என் மலர்
ஆரோக்கியம்
உடல் எடையை குறைபபது மற்றும் கட்டுப்கோப்பாக இருப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் பெண்கள் பெரும்பாலும் மிகக் குறைவாக சாப்பிடுவது போதுமான அளவு வேலை செய்யாதது மற்றும் உடனடி முடிவுகளை எதிர்ப்பார்ப்பது போன்ற தவறுகளை செய்கிறார்கள்.
உடல் எடையை குறைபபது மற்றும் கட்டுப்கோப்பாக இருப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் பெண்கள் பெரும்பாலும் மிகக் குறைவாக சாப்பிடுவது போதுமான அளவு வேலை செய்யாதது மற்றும் உடனடி முடிவுகளை எதிர்ப்பார்ப்பது போன்ற தவறுகளை செய்கிறார்கள். உடற்பயிற்சி செய்ய நேரமில்லாமல் தங்கள் வேலையில் அதிகம் சிக்கிக் கொள்ளும் பெண்களுக்கான சில டிப்ஸ் இங்கே
1. ஆரோக்கியமான காலை உணவு நாள் முழுவதும் ஆற்றலை தக்கவைக்க அவசியம். மூன்று வேளை உணவில் காலை உணவுமிக முக்கியமானது இது ஆரோக்கியமான மற்றும் சத்தானதாக இருக்க வேண்டும். நார்ச்சத்து, புரதம், கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவை தேர்ந்தெடுங்கள். ஏனெனில் இதுநாள் முழுவதும் ஆற்றலை அளிக்கிறது. உடலின் தேவைகளை பூர்த்தி செய்கிறது.
2. உடலை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கான முதல் விதி பதப்படுத்திய மற்றும் எண்ணெய் அதிகம் சேர்த்த உணவுகளை அன்றாட வழக்கத்திலிருந்து அகற்றுவதே ஆகும். ஏனெனில் இது உங்கள் உடற்பயிற்சி வழக்கத்தையும் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கும். எனவே புரதம், கால்சியம், கொழுப்புகள், தாதுக்கள மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆரோக்கியமான சிற்றுண்டிக்கு மாறுவது எடையை பராமரிக்கவும் பல நோய்களின் அபாயத்தை குறைக்கும் உதவும்.
3. நடைப்பயிற்சி, ஓடுவது போன்ற எளிய பயிற்சிகளுடன் தினமும் பின்பற்ற வேண்டிய கட்டமைக்கப்பட்ட உடற்பயிற்சி முறையை பின்பற்ற வேண்டும். பெண்கள் தங்கள் உடற்பயிற்சி இலக்கை அடைய வாரத்தில் குறைந்தது மூன்று மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
4. உடற்பயிற்சி செய்யும் போது நிறைய வியர்வை வெளியேறும். எனவே தேவையான அளவு நீரை குடிப்பது மிகவும் முக்கியம். சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பது நீரிழப்பை தவிர்க்க உதவும்.
5. குக்கீஸ்கள், சாக்லேட்டுகள், தேன் மற்றும் வெள்ளை அரிசி போன்ற சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து நிறைந்த உணவுகளை பெண்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை ரத்தச்சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. அதிக இன்சுலினை உற்பத்தி செய்கின்றன மற்றும் உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கின்றன. எனவே தினசரி உணவில் புரதம், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் ஏராளமாக இருக்க வேண்டும்.

உடல் பருமனைக் குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
பச்சைப்பயறு - அரை கப்
தேங்காய் துருவல் - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை
செய்முறை
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியதும், அவற்றில் பச்சைப்பயறை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
பின் அதனுடன் இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு தேங்காய் துருவல், சிறிதளவு புளி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அடுப்பில் இருந்து இறக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் மைபோல் அரைக்க வேண்டும்.
பின்பு கடுகு, உளுந்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியுடன் கலந்து அனைவருக்கும் பரிமாறவும்.

இது இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி வகைகள் என்பதால் வீட்டில் உள்ளவர்கள் இந்த சட்னியை கொஞ்சம் கூட மிச்சம் வைக்கமாட்டார்கள்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி இரு தொடைகளும் சந்திக்கும் இடம் மிகவும் அடர்ந்த கருப்பாக இருக்கும். இயற்கையான வழிகளில் உங்கள் சருமத்தைப் பளபளப்பாக்குவது எப்படி என்று பார்ப்போம்.
பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி இரு தொடைகளும் சந்திக்கும் இடம் மிகவும் அடர்ந்த கருப்பாக இருக்கும். இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண இயற்கையான வழிகளில் எளிதிலும் கிடைக்கும் எலுமிச்சை, தேன், மஞ்சள், கற்றாழை, ஆலிவ் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை உபயோகித்து உங்கள் சருமத்தைப் பளபளப்பாக்குவது எப்படி என்று பார்ப்போம்.
நம் சருமங்களில் உள்ள இறந்து போன செல்களை அகற்றுவதில் எலுமிச்சைக்கு முக்கியப் பங்கு உண்டு. எலுமிச்சைச் சாற்றை நேரடியாக சருமத்தில் தேய்க்க வேண்டாம். அதில் அமிலத் தன்மை இருப்பதால், அதைத் தேய்க்கும் போது எரிச்சல் ஏற்படலாம். எனவே, எலுமிச்சைச் சாற்றை நீரில் கலந்து, அந்தக் கரைசலை கருப்பான தொடைப் பகுதிகளில் தடவி 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். பின்னர் அந்தப் பகுதியை நீரால் நன்றாகக் கழுவ வேண்டும்.
கற்றாழை பசையைக் கடிகாரச் சுற்றிலும் எதிர்-கடிகாரச் சுற்றிலுமாக 5 நிமிடங்களுக்கு மசாஜ் தேய்த்து, நன்றாகக் காய விட வேண்டும். காய்ந்து கொண்டிருக்கும் போது தான் அந்தப் பசை தன்னுடைய மேஜிக் வேலையை செய்து கொண்டிருக்கும். பின்னர் மிதமான சுடு நீரில் கழுவி அந்தப் பசையை நீக்க வேண்டும். இதைத் தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் மேஜிக்கிற்கான நல்லதொரு ரிசல்ட் கிடைக்கும்.
நம் சருமத்திற்குப் பளபளப்பைக் கொடுப்பதில் தக்காளிக்கு நிகர் தக்காளி தான்! இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நம் சருமத்தில் உள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் எண்ணெய்களையும் முற்றிலுமாக நீக்க வல்லது. தக்காளியை பேஸ்ட் செய்து கொண்டு, கருப்பான தொடைகளில் 5 நிமிடங்கள் வரை நன்றாகத் தேய்க்கவும். பின்னர் 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். கருப்பான தொடைகள் நிச்சயம் பளபளப்பாக மாறும்.
சிறிது சிறிதாக வெட்டப்பட்ட வெள்ளரிக்காய் துண்டுகளை கருந்தொடைகள் மீது தினமும் 10 நிமிடங்கள் வரை நன்கு தேய்க்க வேண்டும். வெள்ளரியில் உள்ள ஈரத் தன்மை காரணமாக கருந்தொடைகள் வெளுப்பாகும், சருமமும் பளபளப்பாகும். கொஞ்சம் எலுமிச்சைத் துளிகளையும் சேர்த்துத் தேய்த்தால் இன்னும் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
சருமத்தில் உள்ள அழுக்குகளைப் போக்கிச் சுத்தமாக்குவதில் பப்பாளிக்கு முக்கியப் பங்கு உள்ளது. பப்பாளி பேஸ்ட்டை தினமும் கருமையான தொடைகளில் ஒரு பிரஷ்ஷின் உதவியுடன் மசாஜ் செய்து வந்தால், கருப்பான அழுக்குகள் நீங்கி தொடையோரங்கள் பளபளக்கும்.
தொடைகளில் 5 நிமிடங்களுக்கு தேனை நன்றாகத் தடவி, 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விட வேண்டும். தேனில் உள்ள ஈரப்பதம் உங்கள் கருந்தொடைகளை குழந்தைகளின் மென்மையான சருமம் போல் மாற்றும். இதைத் தொடர்ந்து ஒரு வாரம் செய்தால் பளபள ரிசல்ட் கிடைக்கும்.

காதைத் தடவி தடவி குழந்தை அழுதால், காதில் என்ன பிரச்சனை எனக் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிக முக்கியம்.
குழந்தைகளின் காதுகள் மிகவும் சென்சிடிவ்வான உறுப்பு. காது வலி வந்தால்தான் தெரியும். அந்த வலி மிகவும் கொடுமையானது என்று. காதைத் தடவி தடவி குழந்தை அழுதால், காதில் என்ன பிரச்சனை எனக் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிக முக்கியம். முதலாவதாக, தெரிந்து கொள்ளுங்கள். பட்ஸ், ஹேர் பின், கொண்டை பின் என எதுவும் குழந்தைக்கு பயன்படுத்தவே கூடாது. இதெல்லாம் குழந்தையின் சின்ன காதுகளைப் பாதிக்கும்.
