என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தினசரி 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். தற்போது அது பாதியாக குறைக்கப்பட்டு 15 ஆயிரம் பக்தர்களே முன்பதிவு செய்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
திருப்பதி :
கொரோனா பரவல் எதிரொலியாக திருப்பதியில் ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட்டுகளின் எண்ணிக்கையும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை ஏழுமலையானின் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. கோவிலில் கைங்கரியங்கள் தனிமையில் நடத்தப்பட்டன. அதன்பிறகு ஜூன் மாதம் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. ஆந்திர மாநிலத்தில் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.
எனவே தேவஸ்தானம் கடந்த 12-ந்தேதி முதல் திருப்பதியில் அளிக்கப்பட்டு வந்த இலவச தரிசன டோக்கன்களை ரத்து செய்தது. தினசரி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டு வழங்கப்பட்டு வந்த டோக்கன்களை ரத்து செய்யப்பட்டதால் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்தது.
இந்நிலையில் ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் எண்ணிக்கையையும் பாதியாக தேவஸ்தானம் குறைத்துள்ளது.

இந்த நடைமுறை மே மாதம் முதல் 1-ந்தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) இதற்கான விவரங்கள் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
திருப்பதியில் நேற்று 27,822 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 12,062 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.07 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.

இத்தல இறைவனையும், இறைவியையும் வணங்கினால், முற்பிறவியிலோ அல்லது இப்பிறப்பிலோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் அகன்றுவிடும்.
திருவியலூர் என்று புராண காலத்தில் அழைக்கப்பட்ட, திருவிசநல்லூர் திருத்தலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. இங்கு சிவயோகிநாதர் கோவில் அமைந்துள்ளது.
இறைவன்- சிவயோகிநாதர், யோகநந்தீஸ்வரர். இறைவி- சவுந்திரநாயகி. இத்தல இறைவனையும், இறைவியையும் வணங்கினால், முற்பிறவியிலோ அல்லது இப்பிறப்பிலோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் அகன்றுவிடும்.
பெண்களின் பாவத்திற்கும், பழிக்கும் ஆளாகி அல்லல் படுவோர், சுகம் பெறுவர். நந்தி தேவர், எமதர்மனை விரட்டி அடித்த தலம் இது என்பதால், இத்தல இறைவனுக்கு யோக நந்தீஸ்வரர் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். எமனை நந்தி விரட்டியடித்ததால், இது மரண பயம் நீக்கும் தலமாகவும் விளங்குகிறது
நாகர்கோவில் கிருஷ்ணசாமி கோவிலில் 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக தேரோட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில் நகரில் பிரசித்தி பெற்ற கோவில்களில் கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசாமி கோவிலும் ஒன்றாகும். இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட இந்த கோவிலில் 10 நாள் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.
கொரோனா பரவலுக்கு மத்தியில் இந்த கோவிலின் 10 நாள் சித்திரை திருவிழா கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு தொடங்கியது.
கொடியேற்றத்தின் போது கோவில் கொடிமரம் அருகில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. எனவே பக்தர்கள் வெளியில் நின்று கோவில் கொடியேற்ற நிகழ்ச்சியை பக்தி பரவசத்தோடு கண்டுகளித்தனர்.
இந்த 10 நாள் திருவிழா வருகிற 26-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. வழக்கமாக 9-ம் நாள் திருவிழா அன்று தேரோட்டமும், 10-ம் நாள் திருவிழா அன்று தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தேரோட்டமும், தெப்பத் திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் சாமி வாகன பவனியும் ரதவீதிகளில் நடைபெறாது என்றும், கோவில் வளாகத்துக்குள்ளேயே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனி முருகன் கோவிலின் உபகோவிலான லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 24-ந்தேதி நடைபெறுகிறது.
பழனி மேற்கு ரத வீதியில் லட்சுமி நாராயணபெருமாள் கோவில் அமைந்துள்ளது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான இங்கு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கோவிலில் 6 கலசங்கள் வைக்கப்பட்டு, கலச பூஜை நடந்தது. தொடர்ந்து கொடிப்படம், கொடி மரத்துக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. கொடியேற்றத்தை காண லட்சுமி நாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சன்னதி வீதியில் எழுந்தருளினார். பின்னர் கொடிப்படம் உள்பிரகாரம் சுற்றி கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து காலை 7.15 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.
நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். பூஜை நிகழ்ச்சிகளை கோவில் குருக்கள்கள் கார்த்திகேயன், பாலாஜி மற்றும் குருக்கள்கள் செய்திருந்தனர்.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 24-ந்தேதி நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதேபோல் 26-ந்தேதி நடைபெற இருந்த தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அரசின் கொரோனா கட்டுப்பாடு விதிகளான முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

புனித ரமலானில் நோன்பு நோற்பது கடமை. அது ஏன் கடமையாக்கப்பட்டது? மனக்கட்டுப்பாட்டை வாழ்வில் செயல்படுத்த தான் நோன்பு விதியாக்கப்பட்டு இருக்கிறது.
மகத்துவம் பொருந்திய ரமலானுக்கு ‘ஷஹ்ருத் தாஅத்’ - ‘கட்டுப்பாடு மிக்க மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.
மனித வாழ்வில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்றவை அவசியமானது. ஒவ்வொருவரின் வாழ்விலும் கடமை உணர்வு இருக்க வேண்டும்; கண்ணியம் காக்கப்பட வேண்டும்; கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும்.
அந்தக்கட்டுப்பாடு, நன்மைகள் புரியவும், நற்செயல்கள் செய்யவும் பயன்படும் வகையில் இருக்கவேண்டும். தீமைக்கும், தீய செயல்களுக்கும் நாம் கட்டுப்பட்டு நடக்க கூடாது. கடமையில்லா உணர்வும், கண்ணியக் குறைவும், கட்டுப்பாடற்ற வாழ்வும் பயன்தராது.
புனித ரமலானில் நோன்பு நோற்பது கடமை. அது ஏன் கடமையாக்கப்பட்டது? மனக்கட்டுப்பாட்டை வாழ்வில் செயல்படுத்த தான் நோன்பு விதியாக்கப்பட்டு இருக்கிறது.
ஒருவர் தனிமையில் இருக்கும் போது, அருகில் உணவும், நீரும் இருக்கும். பசியும், தாகமும் அவரை பாடாய்படுத்தும். அவரை கட்டுப்படுத்துவதற்கு யாருமே இல்லை. இந்நிலையில், தான் நோன்பிருக்கும் போது உண்ணக்கூடாது, பருகக்கூடாது என அவரின் மனசாட்சி கூறும்.
பகல் நேரத்தில் உணவு, தண்ணீர், உடல் இச்சை போன்றவற்றை ஒரு நோன்பாளி தமது மனக்கட்டுப்பாட்டாலும், மனவலிமையாலும் விட்டுவிடுகிறார். ரமலான் மாதம் முழுவதும் தமது உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய எத்தனையோ செயல்களை விட்டு ஒரு நோன்பாளி விலகிவிடுகிறார். அதுபோல பிறரை புண்படுத்தும் தீய செயல்பாடுகளையும் தமது மனக்கட்டுப்பாட்டால் விட்டுவிடுகிறார்.
‘அல்லாஹ்வுக்கும், அவனின் திருத்தூதருக்கும் எவர் கட்டுப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்’ என்று திருக்குர்ஆன் (33:71) குறிப்பிடுகிறது.
