என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம்.
    துன்பங்களை போக்கும் பெருமாள் ஸ்லோகம்
    ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
    ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
    ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்
    ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே !

    பொதுப்பொருள் :

    திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

    இத்துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். தவிர புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்.
    திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்தது. 19-ந்தேதி புஷ்ப யாகம் நடக்கிறது.
    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்தது. அதில் தினமும் மேற்கொள்ளப்பட்ட நித்ய கைங்கர்யத்தில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளுக்கு பரிகாரமாக புஷ்ப யாகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கோவிலில் 19-ந்தேதி புஷ்ப யாகம் நடக்கிறது. அதையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    19-ந்தேதி காலை 10 மணியில் இருந்து காலை 11 மணி வரை உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம், மாலை 3 மணியில் இருந்து மாலை 5 மணி வரை சீதா, லட்சுமணர், கோதண்டராமசாமிக்கு பல வண்ண மலர்களால் புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம், மாலை 5.30 மணியளவில் உற்சவர்களான சீதா, லட்சுமணர், கோதண்டராமசாமி கோவில் உள்ளேயே வலம் வருகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கொரோனா பாதிப்பு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வருகை குறைந்தது. கோதண்டராமர், வெங்கடேச பெருமாள் கோவில்களில் இன்று காலை முதல் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    திருப்பதி :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதம் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்து வந்தனர். தற்போது ஆந்திராவில் கொரோனா அதிகரித்து வருகிறது.

    இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 12-ந்தேதி முதல் இலவச சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டது. தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் வருகை குறைந்தது.

    நேற்று 22,664 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 16 ஆயிரத்து 677 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.65 கோடி உண்டியல் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

    கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருப்பதி சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில், ஒண்டி மிட்டா கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் ஆகிய 2 கோவில்களில் இன்று காலை முதல் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கோவில் முன்பாக தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். சாமிக்கு பூஜைகள் செய்ய கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் சாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    நேற்று ஒரே நாளில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 1024 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது 2 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

    இதுவரை 98 ஆயிரத்து 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்து 695 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 909 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 6,428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருக்கல்யாண நிகழ்ச்சி கோவிலுக்குள்ளேயே நடைபெறுகிறது.
    சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் 45-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அரசு வழிகாட்டுதலின்படி கோவில் வளாகத்திலேயே திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வெவ்வேறு வாகனத்தில் காட்சி தருகிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருக்கல்யாண நிகழ்ச்சி கோவிலுக்குள்ளேயே நடைபெறுகிறது.

    திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக கிருமிநாசினி திரவம், முகக் கவசம் வழங்கப்பட்டது. உபயதாரர் முருகேசன், தக்கார் சக்கரையம்மாள், செயல் அலுவலர் சத்யநாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
    திருவெற்றியூர் பாகம்பிரியாள்கோவிலில் சித்திரைத் திருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை.
    திருவாடானை தாலுகா, திருவெற்றியூரில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பாகம்பிரியாள் சமேத வல்மீக நாதசாமி திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் 1430- பசலிக்கான சித்திரைத் திருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை. மேலும் தினமும் சாமி புறப்பாடு கோவில் உள்பிரகாரத்தில் மட்டுமே நடைபெறுகிறது. சாமி புறப்பாடு நேரங்களில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதியில்லை.

    உற்சவ காலங்களில் தினமும் நடைபெறும் தேரோட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக இரவு நேரங்களில் திருக்கோவில் மண்டபங்கள் மற்றும் வளாகங்களில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதியில்லை. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வெப்பமானி மூலம் பரிசோதனை செய்வதுடன் சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்தபின்னர் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து தரிசனம் செய்யலாம்.

    சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெற்று இந்த மாதம் 26-ந் தேதி நிறைவடைகிறது. கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு 20 நிமிடங்களுக்கு மேல் அனுமதியில்லை. ஆலய வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளபட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    மேலும் கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து சாமி தரிசனம் செய்ய பாதயாத்திரையாக வரும் பக்தர்களை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று தேவஸ்தான சரக கண்காணிப்பாளர் செந்தில் குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜ், ஆலய குருக்கள் மணிகண்டசிவம் ஆகியோர் தெரிவித்தனர்.
    இத்தலம், கிரக தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. சனி திசை, ராகு திசை, கேது புத்தி போன்றவற்றால் அவதிப்படுபவர்கள், இத்தல நாயகனுக்கு, செவ்வரளி, செம்பருத்தி, துளசி மற்றும் குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்வது மிகுந்த பலன் அளிக்கும்.
    கும்பகோணத்தில் உள்ளது சக்கரபாணி திருக்கோவில். இங்கு எழுந்தருளி இருக்கும் சக்கரபாணி, சக்கர வடிவ தாமரை பூவுடன் கூடிய அறுங்கோண எந்திரத்தில், ஆயுதம் ஏந்திய எட்டு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

    இங்குள்ள இறைவனை வழிபாடு செய்தால், கிரக தோஷங்கள் நீங்கும். நவக்கிரக நாயகனான சூரிய தேவனே, தன்னுடைய ஒளியையும், வலிமையையும் இழந்திருந்த நேரத்தில், இத்தல இறைவனை வழிபட்டு, இழந்த ஒளியை திரும்பப் பெற்றான் என்பது தல வரலாறு.

