என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
சந்திரகிரி கோதண்டராமசாமி கோவிலில் சக்கரத்தாழ்வார் தீா்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை
சித்தூர் மாவட்டம் சந்திரகிரியில் உள்ள கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக அதிகாலை 4 மணியளவில் சுப்ர பாத சேவை, ஆலய சுத்தி, ஆராதனை, காலை 8 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை வசந்தோற்சவம், காலை 9.30 மணியில் இருந்து காலை 10.30 மணி வரை சீதா, கோதண்டராமர், லட்சுமணர், சக்கரத்தாழ்வாருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் பெரிய அண்டாவில் தண்ணீரை நிரப்பி அதில் உற்சவர் சக்கரத்தாழ்வாைர 3 முறை மூழ்கி எடுத்து ஸ்நானம் ெசய்வித்தனர். மாலை 6.30 மணியளவில் பிரம்மோற்சவ விழா கொடியிறக்கம் நடந்தது. இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.
விழாவில் கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், கோவில் கண்காணிப்பாளர் குமார், கங்கணப்பட்டர் சீனிவாசபட்டர், கோவில் ஆய்வாளர் கிருஷ்ண சைதன்யா மற்றும் கோவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

நரகத்தில் வழங்கப்படும் உணவும், பானமும் மிகவும் மோசமாக இருக்கும்; தண்டனை அதைவிட கொடியதாகும். ‘சீழ்நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை; குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்’. (திருக்குர்ஆன் 69:36,37)
மகத்துவமிக்க ரமலானுக்கு ‘ஷஹ்ருல் இத்க்’ - ‘நரகத்தின் விடுதலை மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.
மனிதன் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்படுபவன். கஷ்டமான வாழ்க்கையை அவன் கடுகளவு கூட விரும்பமாட்டான். எனவே தான் உலகில் வேதனையும், சோதனையும் வரும்போதெல்லாம், ‘இது நரக வேதனையாக உள்ளது’ என்று அழுது புலம்புவான்.
குற்றவாளிகளுக்கு உலகில் வழங்கப்படும் தண்டனை சிறைச்சாலை. அங்கு நிம்மதியாக உண்ண, உறங்க முடியாது. அங்கே கொசுக்கடி உண்டு; தர்மஅடியும் தாராளம் உண்டு. இதுபோன்று பாவிகளுக்கு மறுஉலகில் வழங்கப்படும் தண்டனை நரகம் ஆகும். நரகத்தில் அளிக்கப்படும் தண்டனை விபரம் வருமாறு:
நரகத்தில் வழங்கப்படும் உணவும், பானமும் மிகவும் மோசமாக இருக்கும்; தண்டனை அதைவிட கொடியதாகும். ‘சீழ்நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை; குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்’. (திருக்குர்ஆன் 69:36,37)
‘கொதிக்கும் ஊற்றிலிருந்து, நீர் புகட்டப்படும், அவர்களுக்கு விஷச்செடிகளைத் தவிர, வேறு உணவில்லை. அது அவர்களை கொழுக்கவும் வைக்காது; பசியையும் தணிக்காது’. (திருக்குர்ஆன் 88:5,6,7)
‘உங்களுடைய (உலக) நெருப்பு, நரகத்தின் நெருப்பிலிருந்து எழுபது பங்கில் ஒரு பங்கு ஆகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
‘ஒரு கல் நரகத்தின் படுகுழியில் போடப்பட்டது; எழுபது வருடங்கள் ஆகியும் அது இன்னும் சேரவில்லை என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: உத்பாபின் ஹிஸ்வான் (ரலி), நூல்: முஸ்லிம்)
இத்தகைய நரகிலிருந்து விடுதலை பெற வைக்கும் மகத்துவமிக்கது தான் ரமலான் மாத நோன்பு ஆகும்.