எந்தவித கூர்மையான பொருட்களையும் குழந்தையின் காது அருகில் தயவு செய்து கொண்டு செல்லாதீர்கள். டவல் (துண்டு), ஒரு முனையை எடுத்துக்கொண்டு அதை மெல்லியதாக உருட்டி, குழந்தையின் காதில் விட்டு ஈரத்தை எடுக்கலாம். குழந்தை குளித்த பின் செய்ய வேண்டிய முறை இது. குழந்தையின் காது அழுக்காக இருந்தால், துணியை ஈரம் செய்துவிட்டு காதை லேசாகத் தொட்டு துடைத்து எடுக்கவும். சோப் பயன்படுத்தவே கூடாது.
காதுகளின் உள் மடலையும் வெளி காதையும் மென்மையான, ஈரமான துணியால் துடைத்து எடுக்கவும். ஒவ்வொரு முறை குழந்தை குளித்த பின்னும் துண்டால் காதின் ஈரத்தை ஒத்தி ஒத்தி எடுக்கலாம். குழந்தை காதில் ஏதோ அசௌகரியமான உணர்வு உணர்ந்தாலோ, காதில் வலி இருப்பது போல அழுதாலோ மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
காதை சுத்தம் செய்யும்போது, குழந்தை கதகதப்பான உணர்வை உணர வேண்டும். ஆதலால், அடர்த்தியான, துணியால் குழந்தையை போர்த்திக்கொள்ளுங்கள். சில குழந்தைகளுக்கு இயல்பாகவே அதிகமாக வாக்ஸ் காதில் உருவாகும். அவர்களை கட்டாயமாக காது மருத்துவரிடம் கொண்டு சென்று காண்பிக்கவும்.

குழந்தையை சீக்கிரம் நடக்க வைப்பதற்கு சுலபமான முறையில் என்ன வழிகள் உள்ளது என்பதை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
குழந்தைகள் பிறந்து 8 மாதம் ஆன பிறகு 8 அடி வைக்க வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவது வழக்கம். ஆனாலும் சில குழந்தைகள் 8 மாதம் ஆன பிறகும் நிற்கவே மிகவும் சிரமப்படுவார்கள். தங்கள் குழந்தை 8 மாதம் ஆன பிறகும் நடக்காமல் இருப்பதை பார்த்து தாய்மார்கள் பலரும் மிகவும் வருத்தத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள். சரி வாங்க இப்போது 8 மாதம் ஆன பிறகும் நடக்காமல் இருக்கும் குழந்தையை சுலபமாக எப்படி நடக்க வைக்கலாம் என்பதை பற்றிய சில டிப்ஸ் இதோ உங்களுக்காக..!
குழந்தை எந்த வித கஷ்டமும் இல்லாமல் சீக்கிரம் நடக்க இரவு தூங்கும் முன் பாத்திரத்தில் புழுங்கல் அரிசியை எடுத்து அதிகமாக தண்ணீர் ஊற்றி அரிசியை ஊறவைத்து கொள்ளவும். ஊறவைத்த அரிசி தண்ணீரை மறுநாள் வடிகட்டி குழந்தையை அந்த நீரில் குளிப்பாட்ட வேண்டும். ஊறவைத்த அரிசி தண்ணீரில் மட்டும் குழந்தையை குளிப்பாட்ட வேண்டும். குழந்தையை குளிப்பாட்ட தண்ணீர் பற்றவில்லை என்பதற்காக வேறு எந்த நீரிலும் குழந்தையை குளிப்பாட்ட கூடாது.
சாதாரண நீரில் குழந்தையை நன்றாக குளிப்பாட்டிய பிறகு ஊறவைத்த அரிசி தண்ணீரை குழந்தையின் கால், முதுகு, இடுப்பு பகுதிகளில் நன்றாக ஊற்றிவிட்டு குளிப்பாட்டிவிட வேண்டும். குழந்தையை எப்போதும் குளிப்பாட்ட வைக்கும் நீரின் வெப்பத்தை விட இந்த அரிசி ஊறவைத்த நீரின் வெப்பத்தன்மை அதிகமாக இருக்க வேண்டும். இந்த அரிசி ஊறவைத்த நீரில் குழந்தையை குளிப்பாட்டுவதால் குழந்தையின் முதுகெலும்பு, தொடையெலும்பு, மூட்டு பகுதிகள் குழந்தைக்கு மிகவும் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
காலையில் குழந்தையை குளிப்பாட்டிய பிறகு பாத்திரத்தில் அரிசியை ஊறவைத்து கொள்ளவும். மாலை 4 மணி அளவில் ஊறவைத்த அரிசியை நன்றாக வடிகட்டிய பின் மிதமான அளவிற்கு வடிகட்டிய நீரை ஹீட் செய்து குழந்தையின் இடுப்பிற்கு கீழ் நன்றாக ஊற்றிவிட வேண்டும். இது போன்று 2 முறை குழந்தைக்கு செய்துவிட வேண்டும்.
