என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவிலில் தாயார் உற்சவம் தொடங்கியது. இதையொட்டி செங்கமல தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
    கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் தாயார் உற்சவம் 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி தாயார் உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி செங்கமல தாயாருக்கு காலையில் திருமஞ்சனம் நடைபெற்றது. 

    பின்னர் மாலையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திவ்ய பிரபஞ்சம் மற்றும் சாற்றுமுறை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோவில் உட்பிரகாரத்தில் சாமி வீதி உலா நடந்தது. இதையடுத்து செங்கமல தாயாருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற உள்ளது. 

    வருகிற 15-ந் தேதி மாட்டுப்பொங்கல் அன்று கணு தீர்த்தவாரியுடன் தாயார் உற்சவம் முடிவடைகிறது. இதற்கிடையே வருகிற 11-ந் தேதி ஆண்டாள் நீராட்டு உற்சவம் மற்றும் 12-ந் தேதி அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    உளியால் வடிக்கப்படாத சிவலிங்கங்கள் இருக்கும் தலங்கள் ஏழும்தான் ‘சப்த விடங்க தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. அந்த சப்த விடங்க தலங்களையும், அதில் அருளும் தெய்வங்களையும், நடனங்களையும் இங்கே பார்க்கலாம்.
    தமிழ்நாட்டில் `சப்த விடங்க தலங்கள்' ஏழு இருக்கின்றன. இந்த 7 தலங்களிலும் இறைவன் சிவபெருமான், சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்கிறார். இங்கு இறைவன் அருளிய தாண்டவங்கள் முக்கியத்துவம் பெற்றவையாக உள்ளன. ‘விடங்கம்’ என்றால் ‘உளியால் செதுக்கப்படாதது’ என்று பொருள். உளியால் வடிக்கப்படாத சிவலிங்கங்கள் இருக்கும் தலங்கள் ஏழும்தான் ‘சப்த விடங்க தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. அந்த சப்த விடங்க தலங்களையும், அதில் அருளும் தெய்வங்களையும், நடனங்களையும் இங்கே பார்க்கலாம்.

    திருவாரூர் - வீதி விடங்கர் - அசபா நடனம்

    திருநள்ளாறு - நகர விடங்கர் - உன்மத்த நடனம்

    திருநாகைக்காரோகணம் - சுந்தர விடங்கர் - தரங்க நடனம்

    திருக்காறாயில் - ஆதி விடங்கர் - குக்குட நடனம்

    திருக்குவளை - அவனி விடங்கர் - பிருங்க நடனம்

    திருவாய்மூர் - நீல விடங்கர் - கமல நடனம்

    திருமறைக்காடு - புவன விடங்கர் - அம்சபாத நடனம்

    அசபா நடனம் (திருவாரூர்)

    கும்பகோணத்தில் இருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள இறைவன் - வான்மீகிநாதர், தியாகராஜ பெருமான், இறைவி - கமலாம்பாள். இது சிதம்பரத்திற்கும் முந்தைய கோவில் என்று சொல்லப்படுகிறது. இங்குள்ள ஈசன் ‘வீதி விடங்கர்’ என்று அழைக்கப்படு கிறார். இத்தல இறைவன் ஆடிய தாண்டவம் ‘அசபா நடனம்’ எனப்படுகிறது. உயிரின் இயக்கமான மூச்சுக் காற்று, உள்ளும் புறமும் சென்று வருவது போன்ற உன்னதத்தை உணர்த்துவது இந்த நடனம் ஆகும். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைய, கடன் தொல்லை நீங்க, உடல் பிணி அகல, திருமண வரம் பெற, வேலை கிடைக்க, தொழில் விருத்தியாக, குழந்தை வரம் வேண்டி என பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர்.

    உன்மத்த நடனம் (திருநள்ளாறு)

    கும்பகோணத்தில் இருந்து 56 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருநள்ளாறு பிராணேஸ்வரி உடனாய தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவில். இது சனீஸ்வர பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள ஈசன் ‘நகர விடங்கர்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் ஆடிய நடனம் ‘உன்மத்த நடனம்’ ஆகும். இது பித்தனைப் போன்று ஆடுவது ஆகும். சனி தோஷம் நீங்க இத்தல இறைவனை வழிபடலாம்.