‘ரமலான் வந்துவிட்டால், நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன’. (நூல்: புகாரி)
‘ரமலானின் ஒவ்வொரு இரவிலும், பகலிலும் நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கிறது’. (நூல்: அஹ்மது)
‘நோன்பு நரகத்தை விட்டு பாதுகாக்கும் ஒரு கேடயம்’. (நபிமொழி)
‘மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது, சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
‘மக்கள் சிலர் தாங்கள் செய்த பாவங்களுக்கு தண்டனையாக நரகத்தில் நெருப்பினால் தீண்டப்பட்டு, அவர்களின் சருமத்தின் நிறமே மாறிவிடும். பிறகு அல்லாஹ் அவர்களைத் தன் தனிக்கருணையினால் சொர்க்கத்தில் அனுமதிப்பான். அவர்களுக்கு நரகத்தில் இருந்து விடுதலை அடைந்தவர்கள் என்று சொல்லப்படுவார்கள் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)
‘ரமலானின் கடைசிப் (பத்து) பகுதி நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்’. (நபிமொழி)
எனவே, அந்த கடைசிப் பத்து நாட்களில் பின்வரும் பிரார்த்தனையை செய்வோம். ‘அல்லாஹூம்ம அஃதிக்னா மினன்னாரி, வஅத்கில்னல் ஜன்னத யாரப்பல் ஆலமீன்’. இதன் பொருள்: ‘அகில உலக ரட்சகனே, நரகத்தில் இருந்து எங்களை காப்பாற்றி, சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக’.
ரமலான் நோன்பு நோற்று, இந்த பிரார்த்தனையும் புரிந்து நரகத்தில் இருந்து நாம் விடுதலை பெறுவோமாக, ஆமின்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இப்தார்: மாலை 6.39 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.25 மணி

குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் நடைபெறும் கெங்கையம்மன் சிரசு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. திருவிழாவை காணவும், சாமி தரிசனம் செய்யவும் லட்சக்கணக்கான பக்தர்கள் குடியாத்தம் வருவார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு இருந்ததால், தமிழக அரசு அறிவித்த பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி குறைந்த அளவு பக்தர்களை கொண்டு சமூக இடைவெளியுடன் காப்பு கட்டும் நிகழ்ச்சி, தேரோட்டம், கெங்கையம்மன் சிரசு ஊர்வலம்,, பூபல்லக்கு ஆகிய விழாக்கள் கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது.
அதேபோல் இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு அறிவித்த பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நேற்று காலை கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சி குறைந்த அளவு பக்தர்களை கொண்டு, சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பூங்கரகம் கோவில் வளாகத்தை சுற்றி வந்து மூலவர் சன்னதி அடைந்தது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, ஊர்நாட்டாமை ஆர்.ஜி.சம்பத், ஊர் தர்மகர்த்தா கே.பிச்சாண்டி திருப்பணிக்குழு தலைவர் ஆர்.ஜி.எஸ். கார்த்திகேயன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
வருகிற 14-ந் தேதி தேர்த்திருவிழாவும், 15-ந் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும், 17-ந் தேதி பூப்பல்லக்கும் கோவில் வளாகத்திலேயே அரசின் விதிமுறைகளை பின்பற்றி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சமி திதியான இன்று வாராகி அம்மனை விரதம் இருந்து வழிபட வேண்டிய நாள். குறிப்பிட்ட பஞ்சமி திதியில் பிறந்த ஜாதகர்கள் இந்த விரத வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
இன்று பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனை வழிபட வேண்டிய நாள். சப்த மாதர்களில் வராகியும் ஒருவர். இந்நாளில் சக்தி தேவியை விரதமிருந்து வழிபாடு செய்தால் அனைத்து நன்மைகளும் நமக்கு கிடைக்கும்.
எல்லோரும் பஞ்சமி திதியில் விரதம் இருந்து வழிபாடு செய்யலாம். ஆனால் குறிப்பிட்ட பஞ்சமி திதியில் பிறந்த ஜாதகர்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் அவருக்கான விஷயங்கள்( உதாரணமாக கல்விபயில, தொழில் தொடங்க, திருமணம் செய்ய) என புதிதாக தொடங்கும் எந்த ஒரு செயலிலும் ஒருவித தடை, தாமதம் , கஷ்டம் ஏற்படும்.
இந்த ஜாதகர்கள் பஞ்சமி திதியில் பாம்பு புற்று உள்ள ஏதேனும் ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று 5 எண்ணெய் கலந்து அல்லது நல்லெண்ணெய் சிகப்பு திரி போட்டு குத்து விளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி நம் வேண்டுதல்களை மனதிற்குள் நினைத்துகொண்டே வழிபட வேண்டும்.
