என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் சூரிய ஒளி நேரடியாக சிவலிங்கம் மீது விழுந்தது. தொடர்ந்து 10 நிமிடம் நீடித்த இந்த அதிசய நிகழ்வின்போது சிவலிங்கத்துக்கு சிறப்பு பூஜை செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நெல்லிக்குப்பம் அருகே திருக்கண்டேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தொடர்ந்து ஒரு வாரம் சூரிய ஒளி நேரடியாக சிவலிங்கம் மீது விழும்.
அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு சூரிய ஒளி நேரடியாக சிவலிங்கம் மீது விழுந்தது. தொடர்ந்து 10 நிமிடம் நீடித்த இந்த அதிசய நிகழ்வின்போது சிவலிங்கத்துக்கு சிறப்பு பூஜை செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை சேனாதிபதி குருக்கள், கோவில் கணக்கர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக நேற்று முன்தினம் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவிலில் சூலினி, பிரத்தியங்கரா என இரு தேவியருடன் காட்சி தரும் சரபேஸ்வரரை, 11 வாரங்கள் தொடர்ச்சியாக, 11 விளக்கு ஏற்றி வைத்து 11 சுற்று வலம் வந்து வழிபட்டால் கடன் தொல்லைகள் அகலும்.
கும்பகோணத்தில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில், மயிலாடுதுறை வழித் தடத்தில் இருக்கிறது ‘திருபுவனம்.’ இங்கு கம்பகரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இறைவன்- கம்பகரேஸ்வரர், இறைவி- அறம்வளர்த்த நாயகி. இந்த ஆலயத்தில் சரபேஸ்வரருக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது.
பறவை, விலங்கு, மனிதம் என மூன்று வடிவங்களை கொண்ட சரப பட்சியின் வடிவத்தை சிவபெருமான் எடுத்தார். இந்த பறவையானது, சிவன், காளி, துர்க்கை மற்றும் விஷ்ணு என நான்கு கடவுளரின் ஒருமித்த ரூபமாக கருதப்படுகிறது. சூலினி, பிரத்தியங்கரா என இரு தேவியருடன் காட்சி தரும் சரபேஸ்வரரை, 11 வாரங்கள் தொடர்ச்சியாக, 11 விளக்கு ஏற்றி வைத்து 11 சுற்று வலம் வந்து வழிபட்டால் சங்கடங்கள் அனைத்தும் நீங்கும்.
அதோடு கடன் தொல்லைகள் அகலும். ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரமானது, இவரை வழிபட சிறந்த நேரமாகும்.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கொரோனா தொற்று விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் இன்று (புதன்கிழமை) முதல் தரிசன நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீ காளஹஸ்தி :
ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் கொரோனா தொற்று விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையிலும், பக்தர்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டும் இன்று (புதன்கிழமை) முதல் தரிசன நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கோவிலில் நடக்கும் ராகு, கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜைகள் தவிர மற்ற அனைத்து ஆர்ஜித சேவைகளும் கோவில் சார்பில் மட்டுமே நடத்தப்படும். பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

கோவை அருகே உள்ள வெள்ளியங்கிரி மலை ஏற வந்த பக்தர்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினார்கள்.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பூண்டியில் புகழ்பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இது தென்கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள 7-வது மலையில் லிங்கம் உள்ளது. இதை தரிசிக்க பக்தர்கள் மலை ஏறுவது வழக்கம். அதுவும் சித்ரா பவுர்ணமி அன்று ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று லிங்கத்தை வழிபட்டு திரும்புவார்கள். தற்போது கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.
இதனால் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கோவில்கள், ஆலயங்கள், மசூதிகள் மூடப்பட்டன. அதுபோன்று வெள்ளியங்கிரி மலை மீது செல்லவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
மேலும் தடையை மீறி பக்தர்கள் செல்வதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று பக்தர்கள் சிலர் வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல வந்தனர். அவர்களை முள்ளாங்காடு சோதனைசாவடியில் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள். அத்துடன் அவர்களை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே பக்தர்கள் யாரும் செல்லக்கூடாது. தடையை மீறி சென்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை கண்காணிக்க வனத்துறையினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது என்றனர்.

வேலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவில் மூடப்பட்டது. மறு உத்தரவு வரும்வரை கோவில் திறக்கப்படாது என அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுக்க மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழக அரசு இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் அறிவித்துள்ளது. மேலும் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், கோவில்கள் உள்ளிட்டவைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவில் மூடப்பட்டது. மறு உத்தரவு வரும்வரை கோவில் திறக்கப்படாது என அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். கோவில் மூடப்பட்டதால் வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள், கோவில் மூடப்பட்டிருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதே போல் திருவலத்தில் உள்ள சிறப்பு மிக்க வில்வநாதீஸ்வரர் கோவிலும் மூடப்பட்டு, இந்துசமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

சித்ராபவுர்ணமி அன்று ஆண்டு தோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உற்சவர் நம்பெருமாள் காவிரி அம்மாமண்டபம் படித்துறைக்கு வந்து ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளுவார்.
சித்ராபவுர்ணமி அன்று ஆண்டு தோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உற்சவர் நம்பெருமாள் காவிரி அம்மாமண்டபம் படித்துறைக்கு வந்து ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளுவார். மாலையில் புராண சம்பவத்தை சித்தரிக்கும் வகையில் கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி காவிரி ஆற்றுக்குள் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் நம்பெருமாளும், கோவில் யானை ஆண்டாளும் முக்கிய பங்காற்றும். இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடைமுறைகளினால் பெருமாள் காவிரியாற்றுக்கு வரவில்லை. கோவில் வளாகத்திற்குள்ளேயே புறப்பாடு நடந்து. நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கருட மண்டபத்தில் எழுந்தருளினார்.
மாலையில் சம்பிரதாய நிகழ்ச்சியாக ஆண்டாள் யானை அங்கு வரவழைக்கப்பட்டு பெருமாள் சார்பில் அதற்கு சந்தனம் மற்றும் சடாரி மரியாதை ஆகியவை வழங்கப்பட்டன. பக்தர்களின்றி கோவில் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மட்டும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

துர்கையின் ஸ்லோகம் சொல்லி அனுதினமும் அவளை வழிபட்டு வந்தாலே, நம்மை எதிர்ப்பவர்கள் பலமிழப்பார்கள். எதிரிகளே இல்லாத நிலையை உருவாக்கித் தந்திடுவாள் துர்காதேவி.
துர்கை வலிமைமிக்கவள். துஷ்ட சக்திகளை அழிக்க அவதாரமெடுத்தவள். அசுரக்கூட்டத்தை துவம்சம் செய்தவள். துர்கையைச் சரணடைந்தால், நம் முந்தைய ஜென்மப் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும். கஷ்டங்கள் அனைத்தும் கரைந்துவிடும் என்பது ஐதீகம்.
ஓம் ஹ்ரீம் தும் துர்கே துர்கே
ரட்சிணி ஸ்வாஹ;
என்கிற ஸ்லோகத்தை தினமும் சொல்லி வருவோம். காலையும் மாலையும் சொல்லிவருவோம். காலையிலும் மாலையிலும் வீட்டில் விளக்கேற்றி துர்கையின் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி தொடர்ந்து வழிபட்டு வந்தால், நம் கடன் முதலான பிரச்சினையில் இருந்தும் சிக்கல்களில் இருந்தும் நமக்கு நிவர்த்தியைத் தந்திடுவாள் தேவி. கணவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுப்பாள். தாலியை நிலைக்கச் செய்வாள். குடும்பத்தில் நிம்மதியும் ஒற்றுமையும் மேலோங்கச் செய்வாள் துர்காதேவி.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா முடிந்து அம்மன் தங்ககமல வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்து அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து தேர்த்திருவிழா நேற்று நிறைவு பெற்றது.
அம்மன் கோவில்களில் பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தேர்த்திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 20-ந்தேதி நடைபெற்றது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் காரணமாக தேருக்கு பதிலாக அம்மன் சிறிய அளவிலான சப்பரத்தில் எழுந்தருளி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்தார். அதைத்தொடர்ந்து தெப்பஉற்சவம் நடைபெற்றது.
தேர்த்திருவிழா முடிந்து எட்டாம் நாளான நேற்று அம்மன் தங்ககமல வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்து அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து தேர்த்திருவிழா நேற்று நிறைவு பெற்றது.

