என் மலர்
ஆரோக்கியம்
காதலரிடமிருந்து விலகுவது என்ற முடிவை பெண்கள் எடுப்பதற்கு முன்னால் ஒன்றுக்கு பலமுறை யோசிக்கவேண்டும். யோசித்து அந்த முடிவை எடுத்துவிட்டால், தைரியமாக அதனை நடைமுறைப்படுத்தவேண்டும்.
காதல் சுகமானதுதான். ஆனால் காதலன் மோசமானவர் என்பது தெரிந்தால், அவரிடமிருந்து விலகித்தானே ஆகவேண்டும். அதே நேரத்தில் அந்த விலகல், கூடுதலாக எந்த பிரச்சினையையும் உருவாக்கிவிடாத அளவுக்கு அதில் இருந்து பக்குவமாக விடுபடவேண்டும்.
பொதுவாக பெண்களுக்கு காதலனிடம் பிடிக்காத விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
அதிக சுயநலம் கொண்டவரையும், சோம்பேறியையும் பெண்களுக்கு பிடிக்காது. தனது அன்பை துச்சமாக மதித்து அலட்சியம் காட்டுபவரையும் பெண்கள் விரும்புவதில்லை. முதல் பார்வையில் வந்த ஈர்ப்புக்கும், பழகிய அனுபவத்தில் கிடைத்த புரிதலுக்கும் வேறுபாடு ஏற்பட்டு இருவருக்குள்ளும் அடிக்கடி கருத்துமோதல் வந்தால், அந்த காதலை தொடர்வது பற்றி பரிசீலித்துதான் ஆகவேண்டும்.
ஒழுக்க அளவிலான குறைபாடுகளை காணும்போது அவரிடம் காதலை தொடர முடியாது. உங்களைப் போலவே மற்ற பெண்களிடமும் காதல் வலை வீசும் ஆண்களின் தொடர்பை உடனே துண்டிப்பது நல்லது. அதுபோலவே நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு, உடல்ரீதியான தொடர்புக்கு வலியுறுத்தும் காதலரிடமும் எச்சரிக்கை தேவை. ‘என்மேல் உனக்கு நம்பிக்கையில்லையா?’ என்று பேச்சில் தூண்டில்போடும் காதலர்களில் பலர், உடல் தொடர்புக்கு பின்னர் காதலை உதறித் தள்ளிவிட்டு போன சம்பவங்கள் நிறைய உள்ளன. இதுபோல் பெண்களை தவறாகப் பயன்படுத்தும் எண்ணத்துடன் பழகும் காதலர்களிடம் இருந்து விலகிவிடுவதும் நல்லது.
காதலரிடமிருந்து விலகுவது என்ற முடிவை பெண்கள் எடுப்பதற்கு முன்னால் ஒன்றுக்கு பலமுறை யோசிக்கவேண்டும். யோசித்து அந்த முடிவை எடுத்துவிட்டால், தைரியமாக அதனை நடைமுறைப்படுத்தவேண்டும். அந்த முடிவை அவரிடம் தெரிவித்த பின்பு அவரது பதில்களையும், உணர்வுகளையும் உற்று நோக்குவது அவசியம். அதிக உணர்ச்சிவசப்படுபவராக இருக்கிறாரா? கோபமும், பழிவாங்கும் உணர்வுடன் செயல்படுகிறாரா? என்பதையும் கவனிக்கவேண்டும்.
அவர் முரண்டு பிடிக்கும் நபராக இருந்தால் அவரை மரியாதைக் குறைவாக பேசிவிடக்கூடாது. அவரது ‘ஈகோவை’ தூண்டிவிடும் வகையிலும் நடந்துகொள்ளக்கூடாது. அப்படிப்பட்டவரிடம் ‘நீங்கள் என்னை ஏமாற்றிவிட்டீர்கள்’ என்று சொல்வதற்குப் பதிலாக, ‘நீங்கள் அப்படி நடந்து கொண்டதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை’ என்று கூறவேண்டும். பக்குவமான வார்த்தைகளை நிதானமாக பேசவேண்டும். அதே நேரத்தில் பேச்சில் தன்னம்பிக்கையும், தெளிவும் இருப்பது அவசியம். இதுபற்றி மனோதத்துவ நிபுணர்கள் தரும் ஆலோசனையை கேட்போம்!
“காதலருடனான தொடர்புகளை ஒரேயடியாக அல்லாமல், மெல்ல மெல்ல குறைக்கலாம். அவரது செல்போன் அழைப்புகளை முற்றிலும் புறக்கணித்து விடாமல், அவருக்கே புரியும்விதத்தில் தவிர்க்கலாம். நேரடி சந்திப்புகளுக்கு முடிவு கட்டிவிடலாம். சந்தித்தே ஆகவேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டால், பொது இடங்களில், பாதுகாப்பான இடங்களில் சில நிமிடங்கள் சந்தித்துவிட்டு, நெருக்கமான விஷயங்களை விவாதிப்பதை தவிர்த்து விட்டு விலகிவிட வேண்டும். பின்னர் படிப்படியாக அந்த சந்திப்புகளையும் வெவ்வேறு காரணங்களைக்கூறி தவிர்த்துவிடலாம். காதலரின் வற்புறுத்தலுக்கு இணங்கி எங்கும் தனியே சந்திக்க செல்ல வேண்டாம். நீங்கள் காதலை முறித்துக்கொள்வது பற்றி உங்கள் பெற்றோரிடம் கூறி, அவர்களது ஆதரவோடு உங்கள் திட்டத்தை செயல்படுத்துங்கள்” என்கிறார்கள்.

