search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இருளப்பபுரம் பசுபதீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.
    X
    இருளப்பபுரம் பசுபதீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

    இருளப்பபுரம் பசுபதீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    இருளப்பபுரம் பசுபதீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் கூறினர்.
    நாகர்கோவில் இருளப்பபுரத்தில் பசுபதீஸ்வரர்- பிரசன்ன பார்வதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா தொடங்கியது. இருளப்பபுரம் சிவ தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் உதயகுமார் கொடியை ஏற்றி வைத்தார்.
    பின்னர் மாலை 6.30 மணிக்கு சிவ தேவஸ்தான சிவசக்தி மகளிர் மன்றத்தினரின் 1,008 திருவிளக்கு பூஜை வழிபாடும் நடந்தது.

    விழா நாட்களில் தினமும் தீபாராதனை, சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.

    6-ம் திருவிழாவன்று இரவு 7 மணிக்கு 65-வது இந்து சமய மாநாடு, 7-ம் திருவிழாவன்று இரவு 7 மணிக்கு பிரசன்ன பார்வதி உடனுறை பசுபதீஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சியும், 8 மணிக்கு சுவாமியும், அம்பாளும் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    8-ம் திருவிழாவன்று மதியம் 3 மணிக்கு பிரதோஷ விழாவும், மாலை 6.30 மணிக்கு பரிவேட்டை நிகழ்ச்சியும், 7 மணிக்கு சிவ அருள்நெறி திருக்கூட்ட 60-வது ஆண்டு விழா நிகழ்ச்சியும், 10-ம் திருவிழாவன்று நண்பகல் 12 மணிக்கு காவடி எடுத்தலும், இரவு 7 மணிக்கு சித்திரை திருவிழா சிறப்பு மாநாடும் நடைபெறுகிறது.

    கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் கூறினர்.

    விழா ஏற்பாடுகளை இருளப்பபுரம் சிவ தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் உதயகுமார், செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நிர்வாக குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் இணைந்து செய்துள்ளனர்.
    Next Story
    ×