என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
10 மாதங்களுக்கு பின் மார்கழி தேய்பிறை அஷ்டமியான இன்று மீனாட்சி- சுந்தரேசுவரர் அஷ்டமி சப்பர திருவிழா நடைபெற்றது. அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
மதுரை
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டின் 12 மாதங்களிலும் திருவிழா நடைபெறும்.
குறிப்பாக சித்திரை மாதத்தில் நடக்கும் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை பிரசித்திப் பெற்றவை.
இந்த திருவிழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக மீனாட்சி திருக்கல்யாணம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது. தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.
விழாக்களுக்கு பெயர் பெற்ற மதுரையில் கொரோனா பரவல் ஊரடங்கு தடை காரணமாக எந்த கோவில் திருவிழாக்களும் பொது வெளியில் நடைபெற வில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் தற்போது தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ள காரணத்தால் மதுரையில் மீண்டும் கோவில் திருவிழாக்கள் களைகட்ட தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் மார்கழி மாதம் நடைபெறும் மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பர திருவிழாவை வழக்கம் போல் 4 வெளி வீதிகளில் உலா வருவது போல் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த மாதம் மாநிலத்தில் முக்கிய கோவில்களில் நடந்த நிகழ்ச்சிகளின் வழிகாட்டுதல்படி மீனாட்சி- சுந்தரேசுவரர் அஷ்டமி சப்பர திருவிழா வழக்கம்போல் விமரிசையாக நடத்தப்படும் என கோவில் இணை ஆணையாளர் செல்லத்துரை தெரிவித்தார். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து மார்கழி தேய்பிறை அஷ்டமியான இன்று மீனாட்சி- சுந்தரேசுவரர் அஷ்டமி சப்பர திருவிழா நடைபெற்றது. அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
இதனைத் தொடர்ந்து சப்பரத்தில் எழுந்தருளும் சுந்ரேசுவரர்-பிரியாவிடை மற்றும் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிவாச்சாரியார்கள் பூஜை செய்தனர். அதிகாலை 5 மணிக்கு சுவாமி, பிரியாவிடையுடன் ஒரு சப்பரத்திலும், மீனாட்சி அம்மன் மற்றொரு சப்பரத்திலும் எழுந்தருளினர்.
சுந்தரேசுவரர் எழுந்தருளிய சப்பரம் முன்னே செல்ல, அதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் சப்பரம் வந்தது. மீனாட்சி அம்மன் சப்பரத்தை பெண்கள் மட்டுமே வடம்பிடித்து இழுத்தனர்.
10 மாதங்களுக்கு பின் மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா பொது வெளியில் நடத்தப்பட்டதால் மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் 4 வெளி வீதிகளில் திரண்டிருந்தனர்.
சுந்தரேசுவரர்-அம்மன் சப்பரம் வந்தபோது அவர்கள் பக்தி கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.
எல்லா உயிர்களுக்கும் சிவபெருமான் படியளக்கும் நிகழ்வை குறிப்பிடும் வகையில் அஷ்டமி சப்பர விழா நடைபெறுகிறது. நினைவுபடுத்தும் வகையில் சப்பரத்தில் இருந்த சிவாச்சாரியார்கள் சப்பரம் சென்ற வழிகளில் அரிசியை தூவியபடி சென்றனர். இதனை பெண்கள் ஆர்வத்துடன் எடுத்து சென்றனர்.
கோவிலில் இருந்து புறப்பட்ட சப்பரம் வடக்கு நோக்கி யானைக்கல், வடக்கு வெளி வீதி, கீழ வெளி வீதி, தெற்கு வெளி வீதி, திருப்பரங்குன்றம் ரோடு வழியாக மேல வெளி வீதி, குட்ஷெட் தெரு, நாயக்கர் புதுத்தெரு, வக்கீல் புதுத்தெரு, கீழ மாரட் வீதி, காமராஜர் சாலை, விளக்குத்தூண் வழியாக கீழ மாசி வீதி வந்து காலை 10 மணி அளவில் தேரடி வந்தடைந்தது.
இதையொட்டி நகரில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 500-க் கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.
ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். ரிசபத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான காமாட்சி விளங்குகிறாள்.
"ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே
டங்கேஷாய தீமஹி
தந்நோ ருருபைரவ ப்ரசோதயாத்."
"ஓம் வருஷத் வஜாய வித்மஹே
ம்ருக ஹஸ்தாயை தீமஹி
தந்நோ ரவுத்ரி ப்ரசோதயாத்."