தண்ணீர் பருகுவது தாகத்திற்கு மட்டுமல்ல. போதுமான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.
தண்ணீர் பருகுவது தாகத்திற்கு மட்டுமல்ல. போதுமான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். வெறும் வயிற்றில் தண்ணீர் பருகும் வழக்கத்தை ஜப்பானியர்கள் பாரம்பரிய மாகவே பின்பற்றுகிறார்கள். தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள்:
* உடலில் தேங்கி இருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதில் தண்ணீருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவது குடலை சுத்தப்படுத்த உதவுகிறது. அங்கு தேங்கி நிற்கும் கழிவுகளை எல்லாம் வெளியேற்றிவிடும். செரிமானம் சீராக நடைபெறவும் உதவும். மலச்சிக்கலை உணர்பவர்கள் நிறைய தண்ணீர் பருகுவதன் மூலம் தேவையற்ற கழிவுகள் வெளியேற உதவும்.
* தண்ணீர் எவ்வளவு பருகுகிறோமோ அந்த அளவுக்கு சிறுநீரில் கழிவுகள் வெளியேறும். உடலில் உள்ள அனைத்து நச்சுக்களையும் வெளியேற்றிவிடும். நச்சுக்களை நீக்குவதன் மூலம் சருமத்தை மேம்படுத்தி, முகத்திற்கு பிரகாசமும் தரும்.
* காலை வேளையில் தண்ணீர் பருகுவது துர்நாற்றம், பல் சார்ந்த பிற பிரச்சினைகளை தடுக்க உதவும். தலைவலியையும் தடுக்கும்.
* வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை பெருகுவதற்கு வழிவகுக்கும். அதன் மூலம் உடல் ஆற்றலின் அளவும் அதிகரிக்கும்.
* காலையில் தண்ணீர் பருகுவதன் மூலம் வளர்சிதை மாற்ற விகிதம் சுமார் 25 சதவீதம் அதிகரிக்கிறது. அதனால் வேகமாக செரிமானம் நடைபெறும்.
* தண்ணீரில் கலோரிகள் இல்லை. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நிறைய தண்ணீர் பருகலாம். அது உடலில் உள்ள அனைத்து நச்சுக்களையும் வெளியேற்றி அமிலத்தன்மையை குறைக்கும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்வதால் உடலில் உள்ள கலோரிகளை வேகமாக எரிக்கவும் உதவும்.
* உடலில் நீர்ச்சத்து குறைந்தால் பல சிக்கல்கள் ஏற்படும். அவற்றுள் சரும பிரச்சினையும் அடங்கும். முன்கூட்டியே சரும சுருக்கங்களை ஏற்படுத்திவிடும். வெறும் வயிற்றில் தண்ணீர் பருகும்போது ரத்த ஓட்டம் ஒழுங்குபடுத்தப்படுவதோடு சரும ஆரோக்கியமும் மேம்படும். தண்ணீர் அதிகமாக பருகும்போது சருமம் மிருதுவாகவும், மென்மையாகவும் மாறிவிடும்.
* வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவது சிறுநீரக கற்கள் உருவாகுவதை தடுக்கும். சிறுநீர்ப்பை தொற்றுநோயையும் தடுக்கும். அல்சர் பிரச்சினையும் நெருங்காது.
* தண்ணீர் அதிகம் பருகும்போது உடலில் உள்ள அனைத்து நச்சுகளும் வெளியேறிவிடும் என்பதால் உடலில் நோய்த்தொற்று பரவுவதை தடுத்துவிடும். நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்திவிடும். தினமும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீராவது அவசியம் பருக வேண்டும்.

நகர்புறங்களில் நெரிசல்மிக்க குடிசை பகுதியில் வசிக்கும் பெண்கள் மாதவிடாய் கால சிரமங்களை எதிர்கொள்ளத்தான் செய்கிறார்கள்.
மாதவிடாய் கால சுகாதாரம், ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு பெண்களிடம் அதிகரித்திருக்கிறது. நகர்புறம் மட்டுமின்றி கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களிடமும் இதில் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதேவேளையில் நகர்புறங்களில் நெரிசல்மிக்க குடிசை பகுதியில் வசிக்கும் பெண்கள் மாதவிடாய் கால சிரமங்களை எதிர்கொள்ளத்தான் செய்கிறார்கள்.
அந்த நாட்களில் போதிய ஓய்வெடுக்க முடியாத நிலை, தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலை போன்ற பிரச்சினைகளால் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களது துயரத்தை போக்கி ஆசுவாசப்படுத்திக்கொள்ள வசதியாக இந்தியாவிலேயே முதல் முறையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாநகராட்சி சார்பில் ‘பிரீயட் ரூம்’ அமைக்கப்பட்டிருக்கிறது. தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பெண்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த மாதவிடாய் கால அறையில் பயன்படுத்திய நாப்கின்களை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்தும் மெஷின், போதிய தண்ணீர் வசதி, கழிவறை வசதி, கண்ணாடி, கால்களை பயன்படுத்தி திறக்கும் குப்பை தொட்டி, ஓய்வெடுக்கும் வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
2019-ம் ஆண்டு தானேவில் குடிசை பகுதியில் வசிக்கும் பெண்களின் சுகாதாரம் குறித்து அறக்கட்டளை ஒன்று ஆய்வு நடத்தியது. அதில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை பட்டியலிட்டதோடு பிரத்யேக அறை அமைப்பது அவசியம் என்றும் பரிந்துரை செய்தது. இதையடுத்து அங்கு மாதவிடாய் கால அறை அமைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி தானே மாநகராட்சி துணை ஆணையர் மணீஷ் ஜோஷி கூறுகையில், ‘‘தானேவில் குடிசை பகுதிகளில் வசிக்கும் 1000 பெண்களிடம் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் சுகாதார பிரச்சினைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு பொது கழிப்பிடங்கள் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையும் நிலவுகிறது. பயன்படுத்திய நாப்கின்களை அப்புறப்படுத்துவதிலும் பிரச்சினை இருக்கிறது. இதுதவிர மன ரீதியாகவும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வது தெரியவந்தது. அவை ‘பிரீயட் ரூம்’ அமைப்பதன் அவசியத்தை புரியவைத்தன. உடனே பயன்பாட்டுக்கு கொண்டுவந்துவிட்டோம்’’ என்கிறார்.
