search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களின் மனதில் இருப்பது முகத்தில் தெரியும்...
    X
    பெண்களின் மனதில் இருப்பது முகத்தில் தெரியும்...

    பெண்களின் மனதில் இருப்பது முகத்தில் தெரியும்...

    ‘அந்த பெண்ணைப் பார்த்தால் அவ்வளவு நல்லவளாக தெரியலை. அவளிடம் எதுக்கும் கொஞ்சம் கவனமாக இருந்துக்கணும்’ என்று, முகத்தை பார்த்தே சிலர், மற்றவர்களை கணித்துக்கூறிவிடுவார்கள்.
    ‘அந்த பெண்ணைப் பார்த்தால் அவ்வளவு நல்லவளாக தெரியலை. அவளிடம் எதுக்கும் கொஞ்சம் கவனமாக இருந்துக்கணும்’ என்று, முகத்தை பார்த்தே சிலர், மற்றவர்களை கணித்துக்கூறிவிடுவார்கள். ஒருவரது குணத்தை அறிவதில் அவரது முகம் முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதர்கள் அனைவருமே தங்களோடு தொடர்பில் இருக்கும் ஒவ்வொருவரின் குணத்தையும் கணித்து அறிவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

    அக்னி முகம்: கவனத்தை ஈர்ப்பவர்கள்

    அகன்ற பெரிய கண்கள், ஆப்பிள் கன்னங்கள், கூர்மையான தாடை, சற்று பெரிய வாய் போன்றவை இந்த முகத்தின் அடையாளம். இவர்கள் விரைவாக மற்றவர்களை கவர்ந்து விடுவார்கள்.

    எல்லோரிடமும் நெருக்கமாக பழகி, நட்பு பாராட்டுவார்கள். இவர்களுக்கு கலைகளோடு தொடர்பு இருக்கும். பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் மனதில்பட்டதை சொல்லிவிடுவார்கள். சோம்பேறித்தனம் இவர்களிடம் இருக்காது. பலனே இல்லாவிட்டாலும் ஓடிஓடி உழைத்துக்கொண்டிருப்பார்கள். நிறைய நண்பர்கள் உண்டு. எதிரிகளும் இருந்துகொண்டிருப்பார்கள்.

    ஜல முகம்: பொருந்தி வாழும் மனோபாவம்

    எல்லோருமே வாழ்க்கையில் நிறைய பெண்களை சந்திக்கிறார்கள். அதில் ஒரு சில பெண்களிடம் கசப்பான அனுபவங்கள் கிடைக்கலாம். எந்த பெண்ணிடம் உங்களுக்கு கசப்பான அனுபவங்கள் கிடைக்கிறதோ அந்த பெண்ணின் கண்கள், புன்னகை, முக அமைப்பு போன்றவை உங்களை அறியாமலே உங்கள் மனதில் படம்போல் பதிந்துவிடும். காலங்கள் பல கடந்தாலும் அதே முக அமைப்பு கொண்ட இன்னொரு பெண்ணை நீங்கள் சந்திக்கும்போது, உங்கள் மனதிற்குள் ஒரு அபாயமணி அடித்து, ‘இந்த பெண்ணிடம் கவனமாக இரு. இல்லாவிட்டால் அந்த பெண்ணிடம் கிடைத்தது போன்ற கசப்பான அனுபவம் கிடைத்துவிடும்’ என்று உணர்த்தும்.

    முதலில் ஒரு பெண்ணிடம் கிடைத்தது போன்ற அதே அனுபவம்தான், அதே முக அமைப்பு கொண்ட அனைத்து பெண்களிடம் இருந்தும் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. அப்படி எல்லோரையும் கணிப்பது அறிவுபூர்வமான செயல் இல்லை என்றாலும், பல நூற்றாண்டுகளாக உலகில் பல்வேறு நாடுகளில் முகத்தை பார்த்து குணத்தை கணிக்கும் செயல் நடைமுறையில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. நமது நாட்டிலும் சாமுத்ரிகா லட்சணம் என்ற கோணத்தில் இந்த கலை கையாளப்படுகிறது. சீன நாட்டினர் இந்த கலையில் முன்னோடிகளாக இருக்கிறார்கள். இதில் அவர்கள் பல்வேறு விதமான ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

    நிலம், நீர், காற்று, ஆகாயம், அக்னி போன்றவைகளை நாம் பஞ்சபூதங்கள் என்கிறோம். இவைகளால் ஆனதுதான் உலகம் என்பதுபோல், இவைகளால் ஆனதுதான் மனித உடலும் என்ற நம்பிக்கை சீனாவிலும் இருக்கிறது. ஐம்பூதங்களை கொண்டு இவர்கள் பெண்களின் முகங்களையும் ஐந்துவிதமாக வகைப்படுத்தி, குணங்களை கணிப்பதாக சொல்கிறார்கள். அது பற்றி பார்ப்போம்!