    தரங்க நடனம் (திருநாகைக்காரோணம்)

    கும்பகோணத்தில் இருந்து 67 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருநாகைக்காரோணம். இங்குள்ள ஆலய இறைவன் - காயாரோகணேஸ்வரர், ஆதிபுராணர் என்றும், இறைவி - நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி என்றும் பெயர் பெற்றுள்ளனர். இங்குள்ள ஈசன் ‘சுந்தர விடங்கர்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் ஆடிய தாண்டவம் ‘தரங்க நடனம்.’ கடல் அலைகள் எழுவது போன்று ஆடுவது இதன் நடன முறையாகும். இங்குள்ள இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து வழிபட்டால், பாவங்களுக்கு மன்னிப்பும், இறுதியில் முக்தியும் கிடைக்கும்.

    குக்குட நடனம் (திருக்காறாயில்)

    கும்பகோணத்தில் இருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம். இங்குள்ள இறைவன் - கண்ணாயிரநாதர் என்றும், இறைவி - கயிலாயநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். பிரம்மனுக்கு ஆயிரம் கண்களுடன் ஈசன் அருளிய தலம் இது. இங்குள்ள ஈசன் ‘ஆதி விடங்கர்’ எனப்படுகிறார். இவர் ஆடிய நடனம் ‘குக்குட நடனம்.’ கோழியைப் போல் ஆடுவது இதன் அசைவாகும். பாவங்கள், சாபங்கள் அகலவும், கண் சம்பந்தப்பட்ட நோய் சரியாகவும் இங்குள்ள இறைவனை வழிபடலாம்.

    பிருங்க நடனம் (திருக்குவளை)

    கும்பகோணத்தில் இருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, பிரம்மபுரீஸ்வரர் கோவில். இறைவன் -பிரம்மபுரீஸ்வரர், இறைவி - வண்டமர் பூங்குழலம்மை. இங்குள்ள ஈசன் ‘அவனி விடங்கர்.’ இவர் ஆடியது ‘பிருங்க நடனம்.’ வண்டு மலருக்குள் குடைந்து செல்வதைப் போன்றது இந்த நடனம். நவக்கிரக தோஷங்களைப் போக்கிக்கொள்ள, இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்யலாம்.

    கமல நடனம் (திருவாய்மூர்)

    கும்பகோணத்தில் இருந்து 76 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது திருவாய்மூர். இங்குள்ள இறைவன் - வாய்மூர்நாதர், இறைவி - பாலினும் நன்மொழியம்மை. பிரம்மன் மற்றும் சூரியன் சாபம் தீர்த்த தலம் இது. இங்குள்ள ஈசன் ‘நீலவிடங்கர்.’ இவர் ஆடிய நடனம் ‘கமல நடனம்.’ தாமரை மலர் அசைவது போன்றது இந்த நடனம். இத்தல இறைவனை வழிபட்டால், திருமணத் தடை நீங்கும். கல்வி மற்றும் செல்வம் பெருகும்.

    அம்சபாத நடனம் (திருமறைக்காடு)

    கும்பகோணத்தில் இருந்து 106 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, திருமறைக்காடு. இங்குள்ள இறைவன் - மறைக்காட்டுநாதர், வேதாரண்யேஸ்வரர்; இறைவி - யாழினும் இனிய மொழியாள், வேதநாயகி. அப்பரும் சம்பந்தரும் தங்கள் பாடல் களின் மூலம், கதவை திறந்தும், மூடியும் காட்டிய திருத்தலம். இத்தல ஈசன் ‘புவன விடங்கர்.’ இவர் ஆடிய நடனம் ‘அம்சபாத நடனம்.’ அன்னப்பறவை அடியெடுத்து வைப்பது போன்றது இந்த நடனம். இங்குள்ள மணிகர்ணிகை தீர்த்தம் மற்றும் ஆதி சேது கடல் தீர்த்தத்தில் நீராடினால் அனைத்து வகை பாவங்களும் விலகி, புண்ணியம் வந்து சேரும். மன அமைதி, தொழில் விருத்தி, வேலைவாய்ப்பு ஆகிய வரங்களைப் பெற இங்குள்ள இறைவனை தரிசிக்கலாம்.
    7 மாதங்களுக்கு பிறகு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வி.ஐ.பி. தரிசன பக்தர்கள் வழிபட திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நேற்று அனுமதி வழங்கியது.
    திருமலை 

