவும், அடுத்த லெவலுக்கு செல்லவும் ஏற்ற பொழுதுபோக்கு என்று சொல்வார்கள். ஆனால் குழந்தைகள் இதில் ஆழ்ந்துவிட்டால் தேவைக்கு அதிகமாக ஆவேசம் காட்டுவார்கள். கேம்ஸ்சின் ‘பிரேக் டைம்’ நேஇரத்தில் காத்திருக்க முடியாமல் மொபைலில் தேதியை மாற்றிவிட்டும் ‘பேக்’ செய்துவிட்டும், பெரும்பாலான குழந்தைகள் அடுத்த விளையாட்டை ஆரம்பித்துவிடுகிறார்கள்.

    பஸ்சிலும், வகுப்பறையிலும், படுக்கை அறையிலும் மறைத்து வைத்து விளையாடும் வசதி மொபைல் போனில் இருக்கிறது. அதனால் அதற்கு அடிமையாகும் வாய்ப்பு அதிகம். கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகள் அதில் இருந்தாலும் அந்த விளையாட்டுக்கு தேவையான உடல் சக்தியும், மனோபாவமும் மொபைல் கேம்ஸ்க்கு தேவையில்லை. அதனால் அந்த விளையாட்டுகளை விளையாடும்போது உடலுக்கோ, மனதுக்கோ எந்த சக்தியும் கிடைக்கப்போவதில்லை. மாறாக அடிமையாகும் எண்ணம்தான் அதில் அதிகம் வளருகிறது.

    குழந்தைகளை மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமைப்படுத்தும் விதத்தில்தான் ஒவ்வொரு விளையாட்டும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வெற்றிபெற வேண்டும் என்ற வெறியை உருவாக்கும் விதத்தில் அது உள்ளது. விளையாட்டில் அவர்களுக்கு வெறித்தனம் அதிகரிக்கும்போது படிப்பு உள்பட்ட அவர்களது அன்றாட செயல்கள் அனைத்தையும் அது பாதிக்கும். முழு கவனமும் விளையாட்டை நோக்கி சென்று குழந்தைகளை அடிமையாக்கும் முன்பு அவர்களை காப்பாற்றியாக வேண்டும்.

    ‘ஹைப்பர் ஆக்டிவிட்டி’ குழந்தைகள் எளிதாக இந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிடுவார்கள். பெற்றோர் அருகில் இல்லாத குழந்தைகளும், பெற்றோரின் கண்காணிப்பு குறைவாக உள்ள குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். மூளைப்பகுதியில் ‘டோபாமின்’ என்ற ஹார்மோன் சில குழந்தைகளுக்கு அதிகம் சுரக்கும். அவர்கள் இந்த விளையாட்டுக்கு எளிதாக அடிமையாகிவிடுவார்கள்.

    ‘ஆன்லைனில்’ குழந்தைகள் அதிக நேரம் விளையாடுவதும் ஆபத்துதான். அவை குழந்தைகளை தொடர்ச்சியாக விளையாடவைக்கும். பிரச்சினைக்குரிய பெரியவர்களோடு தொடர்பினை ஏற்படுத்தி புதிய தொந்தரவுகளையும் உருவாக்கும். உங்கள் குழந்தைகள் தினமும் 2 மணி நேஇரத்துக்கு மேல் மொபைலில் கேம்ஸ் விளையாட அனுமதிக்காதீர்கள். வேறு வெளிவிளையாட்டுகளிலும், நல்ல பொழுதுபோக்குகளிலும் அவர்களை ஈடுபடுத்துங்கள்.

    தூக்கமின்மை, ஒற்றை தலைவலி, சோர்வு, பலவீனம், பள்ளி பாடங்களில் பின்னடைவு, கை- கால்- முதுகு- கழுத்துவலி, மன அழுத்தம், காரணமற்ற கோபம், எரிச்சல், சுத்தமின்மை, பொய் சொல்லுதல், சக நண்பர்களிடம் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துதல் போன்றவை எல்லாம் மொபைல் கேம்ஸ்க்கு அடிமையானவர்களின் அறிகுறியாகும்.

