என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    திருமண வாழ்க்கையில் இணைவதற்கு முன்னால் ஆணும்-பெண்ணும் என்னென்ன மாதிரியான பொருத்தங்கள் எல்லாம் பார்க்கவேண்டும் தெரியுமா?
    திருமண வாழ்க்கையில் இணைவதற்கு முன்னால் ஆணும்-பெண்ணும் என்னென்ன மாதிரியான பொருத்தங்கள் எல்லாம் பார்க்கவேண்டும் தெரியுமா?

    * உடல் நலம் மிக முக்கியம்! ஆரோக்கியமான உடல் இருந்தால்தான் தாம்பத்யம் சிறக்கும். நிரந்தரமான நோயாளியை மணம் செய்துகொண்டு வாழ்நாள் முழுவதும் சேவை வேண்டுமானால் செய்யலாம். குடும்பம் நடத்த முடி யாது. அதனால் ஆண்-பெண் இருவரும் நல்ல உடல் மற்றும் மனநலம் கொண்டவராக இருக்க வேண்டும்.

    * கண்களையும், கருத்தையும் கவரும் பொருளைத்தான் எல்லோரும் தேர்வு செய்வார்கள். அதுபோல் உங்கள் கண்களுக்கும், மனதுக்கும் பிடித்தமான நபரைத் தேர்வு செய்யும்போது, உங்களை அறியாமல் அவர் மீது ஈர்ப்பு ஏற்படவேண்டும். அந்த ஈர்ப்பை உருவாக்குவதற்காக திருணத்துக்கு முன்பும் பின்பும் ஆண்- பெண் இருவரும் தங்களை அலங் கரித்துக்கொள்வதில் அக்கறை செலுத்த வேண் டும். அளவான ஒப்பனையுடன் நேர்த்தியாகக் காட்சி அளிக்க வேண்டும். தோற்றம் சரியில்லாவிட்டால் மனதுக்கு சலிப்பு தோன்றிவிடும்.

    * பரபரப்பை உருவாக்குவதற்காக வேண்டுமானால் அறுபதை, இருபது திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால், வாழ்க்கை இனிப்பதற்கு உங்களது துணை, ஏறக்குறைய சமவயது உடையவராக இருக்க வேண்டும். பெண், ஆணைவிட மூன்று முதல் எட்டு வயது வரை இளையவராக இருப்பது ஏற்புடையது. வயது வித்தியாசம் அதிகமாக இருந்தால் அதுவும் வாழ்க்கையில் சலிப்பையே உண்டாக்கும். அதிக வயது இடைவெளி அன்பை குறைத்துவிடும்.

    * ஆண்கள் எப்போதும் அழகான பெண்ணைத்தான் மனைவியாக்கிக்கொள்ள விரும்புவார்கள். அதே சமயம், பெண் நல்ல குணம் கொண்டவளாக இருக்கவேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். பெண்களுக்கும் இதே போன்ற எதிர்பார்ப்புதான் இருக்கும். தனக்குரியவர் நல்ல குணங் களோடு இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது நல்லது. அழகோடு, குணமும் அவசியம்.

    * தொழில், வருமானம் வாழும் இடம், வாழ்க்கைத்தரம் ஆகியவை சமூக அந்தஸ்தை உயர்த்திக்காட்டுபவை. கணவன்-மனைவி இருவரும் இரண்டு விதமான சமூக தளங்களை கொண்டவர்களாக இல்லாமல் இருப்பது நல்லது. இருவருமே உயர்ந்த சமூக நிலையை அடைய முயற்சிப்பவர்களாக இருக்கவேண்டும். வாழ்க் கைக்கு அதுதான் முக்கியம். எளிதாகக் கிடைக்கிறது என்பதற்காக வாழ்க்கைத்தரம் குறைந்த இடத்தில் வாழ்ந்தால், அந்த இடத்துக்கு ஏற்பவே உங்கள் சமூக அந்தஸ்தும் மதிப்பிடப்படும்.

    * உங்கள் வாழ்க்கைத்துணை பொருளாதார விஷயத்தில் மிகவும் கவனம் உள்ளவராக இருக்கவேண்டும். இருவரில் யாரேனும் ஒருவர் ஊதாரித்தனமாக செலவு செய்பவராக இருந்தாலும், குடும்பத்தின் உயர்வு பாதிக்கும். தம்பதியர் ஒருமித்த மனநிலை உள்ளவர்களாக இருந் தால்தான் வாழ்க் கையானது எப்போதும் மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் இருக்கும்.

    * நடைமுறையில் மாற்றத்தக்க முரண்பாடுகள் இருந்தாலும் அதைப் பெரிதுபடுத்தாமல் அப்படியே ஏற்றுக்கொள்கிற பக்குவம் இருவரிடத்திலும் இருக்கவேண்டும். ஆகவே உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும் உங்களோடு பொருந்தி வரக்கூடியவரைத் திருமணம் செய்துகொள்வதே இருவரது வாழ்க்கைக்கும் ஏற்றது.

    * உங்கள் வாழ்க்கைத்துணை தோழமை உணர்வுள்ளவராக இருப்பது அவசியம். இருவரும் உதவும் மனப்பான்மை உள்ளவர்களாக இருப்பதும் நல்லது.

    * அவரவர் அலுவலக வேலைகளுக்காக எட்டு மணிநேரத்தை செலவிடுவதைப்போல், தம்பதியரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள தினமும் குறைந்தது இரண்டு மணிநேரத்தைக் கண்டிப்பாக ஒதுக்கவேண்டும். அப்போதுதான் மனம் விட்டுப்பேசவும், கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் முடியும்.

    * எல்லா சூழலிலும் உங்களோடு மனம்விட்டுப்பேசக்கூடிய துணை அமையவேண்டும். அப்போதுதான், நம்பிக்கையோடு இல்லற பயணத்தை எதிர்கொள்ள முடியும். வெளிப்படையாகப் பேசாதவராக, ரகசியமானவராக இருவரில் யார் இருந்தாலும் வாழ்க்கை முழு வெற்றியடையாது. புதுப்புது பிரச்சினைகள் உருவாகிவிடும்.
    அக்குளில் ஏற்படும் கருமையை போக்குவதற்கு வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தினாலே போதுமானது. எளிமையான முறையில் கருமையை போக்கிவிடலாம்.
    அக்குளில் ஏற்படும் கருமையை போக்குவதற்கு வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தினாலே போதுமானது. எளிமையான முறையில் கருமையை போக்கிவிடலாம்.