    கொரோனா பரவலால் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் மார்ச் மாதம் இறுதியில் இருந்து ஜூன் மாதம் 7-ந்தேதி வரை அனைத்துப் பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டு இருந்தது. ஜூன் மாதம் 8-ந்தேதியில் இருந்து மத்திய, மாநில அரசுகள் வழிகாட்டுதல் படி இலவச தரிசன பக்தர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் 7 மாதங்களுக்கு பிறகு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வி.ஐ.பி. தரிசன பக்தர்கள் வழிபட திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நேற்று அனுமதி வழங்கியது. அதன்படி நெற்று காலை 11.30 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 7.30 மணி வரையிலும் வி.ஐ.பி. தரிசன பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
    சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை இங்கே பார்க்கலாம்.
    சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் துர்க்கை கோவிலில் அருள்செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான கௌமாரி விளங்குகிறாள்.

    "ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே
    மஹாவீராய தீமஹி
    தந்நோ சண்ட பைரவ ப்ரசோதயாத்"

    "ஓம் சிகித்வஜாயை வித்மஹே
    வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
    தந்நோ கவுமாரி ப்ரசோதயாத்."
    கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தை தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் பெருமாள் புறப்பாடு நடக்கிறது.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாரங்கபாணி கோவில் உள்ளது. இக்கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். 7 ஆழ்வார்களால் நாலாயிர திவ்யபிரபந்தம் அருளப்பெற்ற தலமாகவும் உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் தை தேரோட்ட திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டுக்கான தை தேரோட்ட திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு பூர்வாங்க பூஜைகளும், சேனை முதல்வர் புறப்பாடும் நடந்தது. இதையடுத்து நேற்று கருடக்கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்கியது. அப்போது உற்சவர் ஆராவமுதன் உப நாச்சியார்களுடன் ராஜ அலங்காரத்தில் கொடி மரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    கொடியேற்றத்தை தொடர்ந்து தேசிக பிரபந்த ஆழ்வார், சாற்றுமுறை ஆச்சார்யர்கள் நூற்றுக்கால் மண்டபம் எழுந்தருளினர். விழாவையொட்டி தினமும் பெருமாள் புறப்பாடு நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவில் வருகிற 12-ந் தேதி மாலை 5 மணிக்கு சூர்ணாபிஷேகம் நடைபெற உள்ளது. 13-ந் தேதி வெண்ணெய்த்தாழி சேவை நடைபெற உள்ளது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 14-ந் தேதி தை பொங்கல் அன்று நடக்கிறது. கொரோனா வைரஸ் நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி கோவில் உட்பிரகாரத்தில் நடக்கிறது. இதில் சாரங்கபாணி உப நாச்சியார்களுடன் வெள்ளி ரதத்தில் அருள்பாலிக்கிறார்.
    சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் ஏகாதசி விரதத்தை இனிதே கடைப்பிடித்து, பாற்கடலில் துயிலும் பரந்தாமனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும். வளர்ச்சி பெருகும். வருங்காலம் நலமாகும்.
    ‘நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்- அது நாராயணன் என்னும் நாமம்’ என்பர் ஆன்மிகப் பெரியோர்கள். ஸ்ரீமன் நாராயணன், காக்கும் கடவுள். அவரது அபயகரம் பாதத்தை நோக்கி இருக்கும். தன்னை சரணடைந்தவர்களுக்கு சந்தோஷத்தை வழங்குவார். 