இதுகுறித்த நபிமொழி வருமாறு:
‘அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும், அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதன்படி அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும், சிலருக்குக் கீழ்த் தளத்திலும் இடம் கிடைத்தது. கீழ்த்தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்ட போது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல்தளத்தில் இருப் பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. அப்போது, கீழ்த்தளத்தில் இருந்தவர்கள் நாம் நீருக்காக நமது பங்கில் கீழ்த்தளத்தில் ஓட்டையிட்டுக் கொள்வோம்; மேலே இருப்பவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என பேசிக்கொண்டனர். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள மேல்தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் கப்பலில் இருப்போர் யாவரும் அழிந்து போவர். ஓட்டையிட விடாமல் அவர்களின் கரத்தைப் பிடித்தால், அவர்களும் பிழைத்துக் கொண்டு, மற்றவரும் பிழைத்துக் கொள்வார்கள்’. (அறிவிப்பாளர்: நுஅமான் பின் பசீர் (ரலி), நூல்: புகாரி)
இவ்வாறு, இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பவர், கட்டுப்பாடற்று நடப்பவரை அவ்வாறு விட்டு விடாமல், அவரை திருத்த முயற்சிக்க வேண்டும். இல்லையேல் அழிவு அவருக்கு மட்டுமல்ல, அது நமக்கும்தான். இந்த கட்டுப்பாட்டை ரமலானையும் தாண்டி வாழ்நாள் முழுவதும் பேணவேண்டும். இவ்வாறு பயிற்சி அளிக்கும் இம்மாதத்தில் முழு பயிற்சியையும் பெற நாம் முயற்சிக்க வேண்டும்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.38 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.33 மணி

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு கோவிலில் உள்ளே நடராஜர் சன்னதியில் யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பிறகு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கொரோனா நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் தினமும் சுவாமி அம்பாள் வீதி உலா வரும் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், சுவாமி-அம்பாள் வீதி உலாவானது கோவில் உள்பிரகாரத்தில் நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

அருளாளர் தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கான நாள் அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி அறிவிக்கப்படுகிறது. ரோம் நகரில் கர்தினால்களுடன் நடைபெறும் கூட்டத்தில் போப் ஆண்டவர் முடிவு செய்கிறார்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே நட்டாலம் கிராமத்தில் 1712-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி வாசுதேவன் நம்பூதிரி-தேவகியம்மா தம்பதிக்கு மகனாக தேவசகாயம் பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் நீலகண்ட பிள்ளை. இவர் கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் இணைந்த பின்பு தனது பெயரை தேவசகாயம் என மாற்றிக்கொண்டார். கிறிஸ்தவ விசுவாசத்திற்காக 1752-ம் ஆண்டு ஜனவரி 14-ந் தேதி அப்போதைய ஆட்சியாளர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இவருக்கு 22-12-2003- அன்று இறையூழியர் பட்டமும், 8-5-2012-ல் அருளாளர் பட்டமும் வழங்கப்பட்டது. இதையடுத்து தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதற்காக பல்வேறு கட்ட பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த 28-2-2019-ல் இவரை புனிதராக அறிவிக்கும் ஆவணத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கையெழுத்திட்டார். இதையடுத்து புனிதராக அறிவிக்கும் நாள் அறிவிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் அடுத்த மாதம் 3-ந் தேதி ரோம் நகரில் நடக்கிறது.
இதுதொடர்பாக கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கூறியிருப்பதாவது:-
அருளாளர் தேவசகாயம் புனிதர் பட்டத்திற்காக காலம் காலமாக காத்திருக்கும் பக்தர்களுக்கு மாபெரும் மகிழ்ச்சி தரும் நற்செய்தியாக திருத்தந்தை (போப் ஆண்டவர்) பிரான்சிஸ் நமக்கு ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளார்.
அடுத்த மாதம்(மே) 3-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ரோம் நகரின் வத்திக்கான் மாளிகையில் கர்தினால்கள் வழக்கமாகக் கூடும் அறைக்கு கர்தினால்களை போப் ஆண்டவர் பிரான்சிஸ் அழைத்துள்ளார்.
கூட்டத்தின் முக்கிய நோக்கம் ஒன்றே ஒன்றுதான். அதாவது நம் அருளாளர் தேவசகாயம் மற்றும் இவரை போன்ற 7 அருளாளர்களை அகில உலகம் போற்றும் மாபெரும் புனிதர்களாக பிரகடனப்படுத்துவதாகும்.
அதன்படி வருகிற 3-ந்தேதி நடைபெறும் கர்தினால்கள் கூட்டத்தில் அருளாளர் தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்குவது பற்றிய அனைத்து முடிவுகளையும் ஆய்வு செய்து அதற்கான தேதி அறிவிக்கப்படும்.