    * ஆப்பிள் சிடேர் வினிகர், இறந்த செல்களை அகற்றுவதற்கும், வடுக்களை குறைப்பதற்கும் உதவும். அதில் இருக்கும் ஆஸ்ட்ரிஜெண்ட் மூலக்கூறுகள் சரும துளைகளை அகற்றி கருமையை குறைக்க உதவும். பருத்தி பஞ்சுவில் வினிகரை ஊற்றி அக்குள் பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். நன்றாக உலர்ந்ததும் கழுவிவிடலாம். தினமும் ஒருமுறை தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் கருமை நீங்கிவிடும்.

    * இயற்கையான சன்ஸ்கிரீன் என்று அழைக்கப்படும் கற்றாழை, பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை கொண்டது. கற்றாழையை வெட்டி அதனுள் இருக்கும் கூழை அக்குள் பகுதியில் தடவி, கால் மணி நேரம் உலரவைத்துவிட்டு பின்னர் கழுவிவிடலாம். கடைகளில் வாங்கும் கற்றாழை ஜெல்லையும் பயன்படுத்தலாம். தொடர்ந்து இதனை பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

    * பேக்கிங் சோடா, சரும துளைகளை திறக்கவைத்து கருமையை போக்கச்செய்யும் தன்மை கொண்டது. ஒரு டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், அதே அளவு எலுமிச்சை சாறு கலந்து பசை போல் குழப்பி அக்குள் பகுதியில் தடவ வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவிவிடலாம். வாரத்திற்கு மூன்று, நான்கு முறை செய்து வரலாம்.

    * இரண்டு டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன் அதே அளவு சர்க்கரையை கலந்து அக்குள் பகுதியில் இரண்டு நிமிடங்கள் தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் கால் மணி நேரம் கழித்து நீரில் கழுவிவிடலாம்.

    * வெள்ளரிக்காயின் சாறுவை அக்குள் பகுதியில் இரண்டு நிமிடங்கள் தேய்த்துவிட்டு அது உலர்ந்ததும் தண்ணீரில் கழுவிவிடலாம். தினமும் இவ்வாறு செய்து வந்தால் கருமை குறையத்தொடங்கும்.

    * உருளைக்கிழங்கும் சருமத்தை நிறமாற்றம் செய்யும் தன்மை கொண்டது. அதனை தோலுரித்து விழுதாக அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும். அந்த சாறை அக்குளில் தடவி கால் மணி நேரம் கழித்து கழுவி விடலாம். உருளைக்கிழங்கை வெட்டியும் அக்குளில் தடவி வரலாம்.
    கர்ப்ப காலத்தின் இந்த உணவுமுறைகளை பின்பற்றினால் ஸ்பைனா பிபிடா(Spina bifida), என்கெபலோசீல் போன்ற பிறவி குறைபாடுகளை 70 முதல் 75 சதவீதம் வரை தடுக்கலாம்.
    நிற்பது, நடப்பது, அமர்வது, ஓடுவது என நமது இயக்கத்துக்கு காரணமான ஆணைகளை இடுவது தலைமைச் செயலகமான மூளை. அதை கட்டுப்படுத்தி, செயல்படுத்துவது முதன்மை கம்பித்தடம் போன்ற நமது தண்டுவட நரம்புகளே. மூளை, தண்டுவடம் என்கிற இந்த முக்கிய உறுப்புகள் இரண்டையும் பல அடுக்கு பாதுகாப்புடன் படைத்துள்ளது இயற்கை. மூளைக்கு எப்படி மெனிஞ்சஸ் என்கிற மூன்றடுக்கு பாதுகாப்பு உறையும் அதற்கு மேல் மண்டையோடு என்கிற உறுதியான வளையமும் இருக்கின்றனவோ, அதேபோல் மூளையில் இருந்து வெளிவரும் நரம்பு மண்டலத்துக்கும் மெனிஞ்சியல் உறைகளும் அதற்கு மேல் முதுகுத் தண்டுவட எலும்புகளும் பாதுகாப்பை வழங்குகின்றன.

    அதேபோல் மூளையை கதகதப்பாக வைத்துக்கொள்ள உதவும் சி.எஸ்.எப். என்கிற மூளை தண்டுவட திரவம், தண்டுவட நரம்புகளின் வெப்பத்தைச் சீராக்கி பாதுகாக்கிறது. இவை அனைத்துக்கும் மேலாக, தோல் என்கிற முக்கிய உறுப்பு, வெப்பத்தின் அளவை மாற்றும் குளிர்சாதன பெட்டிபோல் வேலைசெய்வதால்தான், நம்மால் இயங்கவே முடிகிறது. ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் கரு உருவாகும் தொடக்க நாட்களிலேயே, பல்வேறு காரணங்களால் இந்தப் பாதுகாப்பு வளையங்களில் ஒன்றோ இரண்டோ உருவாகாமல் போக நேரிடலாம்.

    இதனால், அந்தக் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் எல்லாச் செயல்பாடுகளுக்கும் மற்றவர்களை சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அடிக்கடி மருத்துவ உதவி பெற வேண்டிய கட்டாயமும், வாழ்நாளின் பெரும் பகுதியை மருத்துவமனைகளில் கழிக்க வேண்டிய சூழலும் உருவாகலாம். இவ்வளவு பிரச்சினைகளை தரக்கூடிய ஸ்பைனா பிபிடா வராமலேயே தடுக்க முடியாதா.

    அதை தடுப்பது மிக எளிது. பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், பருப்பு, கொட்டை வகைகள், சிறுதானியம் போன்றவற்றை உண்ணும்போது இவற்றில் இயற்கையாகவே காணப்படும் போலிக் அமிலம், செல்களின் டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. வளர்ச்சிக்கும், மூளை நரம்புகளின் வளர்ச்சிக்கும் பெருமளவு உதவுகிறது. அத்துடன், ஸ்பைனா பிபிடா, என்கெபலோசீல் போன்ற பிறவி குறைபாடுகளை 70 முதல் 75 சதவீதம் வரை தடுக்கிறது.

