search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வசந்த உற்சவ விழாவையொட்டி சுவாமி-அம்பாளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்ட போது எடுத்த படம்.
    X
    வசந்த உற்சவ விழாவையொட்டி சுவாமி-அம்பாளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்ட போது எடுத்த படம்.

    நெல்லையப்பர் கோவிலில் வசந்த உற்சவ விழா தொடங்கியது

    நெல்லையப்பர் கோவிலில் வசந்த உற்சவ விழா தொடங்கியது. இந்த விழாவில் கொரோனா நோய் தொற்று காரணமாக பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை.
    நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் வசந்த உற்சவ விழா நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவ விழா நேற்று தொடங்கியது.

    வசந்த காலத்தில் சுவாமி-அம்பாளுக்கு வெட்கை ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கில் நடத்தப்படும் இந்த திருவிழாவில் சுவாமி-அம்பாளை வசந்த மண்டபத்தில் தண்ணீர் நிரப்பப்பெற்ற அகழியின் நடுவே உள்ள மண்டபத்திற்கு எழுந்தருள செய்து குளிர்ச்சி தரக்கூடிய பொருட்களால் கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சுவாமி, அம்பாளுக்கு பருத்தி ஆடைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டது. இந்த விழாவில் கொரோனா நோய் தொற்று காரணமாக பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை.

    மாலையில் வெற்றிவேர் வேயப்பட்ட வெள்ளி சப்பரத்தில் சுவாமி-அம்பாள் 11 முறை வசந்த மண்டப உலா வருதல் நடைபெற்றது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. இந்த விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.
    Next Story
    ×