என் மலர்
ஆரோக்கியம்
நீரிழிவு நோய் கட்டுப்படாதவர்களுக்கு தொடை இடுக்குகளில் இது அடிக்கடி வந்து தொல்லை கொடுக்கும். காரணம், இங்கு ஏற்படுகின்ற அரிப்பு இரவு நேரத்தில்தான் ரொம்பவும் தீவிரமாக இருக்கும்.
சுத்தமில்லாத இடங்களில் படுத்து உறங்குவதன் மூலமும், அசுத்தமான துணிகள் மூலமும் உடல் இடுக்குகளில் வட்ட வட்டமாகப் படையும் அரிப்பும் தோன்றுகிறது. பாமர மக்கள் இதை ‘படை’ என்று அழைக்கின்றனர்.
நீரிழிவு நோய் கட்டுப்படாதவர்களுக்கு தொடை இடுக்குகளில் இது அடிக்கடி வந்து தொல்லை கொடுக்கும். காரணம், இங்கு ஏற்படுகின்ற அரிப்பு இரவு நேரத்தில்தான் ரொம்பவும் தீவிரமாக இருக்கும்.
தூக்கத்தில் அதை சொரிய சொரிய நகங்களில் இருக்கிற பாக்டீரியா கிருமிகள் தொற்றிக்கொள்ளும். இது ரத்த சர்க்கரையை இன்னும் அதிகரித்துவிடும். இதனால் நோய் தீவிரமடையும். ரத்த சர்க்கரையை சரியாக வைத்திருக்காவிட்டால், நோய் குணமாக அதிக நாள் ஆகும். அதிலும் கோடையில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.
வழக்கமாக உடல் பருமன் உள்ளவர்களுக்கு அக்குள், தொப்புள், இடுப்பு, தொடை இடுக்கு, மார்பகங்களின் அடிப்பகுதி, விரல் இடுக்குகள்... இப்படி பல இடங்களில் காளான் பாதிப்பு அதிகமாக தெரியும்.
இந்த இடங்களில் பாக்டீரியா தொற்றும்போது ஏற்படும் நோயை ‘தோல் மடிப்பு நோய்’ என்கிறோம். பொதுவாக இந்த இடங்களில் உராய்வு அதிகமாக இருக்கும் என்பதால், மேல் தோல் அடிக்கடி சிதைந்துவிடும். இதன் வழியாக காளான் கிருமிகள் உடலுக்குள் நுழைவது எளிதாகிவிடும். இது தோல் மடிப்பு நோய்க்கு வழிவிடும்.
‘சேற்றுப் புண்’ என பாமரர்களால் அழைக்கப்படும் காளான் நோய் இது. கால் விரல் இடுக்குகளில் சிறு சிறு கொப்புளங்கள் ஏற்படும். அரிப்பும் வலியும் தொல்லை தரும். கொப்புளங்கள் வெடித்து புண் உண்டாகும். ஈரமான இடத்தில் அதிக நேரம் கால்களை வைத்திருப்பதாலும், கை விரல்களை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதாலும் இந்த நோய் உண்டாகிறது. பெரும்பாலும் தண்ணீரில் அதிகம் புழங்கும் விவசாயிகள், தோட்ட வேலை, பண்ணை வேலை செய்கிறவர்கள் இந்த நோயால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எல்லா காளான் நோய்களுக்கும் காளான் படைக்களிம்புகளை, பவுடரை தொடர்ந்து பூசி, மருத்துவர் சொல்லும் கால அளவுக்குத் தகுந்த மாத்திரைகளை சாப்பிட்டுவந்தால் குணப்படுத்திவிடலாம். சிலருக்கு ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளும் தேவைப்படலாம். சுய சுத்தம் மிக முக்கியம். தினமும் இரண்டு முறை சோப்பு போட்டுக் குளிக்க வேண்டியது அவசியம். முதல் நாள் உடுத்திய உடைகளை சோப்பு போட்டு துவைத்து, வெயிலில் உலர வைத்து, இஸ்திரி போட்டு மறுபடியும் உடுத்த வேண்டும். எக்காரணத்தை கொண்டும் அடுத்தவர் உடுத்திய உடைகளை உடுத்தக்கூடாது.
அடுத்தவரின் சோப்பு, சீப்பு, ஷாம்பு, கைக்குட்டை போன்றவற்றை பகிர்ந்து கொள்ளக்கூடாது. இறுக்கமான கால் சட்டைகள், உள்ளாடைகளை அணியக்கூடாது. பருத்தி துணியாலான ஆடைகளே நல்லது. அதிக ஈரத்துடன் ரொம்ப நேரம் இருக்கக் கூடாது. காளான் படை உள்ளவர்களை தொட்டு பழகுவதும் நெருங்கிப் பழகுவதும் கூடாது.

தங்கள் முகத்தை அழகாக காட்டிக்கொள்ள மணப்பெண்கள் புதிய அலங்கார மாஸ்குகளை அணிகிறார்கள். அவை மணப்பெண்கள் உடுத்தியிருக்கும் உடைக்கு பொருத்தமாகவும், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளுக்கு பொருத்தமாகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
லட்சங்களில் பணத்தை செலவிட்டு ஆர்ப்பாட்டமாக நடந்த மணவிழாக்களுக்கு கொரோனா முடிவுகட்டியதால், காலத்திற்கு ஏற்றபடி ‘கலர்புல்லாக’ திருமணங்களை நடத்த அனைவரும் தயாராகிவிட்டார்கள். ஆடம்பர விருந்து, கொண்டாட் டங்களை தவிர்த்து குறைந்த அளவு விருந்தினர்களோடு திருமணங்களை நடத்துகிறார்கள். அதே நேரத்தில் மணப்பெண்கள் இப்போதும் அழகிலும், அலங்காரத்திலும் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் அவர்கள் அணியும் முக கவசமும் தங்களுக்கு கூடுதல் அழகு தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
பொதுவாக மணப்பெண் அலங்காரத்தில் முக அழகு முதலிடம் பிடிக்கும். தங்கள் முகத்திற்கு பொருத்தமான மூக்குத்தி அணிந்துகொள்வார்கள். உதடுகளுக்கு லிப்ஸ்டிக் பூசி கூடுதலாக மெருகேற்றிக்கொள்வார்கள். ஆனால் இப்போது அவர்கள் அணியும் மாஸ்க் வாயையும், மூக்கையும் மூடி, அந்த அழகை மறைத்துவிடுகிறது. ஆனாலும் தங்கள் முகத்தை அழகாக காட்டிக்கொள்ள மணப்பெண்கள் புதிய அலங்கார மாஸ்குகளை அணிகிறார்கள். அது அவர்கள் முகத்தை பிரகாசிக்கவைக்கிறது. அவை மணப்பெண்கள் உடுத்தியிருக்கும் உடைக்கு பொருத்தமாகவும், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளுக்கு பொருத்தமாகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
தற்போது மணப்பெண்கள் அணியும் முக கவசங்களில் தங்க நூல் இணைப்பு கொண்டவை அதி அற்புதமான அழகைக் கொண்டிருக்கின்றன. முத்துகள், தொங்கல்கள், எம்ப்பிராய்டரி, ஜரிகை வேலைப்பாடுகள் போன்றவைகளும் மாஸ்குகளில் இடம்பெறுகின்றன. பூக்கள் மற்றும் விதவிதமான டிசைன்களை கொண்டும் மாஸ்குகள் கவர்ச்சியாக்கப்படுகின்றன.