குழந்தையை தினமும் நிற்க வைத்து பழக்கி விட வேண்டும். அதிக நேரமும் குழந்தை நின்றால் வலி ஏற்பட்டுவிடும். இதனால் குழந்தைகள் அழ தொடங்கிவிடுவார்கள். அப்போது நிற்கவைப்பதை தவிர்த்துவிட்டு சிறிதுநேரம் பிறகு நிற்க வைத்து பழக்குங்கள்.
இந்த அரிசி ஊறவைத்த தண்ணீரில் குழந்தையின் முதுகு பகுதி, இடுப்பு பகுதிகளில் தினமும் ஊற்றி குளிப்பாட்டி வந்தால் நடக்க பழகாமல் இருக்கும் எந்த குழந்தையும் நடக்க ஆரம்பித்துவிடுவார்கள். அரிசி ஊறவைத்த தண்ணீரை பிறந்த குழந்தை முதல் பயன்படுத்தி வரலாம்.

உடற்பருமன் கொண்டவர்கள், உடற்பயிற்சி செய்தவர்களாக இருந்தபோதிலும், அதிக கொலஸ்டிரால், நீரிழிவு ஏற்படுவதற்கான சாத்தியம் 4 மடங்கு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியம் 5 மடங்கு உள்ளது என ஆய்வு தெரிவிக்கின்றது.
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் உள்ள ஐரோப்பிய பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அலிஜாண்டிரோ லூசியா என்பவர் தலைமையில் நடந்த ஆய்வில் உடற்பருமன் உள்ளவர்களுக்கு இருதய நலம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும் சாத்தியம் அதிகம் உள்ளது என தெரியவந்துள்ளது.
இதற்காக முதன்முறையாக நாடு முழுவதும் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்த ஆய்வில், 5 லட்சத்து 27 ஆயிரத்து 662 பேர் உட்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஸ்பெயின் நாட்டில் பணியில் இருப்பவர்கள். ஆய்வில் பங்கேற்றவர்களின் சராசரி வயது 42. பெண்கள் 32 சதவீதத்தினர் ஆவர்.
அவர்களை சராசரி உடல் எடை கொண்டவர்கள் (42%), அதிக எடை (41%) மற்றும் உடற்பருமன் (18%) கொண்டவர்கள் என வகைப்படுத்தினர். இதுதவிர, உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு ஏற்ப அவர்களை 3 வகையாக பிரித்தனர்.
அதன்படி, உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ள குறைந்தபட்ச உடற்பயிற்சியை சீராக செய்து வருபவர்கள் ஒரு பிரிவாகவும், உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கும் கீழாக வாரந்தோறும் உடற்பயிற்சி செய்பவர்கள் 2வது பிரிவாகவும் மற்றும் எந்த உடற்பயிற்சியிலும் ஈடுபடாதவர்கள் 3வது பிரிவாகவும் வகைப்படுத்தப்பட்டனர்.
இவர்களில் பெருமளவிலானோர் (63.5%) எந்தவித உடற்பயிற்சியும் மேற்கொள்ளாமல் இருந்தனர். 12.3% பேர் போதிய உடற்பயிற்சி செய்யாதவர்களாகவும், 24.2% பேர் தினமும் உடற்பயிற்சி மேற்கொள்பவர்களாகவும் இருந்தனர்.
இருதய நலம் சார்ந்த 3 ஆபத்து காரணிகளாக அதிக கொலஸ்டிரால், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகியவை தீர்மானிக்கப்பட்டன. இவை மாரடைப்பு மற்றும் ஸ்டிரோக் ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்த கூடியவையாக உள்ளன.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 30% பேருக்கு அதிக கொலஸ்டிரால், 15% பேருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் 3% பேருக்கு நீரிழிவு ஆகியவை இருந்துள்ளன.
எனினும், உடல் எடை மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் மேற்கூறிய 3 ஆபத்து காரணிகள் ஆகியவற்றுடன் உள்ள தொடர்பு பற்றியும் ஆய்வாளர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், அனைத்து வகையான உடல் எடை கொண்டவர்களுக்கும், ஏதேனும் ஓர் உடற்பயிற்சியை (உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ள குறைந்தபட்ச அளவோ அல்லது அதற்கு குறைவாகவோ) மேற்கொள்வது நீரிழிவு ஏற்படுவதற்கான காரணியை குறைப்பதில் தொடர்பு கொண்டுள்ளது.