    இந்த மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டின் முன் பக்கத்தில் கோலமிட்டு அதன் மத்தியில் பரங்கிப் பூவை வைத்து அழகுபடுத்துவது கண்கொள்ளாக் காட்சியாகும். இந்த வழிபாட்டில் மனநலமும், உடல்நலமும் சீராகின்றது. திருப்பாவை, திருவெம்பாவை பாடி ஆண்டாள், விஷ்ணுவை வழிபட்டு சூடிக்கொடுத்த சுடர்கொடியாக மாறி யதை நாம் அறிந்திருக்கிறோம்.

    இப்படி சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் ஏகாதசி விரதத்தை இனிதே கடைப்பிடித்து, பாற்கடலில் துயிலும் பரந்தாமனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும். வளர்ச்சி பெருகும். வருங்காலம் நலமாகும்.

    விஷ்ணுவை வழிபட்டு அவரது துணையாக விளங்கி செல்வத்தை நமக்களிக்கும் லட்சுமியின் சன்னிதிக்கும் சென்று லட்சுமி வருகைப் பதிகம் பாடி னால், இல்லம் தேடி லட்சுமி வந்து அள்ள அள்ளக் குறையாத செல்வத்தை வழங்குவாள். அஷ்டலட்சுமியின் படத்தையும், விஷ்ணு படத்தோடு இணைத்து பூஜையறையில் வைத்து வழிபாடு செய்வது நல்லது. அவல் நைவேத்தியம் செய்தால் ஆவல்கள் நிறைவேறும்.

    எட்டு வகை லட்சுமியால் ஏராளமான செல்வம்

    கொட்டும்வகை நானறிந்தேன்! கோலமயில் ஆனவளே!

    வெற்றியுடன் நாங்கள் வாழ வேணும் ஆதிலட்சுமியே!

    வட்டமலர் மீதமர்ந்து வருவாய் இதுசமயம்.

    என்று பாடுங்கள்.

    எட்டுவகை லட்சுமியும் வேண் டும் அளவிற்குச் செல்வமும், வெற்றி வாய்ப்பும் உங்களுக்கு வழங்குவர்.


    -‘ஜோதிடக்கலைமணி’ சிவல்புரி சிங்காரம்

    சபரிமலையில் மகரவிளக்கு பூஜையையொட்டி அய்யப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது என்று மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன் கூறினார்.
    சபரிமலை :

    மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 30-ந் தேதி திறக்கப்பட்டது. 31-ந் தேதி முதல், வழக்கமான பூஜைகள், வழிபாடுகளுடன், படி பூஜை நடைபெற்று வருகிறது.

    கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சபரிமலை தரிசனத்திற்கு தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த 31-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை முன்பதிவு செய்தவர்களுக்கான தரிசன அனுமதி. இன்று (வியாழக்கிழமை) முடிவடைகிறது.

    இந்த நிலையில் 8-ந்தேதி (நாளை) முதல் 18-ந் தேதி வரை சாமி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது. இது தொடர்பாக கேரள தேவஸ்தான துறை மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:-

    சபரிமலையில் மகரவிளக்கு பூஜையையொட்டி, அய்யப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது. 18-ந் தேதி வரையிலான தரிசனத்திற்கு பக்தர்கள் முன்பதிவு செய்யலாம். தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
    மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும் எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
    மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும் 
    சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து 
    வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி 
    மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு 
    போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன் 
    கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய 
    சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த 
    காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். 

    பொருள்: மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.
    ஆண்டுக்கு 365 நாட்களும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை பொறுத்த வரை திருநாட்கள் தான் என்றாலும் பழமை மாறாமல் நடத்தப்பட்டு வரும் விழாக்கள் 322 என வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
    பூலோக வைகுண்டம், 108 வைணவ தலங்களில் முதன்மையானது என்ற பெருமைக்குரியது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். அரங்கன் பள்ளி கொள்ளும் புண்ணிய பூமியான ஸ்ரீரங்கம் காவிரி, கொள்ளிடம் என்ற இரு நதிகளுக்கு இடையே அமைந்து உள்ளது. அதனால் தான் ஸ்ரீரங்கத்தை தீவு என கூறுவோரும் உண்டு.