    இதை எல்லாம் தெரிந்துகொண்டு, வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் இந்த நேஇரத்தில் குழந்தைகளை கண்காணியுங்கள்.
    உடல் ஆரோக்கியத்தை காக்கும் உணவு வகைகளை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. அந்த வகையில் தேங்காய் பால் வைத்து செய்யும் ஆடிப்பால் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தேங்காய் துருவல் - 2 கப்
    பொடித்த வெல்லம் - 1 கப்
    ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    தேங்காய் துருவலை அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும். மூன்றுமுறை பிழிந்து பால் எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

    மூன்றாவதாக எடுத்த பாலுடன் வெல்லத்தை சேர்த்து வாணலியில் ஊற்றி கொதிக்கவிடவும். வெல்லம் நன்கு கரைந்ததும் இறக்கி வடிகட்டிக்கொள்ளவும்.

    வடிகட்டிய பாலுடன் இரண்டாவது முறை பிழிந்த பாலை சேர்த்து கொதிக்கவிடவும். அது கொதிக்க தொடங்கியதும் முதலில் பிழிந்த தேங்காய் பாலை ஊற்றி கொதிக்கவிடுங்கள். அது கொதிக்க தொடங்கியதும் ஏலக்காய் தூளை சேர்த்து இறக்கி, பருகலாம்.

    சத்தான ஆடிப்பால் ரெடி/

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்க விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும் மற்ற முதலீடுகளை விட தங்கத்தில் முதலீடு செய்வதில் வேறு சில நன்மைகளும் இருக்கிறது.
    கடந்த 6 மாதத்திற்கு முன்னால் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் தற்போது நல்ல லாபத்தை அடைந்துள்ளனர். இப்போது பலரின் கேள்வி தொடர்ந்து தங்க விலை உயர்ந்து கொண்டிருக்குமா? என்பதுதான். வணிகர்கள் தற்போதைய சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வது லாபம் தரும் என்று சொல்லுகின்றனர்.

    அதிகம்பேர் தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்க விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும் மற்ற முதலீடுகளை விட தங்கத்தில் முதலீடு செய்வதில் வேறு சில நன்மைகளும் இருக்கிறது. அதாவது மற்ற முதலீடுகள் என்பது நம் பணம் முதலீடாக மட்டும் இருக்கும். சந்தைக்கு ஏற்ப நமது முதலீடு லாபம் கொடுக்கவும் அல்லது லாபம் கிடைக்காமலும் போகலாம். மற்றவகை முதலீடுகளில் நாம் முதலீடு செய்த பணம் முதலீடாக மட்டும்தான் இருக்கும். அதைப் அனுபவிக்க முடியாது. ஆனால் தங்க நகைகள் வாங்கி வைப்போம் என்றால் விலை ஏறும்போது நம்முடைய முதலீட்டின் மதிப்பு கூடுகின்றது. அதே நேரத்தில் நாம் விரும்பும் போதெல்லாம் நம்முடைய தங்க நகைகளை அணிந்து மகிழவும் செய்யலாம்.

    கடந்த பல வருடங்களில் தங்க நகை பெரிய அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது இல்லை. இதுகூட தங்க நகைகளில் முதலீடு செய்பவர்களை ஊக்குவிக்கும் காரணியாக உள்ளது.

    மற்ற முதலீட்டை விட தங்கத்தில் முதலீடு செய்வதை மக்கள் விரும்புவது, கையில் தங்கம் இருப்பது, பணம் கையில் இருப்பது போன்றதாகும் என்பதால். இன்னும் சொல்லப்போனால் கரன்சி நோட்டுகளை விட தங்கம் கையில் இருப்பது பலவகையில் பாதுகாப்பானது என மக்கள் நம்புகின்றனர்.

    முன்பு தங்க நகை வாங்கும்போது செய்கூலி சேதாரம் என்று அதிக அளவிற்கு பணம் செலவாகும். தற்போது இவை பெரிய அளவிற்கு குறைந்துவிட்டன. ஒரு சில நுணுக்கமான வேலைப்பாடுகளை உடைய பாரம்பரிய தங்க நகைகளில் மட்டும்தான் சற்றே அதிகமான சேதாரம் மதிப்பிடப்படுகிறது. மேலும் நவீன டிசைன்களில் பலவகையான தங்க ஆபரணங்கள் நாளுக்கு நாள் மக்களை கவரும் வண்ணம் சந்தையில் அறிமுகமாகின்றன இவையும் தங்க நகை வாங்க மக்களை தூண்டுகின்றது.

