என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து திருப்புவனத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சியும் தொடங்கியது.
திருப்புவனத்தில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட புஷ்பவனேசுவரர்- சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு உள்ள வைகை ஆற்றங்கரையில் மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இங்கு தர்ப்பணம் கொடுப்பது காசியை விட விசேஷம் கூடுதல் என முன்னோர்கள் கூறுவதுண்டு.
ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து திருப்புவனத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சியும் தொடங்கியது.
இதற்காக மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து விட்டு பின்பு கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக புஷ்பவனேஸ்வரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டிருந்தது. கோவிலுக்குள் வரும் பக்தர்கள் புஷ்பவனேஸ்வரர் சன்னதி வழியாக சென்று சவுந்திரநாயகி அம்மன் சன்னதி வழியாக வெளியேறும் வகையில் செய்யப்பட்டிருந்தது.
இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ தலைமையில் திருப்புவனம் சரக கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

திருவெற்றியூர் பாகம்பிரியாள் சமேத வன்மீகநாதசாமி கோவிலில் கோ பூஜை செய்து கோவில் நடை திறக்கப்பட்டது. கோவிலில் அர்ச்சனை, அபிஷேகம் நடைபெறவில்லை.
திருவாடானை சிநேகவள்ளி சமேத ஆதிரெத்னேசுவரர் கோவில் திருவெற்றியூர் பாகம்பிரியாள் சமேத வன்மீக நாதசாமி கோவில் உள்பட தாலுகாவில் பிரசித்தி பெற்ற தீர்த்தாண்ட தானம், தொண்டி, எஸ்.பி.பட்டினம், புல்லூர் உள்பட பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்கள் திறக்கப்பட்டன.
பக்தர்கள் கோவில்களில் மனம் உருக சாமி தரிசனம் செய்தனர். திருவெற்றியூர் பாகம்பிரியாள் சமேத வன்மீகநாதசாமி கோவிலில் கோ பூஜை செய்து கோவில் நடை திறக்கப்பட்டது. சுவாமி, அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றன. கோவிலில் அர்ச்சனை, அபிஷேகம் நடைபெறவில்லை.
கோவில் ஸ்தானிகம், மணிகண்ட குருக்கள் பக்தர்களுக்கு விபூதி, குங்குமம் போன்ற அருட்பிரசாதங்களை வழங்கினார். சிவகங்கை தேவஸ்தான சரக கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆலய கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் தானியங்கி எந்திரங்கள் மூலம் உடல் வெப்பநிலை கண்டறியப்பட்டு கைகளுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்ட பின்னரே கோவிலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி உள்ளிட்ட விஷேச நாட்களில் லட்சகணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி முதல் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
அதன்படி அருணாசலேஸ்வரர் கோவில் உள்பட கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் கோவிலில் ஆகம விதிகளின் படி பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைய தொடங்கியதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் 5-ந் தேதி முதல் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின் படி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான அனைத்து முன்ேனற்பாடு பணிகளும் கோவில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து நேற்று அதிகாலை 5.30 மணியளவில் ராஜகோபுர வாசல் திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. கோவிலில் பக்தர்கள் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். சாமி சன்னதியில் தரிசனம் செய்து விட்டு பக்தர்கள் அம்மன் சன்னதிக்கு சென்று அங்கிருந்து கோவில் பின்புற வழியாக வந்து திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
கோவிலுக்குள் வரும் பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டனர். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் தானியங்கி எந்திரங்கள் மூலம் உடல் வெப்பநிலை கண்டறியப்பட்டு கைகளுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்ட பின்னரே கோவிலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
அதேபோல் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நேற்று உள்ளூர் மட்டுமின்றி சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்தனர். நேற்று குறைந்த அளவிலான பக்தர்களே கோவிலுக்கு வந்திருந்ததால் அவர்கள் வெகு நேரம் வரிசையில் காத்திருக்காமல் சீக்கிரமாக சாமி தரிசனம் செய்தனர். சுமார் 2 மாதங்களுக்கு பின்னர் கோவிலில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மனசாட்சியையும் தாண்டி நீங்கள் செய்யும் பாவத்திற்கான பதில் சிவனிடம் கிடைக்கும் என்று இந்து சமயம் கூறுகின்றது. அவ்வாறு சிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத நாம் செய்யும் பாவங்கள் எவை தெரியுமா?