    எனவே இத்தலம், கிரக தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. சனி திசை, ராகு திசை, கேது புத்தி போன்றவற்றால் அவதிப்படுபவர்கள், இத்தல நாயகனுக்கு, செவ்வரளி, செம்பருத்தி, துளசி மற்றும் குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்வது மிகுந்த பலன் அளிக்கும்.

    சக்கரபாணி, ருத்ராம்சம் கொண்டு விளங்குபவர். எனவே இவருக்கு வன்னி இலை மற்றும் வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை செய்வது மேலும் சிறப்புக்குரியது.
    எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம், கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடியில் 2-வது ஆண்டாக சித்திரை திருவிழா நிறுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
    எடப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பிரசித்தி பெற்றது பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவில். எடப்பாடி பஸ் நிலையம் அருகில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அப்போது சாமி திருக்கல்யாணமும், 4 நாட்கள் தேரோட்டமும் நடைபெறும்.

    கடந்த ஆண்டு கொரோனா காரணமாக சித்திரை திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 30-ந் தேதி வரை நடைபெறும் எனவும், சாமி திருக்கல்யாணம் 25-ந் தேதியும், தேரோட்டம் 26 -ந்தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெறும் எனவும் திருவிழாக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த 10-ந் தேதி முதல் கோவில் திருவிழாக்கள், மத சடங்குகள் நடப்பதற்கு தமிழக அரசு தடை விதித்தது. அதனைத்தொடர்ந்து எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம், கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடியில் 2-வது ஆண்டாக சித்திரை திருவிழா நிறுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நாமக்கல் நரசிம்மசாமி கோவில் மற்றும் அரங்கநாதர் கோவிலின் நடைகள் அடைக்கப்பட்டன.
    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதேபோல் நாமக்கல் மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 506 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் பொதுமக்களை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. மேலும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்குமாறும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. அதேபோல் முககவசம் அணியாமல் சாலைகளில் நடமாடுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருந்து கடைகள், நகைக்கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் அரசின் கொரோனா நோய்த்தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதனிடையே மத்திய அரசு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை அடுத்த மாதம் 15-ந் தேதி வரை அடைக்க உத்தரவிட்டு உள்ளது. அதன்படி நேற்று நாமக்கல்லில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நரசிம்மசாமி கோவில் மற்றும் அரங்கநாதர் கோவிலின் நடைகள் அடைக்கப்பட்டன. மேலும் நாமக்கல் மலைக்கோட்டைக்கு செல்லவும் மே மாதம் 15-ந் தேதி வரையிலோ அல்லது மறுஉத்தரவு வரும் வரையிலோ சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக நுழைவுவாயிலில் உள்ள கேட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.

    கோவில்களில் வழக்கம்போல் தினசரி பூஜைகள் நடைபெறும் என்றும். ஆனால் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை எனவும் அதிகாரிகள் கூறினர். இதனிடையே கோவில்களின் நடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால் கோவில்களுக்கு வெளியே நின்று பக்தர்கள் வழிபட்டு சென்றதை காண முடிந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இதேபோல் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக நாமக்கல் நரசிம்மசாமி கோவில் மற்றும் அரங்கநாதர் கோவிலின் நடைகள் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா தொற்று காரணமாக பாலமலை ரங்கநாதர் கோவில் தேரோட்டம் இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது. அர்ச்சகர்கள் மட்டும் கோவில் அளவில் சிறப்பு பூஜைகள் நடத்துவர்.
    கொங்கு மண்டலத்தில் உள்ள பிரபலமான வைணவ திருந்தலங்களில் பாலமலையில் உள்ள ஶ்ரீ ரங்கநாதர் கோவிலும் ஒன்று. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி தேர்த்திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.

    இதில் கேரளா, கர்நாடகா மாநிலம் மற்றும் கோவை, நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக கோவில் திருவிழாக்கள் நடத்த தமிழக அரசு தடைவிதித்துள்ளது.