இவரை வணங்கினால் கெட்ட நேரம் நல்ல நேரம் ஆகும். இவரை கும்பிட கால நேரம் கிடையாது. 24 மணி நேரமும் பூஜைகள் உண்டு. ஏனென்றால் கால நேரமே இவர்தான்.
1. இவரை வணங்கினால் கெட்ட நேரம் நல்ல நேரம் ஆகும்.
2. இவரின் தலையில் அக்னி பிழம்பாக காட்சியளிக்கும். சிகப்பு வர்ணம் கொண்ட மேனி கொண்டவர்.
3. நான்கு கைகளை உடையவர், சூலம், கபாலம், பாசகுஷம், டமரகம் ஆகியவை கைகளில் இருக்கும்.
4. இவரை கும்பிட கால நேரம் கிடையாது. 24 மணி நேரமும் பூஜைகள் உண்டு. ஏனென்றால் கால நேரமே இவர்தான்.
5. படைத்தல், காத்தல், அழித்தல் என மும்மூர்த்திகளுக்கும் துணையாய் இருப்பவர் இவரே.
6. இவர் சைவம் மற்றும் வைணவம் இரண்டிற்கும் உரியவர்.
7. பாம்பினை பூனுலாகவும், அரைஞான் கொடியாகவும் அணிந்துள்ளார்.
8. இவரின் வாகனம் அசுரசுன வாகனம் (நாய்வாகனம்) மற்ற கோவிலில் சுன வாகனம் மட்டும் இருக்கும்.
9. நிர்வாண கோலம் இவருக்கு ஆனந்த கோலாகலம்.
10. வியாதிகளை குணப்படுத்துபவர்.
11. மேலும் இக்கோவிலில் நந்தி, நாய் வாகனம் இரண்டும் இருக்கும், மற்ற கோவிலில் நாய் வாகனம் மட்டும் இருக்கும்.
தத்தாத்ரேயர், பிரம்மன், திருமால், சிவன் மூவரையும் உள்ளடக்கிய இந்துக் கடவுள் ஆவார். தத்தாத்ரேயர் வழிபாட்டு தலங்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இமயமலையில் ஆத்ரேய மலைப்பகுதியில் உள்ள குகைஒன்றில், தத்தாத்ரேயர் பல ஆண்டுகள் தங்கி தவமியற்றியதாக கூறப்படுகிறது. எனவே அந்தக் குகை `தத்தர் குகை’ என்று அழைக்கப்படுகிறது.
வடக்கே ஜூனகாட் செல்லும் வழியில் உள்ளது, கிர்நார் மலை. இந்த மலையின் உச்சியில் தத்தாத்ரேயர் சரண பாதுகை அமைந்துள்ளது. இந்த இடத்தை அடைவதற்கு மலையின் மீது 10 ஆயிரம் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தானில் உள்ள மிகப் பெரிய மலை உச்சி ஒன்றில் (கடல் மட்டத்திலிருந்து 5650 அடி உயரம்) தத்தாத்ரேயர் ஆலயம் இருக்கிறது. இங்குள்ள சன்னிதியின் உயரம் மொத்தமே இரண்டு அடிதான். அதனுள் மூன்று முக தத்தாத்ரேயர் சிலையும், அவரது பாதச்சுவடுகளும் உள்ளன.
தத்தாத்ரேயர் ஸஹ்ய மலையில் வெகுகாலம் தவமிருந்தார். அதுவே `தத்தஷேத்திரம்’ என்றும், தற்போது `மகாபலேஷ்வர்’ என்றும் விளங்கி வருகிறது.
குல்பர்காவுக்கு அருகே காங்காப்பூரில் மூன்று முகமுடைய தத்தாத்ரேயர் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இவரை இங்குள்ள ஜன்னல் கதவைத் திறந்துதான் தரிசனம் செய்ய வேண்டும்.
மராட்டியத்தில் கிருஷ்ணா நதி தீரத்தில் அமைந்திருக்கும் நரசிம்ம வாடியில், தத்தாத்ரேயர் சன்னிதி உள்ளது. இங்குள்ள பாதுகைகளை பக்தர்கள் வழிபடுகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தில் குருமூர்த்தி என்று கூறுவது, தத்தாத்ரேயரையே குறிக்கும். அங்கு தத்தகுரு ஆராதனை அதிக அளவில் உள்ளது.
