என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இரவில் வியர்வையில் குளித்துக்கொண்டிருந்தால் அதன் பின்னணியில் பல்வேறு மருத்துவ காரணங்கள் இருக்கின்றன. அதுகுறித்து பார்ப்போம்.
    இரவில் தூங்கும்போது அறைக்குள் போதிய காற்றோட்ட வசதி இல்லாவிட்டாலோ, போர்வையால் நன்றாக மூடி இருந்தாலோ உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது தவிர்க்கமுடியாதது. அறையின் வெப்பநிலையும், காற்றோட்ட வசதியும் சீராக இருந்தும் உடலில் இருந்து அதிகமாக வியர்வை வெளியேறிக்கொண்டிருந்தால் அது ‘இரவு வியர்த்தல்’ என்று அழைக்கப்படுகிறது.

    சிலர் நள்ளிரவில் தூக்க கலக்கத்தில் எழும்போது அணிந்திருக்கும் ஆடையெல்லாம் நனைந்து வியர்வை மழையில் குளித்துவிடுவார்கள். அதிக வேலை அல்லது உடல் சோர்வு காரணமாக எப்போதாவது இப்படி நேர்ந்தால் பரவாயில்லை. ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இரவில் வியர்வையில் குளித்துக்கொண்டிருந்தால் அதன் பின்னணியில் பல்வேறு மருத்துவ காரணங்கள் இருக்கின்றன. அதுகுறித்து பார்ப்போம்.

    அதிக தைராய்டு: உடலில் அதிகப்படியான வியர்வை மற்றும் அதிக வெப்பத்தை உணர்வது ஹைப்பர் தைராய்டிசத்தின் முக்கிய அறிகுறிகளாகும். தைராய்டு சுரப்பிதான் உடலில் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. அது அதிக ஹார்மோன்களை உற்பத்தி செய்யத்தொடங்கும்போது வழக்கத்திற்கு மாறாகவோ, அசாதாரணமாகவோ உடல் இயக்க செயல்பாடு நடைபெறும். வழக்கத்துக்கு மாறாக உடல் வெப்பநிலை அதிகரிக்கும். அதுபோல் பசியும், தாகமும் எடுக்கும். இதய துடிப்பும் வேகமெடுக்கும். கைகள் நடுங்கத்தொடங்கும். அதிக வியர்வையுடன் இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டால் தைராய்டு சுரப்பி சரியாக செயல்படவில்லை என்பதை உணரலாம். உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

    குறைந்த ரத்த சர்க்கரை: நீரிழிவு நோயாளியாக இருந்தால் இரவு வியர்வைக்கும் அதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம். சிலருக்கு தூங்க செல்லும்போது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு சரியாக இருக்கும். ஆனால் தூங்கியதும் குளுக்கோஸ் அளவு திடீரென்று குறைந்து போய்விடும். பகலில் அதிக வேலை பார்த்தாலோ, மாலையில் கடுமையான உடற்பயிற்சி செய்தாலோ, இரவில் தாமதமாக சாப்பிட்டாலோ இந்த பிரச்சினை எழலாம். நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு இன்சுலின் பயன்படுத்தும் பட்சத்தில் திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதும் காரணமாக இருக்கலாம். தூங்க செல்லும் முன்பு குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்தால் நன்றாக சாப்பிடுவது நல்லது.

    சுவாசிப்பதில் சிரமம்: இரவில் சுவாசிப்பதில் ஏதேனும் சிரமம் எழுந்தால் ‘சிலீப் அப்னியா’ எனும் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். அதாவது உடலுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காது. இதன் காரணமாக அதிகமாக வியர்க்க தொடங்கும். ஒவ்வொரு முறையும் மூச்சை நன்றாக உள் இழுத்து சுவாசிக்க தொடங்கும்போது தசைகள் இருமடங்கு அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். சுவாச கோளாறு பிரச்சினை இருப்பவர்களுக்கு இரவில் வியர்வை பிரச்சினை அதிகரிக்கும்.

    மார்பு வலி: இரவில் கடுமையான மார்பு வலி பிரச்சினை எழுந்தால் அதுவும் அசவுகரியத்தை ஏற்படுத்தும். உடலை நிமிர்த்த முடியாது. இது ‘ஆசிட் ரிப்ளக்ஸ்’ எனப்படும். இதன் காரணமாக இரவில் வியர்வை அதிகமாக வெளிப்படும். இத்தகைய பிரச்சினை இருந்தால் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு குறைவாக சாப்பிடுவது நல்லது. மேலும் கொழுப்பு நிறைந்த உணவுகள், பொரித்த உணவுகள், தக்காளி கலந்த உணவுகளை இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி இந்த பிரச்சினை எழுந்தால் மருத்துவ சிகிச்சை பெறுவது நல்லது.

    மருந்துகள்: காய்ச்சல் உள்பட பல்வேறு வியாதிகளுக்கு சாப்பிடும் மருந்துகள் கூட இரவில் வியர்வை வெளிப்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கும். வென்லாபாக்சின், புப்ரோபியன், கார்டிசோன் மற்றும் ஹார்மோன் சார்ந்த பிரச்சினைகளுக்கு சாப்பிடும் மருந்துகளும் வியர்வை சுரப்பியை தூண்டக்கூடும். இத்தகைய மருந்துகளை எடுத்துக் கொண்ட பிறகு இரவில் அதிகமாக வியர்த்தால் மருத்துவரை அணுகி மாற்று மருந்து சாப்பிடுவது நல்லது.
    ஒருசில வழிமுறைகளை பின்பற்றினால் இயற்கையாகவே நகங்களின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யலாம். நீண்ட நகங்களுக்கு சொந்தம் கொண்டாடி விடலாம். அதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள்:
    நகங்களை நீளமாக வளர்ப்பதற்கு நிறைய பெண்கள் விரும்புகிறார்கள். ஒரு சிலர் நகங்களாவது தங்கள் ஆசைக்கனவை நிறைவேற்றித்தரும் என்ற நம்பிக்கையில் நகங்களை பராமரிப்பதற்கு மெனக்கெடுகிறார்கள். ஒருசில வழிமுறைகளை பின்பற்றினால் இயற்கையாகவே நகங்களின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யலாம். நீண்ட நகங்களுக்கு சொந்தம் கொண்டாடி விடலாம். அதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள்:

    தேங்காய் எண்ணெய்: சருமம், கூந்தலுக்கு மட்டுமின்றி நகங்களை மேம்படுத்தவும் தேங்காய் எண்ணெய்யை உபயோகிக்கலாம். அதிலும் உடையும் தன்மை இல்லாத நகங்களாக இருந்தால் தேங்காய் எண்ணெய்யை தாராளமாக உபயோகிக்கலாம். ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் அதே அளவு தேனும், 3 சொட்டு ரோஸ்மேரி எண்ணெய்யும் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை லேசாக சூடாக்கி அதனுள் கால் மணி நேரம் நகங்களை முக்கி வைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால் நகங்கள் வேகமாக வளரத் தொடங்கும். ஓரிரு வாரங்களிலேயே நகங்களின் வளர்ச்சியை கண்கூடாக காணலாம்.

    பால்-முட்டை: இது நகங்களின் வளர்ச்சியை தூண்டும் சக்திவாய்ந்த கலவையாகும். முட்டையின் மஞ்சள் கருவுடன் சிறிதளவு பால் சேர்த்து நன்றாக கிளறவும். இந்த கலவையில் 10 நிமிடங்கள் நகங்களை முக்கிவைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று முறை செய்து வரலாம்.

    எலுமிச்சை சாறு: இது நகங்களின் வளர்ச்சியையும், வலிமையையும் உறுதிப்படுத்தும் தன்மை கொண்டது. இதிலிருக்கும் வைட்டமின் சி, நகங்களை பலப் படுத்தும். அதன் வளர்ச்சியை ஊக்குவிக்கும். காட்டன் பஞ்சுவில் எலுமிச்சை சாறை முக்கி நகங்களுக்குள் சிறிது நேரம் சொருகி வைக்கலாம். சிறிதளவு சூடான ஆலிவ் எண்ணெய்யுடன் அதே அளவு எலுமிச்சை சாறை கலந்து நகங்கள் மீது தடவி கால் மணி நேரம் மசாஜ் செய்து வரலாம்.

    பற்பசை: நகங்களை வளர்ப்பதற்கு பற்பசையையும் பயன்படுத்தலாம். பல் துலக்கும் பற்பசையை நகங்கள் மீது தடவி நன்றாக தேய்த்துவிடவும். சிறிது நேரம் கழித்து கழுவிவிடலாம். வாரத்தில் மூன்று முறையாவது செய்து வரலாம். நகங்கள் நன்றாக வளரத் தொடங்கும்.

    பூண்டு எண்ணெய்: பூண்டுவில் இருக்கும் செலினியம் நகங்களின் வளர்ச்சிக்கு உதவும். பூண்டுவை தோல் நீக்கி நறுக்கி நகங்களில் தேய்த்து வரலாம். பூண்டு எண்ணெய்யையும் பயன்படுத்தலாம். ஒரு முழு பூண்டுவை தோல் நீக்கி சுத்தம் செய்து, சிறிதாக நறுக்கி அதனுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் கலந்து வாணலியில் 10 நிமிடங்கள் சூடாக்கவும். எண்ணெய்யில் இருந்து புகை வெளிபடக்கூடாது. சிறு தீயில் பூண்டு நன்றாக பொறிந்ததும் இறக்கி, அந்த எண்ணெய்யை இரவில் நகங்களில் தேய்த்து மசாஜ் செய்து வரலாம்.
    சிறிய வெங்காயத்தை பயன்படுத்தி லேகியம் தயாரித்து சுவைக்கலாம். இது பலவிதங்களில் உடலுக்கு பலம் சேர்க்கும். இந்த லேகியம் தம்பதிகளின் உடலுக்கு பலவிதத்தில் ஊட்டம் தரும்.
    சிறிய வெங்காயத்தில் கரையும் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. உடல் நலனுக்கு தேவையான அலிசின் என்ற சல்பைட்டும் இதில் உள்ளது. இது கொழுப்பை கரைக்கும் தன்மையை பெற்றிருக்கிறது. வயிற்றில் புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கும். சிறிய வெங்காயம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதற்கு சிவப்பு நிறம் தருவது, லூட்டின் என்ற வர்ண கலவையாகும். இதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்ட் ரத்த புற்றுநோய், சரும புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவைகளை தடுக்கும் தன்மைகொண்டது.

    இந்த லேகியத்தை தயாரிக்கும் முறை:

    சின்ன வெங்காயம் - 300 கிராம்
    பூண்டு - 1
    தேங்காய் பால் - 1 கப்
    வெல்லம் - 150 கிராம்
    வெந்தயம் - அரை தேக்கரண்டி
    சீரகம் - அரை தேக்கரண்டி
    ஏலக்காய் - 4
    சுக்குத்தூள் - 1 சிட்டிகை
    நெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை


    சின்னவெங்காயத்தை தோல் நீக்கி இடித்து கொள்ளவும்.

    பூண்டை தோல் நீக்கி கொள்ளவும்.

    சீரகம், வெந்தயத்தை வெறும் கடாயில் வறுத்து பொடித்து கொள்ளவும்.

    ஏலக்காயை தூளாக்கி கொள்ளவும்.

    வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.

    வெங்காயம், பூண்டை இடித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் இடித்த வெங்காயம், பூண்டை போட்டு அதனுடன் தேங்காய் பால் சேர்த்து வேகவைத்து குழைக்கவும்.

    அடுத்து வெல்லத்தை சேர்த்து ஐந்து நிமிடம் கிளறிவிட்டு, வேகவையுங்கள்.

    அத்துடன் வறுத்து தூளாக்கிய வெந்தயம், சீரகம் போன்றவைகளை சிறிதளவு சேர்க்கவும்.