கொரோனா தொற்று நோயால் உலகம் பெரிதும் பாதிப்படைந்து உள்ளதால் வழக்கம்போல் ரோமை நகர பேதுரு பேராலயத்தின் முன்வளாகத்தில் பெரும் விழாவாக நடைபெறும் புனிதர் பட்ட நிகழ்வு இந்தாண்டு எளிமையாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிற 3-ந் தேதி நடைபெறும் கர்தினால்கள் கூட்டம் நாம் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருக்கும் நம் மறைசாட்சியை அகில உலகமும் போற்றிக் கொண்டாடும் மாபெரும் புனிதராக அறிவிக்கட்டும். இந்த மகிழ்ச்சியான செய்தியின் எதிரொலி உலகம் முழுவதும் ஓங்கி ஒலித்து நம்மை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தட்டும்.
இவ்வாறு ஆயர் நசரேன் சூசை தெரிவித்துள்ளார்.

சோழவந்தான் அருகே உள்ள ராயபுரம் புனித ஜெர்மேனம்மாள் ஆலயம் திருவிழாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு விதித்த கட்டுப்பாடுடன் திருவிழா நடைபெற்று வருகிறது.
சோழவந்தான் அருகே உள்ள ராயபுரம் புனித ஜெர்மேனம்மாள் ஆலயம் உள்ளது. இங்கு வருடந்தோறும் திருவிழா நடைபெறும். இதில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வர்கள். இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு விதித்த கட்டுப்பாடுடன் திருவிழா நடைபெற்று வருகிறது.
நேற்று பங்குத்தந்தை பிரான்சிஸ் சேவியர், ஊராட்சி மன்ற தலைவர் சிறுமணி என்ற மணி, கிராம கமிட்டி தலைவர் வின்சென்ட் ஆகியோர் முன்னிலையில் தேர்பவனி நடந்தது. இதுகுறித்து அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் கூறும்போது. புனித ஜெர்மேனம்மாள் தேவாலயம் சிறப்பு பெற்றதாகும். இந்த ஆண்டு கொரோனா நோய் காரணமாக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
அரசு விதித்த கட்டுப்பாடுடன் வெளிமாவட்ட, வெளியூரிலிருந்து பக்தர்கள் வராமல் உள்ளூர் பக்தர்களை வைத்து எளிய முறையில் திருவிழா நடக்கிறது. அடுத்த ஆண்டு கொரோனா நோய் இல்லாமல் திருவிழா நடைபெறும் என்று கூறினார். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. நிறைவு நாளான நேற்று சிறப்பு வழிபாடு முடிந்த பிறகு இரவு நடை அடைக்கப்பட்டது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் விஷூ மற்றும் சித்திரை மாத பூஜையையொட்டி கடந்த 10-ந் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். மறுநாள் முதல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம், உதயா ஸ்தமன பூஜை, கலசாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, படி பூஜை, களபாபிஷேக ஊர்வலம் போன்றவை நடைபெற்று வந்தது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
14-ந் தேதி விஷூ பண்டிகை அன்று சிறப்பு பூஜைகளுடன் கனி காணுதல் நடைபெற்றது. அப்போது, பக்தர்களுக்கு கை நீட்டமாக நாணயங்களை தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் வழங்கினர்.
கடந்த 8 நாட்கள் நடைபெற்று வந்த சிறப்பு பூஜைகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெற்றது. நேற்று இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை அடுத்த மாதம் (மே) 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து 19-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
கொரோனா காரணமாக சபரிமலையில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. சபரிமலை வெர்சுவல் கியூவில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் வீதம் சாமி தரிசனம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. கொரோனா நெகட்டிவ் மருத்துவ சான்றிதழ்களுடன் வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

ரமலான் கூறும் இந்த தத்துவப் பண்பை நாம் அனைவரும் இந்த ரமலானில் மட்டுமின்றி, மற்ற எல்லாக்காலங்களிலும் கடைப்பிடித்து, மனிதநேயம் மிக்கவர்களாக வாழ்வோமாக, ஆமின்.
மகத்துவம் வாய்ந்த ரமலானுக்கு ‘ஷஹ்ருல் முவாஸாத்’ - ‘மனிதர்களுடன் கலந்துறவாடி, அவர்களின் சுக-துக்கங்களில் பங்கு கொள்கிற மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.