உடற்பயிற்சியே இல்லாமல் இருப்பதற்கு இது ஏற்றது. இதுபற்றி லூசியா கூறும்பொழுது, இதன்படி, உடல் எடை எந்த அளவில் இருந்தபோதிலும் ஒவ்வொருவரும், தங்களது உடல்நலன் பாதுகாக்க சுறுசுறுப்புடன் ஏதேனும் செயலில் ஈடுபட்டு கொண்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அனைத்து உடல் எடை கொண்டவர்களுக்கும், உடற்பயிற்சி அதிகரிக்கும்பொழுது, உயர் அழுத்தம் மற்றும் நீரிழிவு பாதிப்பு குறைகிறது.
அதிக உடற்பயிற்சி சிறந்தது. அதனால், 15 நிமிட நடைபயிற்சிக்கு பதில், அதனை கூட்டி 30 நிமிட நடைபயிற்சி செய்வது நல்லது என அவர் கூறியுள்ளார்.
எனினும் அதிர்ச்சிக்குரிய வகையில், சராசரி உடல் எடை கொண்ட ஆனால் வேறுபட்ட உடற்பயிற்சி அளவுகளை கொண்ட நபர்களுடன் ஒப்பிடும்பொழுது, அதிக எடை மற்றும் உடற்பருமனான நபர்களுக்கு இதய பாதிப்பு ஆபத்து அதிகளவில் காணப்பட்டது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உடற்பருமன் கொண்டவர்கள், உடற்பயிற்சி செய்தவர்களாக இருந்தபோதிலும், அதிக கொலஸ்டிரால், நீரிழிவு ஏற்படுவதற்கான சாத்தியம் 4 மடங்கு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியம் 5 மடங்கு உள்ளது என ஆய்வு தெரிவிக்கின்றது.
கூடுதல் உடல் எடை கொண்டவர்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சி, எதிர் விளைவுகளை ஈடு செய்யாது என்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு தரப்பினரிடமும் தனித்தனியாக நடத்தப்பட்ட ஆய்வின்படி இந்த முடிவு தெரிய வந்துள்ளது என்றும் லூசியா கூறுகிறார். அதனால், சுகாதார கொள்கைக்கும் மற்றும் சீரான வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கும், உடல் எடையை குறைப்பது என்பது முதன்மையான லட்சியம் ஆகவே இருக்க வேண்டும் என்றும் லூசியா கூறியுள்ளார்.

குழந்தைகள் பால் சரியாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் தாய்மார்களுக்கு பால் கட்டிக்கொள்ளும் பிரச்சனை ஏற்படும். சரி இப்போது தாய்ப்பால் கட்டிக்கொண்டு மார்பில் வலி இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துக்கொள்ளலாம்..!
தாய்ப்பால் கட்டிக்கொண்ட இடத்தில் சிறியதாக நறுக்கிய உருளை கிழங்கை மார்பகத்தில் வைக்க வேண்டும். அதன் மீது சிறிய துணியை வைத்து 1 மணிநேரம் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் உருளை கிழங்கை நாம் மாற்றியும் கொள்ளலாம். இதனால் தாய்ப்பால் கட்டும் பிரச்சனை நீங்கும்.
தாய்மார்களுக்கு தாய்ப்பால் கட்டிக்கொண்டால் வெந்நீர் வைத்து மார்பு பகுதியின் மேல் மெதுவாக மசாஜ் செய்து தாய்ப்பாலை வெளியில் அகற்றலாம். வெந்நீர் வைத்து மசாஜ் செய்வதால் தாய்ப்பால் கட்டிக்கொள்ளும் பிரச்சனை விரைவில் குணமாகும்.
முதலில் 2 கப் அளவிற்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு நீரை கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீருடன் கற்றாழை சேர்த்து 10 அல்லது 15 நிமிடம் கொதிக்கவிட வேண்டும். கற்றாழை தண்ணீர் நன்றாக கொதித்து வந்த பிறகு ஒரு துணியால் தண்ணீரில் நனைத்து தாய்ப்பால் கட்டிக்கொண்ட மார்பு பகுதியில் 15 நிமிடம் நன்றாக மசாஜ் செய்வது போல் தடவி வரவேண்டும். இந்த முறையை பின்பற்றினால் தாய்ப்பால் கட்டும் பிரச்சனையை குணமடைய செய்யும்.
தாய்ப்பால் கட்டி இருக்கும் இடத்தில் தேங்காய் எண்ணெயை மசாஜ் போல் செய்து வர வேண்டும். மார்பக பகுதிகளில் உண்டாகும் காயங்களில் கூட இந்த தேங்காய் எண்ணெயை தடவி வந்தால் மார்பக காயங்களும் விரைவில் ஆறும்.