ஆந்திராவில் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள ஔதும்பரம் என்ற இடம் தத்தஷேத்திரமாகக் கருதப்படுகிறது.
தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் தத்தகிரி குகாலயம் என்ற இடத்தில் தத்தாத்ரேயர் சிலை வடிவம் காணப்படுகிறது.
குடவாசல் எனும் புதுக்குடியில் தத்தகுடீரம் உள்ளது. இங்குள்ள தத்தர் ஆலயத்தில் தத்த பாதுகை, கார்த்தவீர்யார்ஜூன் சக்கரம் ஆகிய இரண்டிற்கும் தினந்தோறும் பூஜை நடைபெற்று வருகிறது.
உடையார்பட்டி என்ற இடத்தில் 16 அடி உயரத்தில் மிக எழில் வாய்ந்த தத்தாத்ரேயரின் சிலை உருவம் உள்ளது. இது `கந்தகிரி விஸ்வ ரூப தத்தர்’ என அழைக்கப்படுகிறது.
சுசீந்தரம் தாணுமாலயன் திருக்கோவில் தாணு, அயன், மால் - அதாவது சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் ஓர் உருவாக வீற்றிருக்கும் தலமாகும். இது ஒரு முக்கியமான தத்த ஷேத்திரமாகும்.
மோட்சத்திற்கு அதிபதி சிவன் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. மோட்சத்திற்கு அதிபதி சிவனா? பைரவரா? என்று அறிந்து கொள்ளலாம்.
மோட்சத்திற்கு அதிபதி சிவன் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. சிவனின் 64 அவதாரங்களில் ஒன்றான கால பைரவரே மோட்சத்துக்கு அதிபதி ஆவார். அதனால் தான் காசி தலத்திற்கு கால பைரவர் அதிபதியாக உள்ளார்.
ஒவ்வொருவருடமும் தர்ப்பணம் பூஜையை ஆற்று ஓரமும், கடற்கரை ஓரமும் அல்லது குருமார்களை வைத்து வீட்டிலும் செய்யலாம். வீட்டில் செய்யும் பூஜையை சிரார்த்தம்(திதி) பூஜை என்பார்கள். இறுதியாக பிண்டங்களை கடலிலோ, ஆற்றிலோ கரைக்கலாம். மோட்ச தீபம் சிவனுக்கு ஏற்றக்கூடாது. அது பைரவருக்கு உரியது,
சிரார்த்தம் பூஜை அல்லது மோட்ச தீபம் பைரவருக்கு ஏற்றி, மோட்சத்துக்குரிய அர்ச்சனை செய்த பின் கடைசியில் சிவனுக்கோ அல்லது விநாயகருக்கோ நெய்தீபம் ஏற்றி குடும்ப அர்ச்சனை மட்டும் செய்ய வேண்டும். பைரவருக்கு சாம்பராணி தைல அபிஷேகமும் கதம்ப சாதம் நெய்வேத்தியமும் மிகவும் பிடித்தமானவை. எனவே இவற்றை எல்லா பூஜைகளுக்கும் பயன்படுத்தலாம்.
உங்கள் கல்வியில் சிறந்து விளங்கி பட்டம், பதவி பெற வேண்டுமா?அப்போது இந்த கோவிலுக்கு வந்து தெய்வத்தை வழிபாடு செய்தால் நினைத்தது நடக்கும்
புதன் வித்யாகாரகன். அதாவது கல்வி, கலை போன்றவற்றுக்கு காரணமானவன். புதன் அமைப்பு தோஷமாக இருந்தால் படிப்பு தடை படுதல், பாட்டு இசை, ஓவியம் போன்ற கலை ஆர்வம் தடை படுதல், அடிக்கடி உடல் சம்மந்தப்பட்ட குறைபாடுகள் மாறி மாறி வரலாம். தோல் நிறமாற்றம், முக அழகு குறைதல், புதன் தோஷத்தால் ஏற்படும். புதன் அமைதியான கிரகம். எனவே அமைதியாக இருக்க பாருங்கள்.
உங்கள் கல்வியில் சிறந்து விளங்கி பட்டம், பதவி பெற வேண்டுமா? புதன்கிழமை காலையில் குலசேகரபட்டினம் கடலில் நீராடி விட்டு வரும் வழியில் உள்ள சிதம்பரேஸ்வரர், சிவகாமி அம்மாளை தரிசித்து விட்டு, அன்னை முத்தாரம்மனுக்கு மரிக்கொழுந்து மாலை சாத்தி, உங்கள் குழந்தை பெயரில் அர்ச்சனை செய்தால் பட்டம், பதவி பெற முப்பெருந்தேவியாக விளங்கும் முத்தாரம்மன் மங்களகரமாய் உதவுவாள். உயர் பதவிக்கு உயர்த்துவாள்.
எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த கோவிலில் உள்ள பைரவரை வணங்கி வழிபட வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
1. அசுவினி -- ஞான பைரவர் --- போரூர்
2. பரணி --- மகா பைரவர் --- பெரிச்சியூர்
3.கார்த்திகை---அண்ணாமலைபைரவர்--- திருவண்ணாமலை
4. ரோகிணி --- பிரம்மசிரகண்டீஸ்வரர் --- திருக்கண்டியூர்
5.மிருகசீரிஷம் --- ஷேத்திரபால் பைரவர் --- ஷேத்திரபால புரம்
6.திருவாதிரை --- வடுக பைரவர் --- வடுகூர்
7.புனர்பூசம் --- விஜயபைரவர் --- பழனி
8.பூசம் --- ஆவின பைரவர் --- ஸ்ரீவாஞ்சியம்
9. ஆயில்யம் --- பாதாள பைரவர் --- காளஹஸ்தி
10.மகம் --- நர்த்தன பைரவர் --- வேலூர்
11. பூரம் --- பைரவர் --- பட்டீஸ்வரம்
12. உத்திரம் --- ஜடாமண்டல பைரவர் --- சேரன்மாதேவி
13.அஸ்தம் --- யோகாசன பைரவர் --- திருப்பத்தூர்
14.சித்திரை --- சக்கர பைரவர் --- தர்மபுரி
15. சுவாதி --- ஜடாமுனி பைரவர் --- பொற்பனைக்கோட்டை
16.விசாகம் --- கோட்டை பைரவர் --- திருமயம்
17.அனுஷம் --- ஸ்வர்ண பைரவர் --சிதம்பரம், ஆடுதுறை,
18.கேட்டை --- கதாயுத பைரவர் --- சூரக்குடி,
19.மூலம் --- சட்டைநாதர் --- சீர்காழி
20. பூராடம் --- வீரபைரவர் --- அவிநாசி, ஒழுகுமங்கலம்
21.உத்திராடம் --- முத்தலைவேல் வடுகர் --- கரூர்
22.திருவோணம் -மாரித்தாண்டபைரவர் --- வயிரவன்பட்டி
23.அவிட்டம் --- பலிபீட மூர்த்தி --- சீர்காழி, ஆறகளூர் (அஷ்டபைரவர்கள் உறையும் பலிபீடம்)
24. சதயம் --- சர்ப்ப பைரவர் --- சங்கரன்கோவில்
25.பூரட்டாதி--அஷ்டபுஜபைரவர்---கொக்கரையான் பேட்டை
26.உத்திரட்டாதி---வெண்கல ஓசை பைரவர் --- சேஞ்ஞலூர்
27. ரேவதி --- சம்ஹார பைரவர் --- தாத்தையங்கார்பேட்டை
மகா பைரவர் பொதுவாக எல்லா ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையிலே நிர்வாணக் கோலத்தினராய் நீல மேனியராய் நாய் வாகனத்துடன் காட்சி தருபவர்தான் பைரவர் பெருமாள்.
சிவபெருமானின் ஐந்து குமாரர்களாக கணபதி, முருகன், பைரவர், வீரபத்திரர், சாஸ்தா என்று சொல்லப்படுகிறது. ஐவரில் மகா பைரவர் பொதுவாக எல்லா ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையிலே நிர்வாணக் கோலத்தினராய் நீல மேனியராய் நாய் வாகனத்துடன் காட்சி தருபவர்தான் பைரவர் பெருமாள்.
காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்ய பூஜா விதி கூறுகிறது. அதேபோல ஆலயத்தின் மற்ற திருச்சன்னதிகளை பூட்டிச் சாவியை பைரவர் பாதத்தில் வைத்து விட்டு அதன்பின் வெளிக் கதவை பூட்டிச் சாவியை எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.