ஒரு மனிதனுடைய இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு கொள்வதுதான் உண்மையான மனித நேயம். ஒருவரின் வாழ்வில் வெற்றியும், செல்வமும், செல்வாக்கும், பட்டமும், பதவியும், குவியும்போது அவரைத்தேடி அவரின் உதவியை நாடி, தேனீக்களைப் போன்று மக்கள் மொய்த்துக் கொண்டே இருப்பார்கள்.
அவருக்கு தோல்விக்கு மேல் தோல்வி வரும்போது, அவரின் செல்வாக்கும், சொல்வாக்கும் சரிந்து விழும்போது, அவருக்கு ஆறுதல் சொல்லக்கூட ஆட்கள் இருக்கமாட்டார்கள். இந்த நிலை சந்தர்ப்ப வாதம், அல்லது சுயநலம் என்று சொல்லப்படுகிறது.
இன்பத்திலும், துன்பத்திலும் உடன்பிறப்புகள் கூட உடனிருக்காத நிலையில், உற்ற துணையாக இருப்பவன்தான் உண்மையான தோழன். ஒருவரின் இன்பத்தில் சுகத்தை அனுபவிக்கும் நபர், அவரின் துன்பத்திலும் சோகத்தை சரிசமமாக பங்கெடுக்க வேண்டும்.
‘பிஷ்ருல் ஹாபி’ எனும் மகான் இருந்தார். அவரைக் காண அவரின் இல்லத்துக்கு ஒருவர் சென்றார். அது கடுங்குளிர்காலம். குளிர் போக்கும் கம்பளி ஆடை இருந்தும் அதை அந்த மகான் பயன்படுத்தாமல் குளிரில் நடுங்கிக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்த அந்த மனிதர் ‘ஏன் கம்பளி ஆடையை அணியாமல் இருக்கிறீர்கள்?’ என்றார்.
அதற்கு அந்த மகான், ‘குளிர்காலத்தில் ஏழைகளுக்கு கம்பளி ஆடைகள் வாங்கி கொடுக்க என்னிடம் வசதி இல்லை. எனவே அவர்கள் படும் துன்பத்தில் நானும் பங்கு கொள்கிறேன்’ என்றார். இத்தகைய மகத்தான தன்மையை புனித ரமலான் மனிதர்களுக்கு கற்றுக்கொடுக்கிறது.
ஏழைகள் படும் பசியின் கொடுமையை தெரிந்து கொள்ளவே நோன்பு கடமையாக்கப் பட்டது. ஏழைகளின் பசிப்பிணியை நீக்குவதே நோன்பின் தத்துவம் ஆகும்.
நபி யூசுப் (அலை) காலத்தில் கடுமையான பஞ்சம். அப்போது அவரிடம் கொஞ்சம் உணவு இருந்தும் பட்டினி கிடந்தார். ஏன் தெரியுமா? பட்டினி கிடப்பவர்களின் பசியின் வேதனையை தானும் உணர வேண்டும் என்பதற்காக.
உமர் (ரலி) அவர்கள் தனியாக நோன்பு நோற்பார். ஆனால் ஏழைகள் இன்றி நோன்பு திறக்க மாட்டார்கள். இதை அவரது குடும்பத்தார் யாராவது தடுத்தால், அவர் அந்த இரவு முழுவதும் கவலையால் தூங்கமாட்டார். அதுபோல அவர் சாப்பிடும் போது யாசகர் எவரும் வந்து கேட்டால், உடனே எழுந்து சென்று தனது பங்கு உணவை எடுத்து வழங்கிடுவார். எனவே அந்நாளில் அவர் உண்ணாமல் நோன்பு நோற்பார்.
தமக்கு வறுமை இருந்தபோதும் தம்மை விட பிறருக்கு முன்னுரிமை அளிப்பதில் ஆர்வத்துடன் இருந்தார்கள். ஏன்என்றால் ‘நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் உள்ளது’ என்று திருக்குர்ஆன் (94:6) குறிப்பிடுகிறது.