நிவேதனமாக பூண் கலந்து தோல் நீக்காத உளுந்த வடை அல்லது நவதானிய வடை மிளகு சேர்த்த வடை, தயிர்ச்சாதம், மொச்சை, சுண்டல், பானகம் ஆகியவவை நிவேதனமாக படைக்கலாம்.
ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ... என்ற மந்திரத்தை சொல்லி வழிபட எல்லாவித நன்மைகளும் கிடைக்கும்
குறிப்பாக ஏவல், பில்லி, சூனியம் போன்றவையால் பாதிப்புகள் ஏற்படாது. குடும்பத்தில் சுபிக்ஷம் உண்டாகும். கடன் தொல்லை, வறுமை ஒழியும். வளர்பிறை பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி என இரண்டு முறை வரும் பஞ்சமி திதியிலும் விரதம் இருந்து வழிபாடு செய்யலாம்.

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ‘முக்குறுணி விநாயகர்’ தெற்கு நோக்கியபடி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முக்குறுணி விநாயகர் பிரதிஷ்டை செய்ததற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
திருமலை நாயக்கர், மதுரையை ஆட்சி செய்த காலகட்டம் அது. அந்த மன்னனுக்கு தீராத வயிற்று வலி உண்டானது. பல வைத்தியங்களைப் பார்த்தும், அது சரியாகவில்லை. எனவே தன்னுடைய வயிற்றுவலி நீங்கினால், மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு ஒரு தெப்பக் குளம் கட்டித்தருவதாக வேண்டிக்கொண்டார்.
வேண்டுதல் நிறைவேறியதும், தெப்பக் குளம் அமைக்கும் பணி தொடங்கியது. குளம் தோண்டும் பணியின் போது, நிலத்துக்குள் இருந்து பிரமாண்டமான விநாயகர் சிலை கிடைத்தது. அவரை மூலவர் சன்னிதிக்கு செல்லும் வழியில் தெற்கு நோக்கியபடி பிரதிஷ்டை செய்தனர்.
இவரே ‘முக்குறுணி விநாயகர்.’ இவருக்கு விநாயகர் சதுர்த்தி நாளில், 18 படி அரிசியில் ஒரே கொழுக்கட்டையாக செய்து படைப்பது வழக்கமாக உள்ளது.

வள்ளலார், இன்பமான வாழ்வுக்கு நான்கு வகையான ஒழுக்கங்கள் தேவை என்று எடுத்துரைத்துள்ளார். இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் ஆகிய இந்த நான்கை பற்றியும் சிறு குறிப்பாக இங்கே பார்ப்போம்.
நம் புண்ணிய பூமியில் ஏராளமான மகான்கள் அவதரித்து வாழ்ந்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர், ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார் பெருமான். இவர் இறைவன் ஜோதி வடிவானவன் என்ற தத்துவத்தை முன்னிறுத்தி பக்தர்களை ஒன்றிணைத்தார். அனைத்து உயிர்களுக்குமான ஜீவ காருண்யத்தைப் பற்றி பேசினார். இவர் வலியுறுத்திய பல தத்துவங்கள் இன்றளவும் பலராலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
வள்ளலார், இன்பமான வாழ்வுக்கு நான்கு வகையான ஒழுக்கங்கள் தேவை என்று எடுத்துரைத்துள்ளார். இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் ஆகிய இந்த நான்கை பற்றியும் சிறு குறிப்பாக இங்கே பார்ப்போம்.
இந்திரிய ஒழுக்கம்
* கேடான வார்த்தைகள் செவி புகாதபடி, இறைவனின் நாமங்களை கேட்பது.
* குரூரமாக பார்க்காமல் இருப்பது.
* சுவையை விரும்பாமல் இருப்பது.
* இனிமையாக பேசுவது.
* உயிர்வதை ஏற்படும்போது, எவ்வித தந்திரத்தையாவது பயன்படுத்தி அதைத் தடுப்பது.
* பெரியோர்கள் எழுந்தருளியிருக்கும் இடங்களுக்குச் செல்லுதல்.
* மிதமாக உணவு உண்ணுதல்.
* அதிக இன்பத்திற்கு ஆசைப்படாதிருத்தல்.
* சஞ்சரிக்கும் காலத்தில், காலில் கவசம் தாித்தல்.