நெல்லையப்பர் கோவிலில் வசந்த உற்சவ விழா தொடங்கியது. இந்த விழாவில் கொரோனா நோய் தொற்று காரணமாக பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை.
நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் வசந்த உற்சவ விழா நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவ விழா நேற்று தொடங்கியது.
வசந்த காலத்தில் சுவாமி-அம்பாளுக்கு வெட்கை ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கில் நடத்தப்படும் இந்த திருவிழாவில் சுவாமி-அம்பாளை வசந்த மண்டபத்தில் தண்ணீர் நிரப்பப்பெற்ற அகழியின் நடுவே உள்ள மண்டபத்திற்கு எழுந்தருள செய்து குளிர்ச்சி தரக்கூடிய பொருட்களால் கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சுவாமி, அம்பாளுக்கு பருத்தி ஆடைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டது. இந்த விழாவில் கொரோனா நோய் தொற்று காரணமாக பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை.
மாலையில் வெற்றிவேர் வேயப்பட்ட வெள்ளி சப்பரத்தில் சுவாமி-அம்பாள் 11 முறை வசந்த மண்டப உலா வருதல் நடைபெற்றது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. இந்த விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.

திருப்புடைமருதூரில் உள்ள நாறும்பூநாதர் கோவில் ‘கடையார்ச்சுனம்’ என்று போற்றப்படுகிறது. இந்த ஆலயமானது சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு கோமதி உடனாய நாறும்பூநாதர் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.
நாறும்பூநாதர்
ஆலயத் தோற்றம்
கோமதி அம்பாள்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது திருப்புடைமருதூர் திருத்தலம். இங்கு நாறும்பூநாதர் கோவில் அமைந்துள்ளது. இது அம்பாசமுத்திரத்திற்கு வடகிழக்கே, தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த சிவாலயம் ஆகும்.
மருத மரத்தில் சிவபெருமான் எழுந்தருளிய திருத்தலங்கள், ‘அர்ச்சுன தலங்கள்’ என்று போற்றப்படுகின்றன. ‘அர்ச்சுனம்’ என்றால் ‘மருதமரம்’ என்று பொருள். அந்த வகையில் அர்ச்சுன தலங்களில் ‘தலையார்ச்சுனம்’ என்று அழைக்கப்படுவது ஸ்ரீசைலம். இது தேவார வைப்புத் தலம் ஆகும்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில், ‘இடையார்ச்சுனம்’ என்று அழைக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூரில் உள்ள நாறும்பூநாதர் கோவில் ‘கடையார்ச்சுனம்’ என்று போற்றப்படுகிறது. இந்த ஆலயமானது சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவிலாகும். இங்கு கோமதி உடனாய நாறும்பூநாதர் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.
தல வரலாறு
வீரமார்தாண்டவர்மன் என்ற மன்னன், ஒரு முறை மருத வனமாக இருந்த இந்தப் பகுதிக்கு வேட்டையாட வந்தான். அப்போது அவனது கண்ணில் ஒரு மான் தென்பட்டது. அந்த மானை நோக்கி மன்னன் அம்பு எய்தான். அந்த மான் அங்கிருந்த ஒரு மருத மரத்திற்குள் சென்று மறைந்தது.
மன்னனும் அந்த மரத்தின் அருகில் சென்று, அதில் இருந்த பொந்துக்குள் உற்று நோக்கினான். அப்போது அதிசயிக்கும் விதமாக அந்த மான், சிவலிங்கமாக மாறி, இந்த ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் நாறும்பூநாதராக மன்னனுக்கு காட்சியளித்தது. இதையடுத்து வீரமார்த்தாண்டவர்மன், இந்தப் பகுதியில் இறைவனுக்கு ஆலயம் எழுப்பியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்த ஆலயத்தில் சிவபெருமான், ‘திருநாறும்பூநாதர்’ என்ற பெயரில் லிங்க உருவத்தில் காட்சி தருகிறார். இவரது திருமேனி சற்றே சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. அம்பாளின் திருப்பெயர் ‘கோமதி.’ மிகச்சிறந்த வரப்பிரசாதியாகவும், பெருங்கருணைக் கொண்டவளாகவும் விளங்கும் இந்த அன்னை, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில், இத்தல அம்பாள் தன்னுடைய உச்சி முதல் பாதம் வரை ருத்ராட்சத்தை தாங்கியபடி வீற்றிருப்பது விசேஷமான அமைப்பாகும். இது `தாரகா சக்தி பீடம்' என்று அழைக்கப்படுகிறது.
