என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நம்மாழ்வார் மோட்சத்துடன் இன்று நிறைவு பெறுகிறது.அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. வைகுண்ட ஏகாதசி விழா ராப்பத்து உற்சவத்தின் 10-ம் திருநாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு பரமபதவாசல் வழியாக சந்திரபுஷ்கரணி குளத்திற்கு சயனப்பெருமாளுடன் வந்து சேர்ந்தார்.
அங்கு நம்பெருமாளுக்கு பதிலாக சயனப்பெருமாளை சந்திரபுஷ்கரணி குளத்தில் புனித நீராட வைத்தனர். நம்பெருமாள் கரையில் நின்றவாறு தீர்த்தவாரி கண்டருளினார். பின் சயனப்பெருமாள் பரமபதவாசல் வழியாக மூலஸ்தானம் சென்றடைந்தார்.
நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் இருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்திற்கு பகல் 12 மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் மாலை 4.30 மணிமுதல் இரவு 7 மணிவரை நம்பெருமாள் திருமஞ்சனமும் கண்டருளினார். இரவு 8 மணிமுதல் இரவு 10 மணிவரை அரையர் சேவையுடன் திருப்பாவாடை கோஷ்டி நடைபெற்றது.இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிமுதல் 6 மணி வரை நம்மாழ்வார் மோட்சம் நடைபெறுகிறது. பின்னர் காலை 6 மணி முதல் காலை 9 மணிவரை பொதுஜன சேவை நடைபெறுகிறது. நம்பெருமாள் காலை 9.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
அதன் பின் மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணிமுதல் இரவு 9 மணிவரை இயற்பா பிரபந்தம் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணிமுதல் நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2 மணிவரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது. அதன் பின் அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணிவரை சாற்றுமறை நடைபெறுகிறது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.
சனீஸ்வர பகவானின் கடுமையான பார்வையில் இருந்து நீங்க அகஸ்தீஸ்வரர் பைரவர் கோலத்தில் சனீஸ்வரபகவான் எதிரே நின்று குரு போதனை நிமித்தமாக தோஷத்தை நீக்கி நற்பலனை பெற செய்கிறார் என்பதும் இவ்வாலயத்தில் சிறப்பாக கருதப்படுகிறது.
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள திருக்கொடியலூரில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவிலில் தனி சன்னதி உடன் அருள்பாலிக்கிறார், சனீஸ்வர பகவான். இத்தலத்தில் சூரியனின் மனைவிகளான உஷாதேவி, சாயாதேவி ஆகிய இருவரும் திருமியச்சூரில் உள்ள மேகநாதரை நோக்கி புத்திர பாக்கியம் வேண்டி தவம் செய்தனர்.
அப்போது இறைவன், நீங்கள் இருவரும் கணவரோடு இருந்து மேற்கே உள்ள ஈசனை வழிபட்டால் உங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று வரம் அளித்தார். அதன்படி சூரியன், உஷாதேவி, சாயாதேவி ஆகிய மூவரும் மேகநாதசுவாமி கூறிய இடத்திற்கு சென்று சிவபூஜை செய்து வழிபாடு செய்தனர்.
சிறப்பு வாய்ந்த இந்த மங்கல சனீஸ்வர பகவான் ஆலயம், மற்ற சனீஸ்வர பகவான் ஆலயத்தையும் விட சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அகத்தியர் சிவபூஜை செய்த தலமாக இருப்பதால் பக்தர்களுக்கும், சிவனடியார்களுக்கும் சனீஸ்வர பகவானின் கடுமையான பார்வையில் இருந்து நீங்க அகஸ்தீஸ்வரர் பைரவர் கோலத்தில் சனீஸ்வரபகவான் எதிரே நின்று குரு போதனை நிமித்தமாக தோஷத்தை நீக்கி நற்பலனை பெற செய்கிறார் என்பதும் இவ்வாலயத்தில் சிறப்பாக கருதப்படுகிறது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் கடைவீதி பகவதி அம்மன் கோவிலில் பகவதி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம். மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் தொட்டியம் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் கடைவீதி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் குட்டி குடித்தல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கோவிலில் திருப்பணி வேலைகள் நடைபெறுவதால் மார்கழி மாத சிறப்பு பூஜை மற்றும் மாரியம்மன் கும்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காலை காவிரியில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பகவதி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம். மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் தொட்டியம் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து விடையாற்றி நிகழ்ச்சி இன்று இரவு (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
வில்லியனூர் அருகே திருக்காஞ்சியில் கங்கவராக நதீஸ்வரர் கோவிலில் அகத்தியருக்கு குரு பூஜை நடைபெற்றது.
