search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பூசணிக்காய் சப்பாத்தி
    X
    பூசணிக்காய் சப்பாத்தி

    பூசணிக்காய் சப்பாத்தி

    பூசணிக்காயை கொண்டு சப்பாத்தி செய்யலாம் என்பது தெரியுமா? இந்த சப்பாத்தி உடலுக்கு ஆரோக்கியமான காலை உணவாகவும் இருக்கும். இப்போது அந்த பூசணிக்காய் சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்:

    துருவிய சிவப்பு பூசணிக்காய் - 2 கப்
    கோதுமை மாவு - 3 கப்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், துருவிய சிவப்பு பூசணியை சேர்த்து 3-5 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.

    பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, வதக்கிய பூசணிக்காய் துருவல் சேர்த்து, நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

    பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்திகளாக தேய்த்து, கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், பூசணிக்காய் சப்பாத்தி தயார்!
    Next Story
    ×