    கருவில் வளரும் குழந்தைக்கு நன்மை செய்வது மட்டுமன்றி, கருச்சிதைவையும் குறைப்பிரசவத்தையும் கட்டுப்படுத்தி, தாயின் ரத்த சோகைக்கும் அருமருந்தாவதால் ‘கருவின் தோழி‘ என்று கொண்டாடப்படுகிறது போலிக் அமிலம் என்கிற இந்த எளிய ‘பி‘ விட்டமின். ஆனால், இயற்கை தரும் உணவு வகைகளில் இருக்கும் போலிக் அமிலம், சமைக்கும்போது நீரில் கரைந்து சிதைந்துவிடுவதால், 400 முதல் 600 மெக் போலிக் அமில மாத்திரைகள் கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன. 

    கர்ப்ப காலத்தின் தொடக்க நிலையில் மட்டுமன்றி, கருத்தரிப்பதற்கு முன்பாகவே, ஏன் திருமண வயதை அடையும்போதே பெண்கள் இதை உட்கொள்வது அவசியம். இரும்புச்சத்து போலிக் அமில மாத்திரைகளை கர்ப்பிணிப் பெண்களுக்கும், பருவ வயதை எட்டிய பெண்களுக்கும் அரசு இலவசமாக வழங்கிவருவது இதனால்தான்.
    மைதாவில் செய்த பரோட்டா உடல் நலத்திற்கு தீங்கானது என்பது அறிந்தும் அதனையே மனம் தேடும். இதனால் எந்த தீங்கும் ஏற்படுத்தாத கடலை மாவில் எப்படி பரோட்டா செய்வது என்பதை பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்:

    கடலை மாவு -1 கப் 
    கோதுமை மாவு - அரை கப் 
    மஞ்சள் தூள்- தேவையான அளவு 
    மிளகாய் தூள் - தேவையான அளவு 
    உப்பு - தேவையான அளவு 
    சீரகம் - 1/2 தேக்கரண்டி 
    வெந்தய கீரை - 1 தேக்கரண்டி 
    சீரக விதைகள் - 1/2 தேக்கரண்டி 
    பெருங்காயம் - தேவையான அளவு 

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் கடலை மாவு, தேவையான அளவு பெருங்காயம், உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, எண்ணெய் போன்ற எல்லா பொருள்களையும் சேர்த்து சாப்பத்தி மாவு போல் மிருதுவாக பிசைந்து கொள்ள வேண்டும். 

    பிசைந்த கோதுமை மாவினை உருண்டைகளாக திரட்டி, ரொட்டி போல் தட்டையாக தேய்த்து கொள்ளவும். 

    பிறகு பராத்தாவை சூடான தவாவில்போட்டு இரண்டு பக்கங்களும் பொன்னிறம் ஆகும் வரை வேக வைக்க வேண்டும். 

    சூடாக தயாரான பராத்தாவிற்கு மிகவும் பொருத்தமான தேங்காய் சட்னியுடன் சுவைக்கலாம். 

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை காப்பதற்கு சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    உடலில் முதுகெலும்பின் இருபுறமும் விலா எலும்புக்கூட்டின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகங்கள் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

    முக்கியமாக கழிவுகளை வடிகட்டுதல், ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீங்குதல், அதிகப்படியான நீரை வெளியேற்றுதல், உடலில் பி.எச் அளவு, உப்பு, பொட்டாசியம் அளவுகளை கட்டுப்படுத்துதல், ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்துதல், ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன்களை உருவாக்குதல் என ஏராளமான பணிகளை செய்கின்றன.

    சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வடிகட்டவும், உடல் இயக்கம் சீராக நடைபெற உதவும் ஹார்மோன்களை உருவாக்கவும் முடியும். சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை காப்பதற்கு சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    புகைப்பிடிப்பது உடல் ஆரோக்கியத்தை பல வழிகளில் பாதிப்புக்குள்ளாக்கும். புகைப்பிடிப்பதால் ரத்த நாளங்கள் சேதமடையும். அதனால் உடல் முழுவதும் செல்லும் ரத்த ஓட்டத்தின் வேகம் குறையும். சிறுநீரகங்களும் பாதிப்படையும். சிறுநீரகங்களை பாதுகாக்க, புகைப்பிடிப்பதை விட்டொழிப்பதுதான் நல்லது.

    அதிக உடல் எடை அல்லது உடல் பருமன் கொண்டிருந்தால் சிறுநீரகமும் சேதமடையும். நீரிழிவு நோய், இதய நோய், சிறுநீரக நோய் போன்றவை ஏற்படக்கூடும். குறைவான கலோரி கொண்ட உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு உடற்பயிற்சி செய்துவருவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். சோடியம் குறைவாக இருக்கும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம். ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை கடைப்பிடித்து உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரகத்தின் ஆயுளை அதிகப்படுத்தலாம்.

    சுறுசுறுப்பாக இருப்பது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கிய வாழ்க்கை நடைமுறையை பின்பற்றுவது, நீண்டகால சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கும். வழக்கமாக மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவும். இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

    ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவை கடந்து உயர் ரத்த அழுத்த பிரச்சினை ஏற்பட்டால் அது சிறுநீரகங்களை பாதிக்கும். புகை, மது இந்த இரண்டையும் விட்டொழிப்பது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

    சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள்தான் அதிக அளவில் சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகிறார்கள். உடலில் உள்ள செல்கள் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை பயன்படுத்த முடியாதபோது ரத்தத்தை வடிகட்டுவதற்கு சிறுநீரகங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

    இந்த அதிகப்படியான செயல்பாடு சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும். சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு நீரிழிவு மேலாண்மை மற்றும் ரத்தத்தில் சர்க்கரை கட்டுப்பாடு ஆகியவை மிக முக்கியம். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சிறுநீரகத்தில் இருக்கும் சோடியம் மற்றும் நச்சுகளை அழிக்க உதவும். சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக நோய் அபாயத்தையும் குறைக்கும். தினமும் ஒன்றரை முதல் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது.