வில்லியனூர் அருகே திருக்காஞ்சியில் கங்கவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி மக தீர்த்தவாரி, மகாளய அமாவாசை அன்று திரளான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம்.
இந்த கோவிலில் உள்ள லிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்ததாக வரலாற்றில் கூறப்படுகிறது. அதற்காக அகத்தியருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டு ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரம் அன்று குரு பூஜை நடைபெறும்.
அதன்படி மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரமான நேற்று அகத்தியருக்கு குரு பூஜை நடைபெற்றது. முன்னதாக காலையில் அகத்தியருக்கு மங்கல பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அகத்தியருக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி சீதாராமன் தலைமையில் சிவாச்சாரியார் சரவணன் மற்றும் பலர் செய்திருந்தனர்.
மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரில் மாதேஸ்வரர் கோவிலில் அகத்திய அன்பர்கள் குழு சார்பில் குருபூஜை விழா நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரில் மாதேஸ்வரர் கோவிலில் அகத்திய அன்பர்கள் குழு சார்பில் குருபூஜை விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியையொட்டி காலை 8 மணிக்கு குருநாதர் அகத்திய பெருமானுக்கு சித்தர் முறை யாகம், வாசனைத்திரவியங்கள், பலவண்ண மலர்கள், பழங்கள், மூலிகைகள், புனித கலசநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள், மகாதீபாராதனை நடைபெற்றன.
இதில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் திருப்புக்கொளியூர் என்று வழங்கப்பட்ட இந்த சிவஸ்தலம் தற்போது அவிநாசி என்று கூறப்படுகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் திருப்புக்கொளியூர் என்று வழங்கப்பட்ட இந்த சிவஸ்தலம் தற்போது அவிநாசி என்று கூறப்படுகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சிவஸ்தலம் பெயர் - அவிநாசி (திருப்புக்கொளியூர்)
இறைவன் பெயர் - அவிநாசியப்பர்
கோவில் அமைப்பு: தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் திருப்புக்கொளியூர் என்று வழங்கப்பட்ட இந்த சிவஸ்தலம் தற்போது அவிநாசி என்று கூறப்படுகிறது. இக்கோவில் சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவில் கிழக்கு திசையில் 7 நிலை ராஜ கோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. கோவிலின் உள்ளே இரண்டு பிரகாரங்கள் உள்ளன. ராஜ கோபுர நுழைவு வாயிலில் இரண்டு பக்கமும் நர்த்தன கனபதியின் சிற்பங்கள் உள்ளன. உள்ளே நுழைந்தவுடன் உள்ள மண்டபத்தின் தூண்களில் வீரபத்திரர், ஊர்த்துவ தாண்டவர் மற்றும் காளியின் சிற்பங்கள் காணப்படுகின்றன. மண்டபத்தில் இருந்து உள் பிரகாரத்தில் நுழைந்தால் மூலவர் அவிநாசியப்பர் சந்நிதி இருக்கிறது.
மூலவர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். மூலவர் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி உள்ள பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் முருகன் சந்நிதியும், வடகிழக்கு கோஷ்டத்தில் காரைக்கால் அம்மையார் சந்நிதியும் அமைந்துள்ளன. மேலும் உள் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள் சிற்பங்களும் வைக்கப்பட்டு இருக்கின்றன. ஸ்ரீகாலபைரவர் சந்நிதியும் இத்தலத்தில் சிறப்பிற்குரியது. நடராஜர் மண்டபத்திலுள்ள ஐம்பொன்னால் ஆன நடராஜர் திருமேனி எல்லோரையும் கவர்ந்து இழுக்கும். இத்தலத்தில் பிரம்மா 100 ஆண்டுகளும், இந்திரனுடைய ஐராவதம் என்னும் யானை 12 ஆண்டுகளும், தாடகை 3 ஆண்டுகளும், நாகக் கன்னி 21 மாதங்களும் வழிபாடு செய்ததாக ஐதீகம்.