    மேலும் தங்க நகை கையிருப்பில் உள்ள போது நமக்கு அவசர பண தேவை ஏற்பட்டால் வங்கிகளில் தங்க நகை பெயரில் அடமானம் வைத்து கடன் பெற முடியும். அதிகமான தேவை உள்ளதென்றால் தங்க நகைகளை அன்றைய தங்கத்தின் விலையில் சுலபமாக விற்று பணம் பெற முடியும்.

    இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது தங்கத்தில் முதலீடு செய்வது எப்போதுமே தங்கமான முதலீடுதான்.
    சில பெண்களுக்கு குழந்தையின்மை என்பது இயல்பானதாக இருக்கும். எனினும் தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம்.
    உடல் பருமன் என்ற சொல், நம் உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சத்து சேர்ந்திருக்கிறது என்பதை காட்டுகிறது. உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேர்வதற்கு சோம்பல், தவறான உணவு பழக்கம் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. அதே நேரத்தில் தைராய்டு பிரச்சினையும் ஒரு காரணம் என்று பரவலாக சொல்லப்படுகிறது. உண்மையில் தைராய்டு குறைபாடு உள்ளவர்களின் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது இல்லை. ஆனால், நீர் அதிகமாகச் சேர்கிறது. அந்த நீர்தான் உடலை பருமனானது போல் காட்டுகிறது.

    தைராய்டு பிரச்சினைக்காக தைராக்சின் சிகிச்சையை தொடங்கியதும், உடலில் இருந்து நீர் வேகமாக வெளியேறும். சராசரியாக 10 லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டால், உடல் எடையில் 10 கிலோ அளவுக்கு குறையும். எனவே, உடல் பருமனுக்கு தைராய்டு மட்டுமே காரணம் என்று நினைப்பது தவறு. அதே நேரத்தில் கொழுப்புச் சத்து காரணமாக உடல் பருமன் ஏற்பட்டவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருக்கும்.

    அவர்களுக்கு தைராய்டு உள்ளதாக நினைத்து தைராக்சின் உட்பட மருந்துகளை கொடுத்து உடல் எடையைக் குறைக்க முயல்வது தவறான மருத்துவ முறையாகும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதேபோல் குழந்தையின்மைக்கும் தைராய்டு காரணமாக சொல்லப்படுகிறது. சில பெண்களுக்கு குழந்தையின்மை என்பது இயல்பானதாக இருக்கும். எனினும் தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம்.

    தைராய்டு மிகுதியாகவோ, குறைவாகவோ அல்லது தைராய்டு எதிர் அணுக்களால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கி இந்த பிரச்சினையை சரிசெய்து விடலாம். அவர்கள் தாய்மை அடையவும் முடியும். இதற்கு மாறாக சில பெண்களுக்கு உடல்நல குறைப்பாட்டால் மகப்பேறின்மை பிரச்சினை இருக்கும். இதுபோன்ற பெண்களுக்கு தைராய்டு சிகிச்சை செய்வதில் பலனில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
    ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும் நோய் தாலசீமியா. முகத்தில் எலும்பு வளர்ச்சி குறைபாடு, அதீத சோர்வு, உடல் வளர்ச்சியின்மை, மூச்சு விடுவதில் சிரமம், மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகள் தென்படும்.
    ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும் நோய் தாலசீமியா. ரத்தத்தின் சிவப்பணுக்களில் இருக்கும் ஹீமோகுளோபின் என்னும் புரதம்தான் உடலின் பல பகுதிகளுக்கும் ஆக்சிஜனை கொண்டு செல்லும் முக்கியமான வேலையை செய்கிறது. அதன்மூலம்தான் நமக்கு சக்தி கிடைக்கிறது. ரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்களின் அளவு குறையும்போது, அது ரத்த சோகையை ஏற்படுத்தும். உடல் பலவீனம் அடையும். தாலசீமியா நோய் 2 வகைகளில் மனித உடலை தாக்குகிறது. ஹீமோகுளோபின் 2 வகையான புரதத்தை கொண்டுள்ளது. அவை, ஆல்பாகுளோபின், பீட்டா குளோபின். குறைபாடு உள்ள மரபணுவின் காரணமாக ஆல்பா குளோபின் புரதம் முழுமையாக இல்லாவிட்டாலோ அல்லது மாறுபட்டு இருந்தாலோ, அது ஆல்பா தாலசீமியா. மரபணு குறைபாட்டால், பீட்டா குளோபின் புரதம் இல்லாத நிலை அல்லது மாறுபட்ட நிலை காணப்பட்டால், அது பீட்டா தாலசீமியா.