    ’ஹெல்த் மிக்ஸ்’ என்று நிறைய சத்து மாவுகள் கடைகளில் கிடைக்கின்றன. பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு காலை உணவாக இதைக் கொடுக்கலாமா? என்ற சந்தேகத்திற்கான விடையை அறிந்து கொள்ளலாம்.
    ஸ்கூல், ஸ்போர்ட்ஸ், டியூஷன் என ஓடிக் கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு எல்லா சத்துகளையும் கொடுக்கக் கூடிய ஒரே பொருள் ஹெல்த் மிக்ஸ்தான். கோதுமை, ராகி, சோளம், கம்பு, வேர்க்கடலை, பருப்பு வகைகள் எல்லாம் தேவையான அளவில் இருப்பதால் பிள்ளைகள் ஹெல்த்தியாக இருப்பார்கள்.

    கொஞ்சம் பால் கலந்து காய்ச்சி, கஞ்சி போல காலையில் கொடுக்கலாம். வெல்லம் கலந்து உருட்டி, லட்டு போல மாலை நேர ஸ்நாக்ஸாகவும் கொடுக்கலாம். மக்காச்சோளத்தில் வைட்டமின்கள், ராகியில் பாஸ்பரஸ், கால்சியம் சத்துகள், பருப்பு வகைகளில் புரோட்டீன் என எல்லாம் கிடைப்பதால் பிரேக்ஃபாஸ்ட்டுக்கு சரியான தேர்வு.

    இத்துடன் முந்திரி, வேர்க்கடலையும் சேர்த்துக் கொண்டால் கொழுப்புச்சத்தும் கிடைக்கும். நல்ல தரமான மிக்ஸை தேர்ந்தெடுத்து வாங்குங்கள். வீட்டில் நாமேகூட செய்து கொள்ளலாம்.

    ஜவ்வரிசி, கொண்டைக்கடலை, வேர்க்கடலை, வறுத்த கடலைப்பருப்பு, சிவப்பரிசி, கோதுமை, கேழ்வரகு, மக்காச்சோளம், கொள்ளு, மொச்சை, கம்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சம அளவில் எடுத்து, வறுத்து, பாதாம், முந்திரி, பிஸ்தா, ஏலக்காய் ஆகியவற்றைப் பொடியாக்கிக் கலந்து வைத்து பயன்படுத்தலாம்.
    நம் உடலுக்குள் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி நம்மை நோயிலிருந்து பாதுகாக்க தினம் தினம் நோய்க்கிருமிகள் உடன் போராடி நம்மை காக்கிறது. நம் நோய் எதிர்ப்பு சக்தி எப்படி செயல்படுகிறது என்பதை முதலில் பார்ப்போம்.
    அன்றாடம் நாம் பலவித செயல்களில் ஈடுபடுகிறோம். நம் உடலுக்குள் நாம் சாப்பிடும் போதும், மூச்சு விடும் போதும், பேசும்போதும் பலவிதமான நோய்க்கிருமிகள் செல்கின்றன. அக்கிருமிகள் எல்லாம் நம் உடலில் நோயை உண்டாக்க தொடங்கினால் நாம் ஒருநாள் கூட நோயின்றி வாழ முடியாது. ஆனால் நம் உடலுக்குள் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி நம்மை நோயிலிருந்து பாதுகாக்க தினம் தினம் நோய்க்கிருமிகள் உடன் போராடி நம்மை காக்கிறது. நம் நோய் எதிர்ப்பு சக்தி எப்படி செயல்படுகிறது என்பதை முதலில் பார்ப்போம்.

    ஒரு நோய்க் கிருமி நம் உடலுக்குள் நுழைந்த உடன் அது ரத்தத்தில் கலந்து நம் உடலின் முக்கிய உறுப்புகளை சென்றடைய முயலும். அப்போது ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் வெள்ளை அணுக்கள் நோய்க்கிருமிகளை இனம் கண்டு கொண்டு, அவற்றின் உருவம், அளவு, எடை, அதன் நச்சுத் தன்மைகள் போன்றவற்றை கணக்கிட்டு நம்முடைய ஈரல் கல்லீரல் மண்ணீரல் போன்றவற்றுடன் சேர்ந்து பல சிறப்பு வெள்ளை அணுக்களை தயாரிக்கின்றன. 

    இந்த எதிர்ப்பு சக்தி வெள்ளையணுக்கள் நோய்க்கிருமிகளை தாக்கி அழிக்கக் கூடிய வல்லமை கொண்டவையாக இருக்கும். இந்த எதிர்ப்பு சக்தி வெள்ளை அணுக்கள் நோய்க் கிருமிகள் அனைத்தையும் தாக்கி அழித்து பின்பு ரத்த ஓட்டத்திலிருந்து அவற்றைப் பிரித்து நிணநீர் ஓட்டத்திற்குள் அனுப்பிவிடும். இறந்த நோய்க்கிருமிகளை நிணநீரோட்டம் நம் உடலிலிருந்து அப்புறப் படுத்தி விடும். இதுவே நம் உடலில் சிறப்பாக இயங்கி வரும் நோய் தடுப்பாற்றல் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி. இவ்வளவு சிறப்பாக இயங்கிவரும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை நாம் பாதுகாத்து வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம் தானே. இந்த நோய் எதிர்ப்பு சக்தியை நாம் எப்படி எல்லாம் பாதுகாக்கலாம் என்று கீழ்வருமாறு பார்ப்போம்.

    உணவு

    நம் உணவு நல்ல ஆரோக்கியமாக இருப்பது அவசியம். உணவில் நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள் , முழு தானியங்கள் பருப்பு வகைகள், பால், முட்டை , தாவர எண்ணெய்கள் போன்றவைகள் அவசியம் இருக்க வேண்டும். விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் பி 6, விட்டமின் ஈ, இரும்புச்சத்து, போலிக் ஆசிட், சிங்க், செலினியம் போன்ற சத்துக்கள் நிறைந்ததாக நம் அன்றாட உணவு இருக்க வேண்டும். உணவை நிதானமாக நன்கு சுவைத்து விரும்பி உண்பது மிகவும் அவசியம். நொறுக்கு தீனிகளை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி செல்களை தயாரிக்க நம் உடலுக்கு பல சிறப்பு புரதங்கள் தேவைப்படுகிறது. இந்த புரதங்களை தயாரிக்க பல நுண் சத்துக்கள் தேவைப்படுகின்றன. அவைகள் நமக்கு ஆரோக்கியமான உணவிலிருந்து தான் கிடைக்கும்.

