என் மலர்
ஆரோக்கியம்
ஓட்ஸ் கொண்டு பல வகையான ஹெல்தி உணவுகளை சமைக்கலாம். அந்த வகையில் இந்த அடை உங்களுக்கு பிடித்த உணவாக இருக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 1 கப்
வெள்ளரிக்காய் - சிறியது ஒன்று
குடை மிளகாய் - 1
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
காஷ்மீர் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 7
சீரகம் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி - 1/2 துண்டு
தக்காளி - 1/2 பாதி
கேரட் - 1
ஓமம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகுப் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
ஓட்ஸை 15 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
ஓட்ஸ் ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு அரைத்த விழுதை சேர்த்துக்கொள்ளுங்கள்.
குடை மிளகாய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, வெள்ளரிக்காய், குடைமிளகாய், கேரட், சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரைத்த ஓட்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் குடை மிளகாய், பச்சை மிளகாய், சீரகம், ஓமம், இஞ்சி, கொத்தமல்லி, வெள்ளரிக்காய், குடைமிளகாய், கேரட், சின்ன வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு, காஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அடுத்ததாக மாவை அடை போல் தட்டி எடுத்து தோசைக்கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி சுட்டு எடுங்கள். இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
அவ்வளவுதான் ஓட்ஸ் மசாலா அடை தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உடல் வலி, முதுகு வலியை தவிர்ப்பதற்காக தற்போது எலும்பியல் மெத்தைகள், உடற்கூறியல் மெத்தைகள் எனப்படும் ஆர்த்தோபெடிக் மெத்தைகள் விற்பனைக்கு வருகின்றன.
ஆரோக்கியமான மனிதனுக்கு நல்ல தூக்கம் அவசியம். சிலருக்கு வெறும் தரையில் படுத்ததும் தூங்கி விடுவார்கள். ஆனால் பலருக்கு அப்படியில்லை. ஏனென்றால் தரையின் வெப்பநிலை நம் தூக்கத்தை தடுத்து விடக்கூடும். அதற்காக தான் பாய், தரைவிரிப்பு பயன்படுத்தினோம். பிறகு வேறு சில காரணத்திற்காக கட்டில், மெத்தையை பயன்படுத்த துவங்கினோம். மெத்தையில் தூங்கினால் அருமையான தூக்கம் வரும். ஆனாலும் சிலருக்கு அதனால் உடல் வலி, முதுகு வலி போன்றவை வருகின்றன. அதனை தவிர்ப்பதற்காக தற்போது எலும்பியல் மெத்தைகள், உடற்கூறியல் மெத்தைகள் எனப்படும் ஆர்த்தோபெடிக் மெத்தைகள் விற்பனைக்கு வருகின்றன.
ஆர்த்தோபெடிக் மெத்தைகள் கண்டுபிடிக்க 1950 களிலிருந்து பல பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தன. இதன் மூலம் முதுகுவலியில் துன்பப்படும், மூட்டுவலி உள்ளவர்களுக்கு பயன்படக்கூடிய மெத்தைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவைகள் மனிதனின் எலும்புகள், முதுகு வடம், மூட்டுக்கள் மற்றும் தசையமைப்புக்கு தக்க அளவு தாங்கும் திறனை பெற்றிருக்கின்றன.
எலும்பியல் மெத்தைகளில் படுக்கும்போது உடல் முழுவதும் தேவையான அழுத்தத்தை பகிர்ந்தளிக்கின்றன. இதனால் படுக்கும் விதத்தை சரி செய்வதோடு மரத்துப் போதல், முதுகு வலி போன்றவை தடுக்கப்படுகின்றன. இதற்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மெத்தை பரப்பு உதவுகின்றது. பல காலமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு பல அடுக்கு கொண்ட மெத்தைகள் முதுகு வலி தொடர்பான பிரச்சினைகள் வராத வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த வகையில் ஆரோக்கியமான தூக்கத்தை கொடுக்கக்கூடிய ‘நினைவக விளைவு’ (Memory Foam) கொண்ட மெத்தைகள் சந்தையில் வந்துள்ளன. இவை ஆச்சரியத்தக்க அளவில் தூங்கும் நபரின் வளைவுகளுக்கும், எடைக்கும் ஏற்றவாறு தகவமைத்துக் கொள்கிறது. அதோடு அந்நபரின் உடல் வெப்பநிலையை சீராக்கவும் உதவுகிறது. இது நான்கு வித அடுக்குகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கும் குறிப்பிட்ட சிறப்பியல்பை கொண்டுள்ளன. முதல் அடுக்கு திறந்த செல் அமைப்புடைய நுரைப்பஞ்சால் ஆனது. இதன் மூலம் காற்று சென்று வருவதால் குளிர்ந்த வெப்பநிலையை நடைமுறைப்படுத்துகிறது.
இரண்டாம் அடுக்கு கலப்பு நுரைபஞ்சினால் செய்யப்பட்டது. இதனால் உடலின் எடைக்கு தக்க அழுத்தத்தை ஈடுசெய்ய முடிகிறது. எப்படி திரும்பி படுத்தாலும் அழுத்தம் சீராகி கழுத்து, முதுகு, மற்றும் இடுப்பு பகுதிகள் பாதிக்காதவாறு உதவுகிறது. மூன்றாவதாக மெமரி போம் அடுக்கு இருக்கின்றது. இது உடலின் அமைப்புக்கு ஏற்ப தகவமைப்பு பெற்று உடலில் மரத்துப் போதல், வலி ஏற்படாதவாறு செய்கின்றது. நான்காவதாக அதிக அடர்த்தியுடைய ஃபோம் அடுக்கு உள்ளது. இது ஒட்டுமொத்த மெத்தையின் கட்மைப்பை விளங்க செய்கின்றது.