    தென்கிழக்கு ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், சீனா, ஆப்பிரிக்க கண்டத்தில் சில பகுதிகளில் வாழும் மக்களிடம் ஆல்பா தாலசீமியா நோயின் பாதிப்புகள் அதிகம் காணப்படுகிறது. பீட்டா தாலசீமியா நோய் மத்திய தரைக்கடல் நாடுகளில் அதிகம் பேரை பாதித்திருக்கிறது. சீனர்கள், ஆசியர்கள், ஆப்பிரிக்க, அமெரிக்கர்களை குறைந்த அளவில் தாக்கியிருக்கிறது. ஒவ்வொரு தாலசீமியா வகையும் தாலசீமியா மேஜர், மைனர் எனும் இரு பிரிவுகளை கொண்டிருக்கிறது.

    பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய், தந்தை ஆகிய இருவரிடமும் குறைபாடுள்ள மரபணு காணப்பட்டால், அந்த குழந்தைக்கு தாலசீமியா மேஜர் என்று அர்த்தம். குறைபாடுள்ள மரபணு தாய் அல்லது தந்தை யாராவது ஒருவரிடம் இருந்து குழந்தைக்கு சென்றிருந்தால், அந்த குழந்தைக்கு தாலசீமியா மைனர் என்று அர்த்தம். சில நேரம் பெற்றோரிடமும் இத்தகைய குறைபாடுள்ள மரபணு இல்லாமல், குழந்தைக்கு வரும் சந்தர்ப்பங்களும் உண்டு. ஆல்பா தாலசீமியா மேஜர், பிறக்கும் குழந்தைகளையும், பிரசவமடையாத குழந்தைகளையும் பெரும்பாலும் தாக்குகிறது.

    மேலும் முகத்தில் எலும்பு வளர்ச்சி குறைபாடு, அதீத சோர்வு, உடல் வளர்ச்சியின்மை, மூச்சு விடுவதில் சிரமம், மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகள் தென்படும். தாலசீமியா மைனர் வகை நோயாளிகளுக்கு சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படும். வேறு அறிகுறிகள் தென்படாது. ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். நுண்ணோக்கி வழியாக சிவப்பணுக்களை ஆராய்ந்து சிவப்பணுவின் வடிவம், தன்மை மாறியிருக்கிறதா என்பதை கண்டறிவார்கள். ஹீமோகுளோபின் எலக்ட்ரோபோரசிஸ் பரிசோதனையின் மூலம் மரபணுவின் வடிவம் மாறியுள்ளதா என்று கண்டறியப்படும். மியூடேஷனல்அனாலசிஸ் மூலம் ஆல்பா தாலசீமியா பாதிப்பு கண்டறியப்படுகிறது.

    வாழ்நாள் முழுவதும் தாலசீமியா நோயாளிகளுக்கு ரத்த மாற்று சிகிச்சையை தொடர வேண்டும். அதீதமான இரும்புச்சத்து உடலில் தங்காமல் பார்த்துக்கொள்வதும் அவசியம். தற்போது இதற்கு மாத்திரைகள் கிடைக்கின்றன. தாலசீமியா மைனர் உள்ள ஆண், பெண்ணுக்கு தாலசீமியா மேஜர் பாதிப்புள்ள குழந்தை பிறப்பதற்கு 25 சதவீத வாய்ப்புகள் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். உங்களின் ரத்தச் சம்பந்தங்களுக்கு இந்த நோயின் தாக்குதல் இருந்தால் நீங்களும் தாலசீமியா பரிசோதனையை செய்துகொள்ள வேண்டியது அவசியம், என்கின்றார்கள் மருத்துவ நிபுணர்கள்.
    சில வியாதிகள் அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றுகின்றன. அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும் நோய்கள் குறித்தும், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் பார்ப்போம்.
    சளி, இருமல், காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை கொரோனா நோயின் ஆரம்பகட்ட அறிகுறிகளாக இருக்கின்றன. இந்த அறிகுறிகள் இல்லாமலேயே சிலர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதுபோலவே சில வியாதிகள் அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றுகின்றன. ஆரம்பக்கட்டத்தில் கண்டறிய முடியாமல் இறுதிகட்டத்திற்கு முந்தைய நிலையில்தான் நோயின் வீரியம் வெளிப்பட தொடங்கும். எந்தவியாதியாக இருந்தாலும் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்தால்தான் தீவிர சிகிச்சை அளித்து குணப்படுத்தமுடியும். இல்லாவிட்டால் கடும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டால்தான் நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும் நோய்கள் குறித்தும், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் பார்ப்போம்.