    உடற்பயிற்சி

    வாரத்தில் 5 நாட்களாவது துரித நடை பயிற்சி, யோகாசனம், உடற்பயிற்சி, துரித ஓட்டம், மெதுவான ஓட்டம், நீச்சல், மற்றும் டென்னிஸ், பேட்மிட்டன் போன்ற விளையாட்டுகளிலும் ஈடுபடுவது நல்லது. விளையாட்டுகளில் ஈடுபடும் போது நம் உடலில் வியர்வை மூலம் தேவையில்லாத நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன, மேலும் இதயம் துரிதமாக இயங்கி ரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. ரத்த ஓட்டம் சிறப்பாக இயங்கினால் மட்டுமே நம் உடலின் நோய் எதிர்ப்பு இயக்கமும் சரியான முறையில் நடக்கும்.

    மது, புகை ஒழித்தல்

    நம் உடலின் முக்கிய உறுப்புகளான கல்லீரல் மண்ணீரல் நுரையீரல் போன்றவற்றை பாதிக்கக்கூடிய மது, புகை பழக்கங்களை முழுமையாக விட்டுவிடுவது நம் உடலின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தக் கூடியது. கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளின் துணையில்லாமல் நம் உடலால் நோயெதிர்ப்பு அணுக்களை தயாரிக்க முடியாது.

    மனநலம்

    மனதில் எதிர்மறை எண்ணங்கள் ஆன கோபம், பயம், பதட்டம் போன்றவை நம் உடலில் தேவையில்லாத உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இந்த ரசாயனங்கள் நம் உடல் ஆரோக்கியமான முறையில் இயங்குவதற்கு தடையாக செயல்படுகின்றன. நோய்க் கிருமிகளை அழிக்க உடல் எதிர்ப்பு சக்தி அணுக்களை உருவாக்கும் செயல்பாட்டிற்கும் இந்த ரசாயனங்கள் மற்றும் ஹார்மோன்கள் தடையாக இருக்கின்றன. 

    எனவே நம் மனதில் எப்போதும் நேர்மறையான எண்ணங்களால் ஆன அன்பு, கருணை, நேசம், பாசம், நன்றி உணர்ச்சி, மன்னிப்பு மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை கொண்டிருப்பது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை நல்ல முறையில் இயக்க உதவும். மன உளைச்சல், மன அழுத்தம் போன்றவை நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை குறைக்கக் கூடியவை. 

    எனவே நம் உறவுகளுடன் விட்டுக்கொடுத்து அனுசரணையாக நடந்து கொள்வதும், பொறாமை வஞ்சம் போன்ற எண்ணங்கள் மனதில் எழாமல் பார்த்துக் கொள்வதும், மனத்திருப்தியுடன் வாழ பழகிக் கொள்வதும் மனதின் ஆரோக்கியத்தை வளர்க்கக் கூடியதாக இருக்கும். இந்த குணங்கள் மனதில் எப்பொழுதும் நேர்மறையான எண்ணங்களும் உற்சாகம் மற்றும் உத்வேகம் கொடுக்கக் கூடியவையாகவும், சுயமதிப்பு சுயமரியாதை மற்றும் சுய அன்பை கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும். இதனால் நம் மனம் ஆரோக்கியமாக இயங்கும். அப்பொழுதுதான் உடலின் செயல்பாடுகளும் சீராகவும் சிறப்பாகவும் இயங்கும். எனவே நம் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் சிறப்பாக இயங்க நம் மனதின் நலமும் முக்கியமானதாகிறது.
    முறையற்ற மாதவிலக்கை சீர்செய்ய கூடியதும், காய்ச்சல் மற்றும் உடல் வலியை போக்கவல்லதும், வயிறு உப்புசத்தை சரிசெய்ய கூடியதுமான அன்னாசி பூவின் நன்மை குறித்து பார்க்கலாம்.
    நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம்.

    அந்தவகையில், முறையற்ற மாதவிலக்கை சீர்செய்ய கூடியதும், காய்ச்சல் மற்றும் உடல் வலியை போக்கவல்லதும், வயிறு உப்புசத்தை சரிசெய்ய கூடியதுமான அன்னாசி பூவின் நன்மை குறித்து பார்க்கலாம்.

    அன்னாசி பூ மணம் தரக்கூடியது. உணவாவது மட்டுமின்றி உன்னதமான மருந்தாக விளங்குகிறது.

    மாதவிலக்கு பிரச்னையை சரிசெய்கிறது.

    மாதவிலக்கை தூண்டி முறைப்படுத்துகிறது.

    தாய்ப்பாலை பெருக்க கூடிய அற்புத சக்தி உடையது.

    அதிக சத்துக்கள் உள்ள இது, புற்றுநோய்களை உண்டாக்கும் நச்சுகளை வெளியேற்றும்.

    செரிமானத்தை தூண்டும். சளி, இருமல் காய்ச்சலை போக்கும் நல் மருந்தாகிறது.