எலும்பியல் மெமரி ஃபோம் மெத்தை ஒரு இரட்டை பக்க மெத்தை ஆகும். அதாவது ஒரு புறம் மென்மையாகவும், மறு புறம் உறுதியாகவும் இருக்கும். உறங்குபவரின் விருப்பத்திற்கு தக்க ஏதாவது ஒரு பக்கம் திரும்பி படுத்துக் கொள்ளலாம். மேலும் மெத்தை உரையை நீக்கி துவைத்த பின் மீண்டும் மாட்டுவதற்கு தக்க ஜிப் வசதியுடன் உள்ளது. இதனால், மெத்தையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க முடியும். இத்தகைய ஆர்த்தோபிடிக் மெத்தைகள் சுத்தமாகவும், சுகமாகவும் உறங்குவதற்கு ஏற்ற மெத்தைகள் என்பதில் மிகையேதும் இல்லை.
வீடுகளில் சமையலறை அலமாரிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்து பராமரித்தோமானால் அவை பல ஆண்டுகள் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் நீண்டு உழைக்கும்.
பெரும்பாலான வீடுகளில் சமையலறை அலமாரிகள் நவீன கேபினட்டுகளுடன் உபயோகிப்பதற்கு வசதியாகவும், பொருள்களை அடுக்கி வைக்க நேர்த்தியாகவும் பொருத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும். அதேபோல் அலமாரிகளும் பிவிசி அல்லது பிளைவுட்டால் கதவுகள் பொருத்தப்பட்டு பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும். இவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்து பராமரித்தோமானால் அவை பல ஆண்டுகள் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் நீண்டு உழைக்கும்.
பராமரிப்பு முறைகள்:-
* பிவிசியினால் செய்யப்பட்ட அலமாரிகளைச் சுத்தம் செய்ய டிஷ்யு காகிதங்கள் அல்லது பழைய துணிகளை உபயோகிக்கலாம். எண்ணெய் பிசுக்குப் பிடித்த பிவிசி கதவுகளை சுத்தம் செய்ய முதலில் டிஷ்யு காகிதத்தில் இரண்டு மூன்று சொட்டுகள் ஏதாவது ஒரு எண்ணெயை விட்டு அதைக்கொண்டு அந்தக் கதவுகளை சிறிது அழுத்தம் கொடுத்து தேய்க்கும் பொழுது அதில் படிந்திருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
* அதேபோல் கதவு இடுக்குகளில் படிந்திருக்கும் பிசுபிசுப்பை நீக்க முனை மழுங்கிய கத்தியில் எண்ணெய் சொட்டுகள் விட்ட டிஷ்யு காகிதத்தை சுற்றி அதை கதவிடுக்கில் விட்டு சுத்தம் செய்யலாம். எண்ணெய் பிசுக்கை நீக்க எண்ணெய் விட்டே சுத்தம் செய்வதா என்று நீங்கள் வியக்கலாம். இதனால் எந்த ஒரு கெடுதலும் இல்லை. முயற்சி செய்து பாருங்கள்.
மாடுலர் கிச்சன் டிராலிகளை சுத்தம் செய்வது கடினம் என்று நினைப்பவர்களுக்கு அதை எளிதாக சுத்தம் செய்வதற்கு இதோ சில யோசனைகள்:-
* மாடுலர் கிச்சன் டிராலிகளை வெளியே இழுக்கும் பொழுது அதன் இரண்டு பக்கவாட்டிலும் கிளிப்புகள் இருப்பதைப் பார்க்க முடியும். அந்தக் கிளிப்புகளை ஒருபுறம் கீழேயும், மறுபுறம் மேலே தூக்கி விட்டு டிராலிகளை எளிதாக தனியே கழற்ற முடியும்.
கழற்றிய டிராலிகளை சிறிய பிரஷ்களைக் கொண்டு அதில் படிந்திருக்கும் தூசுகளை அகற்றலாம். அதேபோல் டிராலிகளைப் பொருத்தும் மெட்டல் சட்டங்களையும் இந்த பிரஷ்களைக் கொண்டு சுத்தப்படுத்தலாம். அதன் பின்னர் இவற்றிற்கென்றே பிரத்தியேகமாகத் தடவக்கூடிய எண்ணெய்கள் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி சிறிய பெயிண்ட் அடிக்கும் பிரஷ் கொண்டு அந்த மெட்டல் சட்டங்களில் தடவலாம். டர்பன்டைன் எண்ணெயானது இந்த மாடுலர் கிச்சன் டிராலிகளுக்கும் அதன் மெட்டல் பட்டைகளுக்கும் தடவ மிகவும் சரியான தேர்வாகும்.
* அந்த எண்ணெயை தடவிய சிறிது நேரத்திற்குப்பின் பழைய காட்டன் துணி கொண்டு அவற்றை துடைத்து எடுக்கவும்.
* அதன் பின்னர் பஞ்சில் தேங்காய் எண்ணையை நனைத்து அந்தச் சட்டங்களின் மேல் தடவவும். இவ்வாறு தடவுவதன் மூலம் டிராலியைப் பொருத்தி அவற்றை வெளியே இழுத்து மூடுவது எந்தவிதக் கஷ்டமும் இல்லாமல் எளிதான செயலாகி விடுகின்றன.
* வினிகர், பேக்கிங் சோடா, பாத்திரம் கழுவும் திரவம் மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். இந்த திரவத்தை ஸ்பிரே செய்து கேபினட், டிராலிகளின் கம்பிகள் போன்றவற்றை மிகவும் அருமையாக மென்மையான ஸ்க்ரப் கொண்டு சுத்தப்படுத்த முடியும்.