அழகான மாஸ்குகள் மணப்பெண்களின் அழகுக் கவலையை குறைத்திருக்கின்றன. மாஸ்குகள் மூலம் தங்கள் முக அழகை மேம்படுத்திக்கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கையும் மணப்பெண்களிடம் ஏற்பட்டிருக்கிறது. சில மணப்பெண்களின் உதடு அல்லது மூக்கு அவர்கள் விரும்பும் அழகுடன் காட்சியளிக்காது. அந்த பகுதிகளின் அழகை மேம்படுத்த தனிக்கவனம் செலுத்தி ‘கரெக்டிவ் மேக்கப்’ போடுவார்கள். அப்படிப்பட்ட மணப்பெண்கள் இந்த கவர்ச்சி மாஸ்குகள் அணிவதில் அதிக மகிழ்ச்சியடைகிறார்கள். குறிப்பிட்ட பகுதிகளை மறைத்து, மாஸ்குகள் அவர்கள் கூடுதல் அழகுடன் காட்சியளிக்க துணைபுரிகின்றன.
மணப்பெண்களின் அலங்கார மாஸ்குகள் முதலில் வடஇந்தியாவில்தான் பிரபலமானது. இப்போது தமிழகத்தில் உள்ள பெருநகர பெண்களால் அதிகம் விரும்பி வாங்கி அணியப்படுகிறது. அவர்கள் திருமண உடைகள், ஆபரணங்கள் வாங்கும்போதே அதற்கு பொருத்தமான மாஸ்குகளையும் வாங்கிவிடுகிறார்கள். மணநாளுக்கு முன்பே அவைகளை எல்லாம் அணிந்து ஒத்திகையும் பார்த்துக்கொள்கிறார்கள்.
மாஸ்க் அணிவதால் மணப்பெண்கள் கண் அலங்காரத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். புருவத்தை சீராக்கி, கண்களுக்கு கவர்ச்சியை கூட்டுகிறார்கள். அதோடு முந்தைய காலங்களில் அவர்கள் மறந்து போயிருந்த நெற்றிச்சுட்டி, மாட்டி போன்றவைகளையும் இப்போது அணிந்துகூடுதல் அழகுடன் வலம் வருகிறார்கள். அதுமட்டுமின்றி இப்போது குறைந்த அளவு விருந்தினர்களே திருமண நிகழ்ச்சிகளில் பங்குபெறுகிறார்கள். அவர்கள் அனைவருமே மணப்பெண்ணின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்களாகவும் இருக்கிறார்கள். அப்படி திருமணத்தில் பங்கேற்கும் அனைவருமே ஒரே மாதிரி உடை அணிவதும், அதற்கு ஏற்றபடி ஒரே மாதிரியான முக கவசத்தோடு தோன்றுவதும் இப்போது புதிய டிரெண்ட்டாக இருந்துகொண்டிருக்கிறது.

குழந்தைகளை ஈஸியாக மடக்க அவர்களுக்கு பிடித்த உணவை செய்து கொடுத்து அசத்துங்கள். அதுவும் தயிர் சாண்ட்விச்னா குழந்தைகளுக்கு ரொம்ப இஷ்டம். சரி வாங்க தயிர் சாண்ட்விச்சை எப்படி செய்றதுனு பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
கோதுமை பிரெட் - 4
தயிர் - 1 கப்
ஸ்வீட் கார்ன் - 1/4 கப்
முட்டைக்கோஸ் - 1/4 கப்
கேரட் - 1/4 கப்
குடைமிளகாய் - 1/4 கப்
தேன் - தேவையான அளவு
உப்பு - தேவியான அளவு
மிளகு - தேவையான அளவு
செய்முறை:
முட்டைக்கோஸ், கேரட், குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தயிரில் சிறிதும் தண்ணீர் இல்லாமல் நீக்கி கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தயிரை போட்டு அதனுடன் சோளம், முட்டைக்கோஸ், கேரட், குடை மிளகாய் போன்றவற்றை ஒன்றுடன் ஒன்று சேரும் வரை நன்கு கலந்து கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் தேன், உப்பு, மிளகு ஆகியவை சேர்த்து கலந்து அதை தயிர் கலவையுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
கோதுமை பிரெட்டின் ஓரங்களை நீக்கி விட்டு கலந்த தயிர் கலவையை வைக்கவும்.
அதன் மேல் இன்னொரு பிரெட்டை வைத்து மூடினால் சுவையான தயிர் சாண்ட்விச் தயார்.

இதனை தக்காளி சாஸுடன் சாப்பிடால் கலக்கல் டேஸ்ட்டாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாதவிலக்கு நாட்களில் வேலைக்குப் போகும் பெண்கள் பத்து விஷயங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டும். அவை :

* அதிக ரத்தப்போக்கு, வயிற்று வலி, உடல் அசதி போன்றவை இருந்துகொண்டிருந்தால், வேலைக்கான நீண்ட தூர பயணத்தை தவிர்த்துவிடவேண்டும். கடினமான வேலைகளையும் அன்று செய்யாமல் இருக்கலாம்.
* முந்தைய மாதங்களைவிட அதிக ரத்தப்போக்கு இருந்துகொண்டிருந்தால், மகப்பேறு டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
* 80 சதவீதம் அளவுக்கு நனைந்த நிலையில் தினமும் நான்கு அல்லது ஐந்து பேடுகள் மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டால் அதனை அதிக ரத்தப்போக்கு என்று எடுத்துக்கொள்ளலாம். ரத்தம் கட்டிகளாக வெளியேறுவதும் அதிக ரத்தப்போக்கின் அடையாளம்தான்.
* முழுமையாக நனையவில்லை என்று கருதி பேடு மாற்றாமலே இருப்பது நல்லதல்ல. அவ்வாறு மாற்றாமல் இருந்தால் உறுப்பு பகுதியில் தொற்றுக்கிருமிகளின் தொந்தரவு ஏற்படும். 6 முதல் 8 மணி நேரத்தில் பேடு மாற்றிவிடவேண்டும்.
* மாதவிலக்கு நாட்களில் அந்தரங்க சுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டியது அவசியம். பராமரிப்பில் மென்மைத்தன்மையை கடைப்பிடிக்கவேண்டும். தினமும் ஒருமுறையாவது இளம்சுடுநீரில் வீரியம் குறைந்த சோப்பை பயன்படுத்தி சுத்தப்படுத்துங்கள்.
* சுத்தமான உள்ளாடையும், சுத்தமான பேடும் பயன்படுத்த வேண்டியது கட்டாயம்.