* உச்சி, மார்பு முதலிய அங்கங்களை மறைத்தல்.
* அழுக்காடை உடுத்தாமல் இருப்பது.
கரண ஒழுக்கம்
* மனதை புருவ மத்தியில் நிறுத்தி ஒருமுகப்படுத்துதல்.
* கேடான விஷயங்கள் நம்மை அண்டாமல் இருப்பது.
* மற்றவர்களின் குற்றத்தை கண்டுபிடிக்காமல் இருப்பது.
* பிறர் மீது கோபம் கொள்ளாமல் இருத்தல்.
* நம்மை நாமே பெருமைப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது.
* தீய குணங்களால் ஏற்படும் கெடுதிகளை நீக்கி, இயற்கையான சத்துவ குணத்தோடு இருத்தல்.
* தனது தத்துவங்களை அக்கிரமத்தில் செல்லாது கண்டித்தல்.
ஜீவ ஒழுக்கம்
ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரிடத்திலும், ஜாதி, சமயம், பேதம், ஆசிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திரபந்தம், தேசமார்க்கம், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் பேதம் நீங்கி, அனைவரும் நம்மவர் களாக, சமமாக நினைத்து வாழுதல்.
ஆன்ம ஒழுக்கம்
யானை முதல் எறும்பு வரை, இந்த உலகத்தில் தோன்றிய அனைத்து சரீரங்களிலும் உள்ள ஆன்மாவை திருச்சபையாகவும், அதன் உள் ஒளியே பதியாகவும், யாதும் நீக்க மறக் கண்டு, எவ்விடத்திலும் பேதமற்று இருத்தல்.
பக்தர்களின் கோரிக்கைகளை, அன்னையின் கையில் இருக்கும் கிளியானது, திரும்பத் திரும்பச் சொல்லி நினைவுபடுத்திக்கொண்டே இருப்பதாக சொல்கிறார்கள்.
‘மீனாட்சி’ என்று சொன்னாலே, அன்னையின் கையில் இருக்கும் கிளி நினைவுக்கு வராமல் இருக்காது. பக்தர்களின் கோரிக்கைகளை, அன்னையின் கையில் இருக்கும் கிளியானது, திரும்பத் திரும்பச் சொல்லி நினைவுபடுத்திக்கொண்டே இருப்பதாக சொல்கிறார்கள்.
தன்னுடைய சாபம் நீங்க, இத்தல இறைவனை வழிபடுவதற்காக இந்திரன் இங்கு வந்தான். அப்போது ஏராளமான கிளிகள், இத்தல இறைவன் எழுந்தருளியிருந்த இடத்தின் மேற்பகுதியில் பறந்தபடி, அவரது திருநாமத்தைச் சொல்லிக்கொண்டிருந்தனவாம்.
இதைக் கண்டு ஆச்சரியம் அடைந்த இந்திரன், இத்தல இறைவனை வழிபாடு செய்து விமோசனம் பெற்றான். இந்திரன் இங்கு சிவ வழிபாடு செய்வதற்கு கிளிகள் வழிகாட்டியதன் அடிப்படையில், மதுரையில் கிளி முக்கியத்துவம் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

ஆஞ்சநேயருக்கு ‘சுந்தரன்’ என்றும் ஒரு பெயர் உண்டு. வால்மீகி மகரிஷி, தான் எழுதிய ராமாயண காவியத்தை 7 காண்டங்களாகப் பிரித்தார். அதில் அனுமனுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், ஒரு காண்டத்திற்கு ‘சுந்தர காண்டம்’ என்றும் பெயரிட்டுள்ளார்.
ராமாயணம் என்றால் முதலில் ராமரும், சீதையும் நினைவுக்கு வருவார்கள். அதன்பிறகு நம் நினைவுக்கு வருவது அனுமன்தான். ராமாயணத்தில் ராமரின் உண்மையான, முதன்மையான பக்தனாக இருந்து அனைவரின் அன்பையும் பெற்றவர் அனுமன். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர். சீதா தேவியால், ‘சிரஞ்சீவி’யாக வாழும் வரத்தைப் பெற்றவர். அவர் பிறந்த மார்கழி மாதம் மூல நட்சத்திரம் ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடப்படுகிறது.