    அடுத்து சுக்குத் தூள், ஏலக்காய் தூளை சேருங்கள். அனைத்து பொருட்களையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேகவைத்து, ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி இறக்கிவிடுங்கள்.

    இதுதான் வெங்காய லேகியம்.

    இதனை ஒரு பாட்டிலில் அடைத்துவைத்து மூன்று நாட்கள் வரை சாப்பிடலாம். இதனுடன் சேர்த்து தண்ணீரோ, தேனீரோ பருகக்கூடாது. இந்த லேகியம் தம்பதிகளின் உடலுக்கு பலவிதத்தில் ஊட்டம் தரும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கொரோனா அச்சுறுத்தலோடு பள்ளிக்கு செல்வதிலும், பாடம் நடத்துவதிலும் ஆசிரியர்களும், மாணவர்களும் கடைப்பிடிக்கவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை பார்க்கலாம்.
    மத்திய-மாநில அரசுகள் கொரோனாவிற்கான விழிப்புணர்வு வழிகாட்டுதலை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதை ஆசிரியர்கள் சரிவர கடைப்பிடித்தாலே போதுமானது. தன்னுடைய பள்ளி மாணவ-மாணவிகளும் அதை கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். தன்னையும் பாதுகாத்து, தன்னுடைய பள்ளி மாணவர்களையும் பாதுகாக்கும் கடமை ஆசிரியர்களின் தோள்களில் சுமத்தப்பட்டிருக்கிறது.

    சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவுதல், இடைவெளியுடன் மாணவர்களை அமர வைத்தல், மாணவ-மாணவிகள் கூட்டம் கூடுவதை தவிர்த்தல், குழுவாக சேர்ந்து படிப்பதை தவிர்த்தல் ஆகியவற்றை கடைப்பிடிப்பது அவசியமாகிறது. மேலும் மாணவர்கள் கேன்டீனில் கூடுவது, பிரேயர் அரங்கில் கூடுவதையும் தவிர்க்கவேண்டும். ஒரே சமயத்தில் கூட்டமாக கழிவறைக்கு செல்வதையும் தவிர்க்கவேண்டும். குறிப்பாக அடுத்தவரிடமிருந்து நோட்டு-புத்தகங்கள், பேனா-பென்சில்களை கடன் பெறுவதையும் அறவே தவிர்க்கவேண்டும். கட்டாயம் முககவசம் அணிந்தே இருக்கவேண்டும்.
    எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் விட்டுக்கொடுத்து வாழப்பழகினால் வாழ்க்கையில் அமைதி நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
    இந்த வாழ்க்கையில் நாம் அறிந்திராத ஏதேதோ இருக்கின்றன. தேடுதலும் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. அனைத்திலும் முதன்மையாக இருப்பது ‘அன்பு’ மட்டுமே. இந்த நவீன அவசர உலகத்தில் அந்த அன்பை வெளிப்படுத்தவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோகூட நேரமில்லாமல் போகிறது.

    சில உறவுகள் நாம் விரும்பி ஏற்பது, சில உறவுகள் நாம் பிறக்கும்போதே தானாக அமைவது. பல நேரங்களில் உடன் பிறந்தவர்கள், பெற்றவர்கள் என்று தானாக அமைந்த உறவுகளின் மன வேறுபாடுகளைக்கூட அனுசரித்துப்போகும் நமக்கு, நாமாக விரும்பி ஏற்றுக்கொள்ளும் உறவுகள், நட்புகளின் சிறு தவறுகளைக்கூட ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

    அன்று வங்கியில் எனக்குத் தெரிந்த பெண் ஒருவரைப் பார்த்தேன். பெற்றோருடன் இரண்டு வருடம் போராடி காதலித்தவரையே மணந்து கொண்டவள். இருவரும் கணினித் துறையில் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள். அருகில் சென்று நலம் விசாரித்தபோது ‘ஏதோ இருக்கிறேன்’ என்பது போல சலிப்பாக பதில் வந்தது.

    கணவர், குடும்பத்தாரின் நலம் குறித்து விசாரித்தபோதும் ஒற்றை வரியில் பதில் வந்தது. எப்பொழுதும் கலகலவென பேசிக்கொண்டிருப்பவள் இப்படி பட்டும், படாமல் பேசுவது ஆச்சரியமாக இருந்தது. இருவருக்கும் அடுத்தடுத்த டோக்கன் என்பதால் ஒன்றும் பேசாமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு வெளியே வந்தோம். மரத்தடியில் நிறுத்தியிருந்த தன்னுடைய இருசக்கர வாகனத்தை எடுக்கப் போனவளை, இவர்கள் திருமணத்திற்கு உதவியவள் என்ற உரிமையுடன் நெருங்கி, எடுத்த எடுப்பில் ‘கணவரிடம் ஏதும் பிரச்சினையா’ என்றேன் மனம் கேட்காமல். இதை சற்றும் எதிர்பாராதவள், என் கண்களை உற்று நோக்கியவாறு ஒரு நிமிடம் யோசித்து வண்டியை நிறுத்திவிட்டு மீண்டும் மரத்தடிக்கே வந்தவள்,

    ‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் வீட்டில் நிம்மதி இல்லாததால் அலுவலகத்தில் சரியாக வேலை பார்க்க முடியவில்லை’ என்றாள்.

    ‘அப்படி என்ன பிரச் சினைன்னு தெரிந்து கொள்ளலாமா’ என்றேன்.

    சற்று தயங்கியவள், “அவர் கொஞ்சமும் அனுசரித்துப் போகமாட்டேங்கிறார். என்னமோ அவர் மட்டும் வேலைக்குப் போவதுபோலவும், நான் வீட்டில் நிம்மதியாக இருப்பது போலவும், எதற்கெடுத்தாலும் என்னையே அதிகாரம் செய்கிறார். ஏதோ நான் அவரோட அம்மா மாதிரியும், இவருடைய தேவைகள் அனைத்தையும் நானே கவனித்துக் கொள்ளவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார். என்னைப் பற்றி துளியும் கவலைப்படுவதில்லை, வீட்டு வேலைகளை பங்கிட்டுச் செய்யத் தயங்குகிறார். நான் அவமானப்படுத்தப்படுவது போல உணருவதாலேயே அலுவலகப் பணியில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை” என்றாள்.