* ரத்தப்போக்கு அதிகம் இருப்பவர்கள் இரும்பு சத்து நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும். கீரைவகைகள், இறைச்சி போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். நார்ச்சத்து நிறைந்த உணவுகளும் தேவை. மலச்சிக்கல் ஏற்படுவதை உணவு மூலம் தவிர்க்கவேண்டும். மாதவிலக்கு நாட்களில் எளிதாக ஜீரணமாகும் உணவுகளை உண்ணுவது நல்லது. அதனால் சில உடல் அவஸ்தைகளை தவிர்த்திடலாம். தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகவேண்டும். இரண்டரை லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் பருகுங்கள்.
* உடல்வலியை குறைப்பதற்கான உடற்பயிற்சிகளை டாக்டரின் ஆலோசனைபடி செய்து வரவேண்டும். மாதவிலக்கு கால உடற்பயிற்சியை, மாதவிலக்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே செய்துவருவது அவசியம். வேலைக்குப் போகும் பெண்கள் தினமும் உடற்பயிற்சி செய்வது மிக நல்லது.
* ஒவ்வொரு மாதமும் வயிற்று வலியால் அவதிப்படுகிறவர்கள் காலந்தாழ்த்தாமல் டாக்டரிடம் ஆலோசனை பெறவேண்டும்.
* மாதவிலக்கு நாட்களில் மிதமான யோகாசனங்களை செய்யலாம். அவைகளை அதிக நேரம் செய்யவேண்டாம். ஏரோபிக்ஸ், ஜாக்கிங் போன்றவைகளை மாதவிலக்கு நாட்களில் தவிர்த்துவிடலாம்.

குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுக்கும் போது அம்மாக்கள் ஒரு சிக்கலை பொதுவாகவே சந்திப்பார்கள். அவை என்னவென்றும் எப்படி புட்டிப்பால் கொடுக்க வேண்டும் என்றும் பார்க்கலாம்.
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் தான் சிறந்தது என்றாலும் வெகு அரிதாக சில குழந்தைகளுக்கு தாய்ப்பால் பற்றாக்குறை உண்டாகிறது. அல்லது தாய்ப்பால் கிடைக்காமல் போகிறது. அப்படி இருக்கும் போது குழந்தைகளுக்கு பாட்டில் பால் கொடுப்பது வழக்கம். அதே போன்று தாய்ப்பால் கொடுத்தாலும் ஆறுமாதங்களுக்கு பிறகு குழந்தைக்கு இணை உணவு கொடுத்தாலும் கூட தாய்ப்பால் பற்றாக்குறையாக இருக்கும். அதனால் குழந்தைக்கு மாற்றுப்பாலும் பழகுவார்கள். அப்போதுதான் பாட்டில் பழக்கத்தை ஏற்படுத்துவோம்.
குழந்தைக்கு பாட்டில் பழகும் போது முதலில் குழந்தை பாட்டில் பாலை குடிக்க திணறுவார்கள்.அம்மாவின் மார்பு காம்புகளில் உறிஞ்சு குடித்த குழந்தைக்கு திடீரென்று பாட்டில் பால் சிரமமாக இருக்கும். பாட்டில் பழகுவதற்கு சில வாரங்கள் வரை ஆகலாம். எனினும் குழந்தைக்கு பாட்டில் பால் பழகும் போது இதையெல்லாம் மனதில் வையுங்கள்.
குழந்தைக்கு பால் புகட்டும் போது உங்கள் முழங்கையை கைகளில் மடித்து குழந்தையின் தலையை உங்கள் கை மேல் வைத்து கையை குழந்தையை சுற்றி இறுக்கி பாட்டிலை பிடித்து கொள்ளுங்கள். குழந்தையின் தலை நிமிர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.முதுகு வளைந்த நிலையில் இருக்க கூடாது. எக்காரணம் கொண்டும் குழந்தையை படுத்த நிலையில் வைத்து பால் புகட்ட கூடாது.
குழந்தைக்கு பாட்டில் பால் கொடுக்கும் போது அம்மாக்களும் நேராக உட்கார்ந்துகொள்ள வேண்டும். குழந்தையை முழங்கால்கள், வயிற்றிலும் கோணலில்லாமல் குழந்தையை சீராக வைத்திருக்க வேண்டும். தாய்ப்பால் போன்று அம்மாக்கள் குழந்தையின் முகத்தை ஒட்டி இருக்க வேண்டும். குழந்தையின் பால் பாட்டில் நிப்பிள் முழுவதும் குழந்தையின் வாயில் வைக்க வேண்டும். இல்லையெனில் குழந்தை பாட்டில் பாலை உறிஞ்சும் போது குழந்தையின் வாய் வழியே காற்று சென்றுவிட வாய்ப்புண்டு.
குழந்தை சற்றூ வளர்ந்ததும் குழந்தையின் தலையை தட்டையாக வைக்காமல் சற்று உயரமான தலையணையில் படுக்க வைத்து கொடுக்கவும். பாட்டிலில் பால் புகட்டுவதால் அதிக கவனம் தேவை. பாட்டிலில் பால் கொடுத்தால் தான் என்றில்லை. குழந்தை பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் போதும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுக்கும் போது அம்மாக்கள் ஒரு சிக்கலை பொதுவாகவே சந்திப்பார்கள். குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது அங்கும் இங்கும் வேடிக்கை பார்ப்பார்கள். குறும்பு செய்வார்கள். சில நேரம் நாக்கை நீட்டியபடி அம்மாவின் முகத்தை பார்த்துகொண்டிருப்பது,கைகளை வாய்க்குள் வைத்து விளையாடுவது, பசியின்மையை கொண்டிருப்பது, விரல்களை வாயில் வைத்திருப்பது இவற்றுக்கு இடையே தான் அவர்கள் பால் குடிப்பார்கள். ஆனால் பால் பாட்டில் குடிக்கும் போது அவர்கள் உறிஞ்சுவிட்டாலே பால் வரத்தொடங்கி விடும்.
அதனால் குழந்தைக்கு அடிக்கடி பால் புகட்ட வேண்டியிருக்காது. ஆனால் தாய்ப்பால் குடிக்கும் போது குழந்தை அதிகமாக பால் குடித்தது. ஆனால் பாட்டில் பாலில் குழந்தை பால் அதிகம் கொடுப்பதில்லை என்று அம்மாக்கள் கவலைகொள்வார்கள். இதனால் குழந்தையின் வாயில் பால் பாட்டிலை வலுக்கட்டாயமாக புகட்டுவார்கள். ஆனால் பாட்டில் பால் கொடுக்கும் போது குழந்தைக்கு தொடர்ந்து கொடுக்காமல் இடைவெளிவிட்டு கொடுக்க வேண்டும். குழந்தை பாட்டிலில் பால் உறிஞ்சுவதற்கு ஏற்றதாக உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுத்தாலும் தண்ணீர் கொடுத்தாலும் வேகமாகவோ மெதுவாகவோ இல்லாமல் சீராக வெளிவருகிறதா என்பதை கவனிக்க வேண்டும். குழந்தை ஒரே மூச்சில் பால் குடிக்க வேண்டும் என்று நினைக்காமல் சில நிமிடங்கள் அல்லது குழந்தை 15 முறை விழுங்கிய உடன் இடைவெளி விட வேண்டும். இது குழந்தைக்கு உடல்பருமனை உண்டாக்கிவிடவும் வாய்ப்புண்டு. குழந்தைக்கு வயிறு நிறைவது தெரியாமல் அதிகமாக கொடுத்துவிட வாய்ப்புண்டு.