    நீர் முகம் கொண்டவர்களுக்கு கண்கள் பளிச்சென்று காணப்படும். புருவங்கள் நீண்டிருக்கும். நெற்றி பெரியதாகவும், தாடைப் பகுதி ஈர்ப்புமிக்கதாகவும் தோன்றும். பேசும்போது உதடுகள் அழகுகூட்டும்.

    இவர்கள் எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தி வாழ்வார்கள். யாரிடமும் சண்டைபோடாமல் அனைவருக்கும் நல்லபிள்ளையாக நடந்துகொள்வார்கள். நிறைய நண்பர்களை பெற்றிருப்பார்கள். புதுமையை விரும்புவார்கள். உள்ளுணர்வு மிக்கவர்களாகவும் திகழ்வார்கள்.

    திறமைசாலியாகவும், ரகசியங்களை பாதுகாப்பவராகவும் இருப்பார்கள். மற்றவர்களை எளிதாக புரிந்துகொள்ளவும் செய்வார்கள்.

    காற்று முகம்:முன்பின் யோசிக்காதவர்கள்

    ஒடுங்கிய கண்கள், உயரமான நெற்றி, நீண்டு நிமிர்ந்த மூக்கு, சிறிய வாய், கெட்டியான தாடை போன்றவைகளை இவர்கள் பெற்றிருப்பார்கள்.

    முன்பின் யோசிக்காமல் பேசுவதும், செயல்படுவதும் இவர்களது இயல்பு. அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையோடு அடிக்கடி புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்திக் கொண்டிருப்பார்கள். இவர்கள் கனவு உலகத்தில் வாழ்பவர்கள். தனது திட்டங்கள் தோல்வியடைந்தால் மிகுந்த மனஉளைச்சலுக்குள்ளாகி விடுவார்கள்.

    பூமி முகம்: இவர்களை முழுமையாக நம்பலாம்

    இவர்களது நெற்றி அகலமாக இருக்கும். அதற்கு ஏற்றபடி தாடை எடுப்பாகத் தோன்றும். சிறிய மூக்கினை கொண்டிருப்பார்கள். கண் கள் பெரியதாகவும், புருவங்கள் அடர்த்தியாக நீண்டும் காணப்படும்.

    இவர்கள் விழிப்புணர்வுகொண்டவர்கள். நம்பகத்தன்மையானவர்கள். தயக்க சுபாவம் இவர்களிடம் இருக்கும். எளிமையை விரும்புவார்கள். புதிதாக அறிமுகமாகிறவர்களிடம் எளிதாக ஒட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் அறிமுகமாகி நம்பிக்கையை பெற்றவர்களிடம் அப்படியே ஒட்டிக்கொள்வார்கள். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அடுத்தவர்களை பற்றிய ரகசியங்களையும் காப்பாற்றுவார்கள்.

    எல்லாவற்றையும் உணர்ச்சிபூர்வமாக அணுகுவார்கள். தன்னை யாராவது ஏமாற்றிவிட்டால் அதை மறக்க மாட்டார்கள். தங்களுக்கு பிடித்த விஷயங்களை மட்டுமே செய்வார்கள். இவர்களுக்கென்று தனிப்பட்ட கொள்கைகள் இருக்கும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்பதுபோல் எந்த முடிவும் எடுக்கமாட்டார்கள்.

    ஆகாய முகம்: முன்கோபம் கொண்டவர்கள்

    சிறிய ஒடுங்கிய கண்களை கொண்டிருப்பார்கள். காதுகளை தொட்டிருக்கும் தாடை எலும்பின் தொடர்ச்சி தூக்கலாக காணப்படும். மூக்கு பெரியதாகவும், உதடுகள் சிறியதாகவும் காணப்படும். இவர்கள் தனிமை விரும்பிகள். நண்பர்கள் குறைவாக இருப்பார்கள். லட்சியங்கள் நிறைந்தவர்களாக காணப்படுவார்கள். எளிதாக உணர்ச்சி வசப்படுவார்கள். கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவார்கள்.
    Next Story
    ×