    ‘அப்படியானால் உன்னை சரிவர கவனித்துக் கொள்வதில்லையா அவர்?’ என்றேன் நிதானமாக.

    உடனே சட்டென்று, ‘அப்படியெல்லாம் இல்லை. என்மேல் உயிரையே வைத்திருக் கிறார். நான் கொஞ்சம் சோர்ந்திருந்தாலும் தவித்துப் போய்விடுவார்’ என்றாள்.

    நானும், ‘நீ முன்னால் சொன்ன அனைத்தையும் அப்படியே அவர் கோணத்தில் இருந்து, அவர் சொல்வதாக நினைத்துப் பாரேன், அவரிடம் மனம் விட்டுப் பேசினாயா?’ என்றேன்.

    சற்று நேரம் அமைதியாக யோசித்தவள், ‘ஆமாம் அவரும் என்னை இப்படி நினைக்கலாமே. ஆனால் ஒரு நாளும் இப்படியெல்லாம் அவர் என்னை திட்டுவதற்கு நினைத்துக்கூடப் பார்த்ததில்லை’ என்றவள் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தாள். சட்டென கண்ணில் நீர் கலங்க ‘நான்தான் தவறு செய்துவிட்டேனோ. அவருடைய சுபாவம் அதுதான் என்பதைப் புரிந்து என் ஈகோவை கொஞ்சம் விட்டுக்கொடுத்து, என் நிலையை மெல்ல மெல்லப் புரிய வைத்திருக்க வேண்டும். என் மேல் இத்தனை அன்பு வைத்திருப்பவர் என் சிரமத்தையும் புரிந்துகொள்வார். நான் எப்படி யோசிக்காமல் போனேன்’ என்று கூறியவாறு கண்களை துடைத்துக் கொண்டவளின் முகத்தில் தெளிவைக் காண முடிந்தது.

    விட்டுக்கொடுக்கும் அந்த மனோபாவம் வந்த மறு நொடியே அவள் மனதிலிருந்த குழப்பம் நீங்கி, நிம்மதி பிறந்தது தெரிந்தது. கட்டாயம் இனி அவளுடைய மனநிலையில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுகிற மாற்றம் அவர்களுடைய வாழ்க்கையை உயர்த்தும் என்பதில் ஐயமில்லை.
    கொரோனாவல் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு உற்சாகமின்மை, அலட்சியம், உறக்கமின்மை, மறதி போன்றவைகளை ஏற்படுத்துகிறது.
    பள்ளிகளில் குழந்தைகளுக்கு கல்வி மட்டும் கிடைப்பதில்லை. சக நண்பர்களை நேரடியாக காண்பார்கள். பேசுவார்கள். விளையாடுவார்கள். அதன் வழியாக அவர்களுக்கு மனோவளர்ச்சி கிடைக்கும். கொரோனாவால் அந்த வாய்ப்பை குழந்தைகள் இழந்திருக்கிறார்கள். அந்த ஏமாற்றம் தொடக்க நிலைக் கல்வி பயிலும் குழந்தைகளிடம் அதிகமாக தென்படும். அதை பெற்றோர் புரிந்துகொண்டு குழந்தைகளிடம் அதிக கோபம்கொள்ளக்கூடாது. குறிப்பாக மழலையர் பள்ளி மற்றும் ஒன்றாம் வகுப்புக்கு செல்ல முடியாத குழந்தைகளிடம் எப்போதும் படிக்கச்சொல்லி வற்புறுத்தக்கூடாது. வற்புறுத்தினால் அவர்கள் பள்ளி திறந்த பின்பும் படிப்பை வெறுக்கும் சூழல் ஏற்படலாம்.

    பள்ளிக்கு செல்லும்போது குழந்தைகளுக்கு பயணம், மைதானத்தில் விளையாட்டு, சூரிய ஒளி உடலில்படுதல் போன்றவை கிடைக்கும். சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமின் டி மூளையின் செயல்பாட்டிற்கு மிக முக்கியம். ஆனால் இப்போது குழந்தைகள் வீட்டிற்குள்ளே இருக்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகளுக்கு வீட்டு முற்றத்திற்கு வருவதற்குகூட அனுமதி கிடைப்பதில்லை.

    பள்ளிகள் இல்லாததால் மைதானங்களிலான விளையாட்டுகளுக்கு பதில் செல்போன், கம்ப்யூட்டர்களில் விளையாடுகிறார்கள். அதனால் டிஜிட்டல் அடிக்‌ஷன் எனப்படும் பாதிப்புக்கு நிறைய சிறுவர்-சிறுமியர்கள் உள்ளாகியிருக்கிறார்கள். அவர்களை மனநல சிகிச்சைக்கு அழைத்து வருகிறார்கள். எலக்ட்ரானிக் உபகரணங்களோடு குழந்தைகள் அதிக நேரத்தை செலவிடுவது அவர்களுக்கு உற்சாகமின்மை, அலட்சியம், உறக்கமின்மை, மறதி போன்றவைகளை ஏற்படுத்துகிறது.

    முன்பு தினமும் பெருமளவு நேரத்தை குழந்தைகள் பள்ளிகளில் செலவிடுவார்கள். இப்போது முழுநேரத்தையும் அவர்கள் வீடுகளிலேயே செலவிடுவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக ஆசிரியர் வேலையையும் சேர்த்து செய்யவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இது பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒருவித கடினமான அனுபவம்தான்.
    நாம் உண்ணும் உணவு ஜீரணமாக கண்டிப்பாக மூன்று வழிகளை பின்பற்ற வேண்டும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.
    நாம் உண்ணும் உணவு ஜீரணமாக கண்டிப்பாக மூன்று வழிகளை பின்பற்ற வேண்டும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். உணவை நாம் எப்படி சாப்பிட்டால் அதிலுள்ள அனைத்து பொருட்களும் ரத்தத்தில் கலக்கும் என்பதற்கு இந்த மூன்று வழிகளும் முக்கியமானவை. அவை பசி, எச்சில் மற்றும் உணவில் கவனம் போன்றவைதான்.