* சுத்தம் செய்த டிராலிகளை நன்கு ஈரம் பிழியப்பட்ட துணிகளைக்கொண்டு துடைத்து எடுக்கவும். பின்பு டிராலிகளை ஈரம் போக உலர்த்தவும்.
* டிராலிகளை எடுத்துப் பொருத்துவதற்கு முன் அந்த அலமாரிகளின் அடியில் பாச்சை உருண்டைகள் அல்லது கரப்பான் பூச்சி, எறும்பு, பல்லி போன்றவை வராமல் இருக்க கடைகளில் விற்கப்படும் பசை அல்லது மருந்துகளை லேசாகத் தடவிய பின்பு இந்த டிராலிகளை எடுத்துப் பொருத்தவும்.
* இதுபோன்று வருடம் இரண்டு அல்லது மூன்று முறை சுத்தம் செய்வதால் இவற்றை வெளியே இழுத்து மூடுவது எளிதாவதோடு துருப்பிடிப்பதும் தவிர்க்கப்படுகின்றது. மேலும் அதிக செலவு செய்து பொருத்தப்படும் இதுபோன்ற பொருள்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்க முடியாது. சரியாகச் சுத்தம் செய்து முறையாகப் பராமரித்தால் அவை நீண்ட நாள் உழைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
* சில வீடுகளில் சமையலறை கேபினட்டுகள் உறுதியான மரம் அல்லது பிளைவுட்டுகளினால் செய்யப்பட்டிருக்கும். இவற்றை சுத்தம் செய்ய இரும்பு நார் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தக்கூடாது. அதேபோல் ரசாயனம் அதிகம் கலந்துள்ள திரவங்களை உபயோகித்துச் சுத்தம் செய்வதும் கூடாது. பேக்கிங் சோடாவுடன் தேங்காய் எண்ணெய் அல்லது வேறு ஏதாவது எண்ணெயைக் கலந்து பசை போல் செய்து கொள்ளவும். அந்தப் பசையை மரக்கேபினட்டுகளின் மீது தடவி பத்து நிமிடம் ஊறவைக்கவும். மென்மையான பிரஷ் அல்லது ஸ்க்ரப் கொண்டு அவற்றைத் தேய்த்து பின்னர் மென்மையான காட்டன் துணி கொண்டு அவற்றைத் துடைத்து எடுத்தால் அவற்றின் மீது படிந்திருக்கும் கறைகள் மட்டுமல்லாது பிசுபிசுப்பும் போயே போச்!
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது சில நிலைகளில் அமர்ந்து கொடுப்பது குழந்தைக்கும்,உங்களுக்கும் சௌகரியமாக இருப்பது அவசியம் அதோடு பால் வேகமாக வரவும் ஏதுவாக இருக்கும்.
குழந்தையின் ஆரோக்கியத்திற்கான முதல் உணவு தாய்ப்பால். அதற்கு ஈடு இணையான ஊட்டச்சத்து எதுவுமில்லை எனலாம். எனவே அதை மேலோட்டமாக அணுகுவதை விட உள்ளார்ந்த உணர்வுடன் விரும்பி கொடுக்கும்போது அதன் ஆரோக்கியம் மேலும் கூடுகிறது.
அப்படிக் கொடுக்கும்போது சில நிலைகளில் அமர்ந்து கொடுப்பது குழந்தைக்கும்,உங்களுக்கும் சௌகரியமாக இருப்பது அவசியம் அதோடு பால் வேகமாக வரவும் ஏதுவாக இருக்கும். அவை என்னென்ன பார்க்கலாம்.
தொட்டில் பிடி நிலை : இது பொதுவாக குழந்தைக்கு முதன் முதலில் பால் கொடுக்கும்போது துவங்கும் நிலைதான். இரு கைகளால் தொட்டிலில் படுக்க வைப்பது போல் பிடித்துக்கொண்டு பால் தருவார்கள். இது ஆரம்பத்தில் சற்று கடினமாக இருக்கும். பழகிவிட்டால் இந்த நிலைதான் சௌகரியம் என நினைப்பீர்கள்.
தொட்டில் பிடி நிலை : இது பொதுவாக குழந்தைக்கு முதன் முதலில் பால் கொடுக்கும்போது துவங்கும் நிலைதான். இரு கைகளால் தொட்டிலில் படுக்க வைப்பது போல் பிடித்துக்கொண்டு பால் தருவார்கள். இது ஆரம்பத்தில் சற்று கடினமாக இருக்கும். பழகிவிட்டால் இந்த நிலைதான் சௌகரியம் என நினைப்பீர்கள்.
குறுக்கு தொட்டில் பிடி : இது குழந்தையை குறுக்காக ஒரு கையில் பிடித்தபடி கொடுக்கும் நிலை. சிறு குழந்தையாக 6 மாதக் குழந்தையாக இருக்கும் வரை இப்படி கொடுப்பது சௌகரியமாக இருக்கும். பிறந்த குழந்தைக்கு முலைகளைப் பிடித்துக் குடிக்க நல்ல நிலை.
கால்பந்து நிலை : கேட்பதற்கு சற்று வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் அதிகபட்சமாக இரட்டை குழந்தைகள் பிறந்தால் ஒரே நேரத்தில் பால் கொடுக்க இந்த நிலை சிறந்தது. அதேபோல் பெரிய மார்பகங்கள் கொண்டவர்களுக்கும் வசதியானது. மற்றவர்களுக்கும் இந்த நிலை சௌகரியமாக இருந்தால் கொடுக்கலாம்.
