என் மலர்

  ஆன்மிகம்

  திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில்
  X
  திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில்

  திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவெற்றியூர் பாகம்பிரியாள்கோவிலில் சித்திரைத் திருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை.
  திருவாடானை தாலுகா, திருவெற்றியூரில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பாகம்பிரியாள் சமேத வல்மீக நாதசாமி திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் 1430- பசலிக்கான சித்திரைத் திருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை. மேலும் தினமும் சாமி புறப்பாடு கோவில் உள்பிரகாரத்தில் மட்டுமே நடைபெறுகிறது. சாமி புறப்பாடு நேரங்களில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதியில்லை.

  உற்சவ காலங்களில் தினமும் நடைபெறும் தேரோட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக இரவு நேரங்களில் திருக்கோவில் மண்டபங்கள் மற்றும் வளாகங்களில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதியில்லை. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வெப்பமானி மூலம் பரிசோதனை செய்வதுடன் சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்தபின்னர் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து தரிசனம் செய்யலாம்.

  சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெற்று இந்த மாதம் 26-ந் தேதி நிறைவடைகிறது. கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு 20 நிமிடங்களுக்கு மேல் அனுமதியில்லை. ஆலய வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளபட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

  மேலும் கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து சாமி தரிசனம் செய்ய பாதயாத்திரையாக வரும் பக்தர்களை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று தேவஸ்தான சரக கண்காணிப்பாளர் செந்தில் குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜ், ஆலய குருக்கள் மணிகண்டசிவம் ஆகியோர் தெரிவித்தனர்.
  Next Story
  ×