குழந்தைக்கு பால் கொடுக்கும் போது பால் வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள். பாலை மணிக்கட்டில் சில துளி விட்டு பிறகு சரியான வெப்பத்தில் கொடுக்கலாம். குழந்தை வளர வளர ஈறுகள், பற்கள் வளர்வதால் குழந்தை நிப்பிள் கடிப்பார்கள். அதனால் நிப்பிள் அதிகமாக விரிசலை சந்திக்க கூடும். அதையும் அடிக்கடி கவனத்தில் கொண்டு பார்க்க வேண்டும்.
இறுதியாக பாட்டில்களை பயன்படுத்தும் போது சரியான பாட்டிகளை தேர்வு செய்யுங்கள். தரமான பாட்டில்களாக பயன்படுத்துவது அவசியம். பாட்டில்களை சரியான முறையில் சுத்தம் செய்வது அவசியம். பாட்டில்கள், வளையம், நிப்பிள் அனைத்தையும் தனித்தனியாக கழட்டி சுத்தம் செய்யவும். தினமும் கொதிநீரில் பாட்டிலை போட்டு எடுக்கவும்.பாட்டிலை கழுவி துடைத்து வெயிலில் உலர வைத்து எடுக்கவும். பாட்டில் வாங்கும் போது ஏதும் சந்தேகம் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெறவும் தயங்க வேண்டாம்.

எதையாவது கொழுத்திப்போட்டு காட்டுத்தீ போன்று பரவவைத்து சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி பொழுதுபோக்குபவர்கள் இப்போது அதிகம். அவர்கள் பெண்களின் உச்சி முதல் பாதம் வரை எல்லாவற்றையுமே ஊடுருவிப்பார்த்து, குற்றம்கண்டுபிடித்து விமர்சிப்பார்கள்.
அனஸ்வராவின் உடைக்கும், உணர்வுக்கும் பெண்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. “எனது உடையின் அளவைப் பார்ப்பவர்கள் அதையே பார்த்துக்கொண்டு நிற்கட்டும். எனக்கு சவுகரியமான உடையை அணிவது என் சுதந்திரம்” என்று அனஸ்வராவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார், ‘ஸ்டைலிஸ்ட்’டாக பணிபுரியும் அனிலா ஆண்டனி.
“பெண்களை கருத்துள்ளவர்களாக வளர்ப்பதும், அவர்களுக்கு தனிப்பட்ட கருத்துகள் இருப்பது தவறல்ல என்று புரியவைத்து வளர்ப்பதும் நமக்கு முக்கியம். பெற்றோரால் நல்லமுறையில் வளர்க்கப்படும் எந்த ஆணும் இன்னொரு பெண்ணை மோசமாக பார்க்கமாட்டார்” என்கிறார், ஆசிரியை எரிகா.
விவாதத்தை உருவாக்கிய புகைப்படம்
எதையாவது கொழுத்திப்போட்டு காட்டுத்தீ போன்று பரவவைத்து சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி பொழுதுபோக்குபவர்கள் இப்போது அதிகம். அவர்கள் பெண்களின் உச்சி முதல் பாதம் வரை எல்லாவற்றையுமே ஊடுருவிப்பார்த்து, குற்றம்கண்டுபிடித்து விமர்சிப்பார்கள். அதிலும் குறிப்பாக நடிகைகள் என்றால் விமர்சனங்கள் சில நேரங்களில் தரம்தாழ்ந்து போய்விடுகின்றன. திருமணத்திற்கு பின்பு நடிகைகளின் உடலில் ஏற்படும் மாற்றங்களையும், உடைகளில் ஏற்படும் மாற்றங்களையும்கூட சகட்டுமேனிக்கு விமர்சித்து வாங்கிக்கட்டிக் கொள்கிறார்கள்.
இந்த வரிசையில் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருவது, 18 வயது இளம் நடிகை அனஸ்வராவின் கால்கள். தனது பிறந்தநாளுக்கு சகோதரி பரிசாக வாங்கிக்கொடுத்த டாப்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து போட்டோ எடுத்து அதை அனஸ்வரா சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார். அந்த படத்தை பார்த்து சிலர் கேலியும் கிண்டலுமாக விமர்சிக்க விவாதம் உருவாகிவிட்டது. உடனே நடிகைகளும், பெண்ணியவாதிகளும் ஒன்று சேர்ந்து, அனஸ்வராவுக்கு ஆதரவாக ‘ஆமாம்.. எங்களுக்கும் கால்கள் இருக்கின்றன’ என்று கூறி, விமர்சனங்களுக்கு பதிலடிகொடுக்க விவாதம் சூடாகிவிட்டது.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் கால்கள் இருக்கின்றன. மனிதர்களை தூக்கி நிறுத்தி, இயங்க வைப்பவை கால்கள். அவை இரண்டும் செயல்படாவிட்டால் மனிதர்கள் ஒரே இடத்தில் முடங்கிக்கிடக்க வேண்டியதாகிவிடும். இந்த கால்களை பொறுத்தவரையில் ஒரு முரண்பாடு என்னவென்றால் ஆண்களின் கால்களும், பெண்களின் கால்களும் அவர்கள் வளர்ந்து வரும் பருவத்தில் வித்தியாசப்படுத்தி பார்க்கப்படுகின்றன. தொடக்கக் கல்வி காலம் வரை இருபாலரின் கால்களும் ஒரே மாதிரிதான் கவனிக்கப்படுகின்றன. பெண்கள் உயர்நிலைப்பள்ளியை தொடும்போது ‘பிராக்’ கில் இருந்து சுடிதாருக்கு மாறுகிறார்கள். அப்போதிலிருந்து குடும்பத்தினர் ‘கால்களை மூடிவைத்துக்கொள்ளும்படி’ பெண்களிடம் கூறுகிறார்கள். அதே பருவத்தில் இருக்கும் ஆண்களிடம், கால்களை மூடிவைத்துக்கொள்ளும்படி பெற்றோர் எந்த உத்தரவும் போடுவதில்லை.
அப்போதுதான் பெண்களுக்கு ‘அண்ண னின் கால்களை மூடிவைத்துக்கொள்ளச் சொல்வதில்லை. நமது கால்களுக்கு மட்டும் மூடுதல் தேவைப்படுகிறது’ என்று சிந்தனை எழுகிறது. அது பற்றி அதிகம் சிந்திக்கவிடாமல் பெண்களின் கால்களுக்கு கொலுசுபோட்டு, நகங்களுக்கு கலரிங்கொடுத்து அழகாக்கப்படுகிறது. ‘கொலுசே கொலுசே இசை பாடு கொலுசே’ என்று கவிஞர்களால் பாடு பொருளாகவும் மாறுகிறது. வாழைத்தண்டு போன்ற கால்கள் என்று மெருகூட்டி கவர்ச்சி சாயமும் பூசப்படுகிறது. அதே நேரத்தில் ஆண்களின் கால்கள் அப்படியே கண்டுகொள்ளாமல் விடப்பட்டுவிடுகிறது. வெயில்கொண்டாலும், மழைபட்டாலும் அது பற்றி பெற்றோருக்கு பெரிதாக ஒன்றும் கவலையில்லை.