அந்த கட்டிடத்தில் மாதவிடாய் கால சுகாதாரம் பற்றிய முக்கியமாக தகவல்கள் இடம்பெற்றுள்ளன. விழிப்புணர்வு தகவல்கள் சுவர் ஓவியங்களாகவும் இடம்பெற்றுள்ளன. இந்த அறை, பெண்கள் மத்தியில் ஆனந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜவ்வரிசியில் அதிக அளவிலான புரதம் இருப்பதால், தசைகளை வலுவூட்டவும் செல்களைப் புதுப்பிக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் செய்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
தேவையான பொருட்கள் :
ஜவ்வரிசி - ஒரு கப்,
பொட்டுக்கடலை - அரை கப் (மாவாக அரைக்கவும்),
அரிசி மாவு, கேரட் துருவல் - தலா அரை கப்,
வெங்காயம் - 4,
இஞ்சி, பச்சை மிளகாய் - தேவையான அளவு,
தேங்காய் துருவல் - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
இஞ்சி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஜவ்வரிசியை முதல் நாள் ஊற வைத்து, மறுநாள் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியுடன், பொட்டுக்கடலை, அரிசி மாவு, கேரட் துருவல், வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொட்டிய பிசைந்து வைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடை போல மெல்லியதாக தட்டி, சுற்றிலும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக எடுக்கவும்.

இதை வெல்லம் அல்லது ஏதாவது ஒரு சட்னியுடன் சாப்பிடலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தோல் தொடர்பான அனைத்து விதமான நோய்களுக்கும் வேப்ப எண்ணெய் தீர்வு தருகிறது. வேப்ப எண்ணெயின் பயன்களை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.

வேப்ப எண்ணெய் (Neem oil) என்பது வேப்ப மரத்தின் பழ விதைகளில்(வேப்பங்கொட்டை) இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆகும்.
* தினமும் வேப்ப எண்ணெய் அல்லது வேப்ப விதை தூளை முகத்தில் தடவி வர தோல் சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றத்தை பெறலாம்.
* வேப்ப எண்ணெய் தடவுவதால் தோல் மென்மையாக இருக்கும். தோலில் ஏற்படும் அரிப்பு மற்றும் சிரங்குகளை வேப்ப எண்ணெய் போக்கும்.
* குளிர்காலங்களில் ஏற்படும் தோல் வெடிப்பை வேப்ப எண்ணெய் சரிசெய்யும்.
* வேப்ப எண்ணெய் தினமும் பயன்படுத்தினால் முகத்தில் கரும்புள்ளிகள் மறையும்.
* படர் தாமரை, கருவளையம் ஆகியவற்றை வேப்ப எண்ணெய் மருந்தாக பயன்படுகிறது.
* தேங்காய் எண்ணெயில் கொஞ்சம் வேப்பெண்ணெய் கலந்து கூந்தலுக்கு தடவி வர பொடுகு தொல்லை நீங்கும்.
* தினமும் வேப்ப எண்ணெய்யை தலையில் தடவினால் அடர்த்தியான கூந்தலை பெறலாம்.

இந்த வகை உணவுகளை குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு தவிர்ப்பது நன்மை அளிக்கும். ஏனெனில் இது நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை குறைக்க வாய்ப்பு உள்ளது.
குளிர்காலத்தில் நோய்களின் வரத்து அதிகம். இதனால் நம் குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவர்களுக்கு அந்த சமயங்களில் சரியான உணவை அளிப்பது அவசியம். குளிர்காலத்தில் பொதுவாக குழந்தைகள் காய்ச்சல், நிமோனியா, கடுமையான காது தொற்று, ஆஸ்துமா மற்றும் தோல் அழற்சி இவற்றால் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதையெல்லாம் தவிர்க்க குழந்தைகளுக்கு போதுமான தூக்கத்தை அளிப்பதும், முழு தானிய உணவுகளை கொடுப்பது அவசியம்.
பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை கொடுத்து அவர்களை நீரேற்றமாகவும் வைத்திருக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் குளிர்காலத்தில் கொடுக்கப்படும் சில உணவுகள் அவர்களுக்கு சளி, இருமலை உண்டாக்கலாம். எனவே அந்த வகை உணவுகளை தவிர்ப்பதும் அவசியம். எனவே குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாத உணவுகளை அறிந்து கொள்ளுங்கள்.
குளிர்காலத்தில் எண்ணெய் உணவுகளை உட்கொள்வது நல்லதல்ல. எனவே விலங்குகளின் கொழுப்பில் இருந்து பெறப்படும் எண்ணெய்க்கு பதிலாக வெஜிடபிள் எண்ணெய்யை பயன்படுத்துங்கள். உங்க குழந்தைக்கு சீரணிக்கவும் ஏதுவாக இருக்கும்.