    இதையொட்டி பாலமலை ரங்கநாதர் கோவில் தேரோட்டம் இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது. அர்ச்சகர்கள் மட்டும் கோவில் அளவில் சிறப்பு பூஜைகள் நடத்துவர். இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை என்று கோவில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
    கொரோனா 2-வது அலை தாக்கம் எதிரொலியாக தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில்கள் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் மூடப்பட்டது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
    கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த காலகட்டத்தில் ஐராவதீஸ்வரர் கோவில் மூடப்பட்டது. அதாவது கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18-ந் தேதி முதல் மூடப்பட்டது. பின்னர் கொரோனாவின் தாக்கம் குறைந்ததையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி முதல் வழிபாட்டுத்தலங்கள் திறக்க உத்தரவிட்டதையடுத்து ஐராவதீஸ்வரர் கோவில் திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது கொரோனாவின் 2-வது அலை தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு புராதன சின்னங்களை மே 15-ந் தேதி வரை மூட உத்தரவிட்டு உள்ளது.

    கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் பகுதியில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஐராவதீஸ்வரர் கோவில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. யுனெஸ்கோ அமைப்பால் உலக புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். இதனால் கோவில் உள்ள பகுதி மற்றும் கோவிலை சுற்றியுள்ள பூங்கா உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 7 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் கோவில் மூடப்பட்டது. இதனால் கோவில் வளாகம் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. அடுத்த மாதம் மே 15-ம் தேதி வரை கோவில் வளாகத்தில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கவர்னருக்கு மாவட்ட இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
    மாவட்ட இந்து முன்னணி தலைவர் விஜயன் புதுச்சேரி கவர்னருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்றின் 2-ம் அலையிலும், தமிழகத்தில் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா, தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புகழ்மிக்க கோவில்களில் திருவிழாக்கள் பக்தர்களுக்கு அனுமதியின்றி நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் இணையதளம் வாயிலாக பக்தர்கள் பார்க்கவும் அந்தந்த கோவில் நிர்வாகம் ஏற்பாடுகள் செய்து வருகிறது.

    ஆனால், உலக புகழ்மிக்க காரைக்கால் திருநள்ளாறில் உள்ள, சனீஸ்வரர் கோவில் வைகாசி விசாக பிரம்மோற்சவ திருவிழா நிறுத்தப்படுவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இது பக்தர்களுக்கு மிகுந்த மன வேதனை தரக்கூடியதாக உள்ளது. கடந்த ஆண்டும் கொரோனா தொற்று காரணமாக இந்த திருவிழா நிறுத்தப்பட்டது.

    மேலும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் நடைபெறுவதை போல், திருநள்ளாறிலும் வைகாசி விசாக பிரம்மோற்சவ திருவிழாவையும் பக்தர்களுக்கு அனுமதியின்றி நடத்த வேண்டும். அதேபோல் அனைத்து நிகழ்ச்சிகளையும் இணையதளம் வாயிலாக பக்தர்கள் காணும் வகையில் ஏற்பாடு செய்யவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    மக்கள் மிகவும் விரும்பி வழிபடக்கூடிய தெய்வமான விநாயகரை சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று எப்படி வழிபட்டால் எத்தகைய நன்மைகள் பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமி தினங்களை காட்டிலும் அதிக சிறப்புகளைக் கொண்ட தினம் சித்ரா பௌர்ணமி தினம். இந்த சித்ரா பௌர்ணமி தினத்திற்கு நான்காவது தினம் அல்லது திதியாக வரும் நாள் சித்திரை தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி தினமாகும். விநாயகர் வழிபாடு மற்றும் விரதத்திற்குரிய மிக சிறந்த தினங்களில் சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தி தினமும் ஒன்று. இந்த தினத்தில் விநாயகப்பெருமானை விரதமிருந்து வழிபடுபவர்கள் தங்கள் வாழ்வில் அனைத்தும் கிடைக்கப் பெறுவார்கள்.

    சித்திரை தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, உணவு ஏதும் உட்கொள்ளாமல் மாலை வரை விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயில், சந்நிதிக்கு சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகதிற்கு பசும் பால் தந்து, ஆராதனை பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடித்து ஆலயத்தை எட்டு முறை வலம் வந்து வணங்க வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.

    சித்திரை மாத சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் குடும்பத்தில் இருக்கும் பொருளாதார கஷ்ட நிலை நீங்கும். தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரிவினைகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். நீண்ட காலமாக நோய்களால் அவதிப்படுபவர்கள் நோய்கள் நீங்கி பூரண உடல் நலம் பெறுவார்கள். வேலை தேடி அலைந்தவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும். திருமணம் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
    ×