பெண்ணின் கால் வெளியே தெரிந்தால் வெட்கக்கேடு என்ற கருத்தை வலுவாக்கிவிட்டார்கள். அதனால் அவள் அணிந்து செல்லும் உடையின் அளவு சாலை ஓரத்தில் உள்ள பல கண்களால் அளவெடுக்கப்படுகிறது. கால்கள் கவர்ச்சிப் பொருளாக பேசப்படுகிறது.
ஆணின் கால்கள் ஆடைகளின்றி எந்த அளவுக்கு வெளியே தெரியவேண்டும்? என்று சமூகவலைத்தளத்தில் எந்த விவாதமும் இல்லை. ஆனால் பெண் எந்த அளவுக்கு உடை தரிக்கவேண்டும்? கால்களில் எந்த அளவு வரை வெளிக்காட்டவேண்டும்? என்றெல்லாம் சூடான விவாதங்கள் நடக்கின்றன. பெண்களின் உடையும், உணர்வுகளும் சர்ச்சைக்குரியதாக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட விவாதத்தில்தான் அனஸ்வரா சிக்கியிருக்கிறார். இவர் தமிழில் ராஞ்சி என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். தனது போட்டோவில் கால்கள் அதிகம் கவனிக்கப்பட்டு வைரல் ஆனது பற்றி அவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்.
“செப்டம்பர் 8-ந்தேதி எனது பிறந்த நாள். கொரோனா காலகட்டம் என்பதால் நான் வீட்டிலேயே இருந்தேன். 18-வது பிறந்தநாள் என்பதால் 18 வித மான பொருட்களை எனக்கு அக்காள் ஐஸ்வர்யா பரிசளித்தாள். அதுவும் நான் அவ்வப்போது ஆசைப்பட்டு கேட்டதை எல்லாம் நினைவில் வைத்து வாங்கிக்கொடுத்தாள். அவை அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்தமானவை என்பதால் ஒவ்வொன்றையும் பிரித்துப்பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். அதில் ஒன்றுதான் எனக்கு அதிக மகிழ்ச்சியை தந்த இந்த ஷார்ட்டும்-டாப்சும். மறுநாள் அதனை அணிந்துகொண்டு, எனது தோழி ஒருத்தியை அழைத்து விதவிதமாக போட்டோ எடுத்தேன். அதில் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டேன். அதுதான் இத்தனை களேபரத்திற்கும் காரணம்.
எனக்கென்று தனியாக போன் கிடையாது. அம்மாவின் போனில் நான் இன்ஸ்டாகிராமினை மட்டும் பயன்படுத்துவேன். அந்த போட்டோவை பதிவிட்டுவிட்டு, நான் எனது உறவினர் ஒருவருடைய திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றுவிட்டேன். அப்போது அம்மாவின் போனுக்கு நிறைய அழைப்புகள் வந்திருக்கின்றன. சில டெலிவிஷன் சேனல்களில் இருந்தும் அழைத்திருக்கிறார்கள். அம்மா அதை முதலில் என்னிடம் சொல்லவில்லை. பிரச்சினை பெரிதான பின்புதான் என்னிடம் சொன்னார்.
நான் பதிவிட்டிருந்த எனது போட்டோவின் கீழே மிக மோசமான கமெண்டுகள் காணப்பட்டன. சைபர் அட்டாக் என்று சொல்வார்களே அந்த அளவுக்கு அதன் விளைவுகள் இருந்தன. ஆனால் நடப்பதை எல்லாம் பார்த்து எனக்கு சிரிப்புதான் வந்தது. அதோடு குடும்பத்தினரும் எனக்கு பக்கபலமாக இருந்ததால், நான் அடுத்து கூடுதலாக இரண்டு படங்களை பதிவிட்டு துணிச்சலாக என் கருத்தையும் அதில் வெளிப்படுத்தினேன்.
எனக்கு மேற்கத்திய உடைகள் ரொம்ப பிடிக்கும். அது என் அக்காளுக்கும் தெரியும். அக்காள் எனக்கு தேவையான சக்தியை தருகிறார். என்னை விமர்சித்து சமூகவலைத்தளத்தில் வந்த ஒவ்வொரு வார்த்தையையும் படித்து என் தந்தை சிரித்தார். எனது குடும்பத்தினர் எனக்கு தேவையான ஆடை சுதந்திரத்தை தந்திருக்கிறார்கள்” என்கிறார், அனஸ்வரா.
‘உங்கள் போட்டோக்களுக்கும், கருத்துக்களுக்கும் இந்த அளவுக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?’ என்று கேட்டபோது..
“இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னை மோசமாக விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில்தான் இரண்டாவது போட்டோவை பதிவிட்டேன். அதனால் அது ஒரு போராட்டம் போல் ஆகிவிட்டது. மலையாள திரை உலகம் முழுவதும் எனக்கு ஆதரவு தந்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. வெளியே இருந்தும் நிறைய ஆதரவு கிடைத்தது. அந்த நாட்களில் எங்கள் வீட்டு போன் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. எல்லோரும் ‘தைரியமாக இரு.. நாங்கள் உடனிருக்கிறோம்’ என்று சொன்னார்கள். இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கானவர்கள் எனக்கு ஆதரவு கருத்துக்களை வெளியிட்டார்கள். ஆனாலும் சிலர் ஏன் எல்லாவற்றையும் எதிர்மறையாக பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.
“பெண்கள் மானபங்கப்படுத்தப்படுகிறார்கள் அல்லது காதலன் காதலியை கொல்கிறான். இந்த வன்முறைகள் எல்லாமுமே பெண்களை போகப்பொருட்களாக பார்ப்பதால்தான் ஏற்படுகின்றன. பெண்களின் கால்களை பார்க்கும்போது சிலரது சிந்தனை ஏன் மோசமாக செல்கிறது என்று தெரியவில்லை. இனி எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது. அதற்காக என்னால் முடிந்ததை எல்லாம் செய்வேன். நான் இனியும் இதுபோன்ற ஆடைகளை அணிவேன். சவுகரியம் தான் எனக்கு தேவை. மற்றவர்களின் சிந்தனையை பற்றி நான் கவலைப்படப்போவதில்லை” என்கிறார், அனஸ்வரா.

பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு, குழந்தைகள் வளர்ந்து சிறுமியானதும் ‘அவர்களுக்கு எந்த வயதில் இருந்து பிரா அணிய கற்றுத்தரவேண்டும்?’ என்ற கேள்வி எழுகிறது.
பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு, குழந்தைகள் வளர்ந்து சிறுமியானதும் ‘அவர்களுக்கு எந்த வயதில் இருந்து பிரா அணிய கற்றுத்தரவேண்டும்?’ என்ற கேள்வி எழுகிறது. பொதுவாக அவர்கள் பத்து வயதை அடையும்போது, அம்மாக்கள் அணியும் பிராக்கள் மீது தங்கள் கவனத்தை திருப்புவார்கள். அதோடு பிராக்கள் பற்றி பல்வேறு கேள்விகளையும் எழுப்புவார்கள். அப்படி அவர்கள் கேள்விகள் கேட்க ஆரம்பிக்கும்போது அவர்களுக்கு மார்பகம் வளரத் தொடங்கிவிட்டது என்பதை தாய்மார்கள் புரிந்துகொள்ளலாம். அப்போது மகளின் கேள்விகளுக்கு தாய் தெள்ளத்தெளிவாக பதிலளிக்கவேண்டும். எரிச்சல்பட்டு அவளது கேள்விகளை திசைதிருப்பும் விதங்களில் நடந்துகொள்ளக்கூடாது.
12, 13 வயதுகளில் பல சிறுமிகள் தங்கள் மார்பக வளர்ச்சி பற்றி குழம்பி, அப்போது என்ன மாதிரியான உடை அணிவது என்று தெரியாமல் பள்ளிக்கு செல்லக்கூட தயங்குவார்கள். அந்த தயக்கம் அவர்களது கல்வியை மட்டுமல்ல, மனோவளர்ச்சியையும் பாதிக்கும். அதனால் மகள்களிடம் எட்டு வயதில் இருந்தே மார்பக வளர்ச்சி பற்றி தாய்மார்கள் பேச ஆரம்பித்துவிடலாம்.
பொதுவாக எட்டுவயதில் தான் மார்பகம் வளரத் தொடங்குகிறது. அப்போதிருந்து அடுத்த ஆறு முதல் எட்டு வருடங்கள் வரை மார்பக வளர்ச்சி இருந்துகொண்டிருக்கும். இந்த காலகட்டத்தில்தான் ‘பிரேசியர்’ என்ற பிரா பெண்களின் உள்ளாடையாகிறது. ‘இப்போதுதானே மார்பக வளர்ச்சி தொடங்குகிறது. அதை நீ கருத்தில்கொள்ளாமல் உன் விருப்பத்திற்கு ஏற்ப உடை அணிந்துகொள்’ என்று தாய்மார்கள் தங்கள் மகள்கள் விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், மார்பக வளர்ச்சி தொடங்கும் காலத்தில் இருந்து அதற்கான பிரா அணிய வழிகாட்ட வேண்டும். முதலில் ‘பிகினர்ஸ் பிரா’ அணியவேண்டும்.
பிரா அணியத் தொடங்கும் காலகட்டத்தில் அவர்களுக்கு அதிக மனக்குழப்பம் ஏற்படும். அப்போது தோழிகளின் உடலோடு தங்கள் உடலை ஒப்பிட்டுப்பார்ப்பார்கள். தோழிகள் முதலிலே பிரா அணியத் தொடங்கிவிட்டால் ‘தனக்கு இன்னும் மார்பகங்கள் வளரவில்லையே. தான் மட்டும் பிரா அணியும் சூழல் உருவாகவில்லையே’ என்று கவலைப்படுவார்கள்.
தோழிகள் அணியும் முன்பே தான் பிரா அணியவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ‘அவர்கள் எல்லாம் அணியவில்லை. நான் மட்டும் ஏன் அணியவேண்டும்?’ என்று கேட்பார்கள். அம்மாக்கள்தான் மகள்களின் இத்தகைய குழப்பங்களுக்கு முடிவுகட்டி தேவையான ஆலோசனைகளை வழங்கி அவர்களிடம் தெளிவினை உருவாக்கவேண்டும். அது மட்டுமின்றி, ‘உனது உடல் உறுப்பு பகுதிகளில் ஆடைகளால் மறைக்கப்படும் எந்த பகுதி பற்றி எந்த சந்தேகங்கள் ஏற்பட்டாலும் என்னிடம் கேள். உன் சந்தேகங்களை எல்லாம் எப்போதும் நான் உன் தோழி போன்று தீர்த்துவைப்பேன்’ என்று கூறி மகளுக்கு நம்பிக்கையும் ஊட்டவேண்டும்.
சிறிய மார்பகங்களை கொண்ட பெண்கள், தாங்கள் திருமணமாகி தாய்மையடைந்து குழந்தையை பெற்றெடுத்த பின்பு குறைந்த அளவுதான் பால் சுரக்கும் என்று நினைக்கிறார்கள். பெரிய மார்பகமாக இருந்தால் தங்கள் குழந்தைகளின் தேவைக்கு அதிக அளவில் பால் சுரக்கும் என்றும் நம்புகிறார்கள். இது தவறான நம்பிக்கை. மார்பக அளவிற்கும் பால் சுரப்பிற்கும் தொடர்பு இல்லை.

தேநீர் தயாரிக்க பயன்படுத்தப்படும் டீ பேக்குகளை கொண்டு சருமம், கூந்தல் உள்பட பல்வேறு உடல்நல பிரச்சினைகளை களையலாம்.
தேநீர் தயாரிக்க பயன்படுத்தப்படும் டீ பேக்குகளை கொண்டு சருமம், கூந்தல் உள்பட பல்வேறு உடல்நல பிரச்சினைகளை களையலாம். கிரீன் டீ பேக்கை கொண்டு தேநீர் தயாரித்த பிறகு அந்த டீ பேக்கை மிதமான சூட்டில் கண்களில் வைக்கலாம். அல்லது டீ பேக்கை குளிர்சாதன பெட்டியில் குளிரவைத்துவிட்டு அதனை கண்களில் வைக்கலாம். தொடர்ந்து அவ்வாறு செய்து வந்தால் கண்களில் ஏற்படும் வீக்கம் குறையும். கருவளையங்களும் மறைய தொடங்கிவிடும்.
கிரீன் டீ பருகிய பிறகு டீ பேக்கை சருமத்திற்கு உபயோகப்படுத்தலாம். அது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்டுகளை கொண்டது. டீ பேக்கை கத்தரித்துவிட்டு அதில் இருக்கும் துகள்களை ‘பேஸ் பேக்’ தயாரிப்பதற்கு உபயோகப்படுத்தலாம். அதனை சருமத்தில் தடவுவது இயற்கையாகவே பிரகாசத்தை ஏற் படுத்தி கொடுக்கும். வயதான தோற்றம் தென்படுவதை தள்ளிப்போட வைக்கும். குளியல் நீரில் டீ பேக்குகளை சில நிமிடங்கள் ஊறவைத்துவிட்டு குளிக்கலாம். அது உடலுக்கு இதமளிக்கும்.