இறைவி கருணாம்பிகை சந்நிதி மூலவர் அவிநாசியப்பர் சந்நிதியின் வலதுபுறம் அமைந்துள்ளது. இங்கே அழகு கொஞ்சும் திருமுகத்துடன் கருணையே உருவெனக் கொண்டு கருணாம்பிகை காட்சி தருகிறாள். அம்பாள் சந்நிதியின் பின்பக்க மாடத்தில் தேளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேளுக்கு பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுகின்றனர், அப்படி வழிபட்டால், விஷ ஜந்துக்களின் கடியில் இருந்து தப்பலாம்; விஷ ஜந்துக்களால் வருகிற கனவு, பயம் ஆகியவற்றில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.
திருப்புகழ் தலம்: அவிநாசி ஒரு திருப்புகழ் தலமாகும். இக்கோவிலில் பாலதண்டாயுதபாணி சந்நிதியும், சுப்பிரமணியர் சந்நிதியும், அறுகோண அமைப்பிலுள்ள செந்தில்நாதன் சந்நிதியும் உள்ளன. உற்சவராக முருகப்பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் விளங்குகிறார். குமார சுப்பிரமணியர் உற்சவ மூர்த்தமும் இவ்வாலயத்தில் உள்ளது. அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இவ்வாலய முருகர் மீது மூன்று பாடல்களைப் பாடியுள்ளார்.
இந்த ஆலயத்தின் மூன்று தீர்த்தங்கள் 1. காசிக் கங்கை(கிணறு), 2. நாககன்னிகை தீர்த்தம் (கிணறு) 3. ஐராவத தீர்த்தம் எனபனவாகும். தலமரமாக மாமரம் விளங்குகிறது. தமிழ்நாட்டிலுள்ள மிகப் பெரிய கோவில் தேர்களில் அவிநாசிக் கோவில் தேரும் ஒன்றாகும்.
தல புராண வரலாறு: சுந்தரர் இத்தலத்திற்கு வருகை தந்த போது எதிரும் புதிருமாக இருந்த இரு வீடுகளில் ஒன்றில் மங்கல ஒலியும், மற்றொன்றில் அமங்கல ஒலியும் எழ அதன் காரணத்தைக் கேட்டார். ஐந்து வயதுள்ள இரு அந்தணச் சிறுவர்கள் மடுவில் குளிக்கச் சென்றதாகவும், அவர்களில் ஒருவனை மடுவில் இருந்த முதலை விழுங்கி விட்டதாகவும் கூறினர்.
மேலும் தப்பிப் பிழைத்த சிறுவன் வீட்டில் அவனுக்கு உபனயனம் நடக்கும் விழா ஒலி என்றும், இறந்த சிறுவனின் வீட்டில் சோகத்தால் அழும் ஒலி என்றும் கூறினர். இறந்த சிறுவனின் பெற்றோர் சுந்தரர் வந்திருப்பதை அறிந்து அவரின் உதவியை நாடினர். மடு இருக்குமிடம் கேட்டு அங்கு சென்று முதலையை அழைக்கும் எண்ணத்துடன் சுந்தரர் எற்றான் மறக்கேன் என்று தொடங்கும் பதிகம் பாடினார்.
அவிநாசியப்பர் கோவிலில் இருந்து சுமார் ½ கி.மி. தூரத்தில் தென்மேற்குத் திசையில் தாமரைக் குளம் என்ற ஒரு ஏரி இருக்கிறது. அந்த குளக்கரையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கோவில் உள்ளது. இக்கோவிலின் சிறப்பு இங்குள்ள முதலை வாய்ப்பிள்ளை சிற்பம் ஆகும். முதலை வாயிலிருந்து குழந்தை வெளிவருவது போன்ற சிற்ப அமைப்பு இங்கு உள்ளது. பங்குனி உத்திரத் திருநாளில் அவிநாசியப்பர் இந்த குளக்கரைக்கு வருகை தருகிறார். முதலை வாய்ப்பிள்ளையை அழைத்த திருவிளையாடல் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகமும், 63 மூவர் விழாவும் மற்ற சிறப்பான விழாக்களாகும்.
அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில்
அவிநாசி அஞ்சல்
அவிநாசி வட்டம்
திருப்பூர் மாவட்டம்
PIN - 641654
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் இன்று (திங்கட்கிழமை) சாமி தரிசனம் செய்ய, ஒருநாள் முன்கூட்டியே அதாவது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இலவச தரிசன டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் இன்று (திங்கட்கிழமை) சாமி தரிசனம் செய்ய, ஒருநாள் முன்கூட்டியே அதாவது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இலவச தரிசன டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது.