    பசிதான் நம் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளையும் தயார் செய்யும் அம்சம். இந்த பசிதான் நாம் உண்ணும் உணவை நல்லபடியாக ஜீரணமாக்கி ரத்தத்தில் கலக்கச் செய்ய தயார் என்று கூறுகிறது. பசி இல்லாமல் சாப்பிடுகிற ஒவ்வொரு உணவும் கழிவாக மாறுகிறது. சில சமயம் அதுவே விஷமாகவும் மாறுகிறது. நல்ல ஜீரணத்திற்கான முதல் வழி பசித்தால் மட்டுமே சாப்பிடுவது. 2-வது வழி உமிழ்நீர்.. நாம் சாப்பிடும் உணவில் உமிழ்நீர் சேரவேண்டும். உமிழ்நீர் கலக்காத உணவு கெட்ட ரத்தமாகிறது. உமிழ்நீரில் நிறைய நொதிகள் உள்ளன. உணவில் உள்ள மூலக்கூறுகளை பிரிப்பதற்கு இவை மிகவும் உதவி செய்கின்றன. எச்சிலால் வாயில் ஜீரணிக்கப்பட்ட உணவை மட்டுமே வயிற்றால் ஜீரணிக்க முடியும்.

    உமிழ்நீரால் ஜீரணிக்காத ஒரு உணவு வயிற்றுக்குள் போகும்போது அது கெட்ட உணவாக மாறுகிறது. உணவை மெல்லும் போது உதட்டை மூடி மெல்ல வேண்டும். அப்போதுதான் உமிழ்நீர் நண்றாக உணவில் கலக்கும். வாய்க்குள் நுழைந்த உணவை விழுங்கும் வரை உதட்டை பிரிக்காமல் மெல்லுவதே ஜீரணத்திற்கு நல்லது.

    அதற்கடுத்து உணவில் கவனமாக இருக்க வேண்டும். உணவை உண்ணும்போது நமது கவனம், எண்ணம், நான் சாப்பிடுகிறேன் என்று இருந்தால் மட்டுமே ஜீரணம் சம்பந்தப்பட்ட அனைத்து சுரப்பிகளும் நன்றாக சுரக்கும். அதைவிடுத்து கவனத்தை குடும்பம் வியாபாரம், போன்று வேறு ஏதாவது விஷயங்களில் வைத்து சாப்பிட்டால் சிக்கல்கள் உள்ளன. அதாவது, நமது மூளைக்கும், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும், சுரப்பிகளுக்கும் வேகஸ் என்ற நரம்பு மூலமாக இணைப்பு உள்ளது. நாம் எதை எண்ணுகிறோமோ அது சம்பந்தப்பட்ட சுரப்பிகளை இந்த வேகஸ் நரம்பு சுரக்க வைக்கும். அதனால் சாப்பிடும்போது கவனம் சாப்பாட்டின் மீதுதான் இருக்கவேண்டும். இந்த மூன்றையும் சரியாக கடைபிடித்தால் ஜீரண பிரச்சினை இருக்காது.
    இன்றைய சூழ்நிலையில் பெண்கள் அனைவரும் சந்திக்கின்ற ஒரு பொதுவான பிரச்சனைகளில் ஒன்று மாதவிடாய். இந்த பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம் எந்த வகையில் உதவும் என்று பார்க்கலாம்.
    இன்றைய சூழ்நிலையில் பெண்கள் அனைவரும் சந்திக்கின்ற ஒரு பொதுவான பிரச்சனைகளில் ஒன்று மாதவிடாய். அதுவும் இப்போது இருக்கின்ற காலகட்டத்தில் 100-யில் 80% பெண்கள் காலம் தவறிய மாதவிடாய் பிரச்சனையை அதிகம் சந்திக்கின்றனர். இந்த மாதவிடாய் பிரச்சனைக்கு பல காரணங்கள் உள்ளது. இருப்பினும் நமது கர்ப்பப்பையிலோ அல்லது சினைப்பையிலோ நீர்க்கட்டி ஏற்படுவது, ஹார்மோனின் சமமற்ற நிலை இவையெல்லாம் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இந்த ஹார்மோன்களின் சமமற்ற நிலை தான் உடல் எடை அதிகரிப்புக்கு காரணம்.

    இதுபோன்ற ஒழுங்கற்ற மாதவிடாயினால், குழந்தை பெறுவதிலும் அதிக சிக்கல் ஏற்படும். நம்முடைய உணவு முறை மாற்றம், லைஃப் ஸ்டைல் சேஞ்ச், மன அழுத்தம் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. சரியான அளவில் புரதச் சத்து உணவுகள், இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவினை எடுத்துக்கொள்ளுதல், உடற்பயிற்சி மற்றும் யோகாவின் மூலமே இந்த ஹார்மோன் சமமற்ற நிலையினை சரி செய்து, காலம் தவறும் மாதவிடாய் பிரச்னையை சரிசெய்துவிடலாம்.

    சீரகம்:

    சீரகம் இந்த மாதவிடாய் பிரச்சனை சரி செய்ய சிறந்த மருந்தாக செயல்படுகிறது. அதாவது சீரகம் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்ய உதவும்.  மட்டல் போன்ற மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க சீரகம் உதவுகிறது.

    எனவே இந்த சீரகத்தை இரண்டு தேக்கரண்டி எடுத்து ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் இந்த பாணத்தை பல் துலக்கிவிட்டு வெறும் வயிற்றில் வடிகட்டி அப்படியே அருந்த வேண்டும்.  இந்த மாதவிடாய் பிரச்சனையில் இருந்து விடுபட ஒவ்வொரு நாளும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.

