என் மலர்
ஆன்மிகம்

சீதா, கோதண்டராமசாமி, லட்சுமணர், சக்கரத்தாழ்வாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தபோது எடுத்தபடம்.
சந்திரகிரி கோதண்டராமசாமி கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
சந்திரகிரி கோதண்டராமசாமி கோவிலில் சக்கரத்தாழ்வார் தீா்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை
சித்தூர் மாவட்டம் சந்திரகிரியில் உள்ள கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக அதிகாலை 4 மணியளவில் சுப்ர பாத சேவை, ஆலய சுத்தி, ஆராதனை, காலை 8 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை வசந்தோற்சவம், காலை 9.30 மணியில் இருந்து காலை 10.30 மணி வரை சீதா, கோதண்டராமர், லட்சுமணர், சக்கரத்தாழ்வாருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் பெரிய அண்டாவில் தண்ணீரை நிரப்பி அதில் உற்சவர் சக்கரத்தாழ்வாைர 3 முறை மூழ்கி எடுத்து ஸ்நானம் ெசய்வித்தனர். மாலை 6.30 மணியளவில் பிரம்மோற்சவ விழா கொடியிறக்கம் நடந்தது. இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.
விழாவில் கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், கோவில் கண்காணிப்பாளர் குமார், கங்கணப்பட்டர் சீனிவாசபட்டர், கோவில் ஆய்வாளர் கிருஷ்ண சைதன்யா மற்றும் கோவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

Next Story