திரேதாயுகத்தில் குஞ்சரன் என்ற சிவபக்தன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு வெகு காலமாக புத்திர பாக்கியம் இல்லை. இதையடுத்து அவன் சிவபெருமானை நோக்கி தவம் செய்தான். அவன் முன்பாக தோன்றிய ஈசன், “உனக்கு ஒரு மகள் பிறப்பாள். அவள் மூலமாக ஒரு மகன் பிறப்பான். அவன் இந்த உலகத்தில் வீரமும், வலிமையும் பெற்றவனாகவும், மரணம் இல்லாதவனாகவும் என்னுடைய அம்சத்தோடு பிறப்பான்” என்று அருளினார்.
அதன்படியே குஞ்சரனின் மனைவி ஒரு குழந்தையப் பெற்றாள். அந்தக் குழந்தைக்கு ‘அஞ்சனை’ என்று பெயரிட்டனர். அவள் பருவ வயதை எட்டியதும், வானர வீரனான கேசரி என்பவருக்கு மணம் முடித்து வைத்தனர். ஒரு நாள் அஞ்சனையின் முன்பாக தோன்றிய தர்மதேவதை, “பெண்ணே.. நீ உன் கணவனுடன் வேங்கடமலைக்குச் சென்று ஈசனை நினைத்து தவம் செய். அவருடைய அருளால் உனக்கு உலகம் போற்றும் மகன் பிறப்பான்” என்றது.
இதையடுத்து குறிப்பிட்ட இடத்திற்குச் சென்ற அஞ்சனை, காற்றை மட்டுமே உணவாகக் கொண்டு கடுமையான தவத்தை மேற்கொண்டாள். அவளது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், தன்னுடைய அம்சம் பொருந்திய கனியை அஞ்சனையிடம் சேர்ப்பிக்கும்படி வாயுதேவனுக்கு உத்தரவிட்டார். அதன்படியே செய்தார் வாயு பகவான். அந்தக் கனியை உண்ட அஞ்சனை கருவுற்றாள். ஒரு மார்கழி மாதம் மூல நட்சத்திரம் கூடிய நன்னாளில், அஞ்சனைக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அஞ்சனையின் பிள்ளை என்பதால், அதற்கு ‘ஆஞ்சநேயர்’ என்று பெயரிட்டனர். மேலும் வாயுதேவனால் கிடைத்த கனியை உண்டு பிறந்த பிள்ளை என்பதால் அவன் ‘வாயுபுத்திரன்’ என்றும் அழைக்கப்பட்டான். பெரிய தாடைகளைக் கொண்டிருந்ததால் ‘அனுமன்’ என்றும் பெயர் பெற்றான்.
கைகேயி, தசரதனிடம் பெற்ற வரத்தின் காரணமாக, ராமபிரான் 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல நேர்ந்தது. அப்படி வனத்திற்குள் வந்த ராமபிரானுக்கு எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் தூய அன்புடனும், பக்தியுடனும் தொண்டு செய்தவர் அனுமன். ராமர் இந்த மண்ணில் வாழ்ந்தவரையிலும் கூட அவருக்கு பணிவிடை செய்வதையே தன்னுடைய பெரும்பேராகக் கருதியவர்.
ஆஞ்சநேயருக்கு ‘சுந்தரன்’ என்றும் ஒரு பெயர் உண்டு. வால்மீகி மகரிஷி, தான் எழுதிய ராமாயண காவியத்தை 7 காண்டங்களாகப் பிரித்தார். அதில் அனுமனுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், ஒரு காண்டத்திற்கு ‘சுந்தர காண்டம்’ என்றும் பெயரிட்டுள்ளார்.
திரேதாயுகத்தில் குஞ்சரன் என்ற சிவபக்தன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு வெகு காலமாக புத்திர பாக்கியம் இல்லை. இதையடுத்து அவன் சிவபெருமானை நோக்கி தவம் செய்தான். அவன் முன்பாக தோன்றிய ஈசன், “உனக்கு ஒரு மகள் பிறப்பாள். அவள் மூலமாக ஒரு மகன் பிறப்பான். அவன் இந்த உலகத்தில் வீரமும், வலிமையும் பெற்றவனாகவும், மரணம் இல்லாதவனாகவும் என்னுடைய அம்சத்தோடு பிறப்பான்” என்று அருளினார்.