    நீரிழிவு நோய்: ‘சைலெண்ட் கில்லர்’ எனப்படும் அமைதியான கொலையாளியாக நீரிழிவு நோய் கருதப்படுகிறது. ஏனெனில் நீரிழிவு நோய் ஒருவருக்கு இருப்பதை சுலபமாக கண்டறிவது கடினம். அதிலும் டைப்-2 நீரிழிவு பாதிப்பு என்றால் ஆரம்பகட்டத்தில் எந்த அறிகுறிகளும் வெளிப்படாது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நீரிழிவு நோய் இருப்பதற்கான அறிகுறிகளை கண்டறியமுடியாமலே போய்விடும். இறுதிகட்டத்தில் அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். சில சமயங்களில் அந்த அறிகுறிகளும் தெளிவற்றதாக அமைந்துவிடும்.

    கணைய புற்றுநோய்: புற்றுநோயின் கொடிய வடிவங்களில் ஒன்றாக கணைய புற்றுநோய் அமைந்திருக்கிறது. இறுதிகட்டத்தை நெருங்கும் வரை எந்த அறிகுறிகளும் தெரியாது. அதன் பிறகுதான் மஞ்சள் காமாலை, வயிற்றின் மேல்பகுதியில் வலி, எதிர்பாராதவிதமாக அதிக எடை இழப்பு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். அப்போதும் உடனே சிகிச்சையை மேற்கொள்ளாவிட்டால் கடும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.

    ஆஸ்டியோபோரோசிஸ்: எலும்பு முறிவு ஏற்படுவதற்கான ஆபத்தை உருவாக்கும். ஆனால் ஆரம்பக்கட்டத்தில் எந்த அறிகுறிகளும் தெரியாது. எலும்புகளில் லேசாக பாதிப்பை ஏற்படுத்தி படிப்படியாக எலும்புகள் செயல்பட முடியாத நிலைக்கு ஆளாகிவிடும். நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றமுடியாத நிலைக்கு ஆளாக நேரும்.

    மாரடைப்பு: சிலருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்படும். இதயத்தின் ஒரு பகுதிக்கு இரத்தம் செல்லமுடியாமல் தடைபடும்போது ‘சைலண்ட் ஹார்ட் அட்டாக்’ எனப்படும் மாரடைப்பு ஏற்படும். மாரடைப்பு ஏற்படப்போகிறது என்பதை சம்பந்தப்பட்டவரால் உணரமுடியாது. எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. சாதாரண மார்பு வலி, மயக்கம், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் எப்போதாவது வெளிப்படக்கூடும்.

    சிறுநீரக நோய்கள்: ஆரம்பகால கட்டத்தில் எந்த அறிகுறிகளையும் யூகிக்க முடியாது. பெரும்பாலும் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் சிறுநீரக நோய் பாதிப்புக்கும் ஆளாகுவார்கள். ஆதலால் அவர்கள் ‘யூரின் மைக்ரோ அல்புமின்’ பரிசோதனை மேற்கொள்வது அவசியமானது. அந்த பரிசோதனை முடிவுதான் நோய் பாதிப்பை கண்டறிய உதவும்.