பயன்படுத்தப்படாத டீ பேக்குகளை கொண்டு சருமத்தை சுத்தப்படுத்தலாம். ஆழமான சரும சுத்திகரிப்புக்கு நீராவி சிறந்தது. நீராவியில் டீ பேக்குகளை 10 நிமிடங்கள் வைத்துவிட்டு சருமத்தில் தடவலாம். அது சரும துளைகளை சுத்தப்படுத்துவதற்கு உதவும். டீ பேக்குகளை வெந்நீரில் கலந்து வடிகட்டி தலைமுடியை சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தலாம். உச்சந்தலையில் தேயிலை நீரை ஊற்றி மசாஜ் செய்து குளித்து வந்தால் முடி தொடர்பான பிரச்சினைகள் நீங்கிவிடும்.

பட்டர் பீன்ஸில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து அதிகளவு உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்தானது அதிகப்படியான கொலஸ்ட்ராலை உடலினை விட்டு வெளியேற்றுகிறது.
தேவையான பொருட்கள் :
பட்டர் பீன்ஸ் - 1 கப்
சோம்பு - கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
தேங்காய் துருவல் - கால் கப்
இஞ்சித் துருவல் - 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
பட்டர் பீன்ஸுடன் உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை, இஞ்சி துருவலை கொட்டி தாளிக்கவும்.
அதனுடன் பட்டர் பீன்ஸ், கரம் மசாலா தூள் சேர்த்து கிளறவும்.
மசாலா வாசம் நீங்கியதும் தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கி ருசிக்கலாம்.
பட்டர் பீன்ஸ் - 1 கப்
சோம்பு - கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
தேங்காய் துருவல் - கால் கப்
இஞ்சித் துருவல் - 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
பட்டர் பீன்ஸுடன் உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை, இஞ்சி துருவலை கொட்டி தாளிக்கவும்.
அதனுடன் பட்டர் பீன்ஸ், கரம் மசாலா தூள் சேர்த்து கிளறவும்.
மசாலா வாசம் நீங்கியதும் தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கி ருசிக்கலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தூக்கம் வராமல் குழந்தை அவதிப்படுவதை கண்டுபிடிப்பது கடினம். 30 சதவீத குழந்தைகள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டால் பெற்றோர் பெரும்பாலும் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால் தூக்கம் வராமல் குழந்தை அவதிப்படுவதை கண்டுபிடிப்பது கடினம். தூக்கம் வராமல் தவிப்பது, நள்ளிரவில் திடீரென்று எழுவது, படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பது போன்றவை தூக்கமின்மையின் அறிகுறியாக இருக்கலாம். 30 சதவீத குழந்தைகள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
* பகல் வேளையில் குழந்தைகள் அதிக நேரம் தூங்குவது தூக்க கோளாறு பிரச்சினைக்கு ஆரம்பகட்ட அறிகுறியாகும். சிலவேளைகளில் சோர்வு காரணமாக பகலில் அயர்ந்து தூங்கலாம். ஆனால் தொடர்ந்து பகலில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தால் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
* குழந்தைகளுக்கும் கனவுகள் வரக்கூடும். இரவில் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தைகள் சில சமயங்களில் கனவின் பிரதிபலிப்பால் திடீரென்று பயந்து போய் எழுவார்கள். அதன்பிறகு தூக்கம் வராமல் விளையாட தொடங்கிவிடுவார்கள். இதனால் குழந்தையின் தூக்கம் பாதிப்புக்குள்ளாவதோடு வேறு சில உடல்நல பிரச்சினைகளும் ஏற்படக்கூடும்.
* குழந்தைகள் படுக்கைக்கு சென்ற சில நிமிடங்களில் தூங்க வேண்டும். அதுதான் சரியான தூக்கம். தூக்கம் வருவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டால் அது தூக்கமின்மை பிரச்சினைக்கு காரணமாகிவிடும். மன அழுத்தத்திற்கு உள்ளான குழந்தைகளால் ஆழ்ந்து தூங்க முடியாது. அவர்கள் இரவில் நீண்ட நேரம் தூக்கம் வராமல் கண்விழித்திருப்பார்கள்.
* சில குழந்தைகள் தூங்கும்போது குறட்டை விடுவார்கள். அதனால் நுரையீரலில் அடைப்பு ஏற்படுவதோடு தூக்கமின்மையும் உண்டாகும். மூக்கடைப்பு, சுவாசக்கோளாறு, சுவாசக்குழாய் நோய்த்தொற்று போன்றவை குழந்தைகளுக்கு குறட்டை ஒலி ஏற்படுவதற்கு பொதுவான காரணங்கள். எனினும் தொடர்ந்து குறட்டை பிரச்சினை இருந்து வந்தால் தூக்கம் பாதிப்புக்குள்ளாகும். தூக்கத்தில் மூச்சுத்திணறலும் ஏற் படக்கூடும். அதற்கு முறையான சிகிச்சை அவசியம்.
* தூக்கத்தில் கனவு வந்து எழுவதற்கும், எதையாவது நினைத்து பீதியில் விழித்தெழுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. தூக்கத்தில் இருந்து எழுந்து திடீரென்று அலறுவது, அழுவது, எதையாவது மனதில் நினைத்துக்கொண்டு பேசுவது, வேகமாக மூச்சை உள்ளிழுத்து வெளியிடுவது, வியர்வை வெளிப்படுவது, பதற்றம் அடைவது போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டால் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
* ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தூக்கத்தில் படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பது இயல்பாக நடக்கும் விஷயம்தான். ஆனால் 3-4 தடவைக்கு மேல் அப்படி செய்தால் அது தூக்கமின்மைக்கான அறிகுறியாகும்.
* சில குழந்தைகள் திடீரென்று கண்விழித்து எழுந்து நடப்பார்கள். அப்போது சம்பந்தம் இல்லாமல் ஏதாவது பேசிக்கொண்டிருப்பார்கள். இந்த வழக்கம் அடிக்கடி நீடித்தால் டாக்டரை கலந்தாலோசித்து பரிசோதனை செய்ய வேண்டியது அவசியமானது.

மனிதர்கள் அனைவரும் ஏதாவது ஒருவகை பயத்திற்கு ஆட்பட்டிருப்பார்கள். அதில் சிலவகை பயங்கள் வித்தியாசமானவை.

1. ‘ஜெனியோபோபியா' என்பது முகவாய் குறித்த பயம். இந்தப் பயம் உள்ளவர்கள், மற்றவர்களுக்கு முகவாய் சரியாய் அமைந்திருக்கிறதா என்று உற்றுப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். தங்கள் முகவாய் பகுதியையும் அவ்வப்போது கண்ணாடி முன்பு நின்று பார்த்து பரிசோதனை செய்துகொள்வார்கள். அவர்களது கவலை முழுவதும் முகவாயை சுற்றியே இருந்துகொண்டிருக்கும்.
2. தாடி, மீசை போன்று முகத்தில் வளரும் முடி குறித்தும் சிலருக்குப் பயம். ‘போகோனோபோபியா' என்ற இந்த பயம் கொண்டவர்கள், முகத்தில் முடி வளருவதை வெறுப்பார்கள். ஒரு முடி வளர்ந்தாலும் உடனே பிடுங்கி எடுத்துவிடுவார்கள்.