பெரும்பாலும் சிவாலயங்களில் சிவலிங்கம் தான் சுயம்புமூர்த்தியாக இருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில், சிவலிங்கம், அம்பாள் இருவருமே சுயம்பு மூர்த்தியாக இருப்பது அரிதிலும் அரிதான சிறப்புக்குரியது. காசியில் பாயும் கங்கையானது, தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பாய்வதைப் போல, திருப்புடைமருதூரில் பாயும் தாமிரபரணியானது, தெற்கில் இருந்து வடக்காக பாய்கிறது. எனவே இந்த தலத்தை ‘தென்னக காசி’ என்றும் அழைக்கிறார்கள்.
திருப்புடைமருதூர் திருக்கோவில் அமைந்த ஆற்றங்கரையில் உள்ள தீர்த்த கட்டத்திற்கு, ‘சுரேந்திர மோட்ச தீர்த்தம்’ என்று பெயர். இந்திரனும், அவனது மனைவி இந்திராணியும் இந்த இடத்தில் தவம் செய்து, தங்களுடைய தோஷம் நீங்க வேண்டி, இந்த தீர்த்த கட்டத்தில் நீராடியதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.
ஐந்து நிலைகளையும், 11 கலசங்களையும் கொண்டதாக, இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் திகழ்கிறது. கோபுரத்தின் தளங்களில் ஏராளமான சுவர் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், கந்தபுராணம், தசாவதாரம் போன்றவற்றின் காட்சிகளும், கோவில் தல வரலாறு குறித்த காட்சிகளும், சீன நாட்டு வணிகர்களின் வருகை பற்றிய தகவல்களும் வரையப்பட்டுள்ளன.
இந்த ஆலயத்தில் கஜானன் மகராஜ் கைங்கர்ய சபா சார்பில், வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை), இந்த வருடத்தின் முதல் சனி மகாப் பிரதோஷம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவோடு, ராஜகோபுரத்தின் திருப்பணியை மேற்கொள்வதற்கான வேண்டுதல் விழாவும் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் ஆலயம் முழுவதும் 10 ஆயிரத்து 8 தீபங்கள் ஏற்றப்படுகிறது.
24-ந் தேதி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த மகா பிரதோஷ பூஜையின் சிறப்பு அம்சமாக மூவாயிரத்து இருபத்து நான்கு செவ்விளநீர் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அதோடு செண்பகம், மனோரஞ்சிதம், தாமரை மலர்களைக் கொண்டு அலங்காரமும் செய்யப்படுகிறது.
ஜாதகரீதியாக கெடுபலன் உள்ளவர்கள், இந்த பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டால், அவர்கள் நிலை நல்லவிதமாக மாறும் என்பது ஐதீகம். இதில் கலந்துகொள்ளும் பக்தர்கள், தங்களின் வேண்டுதல்களை ஒரு பேப்பரில் எழுதி சமர்ப்பிக்கும் வகையில், பிரார்த்தனைப் பெட்டி வைக்கப் பட்டுள்ளது. ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் சிரமப்படாமல் இருக்க, வீரவநல்லூர் மற்றும் முக்கூடல் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து திருப்புடைமருதூர் ஆலயத்திற்கு மதியம் 2 மணி முதல் பஸ்கள் இலவசமாக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் 28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது வீரவநல்லூர். இங்கிருந்து பிரியும் சாலையில் 7 கிலோமீட்டர் தூரம் சென்றால், திருப்புடைமருதூர் திருத்தலத்தை அடையலாம்.
செவி சாய்த்துக் கேட்கும் ஈசன்
திருப்புடைமருதூர் நாறும்பூநாதரை தரிசிப்பதற்காக, கருவூர் சித்தர் வந்தார். அப்போது தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதனால் அவரால், ஆற்றைக் கடந்து மறுகரையில் இருந்த கோவிலுக்குச் செல்ல முடியவில்லை. அதனால் இருந்த இடத்திலேயே மனமுருக ஈசனை வேண்டினார். ஈசனை மனதில் நினைத்து பாடல் ஒன்றையும் பாடினார். அந்தப் பாடலை ரசித்து கேட்க விரும்பிய ஈசன், தனது இடது காதில் கை வைத்து, ஒரு புறம் சாய்வாக திரும்பினார்.