குளிர்காலத்தில் எளிய சர்க்கரை உணவுகள் மிகவும் மோசமானவை. உடலில் சர்க்கரை உள்ளடக்கம் அதிகரிப்பது நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் வெள்ளை இரத்த அணுக்கள் குறைவை ஏற்படுத்தும்.இதனால் அதிகப்படியான சர்க்கரை உங்கள் குழந்தைகளின் உடல்களை வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுநோய்களுக்கு உள்ளாக்கும். குளிர்காலத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு சோடாக்கள், குளிர் பானங்கள், மிட்டாய்கள், சாக்லேட், கேலாக்ஸ், மிகவும் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொடுக்க வேண்டாம்.
இறைச்சிகள் மற்றும் முட்டைகளில் சளி உற்பத்தியை ஊக்குவிக்கும் நிறைய புரதங்கள் உள்ளன, இது குளிர்காலத்தில் உங்கள் குழந்தையின் தொண்டைக்கு மிகவும் எரிச்சலை ஏற்படுத்தும். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் முட்டைகள் மிக மோசமானவை. எனவே அதற்கு பதிலாக மீன் மற்றும் கரிம இறைச்சியை தேர்ந்தெடுங்கள்.
பால் பொருட்களில் உள்ள விலங்கு புரதம் சளியை தடிமனாக்கும். இது விழுங்குவதை கடினமாக்குகிறது. எனவே, குளிர்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கு சீஸ், கிரீம், கிரீம் சார்ந்த சூப்கள் மற்றும் கிரீம் சார்ந்த பொருட்களை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக அவர்களுக்கு சளி பிடித்த சமயங்களில் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

அன்றாட உணவில் நெய் சேர்த்துக்கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவும். நெய்யில் ஆரோக்கியமான அமிலம் மற்றும் வைட்டமின் பி 2, பி 12, பி 6, சி, ஈ உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துக்களும் கலந்திருக்கின்றன.
அன்றாட உணவில் நெய் சேர்த்துக்கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவும். நெய்யில் ஆரோக்கியமான அமிலம் மற்றும் வைட்டமின் பி 2, பி 12, பி 6, சி, ஈ உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துக்களும் கலந்திருக்கின்றன. ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களும் உள்ளன. இவை மூளை, இதயம், நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். நெய்யில் கொழுப்பு கலந்திருந்தாலும் சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் மற்ற எண்ணெய்களை விட சிறந்ததாக கருதப்படுகிறது. வயதுக்கு ஏற்ப உணவில் நெய் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமானது.
எந்தெந்த வயதினர் எவ்வளவு நெய் எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் சில பரிந்துரைகளை வழங்கி இருக்கிறார்கள். அதன்படி பருவ வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் தினமும் 2 தேக்கரண்டி நெய் சாப்பிடலாம். கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தின மும் 3 தேக்கரண்டி நெய் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
7 மாதம் முதல் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2 முதல் 3 தேக்கரண்டி வரை நெய்யை உணவில் சேர்த்துக்கொடுக்கலாம். 3 முதல் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் அதே அளவில் வழங்கலாம். 10 முதல் 17 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினருக்கு 4 தேக்கரண்டி நெய்யும் கொடுக்கலாம். 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நெய் கொடுக்கக்கூடாது. தாய்ப்பால் மட்டும்தான் கொடுக்க வேண் டும்.
பசுவின் நெய் நல்லதா? எருமை நெய் நல்லதா? என்ற விவாதம் காலம்காலமாக நடந்துகொண்டிருக்கிறது. இரண்டு நெய்களும் உடல் நலத்திற்கு நலம் சேர்ப்பவைதான். என்றாலும் பசு நெய் பல்வேறு வகைகளில் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. தொடர்ந்து பசு நெய் உட்கொள்வது கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என்ற கருத்து நிலவுகிறது. மேலும் உடலில் புற்றுநோய் செல்கள் வளர்வதற்கு அனுமதிக்காது. ஒற்றைத்தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு பசு நெய் சிறந்தது.
இதில் வைட்டமின்-கே காணப்படுகிறது. இது ரத்த அணுக்களில் கால்சியம் படிவதை தடுக்க உதவும். நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்தும் தன்மை கொண்டது. நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிராக போராடும் வலிமையை அதிகப்படுத்தும்.
எருமை நெய்யில் வைட்டமின்-ஏ நிறைந்திருப்பதால் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இந்த நெய்யில் ஆன்டி ஆக்சிடென்டுகள் வடிவில் கரோட்டினாய்டுகள் உள்ளன. எருமை நெய் உட்கொள்வதன் மூலம் மாஸ்குலர் சிதைவு மற்றும் கண்புரை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம். இருப்பினும் இதனை விட பசு நெய்யை அதிகம் எடுத்துக்கொள்வது சிறப்பானது என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
“பசு நெய் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்த உதவும். அதன் மூலம் எடை குறைப்புக்கு வழிவகுக்கும். மேலும் இது குறுகிய மற்றும் நடுத்தர கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது. அவை குடல், எலும்புகள், முடி, சருமம் மற்றும் மூட்டுகள் என உடலின் பல்வேறு பாகங்களின் ஆரோக்கியத்தை மேம் படுத்தக்கூடியவை. உடலில் உள்ள நச்சுக்களை அழிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்” என்கிறார்கள்.