பக்கவாட்டில் ஒருபுறமாக சாய்ந்த நிலை : படுத்தபடி ஒரு புறமாக திரும்பி பால் கொடுப்பதுதான். இரவில் ஆரம்ப காலகட்டத்தில் பாலுக்காக அடிக்கடி அழும் குழந்தைக்கு அமர்ந்துகொண்டு பால் கொடுக்க முடியவில்லை எனில் இந்த நிலையில் படுத்துக் கொண்டு கொடுக்கலாம். அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும் காயம் ஆறும் வரை இந்த நிலை சௌகரியமாக இருக்கும்..
பெற்றோருக்கு மிகவும் சவாலான பணி ஆரோக்கியமான உணவு மற்றும் நல்ல பழக்க வழக்கங்களை குழந்தைகளுக்கு பழக்கவைப்பதே ஆகும். இதற்கு நீங்கள் செய்யக்கூடிய வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோர்களும் தினம் தினம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு. குழந்தை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு என்பது ஒவ்வொரு பெற்றோர்களின் வாழ்க்கையிலும் முக்கியமான கட்டமாகும்.
குழந்தைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை பழக்கங்களை வளர்ப்பது முக்கியம். உண்மையில் பெற்றோருக்கு மிகவும் சவாலான பணி ஆரோக்கியமான உணவு மற்றும் நல்ல பழக்க வழக்கங்களை குழந்தைகளுக்கு பழக்கவைப்பதே ஆகும். இதற்கு நீங்கள் செய்யக்கூடிய வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
பழங்கள், காய்கறிகள், ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து போன்றவை நம் உடல் நலத்திற்கு முக்கியமானவை. உதாரணமாக, ப்ரோக்கோலி, பச்சை பீன்ஸ், கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு, தக்காளி, கீரை மற்றும் வெள்ளரிகள் மற்றும் பீச், சர்க்கரை, பேரிக்காய், ஆப்பிள் போன்ற பழங்கள் உடலுக்கு நல்லது. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், அழுக்கு அல்லது இரசாயனங்களை அகற்றுவதற்கு இந்த பழங்கள் உதவும். உருளை மற்றும் சேனைக்கிழங்கு, உடல் எடை அதிகரிக்க உதவும். நேந்திரம் பழம், மலை வாழை, கூழாஞ்செண்டு மட்டி கோழிக்கூடு வகை வாழைப்பழங்கள் குழைந்தைகளுக்கு நல்லது. நம் ஊர் சிவப்பு கொய்யா, மாதுளை, ஆரஞ்சு, பப்பாளி, திராட்சை மற்றும் மாம்பழம் போன்றவை மிகவும் நல்லது.
நீங்கள் உணவை சமைக்கும்போது, சமையலுக்கான பொருட்களை குழந்தைகளுடன் ஒப்படைக்கவும், அவர்களுக்கு ஒரு மேசையை அமைக்கவும், அதில் சமையலுக்கு தேவையான எளிய வேலைகளை செய்து தருமாறு அவர்களை பணிக்கவும். அதோடுகூட பிற ஒத்த விஷயங்களுக்கும் உதவுமாறு உங்கள் குழந்தைகளிடம் கேளுங்கள். உங்கள் குழந்தைகள் அவர்கள் தயாரிக்க உதவிய உணவை சாப்பிடுவார்கள் அப்போது அவர்களை உற்சாகமூட்டி அவர்கள் உதவிய உணவின் நன்மைகளை பற்றி குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள்.
பொதுவாக குழந்தைகளுக்கு சாதம் கொடுக்கும் போது, அவர்களுக்கு முதலில் அளவாக உணவைப் பரிமாறவும். இதனால் உணவு வீணாவதைத் தடுக்கலாம். சில குழந்தைகள் உணவு உண்ணும் போது அடம்பிடிப்பார்கள். அவ்வாறு குழந்தைகள் அடம் பிடிக்காமல் இருக்க வேண்டுமெனில், குழந்தை உண்ணும் போது, குழந்தையின் நண்பனை அழைத்து உடன் இருக்க வையுங்கள். அவர்கள் இருக்கும் போது, குழந்தைகளும் சமத்தாக அவர்களுடன் உணவை உண்ண வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு பிடித்த உணவில் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவைக் கொடுங்கள். உதாரணமாக, நீங்கள் பர்கரில் உருளைக்கிழங்கு சோயாவை சேர்த்து ஆரோக்கியமான உணவாக மாற்றலாம். மேலும் உலர்ந்த பழங்கள் மற்றும் விதைகளை பாலில் சேர்த்து அவர்களுக்கு பிடித்த சாக்லேட் பவுடருடன் சேர்த்து அளியுங்கள்.
குழந்தைக்கு பிடித்த உணவு வகைகளில் குறைந்தது ஒரு வகையையாவது குழந்தையின் தினசரி உணவில் சேருங்கள். ஒரு புதிய பிளானை உருவாக்குங்கள். உணவு மேஜை மேல் இருக்கும் அனைத்து உணவையும் சிறிதளவு ருசித்துப் பார்க்க வேண்டும் என்பது தான் அந்த பிளானாக இருக்க வேண்டும். இதனால் உங்கள் குழந்தை அனைத்தையும் ருசித்து பார்க்கும். ஆனால் குழந்தை உண்ணும் அளவை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.
ஆரோக்கியமான உணவுகள் என்பதில் குறிப்பாக பழங்கள், ஆக்கத்திறனை உண்டாக்கும் சாலட்கள் மற்றும் உப்பு சேர்க்காத கடலை பருப்புகள் போன்றவைகளை மட்டுமே வீட்டிலே செய்து அவர்களுக்கு கொடுங்கள். அவித்த சோளம், பாப் கார்ன், காய்கறிகள் சேர்த்த பன்னீர் சாண்ட்விச், கொண்டைக்கடலை, மற்றும் மோர் போன்ற குறைவான கலோரிகள் நிறைந்த உணவு வகைகளை தெரிந்து வைத்திருங்கள். இதனால் குழந்தையின் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உயர் ஃபைபர் ரொட்டி, அரிசி, கோதுமை, கஸ்கஸ், பாஸ்தா, சோளம், கோதுமை அப்பங்கள் மற்றும் குறைந்த சர்க்கரை தானியங்கள் ஆகியவற்றை குழந்தைகளுக்கு கொடுங்கள். உணவு நேரத்திற்கு முன் குழந்தைகளுக்கு பசி எடுத்தால், ஜங்க் உணவுகளை கொடுப்பதற்கு பதிலாக, பழங்கள் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.
