search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் ‘பத்து’
    X
    மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் ‘பத்து’

    மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் ‘பத்து’

    மனிதர்கள் அனைவரும் ஏதாவது ஒருவகை பயத்திற்கு ஆட்பட்டிருப்பார்கள். அதில் சிலவகை பயங்கள் வித்தியாசமானவை.
    மனிதர்கள் அனைவரும் ஏதாவது ஒருவகை பயத்திற்கு ஆட்பட்டிருப்பார்கள். அதில் சிலவகை பயங்கள் வித்தியாசமானவை.

    1. ‘ஜெனியோபோபியா' என்பது முகவாய் குறித்த பயம். இந்தப் பயம் உள்ளவர்கள், மற்றவர்களுக்கு முகவாய் சரியாய் அமைந்திருக்கிறதா என்று உற்றுப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். தங்கள் முகவாய் பகுதியையும் அவ்வப்போது கண்ணாடி முன்பு நின்று பார்த்து பரிசோதனை செய்துகொள்வார்கள். அவர்களது கவலை முழுவதும் முகவாயை சுற்றியே இருந்துகொண்டிருக்கும்.

    2. தாடி, மீசை போன்று முகத்தில் வளரும் முடி குறித்தும் சிலருக்குப் பயம். ‘போகோனோபோபியா' என்ற இந்த பயம் கொண்டவர்கள், முகத்தில் முடி வளருவதை வெறுப்பார்கள். ஒரு முடி வளர்ந்தாலும் உடனே பிடுங்கி எடுத்துவிடுவார்கள்.

    3. ‘வெர்போபோபியா' என்பது, வார்த்தைகள் பற்றிய பகுத்தறிவற்ற அதீத பயம். இந்தப் பயம் கொண்டவர்கள், எழுதப்பட்ட வார்த்தையைக் கண்டாலே அஞ்சுவார்கள். அது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையையும், வளர்ச்சியையும் பாதிக்கும்.

    4. மற்றவர்கள் தன்னை பார்க்கிறார்களோ, உற்றுக் கவனிக்கிறார்களோ என்ற தீவிரமான பயம்தான் ‘ஸ்கோபோபோபியா'. இந்த பயம் கொண்டவர்கள் பொது இடங்களில் மக்கள் மத்தியில் செல்லவேண்டும் என்றாலே பதற்றமாகிவிடுவார்கள். இந்த பயம் கொண்டவர்கள் தற்போது அதிகரித்துவருகிறார்கள்.

    5. தங்கள் தொப்புளை யாராவது தொட்டுவிடுவார்களோ என்ற வித்தியாசமான பயம்தான் ‘ஆம்பாலோபோபியா’. மற்றவர்கள், அவர்களது தொப்புளைத் தொட்டாலும் இவர்களுக்குப் பயம் வந்துவிடும். இவர்கள் தொப்புளில் பம்பரம் விடும் சினிமா காட்சிகளை பார்த்தால் துடித்துவிடுவார்கள்.

    6. மரங்கள் குறித்தும் பயம் கொள்வார்கள். அதன் பெயர் ‘டெண்ட்ரோபோபியா’. அதேநேரம், காடுகளைப் பற்றிப் பயப்படுவது ‘ஹைலோபோபியா’, மரப் பொருட்களைப் பற்றிப் பயப்படுவது ‘ஸைலோபோபியா’.

    7. கண்ணாடியில் தமது பிம்பத்தைக் காண அஞ்சுவது ‘காட்டோப்ட்ரோபோபியா’ எனப்படுகிறது. கண்ணாடி உடைந்துவிடுமோ, அதிலிருந்து ஏதாவது வெளிவருமோ என்று இந்தப் பயம் உள்ளவர்கள் பீதி கொள்வார்கள். இது சிகிச்சை பெற வேண்டிய அளவுக்கான சிக்கலான பயமாகும்.

    8. ‘சேட்டோபோபியா’ உள்ளவர்களுக்கு, தங்களின் முடி என்றாலும், மற்றவர்களின் முடி என்றாலும் பயம்தான். விலங்கு முடியைக் கண்டாலோ அல்லது முடி அடர்ந்த மனிதரைக் கண்டாலோ இவர்கள் தன்நிலை மறந்து பயந்து நடுங்குவார்கள்.

    9. ‘பாகோபோபியா’ என்றால் விழுங்குவதற்கு ஏற்படும் பயம். இந்தப் பயம் உள்ளவர்கள், ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான உணவு, பானங்களைக் கூட விழுங்கத் தயங்குவார்கள். அதனால் பெரும்பாலும் சாப்பிடாமலே இருப்பார்கள்.

    10. பயங்களை பற்றியே நினைத்து பயந்து கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். அதற்கு ‘போபோபோபியா’ என்று பெயர். இந்த பயம் கொண்டவர்கள் தங்களுக்கு ஏதாவது ஒன்றைப் பற்றி பயம் வந்துவிடுமோ என்று பயப்படுவார்கள்.

    மனதில் தன்னம்பிக்கை இருந்தால் எந்த பயமும் உங்களை நெருங்காது. பயம் என்பது மன பலவீனத்தின் வெளிப்பாடு. பயமின்றி இருப்பதே நலமான வாழ்க்கை.
    Next Story
    ×