3. ‘வெர்போபோபியா' என்பது, வார்த்தைகள் பற்றிய பகுத்தறிவற்ற அதீத பயம். இந்தப் பயம் கொண்டவர்கள், எழுதப்பட்ட வார்த்தையைக் கண்டாலே அஞ்சுவார்கள். அது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையையும், வளர்ச்சியையும் பாதிக்கும்.
4. மற்றவர்கள் தன்னை பார்க்கிறார்களோ, உற்றுக் கவனிக்கிறார்களோ என்ற தீவிரமான பயம்தான் ‘ஸ்கோபோபோபியா'. இந்த பயம் கொண்டவர்கள் பொது இடங்களில் மக்கள் மத்தியில் செல்லவேண்டும் என்றாலே பதற்றமாகிவிடுவார்கள். இந்த பயம் கொண்டவர்கள் தற்போது அதிகரித்துவருகிறார்கள்.
5. தங்கள் தொப்புளை யாராவது தொட்டுவிடுவார்களோ என்ற வித்தியாசமான பயம்தான் ‘ஆம்பாலோபோபியா’. மற்றவர்கள், அவர்களது தொப்புளைத் தொட்டாலும் இவர்களுக்குப் பயம் வந்துவிடும். இவர்கள் தொப்புளில் பம்பரம் விடும் சினிமா காட்சிகளை பார்த்தால் துடித்துவிடுவார்கள்.
6. மரங்கள் குறித்தும் பயம் கொள்வார்கள். அதன் பெயர் ‘டெண்ட்ரோபோபியா’. அதேநேரம், காடுகளைப் பற்றிப் பயப்படுவது ‘ஹைலோபோபியா’, மரப் பொருட்களைப் பற்றிப் பயப்படுவது ‘ஸைலோபோபியா’.
7. கண்ணாடியில் தமது பிம்பத்தைக் காண அஞ்சுவது ‘காட்டோப்ட்ரோபோபியா’ எனப்படுகிறது. கண்ணாடி உடைந்துவிடுமோ, அதிலிருந்து ஏதாவது வெளிவருமோ என்று இந்தப் பயம் உள்ளவர்கள் பீதி கொள்வார்கள். இது சிகிச்சை பெற வேண்டிய அளவுக்கான சிக்கலான பயமாகும்.
8. ‘சேட்டோபோபியா’ உள்ளவர்களுக்கு, தங்களின் முடி என்றாலும், மற்றவர்களின் முடி என்றாலும் பயம்தான். விலங்கு முடியைக் கண்டாலோ அல்லது முடி அடர்ந்த மனிதரைக் கண்டாலோ இவர்கள் தன்நிலை மறந்து பயந்து நடுங்குவார்கள்.
9. ‘பாகோபோபியா’ என்றால் விழுங்குவதற்கு ஏற்படும் பயம். இந்தப் பயம் உள்ளவர்கள், ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான உணவு, பானங்களைக் கூட விழுங்கத் தயங்குவார்கள். அதனால் பெரும்பாலும் சாப்பிடாமலே இருப்பார்கள்.
10. பயங்களை பற்றியே நினைத்து பயந்து கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். அதற்கு ‘போபோபோபியா’ என்று பெயர். இந்த பயம் கொண்டவர்கள் தங்களுக்கு ஏதாவது ஒன்றைப் பற்றி பயம் வந்துவிடுமோ என்று பயப்படுவார்கள்.
மனதில் தன்னம்பிக்கை இருந்தால் எந்த பயமும் உங்களை நெருங்காது. பயம் என்பது மன பலவீனத்தின் வெளிப்பாடு. பயமின்றி இருப்பதே நலமான வாழ்க்கை.

இயற்கை மருத்துவத்தில் அருகம்புல் சாறு முதலிடம் வகிக்கிறது. எல்லாவிதமான நச்சுக்கிருமிகளையும் நீக்கும் ஆற்றல் அருகம்புல்லுக்கு உண்டு.
வயல் வரப்பு களிலும், வெட்ட வெளிகளிலும் காணப்படும் தாவரங்களில் அருகம்புல்லும் ஒன்று. இது நீண்ட இலைகளுடன் நேராக வளரும் தன்மைஉடையது. தண்டு மெல்லியதாக, ஊசி போல் கூர்மையாகக் காணப்படும். சிறு சிறு கணுக்களைப் பெற்றிருக்கும். அருகம்புல்லில் ஏராளமான பச்சையம் நிறைந்துள்ளது. இயற்கை மருத்துவத்தில் அருகம்புல் சாறு முதலிடம் வகிக்கிறது.
அருகம்புல் காரத்தன்மை உடையது. இதில் உயிர்ச் சத்துகளும், தாது உப்புகளும் நிறைந்துள்ளன. இது தளர்ச்சியை நீக்கி, உடலுக்கு வலிமையைத் தரவல்லது. உடலில் சேரும் நச்சுத்தன்மைகளை நீக்குகிறது. ரத்தத்தில் உள்ள அமிலத்தன்மையைச் சமப்படுத்தி, குடற்புண்ணைக் (அல்சர்) குணப்படுத்துகிறது.
ரத்தத்தைப் பெருக்கி, ரத்தச்சோகை ஏற்படாமல் தடுக்கிறது. ரத்த வெள்ளை அணுக்களைத் தூண்டி, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகத்தின் சீரான இயக்கத்திற்குத் துணை புரிகிறது. கல்லீரலில் கற்கள் உண்டாவதைத் தடுப்பதுடன், ரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.
பல் ஈறுகளில் ரத்தம் கசிவதைத் தடுத்து, பற்களை உறுதிப்படுத்துகிறது. பற்களை வெண்மையாக்குவதுடன், வாய் துர்நாற்றத்தையும் போக்குகிறது. நச்சுப் பொருள்களால் உண்டாகும் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் அருகம்புல்லுக்கு உண்டு. இதில் ‘இன்சுலின்’ நிறைந்துள்ளதால், நீரிழிவு நோய்க்கு மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. நாளமில்லாச் சுரப்பிகளைச் சீர்படுத்துவதால், ‘ஆஸ்துமா’ நோயிலிருந்து விடுதலை அளிக்கிறது.
அதிகப்படியான உடல் வெப்பத்தைத் தணித்து, குளிர்ச்சியை உண்டாக்குகிறது. மலச்சிக்கலை நீக்கி, உடல்நலத்தை மேம்படுத்துகிறது. தோல் நோய்க்கும், சேற்றுப்புண்ணுக்கும் அரிய மருந்து இந்த அருகம்புல். எல்லாவிதமான நச்சுக்கிருமிகளையும் நீக்கும் ஆற்றல் அருகம்புல்லுக்கு உண்டு.
காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாற்றினைக் குடித்து வர, மேற்சொன்ன எல்லா நோய்களும் குணமாகும். இதைக்குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகே மற்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ரத்த நாள அடைப்பு உள்ளவர்கள் அருகம்புல்லை அரைத்துப் பாலில் கலந்து சாப்பிட்டால், நோயின் தாக்கம் குறையும். அரும்புல்லுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, உடலில் பூசிக் குளித்தால் சொறி, சிரங்கு, வேர்க்குரு போன்றவை மறையும்.