உணவை நன்றாக மென்று, உமிழ்நீருடன் சேர்த்துச் சாப்பிடுவதால் அவை மிக எளிதாகச் செரிமானமாகும். உணவுக்கும், குணத்துக்கும் நெருங்கிய நேரடி தொடர்பு உண்டு. இயற்கை உணவுகளால் உடல் ஆரோக்கியம் மட்டுமன்றி மனமும் அமைதி பெறும். அதிக சத்துகள் கொண்ட இயற்கை உணவுகளை குழந்தைகளுக்குக் கொடுப்பதால், அவர்களுக்கு ஞாபகசக்தி அதிகரிப்பதுடன் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க துணைபுரியும். பள்ளி செல்லும் பல குழந்தைகள் உண்ணும் உணவில் போதுமான அளவு சத்துகள் இல்லாததால் பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுகின்றனர். எனவே, பள்ளிக் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் சத்தான இயற்கை உணவுகள் இடம்பெறச் செய்தால் நிச்சயம் அவர்களது உடல் நலம் சீராகும். நீங்கள் அளிக்கும் உணவை அவர்கள் விரும்பி உண்பார்கள்.
பச்சை பயறு அற்புதமான உணவாகிறது. பச்சை பயறுவை பயன்படுத்தி நோயுற்றுவர்களுக்கு பலம் தரும் கஞ்சி தயாரிக்கலாம். இந்த கஞ்சி எளிதாக ஜீரணம் ஆகும்.
தேவையான பொருட்கள்:
பச்சை பயறு - கால் கப்
உப்பு - ஒரு சிட்டிகை,
பால் - 1 கப்.
செய்முறை:
பச்சை பயறுவை நன்றாக வறுத்து பொடி செய்து எடுக்கவும்.
இதில் நீர்விட்டு கரைத்து வடிகட்டவும்.
இந்த தண்ணீரை கொதிக்க வைத்து, உப்பு சேர்க்கவும்.
கஞ்சி பதம் வந்தபின் பால் சேர்க்கவும்.
இந்த பச்சை பயறு பால் கஞ்சியை குடித்து வர நோயுற்றவர்களின் உடல் பலம் பெறும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
நீரிழிவு பாதிப்புக்கு உள்ளானவர்கள், நீரிழிவு நோயைத் தடுக்க நினைப்பவர்கள் இருதரப்பினருமே புகைப்பதை கைவிடவும், குறைக்கவும் முயற்சிக்க வேண்டும்.
புகைபிடிக்காதவர்களை ஒப்பிடும் போது, புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு 45 சதவீத வாய்ப்புகள் அதிகம்.
புகைப்பழக்கம் உள்ளவர்களின் வயிற்றில் கொழுப்பு, குறிப்பாக ஆண்களுக்கு சேரும். அதனால் இயற்கையான இன்சுலின் சுரப்பு குறையும். பெண்கள் கர்ப்பக்காலத்திலும், பேறுகாலத்திற்கு பிறகும் நிகோடின் உடலில் சேர்வதால் பி-செல் குறைபாடும் நீரிழிவும் ஏற்படுகிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பல கோடி பேர் புகைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
உலகிலேயே இந்தியா புகையிலை பொருட்களை தயாரிப்பதிலும், பயன்படுத்துவதிலும் 2-ம் இடத்தில் உள்ளது. 40 சதவீதம் பேர் இந்தியாவில் பீடி புகைக்கிறார்கள். புகைபிடிக்கும் நீரிழிவு நோயாளியின் இதயம் மற்றும் தமனியின் ஆரோக்கியம், மற்ற புகைபிடிப்பவரை விட இரண்டு மடங்கு அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது. நீரிழிவு பாதிப்புக்கு உள்ளானவர்கள், நீரிழிவு நோயைத் தடுக்க நினைப்பவர்கள் இருதரப்பினருமே புகைப்பதை கைவிடவும், குறைக்கவும் முயற்சிக்க வேண்டும்.
புகை பிடிக்கும் ஒருநபர் தாமாகவே முன்வந்து புகைபிடிப்பதை நிறுத்துவதே அதில் இருந்து விடுபட முதல் முயற்சியாக இருக்கும்.
முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதங்களுக்கும் கொடுக்க வேண்டும். கீழ்வரும் சில உதவிக்குறிப்புகளைப் பின்பற்றி, குளிர்கால மாதங்களில் உங்கள் கால்களை மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் வைத்து கொள்ளுங்கள்.
பொதுவாக, சருமம் வறண்டு போகும் போது பாத வெடிப்புகள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக குளிர்காலத்தில் சருமம் அதிகம் வறண்டு போகும். அதனால் பாதங்களில் வெடிப்புகள் உண்டாகும். இதனை பொதுவாக நாம் ‘பித்த வெடிப்பு’ என்று நடைமுறையில் சொல்வோம்.
குளிர்காலத்தில் ஏற்படும் பாதவெடிப்புகள் மேலும் பல உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு மூல காரணமாக அமைந்துவிடுகிறது. இதற்கு சரியான முறையில் ஊட்டமளிக்காவிட்டால், விரிசல், இரத்தப்போக்கு ஆகியவையும் ஏற்படுகிறது. எனவே முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதங்களுக்கும் கொடுக்க வேண்டும். கீழ்வரும் சில உதவிக்குறிப்புகளைப் பின்பற்றி, குளிர்கால மாதங்களில் உங்கள் கால்களை மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் வைத்து கொள்ளுங்கள்.