அதன்படியே குஞ்சரனின் மனைவி ஒரு குழந்தையப் பெற்றாள். அந்தக் குழந்தைக்கு ‘அஞ்சனை’ என்று பெயரிட்டனர். அவள் பருவ வயதை எட்டியதும், வானர வீரனான கேசரி என்பவருக்கு மணம் முடித்து வைத்தனர். ஒரு நாள் அஞ்சனையின் முன்பாக தோன்றிய தர்மதேவதை, “பெண்ணே.. நீ உன் கணவனுடன் வேங்கடமலைக்குச் சென்று ஈசனை நினைத்து தவம் செய். அவருடைய அருளால் உனக்கு உலகம் போற்றும் மகன் பிறப்பான்” என்றது.
இதையடுத்து குறிப்பிட்ட இடத்திற்குச் சென்ற அஞ்சனை, காற்றை மட்டுமே உணவாகக் கொண்டு கடுமையான தவத்தை மேற்கொண்டாள். அவளது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், தன்னுடைய அம்சம் பொருந்திய கனியை அஞ்சனையிடம் சேர்ப்பிக்கும்படி வாயுதேவனுக்கு உத்தரவிட்டார். அதன்படியே செய்தார் வாயு பகவான். அந்தக் கனியை உண்ட அஞ்சனை கருவுற்றாள். ஒரு மார்கழி மாதம் மூல நட்சத்திரம் கூடிய நன்னாளில், அஞ்சனைக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அஞ்சனையின் பிள்ளை என்பதால், அதற்கு ‘ஆஞ்சநேயர்’ என்று பெயரிட்டனர். மேலும் வாயுதேவனால் கிடைத்த கனியை உண்டு பிறந்த பிள்ளை என்பதால் அவன் ‘வாயுபுத்திரன்’ என்றும் அழைக்கப்பட்டான். பெரிய தாடைகளைக் கொண்டிருந்ததால் ‘அனுமன்’ என்றும் பெயர் பெற்றான்.
கைகேயி, தசரதனிடம் பெற்ற வரத்தின் காரணமாக, ராமபிரான் 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல நேர்ந்தது. அப்படி வனத்திற்குள் வந்த ராமபிரானுக்கு எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் தூய அன்புடனும், பக்தியுடனும் தொண்டு செய்தவர் அனுமன். ராமர் இந்த மண்ணில் வாழ்ந்தவரையிலும் கூட அவருக்கு பணிவிடை செய்வதையே தன்னுடைய பெரும்பேராகக் கருதியவர்.
ஆஞ்சநேயருக்கு ‘சுந்தரன்’ என்றும் ஒரு பெயர் உண்டு. வால்மீகி மகரிஷி, தான் எழுதிய ராமாயண காவியத்தை 7 காண்டங்களாகப் பிரித்தார். அதில் அனுமனுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், ஒரு காண்டத்திற்கு ‘சுந்தர காண்டம்’ என்றும் பெயரிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை நகம் வெட்ட கூடாது என்றவுடன் ஏன் அன்று வெட்டினால் வெட்ட முடியாதா? நகம் தான் வெட்டுப்படாதா? என்று கேட்பார்கள் இவர்களுக்கு பதில் கூறுவதற்கு நாலுமுறை பிறந்து வரவேண்டும் அவ்வளவு சிரமம்.
குதர்க்கவாதம் பேசுவதில் தமிழன் பலே கில்லாடி. சற்றேக்குறைய அறுபது வருடகாலமாக குதர்க்கவாதம் பேசியே நாட்டை ஆளுகிற ஒரு கூட்டம் இங்கு மட்டுமே இருப்பதை அறியலாம். வெள்ளிக்கிழமை நகம் வெட்ட கூடாது என்றவுடன் ஏன் அன்று வெட்டினால் வெட்ட முடியாதா? நகம் தான் வெட்டுப்படாதா? என்று கேட்பார்கள் இவர்களுக்கு பதில் கூறுவதற்கு நாலுமுறை பிறந்து வரவேண்டும் அவ்வளவு சிரமம்.