    கலாசார கருவூலம்

    156 ஏக்கர் பரப்பளவு, உலகிலேயே உயரமான ராஜகோபுரம் உள்பட 21 கோபுரங்கள், நெடிதுயர்ந்த மதில்சுவர்களை கொண்ட ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை தென்னிந்தியாவின் கலாசார கருவூலம் என குறிப்பிட்டால் மிகையாகாது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள ஒவ்வொரு பிரகாரத்திற்கும், சன்னதிக்கும், ஏன் தூண்களுக்கும் கூட தனித்தனி வரலாறு உண்டு. இதுபோன்ற வரலாறு வேறு எந்த கோவில்களிலும் இல்லாத ஒன்றாகும்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள் அன்றாடம் நடைபெறும் பூஜைகள் என அனைத்தும் பண்டைக்காலத்தில் வகுக்கப்பட்ட விதிமுறைகளின்படியே இன்றளவும் நடத்தப்பட்டு வருகிறது. பூஜை முறைகள் மற்றும் உள்ள சடங்குகள் என எல்லாமே கோவிலொழுகு என்ற நூலில் குறிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் படியே நடத்தப்பட்டு வருகின்றன.

    பழமை மாறாமல்...

    ஆண்டுக்கு 365 நாட்களும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை பொறுத்த வரை திருநாட்கள் தான் என கூறும் அளவிற்கு இங்கு பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவை அனைத்தையும் எடுத்துக்கூறுவது என்பது இயலாத காரியமாகும். இதில் பழமை மாறாமல் நடத்தப்பட்டு வரும் விழாக்கள் 322 என வகைப்படுத்தப்பட்டு உள்ளது.

    வைகுண்ட ஏகாதசி

    இந்த விழாக்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி பெருவிழாவாகும். இது தென்னிந்திய விழாக்களில் மிகவும் புகழ் வாய்ந்ததாகும். இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் மார்கழி, தை மாதங்களுக்கு இடையில் பகல்பத்து, ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடத்தப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியதில் இருந்து நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா நிறைவு பெறும் நாள் வரை ஸ்ரீரங்கம் நகரமே விழாக்கோலம் பூண்டு இருப்பதை காண கோடி கண்கள் வேண்டும். அது மட்டும் இன்றி விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பதும், அரங்கனை மகிழ்விக்க அரையர்கள் அபிநயத்துடன் நாலாயிரம் திவ்ய பிரபந்த பாடல்களை பாடுவதும் வேறு எந்த திவ்ய தேசங்களிலும் இல்லாத ஒன்றாகும்.

    சொர்க்க வாசல் திறப்பு

    இந்த ஆண்டு உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பிரச்சினைக்காக மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்து உள்ள உத்தரவுகள், கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் நம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. பக்தர்கள் அரசு அறிவித்துள்ள நேரங்களில் சமூக இடவெளியை கடைபிடித்தும், கட்டாயம் முக கவசம் அணிந்தும் தரிசித்து அரங்கனின் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    வேணு சீனிவாசன்அறங்காவலர் குழு தலைவர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்.
    இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம். இந்த வார்த்தையை தேவதூதன் சொல்லும்போது தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது என்று எழுதப்பட்டுள்ளது.
    இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம். இந்த வார்த்தையை தேவதூதன் சொல்லும்போது தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது என்று எழுதப்பட்டுள்ளது. இயேசு பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஏசாயா தீர்க்கதரிசி ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று (ஏசாயா 7:14) முன்னுரைத்து விட்டார். கடவுள் மனித உருவமாய் பிறந்தார். 

    இந்த செயல் கடவுள் மனிதருள் மனிதராய் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாயிருக்கிறது. ஏசாயா 8:8ல் இமானுவேலே, அவன் செட்டைகளின் விரிவு உமது தேசத்தின் விலாசத்தை மூடும் என்றான். இது அசீரியா ராஜாவால் ஆகாஷின் நாட்களில் யூதருக்கு வந்த கெடுதியை குறிக்கிறது என்றும், இதன்படி இமானுவேல் பாடனுவிப்பார் என்றும் விளங்கப்பட்டு உள்ளது. 