    எச்.ஐ.வி.: ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளும் வெளிப்படாது. நோய் எதிர்ப்பு குறைபாடு தன்மையை உருவாக்கும் வைரஸ் இதற்கு மூலகாரணமாக இருக்கிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு பிறகு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும். ஆனால் பெரும்பாலும் அவை பிற நோய்களுக்கான அறிகுறியாகவே அமைந்துவிடும். அதனால் எளிதில் கண்டறிவது கடினம்.
    ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் மக்கள் கொரோனா வைரஸ் குறித்து அதிகம் தேடிய விஷயங்களை கூகுள் இணையதளம் பட்டியலிட்டு இருக்கிறது.
    உலகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்டிருக்கும் கொரோனா வைரஸ் மக்களின் இயல்பு வாழ்க்கையை நிலைகுலைய செய்துவிட்டது. பெரும்பாலானவர்களிடம் கொரோனா வைரஸ் குறித்த அச்சமும் அதிகரித்து விட்டது. கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை நாவலை படிப்பதுபோல் இணையதளங்களில் தேடிப்பிடித்து வாசித்து இருக் கிறார்கள். ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் மக்கள் கொரோனா வைரஸ் குறித்து அதிகம் தேடிய விஷயங்களை கூகுள் இணையதளம் பட்டியலிட்டு இருக்கிறது.

    உலக அளவில் கொரோனா வைரஸ் என்ற வார்த்தை 50 லட்சத்துக்கும் அதிகமான தடவை பதிவிடப்பட்டு தேடப்பட்டிருக்கிறது. கோவிட்-19 வைரஸ் என்று குறிப்பிட்டும் தேடிப்பிடித்து படித் திருக்கிறார்கள்.

    கொரோனா வைரஸ் டிப்ஸ் என்று பதிவிட்டு 1 கோடிக்கும் அதிகமான தடவை தேடியிருக்கிறார்கள். கொரோனா பாதிப்புக்கு ஆளாகாமல் இருப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்களையும், பாதுகாப்பு வழிமுறை களையும் தேடிப்பிடித்து படித்திருக்கிறார்கள்.

    ஊரடங்கு உத்தரவு எப்போது நீக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் இணையதளத்தில் தேடலாக தொடர்ந்திருக்கிறது. வீட்டை விட்டு எப்போது வெளியே செல்லப்போகிறோம் என்ற கவலையும் அந்த தேடலில் வெளிப்பட்டிருக்கிறது. ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? நீக்கப்படுமா? என்பதை அறிந்து கொள்வதற்கான தேடல் 10 லட்சத்தை தாண்டியிருக்கிறது.

    கொரோனாவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்தலாம் என்ற செய்தி உலா வந்ததால் அதை பற்றிய தகவல்களையும் 6 லட்சம் தடவை தேடி இருக்கிறார்கள்.

    ஒருவருக்கு இருமலோ, தும்மலோ இருந்தால் அவரை கொரோனா வைரஸ் தாக்கி இருக்குமோ? என்ற பயமும், பீதியும் நிறைய பேரிடம் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகுபவர்களுக்கு என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்பதை அறிந்து கொள்ளும் விதமான தேடல் ஐந்து லட்சத்தை கடந்திருக்கிறது.

    கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள் மற்றும் பாதிப்புக்கு ஆளானவர்கள் பற்றிய விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக மத்திய அரசு ‘ஆரோக்கிய சேது’ என்ற அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதுபற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கான தேடல் 3 லட்சத்தை தாண்டி இருக்கிறது.

    கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதும் அதுபற்றிய தேடலும் அதிகரித்திருக்கிறது. பாதிப்புக்குள்ளானவர்கள், இறந்தவர்கள் பற்றிய எண்ணிக்கையை நாடுகள் வாரியாக, மாநிலங்கள், மாவட்டங்கள் வாரியாக தெரிந்து கொள்ளவும் இணைய தேடலை தொடர்ந்திருக் கிறார்கள். ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே நடமாடி போலீசில் சிக்கி வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள் பற்றிய தகவல்களையும் தேடி இருக்கிறார்கள். இது தொடர்பான தேடல் ஒன்றரை லட்சத்தை தாண்டி இருக்கிறது.

    கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அளிக்கப்படும் பிளாஸ்மா சிகிச்சை பற்றிய முழுமையான தகவல்களை அறிந்து கொள்ளும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தேடல் ஒரு லட்சத்தை தாண்டியிருக்கிறது.

    அவசர தேவைக்காக வெளியூர் பயணிப்பதற்கு வழங்கப்படும் வாகன அனுமதி சீட்டு பற்றியும் 50 ஆயிரம் தேடல்கள் பதிவாகி இருக்கின்றன.

    கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறதா? என்ற தேடலும் 50 ஆயிஇரத்தை எட்டியிருக்கிறது.
    ×