குளிர்காலத்தில் கூந்தலையும் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். குளிர்காலத்தில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் கூந்தலை பாழாக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
எல்லா காலங்களிலும் ஒரே மாதிரியான பராமரிப்பை மேற்கொள்வது கூட கூந்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். குளிர்காலத்தில் கூந்தலுக்கு செய்யகூடாத விஷயங்கள் என்னவென்பதை பார்க்கலாம். இதை தெரிந்து கொண்டால் உங்கள் கூந்தலை நீங்களும் பாதுகாக்கலாம்.
தலைக்கு குளிக்கும் போது எப்போதும் குளிர்ந்த நீர் தான் பயன்படுத்த வேண்டும். கோடைக்காலத்துக்கு குளிர்ந்த நீர் சரி. ஆனால் குளிர்காலத்துக்கு எப்படி பொருந்தும் என்று கேட்கலாம். உண்மையில் கூந்தலின் தன்மை எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
குளிர்காலத்தில் கூந்தலில் வெந்நீர் படும் போது முடி உதிர்தலும் முடி பிளவும் வழக்கத்தை விட அதிகரிக்கும். பிறகு இதிலிருந்து கூந்தலை மீட்பது கடினம்.கண்டிப்பாக குளிர்ந்த நீரில் குளிக்க முடியாது என்பவர்கள் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். அதிகாலையில் குளிக்காமல் சற்று வெயிலுக்கு பின்பு மந்தமான நீரில் குளிக்கலாம்.
வாரத்தில் மூன்று நாட்கள் தலைக்கு குளிப்பவர்கள், தினமும் தலைக்கு குளிப்பவர்கள் எல்லோரும் இந்த குளிர்காலத்தில் இதை நிறுத்தி வைப்பது நல்லது. வாரத்துக்கு இரண்டு நாட்கள் தலைக்குளியல் செய்யலாம். அதோடு ஷாம்புக்களின் பயன்பாடுகள் குறிப்பாக சோடியம் சல்ஃபேட்,சோடியம் லாவ்ரெல் சேர்க்கை கொண்ட ஷாம்பு வகைகளை தவிர்ப்பது நல்லது. அதே போன்று பாரம்பின் இல்லாத ஷாம்புக்களை தேர்வு செய்யுங்கள்.
ஷாம்பு இல்லாமல் இயற்கை பொருளை பேக் செய்து குளிக்கலாம். தயிர், அவகேடோ, முல்தானி மிட்டி போன்றவை கூந்தல் அழுக்கையும் நீக்கும். கூந்தலுக்கு ஊட்டமும் கொடுக்கும்.
உச்சந்தலை பகுதி உலர்ந்து இருந்தால் கசகசப்பு தெரியாது என்று கூந்தலை உலரவிடுவது கோடைக்காலம் தான். அடிக்கும் வெயிலில் கூந்தலும் தானாகவே இயற்கையாகவே உலர்ந்துவிடக்கூடும். ஆனால் குளிர்காலத்தில் கூந்தல் உலர்வு என்பது சிரமமானது.
அதிலும் தலைக்குளியலுக்கு பிறகு அவசரமாக வெளியே செல்ல நினைத்தால் கூந்தலின் ஈரம் சவாலானதாக இருக்கும். இந்நிலையில் ஹேர் டிரையர் பயன்படுத்துவதையும் தவிர்ப்பது நல்லது. கூந்தலில் ஈரம் இருந்தாலும் அதன் உச்சியிலும் ஸ்கால்ப பகுதியிலும் வறட்சியை உண்டாக்க செய்யும். அதனால் குளிர்காலத்தில் ஹேர் டிரையர் தவிர்க்க வேண்டிய ஒன்று.
குளிர்காலத்தில் கூந்தல் இயற்கையாக உலரவைத்தாலும் கூட ஈரத்தன்மையை கொண்டிருக்கும். கூந்தல் ஈரமாக இருக்கும் போது அது வலு குறைந்திருக்கும் அப்போது வேகமாக அதை இழுப்பது மேலும் பலவீனத்தை உண்டாக்கி முடியை உதிர செய்யும். இதை தவிர்க்க பெரிய பற்களை கொண்ட அதிக இடைவெளி உள்ள மரசீப்புகள் அல்லத் கைவிரல்களை பயன்படுத்துங்கள். இதனால் கூந்தல் சிக்கில்லாமல் பாதுகாக்க முடியும்.தலைக்குளியலுக்கு பிறகு கூந்தலை மென்மையான துணி கொண்டு மயிர்க்கால்கள் முதல் நுனிவரை துடைத்தால் சிக்கு இல்லாமல் கூந்தலை பாதுகாக்கலாம்.
கொஞ்சம் வெயிலாக இருந்தாலும் முழங்கைகள் வரை, முகம் வரை தலையில் ஒரு கவசம் வரை என பொத்தி பொத்தி பாதுகாக்கும் கூந்தலை குளிர்காலத்தில் மட்டும் விட்டுவிடுவார்கள். வெயில் தாக்கம் தான் இல்லையே என்று விரிந்த கூந்தலை சுதந்திரமாக பறக்கவிட்டால் நீங்கள் உங்கள் கூந்தலின் வனப்பை இழக்கிறீர்கள் என்று சொல்லலாம். உண்மையில் உங்கள் கூந்தல் உச்சந்தலை பகுதி வறட்சியை கொண்டிருக்கலாம். கூந்தலின் வறட்சி விரிந்த தன்மை போன்றவை சுற்றியிருக்கு மாசு. அழுக்குகளை கூந்தலில் தேக்கி வைக்க கூடும். அதனால் கூந்தலின் மீது ஒரு ஸ்கார்ப் போடுவதை தவிர்க்க வேண்டாம்.