பொதுவாக சனிக்கிழமையை பெருமாளுக்கு உகந்த நாளாகவும், வெள்ளிக் கிழமையை தாயாருக்கு உகந்த நாளாகவும் கருதுவது மரபு மஹாலஷ்மிக்குரிய அந்த நாளில் புதியதாக ஒரு பொருளை பெற வேண்டுமே தவிர இழக்க கூடாது என்பது நம்பிக்கை. நகம் முடி இரண்டுமே வெட்டினாலும் வளர்வது என்றாலும் அதுவும் நமது உடலில் ஒரு அங்கமாகும். பொருளை இழப்பதே தப்பு என்றால் உடல் உறுப்பை இழப்பது இன்னும் அதிகபடியான தவறு அல்லவா? அதனால் தான் வெள்ளிக்கிழமை நகம் வெட்ட கூடாது என்று கூறுகிறார்கள்.
இப்படி சொன்னவுடன் இதற்கு ஏதாவது சாஸ்திர சான்றுகள் இருக்கிறதா? என்று ஒரு ஆஸ்திக கோஷ்டி கேள்வி எழுப்பலாம் இது நம்பிக்கையின் அடிப்படையில் உருவான பழக்கமே தவிர மனுநீதி போன்ற சாஸ்திரங்களின் அடிப்படையில் தோன்றியது கிடையாது. பிற்கால சாஸ்திர நூல்களில் இந்த விஷயம் சேர்க்கபட்டதே தவிர முன்பு உள்ள சங்கதி அல்ல சாஸ்திரத்தில் சொல்லபடாததை கடைபிடிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்க கூடாது பெரியவர்கள் சொல்வதும் கூட ஒருவகை சாஸ்திரமே.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் யாழ்மூரிநாதர் கோவிலில் தட்சிணாமூர்த்தி, பின்புறம் சற்றே சாய்ந்தவாறு இருக்கிறார். இங்கு காவி நிற வஸ்திரம் சாத்தி பூஜைகள் செய்கிறார்கள்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் யாழ்மூரிநாதர் கோவிலில் சிவன் யாழ் இசைத்தபோது, அவரது அம்சமான தட்சிணாமூர்த்தி அந்த இசையை ரசித்துக் கேட்டார். இசையில் மகிழ்ந்த அவர் தன்னையும் அறியாமல் வியப்பில் பின்புறம் சாய்ந்தாராம். இதனை உணர்த்தும்விதமாக இங்குள்ள தட்சிணாமூர்த்தி, பின்புறம் சற்றே சாய்ந்தவாறு இருக்கிறார். பொதுவாக மஞ்சள் நிற வஸ்திரம்தான் தட்சிணாமூர்த்திக்கு அணிவிப்பார்கள்.
ஆனால், இங்கு காவி நிற வஸ்திரம் சாத்தி பூஜைகள் செய்கிறார்கள். தட்சிணாமூர்த்தியின் இந்த கோலத்தை காண்பது அபூர்வம். மணம் முடிக்காமல், குரு அம்சமாக இருப்பதால் காவி ஆடை அணிவிப்பதாக சொல்கிறார்கள். இங்கு சிவன் தன் கையில் யாழ் இசைத்த கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு வலப்புறம் சம்பந்தரும், இடப்புறத்தில் யாழ்ப்பாண நாயனாரும் இருக்கின்றனர்.
* தட்சிணாமூர்த்தியை மூலவராக கொண்ட கோவில், கேரள மாநிலம் ஆலப்புழை அருகேயுள்ள சுகபுரத்தில் இருக்கிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோவிலில் உள்ள மூலவரின் மீது தான், ஆதிசங்கரர் ‘தட்சிணாமூர்த்தி அஷ்டகம்’ இயற்றினார். சுகப்பிரம்ம மகரிஷிக்கு தட்சிணாமூர்த்தி ஞானஉபதேசம் செய்தது இந்த இடத்தில்தான் என தல புராணம் கூறுகிறது.

பூஜை அறையில் ஐந்துமுக விளக்கு வைத்து, அதில் ஐந்து திரிகளிலும் தீபம் ஏற்றி பண்டிகை நாட்களில் வழிபாடு செய்தால் பலன் அதிகம் கிடைக்கும்.