மார்பு பகுதியில் தாய்ப்பால் கட்டி உள்ளவர்கள் தினமும் 1 கப் அன்னாசி பழ சாறு எடுத்துக்கொள்ளலாம். அன்னாசியில் இருக்கும் ஃப்ரோமெலைன் மார்பகத்தில் உள்ள வீக்கத்தை குறைத்து அடைத்து இருக்கும் மார்பக குழாய்களை சரி செய்யும்.
தாய்ப்பால் கட்டி பிரச்சனை உள்ள தாய்மார்கள் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை பூண்டை மசித்து சாப்பிட்டு வரவேண்டும். பச்சை பூண்டு சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். அதனால் பூண்டுடன் சிறிதளவு தேன் மற்றும் தண்ணீரில் பூண்டை ஊறவைத்து கூட தாய்ப்பால் கட்டி பிரச்சனை இருப்பவர்கள் தாராளமாய் சாப்பிடலாம்.
குழந்தைக்கு பால் கொடுக்கும் போது விலங்குகளை போல் தாய்மார்கள் குனிந்துக்கொண்டு பால் கொடுக்க வேண்டும். மார்பக பகுதி குழந்தையின் வாயில் படும் அளவிற்கு கொடுக்க வேண்டும். இந்த முறை ஈர்ப்பு விசையின் மூலம் மார்பக கட்டியின் வலி இல்லாமல் இருக்கும்.
பூசணிக்காயை கொண்டு சப்பாத்தி செய்யலாம் என்பது தெரியுமா? இந்த சப்பாத்தி உடலுக்கு ஆரோக்கியமான காலை உணவாகவும் இருக்கும். இப்போது அந்த பூசணிக்காய் சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
துருவிய சிவப்பு பூசணிக்காய் - 2 கப்
கோதுமை மாவு - 3 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், துருவிய சிவப்பு பூசணியை சேர்த்து 3-5 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, வதக்கிய பூசணிக்காய் துருவல் சேர்த்து, நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்திகளாக தேய்த்து, கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், பூசணிக்காய் சப்பாத்தி தயார்!
இப்போது ஆண், பெண் என இருபாலருக்கும் முடி உதிர்வு பிரச்சனை இயல்பாகிவிட்டது. செயற்கை முறை இல்லாமல் இயற்கையான வழியில் முடி உதிர்வு பிரச்சனையை எப்படி சரி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க...
இப்போது ஆண், பெண் என இருபாலருக்கும் முடி உதிர்வு பிரச்சனை இயல்பாகிவிட்டது. பெண்களுக்கு அழகு நீளமான கூந்தல் இருப்பதுதான். இப்போது கடைகளில் விற்கும் ஷாம்பூவை அதிகம் உபயோகிப்பதனால் கூட இந்த முடி உதிர்வு பிரச்சனை வந்துகொண்டே இருக்கிறது. செயற்கை முறை இல்லாமல் இயற்கையான வழியில் முடி உதிர்வு பிரச்சனையை எப்படி சரி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க...
தேவையான பொருட்கள்:
வெந்தயம் – 10 ஸ்பூன் (ஊற வைத்தது)
வைட்டமின் இ கேப்ஸுல் – 1
விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன்
முதலில் ஒரு பவுலில் 10 ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து 5 அல்லது 6 மணிநேரம் நன்கு ஊறவைத்து கொள்ளவேண்டும். அடுத்து ஊறிய வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். மிக்ஸி ஜாரில் அரைத்ததை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும். வடிகட்டி எடுத்து கொண்டதில் வைட்டமின் இ கேப்சுளை ஒன்று சேர்த்துக்கொள்ளவும். வைட்டமின் இ கேப்ஸுல் இல்லாதவர்கள் தேங்காய் எண்ணெயை 1 ஸ்பூன் அல்லது 2 ஸ்பூன் சேர்க்கலாம்.
அடுத்து 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்க்கவும். குளிர்ச்சி தன்மை உள்ளவர்கள் இதை தவிர்த்து கொள்ளலாம். இப்போது சேர்ந்த எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் செய்யவும். இதை தனியாக ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி தலையில் அப்ளை செய்யவேண்டும்.
முக்கியமாக இரவு நேரத்தில் மட்டுமே இதை தடவ வேண்டும். காலையில் ஷாம்பு போட்டு தலையை வாஷ் செய்துகொள்ளலாம். இந்த முறையை வாரத்தில் ஒருமுறை செய்து வந்தால் போதும் முடி உதிர்வு பிரச்சனை இருக்காது.
