search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருமா?
    X
    புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருமா?

    புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருமா?

    நீரிழிவு பாதிப்புக்கு உள்ளானவர்கள், நீரிழிவு நோயைத் தடுக்க நினைப்பவர்கள் இருதரப்பினருமே புகைப்பதை கைவிடவும், குறைக்கவும் முயற்சிக்க வேண்டும்.
    புகைபிடிக்காதவர்களை ஒப்பிடும் போது, புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு 45 சதவீத வாய்ப்புகள் அதிகம்.

    புகைப்பழக்கம் உள்ளவர்களின் வயிற்றில் கொழுப்பு, குறிப்பாக ஆண்களுக்கு சேரும். அதனால் இயற்கையான இன்சுலின் சுரப்பு குறையும். பெண்கள் கர்ப்பக்காலத்திலும், பேறுகாலத்திற்கு பிறகும் நிகோடின் உடலில் சேர்வதால் பி-செல் குறைபாடும் நீரிழிவும் ஏற்படுகிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பல கோடி பேர் புகைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

    உலகிலேயே இந்தியா புகையிலை பொருட்களை தயாரிப்பதிலும், பயன்படுத்துவதிலும் 2-ம் இடத்தில் உள்ளது. 40 சதவீதம் பேர் இந்தியாவில் பீடி புகைக்கிறார்கள். புகைபிடிக்கும் நீரிழிவு நோயாளியின் இதயம் மற்றும் தமனியின் ஆரோக்கியம், மற்ற புகைபிடிப்பவரை விட இரண்டு மடங்கு அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது. நீரிழிவு பாதிப்புக்கு உள்ளானவர்கள், நீரிழிவு நோயைத் தடுக்க நினைப்பவர்கள் இருதரப்பினருமே புகைப்பதை கைவிடவும், குறைக்கவும் முயற்சிக்க வேண்டும்.

    புகை பிடிக்கும் ஒருநபர் தாமாகவே முன்வந்து புகைபிடிப்பதை நிறுத்துவதே அதில் இருந்து விடுபட முதல் முயற்சியாக இருக்கும்.
    Next Story
    ×