வீட்டில் ஒவ்வொருவரும் விளக்கேற்றி வழிபாடு செய்கிறோம். பூஜை அறையில் ஐந்துமுக விளக்கு வைத்து, அதில் ஐந்து திரிகளிலும் தீபம் ஏற்றி பண்டிகை நாட்களில் வழிபாடு செய்தால் பலன் அதிகம் கிடைக்கும். மற்ற நாட்களில் இரண்டு திரி போட்டு, இரண்டு முக தீபம் ஏற்ற வேண்டும். ஜோடி தீபம் ஏற்றி வழிபட்டால் தம்பதியரின் கோரிக்கைகள் நிறைவேறும்.
அந்த விளக்கைத் துலக்குவதற்கு ஏற்ற நாட்கள் எவை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விளக்கைத் துலக்கக்கூடாது. விளக்கில் குபேரனும் லட்சுமியும் குடியிருப்பதாக ஐதீகம்.
எனவே திங்கள் அல்லது வியாழக்கிழமை விளக்கைத் துலக்கி வைத்துக்கொண்டு, விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் நினைத்தது நிறைவேறும்.

ஜாதக ரீதியாக நம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் ராசிக்கு எந்த தொழில் செய்தால் சம்பாதிக்கலாம் என்பதை நன்கு ஜோதிடம் அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
தொழில் தொடங்க வேண்டும் என்றால் அதற்கு யோகம் இருக்க வேண்டும் என்று பலர் கூறுவார்கள். அதற்காக யோகம் வரும் என்று நாம் அதற்கான காலத்தை எதிர்பார்க்க கூடாது. அதற்கு கடின உழைப்பும், நம்பிக்கையும் கண்டிப்பாக தேவை.
ஆனாலும் ஜாதக ரீதியாக நம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் ராசிக்கு எந்த தொழில் செய்தால் சம்பாதிக்கலாம் என்பதை நன்கு ஜோதிடம் அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இருப்பினும் லக்னத்தில் இருந்து 11-ம் இடத்தில் எந்த கிரகம் இருந்தால் எந்த தொழில் மேற்கொள்ளலாம் என்பது பற்றி ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றி விவரம் வருமாறு:-
* 11-ல் சூரியன் இருக்கப் பெற்றவர்கள் தந்தை வழித் தொழில்கள் மூலம் லாபம் பெறுவார்கள்.
* 11-ல் சந்திரன் இருக்கப் பிறந்தவர்கள் வாகன சுக போக வாழ்வோடு வாழ்வார்கள். ஆண்களுக்கு திருமணத்திற்கு பிறகு புது மனைவியால் சொத்துக்கள் குவியும்.
* 11-ல் செவ்வாய் இருக்க பிறந்தவர்கள் துணிச்சல் உள்ளவர்கள். பல வழிகளிலும் பொருள் கிடைக்கும். நினைத்த மிகப்பெரிய எண்ணங்கள் கைகூடும். சொந்த நிலமும் வீடுகளும் அமையும்.
*11-ல் புதன் இருக்கப் பிறந்தவர்களுக்கு மன வளமும் அறிவு வளமும் பெருகும். மாமேதையாக விளங்குவார்கள். பொறியியல் நிர்வாகம், ஆடிட்டர் துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.
* 11-ல் குரு இருக்கப் பிறந்தவர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு கொள்வார்கள். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.
* 11-ல் சுக்கிரன் இருக்கப் பிறந்தவர்கள். பெரும் பகுதி ஊர் சுற்றி வியாபாரத்தைப் பெருக்குவார்கள். நாகரிக வஸ்துகள், வாசனைத் திரவியங்கள் விற்றுப் பொருளீட்டுவார்கள்.
* 11-ல் சனி இருக்கப் பிறந்தவர்கள். பல ஆட்களை வேலைக்கு அமர்த்தி தொழில் செய்வார்கள். கட்டிடம், ஒப்பந்த தொழில்கள் கை கொடுக்கும்.
* 11-ல் ராகு இருக்கப் பிறந்தவர்கள். ராணுவத்துறைக்குச் சென்று பொருளீட்டுவார்கள். அயல்நாடு சென்று பொருட்களை வாங்கி விற்பனை செய்வதன் மூலம் லாபம் பெறுவார்கள்.
* 11-ல் கேது இருக்கப் பிறந்தவர்கள். திடீர் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். ஏழையாகப் பிறந்தவரும் திடீர் லாபத்தைப் பெறுவார்கள். தர்மகாரியம் செய்வார்கள்.