search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளின் நன்மைகளை பழக்கப்படுத்துவது எப்படி?
    X
    குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளின் நன்மைகளை பழக்கப்படுத்துவது எப்படி?

    குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளின் நன்மைகளை பழக்கப்படுத்துவது எப்படி?

    பெற்றோருக்கு மிகவும் சவாலான பணி ஆரோக்கியமான உணவு மற்றும் நல்ல பழக்க வழக்கங்களை குழந்தைகளுக்கு பழக்கவைப்பதே ஆகும். இதற்கு நீங்கள் செய்யக்கூடிய வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
    குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோர்களும் தினம் தினம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு. குழந்தை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு என்பது ஒவ்வொரு பெற்றோர்களின் வாழ்க்கையிலும் முக்கியமான கட்டமாகும்.

    குழந்தைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை பழக்கங்களை வளர்ப்பது முக்கியம். உண்மையில் பெற்றோருக்கு மிகவும் சவாலான பணி ஆரோக்கியமான உணவு மற்றும் நல்ல பழக்க வழக்கங்களை குழந்தைகளுக்கு பழக்கவைப்பதே ஆகும். இதற்கு நீங்கள் செய்யக்கூடிய வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

    பழங்கள், காய்கறிகள், ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து போன்றவை நம் உடல் நலத்திற்கு முக்கியமானவை. உதாரணமாக, ப்ரோக்கோலி, பச்சை பீன்ஸ், கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு, தக்காளி, கீரை மற்றும் வெள்ளரிகள் மற்றும் பீச், சர்க்கரை, பேரிக்காய், ஆப்பிள் போன்ற பழங்கள் உடலுக்கு நல்லது. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், அழுக்கு அல்லது இரசாயனங்களை அகற்றுவதற்கு இந்த பழங்கள் உதவும். உருளை மற்றும் சேனைக்கிழங்கு, உடல் எடை அதிகரிக்க உதவும். நேந்திரம் பழம், மலை வாழை, கூழாஞ்செண்டு மட்டி கோழிக்கூடு வகை வாழைப்பழங்கள் குழைந்தைகளுக்கு நல்லது. நம் ஊர் சிவப்பு கொய்யா, மாதுளை, ஆரஞ்சு, பப்பாளி, திராட்சை மற்றும் மாம்பழம் போன்றவை மிகவும் நல்லது.

    நீங்கள் உணவை சமைக்கும்போது, சமையலுக்கான பொருட்களை குழந்தைகளுடன் ஒப்படைக்கவும், அவர்களுக்கு ஒரு மேசையை அமைக்கவும், அதில் சமையலுக்கு தேவையான எளிய வேலைகளை செய்து தருமாறு அவர்களை பணிக்கவும். அதோடுகூட பிற ஒத்த விஷயங்களுக்கும் உதவுமாறு உங்கள் குழந்தைகளிடம் கேளுங்கள். உங்கள் குழந்தைகள் அவர்கள் தயாரிக்க உதவிய உணவை சாப்பிடுவார்கள் அப்போது அவர்களை உற்சாகமூட்டி அவர்கள் உதவிய உணவின் நன்மைகளை பற்றி குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள்.

    பொதுவாக குழந்தைகளுக்கு சாதம் கொடுக்கும் போது, அவர்களுக்கு முதலில் அளவாக உணவைப் பரிமாறவும். இதனால் உணவு வீணாவதைத் தடுக்கலாம். சில குழந்தைகள் உணவு உண்ணும் போது அடம்பிடிப்பார்கள். அவ்வாறு குழந்தைகள் அடம் பிடிக்காமல் இருக்க வேண்டுமெனில், குழந்தை உண்ணும் போது, குழந்தையின் நண்பனை அழைத்து உடன் இருக்க வையுங்கள். அவர்கள் இருக்கும் போது, குழந்தைகளும் சமத்தாக அவர்களுடன் உணவை உண்ண வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு பிடித்த உணவில் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவைக் கொடுங்கள். உதாரணமாக, நீங்கள் பர்கரில் உருளைக்கிழங்கு சோயாவை சேர்த்து ஆரோக்கியமான உணவாக மாற்றலாம். மேலும் உலர்ந்த பழங்கள் மற்றும் விதைகளை பாலில் சேர்த்து அவர்களுக்கு பிடித்த சாக்லேட் பவுடருடன் சேர்த்து அளியுங்கள்.

    குழந்தைக்கு பிடித்த உணவு வகைகளில் குறைந்தது ஒரு வகையையாவது குழந்தையின் தினசரி உணவில் சேருங்கள். ஒரு புதிய பிளானை உருவாக்குங்கள். உணவு மேஜை மேல் இருக்கும் அனைத்து உணவையும் சிறிதளவு ருசித்துப் பார்க்க வேண்டும் என்பது தான் அந்த பிளானாக இருக்க வேண்டும். இதனால் உங்கள் குழந்தை அனைத்தையும் ருசித்து பார்க்கும். ஆனால் குழந்தை உண்ணும் அளவை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

    ஆரோக்கியமான உணவுகள் என்பதில் குறிப்பாக பழங்கள், ஆக்கத்திறனை உண்டாக்கும் சாலட்கள் மற்றும் உப்பு சேர்க்காத கடலை பருப்புகள் போன்றவைகளை மட்டுமே வீட்டிலே செய்து அவர்களுக்கு கொடுங்கள். அவித்த சோளம், பாப் கார்ன், காய்கறிகள் சேர்த்த பன்னீர் சாண்ட்விச், கொண்டைக்கடலை, மற்றும் மோர் போன்ற குறைவான கலோரிகள் நிறைந்த உணவு வகைகளை தெரிந்து வைத்திருங்கள். இதனால் குழந்தையின் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உயர் ஃபைபர் ரொட்டி, அரிசி, கோதுமை, கஸ்கஸ், பாஸ்தா, சோளம், கோதுமை அப்பங்கள் மற்றும் குறைந்த சர்க்கரை தானியங்கள் ஆகியவற்றை குழந்தைகளுக்கு கொடுங்கள். உணவு நேரத்திற்கு முன் குழந்தைகளுக்கு பசி எடுத்தால், ஜங்க் உணவுகளை கொடுப்பதற்கு பதிலாக, பழங்கள் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.

    உணவை நன்றாக மென்று, உமிழ்நீருடன் சேர்த்துச் சாப்பிடுவதால் அவை மிக எளிதாகச் செரிமானமாகும். உணவுக்கும், குணத்துக்கும் நெருங்கிய நேரடி தொடர்பு உண்டு. இயற்கை உணவுகளால் உடல் ஆரோக்கியம் மட்டுமன்றி மனமும் அமைதி பெறும். அதிக சத்துகள் கொண்ட இயற்கை உணவுகளை குழந்தைகளுக்குக் கொடுப்பதால், அவர்களுக்கு ஞாபகசக்தி அதிகரிப்பதுடன் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க துணைபுரியும். பள்ளி செல்லும் பல குழந்தைகள் உண்ணும் உணவில் போதுமான அளவு சத்துகள் இல்லாததால் பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுகின்றனர். எனவே, பள்ளிக் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் சத்தான இயற்கை உணவுகள் இடம்பெறச் செய்தால் நிச்சயம் அவர்களது உடல் நலம் சீராகும். நீங்கள் அளிக்கும் உணவை அவர்கள் விரும்பி உண்பார்கள்.

    Next Story
    ×