    எள்ளுருண்டை:

    இந்த மாதவிடாய் பிரச்சனை சரியாக அல்லது மாதவிடாய் சரியாக வருவதற்கு எள்ளுருண்டை சாப்பிடலாம். அதிலும், கருப்பு எள்ளுருண்டை மிகவும் நல்லது. இதில் இருக்கும் நல்ல கொழுப்பு, கால்சியம், மெக்னீஷியம் போன்றவை ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை குறைக்கவும், எலும்பை உறுதி செய்யவும் பயன்படும். மேலும், இது உடல் எடையையும் சரி செய்யும்.

    மாதவிடாய் பிரச்சனை சரியாக:

    சிலருக்கு பீரியட்ஸ் 3 அல்லது 4 நாட்கள் வரும். அப்போது அவர்களுக்கு அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்படும். அதிலும் சிலருக்கு கட்டிக்கட்டியாக இரத்த போக்கு ஏற்படும். அந்த சமயத்தில் வாழைப்பூவை வறுத்து தயிருடன் சேர்த்து சாப்பிடலாம்.

    பொட்டுக்கடலையை நெய்யுடன் வறுத்து அதனுடன் உலர்திராட்சையை கலந்து சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதினால் அதிகப்படியான உதிரப்போக்கு போன்ற மாதவிடாய் பிரச்சனை சரிசெய்துவிட முடியும். அடுத்ததாக, சிலருக்கு மாதவிடாய் சரியாக வரும். ஆனால், சரியான பீரியட்ஸ் இருக்காது. இதனைத் தவிர்க்க மற்றும் மாதவிடாய் சரியாக வர இரும்புச் சத்து அதிகமான உணவைச் சாப்பிட வேண்டும்.

    பேரீச்சை, உலர்ந்த திராட்சை, அத்தி, மாதுளை, கருவேப்பிலை ஜூஸ், அகத்திக்கீரை, சுண்டக்காய் ஆகியவற்றை உண்பதன் மூலம் இதனைச் சரி செய்யலாம்.
    இதயம் சீராக செயல்பட உளுந்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் (Nutrients) உதவுகின்றன. எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    தேவையான பொருட்கள் :

    உளுத்தம்பருப்பு - அரை கப்
    தேங்காய் துருவல் - சிறிதளவு
    காய்ந்த மிளகாய் - 2
    புளி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க

    கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை

    செய்முறை

    அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியதும், அவற்றில் உளுந்து சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

    பின் அதனுடன் இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு தேங்காய் துருவல், சிறிதளவு புளி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

    பின் அடுப்பில் இருந்து இறக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் மைபோல் அரைக்க வேண்டும்.

    பின்பு கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியுடன் கலந்து அனைவருக்கும் பரிமாறவும்.

    இது இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி வகைகள் என்பதால் வீட்டில் உள்ளவர்கள் இந்த சட்னியை கொஞ்சம் கூட மிச்சம் வைக்கமாட்டார்கள்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மக்களின் மனோநிலையில் கொரோனா எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பது பற்றி மனோதத்துவ நிபுணர்கள் அளித்திருக்கும் விளக்கம்!
    கொரோனாவின் தாக்கம் மக்களிடம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மக்களின் மனோநிலையில் கொரோனா எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பது பற்றி மனோதத்துவ நிபுணர்கள் அளித்திருக்கும் விளக்கம்!

    கொரோனா, பெண்களிடம் எத்தகைய மனஅழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

    கொரோனாவால் பெண்களிடம்தான் அதிக மனஅழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. வருமானம் குறைந்துவிட்டதால் எதிர்காலத்தை பற்றிய கவலை. பள்ளி, கல்லூரிகள் மூடிக்கிடப்பதால் பிள்ளைகளின் கல்வியை பற்றிய அச்சம். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் எழும் சிக்கல் போன்ற அனைத்தும் சேர்ந்து பெண்களை அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. ஆனால் அது தேவையற்றது.

    கோபத்திற்கும்- கொரோனாவிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?

    கொரோனா சிகிச்சைக்கு உள்ளாகியிருப்பவர்களில் 58 சதவீதம் பேர் அதிகமாக கோபம்கொள்ளும் வழக்கம்கொண்டவர்கள் என்பது ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. கொரோனா பாதித்தவர்களின் சுபாவத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ‘பாசிட்டிவ்’ ஆனவர்கள் மட்டுமின்றி அவர்களுடன் தொடர்பில் இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் சுபாவங்களிலும் மாற்றம் உருவாகியுள்ளது. சில மாதங்கள் கழித்துதான் அவர்கள் அந்த நிலையில் இருந்து மாறி இயல்புக்கு வருகிறார்கள்.

    முழுமையான இலவச சிகிச்சை மற்றும் எளிதாக குணமடையும் சூழ்நிலை இருந்தும் கொரோனா பாதித்த ஒருசிலர் தற்கொலை செய்துகொள்வது ஏன்?

    கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசியும் இதுவரை முழுநிலையில் தயாராகவில்லை. நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதனால் நோய் பாதித்தவர்களில் சிலர் பெரும் அச்சம் கொள்கிறார்கள். இப்போது பயத்தில் இருந்து அனைவரும் அகலவேண்டும். கொரோனா வந்தாலும் அதில் இருந்து மீளமுடியும் என்று நம்பிக்கை கொள்ளவேண்டும். நம்பிக்கை கொண்டால் தற்கொலை எண்ணம் தோன்றாது. நம்பிக்கைதான் வாழ்க்கை.
    பெண்கள் என்றாலே சரும அழகை பாதுகாப்பதில் மிகவும் ஆர்வம் காட்டக்கூடியவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் முக அழகை எப்படி அதிகரிக்கலாம் என்று பார்க்கலாம்.
    தக்காளியில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் சருமத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. பெண்கள் என்றாலே சரும அழகை பாதுகாப்பதில் மிகவும் ஆர்வம் காட்டக்கூடியவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் தக்காளியை மட்டும் பயன்படுத்தி முக அழகை எப்படி அதிகரிக்கலாம் என்று பார்க்கலாம்.