மழைக்காலம் போன்று குளிர்காலத்திலும் நீங்கள் செய்யும் தவறு சூடான மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ், எண்ணெய் வகை உணவுகள் போன்றவை தான்.குளிர்காலங்களில் கூந்தலின் மயிர்க்கால்களுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் முடி உதிர்வு மிக மோசமாக இருக்கும்.
ஏற்கனவே வறண்ட குளிர்கால சூழலில் இருக்கும் கூந்தல் இதனால் மேலும் தீவிரமாக உதிரக்கூடும். மோசமான உணவுகளும் ஊட்டச்சத்துகளும் உடலில் புதிய மயிர்க்கால்களின் வளர்ச்சியை தடுக்கும். குறிப்பாக அடர்ந்த பச்சை நிற காய்கறிகள், கீரைகள், புரத உணவுகளை தவிர்க்க வேண்டாம்.

மனித வாழ்வில் தினசரி பழக்கம் என்று சில இருக்கும். அப்படிப்பட்ட பொதுவான பழக்க வழக்கங்களாக நாம் கடைப்பிடிக்க வேண்டிய சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
மனித வாழ்வில் தினசரி பழக்கம் என்று சில இருக்கும். அதில் சில பழக்கங்கள் பொதுவான பழக்கவழக்கங்களாக இருக்கவும் வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட பொதுவான பழக்க வழக்கங்களாக நாம் கடைப்பிடிக்க வேண்டிய சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
தினமும் நாம் உண்ணும் உணவுகளில், ஒரு வேளை உணவு பழங்களாக மட்டுமே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
பலருக்கும் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று மலச்சிக்கல். இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட நினைப்பவர்கள், தினமும் இரண்டு முறை மலத்தை வெளியேற்றுங்கள்.
தினமும் மூன்று வேளை உணவருந்த வேண்டும் என்பது வகுக்கப்பட்ட விதி. ஆனால் சிலர் அந்த நேரத்தில் அந்த வேலையை முடித்துவிட வேண்டும் என்பது போல, பசிக்கா விட்டாலும் உணவை வயிற்றுக்குள் தள்ளிவிடுவார்கள். அப்படி செய்தால் உடல்நலத்தில் பிரச்சினை வரலாம். எனவே மூன்று வேளையும் நன்றாக பசித்த பின்பே உணவருந்துவது நல்லது.
தினமும் குறைந்தது 40 நிமிடங்களாவது நடைபயிற்சியை மேற்கொள்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.
தினமும் 5 நிமிடம் மூச்சுப் பயிற்சி செய்வது, நம் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும்.
இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு, புளிப்பு ஆகிய ஆறுசுவைகளையும், தினமும் ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்வது சாலச்சிறந்தது.
வாரத்தில் ஏழு நாட்கள். அதில் ஒரு நாள் நம் உடலில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நன்மை பயக்கும்.
இன்றைய காலகட்டத்தில் செல்போன், டிவிகளில் மூழ்கிப் போகிறவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதற்காக தூக்கத்தை தொலைக்கவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அது காலப்போக்கில் உடலில் பல பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே தினமும் 8 நேர தூக்கம் அவசியம்.

திருமணமான பிறகு இயற்கையாக கருத்தரித்தல் நிகழ்வு நடைபெறாத நிலையில் அவர்களுக்கு செயற்கை கர்த்தரிப்பு முறை பரிந்துரைக்கப்படுகிறது. செயற்கை கருத்தரிப்பு முறை குறித்த விழிப்புணர்வை தெரிந்து கொள்வோமா?
செயற்கை முறையில் கருவுறுதல் என்பது கர்ப்பப்பையில் நேரடியாக விந்தணுக்களை செலுத்தும் சிகிச்சை முறை.பெண்ணின் கருமுட்டைகளும் ஆணின் விந்தணுக்களும் கலக்கப்பட்டு இது கருவாக உருவானதும் பெண்ணின் கர்ப்பபைக்குள் செலுத்தி விடப்படும். பிறகு கரு உருவாதல் நடைபெறுகிறது.
இந்த செயற்கை கருவூட்டல் இரண்டு முறையில் செய்யப்படுகிறது. ஒன்று ஐயூஐ. மற்றொன்று ஐசிஐ .ஐசிஐ என்பது கர்ப்பப்பை வாயில் விந்தணுக்களை செருகுவார்கள். கர்ப்பப்பைவெளியே இருக்கும் பாதை வழியே இதை செய்வார்கள். ஐயூஐ என்பது கர்ப்பப்பை வாய் கடந்து கர்ப்பப்பையில் விந்தணுக்களை செலுத்தும் முறை ஆகும். இம்முறையில் கருத்தரிப்பை பாதிக்காமல் இருக்க விந்தணுக்கள் செறிவூட்டப்பட்டு உள்செலுத்தப்படுகிறது.