பாவம் - 1
அடுத்தவரின் மனைவியை அல்லது கணவன் மீது ஆசைப்படுவது.
பாவம் - 2
அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைப்பது மகா பாவத்தில் அடங்கும்.
பாவம் - 3
உங்களின் சுய நலத்திற்காக எளியவர்களில் கனவை, வாழ்வை அழிப்பது, அவர்களின் மீது இல்லாத பழியை சுமத்துவதும் சிவனின் மூன்றாவது கண்களிலிருந்து தப்பிக்க முடியாத பாவம்.அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைப்பது மகா பாவத்தில் அடங்கும்.
பாவம்- 4
ஒருவன் தொடர்ந்து தீய வழியிலே செல்வது, அல்லது சிறிதும் நன்மைகூட அடுத்தவர்களுக்கு செய்யாமலிருப்பது இரண்டுமே சிவனின் கோபத்திற்கு ஆளாகும் பாவங்கள்.
பாவம்- 5
கர்ப்பிணிகளிடம் மிக மோசமான நடந்துகொள்வதும், அவர்களை தீய வார்த்தைகளால் திட்டுவதும், அதேபோல் மாதவிலக்கின் போது பெண்களை திட்டுவதும் பாவத்திற்கான வழிகளாகும்.
பாவம் - 6
இன்னொருவரைப் பற்றி அப்படமான பொய் கூறி அவரை சீர்குலைய வைப்பதும் சிவனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
பாவம் - 7
வதந்திகளையும், தேவையில்லாத விஷயங்களையும், மனதிற்கு நிம்மதியளிக்காத செய்திகளையும் எல்லாரிடம் பரப்புவது மோசமான செய்கையாகும். இதனால் சிவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
பாவம் - 8
ஒருவரின் செய்கையால மற்றொருவரின் வாழ்வு நாசமானால் அதுவும் மிகப் பெரிய பாவம். அடுத்தவரை கொலை செய்வது, அழிப்பது போன்றவைகளாகும்.
பாவம் - 9
இந்து சமயம் சில உணவுகளை சாப்பிடக் கூடாது என்று சொல்லியும் அவ்ற்றை சாப்பிடுவது பாவச் செயல். உதாரணத்திற்கு தெய்வமாக பார்க்கப்படும் மாட்டை உண்பது.
பாவம் - 10
வன்முறையை கையாள்வது. குழந்தைகளுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் செய்யும் வன்முறைகள் மன்னிக்கமுடியாத பாவமாகும்.
பாவம் - 11
மாதா, பிதா, குரு மற்றும் வயதானவர்களை மரியாதையின்றி நடத்துவது, அவர்களை அடித்து துன்புறுத்துவது போன்றவையால் சிவனின் கோபத்திற்கு ஆளாக வேண்டிவரும்.
பாவம்- 12
முறையற்ற வழியில் சொத்து சேர்ப்பது, தானமாக கொடுத்த பொருளை திரும்ப வாங்குவதும் சிவனின் பாவத்தின் கணக்கில் அடங்கும்.

15-ந் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சன விழா வெகுவிமரிசையாக நடைபெறும். கொரோனா ஊரடங்கின் காரணமாக கோவில்களில் திருவிழா மற்றும் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இருப்பினும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தீட்சிதர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். கோவில் பொதுதீட்சிதர்கள் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா மற்றும் தேரோட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதைக்கேட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவில்களில் திருவிழா, கும்பாபிஷேகம் நடத்தக்கூடாது. ஆகவே நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா நடத்த தடை விதிக்கப்படுகிறது. ஆனால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாடு நடத்தலாம், சாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்கலாம் என்று கூறினார்.