    முகத்தை ஜொலிக்க வைக்க டிப்ஸ் :

    தேவையான பொருள்:

    காய்ச்சாத பால் - சிறிதளவு
    தக்காளி - பாதியான அளவு

    செய்முறை விளக்கம்:

    முகம் நல்ல வெள்ளையாக மாறுவதற்கு முதலில் காய்ச்சாத பாலில் நறுக்கிய பாதி தக்காளியை பாலில் நனைத்து முகத்தில் மெதுவாக மசாஜ் போல் செய்ய வேண்டும். அடுத்து கையால் மெதுவாக தேய்த்து விட வேண்டும். மசாஜ் போல் செய்த பிறகு 5 நிமிடம் வைத்திருக்க வேண்டும். இதை நீரால் உடனே வாஷ் செய்ய கூடாது. டவல் எடுத்து ஹாட் ஆன நீரில் நனைத்த பிறகு தொடைக்க வேண்டும்.

    சருமம் பளிச்சென்று மாற டிப்ஸ்:

    தேவையான பொருள்:

    சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
    தேன் - 1 ஸ்பூன்
    தக்காளி - நறுக்கிய பாதி

    செய்முறை விளக்கம்:

    முதலில் ஒரு பவுலில் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு சர்க்கரை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் 1 ஸ்பூன் அளவிற்கு தேனை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். தேன் பயன்படுத்துவதால் புருவ முடிகள் வெள்ளையாகிவிடும் என்று நினைக்காதீர்கள். தேனை அனைத்து வித சரும பிரச்சனைகளுக்கும் தீர்வு வகிக்கும்.

    இப்போது கலந்து வைத்ததை முதலில் பாதியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியில் இந்த கலந்த தேனை தக்காளியில் தடவி முகத்தில் மசாஜ் போல் மெதுவாக செய்து 5 நிமிடம் வைத்திருக்க வேண்டும். 5 நிமிடம் கழித்து டவலால் ஹாட் ஆன நீரில் நனைத்த பிறகு தொடைக்க வேண்டும்.

    முக அழகை அதிகரிக்க ஃபேஸ் மாஸ்க் :

    தேவையான பொருள்:

    கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
    பால் பவுடர் / பால் - சிறிதளவு
    நறுக்கிய பாதி தக்காளி

    செய்முறை விளக்கம்:

    முகத்தினை அழகுபடுத்த ஃபேஸ் மாஸ்க் செய்வதற்கு ஒரு பவுலில் கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளவும். அந்த கடலை மாவுடன் பால் அல்லது பால் பவுடர் சேர்த்து கொள்ளவும். அடுத்ததாக நறுக்கிய பாதி தக்காளியின் சாறு சிறிதளவு சேர்த்து மிக்ஸ் செய்யவும். அடுத்து கலந்த பிறகு முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து நீரில் முகத்தினை வாஷ் செய்து கொள்ளலாம். முகத்தில் இருந்து இதனை வாஷ் செய்த பிறகு சோப் பயன்படுத்தாமல் நீங்கள் உபயோகப்படுத்தும் ஃபேஸ் வாஷை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த 3 டிப்சையும் பின்பற்றி வந்தால் கண்டிப்பாக சருமமானது நல்ல வெள்ளையாக மாறி மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்..!
    ‘அந்த பெண்ணைப் பார்த்தால் அவ்வளவு நல்லவளாக தெரியலை. அவளிடம் எதுக்கும் கொஞ்சம் கவனமாக இருந்துக்கணும்’ என்று, முகத்தை பார்த்தே சிலர், மற்றவர்களை கணித்துக்கூறிவிடுவார்கள்.
    ‘அந்த பெண்ணைப் பார்த்தால் அவ்வளவு நல்லவளாக தெரியலை. அவளிடம் எதுக்கும் கொஞ்சம் கவனமாக இருந்துக்கணும்’ என்று, முகத்தை பார்த்தே சிலர், மற்றவர்களை கணித்துக்கூறிவிடுவார்கள். ஒருவரது குணத்தை அறிவதில் அவரது முகம் முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதர்கள் அனைவருமே தங்களோடு தொடர்பில் இருக்கும் ஒவ்வொருவரின் குணத்தையும் கணித்து அறிவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

    அக்னி முகம்: கவனத்தை ஈர்ப்பவர்கள்

    அகன்ற பெரிய கண்கள், ஆப்பிள் கன்னங்கள், கூர்மையான தாடை, சற்று பெரிய வாய் போன்றவை இந்த முகத்தின் அடையாளம். இவர்கள் விரைவாக மற்றவர்களை கவர்ந்து விடுவார்கள்.

    எல்லோரிடமும் நெருக்கமாக பழகி, நட்பு பாராட்டுவார்கள். இவர்களுக்கு கலைகளோடு தொடர்பு இருக்கும். பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் மனதில்பட்டதை சொல்லிவிடுவார்கள். சோம்பேறித்தனம் இவர்களிடம் இருக்காது. பலனே இல்லாவிட்டாலும் ஓடிஓடி உழைத்துக்கொண்டிருப்பார்கள். நிறைய நண்பர்கள் உண்டு. எதிரிகளும் இருந்துகொண்டிருப்பார்கள்.

    ஜல முகம்: பொருந்தி வாழும் மனோபாவம்

    எல்லோருமே வாழ்க்கையில் நிறைய பெண்களை சந்திக்கிறார்கள். அதில் ஒரு சில பெண்களிடம் கசப்பான அனுபவங்கள் கிடைக்கலாம். எந்த பெண்ணிடம் உங்களுக்கு கசப்பான அனுபவங்கள் கிடைக்கிறதோ அந்த பெண்ணின் கண்கள், புன்னகை, முக அமைப்பு போன்றவை உங்களை அறியாமலே உங்கள் மனதில் படம்போல் பதிந்துவிடும். காலங்கள் பல கடந்தாலும் அதே முக அமைப்பு கொண்ட இன்னொரு பெண்ணை நீங்கள் சந்திக்கும்போது, உங்கள் மனதிற்குள் ஒரு அபாயமணி அடித்து, ‘இந்த பெண்ணிடம் கவனமாக இரு. இல்லாவிட்டால் அந்த பெண்ணிடம் கிடைத்தது போன்ற கசப்பான அனுபவம் கிடைத்துவிடும்’ என்று உணர்த்தும்.