1. இரவு நேரங்களில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீர் எடுத்துக்கொண்டு அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சேர்த்து அந்த நீரில் கால்களை 10 நிமிடங்களுக்கு வைத்த பிறகு நீரில் இருந்து கால்களை வெளியே எடுத்து துடைக்க வேண்டும். இதேபோல் சுடுநீரில் ஷாம்பு கலந்தும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் பாதங்கள் மற்றும் விரலிடுக்கில் உள்ள அழுக்குகள் வெளியேறும். இதனால் பாதங்கள் மென்மையாகும்.
2. முகத்திற்கு மாய்ஸ்சுரைசர் கிரீம் இருப்பது போல, கடினமாக தோள்களை கொண்ட பாதங்களுக்கு சில கிரீம்கள் கடைகளில் கிடைக்கும். அதனை வாங்கி தினமும் உங்கள் கால்களில் தடவிக் கொள்ளலாம். இதனால் உங்கள் கால்கள் மிருதுவாகவும் ஈர்ப்பத்துடனும் இருக்கும். மாய்ஸ்சுரைசர்களை பயன்படுத்தும் போது சருமம் சற்று ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். எனவே குளித்த உடன் ஈரப்பதம் இருக்கும் போதே மாய்ச்சரைசரை தடவ வேண்டும். அப்போது தான் இது தோலின் அடி ஆழம் வரை சென்று நல்ல பலனைக் கொடுக்கும்.
3. ஒரு மசாஜ் உலர்ந்த மற்றும் விரிசல் உள்ள கால்களுக்கு மட்டுமல்லாமல், உங்கள் கால்களில் இருக்கும் அனைத்து சோர்வுகளும் நீங்க உதவும். தேங்காய் எண்ணெய், நெய், பாதாம் எண்ணெய் அல்லது எள் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு மசாஜ் செய்யலாம். இதனால் உங்கள் கால்கள் ஈரப்பதமாகவும், ரத்தஓட்டம் சீராகவும் இருக்கும்.
4. மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை படிக்கல்லால் (Pumice stone) பாதங்களின் ஓரம் மற்றும் அடிப்பகுதியில் தேய்த்து மசாஜ் செய்வதால், ரத்த ஓட்டம் சீராவதோடு வெடிப்புகளும் நீங்கும். மசாஜ் செய்த பின்பு வெதுவெதுப்பான நீரில் பாதங்களை கழுவிக் கொள்ள வேண்டும்.
5. வாசலின் அல்லது பெட்ரோலியம் ஜெல்லியை தூங்குவதற்கு முன்பாக பாதங்களில் தடவி வந்தால் பித்த வெடிப்பு பிரச்னையிலிருந்து விடுபடலாம். தினமும் பாதங்களில் மாய்ச்சரைசிங் க்ரீம்களை தடவிக் கொள்ளும்போது சருமத்தின் ஈரப்பதம் காக்கப்படுவதால் வெடிப்புகள் உண்டாகாது.
கொரோனா தாக்கத்தினால் இந்தியர்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஏதாவது சிக்கல் வருமா?, வேலைவாய்ப்பு கூடுமா? அல்லது குறையுமா?, புதுவிதமான வேலைவாய்ப்புகள் உண்டாகுமா? போன்ற பல கேள்விகளை விடையை அறிந்து கொள்ளலாம்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல லட்சம் மக்கள் வேலை இழந்துள்ளனர். கொரோனா வைரசிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டும் உலக நாடுகள், சீர்குலைந்திருக்கும் பொருளாதாரத்தையும் சீரமைக்க முயன்று வருகின்றன. இந்நிலையில் கொரோனா தாக்கத்தினால் இந்தியர்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஏதாவது சிக்கல் வருமா?, வேலைவாய்ப்பு கூடுமா? அல்லது குறையுமா?, புதுவிதமான வேலைவாய்ப்புகள் உண்டாகுமா? போன்ற பல கேள்விகளை திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷிடம் முன்வைத்தோம்.
இவர் எத்தியோப்பியா நாட்டில் பேராசிரியராக பணியாற்றியபடி, நட்பு ரீதியாக பல தமிழர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தவர். அதுவே தொடர்கதையாகி போக, அரசு வழிகாட்டுதலின்படி ‘ரசா’ என்ற பெயரில் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் பல தமிழர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்திருக்கிறார். அந்த அனுபவமும், பேராசிரியர் திறனும்தான் வெளிநாட்டு வேலைவாய்ப்பு சம்பந்தமான சந்தேகங்களுடன், ராஜேஷை சந்திக்க வைத்தது. திண்டுக்கல் அலுவலகத்தில் இருந்தவரிடம் பேசினோம். அவை இதோ....
கொரோனா பாதிப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பில் சிக்கலை உருவாக்குமா?
இல்லை. கொரோனாவுக்கு முன்பாக வெளிநாட்டு வேலைக்கான உடல்தகுதியாக, மஞ்சள் காய்ச்சல் (Yellow fever) சோதனை முன்வைக்கப்பட்டது. கொரோனாவிற்கு பின், முழு உடல் பரிசோதனையும், வைரஸ் தாக்குதல் சோதனைகளும் கட்டாயமாக்கப்பட வாய்ப்புள்ளது. மற்றபடி விசா, தங்குமிடம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் எந்தவித பாதிப்பும் இருக்காது.
எந்தெந்த நாடுகளில் என்ன மாதிரியான வேலைவாய்ப்புகள் இருக்கும்?