    அன்னாசி பூவை பயன்படுத்தி மாதவிலக்கு பிரச்னையை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    அன்னாசி பூ
    பெருங்காயம்
    பனைவெல்லம்
    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் நீர் விடவும். இதனுடன், ஒரு ஸ்பூன் பனை வெல்லம் சேர்க்கவும். இளம் வறுப்பாக வறுத்து பொடி செய்த அன்னாசி பூ பொடி அரை ஸ்பூன் அளவுக்கு போடவும். கால் ஸ்பூன் பெருங்காயப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். இதை தினமும் காலை வேளையில் எடுத்துவர தடைபட்ட மாதவிலக்கு பிரச்னை சரியாகும். மாதவிலக்கை சீர் செய்கிறது. இளம் தாய்மார்களுக்கு பால் பெருக்கியாக விளங்கிறது.
    குழந்தைகளை நன்கு சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. பெற்றோர்கள் குழந்தைகளின் சுத்தம் பற்றிய ஒருசில அடிப்படைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
    இந்த நவீன உலகத்தில் என்னதான் குழந்தைகளாக இருந்தாலும், சுத்தமாக இருந்தால் தான் அனைவருக்கும் பிடிக்கும். அதனால் தான் குழந்தைகளை நன்கு சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. சில புதிய பெற்றோர்கள் குழந்தைகளை மென்மையாக பட்டுப் போன்று பார்த்துக் கொள்வார்கள்.

    பெற்றோர்கள் குழந்தைகளின் சுத்தம் பற்றிய ஒருசில அடிப்படைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. உதாரணமாக, இந்த காலத்தில் வீட்டிற்கு யாரேனும் வந்தால், அப்போது குழந்தைகளை தூக்கும் போது, குழந்தை அவர்கள் மீது சிறுநீர் கழித்துவிட்டால், பின்னர் மறுமுறை அவர்கள் குழந்தையை தூக்கவே யோசிப்பார்கள். எனவே இந்த மாதிரியான எண்ணம் மற்றவர்களுக்கு வராமலிருக்க, குழந்தைகளுக்கு எப்போதும் டயப்பரை அணிவிக்க வேண்டும்.

    இதுப் போன்ற ஒருசில அடிப்படைகளை அனைத்து பெற்றோர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது அந்த அடிப்படைகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    குழந்தைகளின் கால்கள் மற்றும் கைகளில் உள்ள நகங்களை வெட்டுவது என்பது மிகவும் கடினமான செயல். ஆனால் கடினம் என்று நினைத்துவிட்டு விடாமல், பொறுமையுடன் அவர்களின் கை மற்றும் கால்களில் உள்ள நகங்களை அடிக்கடி வெட்டிவிட வேண்டும்.

    குழந்தைகளுக்கு பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் போதே, அவர்களுக்கு பற்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை துலக்கும் பழக்கத்தை பழக்கிவிட வேண்டும். வேண்டுமெனில் ஆரம்பத்தில் அவர்களுக்கு ‘பேபி மௌத் வாஷ்’ கூட பயன்படுத்தலாம்.

    குழந்தைகளின் முடியானது எப்போதும் ஒரே போன்று இருப்பதில்லை. அவர்கள் செய்யும் சுட்டித்தனத்திற்கு முடி பேய் போன்று வந்துவிடும். ஆகவே அவர்களுக்கு சரியான ஹேர் ஸ்டைலில் கூந்தலை வெட்டி விட்டு, பராமரித்தால், அழகாக இருக்கும்.

    குழந்தை தானே என்று வாரத்திற்கு ஒரு முறை குளிப்பாட்டும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டாம். ஏனெனில் இது குழந்தையின் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. எனவே குளிர்காலமாக இருந்தால், வாரத்திற்கு மூன்று முறையும், கோடை காலமாக இருந்தால், தினமும் குளிப்பாட்ட வேண்டும்.

    குழந்தைகளின் உடலில் இருந்து துர்நாற்றம் வராது என்று நினைக்கிறீர்களா? ஆம். ஆனால் அவர்கள் மீது பால் வாடை வரும். எனவே அவர்கள் பால் குடித்ததும், அவர்களின் வாய், கை போன்றவற்றை கழுவி, பின் பேபி பவுடரை போட்டு விட வேண்டும்.

    குழந்தைகளின் அழகைக் கெடுக்கும் வகையில் இருக்கும் பெரிய உடைகளை அணிவிக்க வேண்டாம். இவை குழந்தைகளின் அழகை கெடுத்துவிடும். எனவே அவர்களுக்கு நல்ல பொருத்தமான, வறட்சியான உடைகளை அணிவிக்க வேண்டும்.

    குழந்தைக்கு கூந்தல் குறைவாகத் தான் உள்ளது என்று அவர்களுக்கு தலை சீவாமல் இருக்க வேண்டாம். தினமும் மறக்காமல் சீவி விட வேண்டும். இதனால் அவர்களுக்கு கூந்தல் நன்கு வளரும்.

    குழந்தைகள் சாப்பிடும் போது அவர்களது கழுத்திற்கு மறக்காமல், துணியை கட்டிவிட்டு, பின் உணவை ஊட்ட வேண்டும். இதனால் அவர்கள் மற்றும் அவர்களது உடை அழுக்காகாமல் தடுக்கலாம்.

    குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் போது மறக்காமல் கால்களுக்கு ஷூக்களை அணிவிக்க வேண்டும். இதனால் அவர்களை எந்த ஒரு கிருமிகளும் தாக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

    குழந்தைகளுக்கு சருமம் மென்மையாக இருக்கும். ஆனால் மென்மையாகத் தானே உள்ளது என்று சாதாரணமாக இருக்கக்கூடாது. அவர்களுக்கு தினமும் பேபி லோசனை உடலில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

    குழந்தைகள் தூங்கும் போதும் அல்லது எங்கேனும் வெளியே செல்லும் போதும் டயப்பரை அணிவித்து அழைத்து செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி யாரேனும் வீட்டிற்கு வந்தாலும், குழந்தைகளுக்கு அணிவித்திருப்பது நல்லது.
    கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. இப்போது கஸ்தூரி மஞ்சளை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
    அழகு, நறுமணம் தரும் பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள், வாசனைப் பொருட்கள், சோப்புகள், தைலங்கள் ஆகியவை தயாரிக்கப்படுவதில் கஸ்தூரி மஞ்சள் முக்கிய இடம் பெறுகின்றது.

    தோல் நோய்கள் தீர கஸ்தூரி மஞ்சள் தூளை வெந்நீரில் குழைத்து மேல் பூச்சாகப் பூசிவர வேண்டும் அல்லது கஸ்தூரி மஞ்சள், துளசி ஆகியவற்றைச் சம அளவாகச் சேர்த்து, அரைத்து, உடலில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும்.

    கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.