சிவபிரானின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றியவர் காசியம் பதியில் சிவகணங்களுக்கு தலைவராக விளங்குபவர். ஆணவம் கொண்ட பிரம்மனின் சிரம் கொய்தவர். மன்மதனின் கர்வம் அடங்கச் செய்தவர். முனிவரின் சாபத்திலிருந்து தேவேந்திரன் மகன் ஜெயந்தனைக் காத்தவர். சனியை சனீஸ்வரராக்கி நவக்கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமைச் சேர்த்தவர் என்ற பெருமைமிகு சிறப்புகளைக் கொண்டவர். இவரைக் காலபைரவர், மார்த்தாண்ட பைரவர், க்ஷேத்ரபாலகர், சத்ரு சம்ஹார பைரவர், வடுக பைரவர், சொர்ணகர்சன பைரவர் என்று பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறோம்.
ஒரு சமயம் அந்தகாசுரன் என்னும் அரக்கனின் அட்டூழியங்களை ஒழிக்க தேவர்கள் சிவனாரை வேண்ட ஈசன் தன் இதய அக்னியிலிருந்து பைரவரை உருவாக்க அது விஸ்வரூபமெடுத்து ஒன்றாகி, ஒன்றிலிருந்து எட்டாகி, எட்டிலிருந்து அறுபத்து நான்காகி அசுரர்களை முழுவதுமாக அழித்து தேவர்களுக்கு அமைதியை வழங்கியதாகவும் இதனால் மகிழ்வடைந்து தேவர்கள் அறுபத்து நான்கு யோகினிகளை அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.
தாட்சாயிணி தேவி தன் தந்தை தட்சன் செய்த யாகத்தில் தனது மருமகனான சிவனாருக்கு யாகத்தில் தரவேண்டிய அவிர்பாகத்தை தராது அவமதித்ததால் தச்சனின் மகளான பார்வதிதேவி யாக குண்டத்தில் தனது உயிரைத் தியாகம் செய்தபோது அதனால் உக்கிரநிலை அடைந்த சிவனார் தாட்சாயணியின் உடலைத் தாங்கி உலகமெல்லாம் சுற்றி அலைந்த போது திருமால் தன் சக்கரத்தால் தேவியின் உடலை பல கூறுகளாக்கி இப்பூலோகத்தில் பல இடங்களில் விழச் செய்தார் என்றும் தேவியின் உடலுறுப்புகள் விழுந்த ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு சக்தி பீடங்களாயின என்றும் அவ்வாறு ஏற்பட்ட சக்தி பீடங்களுக்குப் பாதுகாவலராக பைரவ வேடம் தாங்கி சிவப்பிரானே காவல் காத்து வருவதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
பைரவர், எட்டு மற்றும் அறுபத்து நான்கு என்ற வகையில் அருள்புரிகிறார். ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள். அந்த வகையில் ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு. இதில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ருத்ராஷ்டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. சிவபெருமான் வீரச்செயல்களைச் செய்யும் காலங்களில் ஏற்கும் திருவுருவங்களை பைரவர் திருக்கோலம் என்று புராணம் சொல்லும்.
பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன. தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் விருச்சிகமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன.
பைரவர் பாம்பைப் பூணுலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருவார்.
பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். சனி பகவானின் ஆசிரியர் பைரவர் என்று சொல்லப்படுவதால் சனியின் தொந்தரவு இருக்காது. எதிரிகள் அழிவர். பில்லி, சூன்யம், திருஷ்டி அகலும். அக்கம் பக்கத்தவர்களின் தொந்தரவு இருக்காது. யமபயம், தவிர்க்கப்படும்.
பொதுவாக சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும். சிறப்புப் பூஜைகள் செய்வதால் தோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
‘மார்கழி அஷ்டமி’ அன்று சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளப்பதால் அன்றைய தினம் இறைவன் சிவபெருமானை வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும்.
சகல ஜீவ ராசிகளுக்கும் இறைவன் படியளக்கும் இனிய திருநாள், மார்கழி மாதம் வருகின்ற அஷ்டமி ஆகும். இந்த ‘மார்கழி அஷ்டமி’ அன்று சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளப்பதால் அன்றைய தினம் இறைவன் சிவபெருமானை வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும். வளர்ச்சியும் கூடும். அன்றைய தினம் அன்னதான வைபவங்களை நாம் செய்தால் புண்ணியமும் நமக்கு வந்து சேரும். பொருளாதார வசதியும் பெருகும்.