    முதலில் ஒரு பெண்ணிடம் கிடைத்தது போன்ற அதே அனுபவம்தான், அதே முக அமைப்பு கொண்ட அனைத்து பெண்களிடம் இருந்தும் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. அப்படி எல்லோரையும் கணிப்பது அறிவுபூர்வமான செயல் இல்லை என்றாலும், பல நூற்றாண்டுகளாக உலகில் பல்வேறு நாடுகளில் முகத்தை பார்த்து குணத்தை கணிக்கும் செயல் நடைமுறையில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. நமது நாட்டிலும் சாமுத்ரிகா லட்சணம் என்ற கோணத்தில் இந்த கலை கையாளப்படுகிறது. சீன நாட்டினர் இந்த கலையில் முன்னோடிகளாக இருக்கிறார்கள். இதில் அவர்கள் பல்வேறு விதமான ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

    நிலம், நீர், காற்று, ஆகாயம், அக்னி போன்றவைகளை நாம் பஞ்சபூதங்கள் என்கிறோம். இவைகளால் ஆனதுதான் உலகம் என்பதுபோல், இவைகளால் ஆனதுதான் மனித உடலும் என்ற நம்பிக்கை சீனாவிலும் இருக்கிறது. ஐம்பூதங்களை கொண்டு இவர்கள் பெண்களின் முகங்களையும் ஐந்துவிதமாக வகைப்படுத்தி, குணங்களை கணிப்பதாக சொல்கிறார்கள். அது பற்றி பார்ப்போம்!

    நீர் முகம் கொண்டவர்களுக்கு கண்கள் பளிச்சென்று காணப்படும். புருவங்கள் நீண்டிருக்கும். நெற்றி பெரியதாகவும், தாடைப் பகுதி ஈர்ப்புமிக்கதாகவும் தோன்றும். பேசும்போது உதடுகள் அழகுகூட்டும்.

    இவர்கள் எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தி வாழ்வார்கள். யாரிடமும் சண்டைபோடாமல் அனைவருக்கும் நல்லபிள்ளையாக நடந்துகொள்வார்கள். நிறைய நண்பர்களை பெற்றிருப்பார்கள். புதுமையை விரும்புவார்கள். உள்ளுணர்வு மிக்கவர்களாகவும் திகழ்வார்கள்.

    திறமைசாலியாகவும், ரகசியங்களை பாதுகாப்பவராகவும் இருப்பார்கள். மற்றவர்களை எளிதாக புரிந்துகொள்ளவும் செய்வார்கள்.

    காற்று முகம்:முன்பின் யோசிக்காதவர்கள்

    ஒடுங்கிய கண்கள், உயரமான நெற்றி, நீண்டு நிமிர்ந்த மூக்கு, சிறிய வாய், கெட்டியான தாடை போன்றவைகளை இவர்கள் பெற்றிருப்பார்கள்.

    முன்பின் யோசிக்காமல் பேசுவதும், செயல்படுவதும் இவர்களது இயல்பு. அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையோடு அடிக்கடி புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்திக் கொண்டிருப்பார்கள். இவர்கள் கனவு உலகத்தில் வாழ்பவர்கள். தனது திட்டங்கள் தோல்வியடைந்தால் மிகுந்த மனஉளைச்சலுக்குள்ளாகி விடுவார்கள்.

    பூமி முகம்: இவர்களை முழுமையாக நம்பலாம்

    இவர்களது நெற்றி அகலமாக இருக்கும். அதற்கு ஏற்றபடி தாடை எடுப்பாகத் தோன்றும். சிறிய மூக்கினை கொண்டிருப்பார்கள். கண் கள் பெரியதாகவும், புருவங்கள் அடர்த்தியாக நீண்டும் காணப்படும்.

    இவர்கள் விழிப்புணர்வுகொண்டவர்கள். நம்பகத்தன்மையானவர்கள். தயக்க சுபாவம் இவர்களிடம் இருக்கும். எளிமையை விரும்புவார்கள். புதிதாக அறிமுகமாகிறவர்களிடம் எளிதாக ஒட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் அறிமுகமாகி நம்பிக்கையை பெற்றவர்களிடம் அப்படியே ஒட்டிக்கொள்வார்கள். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அடுத்தவர்களை பற்றிய ரகசியங்களையும் காப்பாற்றுவார்கள்.

    எல்லாவற்றையும் உணர்ச்சிபூர்வமாக அணுகுவார்கள். தன்னை யாராவது ஏமாற்றிவிட்டால் அதை மறக்க மாட்டார்கள். தங்களுக்கு பிடித்த விஷயங்களை மட்டுமே செய்வார்கள். இவர்களுக்கென்று தனிப்பட்ட கொள்கைகள் இருக்கும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்பதுபோல் எந்த முடிவும் எடுக்கமாட்டார்கள்.

    ஆகாய முகம்: முன்கோபம் கொண்டவர்கள்

    சிறிய ஒடுங்கிய கண்களை கொண்டிருப்பார்கள். காதுகளை தொட்டிருக்கும் தாடை எலும்பின் தொடர்ச்சி தூக்கலாக காணப்படும். மூக்கு பெரியதாகவும், உதடுகள் சிறியதாகவும் காணப்படும். இவர்கள் தனிமை விரும்பிகள். நண்பர்கள் குறைவாக இருப்பார்கள். லட்சியங்கள் நிறைந்தவர்களாக காணப்படுவார்கள். எளிதாக உணர்ச்சி வசப்படுவார்கள். கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவார்கள்.
    ×