வெந்தயம் கண், கழுத்து பகுதிக்கு மிகவும் குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ளது. அதோடு முடி உதிர்வு பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும். வெந்தயத்தில் நிக்கோடனிக் அமிலம், ப்ரோடீன் சத்துக்கள் அடங்கியுள்ளது. வைட்டமின் இ கேப்சுலும் முடி சம்மந்தப்பட்ட பிரச்சனைக்கு சிறந்து விளங்குகிறது. விளக்கெண்ணெய் உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

கடனில்லாத ஒரு வாழ்க்கையை வாழ முடியாது என்பதுதான் உண்மை. கடன் வாங்குவதற்கான அடிப்படை தகுதி அதை எப்படி திருப்பி செலுத்துவோம் என்பதை பொறுத்து தான்.
கடன் அன்பை முறிக்கும் என்பது வெறும் பழமொழி அல்ல. அது முன்னோர்களின் அனுபவ பாடம். கடனும், நோயும் இல்லாத வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை என்று முன்னோர்கள் கூறி உள்ளார்கள்.
இன்றைய காலத்தில் கடன் இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்கவே முடியாது. எவற்றிற்கு கடன் வாங்கலாம் என்கிற எந்த வரம்புகளும் இல்லாமல் வாங்கிக் குவிக்கிறோம். கட்ட முடியாத அளவுக்கு வாங்கிக் குவித்து, வருமானத்தை கடனுக்கும், வட்டிக்கும் கட்டி வருகிறது பல குடும்பங்கள்.
தனிநபர் கடன், திருமணம், கல்வி, சுற்றுலா, மருத்துவச் செலவு என அனைத்து வகைகளிலும் கடன் வாங்குவது அதிகரித்துள்ளது. கூடவே வீட்டு உபயோகப்பொருட்கள் கடன், கிரெடிட் கார்டு கடனும் சேர்ந்து கொள்கிறது. ஆக கடனில்லாத ஒரு வாழ்க்கையை வாழ முடியாது என்பதுதான் உண்மை. ஒரு சராசரி குடும்பம் ஏதாவது ஒரு வகையில் கடன் வாங்கியே ஆகவேண்டும்.
மார்க்கெட்டிங் வேலையில் இருக்கும் ஒருவருக்கு பைக் அவசியமானதாக இருக்கும். அப்போது தான் அவரது தொழிலில் நீடிக்க முடியும். வருமானம் அதிகரிக்க முடியும் என்கிற நிலையில் வாகனக் கடன் அவசியமாகிறது. அதே நேரத்தில் வருமானத்தில் பல கடன்கள் இருந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு நடுத்தர குடும்பம் வாகன கடன் வாங்க ஆசைப்படுவது வருமானத்துக்கு மீறியது. சுற்றுலா செல்ல வேண்டும் என்று தனிநபர் கடன் வாங்கினால் அது சுமையாக மாறிவிடும். கடன் குறித்த பயம், பயன்பாட்டை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும், என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். அதாவது நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்து கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
கடன் வாங்குவதற்கான அடிப்படை தகுதி அதை எப்படி திருப்பி செலுத்துவோம் என்பதை பொறுத்து தான். மொத்தமாகவோ அல்லது தவணைமுறையிலோ திருப்பி செலுத்தும் அளவுக்கு வருமானம் இருந்தால் கடன் கிடைக்கும். வருமானத்தில் 60 சதவீதம் அல்லது மாத வருமானத்தில் செலவுகள் போக மிச்சமிருக்கும் உபரி தொகை இந்த இரண்டின் அடிப்படையில் கடன் வாங்கும் அளவு தீர்மானிக்கப்படுகிறது. கடன் வாங்குபவரின் வயது மற்றும் எத்தனை ஆண்டுகளில் அந்த கடனை கட்டி முடிப்பார் என்பதை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. அதிகபட்ச வயது வரம்பு 60 என்று கணக்கிடப்படும். இளம் வயதிலேயே கடன் வாங்கினால் கடனை திருப்பி செலுத்த அதிக காலம் கிடைக்கும். 30 வயதில் கடன் வாங்கினால் அடுத்த 30 ஆண்டு காலம் வரை கடனை கட்ட முடியும். 50 வயதான நபர் வாங்குகிறபோது அவருக்கு 10 ஆண்டுகள் தான் கிடைக்கும்.