நாடுகளின் வளத்தை பொறுத்து, வேலைவாய்ப்புகள் மாறுபடும். ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மென்பொறியாளர், ஆராய்ச்சியாளர், பேராசிரியர் போன்ற வேலைவாய்ப்புகள் இந்தியர்களுக்கு பிரகாசமாக இருக்கும். எத்தியோப்பியா நாட்டில் கடந்த 65 வருடங்களாக இந்திய பேராசிரியர்களுக்கு அதீத முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. எத்தியோப்பியாவின் பெரும்பாலான கல்லூரிகளில் இந்திய பேராசிரியர்களே பணியாற்றுகிறார்கள்.
நைஜீரியாவில் பெட்ரோலிய நிறுவனங்கள் அதிகம் என்பதால், அதுசார்ந்த வேலைகளுக்கு இந்தியர்கள் பயன்படுத்தப்படுவர். கென்யாவில் காகித உற்பத்தி, காகித அச்சு போன்ற வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கும். ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டுமானம் தொடர்பான வேலைவாய்ப்புகளும், தூய்மை பணிகள் சம்பந்தமான வேலைகளும் அதிகமாக இருக்கும். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் முடிவெட்டுவதில் தொடங்கி, தூய்மை பணி கள் வரை எல்லாமே இந்தியர்களின் கைவண்ணமாகவே இருக்கும்.
கொரோனாவினால் வெளிநாடுகளில் புதிய வேலைவாய்ப்புகள் பெருகுமா?
நிச்சயமாக. வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள், கிருமி நாசினி இயந்திரங்களை இயக்குபவர்கள் என வேலைவாய்ப்புகளை கொரோனா உருவாக்கி உள்ளது. இதுபோன்ற பணிகளுக்கு உலகளவில் தேவை இருக்கும். இதனால் கூடுதலான இந்தியர்கள், வெளிநாடுகளை நோக்கி படையெடுப்பர்.
எப்போது வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கும்?
2021-ம் ஆண்டின் பிற்பகுதியில், நிறைய வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பிருக்கிறது. கொரோனா அச்சத்தினால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பியவர்களும், அவர்களோடு புதிய நபர்களும் வெளிநாடு செல்ல அதீத வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் உலக நாடுகள் பாதி வேலையாட்களை கொண்டே இயங்கி வருகிறது. நிலைமை சீரடையும் பட்சத்தில் 50 சதவீத பணியாளர்கள் 100 சதவீதமாக உயர்த்தப்பட்டு, வேலைக்கு அழைக்கப்படுவர். அதனால் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பெருகும்.
தொழிற்பயிற்சிகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்குமா?
தொழிற்பயிற்சிகளுக்கு என்றுமே வெளிநாடுகளில் வரவேற்பு அதிகம். குறிப்பாக உற்பத்தி துறை சம்பந்தமான தொழில்பயிற்சிகளுக்கு அதீத வரவேற்பு உண்டு.
வாழைப்பழத்தில் 90 கலோரியை தவிர, வைட்டமின்கள், தாது உப்புக்கள் இதில் நிறைவாக உள்ளன. அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது, வாழைப்பழம். 100 கிராம் பழத்தில் 90 கலோரியை இது தருகிறது. தவிர, வைட்டமின்கள், தாது உப்புக்கள் இதில் நிறைவாக உள்ளன. வாழையில் உள்ள ‘பிரக்டோஸ்’ போன்ற எளிய சர்க்கரை, உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது. விளையாட்டு வீரர்கள், தடகள வீரர்கள் இதை தினமும் எடுத்துக்கொள்ளும்போது இயற்கையான ‘உடனடி எனர்ஜி’ கிடைக்கும். உடல் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தினசரி வாழைப்பழம் கொடுப்பது நல்லது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.
இதில் உள்ள வைட்டமின் பி-6, ரத்த சோகை போன்ற குறைபாடுகள் நெருங்காமல் பார்த்துக்கொள்ளும். இதய ரத்தக் குழாய் பாதிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும்.
தாது உப்புக்களைப் பொறுத்தவரையில், தாமிரம், மெக்னீசியம், மாங்கனீஸ் ஆகியவை குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளன. மெக்னீசியம் நம் எலும்புகளின் உறுதிக்கும், இதய பாதுகாப்புக்கும் அவசியமான தாது உப்பு.
100 கிராம் வாழைப்பழத்தில் 358 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. இது, இதயத்துடிப்பை கட்டுக்குள் வைத்திருப்பது, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவற்றை செய்கிறது.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை எளிதாக கண்டு பிடித்து விடலாம். சோகமான விஷயத்துக்கு துக்கப்படாமலும், மகிழ்ச்சியான சமாசாரத்துக்கு சந்தோஷமடையாமலும் உர்ரென்று இருப்பார்கள்.
மன அழுத்தத்தை லேசானது, நடுத்தரமானது, தீவிரமானது என மூன்று வகைகளாக பிரித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை எளிதாக கண்டு பிடித்து விடலாம். சோகமான விஷயத்துக்கு துக்கப்படாமலும், மகிழ்ச்சியான சமாசாரத்துக்கு சந்தோஷமடையாமலும் உர்ரென்று இருப்பார்கள்.
இவர்களுக்கு சரியான தூக்கமும் வராது. அப்படியே தூங்கினாலும் அடிக்கடி கண் விழித்து கொள்வார்கள். அதிகாலையில் சீக்கிரமே எழுந்து விடுவார்கள். உறங்கும்போது 2 மணிக்கு ஒரு தடவை விழித்து சுற்றிலும் பார்த்துக் கொள்வார்கள். பசி குறைவாக இருக்கும். உடலில் சோர்வு இருக்கும். 15 சதவீதம் வரை எடை குறையும். தாம்பத்தியத்தில் ஆர்வமில்லாமல் இருப்பார்கள். அனைவரையும் சந்தேகப்படுவார்கள். சந்தேகம் கலந்த பயம் அதிகரிக்கும்.