    ஆகவே மேசியா வருவாரென்றும், அவர் நமக்காக பாடுபடுவார் என்றும் நம்பி இமானுவேல் ரட்சகர் என்று நினைத்தார்கள். இது சரித்திரம் கூறும் சான்று. ஏசாயா தீர்க்கனால் உரைக்கப்பட்டது. நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைக் கைவிடாமலும், நம்மை நெகிழ விடாமலும் அவர் நம்முடைய பிதாக்களோடு இருந்ததை போல நம்மோடு இருக்கிறார். (ராஜா 8:57) .

    கிறிஸ்துமஸ் பண்டிகை கொடுத்து மகிழ்வதே. இயேசு என்ற இம்மானுவேல் நம்மோடு இருந்து நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்படி தன்னையே இவ்வுலகிற்கு கொடுத்தார். அந்த இமானுவேல் ஆகிய இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டு அனைத்து ஆசீர்வாதங்களையும், மகிழ்ச்சியையும் பெற்று வாழ ஆண்டவர் கிருபை செய்வாராக. 

    டாக்டர் நெல்சன் ஜேசுதாசன். இயக்குனர்-திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை
    ‘குருவின் பார்வை பட்ட இடமெல்லாம் தோஷம் நீங்கும்’ என்பதால்தான் ‘குரு பார்க்கக் கோடி நன்மை’ என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். எல்லாவிதமான தோஷங்களையும் நீக்கும் சக்தி குருவின் பார்வைக்கு உண்டு.
    அனைவராலும் எதிர்பார்க்கப்படும் கிரகப்பெயர்ச்சிகளில், குருப்பெயர்ச்சி மிக முக்கியமான ஒன்றாகும். ‘நவக்கிரகங்களில் சுப கிரகம்’ என்று வர்ணிக்கப்படுபவர் குரு பகவான். அந்த குருவருள் இருந்தால் தான் நமக்குத் திருவருள் கிடைக்கும். அந்த குரு பகவான், சுபஸ்ரீ சார்வரி வருடம் ஐப்பசி மாதம் 30-ந் தேதி (15.11.2020) ஞாயிற்றுக்கிழமை இரவு 9.36 மணிக்கு உத்ராடம் நட்சத்திரம் 2-ம் பாதத்தில் மகர ராசிக்கு பெயர்ச்சியானார். 

    மகர ராசி குரு பகவானுக்கு நீச்ச வீடாகும். இருப்பினும் அவரது பார்வை பலத்தால் மக்களுக்கு நற்பலன்களை வழங்குவார். ‘குருவின் பார்வை பட்ட இடமெல்லாம் தோஷம் நீங்கும்’ என்பதால்தான் ‘குரு பார்க்கக் கோடி நன்மை’ என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். எல்லாவிதமான தோஷங்களையும் நீக்கும் சக்தி குருவின் பார்வைக்கு உண்டு.

    ‘தனகாரகன்’ என்றும், ‘புத்திரகாரகன்’ என்றும் குருவைச் சொல்வார்கள். ஒருவருக்கு புத்திர பாக்கியம் கிடைத்து திருப்தியான வாழ்க்கை வாழ வேண்டுமானாலும், செல்வச் செழிப்பு மிக்கவராக விளங்க வேண்டுமானாலும் குரு வின் அருள்தான் வேண்டும். அதுமட்டுமல்ல திருமணம் கைகூட வேண்டுமானாலும் குரு பகவான் பச்சைக்கொடி காட்ட வேண்டும். ஒருவரது ஜாதகத்தில் சாதகமான இடத்தில் குரு பகவான் அமர்ந்தால், அவர் செல்வாக்கு பெற்றவராகவும், சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தவராகவும், வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பவராகவும் விளங்குவார்.

    இப்பொழுது மகரத்தில் வந்திருக்கும் குரு பகவான் நீச்சம் பெறுகின்றார். அதே நேரத்தில் குருவும், சனியும் பரிவர்த்தனை யோகம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார்கள்.