பின்னர் கருவூர் சித்தரிடம், “என்னை நினைத்தபடியே ஆற்றில் இறங்கி நடந்து வருக” என்றார். கருவூராரும் அப்படியே செய்து, ஆற்றைக் கடந்து சிவனை தரிசித்தார். பின்னர் ஈசனிடம், “ஐயனே.. எக்காலத்திலும் இங்கு வரும் பக்தர்களின் பிரார்த்தனையை செவி சாய்த்து கேட்டு, அதனை நிறைவேற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். அதன்படியே இன்றளவும் இத்தல ஈசன், பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை கேட்க செவிசாய்த்தபடி இருப்பதாக சொல்லப்படுகிறது.

கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு வைரக்கிரீடம் அணிவித்து சிறப்பு வழிபாடு நடந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதியில்லாததால், இந்த நிகழ்ச்சிகள் பக்தர்கள் இன்றி நடந்தது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி விழா நேற்று நடந்தது. அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு அபிஷேகம், காலை 6 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜை, நிவேத்திய பூஜை, உஷ பூஜை, உஷ தீபாராதனை தொடர்ந்து 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணை, பால், தயிர், இளநீர், சந்தனம், களபம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், 11 மணிக்கு அம்மனுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காணிக்கையாக வழங்கிய ரூ.1 கோடி மதிப்புள்ள வைரக்கிரீடம் மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து 11.30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, உச்சிகால பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், 8 மணிக்கு அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி 3 முறை பவனியாக எடுத்து வந்தனர்.
அதன்பிறகு 8.30 மணிக்கு அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சி, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை ஆகியவை நடந்தது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதியில்லாததால், இந்த நிகழ்ச்சிகள் பக்தர்கள் இன்றி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார் செய்திருந்தார்.

23 ஆண்டுக்கு பிறகு வைத்தீஸ்வரன்கோவில் குடமுழுக்கு விழா நாளை நடக்கிறது. யாக சாலை பூஜைகள், குடமுழுக்கு விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சீர்காழி
சீர்காழி அருகே வைத்தீஸ் வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலில் தனி சன்னதியில் செல்வமுத்துக் குமாரசுவாமி, நவகிரகங் களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.
பிரசித்திப்பெற்ற இக்கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு நாளை 29-ந்தேதி குடமுழுக்குவிழா சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி பக்தர்கள் பங்கேற்பின்றி, அரசின் நெறிமுறைகளை பின்பற்றி நடைபெறவுள்ளது.
விழாவையொட்டி 147 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால யாகசாலை பூஜைகள் 25-ந்தேதி தொடங்கியது. நேற்று காலை மங்களவாரம், விஷேசசாந்தி, பாவனா பிஷேகம் செய்விக்கப்பட்டு நான்காம் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை விசேஷசாந்தி 5-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. பரிவார மூர்த்திகளுக்கு பிம்பசுத்தி பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. இன்று காலை 6-ம் கால யாக பூஜைகள் தொடங்கியது. மாலை 7-ம் கால யாக பூஜைகள் நடக்கிறது. நாளை காலை 8-ம் கால யாக பூஜைகளுக்கு பின் கடங்கள் புறப்பாடு, தொடர்ந்து ராஜகோபுரங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்ற குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. யாக சாலை பூஜைகள், குடமுழுக்கு விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
யாக சாலை பூஜைகளில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக பரமாச்சாரியசுவாமிகள், திருமுதுகுன்றம் குமாரத்தேவர் ஆதீனம் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது திருநெல்வேலி கட்டளை மடம் திருஞான சம்பந்தத் தம்பிரான் சுவாமிகள், வைத்தீஸ்வரன்கோவில் கட்டளை திருநாவுக்கரசுத் தம்பிரான் சுவாமிகள், திருப்பனந்தாள் சபாபதி தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் மாணிக்கவாசகத் தம்பிரான் சுவாமிகள் பங்கேற்றனர்.