‘தன் அண்டை வீட்டான் பசித்திருக்க, தான் மட்டும் வயிறு நிரம்ப புசிப்பவன் உண்மையான இறைவிசுவாசியாக ஆக முடியாது’ என்பது நபிமொழி ஆகும்.
ஏழைகளுடன் கலந்துறவாடி அவர்களின் இன்ப, துன்பங்களில் பங்குபெறும் மாதம் இந்த ரமலான் மாதமாகும். ரமலான் கூறும் இந்த தத்துவப் பண்பை நாம் அனைவரும் இந்த ரமலானில் மட்டுமின்றி, மற்ற எல்லாக்காலங்களிலும் கடைப்பிடித்து, மனிதநேயம் மிக்கவர்களாக வாழ்வோமாக, ஆமின்.

இருளப்பபுரம் பசுபதீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் கூறினர்.
நாகர்கோவில் இருளப்பபுரத்தில் பசுபதீஸ்வரர்- பிரசன்ன பார்வதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா தொடங்கியது. இருளப்பபுரம் சிவ தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் உதயகுமார் கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் மாலை 6.30 மணிக்கு சிவ தேவஸ்தான சிவசக்தி மகளிர் மன்றத்தினரின் 1,008 திருவிளக்கு பூஜை வழிபாடும் நடந்தது.
விழா நாட்களில் தினமும் தீபாராதனை, சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
6-ம் திருவிழாவன்று இரவு 7 மணிக்கு 65-வது இந்து சமய மாநாடு, 7-ம் திருவிழாவன்று இரவு 7 மணிக்கு பிரசன்ன பார்வதி உடனுறை பசுபதீஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சியும், 8 மணிக்கு சுவாமியும், அம்பாளும் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
8-ம் திருவிழாவன்று மதியம் 3 மணிக்கு பிரதோஷ விழாவும், மாலை 6.30 மணிக்கு பரிவேட்டை நிகழ்ச்சியும், 7 மணிக்கு சிவ அருள்நெறி திருக்கூட்ட 60-வது ஆண்டு விழா நிகழ்ச்சியும், 10-ம் திருவிழாவன்று நண்பகல் 12 மணிக்கு காவடி எடுத்தலும், இரவு 7 மணிக்கு சித்திரை திருவிழா சிறப்பு மாநாடும் நடைபெறுகிறது.
கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் கூறினர்.
விழா ஏற்பாடுகளை இருளப்பபுரம் சிவ தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் உதயகுமார், செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நிர்வாக குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் இணைந்து செய்துள்ளனர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் நம்பெருமாள் கோடை திருநாள் (பூச்சாற்று உற்சவம்) வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் வீதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் நம்பெருமாள் கோடை திருநாள் (பூச்சாற்று உற்சவம்) வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் வீதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான நம்பெருமாள் வெளிக்கோடை திருநாள் நேற்று மாலை தொடங்கி வரும் 21-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
வெளிக்கோடை திருநாளின் முதல் நாளான நேற்று இரவு 7 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வெளிக்கோடை நாலுகால் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். பின்னர் அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்த பூச்சாற்று உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வெளிக்கோடை திருநாளை முன்னிட்டு இரவு 8 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது. நம்பெருமாள் உள்கோடை திருநாள் வருகிற 22-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
உள்கோடை திருநாளின் போது தினமும் இரவு 7 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு உள்கோடை நாலுகால் மண்டபத்திற்கு வந்து சேர்வார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளுவார். பின்னர் அங்கிருந்து இரவு 9.30 மணிக்கு வீணை வாத்யத்துடன் புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
உள்கோடை திருநாளை முன்னிட்டு இரவு 7.45 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது. வருகிற 21-ந் தேதி ஸ்ரீராமநவமியையொட்டி பகல் 2.30 மணி முதல் மாலை 6 மணிவரை நம்பெருமாள் சேரகுலவள்ளி தாயார் சேர்த்தி சேவை நடைபெற உள்ளது. வருகிற 27-ந் தேதி சித்ரா பவுணர்மி அன்று கஜேந்திரமோட்ச புறப்பாடு நடைபெறுகிறது.