    டிசம்பர் 26-ந் தேதி சனி பகவான் பெயர்ச்சியாகி மகரத்திற்குச் சென்ற பிறகு, நீச்சம் பெற்ற வியாழனோடு இணைவதால் ‘நீச்ச பங்க ராஜயோகம்’ உருவாகின்றது.

    இந்தக் குருப்பெயர்ச்சிக் காலத்தில் 5.4.2021 முதல் 13.9.2021 வரை அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில் அதிசாரமாக கும்ப ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். மீண்டும் மகர ராசிக்கு மாறுதலாகி வந்து 13.11.2021 வரை சஞ்சரிக்கின்றார். இதற்கிடையில் 16.6.2021 முதல் 13.10.2021 வரை குரு வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். எனவே அந்தந்த காலங்களுக்கு ஏற்பவும், உங்கள் சுய ஜாதகத்தில் குரு இருக்குமிடம், பார்க்குமிடம் மற்றும் திசா, புத்தி அடிப்படையிலும் பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

    பொதுவாக இந்தப் பெயர்ச்சியில் குருவின் பார்வை பெறும் மூன்று ராசிகள்: ரிஷபம், கடகம், கன்னி

    குரு பார்வை தன ஸ்தானத்தில் பதியும் ராசி: மேஷம்

    குரு பார்வை லாப ஸ்தானத்தில் பதியும் ராசி: விருச்சிகம்

    குரு பார்வை தொழில் ஸ்தானத்தில் பதியும் ராசி: தனுசு

    மேற்கண்ட ராசிகள் அனைத்திற்கும் தொட்டது துலங்கும், தொழில் வளம் சிறக்கும், தொகை வரவும் திருப்தி தரும்.

    குருப்பெயர்ச்சி நாளில் இல்லத்து பூஜையறையில் ‘வானவர்க்கு அரசனான வளம்தரும் குருவே’ என்ற குரு கவசப் பாடலைப் பாடுவதோடு, குரு பகவான் படத்திற்கு மஞ்சள் வண்ண வஸ்திரம் சாற்றி, முல்லைப்பூ மாலை அணிவித்து இனிப்புப் பொருள் நைவேத்தியம் வைத்து வழிபடுவது நல்லது.

    மகரத்திற்கு ஜென்ம குருவாகவும், மிதுனத்திற்கு அஷ்டமத்து குருவாகவும், துலாத்திற்கு அர்த்தாஷ்டம குருவாகவும், கும்பத்திற்கு விரய குருவாகவும், சிம்மத்திற்கு ரோக ஸ்தான குருவாகவும் இந்த குருப்பெயர்ச்சி அமைகிறது. எனவே மேற்கண்ட ராசியில் பிறந்தவர்கள் தங்கள் சுயஜாதக அடிப்படையில், பாக்கிய ஸ்தானத்திலுள்ள கிரகத்தின் பலமறிந்து அதற்குரிய ஆலயங் களைத் தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்றநாளில் பொருத்தமான வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.

    வழிபாட்டின் மூலம் வருமானப் பற்றாக்குறை அகலும். திருமணம், புத்திரப்பேறு, தொழில் முன்னேற்றம், வீடு கட்டும் யோகம், பொதுவாழ்வில் புகழ், இழந்த பதவியைப் பெறுதல், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற அனைத்தையும் வரவழைத்துக்கொள்ள இயலும். குருவருள் இருந் தால் சாதாரணமானவர்கள் கூட சக்கரவர்த்தியாக மாறமுடியும்.
    திருமால் அன்பர்களை காத்து அருள்புரிய எடுத்த பத்து அவதாரங்களில் மீன், ஆமை அவதாரங்கள் அவசர நிமித்தம் காரணமாக எடுத்து முடிக்கப்பட்ட அவதாரங்கள் ஆகும்.
    திருமால் அன்பர்களை காத்து அருள்புரிய எடுத்த பத்து அவதாரங்களில் மீன், ஆமை அவதாரங்கள் அவசர நிமித்தம் காரணமாக எடுத்து முடிக்கப்பட்ட அவதாரங்கள் ஆகும். இவ்விரு அவதாரங்களிலும் மகாலட்சுமியை தேவியாகச் சொல்லவில்லை. திருமால் ஆமை அவதாரம் எடுத்து மலையைத் தாங்கியதாலேயே தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைய முடிந்தது. அப்போது பாற்கடலிலிருந்து லட்சுமி தோன்றினாள். திருமால் ஆமை வடிவை நீக்கி அழகிய கோலத்துடள் சென்று அவளை மணந்து கொண்டார்.