பெண்ணின் சினைப்பையில் அதிக கருமுட்டைகளை உற்பத்தி செய்ய வைத்து அவை முதிர்ச்சி அடைய செய்வார்கள். பிறகு அது வெடிக்க மருந்தை ஊசி வழியாக செலுத்தி அதை வெடிக்க செய்வார்கள். அந்த முட்டையை ஊசிக்குழலில் எடுப்பார்கள். அதற்கு முன்பு ஆணின் விந்தணுக்கள் கோடிக்கணக்கில் ஐவிஎஃப் டிஷ்ஷில் வைக்கப்பட்டிருக்கும். ஊசிக்குழலில் எடுத்த கருமுட்டையை இந்த விந்தணுக்களுடன் கலப்பார்கள். 18 மணி நேரங்கள் வரை வைத்து இரண்டும் கலந்து கருத்தரிப்பு நடந்திருக்கும். பிறகு 72 மணி நேரத்தில் அந்த கரு 8 செல் நிலைக்கு வந்த பிறகு மீண்டும் ஊசிக்குழல் மூலம் பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்துவார்கள்.
தரமான விந்தணுக்களோடு கருமுட்டை இணைந்து கருவாக உருவாகிய பிறகு மீதியிருக்கும் விந்தணுக்களை சேமித்துவைப்பார்கள். ஊசிக்குழல் மூலம் பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்திய கருமுட்டை கருத்தரிக்காமல் போனால் மீண்டும் இதை கருத்தரிக்க பயன்படுத்தி கொள்வார்கள். இந்த சிகிச்சைக்கு பிறகு கரு கர்ப்பப்பையில் தங்கி இருக்க மருந்தும் மாத்திரைகளும் உண்டு.
செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொண்டதும் பெண்ணின் ரத்தத்தில் ஹெச்சிஜி அளவு அதிகரிக்கும். இதை பரிசோதனை செய்து பார்ப்பார்கள். கரு உருவாகி இருந்தால் இதன் அளவு அதிகரிக்கும். பிறகும் ஓய்வில் இருக்க சொல்லி இரண்டு வாரங்கள் கழிந்து அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்யப்படும். எனினும் இது மட்டும் கொண்டு உறுதி செய்ய முடியாது. மீண்டும் வாரங்கள் கழிந்து கருவின் இதயத்துடிப்பும் பரிசோதனை செய்யப்படும்.
கருவின் இதயத்துடிப்பு சீராக ஆரோக்கியமாக இருக்கும் நிலையில் கருத்தரிப்பு முறை வெற்றி பெற்றதாகும். எனினும் தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். இதே போன்று வேறு சிகிச்சைகளும் உண்டு. ஐசிஐ, கிஃப்ட் முறைகள். தம்பதியரின் உடல் நலன் கொண்டு உரிய சிகிச்சை முறையை மருத்துவர்களே தேர்வு செய்வார்கள்.
குழந்தைப்பேறின்மை பிரச்சனையை எதிர்கொள்ளும் தம்பதியருக்கு முதலில் அவர்களது மருத்துவ வரலாறு அறிந்து சிகிச்சையின் மூலமே கருவுறுதலுக்கான சிகிச்சை அளிக்கப்படும். அவை இயலாத நிலையில் செயற்கை கருவுறுதலுக்கு அறிவுறுத்துவார்கள்.
சிகிச்சையில் சில ஆண்களுக்கு விந்தணு பிரச்சனை தீர்க்கப்பட முடியாமல் இருந்தாலும், பெண்ணுக்கு கருமுட்டை பிரச்சனை நிவர்த்தி செய்ய முடியாமல் இருந்தாலும் இறுதியில் கருமுட்டை, விந்தணு தானம் அறிவுறுத்தப்படுகிறது.
செயற்கை முறை கருத்தரிப்பு தேவை என்பதை தம்பதியர் முடிவு செய்ய முடியாது. இந்த சிகிச்சையை மருத்துவர் தொடங்குவதற்கு முன்பு இயற்கையான முறையில் கருத்தரிக்க சிகிச்சைகள் அளிக்கப்படும். அதன் பிறகு தான் மருத்துவர் இந்த முறையை தேர்வு செய்வார்.
செயற்கை முறை கருவுறுதலின் போது பக்கவிளைவுகள் உண்டாகாது. கருத்தரித்தாலும் கருவுக்கு எவ்வித பாதிப்பும் நேராது. பெரும்பாலும் இரட்டைக்குழந்தைகள் அல்லது மூன்று குழந்தைகள் வயிற்றில் வளர வாய்ப்புண்டு.

சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கின்றது. சோளத்தில் இருக்கும் இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
தேவையான பொருட்கள்
பொடியாக அரிந்த பேபிகார்ன் - கால் கப்
பொட்டுக்கடலை - 3 டீஸ்பூன்
ஊறவைத்த நிலக்கடலை - 25 கிராம்
சீரகத் தூள் - கால் டீஸ்பூன்
ஆம்சூர் பொடி - தேவையான அளவு
தனியா பவுடர் - கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
பூண்டுப் பற்கள் - 3
உப்பு - தேவையான அளவு
செய்முறை
காய்ந்த மிளகாய், பூண்டு, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் பொடித்துக்கொள்ளுங்கள்.
பொடியாக நறுக்கிய பேபி கார்னுடன் பொட்டுக்கடலை, ஊறவைத்த நிலக்கடலை, சீரகத் தூள், ஆம்சூர் பொடி, தனியாத் தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள்.