இலவச தரிசன டோக்கன் திருப்பதி அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம் விடுதியில் வினியோகம் செய்யப்படுகிறது. பக்தர்கள் முகக் கவசம் அணிந்து வந்தும், வரிசையில் காத்திருக்கும்போது சமூக விலகலை கடைப்பிடித்தும் இலவச தரிசன டோக்கனை பெற்று, இன்று (திங்கட்கிழமை) சாமி தரிசனம் செய்யலாம், என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மகா தீப கொப்பரையில் இருந்து பெறப்பட்ட தீப மையானது ஆருத்ரா தரிசனத்தன்று கோவிலில் நடராஜருக்கு அணிவிக்கப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும்.
திருவண்ணாமலை :
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த நவம்பர் மாதம் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் நவம்பர் 29-ந்தேதி கோவிலின் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் ஏற்றப்பட்டு, தொடர்ந்து காட்சி அளித்தது.
இந்த மகா தீபத்திற்கு ஏராளமான பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்தி இருந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் மூலம் டோக்கன் வழங்கப்பட்டது.
மகா தீப கொப்பரையில் இருந்து பெறப்பட்ட தீப மையானது ஆருத்ரா தரிசனத்தன்று கோவிலில் நடராஜருக்கு அணிவிக்கப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும். இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜருக்கு தீப ‘மை’ அணிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.10-க்கு தீப ‘மை’ பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் தங்களிடம் உள்ள டோக்கனை வழங்கியும் ‘மை’ பிரசாதத்தை பெற்று கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது கோவிலில் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும் தீப ‘மை’ பிரசாதம் பேக்கிங் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பெரணமல்லூர் அருகே உள்ள இஞ்சிமேடு கிராமத்தில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜபெருமாள் கோவிலில் ராப்பத்து நிகழ்ச்சி நடந்தது.
பெரணமல்லூர் அருகே உள்ள இஞ்சிமேடு கிராமத்தில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜபெருமாள் கோவிலில் ராப்பத்து நிகழ்ச்சி நடந்தது. காலை பெருந்தேவி தாயார் வரதராஜபெருமாள், லட்சுமிநரசிம்மர், ஆண்டாள் ஆகிய சன்னதிகளில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதில் நம்மாழ்வார், வரதராஜபெருமாள் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, ஸ்ரீரங்க சடகோப கைங்கர்ய சபா சார்பில் சிறப்பு பூஜைகள் செய்து, அனைவருக்கும் நைவேத்திய பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வார விடுமுறை என்பதால், பழனி முருகன் கோவிலுக்கு நேற்று பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வந்திருந்தனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. தைப்பூச திருவிழா தொடங்குவதற்கு முன்பே, பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வரத்தொடங்கியுள்ளனர். இதுமட்டுமின்றி வார விடுமுறை என்பதால், பழனி முருகன் கோவிலுக்கு நேற்று பக்தர்கள் குவிந்தனர்.
அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்வதற்கான படிப்பாதை, யானைப்பாதை ஆகிய இடங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதேபோல் உபகோவிலான திருஆவினன்குடி கோவிலிலும் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. பக்தர்களின் வாகனங்கள் அதிகம் இருந்ததால் பூங்காரோடு, அடிவாரம் ரோடு, பஸ்நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நடனக் கலையில் சிறந்து விளங்க வேண்டுமென்று விரும்புபவர்கள், நாடகம் மற்றும் கலைத்துறையில் பிரகாசிக்க வேண்டுமென்று விரும்புபவர்கள் நடராஜப் பெருமான் வழிபாட்டை முறையாக மேற்கொள்ள வேண்டும்.
நடனக் கலையில் சிறந்து விளங்க வேண்டுமென்று விரும்புபவர்கள், நாடகம் மற்றும் கலைத்துறையில் பிரகாசிக்க வேண்டுமென்று விரும்புபவர்கள் நடராஜப் பெருமான் வழிபாட்டை முறையாக மேற்கொள்ள வேண்டும். சிவாலயங்களில் சிவகாமியம்மன் சமேத நடராஜப் பெருமான், சிவன் சன்னிதிக்கு அருகிலேயே இருப்பார். முயலகனை வதம் செய்த கோலத்தோடு கால் தூக்கி ஆடும் அந்த இனிய காட்சியை நாம் கண்டு மகிழ வேண்டும்.
ஆனிக்கு அடுத்து வரக்கூடிய மாதம் ஆடி மாதமாகும். ஆடி.. ஓடி.. சம்பாதிக்கும் வாழ்க்கையில், மற்றவர்கள் வியக்கும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஆனி மாதத்தில் வரும் நடராஜர் தரிசனம் நமக்கு வழிகாட்டுகிறது.