    பெண்கள் இந்த மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும். சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால்,  முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வாராமல் தடுக்கும்.

    இந்த மஞ்சளையும். பூலாங்கிழங்கையும் சம அளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். இதனை  தினமும் செய்து வரவேண்டும். மஞ்சள், பயித்தமாவு, தயிரை ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முகம்  பளபளக்க இது ஒரு சிரந்த பேஸ் பேக் ஆகும்.
    சோயா பீன்ஸ், பாசி பயறு ஆகியவற்றில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. பச்சை பயறு, சோயா பீன்ஸ் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் நலம்பெறும்.
    தேவையான பொருள்கள்:

    பச்சரிசி - 1 கப் 
    இட்லி அரிசி - 1 கப் 
    கடலைப்பருப்பு -1/2 கப் 
    துவரம்பருப்பு - 1/2 கப் 
    சோயா பயறு - 1/2 கப் 
    பாசிப்பருப்பு - 3 ஸ்பூன் 
    மிளகாய் வற்றல் - 7 
    பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன் 
    மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன் 
    தேங்காய்த் துருவல் - 1/4 கப் 
    கறிவேப்பிலை - சிறிதளவு 
    எண்ணெய் - தேவையான அளவு 
    உப்பு - தேவையான அளவு.. 

    செய்முறை:

    முதலில் பச்சரிசி, இட்லி அரிசி, து.பருப்பு, க.பருப்பு, பாசி பருப்பு மற்றும் சோயா பயறு ஆகியவை குறிப்பிட்ட அளவில் சுமார் 3 மணி நேரம் ஊற வைக்கவும். 

    பிறகு மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகியவையுடன் ஊறவைத்த அரிசி மற்றும் பருப்புடன் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். 

    அரைத்த மாவுடன் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். 

    பின்னர் அடுப்பில் தோசை கல் வைத்து சூடான பிறகு மாவை அடை போல் தட்டி கொள்ளவும். இருபுறமும் நன்றாக வேக எண்ணெய் ஊற்றி கொள்ளவும். 

    சூடான சோயா பீன்ஸ் பாசிப்பருப்பு அடை தயார்... 

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    லட்சியத்தை அடைவதற்கான முதல் செயல் இலட்சியத்தை நோக்கி செல்வதற்கான பாதையை வகுத்தல் அதாவது சரியான திட்டம் தீட்டுவது, பிறகு முறையான அந்த திட்டத்திற்கு பலன் கிடைக்கும் அளவிற்கு கடுமையாக உழைப்பது.
    நம் எல்லோர் வாழ்க்கையிலும் லட்சியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் நம்மில் வெகு சிலர் மட்டுமே தங்கள் லட்சியத்தை முழுமையாக அடைகின்றனர். காரணம் என்ன? நம்மில் பலருக்கு நம்முடைய லட்சியங்களில் தெளிவில்லை! பலர் பெயரளவில் லட்சியம் வைத்திருப்போம்! ஆனால் அதை அடைய முயற்சி இருக்காது. முயற்சி என்பது என்ன? நீருக்குள் மூழ்கிய அவன் எத்தகைய பிரயத்தனப்பட்டு வெளியே வர முயற்சிப்பான்? அத்தகைய முயற்சி இருந்தால்தான் லட்சியத்தை அடைய முடியும் என்று விவேகானந்தர் கூறுகிறார்.

    உண்மையில் நம்மில் எத்தனை பேர் இப்படிப்பட்ட ஒரு முயற்சியில் ஈடுபடுகிறோம். லட்சியத்தை அடைவதற்கான முதல் செயல் இலட்சியத்தை நோக்கி செல்வதற்கான பாதையை வகுத்தல் அதாவது சரியான திட்டம் தீட்டுவது, பிறகு முறையான அந்த திட்டத்திற்கு பலன் கிடைக்கும் அளவிற்கு கடுமையாக உழைப்பது.

    உண்மையில் சிலர் நன்றாகவே திட்டம் தீட்டுவார்கள். ஆனால் செயல்படுவதில்லை. காரணம் தினப்படி பிரச்சினைகளாலும்அவர்களை அழுத்திக் கொண்டிருக்கும் குடும்ப உறவுகளின் நெருக்கடிகளும் பொருளாதார நெருக்கடிகளும், திட்டத்தை செயல்படும் காலத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே சென்றுவிடும்.

    மேலும் சிலர் திட்டத்தை செயல்படுத்தும்போது வரக்கூடிய பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் துவண்டுபோய் பாதியிலேயே இலட்சியத்தை கைவிடுவது.

    சரி அப்படியென்றால் லட்சியத்தை அடைந்தவர்கள் எல்லாம் எப்படி இருக்கின்றார்கள் என்ற வினா எழுகிறது அல்லவா? உண்மையில் எல்லாவகை நெருக்கடிகளையும் சந்தித்து திட்டத்தை செயல்படுத்தும்போது வருகின்ற தடைகளை தகர்த்துதொடர்ந்து போராடி திரும்பத் திரும்ப தோல்விகளை சந்தித்தும் கூட சோர்ந்து போகாமல்உற்சாகமான மனநிலையில் செயல்களை தொடர்ந்து செய்து கொண்டிருந்தவர்கள்தான் வெற்றிக்கனியை சுவைக்கின்றனர்.

    ஒரு லட்சியத்தை அடையே- வண்டுமென்றால் சரியான திட்டம் மிக அவசியம் என பார்த்தோம். அந்தத் திட்டத்தை செயல்படுத்தும் விதமும் மிக எளிதாக இருந்தால் நம்முடைய லட்சிய பயணம் சுகமாக இருக்கும் அல்லவா.அது பற்றி இக்கட்டுரையில்பார்ப்போம்.

    முதலில் நம்முடைய லட்சியம் எது என்பதை பலமுறை சிந்தித்து ஆராய்ந்து தெளிவாக ஒரு வரியில் எழுதும் அளவிற்கு தீர்மானிக்க வேண்டும்.