அரைத்த காய்ந்த மிளகாய், பூண்டு, உப்பு கலவையை பேபிகார்ன் கலவையுடன் கலந்து மாலை நேரச் சிற்றுண்டியாகச் சாப்பிடலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தாய்மார்கள் அன்பு, அனுசரணை, பாதுகாப்பு போன்ற அனைத்தையும் சிறுவயதில் இருந்தே தங்கள் மகள்களுக்கு உணர்வுரீதியாக வழங்கிக்கொண்டிருப்பார்கள். உங்கள் மகள் காதல்வலையில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
உணர்வுரீதியான அன்பு, அனுசரணை, பாதுகாப்பு, நம்பிக்கை போன்ற அனைத்துமே மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறது. அதனால்தான் சிறுவயதில் இருந்தே மனிதர்கள் அனைவரும் அன்புக்கு அடிமையாகி விடுகிறார்கள். பொதுவாக தாய்மார்கள் அன்பு, அனுசரணை, பாதுகாப்பு போன்ற அனைத்தையும் சிறுவயதில் இருந்தே தங்கள் மகள்களுக்கு உணர்வுரீதியாக வழங்கிக்கொண்டிருப்பார்கள். மகள்களும் தாயின் அன்பிற்குள் அடைபட்டுக்கிடப்பார்கள்.
ஆனால் மகள் பருவமடைந்ததும் அவள் எதிர்பார்க்கும் அன்பு, அனுசரணையின் தன்மையில் மாற்றம் ஏற்படுகிறது. அப்போது அவள் அதனை வெளியே தேடத் தொடங்குகிறாள். அந்த தேடலில் உருவாகும் நட்பே, எதிர்பால் ஈர்ப்பு மூலம் காதலாக வலுப்பெறுகிறது. சிறுவயதில் கிடைத்தது போன்ற அன்பும், பாசமும் யாருக்கெல்லாம் அவர்களது வீட்டிலே டீன்ஏஜிலும் கிடைக்கிறதோ அவர்களெல்லாம் பெரும்பாலும் காதல் வலையில் விழுவதில்லை.
பெண்கள் பருவமடைந்துவிட்டதும், தானும் பெரிய மனுஷிதான் என்று நினைத்து தனித்துவம் பெற விரும்புகிறார்கள். மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அந்த தனித்துவத்தை தக்கவைக்க விரும்புகிறார்கள். அப்போது மகளிடம் என்ன மாற்றங்கள் ஏற்படுகிறதோ, அதற்கு தக்கபடி பெற்றோர் மாறி அவளை நேசிக்க வேண்டும். நேசித்தால், அவர்களது உணர்வுக்கு தகுந்த மதிப்பு குடும்பத்தினர் மூலமாகவே கிடைத்துவிடும். கிடைத்துவிட்டால் எளிதாக வெளியே காதல் வலையில் விழமாட்டார்கள்.
அதையும் மீறி உங்கள் மகள் காதல்வலையில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
உடனே மனங்குழம்பி நிதா னத்தை இழந்து விடாதீர்கள். மகளை குற்றவாளியாக்கி, தனிமைப்படுத்தி தண்டிக்க முயற்சிக்க வேண்டாம். அவளை பதற்றப்படுத்தாமல் அமைதிப்படுத்தி, உட்காரவைத்து பொறுமையாக பேசுங்கள். அவளை நிதானமாக யோசிக்கவையுங்கள்.
அவளிடம், ‘நான் உன்னை நம்புகிறேன். உனக்கு எதிராக எந்த முடிவும் எடுக்கமாட்டேன். அதே நேரத்தில் சில உண்மைகளை உனக்கு புரியவைக்க வேண்டியது என் கடமை’ என்று கூறி, அவளது காதலின் தன்மையையும், சூழ்நிலையையும் உணர்த்துங்கள்.
படிக்கிற வயதில் அவள் காதலித்தால், அந்த காதலால் அவளது கல்வியும், எதிர்காலமும் கேள்விக்குறியாவதை சுட்டிக்காட்டி படிப்பு முடியும் வரை காதலை தள்ளிவைக்கும்படி எடுத்துரையுங்கள். ஆத்திரம், அவசரம் இல்லாமல் பக்குவமாக இதை செய்யவேண்டும்.
பெரும்பாலான தாய்மார்கள் மகளின் காதலை எடுத்த எடுப்பிலே நிராகரிக்கிறார்கள். அப்படி நிராகரித்தால் அவள் தனது தாயை எதிரியாக நினைப்பாள். அதனால் பாதுகாப்பு தேடி வீட்டைவிட்டு வெளியேற முயற்சிக்கலாம்.
அவள் வீட்டைவிட்டு வெளியேறுவது நல்லதல்ல. அதுபோல் காதலனை கண்மூடித்தனமாக நம்புவதும் சரியல்ல. அதனால் அவளுக்கு எதிரான எந்த முடிவையும் எடுக்கப்போவதில்லை என்று முதலிலே அவளுக்கு நம்பிக்கை கொடுங்கள். காதலை பற்றி யோசித்து முடிவெடுக்க தேவையான கால இடைவெளியையும் கொடுங்கள். கால இடைவெளியில் பலர் உண்மையை உணர்ந்து தப்பான காதலை கைவிட்டிருக்கிறார்கள்.
காதல் வேறு, காமம் வேறு என்பதை மகளுக்கு புரிய வையுங்கள். காதல் என்ற பெயரில் யாரும் அவளை ஏமாற்றிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கச்சொல்லுங்கள். இப்போது சமூகத்தில் எப்படி எல்லாம் பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையும் பக்குவமாக சுட்டிக்காட்டுங்கள்.
பெண்களின் உடல் புனிதமானது. காதல் என்ற பெயரில் அதில் ஆளுமை செலுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதை அடிக்கடி உணர்த்துங்கள்.
டீன்ஏஜ் காதல் கவலைக்கும், கலவரத்திற்கும் உரியதல்ல. கவனிக்கத்தகுந்தது. சரியான முறையில் அணுகினால், உங்கள் மகளை அதிலிருந்து மீட்டுவிடலாம்.