இதனை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழா இன்று காலை 7. 45 மணி அளவில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. நடராஜர் கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் கனகசபேச தீட்சிதர் கொடியேற்றினார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க சப் -கலெக்டர் மதுபாலன் தடை விதித்து உள்ளார். அதன்படி பொதுமக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. கோவில் முன்பு போலீஸ் டி.எஸ்.பி. ரமேஷ் ராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், குணபாலன் விஜி தேவி உள்பட 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாளை (7-ந் தேதி) வெள்ளி சந்திர பிறை வாகன வீதி உலா, 8-ந் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 9-ந் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, 10-ந் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 11-ந் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, 12-ந் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலா, 13-ந் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெறுகிறது.
வருகிற 14-ந் தேதி தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. 15-ந் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு ரகசிய பூஜையும், பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.
வருகிற 16-ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களும் நேற்று திறக்கப்பட்டு வழக்கமான பூஜை நடத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொரோனா 2-ம் அலை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களும் கடந்த மே மாதம் மூடப்பட்டன. தொற்று பாதிப்பு எண்ணிக்கை, தற்போது படிப்படியாக குறைந்து வருவதால், அரசின் நிலையான பாதுகாப்பு விதிகளை பின்பற்றி வழிபாட்டுத்தலங்களை நேற்று முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களும் நேற்று திறக்கப்பட்டு வழக்கமான பூஜை நடத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அந்த வகையில் நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலிலும் காலை 1,008 வடை மாலையுடன் பூஜை தொடங்கியது. பின்னர் சாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முககவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர் சமூக இடைவெளியுடன் நின்று சாமி தரிசனம் செய்தனர். அர்ச்சனை பொருட்களை கோவிலுக்கு எடுத்து வர பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டு இருந்தது. சுமார் 1½ மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டாலும், பக்தர்களின் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது.

மதுரையில் உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நடை திறப்பதற்கு முன்பே பக்தர்கள் கிழக்கு நுழைவு வாயிலில் காத்திருந்தனர்.
உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இன்னும் அதன் பாதிப்புகள் குறைய வில்லை. நாள்தோறும் பலர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் 2-வது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த மே மாதம் 10-ந்தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் கூடும் இடங்கள் மூடப்பட் டன.
குறிப்பாக தமிழகத்தில் உள்ள கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் கொரோனா குறைந்ததை தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அடுத்தடுத்து அறிவித்து வந்தது. அதன்படி ஊரடங்கு விதிகள் பெரும்பாலானவை நீக்கப்பட்டு நேற்று முதல் கோவில்கள், தேவாலங்கள், பள்ளிவாசல்கள் வழிபாடுகளுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி கடந்த 2 நாட்களாக கோவில்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
நேற்று (5-ந்தேதி) முக்கிய கோவில்களின் நடை அதிகாலை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
மதுரையில் உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நடை திறப்பதற்கு முன்பே பக்தர்கள் கிழக்கு நுழைவு வாயிலில் காத்திருந்தனர். காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. அதன் பிறகு பக்தர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கோவில் நுழைவு வாயிலில் உடல் வெப்ப நிலையை பரிசோதிக்கும் கருவி மூலம் பக்தர்கள் சோதனை செய்யப்பட்டனர். கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. பின்னர் கோவிலில் சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு மீனாட்சி சுந்தரேசுவரரை தரிசனம் செய்து பரவசம் அடைந்தனர்.