வண்டியில் பயணிக்கும்போது விபத்து ஆகிவிடுமோ என்றும், வண்டி இடித்து விட்டால் எதிராளி தாக்குவாரோ என்ற பயமும் இவர்களுக்கு ஏற்படும். இவர்களுக்கு மருத்துவ சிகிச்சையுடன் கவுன்சிலிங் தேவை. மூளையின் கட்டமைப்பு செயல்பாடு குறைந்தாலும் மன அழுத்தம் ஏற்படும். உயிருக்கு உயிராய் காதலித்தவர்களை பிரிந்தவர்கள், குடும்ப உறவில் அதிகமாய் அன்பு செலுத்தியவர்களை பிரிந்தவர்கள், இனிமேல் நம் வாழ்க்கை அதோகதிதானோ? என்ற பயத்தில் இருப்பவர்களும் மன அழுத்தத்திற்கு உட்படுவார்கள்.
காதலிக்கும் பெண்ணை, அவளது அப்பா முரட்டுத்தனமாக அடிக்கும்போது பெண்ணின் மனதில் வெறித்தனமான ஆத்திரம் மற்றும் அவமானம் ஏற்படும். இதுவும் நாளடைவில் மன அழுத்த நோயாக மாறும். இதேபோல் வேலை பார்க்கும் இடத்தில் உயரதிகாரிகளால் ஏற்படும் தொந்தரவும் மன அழுத்தமாக மாறும். இதனால் ஞாபகம் குறைந்து அடிக்கடி மறதி ஏற்படும்.
பசியும் இருக்காது. மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நேந்திரம் பழம், பால், பாலில் தயாரான உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும். ஏனென்றால், இந்த உணவுப்பொருட்களில் இருக்கும் சத்துகள் மன அழுத்தத்தை குறைக்கும். வைட்டமின் பி-12, கொழுப்பு நிறைந்த இறைச்சி, கோழிக்கறி, கொழுப்பு நிறைந்த கடல் மீன்கள் சாப்பிடுவது நல்லது.
ஓடியாடி செய்யும் தொழில்களை விட ஒரு இடத்தில் அமர்ந்து செய்யக்கூடிய தொழில்கள் பெண்களுக்கு மிகவும் ஏற்றதாகும். பெண்கள் என்னென்ன தொழில்கள் செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம்.
ஓடியாடி செய்யும் தொழில்களை விட ஒரு இடத்தில் அமர்ந்து செய்யக்கூடிய தொழில்கள் பெண்களுக்கு மிகவும் ஏற்றதாகும். பெண்கள் என்னென்ன தொழில்கள் செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம். அதற்கு முன்பாக பெண்கள் சுய தொழில் தொடங்கும்போது நமது தொழிலுக்கான உற்பத்தி பொருளை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தொழிலகம் அமைக்க வேண்டிய இடம், தொழில் நடத்தும் முறை, தொழிலகத்தில் பதிவு செய்தல், நிதி உதவி, உரிமம், மின் இணைப்பு, நீர்வசதி, எந்திரங்கள் மற்றும் தளவாட சாமான்கள் வாங்குதல், திறமையான பணியாளர்களை அமர்த்துதல் என ஒவ்வொன்றையும் அக்கறையுடன் கவனிக்க வேண்டும்.இனி பெண்களுக்கான தொழில் களை பற்றி பார்ப்போம்...
உணவு பொருட்கள்:- பெண்கள் தாங்களாகவே ஊறுகாய் தயாரிக்கலாம். இதே போல ரொட்டி, ஜாம், மிட்டாய், சிப்ஸ், கேக், சேமியா, அப்பளம், சாம்பார் பொடி, குச்சி ஐஸ், தேங்காய் பப்ஸ், சீவல் ஆகியவற்றை தயாரிக்கும் தொழில்களையும் பெண்கள் குறைந்த முதலீட்டில் செய்யலாம்.
வீட்டு உபயோக பொருட்கள்:- பெண்கள் சோப்பு தயாரிக்கும் தொழில் செய்யலாம். இதேபோல வெள்ளை பினாயில், பல் பொடி, கிளீனிங் பவுடர், ஆயுர் வேதிக் பல்பொடி, வாசனை பத்தி மற்றும் குடை, பாய், பிளாஸ்டிக் பை, வயர் கூடை, கயிறு தயாரிக்கும் தொழில் ஆகியவற்றையும் பெண்கள் செய்யலாம்.
ஸ்டேசனரி பொருட்கள்:- பென்சில், சாக்பீஸ், பால்பென் ரீபிள், மை, நோட்டு லேமினேஷன், காகிதம், நைலான் பிரஷ், எழுது அட்டை, பைல் ஆகியவற்றை தயாரிக்கும் தொழில்களையும் பெண்கள் தயாரிக்கலாம்.
துணி வகைகள்:- பெண்கள், குழந்தைகளுக்கான உடைகள் தயாரிக்கலாம். டெய்லரிங் தொழில் செய்யலாம். துணியில் ஸ்கிரீன் பிரிண்டிங், எம்ப்ராய்டரி, பித்தான், ஊக்கு, தலைமுடி கிளிப், ரப்பர் பேண்ட் ஆகியவை தயாரிக்கலாம். இந்த தொழில்களை செய்ய ஆலோசனை பெறவும், இதுபோன்ற தேவைகளுக்காக மத்திய-மாநில அரசுகள் தொழில் அமைச்சகம் மூலம் பயிற்சியும் வழங்கி வருகிறது.