    மூன்றாவது அவதாரமான வராக அவதாரத்தில் திருமால் கடலுக்கு அடியில் சென்று அங்கே ஒளித்து வைக்கப்பட்டிருந்த திருமகளின் மறுகூறான பூமிதேவியை மேற்கொண்டு வந்து உலகைப் படைத்தார். அவரைப் பூவராகம் என்று போற்றுகின்றனர். அந்நிலையில் அவர் மார்பில் வாழும் திருமகள் அகில வல்லி என்று அழைக்கப்படுகிறாள். சில ஆலயங்களில் திருமகளை மடிமீது கொண்டுள்ள லட்சுமி வராகரையும், சில தலங்களில் புவிமகளை மடிமீது கொண்டுள்ள வராகரையும் காண்கிறோம். ஆதிவராக ஷேத்திரமான ஸ்ரீமுஷ்ணத்தில் வராகமூர்த்தி இரு பெரும் தேவியருடன் காட்சியளிக்கின்றார்.

    நரசிம்ம அவதாரத்தில் அவர் இரண்யனின் குடலைப் பிடுங்கி மாலையாக அணிந்தும், ரத்தத்தைக் குடித்தும், ஆர்ப்பரித்தார். அவருடைய கோபக் கனல் எல்லாரையும் வருத்தியது. தேவர்கள் அவருடைய உக்கிரமயமான கோபத்தை எளிதில் தணிக்கும் ஆற்றல் மகாலட்சுமிக்கே உண்டு என்பதால் அவளைப் பணிந்து சாந்தப்படுத்துமாறு வேண்டினர். 

    மகாலட்சுமி நரசிம்மரை அணுகிக் கோபத்தை மாற்றினாள். பிறகு திருமால் அவளைத் தன் மடிமீது அமர்த்திக் கொண்டு லட்சுமி நரசிம்மனாக அனைவருக்கும் அருள்புரிந்தார். இதையட்டி நரசிம்மர் ‘மாலோலன்’ என்று அழைக்கப்படுகிறார்.

    ஏழாவது அவதாரமான ராம அவதாரத்தில் மகாலட்சுமி ஜனக புத்ரியாக சீதையாக தோன்றி, ராமபிரானை மணந்தாள். அப்போது அவளுக்குச் சீதா, ஜானகி, மைதிலி, வைதேகி, ராகவி முதலான பெயர்கள் வந்தன.

    எட்டாவது அவதாரமான பலராம அவதாரத்தில் ரேவதி என்னும் பெயரில் லட்சுமி மகிழ்ந்திருந்தாள். ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ண அவதாரத்தில் மகாலட்சுமி வைஷ்க மன்னனின் மகளாகத் தோன்றி ருக்மணி எனும் பெயரில் வளர்ந்து கிருஷ்ணனை மணந்தாள்.

    சிவனால் எரிக்கப்பட்டுப் பார்வதியால் உருவமில்லாதவனாக உயிர்ப்பிக்கப்பட்ட மன்மதன் அவளுக்குப் புத்யும்னன் எனும் பெயரில் மகனாகத் தோன்றினான். கிருஷ்ண தலங்களில் திருமகள் ருக்மிணி எனும் பெயரில் அவருடன் வீற்றிருக்கிறாள். திருவல்லிக்கேணிப் பார்த்தசாரதி ஆலயத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பார்த்தசாரதி கோலத்தில் நிற்க, அவருக்கு வலப்புறம் பெரிய வடிவில் ருக்மணியைக் காணலாம்.
    ×