ஜூலை மாதம் 6-ம் தேதியில் இருந்து ஜூலை மாதம் 5-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
6-ம் தேதி செவ்வாய் கிழமை :
* கார்த்திகை விரதம்
* கூர்ம ஜெயந்தி
* சிதம்பரம் ஆவுடையர்கோவில்களில் சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்
* திருத்தணி முருகன் தெப்போற்சவம்
* சந்திராஷ்டமம் - சித்திரை, சுவாதி
7-ம் தேதி புதன் கிழமை :
* பிரதோஷம்
* சுபமுகூர்த்தம்
* ஆவுடையார் சிவபெருமான் பவனி
* மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலசுவாமி புறப்பாடு
* சந்திராஷ்டமம் - சுவாதி, விசாகம்
8-ம் தேதி வியாழக்கிழமை :
* மாத சிவராத்திரி
* திருவையாறு, திருவண்ணாமலையில் சிவபெருமான் அயன உற்சவாரம்பம்
* ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை
* சந்திராஷ்டமம்- விசாகம், அனுஷம்
9-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* ஸர்வ அமாவாசை
* ஆவுடையர்கோவில் சிவபெருமான் புறப்பாடு
* திருவண்ணாமலை சிவபெருமான் வீதிவுலா
* திருவள்ளூர் ஸ்ரீவீரராகவர் தெப்போற்சவம்
* சந்திராஷ்டமம் - அனுஷம், கேட்டை
10-ம் தேதி சனிக்கிழமை :
* சிதம்பரம் சிவபெருமான் புறப்பாடு
* பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு
* திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு ஆராதனை
* ராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராமசுவாமி உற்சவாரம்பம்
* சந்திராஷ்டமம் - கேட்டை, மூலம்
11-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* சந்திர தரிசனம்
* அமிர்த லட்சுமி விரதம்
* ஸ்ரீவீரராக பெருமாள் தெப்போற்சவம்
* ராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராம சுவாமி சிம்ம வாகனத்தில் வீதிஉலா
* சந்திராஷ்டமம் - மூலம், பூராடம்
12-ம் தேதி திங்கள் கிழமை :
* மதுரை மீனாட்சி முளைக்கொட்டு உற்சவாரம்பம்
* ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி ஹனுமார் வாகனத்தில் உலா
* ஆவுடையார் கோவில் சிவபெருமான் பவனி
* சந்திராஷ்டமம் - பூராடம், உத்திராடம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ராவணாசூர வத நிகழ்ச்சி நடக்கிறது. இந்த ராவணாசூரன் வதம் நிகழ்ச்சியை தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஊழியர்கள் தத்ரூபமாக செய்து காண்பிப்பார்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் இன்று ராவணாசூர வத நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி இன்று வேதப் பண்டிதர்கள் யுத்த காண்டம் 109-வது பாடலில் இருந்து 114-வது பாடல் வரையிலும், 14- வது பாடலில் இருந்து 19-வது பாடல் வரையிலும் பாராயணம் செய்கிறார்கள்.
அதற்காக வசந்த மண்டபத்தில் அசோக வனம் ஏற்பாடு செய்யப்படுகிறது. ராவணாசூரன் வதம் நிகழ்ச்சியை தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஊழியர்கள் தத்ரூபமாக செய்து காண்பிப்பார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பக்தர்கள் கோவிலுக்குள் செல்லும்போது அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கைகளில் கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கோவில்கள் மூடப்பட்டன. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சை பெரியகோவில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்கள், பாரம்பரிய நினைவு சின்னங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி முதல் மூடப்பட்டன.
இதேபோல் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களும் மே மாதம் முதல் மூடப்பட்டது. இதையடுத்து இந்த கோவில்களில் பக்தர்கள் அனுமதியின்றி பூஜைகள் நடந்து வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள் மூடப்பட்டதால் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபடாமல் இருந்தனர்.