மிதுனம் நவக்கிரகங்களில் புதனுக்கு சொந்த வீடாகும். புதன் கல்விக்குரிய கிரகமாகக் கருதப்படுகிறது. எனவே இம்மாதத்தில் நடைபெறும் நடராஜர் தரிசனம் போன்ற விழாக்களில் கலந்துகொண்டால் படிப்பில் முதன்மை பெற வழிவகுக்கும். மண்ணில் நல்ல வண்ணம் வாழ, வழிபாடு ஒன்றுதான் வழிவகுக்கும்.
‘குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம்போல் மேனியில் பால் வெண்ணீரும்
இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்தமாநிலத்தே’
என்று முன்னோர்கள் கூறிய முத்தான வரிகளை எண்ணிப் பார்க்க வேண்டும். ‘மனிதப்பிறவி எடுத்ததன் பயனே இறைவனுடைய அழகைக் காண்பதற்காகத்தான்’ என்கிறார்கள். அந்த இறைவன் தரிசனம் தரும் நாளில் நாம் உள்ளன்போடு வழிபட்டு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம்.
சிவபெருமானுக்குரிய இரண்டு தரிசனங்களில் முதல் தரிசனம் ஆனி மாதத்திலும், இரண்டாவது தரிசனம் மார்கழி மாதத்திலும் நடைபெறும். அதில் வருடத் தொடக்கத்தில் வரும் ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தன்று நடராஜர் அபிஷேகம் நடைபெறும். இந்த மாதத்தில் ஆடலரசனைப் பாடிப் பணிந்து வழிபட்டால் கோடி கோடியாய் நன்மை கிடைக்கும். அன்று சிவபுராணம் பாடி இறைவனைத் தரிசித்தால் சிந்தையில் நினைத்த காரியங்கள் சிறப்பாக நிறைவேறும். வந்த துயரங்கள் வாயிலோடு நின்றுவிடும். எந்தக் குறைபாடாக இருந்தாலும் அதை அகற்றும் ஆற்றல், இறை வழிபாட்டிற்கு உண்டு. ஆனால் அதற்கு நம்பிக்கை என்பது அவசியம்.
அந்த நம்பிக்கையை முழுமையாக நடராஜர் மீது வைக்க வேண்டிய மாதம் ஆனி மாதமாகும். நடராஜரை ‘தில்லைக் கூத்தன்’ என்றும், ‘ஆடலரசன்’ என்றும், ‘கூத்தபிரான்’ என்றும் அழைப்பது வழக்கம். ஆடிய பாதத்தோடு நீடிய கருணைகொண்டு வாழ்வை வளப்படுத்துபவர் நடராஜப் பெருமான். கலைகளைக் கற்று காசினியெங்கும் புகழ்பெற வேண்டுமென்று விரும்புபவர்கள் நடராஜப் பெருமானை முழுமையாக வழிபட வேண்டும்.
சிவராத்திரியன்று சிவனை வழிபடும்போது, இரவு முழுவதும் விழித்திருந்து சிவபுராணம் பாடி சிவாலயங் களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். ஆனால் ஆனி மாதத்திலும், மார்கழி மாதத்திலும் வரும் நடராஜர் தரி சனத்தை கண்டுகளிப்பவர்கள், பகல் முழுவதும் விரதம்இருந்து சிவனுக்குரிய அபிஷேக ஆராதனைகளைக் கண்டுகளிப்பதோடு, நடராஜப் பெருமானையும் தரிசித்து அவர் சன்னிதியில் சிவபுராணம் பாடவேண்டும்.
மகரவிளக்கு பூஜையன்று சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் என்று தேவஸ்தான தலைவர் வாசு கூறினார்.
சபரிமலை :
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 30-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 31-ந்தேதி முதல் பூஜை நடைெபற்று வருகிறது.
தற்போது கோவிலில் 5 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் சாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். சிகர நிகழ்ச்சியான மகர விளக்கு பூஜை வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் என்.வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மகர விளக்கு தினமான வருகிற14-ந் தேதி ஆன்லைனில் தரிசனத்திற்கான முன்பதிவு செய்த 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முன் பதிவு செய்யாத ஐயப்ப பக்தர்களுக்கு கண்டிப்பாக தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.
தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் உள்பட கொரோனா நெகட்டிவ் மருத்துவ சான்றிதழ்களை பக்தர்கள் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