தினமும் 100 கிராம் பன்னீர் அல்லது பாலாடைக்கட்டி சாப்பிட்டு வந்தால் நாள் முழுவதும் உற்சாகமாக செயல்பட முடியும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தினமும் 100 கிராம் பன்னீர் அல்லது பாலாடைக்கட்டி சாப்பிட்டு வந்தால் நாள் முழுவதும் உற்சாகமாக செயல்பட முடியும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 100 கிராம் பாலாடைக்கட்டியில் கொழுப்பு (21 கிராம்), புரதம் (18 கிராம்), கார்போஹைட்ரேட் (3 கிராம்) போன்றவை இருக்கின்றன. இது 170 கலோரிகளை கொண்டது. கால்சியம், வைட்டமின் ஏ போன்ற நுண்ணிய ஊட்டச்சத்துக்களும் அதில் நிரம்பி இருக்கின்றன.
100 கிராம் பாலாடைக்கட்டி அன்றாட கால்சியம் அளவில் 25 சதவீதத்தையும், வைட்டமின் ஏ தேவையில் 22 சதவீதத்தையும் பூர்த்தி செய்துவிடும். பாலாடைக்கட்டியில் கொழுப்பின் அளவு அதிகமாக இருக்கும். காலை உணவுடன் பாலாடைக்கட்டியை சாப்பிட்டால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய நிலையில் இருக்கும். ஏனெனில் கொழுப்பு ஜீரணமாகுவதற்கு அதிக நேரம் தேவைப்படும்.
அதனால் பசி உணர்வு தாமதமாகும். உடற்பயிற்சியாளர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி உடல் எடையை குறைப்பதற்கு கலோரிகளை குறைப்பது அவசியமானது. அதற்கு பாலாடைக்கட்டி உதவும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் பாலாடைக்கட்டி சாப்பிடுவதோடு உடற்பயிற்சியும் செய்து வர வேண்டும். பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பாலாடைக்கட்டியைவிட எருமைப்பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர் அதிக கொழுப்பு கொண்டது. 100 கிராம் பாலாடைக்கட்டியில் 18 முதல் 19 கிராம் வரை உயர் ரக புரதம் இருக்கும். இது தசைகள் உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
100 கிராம் பாலாடைக்கட்டியில் 245 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் முக்கியமானது. குழந்தைகளின் வளர்ச்சிக்கும் தேவை.

பெண்கள் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானத்தை பருகுவது இதயத்தின் செயல்பாடுகளை பலவீனமாக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானத்தை பருகுவது இதயத்தின் செயல்பாடுகளை பலவீனமாக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்கள் தினமும் 100 கலோரிகளுக்கும் குறைவான சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள், பதார்த்தங்களைத்தான் உட்கொள்ள வேண்டும். அதுவே 6 டீஸ்பூன் சர்க்கரைக்கு சமமானது என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
52 வயது நிரம்பிய 1 லட்சத்து 6 ஆயிரம் பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தினமும் குறிப்பிட்ட அளவு சர்க்கரை பானங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. சர்க்கரை பானங்களை அரிதாகவோ அல்லது ஒருபோதும் பருகாத பெண்களுடன் ஒப்பிடும்போது இந்த பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 21 சதவீதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்கன் இதய அசோசியேஷனின் ஊட்டச்சத்துக்குழு தலைவரும் ஆராய்ச்சியாளருமான செரில் ஆண்டர்சன் குறிப்பிடுகையில், “பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் பல வழிகளில் அதிகரிக்கக்கூடும் என்று கருதுகிறோம். ரத்தத்தில் குளுக்கோஸ் அளவும், இன்சுலினின் செறிவும் உயர்வதற்கும் இனிப்பு காரணமாக இருக்கிறது. பசியை அதிகரிக்கச்செய்து உடல் பருமனுக்கும் வழிவகுக்கும். இவை இதய நோய்களுக்கான முக்கிய காரணிகளாக அமையும்” என்கிறார்.
தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட இனிப்பு பானங்கள், தேநீர், சர்க்கரை சேர்க்கப்பட்ட பழச்சாறு, கலோரிகள் அதிகம் கொண்ட குளிர்பானங்கள் பருகும் பெண்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. அரிதாகவோ அல்லது ஒருபோதும் இனிப்பு பானம் அருந்தாத பெண்களாகவோ இருந்தால் அவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு பெருமளவு குறைகிறது.
அமெரிக்கன் இதய அசோசியேஷனின் பரிந்துரையின்படி, பெண்கள் தினமும் 100 கலோரிகளுக்குள் தயாரிக்கப்பட்ட சர்க்கரை பொருட்களை மட்டுமே உட்கொள்ள வேண்டும். ஆண்கள் 150 கலோரி அளவுக்கு இனிப்பு பொருட்களை சாப்பிடலாம்.
-------------------