அதேபோல் கோவிலை நம்பி இருந்த வியாபாரிகள், அர்ச்சனை பொருட்கள் விற்போர், பூ, மாலை விற்பனை செய்யும் வியாபாரிகள், பாரம்பரிய சின்னம், சுற்றுலா தலங்களில் உள்ள வழிகாட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தமிழக அரசு நேற்று முதல் கோவில்களை திறக்க அனுமதித்தது. இதனால் கடந்த 2 நாட்களாக கோவில்களை பணியாளர்கள் சுத்தம் செய்து, தடுப்புகள் அமைத்து கிருமிநாசினியும் தெளித்து வந்தனர். மேலும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சென்று சாமி தரிசனம் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
அதன்படி நேற்று காலை முதல் கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அனைத்து கோவில்களிலும் அபிஷேம் மற்றும் ஆராதனை நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று முககவசம் அணிந்தபடி சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்குள் பக்தர்கள் அமர அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் கோவிலுக்குள் செல்வதற்கு ஒரு வழியும், வெளியே வருவதற்கு ஒரு வழியும் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
தஞ்சை பெரியகோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் கோவிலுக்குள் செல்லும்போது அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கைகளில் கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது. கோவிலில் மூலவர் முன்பாக குறிப்பிட்ட இடைவெளியோடு பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
தஞ்சை பெரியகோவில் 80 நாட்களுக்குப்பிறகு திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் மகிழ்ச்சியோடு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன. இதனை முன்னிட்டு நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் நேற்று பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்டன. கோவில்களுக்குள் வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வழிபாட்டு தலங்களில் வழிபட அனுமதி இல்லாத காரணத்தால் மக்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்து வந்தனர். எப்போது வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பிலேயே மக்கள் இருந்து வந்தனர்.
தற்போது கொரோனா தொற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை நேற்று (திங்கட்கிழமை) முதல் அமல்படுத்தி உள்ளது.
அதன்படி வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து வழிபாட்டு தலங்கள் அனைத்தும் நேற்று திறக்கப்பட்டன.
நாகை மாவட்டத்தில் உலக பிரசித்திப்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம் உள்பட பெரும்பாலான வழிபாட்டு தலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையிலும் இரும்பிலான தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.
நேற்று வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் அதிகளவு பக்தர்கள் திரண்டனர்.
பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் பிரார்த்தனை செய்தனர்.

2 மாதங்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்ட நிலையில், பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
முருகப்பெருமானின் 3-ம் படை வீடான உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள். கொரோனா பரவல் காரணமாக கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 2 மாதங்களாக பழனி முருகன் கோவில் மூடப்பட்டது. இருப்பினும் கோவிலில் ஆகமவிதிப்படி பூஜைகள், வழிபாடுகள் பக்தர்கள் இன்றி நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதையொட்டி ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று முதல் கோவில், தேவாலயம், பள்ளிவாசல் என அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பழனி முருகன் கோவிலும் நேற்று பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. முன்னதாக கோவிலில் நேற்று முன்தினம் பக்தர்கள் செல்லக்கூடிய பாதை, கோவில் வளாகங்கள், சன்னதி என அனைத்து இடங்களும் தூய்மைப்படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
சுமார் 2 மாதங்களுக்கு பிறகு கோவில் திறக்கப்பட்டதால், பழனி முருகன் கோவிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். குறிப்பாக கோவில் நடை திறக்கும் முன்பே அடிவார பகுதியில் பக்தர்கள் காத்திருந்தனர். அடிவாரத்தில் இருந்து ஒருவழிப்பாதையான குடமுழுக்கு அரங்கு, படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு பக்தர்கள் சென்றனர். அப்போது அரோகரா கோஷங்களை எழுப்பியபடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து பரவசம் அடைந்தனர். இதனால் கோவிலில் மீண்டும் அரோகரா கோஷம் முழங்கியது.
முன்னதாக பக்தர்கள் அனைவருக்கும் குடமுழுக்கு அரங்கில் வைத்து தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது பரிசோதனை செய்த பக்தர்களின் விவரம் சேகரிக்கப்பட்டது. பக்தர்கள் செல்லும் பாதையில் தானியங்கி எந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அரசின் கட்டுப்பாடுகளின்படி முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்கள் தேங்காய், பழம் ஏதும் கொண்டு செல்லக்கூடாது, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது அறிவிப்பு செய்யப்பட்டது. தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் அமர்வதை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தரிசனம் செய்த பக்தர்கள் கூறுகையில், நீண்ட நாட்களுக்கு பிறகு சாமி தரிசனம் செய்ததால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். கொரோனா பரவல் முற்றிலும் குறைந்து அனைவரும் வளமுடன் வாழ முருகப்பெருமானை வேண்டினோம் என்றனர்.