‘மாதங்களில் நான் மார்கழி’ என்று வர்ணிக்கப்படும் இந்த மார்கழி மாதம் ஒரு மகத்தான மாதமாகும். காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறக் கடவுள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். படியளக்கும் திருநாளில் வழிபாட்டை மேற்கொண்டால் படிப்படியாக வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
இந்தத் திருநாள் மார்கழி மாதம் 22-ந் தேதி (6.1.2021) புதன்கிழமை வருகின்றது. அன்று இறைவன் சன்னிதியில் ஒரு கைப்பிடி அளவு அரிசி வைத்து வழிபட்டு, அதை உணவில் சேர்த்துக் கொண்டால் உணவு தினமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் ரேணுகாதேவி அம்மன் கோவிலில் ஏராளமான கிராம மக்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.
காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் ரேணுகாதேவி அம்மன் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு மார்கழி மாதம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நாளையொட்டி ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் அம்மனுக்கு வருடாபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான வருடாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவில் ஏராளமான கிராம மக்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.
அதனைதொடர்ந்து பால் மற்றும் மங்கல பொருட்களால் ரேணுகாதேவி அம்மனுக்கு அபிஷேகம் செய்து மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. அதன்பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான எனத்தொடங்கும் திருப்பாவையும் அதன் பொருளையும் இங்கே விரிவாக பார்க்கலாம்.
அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே
சங்க மிருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டும் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.
பொருள்: அழகான பெரிய பூமியில் உள்ள அரசர்கள் தங்கள் நாடுகளை இழந்து, அகந்தை அழிந்து, நீ பள்ளி கொண்டிருக்கும் படுக்கையின் கீழ் கூடி நிற்பதைப் போல நாங்களும் உன்னை வந்தடைந்து நிற்கிறோம்.
கி்ங்கிணியின் வாயைப் போன்றுள்ள, செந்தாமரையின் இதழ் ஒத்த உன் திருக்கண்கள் எங்களோ நோக்கிப் பார்க்க மாட்டாதா. சூரியனும், சந்திரனும் ஒரே சமயத்தில் உதித்ததைப் போல உனது அழகான இரு கண்களால் எங்களைப் பார்த்தால், எங்கள் மீதான அத்தனை சாபங்களும் போய் விடுமே.
பசுமையான சூழலில் மலை மீது அமைந்துள்ள இந்த ஆலயத்தில் வள்ளி-தெய்வானையுடன் தம்பதி சமேதராக முருகப்பெருமான் அருள்புரிந்து வருகிறார்.
முருக பக்தர்களின் மனம் கவரும் வகையில் அமைந்த தலம் இது. பசுமையான சூழலில் மலை மீது அமைந்துள்ள இந்த ஆலயத்தில் வள்ளி-தெய்வானையுடன் தம்பதி சமேதராக முருகப்பெருமான் அருள்புரிந்து வருகிறார். அழகர்கோவிலுக்கு மேலே சுமார் நான்கு கிலோமீட்டர் உயரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இது முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஆறாவது திருக்கோவில் ஆகும். தொடக்க காலத்தில் முருகனின் அம்சமாக கருதப்படும் வேலுக்குதான் இங்கு வழிபாடு நடைபெற்று வந்தது. தற்போது சிலை ரூபத்தில் பிரதிஷ்டை செய்து வணங்கும் முறை உள்ளது.
தமிழ் கடவுளான முருகன் சிறுவனாக வந்து, நாவல் மரத்திலிருந்து நாவல் பழங்களை உதிர்த்து தமிழ் மூதாட்டி அவ்வையிடம் ‘சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ எனக்கேட்டு வாழ்வின் தத்துவத்தை விளக்கிய தலம் இது. ‘பழம் உதிர் சோலை’ என்பதே ‘பழமுதிர்சோலை’ என்றானது.
இதன் அருகே உள்ள ‘நூபுரகங்கை’ என்னும் பிரசித்திபெற்ற தீர்த்தம் உள்ளது. இதன் உற்பத்தி ஸ்தானத்தை இன்னும் கண்டறிய முடியாததே இதன் சிறப்பு. இங்குள்ள தீர்த்தங்களுக்கு காவல் தெய்வமாக ராக்காயி அம்மன் உள்ளார். இவருக்கு அமாவாசை தினத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. பழமுதிர்சோலை அடிவாரத்தில் அமைந்துள்ள அழகர் கோவிலும் பிரசித்தி பெற்றது என்பதால் இங்கு வரும் பக்தர்கள் ஏராளம்.
மதுரையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது, அழகர்மலை.