    பிறகு இந்த லட்சியம் நம்வாழ்க்கைக்கு ஏன் முக்கியம், இதை நாம் ஏன் அடைய வேண்டும் என ஒரு பக்கத்திற்கு அதைப் பற்றி எழுதுங்கள் ஒருவேளை நீங்கள் எடுத்துக்கொண்ட லட்சியம் உங்கள் வாழ்க்கைக்கு ஏற்றதாக இல்லையா என்பதை இந்த சிந்தனை சீர்படுத்தும்.

    பிறகு உங்கள் லட்சியத்தை மூன்று அல்லது நான்கு பகுதிகளாக பிரியுங்கள் ஒவ்வொன்றையும் எவ்வாறு அடைவது என அதற்கான செயல்களை வரிசையாக எழுதுங்கள். இப்போது உங்கள் லட்சியத்தை எவ்வளவு மாதங்கள் அல்லது வருடங்களில் அடையப் போகிறீர்கள் என்று தெளிவாக வரையறை செய்யுங்கள். ஒவ்வொரு கால அளவிலும் உங்கள் லட்சியத்தில் எவ்வளவு தூரம் நீங்கள் முன்னேறிஇருப்பீர்கள் என்பதை திட்டமிடுங்கள் உதாரணத்திற்கு நீங்கள் ஒரு அழகான பண்ணை வீடு வாங்கப்போகிறீர்கள் என்பது லட்சியமாக இருப்பின் அந்த பண்ணை வீடு எந்த இடத்தில் வாங்கப் போகிறீர்கள், எவ்வளவு ரூபாய்க்கு வாங்க போகிறீர்கள், அந்த பண்ணை வீடு அமைப்பு எப்படி எல்லாம் இருக்கும், அங்கே வீடு கட்ட எவ்வளவு செலவாகும், உங்களிடம் தற்போது எவ்வளவு பணம் உள்ளது, மேற்படி எவ்வளவு பணம் வேண்டும், மேற்படி தேவைப்படும் பணத்தை எவ்வாறு சம்பாதிக்கப் போகிறீர்கள், அதற்கான திட்டம் என்ன, அதை எவ்வளவு காலத்திற்குள் உங்களால் சம்பாதிக்க முடியும், என்பனபோன்று உங்கள் திட்டத்தை தெளிவாக வரையறை செய்யுங்கள்.

    இவ்வாறு உங்கள் திட்டத்தை அடைவதற்கான வழிமுறைகளை வகுத்துக்கொண்ட பின்னால் ஒவ்வொரு நாளும் உங்கள் லட்சியத்தை அடைய என்ன செய்யப்போகிறீர்கள் என சிந்தனை செய்துசிறுசிறு செயல்களாகப் பிரித்து ஒவ்வொரு நாளும் சில குறிப்பிட்ட செயல்களை நீங்கள் தொடர்ந்து உங்கள் லட்சியம் நிறைவேற செய்து கொண்டு வரவேண்டும். இவ்வாறு செய்யும்போது குறிப்பிட்ட வளர்ச்சியை நீங்கள் அடைகிறீர்கள் எனும்போது உங்களையே நீங்கள் பாராட்டி கொள்ளுமாறு உங்களுக்கே சில பரிசுகளை கொடுத்து கொள்ளுங்கள்.

    திட்டத்தின் தடைகள் வரும்போது மாற்று யோசனைகள் உடன் புதிய திட்டங்களை உருவாக்குங்கள் முன்பிருந்த குறைகளை நீக்கி புதிய வழிகளை ஆராயுங்கள் இவ்வாறு செய்யும்போது சோர்வடையாமல் இருக்க இந்த லட்சியத்தை அடைந்தால் என் வாழ்க்கை எந்த அளவிற்கு மேம்படும் என்பதைப்பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள். அந்தகட்டுரையை அவ்வப்போது படித்து திருத்துங்கள். திரும்பத் திரும்ப உங்கள் லட்சியம் நீங்கள் அடையும்போது உங்கள் வாழ்க்கையில் கிடைக்கும் உயர்வை பற்றி உங்கள் சிந்தனை உங்கள் மனதில் எப்போதும் இருக்கட்டும். இவ்வாறு லட்சியத்தை நோக்கி பயணிக்கும்போது உங்கள் உடல் நிலை மனநிலை எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம். மிக முக்கியமான செய்தி என்னவென்றால் நீங்கள் எந்த மாதிரியான லட்சியத்தை அடைய விரும்புகிறீர்களோ அதேபோன்ற லட்சியங்களை உங்களுக்கு முன்னால் அடைந்தவர்களின் வாழ்க்கையை அவர்கள்கையாண்ட வழிமுறைகளை கூர்ந்து கவனித்து அவற்றிலிருந்து உங்களுக்கு தேவைப்படும் கருத்துக்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

    மேற்படி செயல்களை செய்துவரும்போது உங்களை அறியாமல் மிக இயல்பாக நாம் லட்சியத்தை நோக்கி கணிசமான தூரம் நெருங்கி வந்திருப்பதை உணர முடியும். ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் மிகப் பெரியக ல்விக்கூடங்களையும் பல புகழ் பெற்றதொழில் நிறுவனங்களையும் வெற்றிகரமாக ஆரம்பித்து சாதனை சிகரத்தில் நின்றார் அப்போதுஅவரிடம் நீங்கள் இந்த நிலைக்கு எப்படி வந்தீர்கள் என்ற கேள்வி கேட்டபோது அவர் சொன்ன பதில் என்முன்னால் நிறைய வாய்ப்புகள் தொடர் சங்கிலிபோல் சென்று கொண்டே இருக்கிறது. நான் அவைகளை என்னால் முடிந்த அளவிற்கு பயன்படுத்திக் கொள்கிறேன் அவ்வளவுதான். பல ஆண்டுகள் கழித்து நான் என்னையே திரும்பிப்பார்த்தபோது இந்த பெரிய மாடமாளிகை கூட கோபுரங்கள் உடைய நிறுவனங்களுக்கு சொந்தக்காரனாக இருந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது என்றார்.

    எனவே நாம் தெளிவாக சிந்தித்து முறையாக திட்டமிட்டு கடினமாக உழைத்தால் நம் முன்னாலும் வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கும் அதை சரியாக உபயோகப்படுத்திக் கொண்டால் நாமும் சாதனையாளர்கள் தான்!!
    ×